சாகசங்களை விரும்புவோரை லட்சத்தீவுக்கு செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது மாலத்தீவு அரசாங்க அதிகாரிகளால் நரேந்திர மோடியின் மீது கடுமையான தனிப்பட்ட தாக்குதலுக்கு வழிவகுத்தது மற்றும் இந்திய சமூக ஊடக பயனர்களை கோபப்படுத்தியது. சிலர் இந்த மாத தொடக்கத்தில் மாலத்தீவுக்கான பயணங்களை ரத்து செய்ய முடிவும் செய்தனர்.
மாலத்தீவு என்பது 1,190 பவளத் தீவுகள் (coral islands) மற்றும் சுமார் 20 பவளப்பாறைகளில் மணல் திட்டுகளை (sandbanks) உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டமாகும். இது கேரளா மற்றும் இலங்கைக்கு தென்மேற்கே வட மத்திய இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது. தலைநகர் மாலே (Male), திருவனந்தபுரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் "நூறாயிரம் தீவுகள்" (hundred thousand islands) என்று பொருள்படும் லட்சத்தீவு, 36 பவளத் தீவுகளைக் கொண்டுள்ளது. மொத்த பரப்பளவு 32 சதுர கி.மீ. இது இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமாகும். இந்த தீவுகள் மாலத்தீவின் வடக்கே அமைந்துள்ளன. கொச்சியிலிருந்து 220 கிமீ முதல் 440 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.
இரண்டு தீவுக்கூட்டங்களும் பவளத் தீவுகளின் ஒரே சங்கிலியின் ஒரு பகுதியாகும். அவை பூமத்திய ரேகைக்கு அப்பால் (equator) சாகோஸ் தீவுக்கூட்டம் (Chagos archipelago) வரை தெற்கு நோக்கி நீண்டுள்ளது.
தற்போது லட்சத்தீவுக்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்?
புதுப்பிக்கப்பட்ட தரவு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கை மிகவும் குறைவு. மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் (Union Ministry of Tourism) வெளியிடப்பட்ட இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2019 இன் படி, மொத்த சுற்றுலாப் பயணிகளில் லட்சத்தீவு கிட்டத்தட்ட எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில், 10,435 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 1,313 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 6,620 இந்திய சுற்றுலாப் பயணிகளாகவும், 1,027 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவும் இருந்தது.
லட்சத்தீவில் உள்ள திட்டமிடல் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் (Directorate of Planning and Statistics) வெளியீடு 2014-ன் படி, 2013-14ல் 5,277 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 398 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2014-15ல் 7,315 இந்திய சுற்றுலாப் பயணிகளும் 437 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
இந்த எண்கள் மாலத்தீவின் எண்களுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?
மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் (Maldives Ministry of Tourism) இணையதளத்தில் 2024 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய தரவு உள்ளது. ஜனவரி 17 வரை, 101,626 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இது, சராசரியாக ஒரு நாளைக்கு 6,000 வருகைகள் ஆகும். இது 2023 ஜனவரி 17 வரை 92,848 வருகைகளையும், ஜனவரி 17, 2022 வரை 76,155 வருகைகளையும் விட அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில், 1.87 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். மேலும், 2022-ம் ஆண்டில், 1.67 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று தரவு காட்டுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தருபவர்களில் அதிக பங்கைக் கொண்டுள்ளனர் என்று மாலத்தீவு அரசாங்க தரவு காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். நாட்டிற்கு திரும்பி வந்தவர்களில் 11.2 சதவிகிதம் பேர் ஆவார்.
2022, 2021 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலும், மொத்த வருகையில் முறையே 14.4%, 22.1% மற்றும் 11.3% என இந்தியர்கள் அதிகப் பங்கைக் கொண்டிருந்தனர்.
மாலத்தீவு எப்படி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியது?
மாலத்தீவு நீண்ட காலமாக சுற்றுலாத்துறையில் அதிக முதலீடு செய்து வருகிறது. 1996 முதல் 2005 வரையிலான மாலத்தீவு சுற்றுலா மாஸ்டர் பிளான் (Maldives tourism master plan), 1972ல் இரண்டு தீவுகளில் வெறும் 60 சுற்றுலா படுக்கைகளுடன் (tourist beds) தொடங்கி, 1980களில் இருந்து நாட்டின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக சுற்றுலா ஆனது என்று குறிப்பிடுகிறது.
இன்று, மாலத்தீவு ஒரு சிறந்த சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவானது நேரடியாக 30% பங்களிக்கிறது மற்றும் அதன் வெளிநாட்டு நாணய வருவாயில் (foreign currency earnings) 60%-க்கும் அதிகமாக அளவில் உள்ளது. ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ உட்பட உலகம் முழுவதிலுமிருந்து 40 விமான நிறுவனங்கள் நாட்டிற்கு சேவை செய்யப்படுகிறது. மும்பை, பெங்களூரு மற்றும் கொச்சியிலிருந்து தலைநகர் மாலேக்கு (Male) விமானங்களை வழங்குகின்றன.
இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் கஜகஸ்தான் போன்ற முக்கிய மூல சந்தைகளுக்கு விசா இல்லாத வருகையை மாலத்தீவு அனுமதிக்கிறது. ஜனவரி 17 நிலவரப்படி, 180 ஓய்வு விடுதிகள், 15 ஹோட்டல்கள், 811 விருந்தினர் மாளிகைகள் மற்றும் 140 சஃபாரி கப்பல்கள், 62,000 படுக்கைகளை வழங்குவதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில், உள்ளூர் தீவு விருந்தினர் மாளிகைகள், (local island guest houses) தீவுகள் மற்றும் பவளப்பாறைகளில் (atolls) தோன்றத் தொடங்கின. இந்த மாற்றம் சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் மக்களிடையே தங்க அனுமதித்தது. தனியாருக்குச் சொந்தமான ரிசார்ட் தீவுகளில் (resort islands) மட்டுமல்ல. பொதுவாக, ரிசார்ட் ஆனது மாலத்தீவின் முழு தீவையும் ஆக்கிரமித்து, பணக்காரர்களுக்கு தனியுரிமை மற்றும் ஆடம்பரத்தை வழங்குகிறது. பல ஆண்டுகளாக, பல ரிசார்ட்டுகள் விருந்தோம்பலின் உயர் தரத்திற்கு நற்பெயரைப் பெற்றுள்ளன.
மாலத்தீவுக்கும், லட்சத்தீவுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ?
லட்சத்தீவு மிகவும் சிறிய பகுதியை கொண்டுள்ளது. இதில், 10 தீவுகள் மட்டுமே உள்ளன. மேலும் சுற்றுலாவுக்கான நோக்கம் சற்று குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கவலைகள் காரணமாக இந்தியா தனது சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யவில்லை.
2014 ஆம் ஆண்டு முதல் மக்களவையில் லட்சத்தீவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிபி முகமது பைசல் (P P Mohammed Faizal) அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் திறன் மற்றும் வளங்கள் தீவுகளுக்கு இல்லை என்று விளக்கினார். சமீபத்தில் பிரபலங்கள் லட்சத்தீவுக்குச் செல்ல அழைப்பு விடுத்தது "தவறான வழி" என்றும் கூறினார்.
"பலவீனமான சூழலியல் மற்றும் உணர்திறன் வாய்ந்த சூழல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பெரும் வருகையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை," என்று அவர் கூறினார்.
மே 2012 இல், தீவுகளில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி சவால்களை (environmental and developmental challenges) எதிர்கொள்ள நீதிபதி ஆர் வி ரவீந்திரன் (Justice R V Raveendran) (ஓய்வு பெற்றவர்) தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. எந்தவொரு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் ஒருங்கிணைந்த தீவு மேலாண்மைத் திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
பவளப்பாறைகள் (corals), குளங்கள் (lagoons) மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகள் உட்பட தீவுகளின் நுட்பமான சூழலியலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அறிக்கை வலியுறுத்தியது. ஒவ்வொரு தீவின் சுமந்து செல்லும் திறனையும் வகுத்தது. பிரதமர் பார்வையிட்ட மக்கள் வசிக்காத தீவு பங்காரத்தில் (Bangaram) 200 குடிசைகள் வரை இருக்கலாம். மக்கள் வசிக்கும் தீவுகளில், கவரத்தியில் (Kavaratti) 243 குடிசைகள் இருக்க முடியும்.
தீவின் நீண்டகால குடியிருப்பாளர்கள் நிர்வாகத்தின் அணுகுமுறையை எதிர்ப்பதாக பிபி முகமது பைசல் சுட்டிக்காட்டினார். அந்த நிலம் அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று அவர்கள் கருதுகின்றனர். நிர்வாகி பிரபுல் படேல் தனது வளர்ச்சித் திட்டங்களுக்கு சில எதிர்ப்புகளை எதிர்கொண்டார். மேலும் உள்ளூர் குழுக்கள் சில பணிகளை நிறுத்த நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளன.
"இங்கு தீவுகளை மேம்படுத்த விரும்பினால் கூட, அதிக நிலம் கிடைக்கவில்லை" என்று பைசல் கூறினார்.
தீவுகளில் தற்போது என்ன சுற்றுலா உள்கட்டமைப்பு உள்ளது?
பங்காரத்தில் (Bangaram) தற்போது 67 குடிசை வீடுகள் மட்டுமே உள்ளன. கவரத்தி (Kavaratti) மற்றும் மினிகாயில் (Minicoy) உள்ள பல இடங்கள் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பயன்படுத்தப்படாததால் இன்னும் புதுப்பிக்கப்பட வேண்டும். "கவரத்தியில், 14 குடிசைகளுக்கு இடம் இருக்கலாம், ஆனால் தற்போது, சுற்றுலாப் பயணிகளின் நெரிசலுக்கு இடமளிக்கும் உள்கட்டமைப்பு வசதி இல்லை," என்று பைசல் விளக்கினார். தற்போது, தீவுகளுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. "ஒருவர் செல்ல விரும்பினால், லட்சத்தீவு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நுழைவுக்கான அனுமதி தேவை" என்று நிர்வாகம் அதன் இணையதளத்தில் கூறுகிறது. 72 இருக்கைகள் கொண்ட சிறிய விமானம் கொச்சிக்கும் அகட்டிக்கும் (Agatti) இடையில் பறக்கிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்கிறது. லட்சத்தீவுக்கும் கொச்சிக்கும் இடையே செல்லும் ஏழு பயணிகள் படகுகளில், ஐந்து மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. "தேர்ந்தெடுக்கப்பட்ட தீவைப் பொறுத்து பயணம் 14 முதல் 18 மணிநேரம் ஆகும்" என்று நிர்வாகத்தின் இணையதளம் கூறுகிறது.
"கப்பல்களில் 2,100 பேர் பயணிக்க முடியும், ஆனால் ஐந்து கப்பல்களும் ஒவ்வொரு நாளும் கிடைக்காது. பொதுவாக ஒரே நேரத்தில் 1,500 முதல் 1,900 இருக்கைகள் கிடைக்கும். மேலும் சில கப்பல்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக சில இடங்களை ஒதுக்குகின்றன" என்று பைசல் மேலும் கூறினார். இது தங்களின் தேவைக்கு கூட போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பிப்ரவரி 2020 இல் லட்சத்தீவு சுற்றுலாக் கொள்கை (Lakshadweep Tourism Policy) வெளியிடப்பட்ட பின்பும் சூழல் அதிகம் மாறவில்லை என்று சொத்து மேம்பாட்டாளரும் குடியிருப்பாளருமான ஃபரீத் கான் குறிப்பிட்டார். சுற்றுலா வளர்ச்சியில் தனியார், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership (PPP)) மாதிரிகளுக்கு இந்தக் கொள்கை அனுமதிக்கப்படுகிறது. அகத்தி (Agatti) மற்றும் கவரத்தியில் (Kavaratti) சுற்றுலா விடுதிகளை மேம்படுத்த உள்ளூர் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன, ஆனால் இறுதி ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. இது சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான சிக்கலான ஆவணப்படுத்தல் செயல்முறையை உள்ளடக்கியது.
இருப்பினும், பிரதமர் ஆர்வம் காட்டியதால், பைசல் மற்றும் கான் இருவரும் இப்போது நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், கான் கூறினார், "இது நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. பங்காரம், திருநக்கரா, சுஹேலி செரியக்கரா மற்றும் செரியம் ஆகிய நான்கு தீவுகளுக்கு அவர்கள் விண்ணப்பங்களை அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். சில குறிப்பிடத்தக்க திட்டங்கள் கூட இருக்கலாம்."
ஃபைசல் கூறினார்: "நாங்கள் விரும்புவது உயர்தர சுற்றுலா, ஆனால் குறைந்த அளவுகளில் உள்ளது.
Original article: