ஒரே நாள் பங்குத் தீர்வுக்கான (same day settlement of stocks) வழக்கு பலவீனமாக உள்ளது -தலையங்கம்

 பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் குறுகிய தீர்வுகளுக்கு (shorter settlements) போதுமான பணப்புழக்கத்தை பராமரிப்பது சவாலாக இருக்கலாம்.


பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)), பங்கு வர்த்தகத்திற்கான ஒரே நாள் வர்த்தக தீர்வை (same day trade settlement) (T+0) செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாளில் 25 பங்குகளை செட்டில் செய்ய பீட்டா பதிப்பை (beta version for settlement) அவர்கள் அங்கீகரித்துள்ளனர். முதலீட்டாளர்கள் அதே நாளில் அல்லது அடுத்த நாளில் (T+1) வர்த்தகத்தை செட்டில் செய்யலாம். இருப்பினும், இந்த உடனடி தீர்வு விருப்பமானது, பரந்த சந்தை வர்த்தகத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தரகர்களால் மட்டுமே வழங்கப்படும்.


இந்த நேரத்தில் உடனடி தீர்வு முறைக்கு மாற வேண்டிய அவசியம் கேள்விக்குறியாக உள்ளது. எங்கள் வங்கி அமைப்பு, தீர்வு நிறுவனங்கள் (clearing corporations), பாதுகாவலர்கள் (custodians), வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் (depository participants) மற்றும் வர்த்தக உறுப்பினர்கள் (T+0) அல்லது உடனடி தீர்வுக்கு (instant settlement) மாற்றத்தை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளனர் என்று இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நம்பினாலும், இது மட்டும் தீர்வாகாது. மேலும், இந்தியாவின் வர்த்தக தீர்வு (trade settlement) 2003 முதல் 2021 வரை 18 ஆண்டுகளாக (T+2) அடிப்படையில் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (T+1) தீர்வுக்கான மாற்றம் 2021 மற்றும் 2023 க்கு இடையில் நடந்தது, இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பெரும்பாலான ஐரோப்பிய சந்தைகள் இன்னும் (T+2) சுழற்சியை பின்பற்றுவதையும், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் சந்தைகள் இந்த மே மாதம் முதல் (T+1) சுழற்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு, (T+1) சுழற்சியை இன்னும் சில ஆண்டுகளுக்கு கடைபிடிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தங்களை தகவமைத்துக் கொள்ள அதிக நேரம் கொடுக்கும்.


வர்த்தக சுழற்சியை குறைப்பது பல காரணங்களுக்காக பயனளிக்காது. முதலாவதாக, ஒரு குறுகிய தீர்வு சுழற்சி வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு (foreign portfolio investors) சிரமங்களை உருவாக்கலாம். அவர்கள் சர்வதேச வர்த்தகத்தில் இருந்து தங்கள் பணப்புழக்கத்தை இன்னும் கடினமாக நிர்வகிக்க வேண்டும். பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்த விரைவான தீர்வுகளுக்கு போதுமான பணத்தை கையில் வைத்திருக்க சிரமம் ஏற்படும். இரண்டாவதாக, சந்தை செயல்திறனை அதிகரிப்பது மதிப்புமிக்கது என்றாலும், விரைவான தீர்வுகள் வர்த்தகர்கள் தங்கள் பணத்தை ஒரு நாளுக்குள் விரைவாக சுழற்சி செய்ய ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது. இது மேலும் ஊக வர்த்தகத்திற்கு (speculative trading) வழிவகுக்கும். மூன்றாவதாக, சில பங்குகளுக்கு விருப்பமான (T+0) தீர்வை அனுமதிப்பதற்கான கட்டுப்பாட்டாளரின் ஆரம்ப யோசனை அந்த பங்குகளுக்கான பணப்புழக்கத்தை பிரிக்கலாம். இது தாக்கச் செலவை அதிகரிக்கலாம் அல்லது சந்தை விலையை அதிகரிக்கும் அளவுக்கு பெரிய வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கான செலவை அதிகரிக்கலாம். இரண்டு தீர்வு சுழற்சிகளுக்கு இடையிலான விலையில் உள்ள வேறுபாடுகள் ஊக வர்த்தகத்திற்கும் (speculative trading) வழிவகுக்கும்.


சந்தை கட்டுப்பாட்டாளர் உடனடி தீர்வு நோக்கி நகர்வதன் மூலம் கட்டுப்பாடற்ற கிரிப்டோகரன்சி (cryptocurrency) சந்தைகளுக்கு போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல் தெரிகிறது. டிசம்பரில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்  (SEBI) ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது, இது ஈக்விட்டிகளுக்கான (equities) உடனடி தீர்வு, வளர்ந்து வரும் மாற்று சொத்து வகுப்புகளை விட கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்று கூறியது. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் உடனடி தீர்வுகளை வழங்கவில்லை என்றால், முதலீட்டு நிதிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் இருந்து கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் ஒத்த சொத்துக்களுக்கு மாறக்கூடும் என்ற கருத்தும்  உள்ளது. இருப்பினும், கிரிப்டோகரன்சிகள் போன்ற மாற்று சொத்துகளுடன் போட்டியிட, மூலதன உருவாக்கம் மற்றும் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்தும் ஈக்விட்டி சந்தைகளுக்கு உண்மையான தேவை இல்லை. கிரிப்டோகரன்சிகள் உள்ளார்ந்த மதிப்பு (inherent value) மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை (lack regulatory) இல்லாமல் செயல்படுகின்றன.




Original article:

Share:

குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் இருந்தபோதிலும் பஞ்சாப் விவசாயிகள் ஏன் பல்வகைப் பயிர்களை பயிரிட மாட்டார்கள்? -ஸ்வேதா சைனி, டி நந்த குமார்

 சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு தீவிரமான குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அதிகரிப்பு மூலம் முன்னுரிமை அளிப்பது ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் காலநிலை பின்னடைவு இரண்டையும் மேம்படுத்தும்.           


பஞ்சாபின் விவசாயிகள் பிப்ரவரி 13, 2024 முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். முக்கியமாக, 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க கோரிக்கை விடுக்கின்றனர். இதில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்டாலும், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பாசுமதி அல்லாத அரிசி சாகுபடியை குறைக்க அவர்கள் தயாராக இருப்பார்களா?. ஆனால், எங்கள் பகுப்பாய்வு வேறுவிதமாகக் கூறுகிறது. வருமானக் காரணங்கள் இன்னும் அரிசிக்கு சாதகமாக உள்ளன. இதை, மேலும் ஆராய்வதற்கு முன், ஒரு சுருக்கமான சூழலை வழங்குவோம்.


பஞ்சாப் 5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதில், 82% விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சாகுபடியின் கீழ் உள்ள மொத்த பரப்பளவு சுமார் 7.8 மில்லியன் ஹெக்டேர் ஆகும். விதைக்கப்பட்ட பகுதியில் 91 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் பல பயிர்களாக பயிரிடுகின்றன. காடுகளின் பரப்பளவு 5 சதவீதம், மற்றும் 11 சதவீதம் தரிசாக அல்லது சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை. கடந்த 12 ஆண்டுகளில் தரிசு நிலம் இருமடங்காக அதிகரித்து தற்போது 95,000 ஹெக்டேராக உள்ளது. கோதுமை மொத்த பயிர் பகுதியில் (gross cropped area (GCA)) 45% உள்ளடக்கியது. அதில், அரிசி 40% ஆக்கிரமித்துள்ளது. முதல் எட்டு பயிர்கள் அரிசி, கோதுமை, சோளம், பருத்தி, தீவனப் பயிர்கள், கரும்பு, உருளைக்கிழங்கு மற்றும் கடுகு. நெல் சாகுபடி 2008-09 இல் 2.7 மில்லியன் ஹெக்டேரில் இருந்து 2021-22 இல் 3.1 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது, சுற்றுச்சூழல் மற்றும் நிதி காரணங்களுக்காக அதை குறைக்க ஆலோசனை இருந்தபோதிலும்.


இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையானது, பயிர்கள் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிடங்கு விலையை (mandi prices) குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக வைத்திருந்தால், அது பல வகையான பயிர்களை பயிரிட ஊக்குவிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை உண்மையில் பஞ்சாபில் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்க முடியுமா?


பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் பயிர் மகசூல் தரவை வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை தரவுடன் இணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தால் ஒரு ஹெக்டேருக்கு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு 6.7 டன் மகசூல் தரும் நெல்லை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்றால், அவர்கள் ஒரு பருவத்திற்கு ஹெக்டேருக்கு சுமார் ரூ.1,47,108 சம்பாதிக்க முடியும். கோதுமைக்கு சுமார் 1,04,605 ரூபாய் கிடைக்கும். மற்ற பயிர்களுக்கான வருவாய்: ஒரு ஹெக்டேருக்கு மக்காச்சோளம் ரூ.82,367, கடலை ரூ.65,987, கடுகு ரூ.90,005, பாசிப்பயறு ரூ.79,589, கம்பு ரூ.16,350, சூரியகாந்தி ரூ.1,20,666, கரும்பு ரூ.31 லட்சமாக வருவாய் நிர்ணயிக்க முடியும்.


பஞ்சாப் விவசாயிகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஹெக்டேருக்கு இரண்டு பயிர்களை பயிரிடுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் கிட்டத்தட்ட முழுமையான நீர்ப்பாசனம் மற்றும் 200 சதவிகிதம் பயிர் தீவிரம் கொண்டுள்ளனர். ஆண்டு முழுவதும், பஞ்சாபின் விவசாயிகள் பொதுவாக வெவ்வேறு பயிர்களின் கலவையைப் பயன்படுத்துகின்றனர். அதிக லாபம் தரும் கரும்பைத் தவிர, நெல் உள்ளிட்ட கலவைகள் வழக்கமாக அதிக வருமானத்தைத் தருகின்றன. நெல் மற்றும் கோதுமை கலவை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2.5 லட்சம் ரூபாய் வருவாய் பெற முடியும். அதேபோல், மக்காச்சோளத்தையும் கோதுமையையும் சேர்த்தால் ரூ.1,86,971 கிடைக்கும். விவசாயிகள் நெல், கோதுமையுடன் மக்காச்சோளத்தையும் சேர்த்தால் ரூ.3,34,080 வரை லாபம் ஈட்ட முடியும்.


பருத்தி மற்றும் கோதுமை அல்லது நெல் மற்றும் கோதுமை ஆகியவற்றுடன் மூன்றாவது பயிராக வெண்டைக்காய்களை பயிரிடுவதன் மூலம், ரூ.2,16,831 முதல் ரூ.3,31,302 வரை நல்ல லாபம் கிடைக்கும். சூரியகாந்தி சேர்க்கைகள் (Sunflower combinations) லாபகரமானவை என்றாலும், மூன்றாவது பயிருடன் ஜோடியாக இல்லாவிட்டால் அவை அரிசி மற்றும் கோதுமை சேர்க்கைகளுடன் பொருந்தாது.


பஞ்சாபில் விவசாயிகள் 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தாலும், காரீஃப் பருவத்தில் (kharif season) நெல் பயிரிடுவதை விட்டு வேறு பயிருக்கு மாறினால் அவர்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. எனவே, அவர்கள் கரும்புக்கு மாறுவதற்கு அதிக காரணம் இல்லை. ஆனால், அவர்கள் மாறினால், கரும்பு அதன் சொந்த சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக சிக்கல்களுடன் வந்தாலும், ஒரு விருப்பமாக உள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல பயிர்கள் பயனுள்ள துணைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, கோதுமை மாட்டுத் தீவனத்திற்கு வைக்கோல் அல்லது துட்டியை விளைவிக்கிறது, அரிசி குச்சிகளை உற்பத்தி செய்கிறது, மற்றும் சோளம் தீவனம் அல்லது சிலேஜை (silage) வழங்குகிறது. இந்த கூடுதல் விவசாயிகளுக்கு மதிப்புமிக்கவை என்றாலும், வரையறுக்கப்பட்ட தரவு காரணமாக அவற்றை பகுப்பாய்வில் சேர்க்க முடியவில்லை. ஆனால், இந்த பயிர்களுக்கு மாறுவதற்கான அல்லது அவற்றிலிருந்து மாறுவதற்கான செலவுகளைக் மதிப்பிடுவதை பாதிக்கும்.


என்னதான் தீர்வு? முதலில், பயிர் விளைச்சலில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்கவும். இப்போது, அரிசிக்கு பதிலாக வெவ்வேறு பயிர்களை வளர்ப்பதற்கான முக்கிய உந்துதல், சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதோடு இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சார்ந்துள்ளது. ஆனால் பயிர் விளைச்சலில் பெரிய மேம்பாடுகளுக்கு சாத்தியம் உள்ளது, ஒருவேளை 30-40% அதிகமாக இருக்கலாம். இதன் மூலம் நெல் தவிர பல்வேறு பயிர்களை பயிரிட்டு அதிக லாபம் ஈட்ட முடியும். எனவே, பஞ்சாப் மற்றும் முழு நாடும் பயிர் விளைச்சலை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கிய யோசனை. பஞ்சாப், குறிப்பாக மக்காச்சோளம் மற்றும் பஜ்ரா பயிர்களுக்கு விளைச்சலை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.


இரண்டாவதாக, பயிர் நிதி ஆதரவை வழங்குங்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தாலும், பஞ்சாபில் வெவ்வேறு பயிர்களை வளர்க்க விரும்பும் விவசாயிகள் பணத்தை இழக்க நேரிடும். எனவே, அவர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பன்முகப்படுத்த விரும்ப மாட்டார்கள். தண்ணீரைச் சேமிப்பதற்கான வெகுமதி போன்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் வெகுமதி அல்லது ஊக்கத்தொகை வழங்குவது வருமான இடைவெளிகளை நிரப்ப உதவும். இந்த ஆதரவை ஐந்து ஆண்டுகள் வரை அல்லது விரும்பிய மகசூல் நிலைகள் அடையும் வரை மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் இணைந்து செயல்பட்டால் நல்லது.


மூன்றாவதாக, கால்நடைகளுக்கு கவனம் செலுத்துங்கள். பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பயிர்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. பாசுமதி அல்லாத அரிசிக்கு பதிலாக வெவ்வேறு பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்க கோழி வளர்ப்பு, நதிகளில் மீன்பிடித்தல் மற்றும் பால் பண்ணை போன்ற பிற செயல்பாடுகளை ஊக்குவிக்கவும்.


நான்காவதாக, குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிகரிக்கும் திட்டம். எதிர்கால குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்புகள் நாட்டின் விவசாய இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை தீவிரமாக உயர்த்துவதன் மூலம் தினை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களில் கவனம் செலுத்துங்கள். இது ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் காலநிலைக்கு தாங்கும் தன்மை ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும். 


சைனி ஒரு வேளாண் பொருளாதார நிபுணர் மற்றும் ஆர்கஸ் கொள்கை ஆராய்ச்சி (Arcus Policy Research) அமைப்பின் நிறுவனர்.

நந்த குமார், இந்திய அரசின் மேனாள் வேளாண் செயலாளர் ஆவார்.




Original article:

Share:

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சோதனை - ராஜு ராமச்சந்திரன்

 அரசியலமைப்பு கண்ணோட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election (ONOE)) யோசனையின் பிரச்சனை கூட்டாட்சியுடன் (federalism) தொடர்புடையது. அதன் திட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் பாராளுமன்றத்தின் காலக்கெடுவுடன் ஒத்துப்போக தங்கள் விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உயர்நிலைக் குழு என்று அழைக்கப்படும் ராம்நாத் கோவிந்த் குழு (Ramnath Kovind Committee)தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இது செப்டம்பர் 2, 2023 அன்று அமைக்கப்பட்டது மற்றும் அதன் கண்டுபிடிப்புகளை மார்ச் 14, 2024 அன்று வழங்கியது. பல்வேறு ஆதாரங்களில் இருந்து உள்ளீடுகளை சேகரித்த போதிலும், குறிப்பு விதிமுறைகளில் குறிப்பிட்ட வழிமுறைகள் கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டன.


மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிகளை ஆராய்வதே குழுவின் வேலை. அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (Representation of the People Act, 1950 மற்றும் 1951  (Representation of the People Act, 1951) போன்ற சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அடிப்படையில், மாறுபட்ட கருத்துக்களுக்கு அதிக இடமளிக்காமல், ஒரே நேரத்தில் தேர்தல்களை ஆதரிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.


மக்களவையின் பதவிக்காலத்திற்கு ஒரு நிலையான தேதி இருக்கும். இது ஐந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படும். இந்த தேதிக்கு ஏற்றாற்போல் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டாலோ அல்லது புதிய மக்கள் ஆணையை விரும்புவதாலோ மக்களவை கலைக்கப்பட்டால், புதிய தேர்தல் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்தை மட்டுமே உள்ளடக்கும். இதேபோன்ற காரணங்களுக்காக கலைக்கப்பட்டால் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும்.


குழுவின் பரிந்துரைகள், தேர்தல் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்திற்கு எதிரானவை. அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை பின்பற்றுகின்றனர். அங்கு அரசாங்கம் நம்பிக்கையை இழந்தால் ஒரு புதிய தேர்தல் தேவைப்படுகிறது. இந்த மாதிரியில், பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் எதிர்காலத் திட்டங்களுக்கு அதிக ஆதரவைப் பெற இடைக்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கலாம். எவ்வாறாயினும், இடைக்கால தேர்தல்கள் மீதமுள்ள பதவிக்காலத்தை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம், "ஒரே நாடு ஒரே தேர்தல்" யோசனை தீர்க்க நோக்கம் கொண்ட அதே பிரச்சினைகளை மீண்டும் கொண்டு வரக்கூடும். 


அரசியலமைப்பின் நான்கு பிரிவுகளில் (பிரிவுகள் 83, 172, 325 மற்றும் 327) மாற்றங்களை குழு முன்மொழிகிறது. அனைத்து சட்டமன்றங்களும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்கும் பிரிவு 82 ஏ (82A) மற்றும் பஞ்சாயத்து ராஜ் (Panchayati Raj) நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு (municipalities) ஒரே நேரத்தில் தேர்தலுக்கான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் பிரிவு 324 ஏ (324A) ஆகிய இரண்டு புதிய பிரிவுகளையும் சேர்க்க இது பரிந்துரைக்கிறது. கூடுதலாக, டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசுச் சட்டம் 1991 (National Capital Territory of Delhi Act, 1991) ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (Jammu and Kashmir Reorganisation Act, 2019) மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம், 1963 (Union Territories Act, 1963) உள்ளிட்ட பல அரசியலமைப்புச் சட்டத்தின்படி "உள்ளாட்சி" (“local government”) என்பது மாநிலங்களின் அதிகாரத்தின் பிரிவு 7இன் (Seventh Schedule)  கீழ் இருப்பதால், புதிய திருத்தம், பிரிவு 324 ஏ, (article 324 A)  அரசியலமைப்பின்படி மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள "உள்ளாட்சி" பற்றிக் கூறுகிறது. இதன் காரணமாக, குறைந்தபட்சம் பாதி மாநில சட்டமன்றங்கள் திருத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த அளவுக்கு அரசின் ஒப்புதல் தேவைப்படும் ஒரே அரசியலமைப்பு மாற்றம் இதுதான். எனவே, பிரிவு 368(2) Article 368(2) இன் கீழ் நடைமுறைத் தேவைகளை மீறுவதாகக் கூறும் எந்தவொரு சவாலும் இங்கு பொருந்தாது.


அரசியலமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சி முறைக்கு வரும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனைக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. தேசிய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையில் அதிகாரத்தைப் பிரிக்கும் கூட்டாட்சி முறை, மாநில சட்டமன்றங்களின் காலங்கள் பாராளுமன்றத்துடன் பொருந்தக்கூடியதாக இருக்கும் போது கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் குறைக்கப்படுவதால் நிலையான ஆட்சிக்கான உரிமையை மாநில அரசு இழக்கிறது  என்பதே இதன் பொருள். இது கூட்டாட்சி முறைக்கும் நமது நிறுவனர்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற முறைக்கும் எதிரானது. எனவே, அது ஒரு சட்டத் தடையைக் கடந்தாலும், அது இன்னும் அடிப்படை அமைப்பு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  


சட்டப்பிரிவு 368(2) இன் முறையான தேவையை மீறினாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election (ONOE)) யோசனையானது "அரசியலமைப்பின் அடிப்படைக் விழுமியங்கள்"  (“basic structure”)  என்ற தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இதன் பொருள் அடிப்படைக் விழுமியங்கள் கோட்பாடு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.


கட்டுரையாளர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோக்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ள Nvidia-வின் திட்டம் GR00T என்றால் என்ன? -பிஜின் ஜோஸ்

 செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதனைப் போன்ற புரிதல் மற்றும் இயக்கத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு மேம்படுத்துவதை என்விடியா திட்டம் (Nvidia project) நோக்கமாகக் கொண்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே குறிப்பிட்டுள்ளன. 


Nvidia நிறுவனம், ஒரு சிறந்த செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அந்நிறுவனம், மார்ச் 19 அன்று, திட்டம் GR00T (Generalist Robot 00 Technology) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மனித உருவ ரோபோக்களின் பரிணாம வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 


இந்த திட்டம் மனித உருவ ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதனைப் போன்ற நுண்ணறிவு மற்றும் செயல் இயக்கத்தை வழங்குவதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்றொரு செயற்கை நுண்ணறிவு ரோபாட்டிக்ஸ் நிறுவனமான Figure AI அதன் மனித உருவ ரோபோவை (humanoid robot) வெளியிட்ட சிறிது நேரத்திலேயே Nvidia-ன் அறிவிப்பு நிகழ்ந்தது. இந்த ரோபோ ChatGPT மூலம் இயக்கப்படுகிறது. 


திட்டம் GR00T என்றால் என்ன?


Project GR00T என்பது மனித உருவ ரோபோக்களுக்கான அடிப்படை மாதிரி ஆகும். இது பல்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ரோபாட்டிக்ஸ் மற்றும் உட்பொதிந்த செயற்கை நுண்ணறிவை முன்னேற்றுவதில் Nvidia முக்கிய கவனம் செலுத்துகிறது. Project GR00T அடிப்படையிலான இந்த ரோபோக்கள், மனிதர்களை கவனிப்பதன் மூலம் மனித மொழியைப் புரிந்து கொள்ளவும், இயக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும். இதன் ஒருங்கிணைப்பு மற்றும் திறமை போன்ற திறன்களை விரைவாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. மேலும், நிஜ உலகில் செல்லவும் தொடர்பு கொள்ளவும் அவர்களை திறன் கொண்டவர்களாக ஆக்குகிறது.


சமீபத்திய, GPU Technology Conference (GTC) தொழில்நுட்ப மாநாட்டில், Nvidia வின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் பல்வேறு பணிகளைச் செய்யும் ரோபோக்களின் வீடியோக்களைக் காட்டினார். ஹுவாங்கின் கூற்றுப்படி, பொதுவான மனித உருவ ரோபோக்களுக்கான அடிப்படையான மாதிரிகளை உருவாக்குவது இன்று செயற்கை நுண்ணறிவு மிகவும் பரபரப்பான சவால்களில் ஒன்றாகும். 


அது எப்படி பயிற்றுவிக்கப்பட்டது? 


இந்த மாதிரி NVIDIA GPU-துரிதப்படுத்தப்பட்ட உருவகப்படுத்துதலைப் (GPU-accelerated simulation) பயன்படுத்தி இந்த மாதிரி பயிற்சியளிக்கப்பட்டது.  இது மனித ரோபோக்கள் பாவனை முறையில் கற்றலைப் பயன்படுத்தி(through imitation learning) மனித உருவகங்களிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. மேலும், வலுவூட்டல் கற்றலுக்காக NVIDIA ஐசக் ஆய்வகத்திலிருந்தும் (NVIDIA Isaac Lab) இது கற்றுக்கொள்கிறது.


பாவனை முறையில் கற்றல் (imitation learning) என்பது ரோபோ ஒரு நிபுணர் ஒரு பணியைச் செய்வதைப் பார்த்து அந்த செயல்களை நகலெடுக்க கற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில், வலுவூட்டல் கற்றல் (Reinforcement learning) சிறந்த விளைவுகளுக்கான முடிவுகளை எடுக்க மென்பொருளைக் கற்பிக்கிறது.


எளிமையான சொற்களில், Project GR00T என்பது ஒரு பலவகை செயற்கை நுண்ணறிவு (multimodal AI)  அமைப்பாகும். இது, மனித உருவம் கொண்ட ரோபோக்களுக்கு மனதளவில் செயல்படுகிறது. இது புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நிஜ உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் இது அனுமதிக்கிறது. Figure, Boston Dynamics, Apptronik, Agility Robotics, Sanctuary AI மற்றும் Unitree போன்ற முன்னணி ரோபாட்டிக்ஸ் நிறுவனங்கள் GR00T ஐப் பயன்படுத்த Nvidia உடன் கூட்டு சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.


Nvidia இருந்து ரோபாட்டிக்ஸ் இன்னும் என்ன?

Project GR00T தவிர, Nvidia, ஐசக் கையாளுபவர் (Isaac Manipulator) மற்றும் ஐசக் உணர்தல் (Isaac Perceptor) உள்ளிட்ட ஐசக் நிறுவனத்தின் புதுமைகளை மேம்படுத்தியுள்ளது. இது, பொருட்களைக் கையாள்வதில், ரோபோக்களுக்கு கையாளுதல் செயல்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில், உணர்பவர் மூலம் (Perceptor) பல கேமரா 3 டி பார்வையைப் பயன்படுத்தி தங்கள் சுற்றுப்புறங்களை உணரும் திறனை மேம்படுத்துகிறது.


Nvidia, ஜெட்சன் தோர் (Jetson Thor) என்ற புதிய கணினியை வெளியிட்டது. இது மனித உருவ ரோபோக்களுக்கு உதவுகிறது மற்றும் NVIDIAவின் Thor system-on-chip (SoC) அடிப்படையிலானது. தோர், ரோபோக்களின் நுண்ணறிவுக்கு சக்தி அளிக்கிறது. சிப்பானது, சிக்கலான பணிகளைக் கையாளும் மற்றும் மனிதர்களும் ரோபோக்களும் பாதுகாப்பாகவும் இயற்கையாகவும் தொடர்புகொள்வதை உறுதிசெய்யும்.


இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?


மேலோட்டமாகப் பார்த்தால், மனித உருவ ரோபோக்கள் பல்வேறு அபாயகரமான மற்றும் மீண்டும் மீண்டும் நிகழும் பணிகளைக் கையாளும் திறன் கொண்டதால், மனித வேலை இழப்பு அபாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவு இயங்கும் சுகாதார முகவர்களை (healthcare agents) உருவாக்க ஹிப்போகிராட்டிக் செயற்கை நுண்ணறிவு (Hippocratic AI) உடன் NVIDIA இணைந்து செயல்படுகிறது. இது செவிலியர்களின் வேலைகளைக் குறைக்கும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் மற்றவர்கள் இந்த ரோபோக்கள் மனிதர்களுக்கு உதவலாம் மற்றும் அவர்களின் வேலையை பறிப்பதற்குப் பதிலாக வாழ்க்கையை மேலும் எளிதாக்கலாம் என்று கூறுகிறார்கள். 




Original article:

Share:

2030க்குள் இந்தியாவின் சூரியக் கழிவுகள் 600 கிலோ டன்னை எட்டும் - ஆய்வில் தகவல் -அலிந்த் சௌஹான்

 2030 ஆம் ஆண்டில், இந்தியாவின் தற்போதைய சூரிய ஆற்றல் திறன் சுமார் 340 கிலோ டன் கழிவுகளை உற்பத்தி செய்யும். இது இப்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகம். இந்த கழிவுகளில் 67% ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 


 மார்ச் 20ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2022-2023 நிதியாண்டில் இந்தியா சுமார் 100 கிலோடன் (kt) சூரிய கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த அளவு 2030 ஆம் ஆண்டில் 600 கிலோடன் (kt) ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 'இந்தியாவின் சூரிய ஆற்றல் தொழில்துறையில் ஒரு வட்ட பொருளாதாரத்தை செயல்படுத்துதல் - சூரிய கழிவு அளவை மதிப்பிடுதல்' (Enabling a Circular Economy in India’s Solar Industry – Assessing the Solar Waste Quantum’) என்ற பகுப்பாய்வின்படி. காலநிலை சிந்தனைக் குழுவான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலைச் (Council on Energy, Environment and Water (CEEW)) சேர்ந்த டாக்டர் ஆகான்ஷா தியாகி, அஜிங்க்யா காலே மற்றும் நீரஜ் குல்தீப் ஆகியோருடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) இந்த ஆய்வை நடத்தியது.  


இந்தியாவின் தற்போதைய சூரிய திறன் மார்ச் 2023 நிலவரப்படி 66.7GW ஆக உள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் 23 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. 2030 ஆம் ஆண்டில், இது 292 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக காரணங்களுக்காக சூரிய கழிவுகளை நிர்வகிப்பது அவசியம். இந்த ஆய்வு கழிவுகளின் இரண்டு முக்கிய ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறது: உற்பத்தி கழிவுகள், இதில் ஸ்கிராப் மற்றும் பயன்பாடற்ற ஒளிமின்னழுத்த (photovoltaic) தொகுதிகள் அடங்கும், மற்றும் புல கழிவுகள், இதில் போக்குவரத்தின் போது சேதமாகும் கழிவுகள், நுன்பொருட்களில் சேதம் மற்றும் பயன்பாடற்ற நிலை ஆகியவை அடங்கும்.


இந்த ஆய்வு பொருட்களின் செயல்பாட்டுக் காலத்தில் சோலார் திட்டங்களிலிருந்து வரும் கழிவுகளை மையமாகக் கொண்டது மற்றும் உற்பத்தியிலிருந்து வரும் கழிவுகளை உள்ளடக்கவில்லை. 2030 ஆம் ஆண்டளவில், இந்தியாவின் சூரிய ஆற்றல் திறனில் இருந்து வரும் கழிவுகள் சுமார் 340 கிலோ டன்களாக (kt) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இப்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்த கழிவுகளில் 67% ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த மாநிலங்கள் தற்போது அதிக சூரிய சக்தியைக் கொண்டுள்ளன, அதனால்தான் அவை அதிக சூரியக் கழிவுகளை உற்பத்தி செய்யும்.


இந்த மாநிலங்களும் வரும் ஆண்டுகளில் சூரிய ஆற்றலை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் நீரஜ் குல்தீப் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசினார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கான 500 ஜிகாவாட் (GW) நோக்கிய வளர்ச்சியின் பெரும்பகுதி இந்த ஐந்து மாநிலங்களில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே, இந்த மாநிலங்கள் அதிக சூரியக் கழிவு உற்பத்தியை வெளியேற்றும்.


சூரிய சக்தி கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கை அளித்துள்ளது. எதிர்கால சூரியக் கழிவுகளை சிறப்பாகக் கணிக்க, நிறுவப்பட்ட சூரிய திறன் பற்றிய விரிவான பதிவை கொள்கை வகுப்பாளர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. மறுசுழற்சி முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், சூரியக் கழிவுகளை திறம்பட நிர்வகிக்க பங்குதாரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.


சோலார் பேனல் மறுசுழற்சிக்கான சந்தையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை குல்தீப் வலியுறுத்தினார். சூரியக் கழிவுகள் எதிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல, தற்போதைய பிரச்சினையும் கூட என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏனென்றால், பேனல்கள் 25 வருட ஆயுட்காலம் முடிவடையும் போது மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளிலும் சூரியக் கழிவுகள் உருவாகின்றன.


சோலார் பேனல்களை மறுசுழற்சி செய்வதற்கான இரண்டு முக்கிய முறைகளை அறிக்கை விவரிக்கிறது. முதல் முறை வழக்கமான மறுசுழற்சி ஆகும், இது உடைத்தல் மற்றும் பிரித்தல் போன்ற இயந்திர செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த முறை முக்கியமாக கண்ணாடி, அலுமினியம் மற்றும் தாமிரத்தை மீட்டெடுக்கிறது, ஆனால் இது வெள்ளி மற்றும் சிலிக்கான் போன்ற அதிக மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க அனுமதிக்காது. இரண்டாவது முறை, உயர் மதிப்பு மறுசுழற்சி, இயந்திர, இரசாயன மற்றும் வெப்ப செயல்முறைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த மேம்பட்ட முறை இரசாயன செயல்முறைகள் மூலம் வெள்ளி மற்றும் சிலிக்கான் போன்ற மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க உதவுகிறது.




Original article:

Share:

கர்நாடகா ஏன் சில உணவுப் பொருட்களில் வண்ணம் சேர்க்கும் நிறமிகளைத் தடை செய்துள்ளது? -சரத் எஸ்.ஸ்ரீவத்ச

 இந்த தீங்கு விளைவிக்கும் நிறமிகள் எங்கே காணப்பட்டன? எந்தெந்த நிறமூட்டும் காரணிகள் தீங்கு விளைவிக்கின்றன? உற்பத்தியாளர்கள் இந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அபராதங்கள் என்ன?


தென்னிந்தியாவில், பஞ்சு மிட்டாய் (cotton candy) மற்றும் கோபி மஞ்சூரியன் (gobi manchurian) போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் சில வண்ணம் சேர்க்கும் நிறமிகளை (colouring agents) பயன்படுத்துவதைத் தடை செய்த கர்நாடகா மாநிலம், தமிழ்நாடு மற்றும் கோவாவுடன் இணைந்து மூன்றாவதாக உள்ளது. பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் உணவு மாதிரிகளில் இந்த இரசாயனங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தீங்கு விளைவிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தாத வரை பஞ்சு மிட்டாய் தயாரிப்பது இன்னும் அனுமதிக்கப்படுகிறது.


கணக்கெடுப்பு முடிவுகள் காட்டியது என்ன?


பிப்ரவரி 12 முதல், மாநிலத்தில் பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வக சோதனைகள் சுட்டிக் காட்டின. பஞ்சு மிட்டாய்களின் 25 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், அவற்றில் 15 இராசாயன வண்ணங்கள் சேர்க்கப்பட்டதால் பாதுகாப்பற்றவையாகவும், மற்ற மாதிரிகள் பாதுகாப்பாகவும் இருந்தன. ஏனெனில், அவற்றில் கூடுதல் வண்ணங்கள் எதுவும் இல்லாதாக குறிப்பிடுகிறது. 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளில், 107 மாதிரிகள் கூடுதல் இரசாயன வண்ணங்களைக் கொண்டிருந்ததால் அவை பாதுகாப்பற்றவை. மற்ற 64 கோபி மஞ்சூரியன் மாதிரிகள் கூடுதல் வண்ணங்கள் இல்லாததால் பாதுகாப்பாக உள்ளன.


தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எவை?


பஞ்சு மிட்டாய்களில், பாதுகாப்பற்ற மாதிரிகளில் சன்செட் மஞ்சள் (sunset yellow), டார்ட்ராசின் (tartrazine) மற்றும் ரோடமைன்-பி (rhodamine-b) ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், கோபி மஞ்சூரியனில் பாதுகாப்பற்ற மாதிரிகளில் டார்ட்ராசின் (tartrazine), சன்செட் மஞ்சள் (sunset yellow) மற்றும் கார்மோய்சின் (carmoisine) ஆகியவை இருந்தன. ரோடமைன்-பி (Rhodamine-B), ஒரு புற்றுநோயாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே இது தடை செய்யப்பட்டுள்ளது. டார்ட்ராசின் (Tartrazine) ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயற்கை உணவு வண்ணம். ஆனால், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறினார். மேலும், குறிப்பிட்ட அளவுகளில், சில பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளில் டார்ட்ராசைன் இருக்க முடியாது. செயற்கை வண்ணங்களைக் கொண்ட தின்பண்டங்களை நீண்ட காலமாக உட்கொள்வது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளனர்.


அபராதங்கள் என்ன?


உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் (Food Safety and Standards Act) 2006ன் விதி 16-ன்படி, கோபி மஞ்சூரியன் செயற்கை வண்ணங்களை கொண்டிருக்கக்கூடாது. இருப்பினும், சில உணவு வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் வண்ணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக, பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட நிறமான ரோடமைன்-பி (rhodamine-b) போன்ற நிறங்கள் பயன்படுத்தப்படக்கூடாது.


இந்த விதிகளை மீறுபவர்கள் தங்கள் வணிக உரிமத்தை ரத்து செய்தல், அதிக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி (Food Safety and Standards Act), உணவுப் பொருட்களில் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகளுக்கு குறைந்தது ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.


அடுத்து என்ன?


தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களுக்கான தடை, இப்போது அமலில் இருப்பதாக சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகள் (Health safety officials) கூறுகின்றனர். இந்த தடை குறித்து, உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், நுகர்வோர் தங்கள் நுகர்வு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இராசாயன வண்ணங்களைக் கொண்ட உணவுப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க அல்லது குறைக்க அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அனைவரும் விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் சீரற்ற சோதனைகளை மேற்கொள்வார்கள். கோபி மஞ்சூரியன் தவிர மற்ற பிரபலமான உணவுப் பொருட்களான கபாப்ஸ் (kebabs) ஆகியவற்றிலும் வண்ணம் சேர்க்கும் நிறமிகள் (colouring agents) பயன்படுத்தப்படுகின்றன. 




Original article:

Share:

ஆக்ரோஷமான நண்பர்கள் : சில நாய் இனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு பற்றி . . .

 பொது மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இருக்க வேண்டும் என்றாலும், அவற்றை வளர்ப்பது தடையற்ற உரிமையாகக் கருதப்படக்கூடாது.


இந்தியாவில், நாய்களின் பிரச்சினை மற்றும் சமூகத்தில் அவற்றின் பங்கு சிக்கலானது. ஒருபுறம் தெரு நாய்களின் தொல்லை. தெரு நாய்கள் தங்கள் பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக நாடு முழுவதும் உள்ள மக்கள் புகார் கூறுகின்றனர். ஆயினும்கூட, அவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்துவதற்கான வலுவான அரசியல் நகர்வு இல்லை. மறுபுறம், வளர்ப்பு நாய்கள் வேறு வகையான பிரச்சினைகளை கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரங்கள் மத்திய அரசு அமைச்சகம் மற்றும் இரண்டு உயர் நீதிமன்றங்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை உள்ளது.


 ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், சில நாய் இனங்கள் இயற்கையாகவே மற்ற நாய்களை விட ஆக்ரோஷமானவை. வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள விலங்குகள் நலன் மற்றும் பராமரிப்புத் துறையின் (Department of Animal Welfare and Husbandry, Ministry of Agriculture) சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த நாய்களின் தாக்குதல்கள் குறித்து மக்கள் புகார் அளித்ததால் இது நடந்தது, அவற்றில் சில நாய் இனங்கள் ஆபத்தானவை. ஆக்ரோஷமான நாய் இனங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்க்கு தடை செய்ய குழு பரிந்துரைத்தது. தாக்குதல்கள் காரணமாக இந்த இனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த பரிந்துரை வந்துள்ளது.


சில நாய் இனங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்க்கு  தடை செய்வதற்கான பரிந்துரையில் கலப்பு இனங்கள் நாய்களான பிட் புல் டெரியர் (Pit Bull Terrier), அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷைர் டெரியர் (American Staffordshire Terrier), ஃபிலா பிரேசிலிரோ (Fila Brasileiro), டோகோ அர்ஜென்டினோ (Dogo Argentino), அமெரிக்கன் புல்டாக் (American Bulldog), போயர்போயல் (Boerboel), கங்கல் (Kangal) மற்றும் மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog) ஆகியவை உள்ளன. இந்த விதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். இது அவை மேலும் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும். ஆனால், இந்த அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. சிலர் வழக்கு தொடுத்ததை அடுத்து இது நடந்தது. நிபுணர்களிடம் விரிவாக கலந்தாலோசிக்காமல் அரசாங்கத்தின் முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். 


உன்மையான நாய் இனங்களை பதிவு செய்யும் கென்னல் கிளப் ஆஃப் இந்தியா (Kennel Club of India) இந்த முடிவால் சவால்களை சந்திக்க நேரிடும். ஒரு நாயின் ஆக்கிரமிப்பு பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று அனுபவம் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாயின் சூழல், நடத்தை, வயது, பாலினம், அளவு, மற்ற நாய்களை அது எவ்வளவு நன்றாக பழகுகிறது, அதன் பயிற்சி மற்றும் அதன் ஆக்கிரமிப்பைத் தூண்டுவது ஆகியவை இதில் அடங்கும். இந்த நுண்ணறிவுகள் இருந்தபோதிலும், பல நாடுகள் சில நாய் இனங்களை வைத்திருப்பதற்கு தடை செய்துள்ளன அல்லது அவற்றை வளர்ப்பதற்க்கு கடுமையான விதிகளை அமைத்துள்ளன.


 இந்த நாடுகள் இந்தியாவைப் போல தெருநாய்களை அனுமதிப்பதில்லை. அவர்களின் விதிகள் உயர்ந்த பொது பாதுகாப்பு தரங்களில் கவனம் செலுத்துகின்றன. எனவே, குறிப்பிட்ட நாய் இனங்களின் இருப்பு அல்லது இல்லாமை பொது பாதுகாப்பை கணிசமாக பாதிக்காது. ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவது என்னவென்றால், நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகள் ஏற்படுத்தும் எந்தத் தீங்குக்கும் அதிக பொறுப்புக்கூற வேண்டும். பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் வளர்ப்பதிலும் தனிப்பட்ட விருப்பம் முக்கியமானது என்றாலும், அது எந்த வகையிலும் கட்டுப்பாடற்ற உரிமை அல்ல.




Original article:

Share:

ஒரு நேரத்தில் ஒரு பகுதி என நோய்களை நீக்குதல் - ராஜீவ் சதானந்தன்

 பல்துறை ஒத்துழைப்பு (Multisectoral collaboration), புதுமைகளை ஊக்குவித்தல் (encouraging innovation) மற்றும் நோய்களை அகற்றுதலை (disease elimination) எளிதாக்கும் உள்ளூரில் உள்ள பயனுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்வது, பிராந்திய அளவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கார்ட்டர் மையம் (Carter Center) உலகெங்கிலும் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் சமீபத்தில் கினியா புழு நோயிலிருந்து (guinea worm disease) விடுபடுவதில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில், 21 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவு கூறுகிறது. இது, 2023 ஆம் ஆண்டில், ஐந்து நாடுகளில் இது 13 ஆக குறைந்துள்ளதை, இது, 99.99% குறைப்பு ஆகும். இந்த நோய் பெரியம்மைக்குப் பிறகு, முற்றிலுமாக அழிக்கப்படும் இரண்டாவது நோயாகும். மேலும், இதற்கு எதிராக மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இல்லாத முதல் நோய் இதுவாகும். இதனால் நோய்களை முற்றிலுமாக எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமானோர் கவனம் செலுத்தி வருகின்றனர். 2030 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளில் ஒன்று மலேரியா, காசநோய் மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பரவுவதைத் தடுப்பது முக்கிய இலக்காக நிர்ணயித்துள்ளது.


நோய் ஒழிப்பில், அதன் கவனம்


ஒரு நிர்ணயிக்கப்பட்ட பிராந்தியத்தில் பூஜ்ஜிய நோய்த்தொற்றை (zero transmission) அடைவதை இலக்காகக் கொண்ட நோய்த்தொற்றை நீக்குதல் (Elimination of transmission) என்பது நோயை முற்றிலுமாக ஒழிப்பதிலிருந்து (eradication) வேறுபட்டது. இது, மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஆபத்து இல்லாத ஒரு நோய்க்கிருமியால் தொற்றுநோயை நிரந்தரமாக நிறுத்துவதாகும். குறிப்பாக எளிதில் நோய்வாய்ப்படும் ஏழைகளுக்கு, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு, பொது சுகாதாரத் திட்டமாக நோய்களிலிருந்து விடுபடுவதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன. இது முழு நாட்டிற்கும் ஒரு இலக்காக மாறும் போது, அது பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துகிறது.


நோய் ஒழிப்புக்கான சர்வதேச அமைப்புகளால் சான்றிதழ் பெறுவது கடினமானது. ஆனால், அதற்குத் தயாராகுதல், ஆரம்ப சுகாதார பராமரிப்பு (primary health care), பரிசோதனை (diagnostics) மற்றும் கண்காணிப்பு (surveillance) ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. இது, அதிகமான களப்பணியாளர்கள் மற்றும் சமூக சுகாதார ஊழியர்களை ஈடுபடுத்துகிறது. ஏனெனில், அவர்கள் தெளிவான இலக்கை நோக்கி உத்வேகமாக உள்ளனர். மேலும், சர்வதேச நாடுகளின் ஆதரவை ஈர்க்கிறார்கள். மிக முக்கியமாக, இது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெறுகிறது. இந்த முயற்சிகள் ஒட்டுமொத்தமாக சுகாதார அமைப்பை மேம்படுத்த உதவும்.


நோய் பரவுவதை நீக்குவது கடினம் மற்றும் நிறைய வளங்கள் தேவை. இது சுகாதார அமைப்பில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது மற்றும் பலவீனமான சுகாதார அமைப்புகள் உள்ள இடங்களில், பிற முக்கியமான சுகாதாரப் பணிகளும் புறக்கணிக்கப்படலாம். எனவே, ஒரு நோயை அகற்ற முடிவு செய்வதற்கு முன், செலவுகள் மற்றும் அவற்றின் நன்மைகளை கவனமாகப் பார்ப்பது மற்றும் நிலைமையைப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவது மிக முக்கியம்.


இந்தியா,  இலக்குகளை நிர்ணயித்து, அனைத்து நோய்களையும் அகற்றுவது விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்றாலும், இதன் தொடர்ச்சியாக நிறைய பேரைப் பாதிக்கும். ஆனால், பலருக்கு ஒரே நோயாக இருந்தால், முதலில், அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே முதன்மையான குறிக்கோளாக, அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து விடுபடலாம். இது நோயை அகற்றுதல் (elimination) எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். மேலும், நோயை அகற்றுவதற்கான பணியைக் கையாள சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

கண்காணிப்பு அமைப்புகளின் தேவை


நோயினால் தாக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் கண்காணிக்கக்கூடிய அமைப்புகளில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சோதனைக்கான ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும். போதுமான மருந்துகள் மற்றும் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரு நோய் ஒழிப்பு திட்டத்தின் (disease elimination strategy) கடுமையான விதிகளைப் பின்பற்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு நோய் அகற்றப்பட்ட பிறகும், நோய் மீண்டும் வரக்கூடும் என்பதால், எந்தவொரு புதிய நோயாளிகளையும் கண்காணிப்பு மூலம் தொடர்ந்து கவனிக்க வேண்டும். 


நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நாட்டில் இலக்கு நிர்ணயித்து வைக்கப்பட்ட அனைத்து நோய்களையும் அகற்றுவது கடினமாக இருக்கலாம். இருப்பினும், சில பகுதிகளில் சில நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். உதாரணமாக, காலா அசார் (kala azar) இப்போது இந்தியாவில் ஐந்து மாநிலங்களை மட்டுமே பாதிக்கிறது. இது, முக்கியமாக இரண்டு மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படுகிறது. உலகில் யானைக்கால் நோயால் (lymphatic filariasis) பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் இந்தியாவில் உள்ளனர். உலக சுகாதார சபை (World Health Assembly) 1997 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. கண்காணிப்பு (surveillance),  நோய்பரப்பிகளைக் கட்டுப்படுத்துதல் (Vector control), மருந்துகளை வழங்குதல் (drug administration) மற்றும் நோயின் விளைவுகளை நிர்வகிப்பது (morbidity management) ஆகியவற்றின் மூலம் நாம் அதை எதிர்த்துப் போராடலாம்.


சில நோய்கள் நீண்ட அடைகாக்கும் காலங்களைக் (long incubation periods) கொண்டுள்ளன மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக உள்ளன. அவர்கள் மருந்து எதிர்ப்புத் திறனும் (drug resistance) பெற்றுள்ளனர். இந்த நோய்களை அகற்றுவதற்கானத் திட்டம் குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் பல கட்டங்களாக சோதனைகள் செய்யப்பட வேண்டும். மாநிலங்கள் அல்லது மாவட்டங்கள் போன்ற சில பிராந்தியங்களில் எளிதில் அகற்றக்கூடிய நோய்கள் முதலில் அகற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த பகுதிகள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவை என்று சான்றளிக்கப்பட்டவுடன், அவை பாதுகாக்கப்படலாம். மேலும், அவை அகற்றப்படத் தயாராகும் வரை அருகிலுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.


உள்ளூர் பகுதியிலிருந்து


பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, புதிய யோசனைகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டில் செயல்படும் தீர்வுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை நோய்களை அகற்றுவதற்கு முக்கியமாகும். இது பிராந்திய மட்டத்தில் சிறப்பாக செய்யப்படுகிறது. அங்கு, சிறிய குழுக்கள் மற்ற முக்கியமான பணிகளை பாதிக்காமல் வளங்களை நிர்வகிக்க முடியும். நோயை அகற்றுதல் பிராந்திய வாரியாக நிகழலாம் என்றாலும், தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஈடுபடுவது முக்கியம். பிராந்திய ஒழிப்பின் நேரம் முழு நாட்டையும் மனதில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும். இதற்காக், பிராந்திய முயற்சிகள் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த ஆதரவு மற்றும் கண்காணிப்பு தேவை. மாநிலங்களுக்கு இடையேயும், நுழைவுத் துறைமுகங்களில் பரவும் நோய்கள் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. இந்தியாவில், தேசிய அளவில் நோயை அகற்றுவதற்கான சிறந்த வழி, சிறியதாகத் தொடங்கி, நாடு முழுவதையும் உள்ளடக்கும் வரை முயற்சியை பிராந்திய வாரியாக விரிவுபடுத்துவதாகும்.


ராஜீவ் சதானந்தன், Health Systems Transformation Platform அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கேரளாவின் முன்னாள் சுகாதார செயலாளர் ஆவார்.




Original article:

Share:

இந்தியாவின் வாக்காளர்கள் ஒரு நேர்மைக்கான பத்திரத்திற்கு தகுதியானவர்கள் -அசோக் லவாசா

 அரசியல் கட்சிகள் நேர்மையான பணத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள ஏன் உறுதியாக இல்லை என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். 


 சட்டங்களும் கொள்கைகளும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும், சிக்கல் கண்டறியப்பட்டதிலிருந்து விஷயங்களைச் சிறப்பாகச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, முடிவை மதிப்பிடும்போது, ​​அந்த சட்டம் அல்லது கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சூழலில், தேர்தல் பத்திரத்  திட்டத்தின் (Electoral Bond Scheme (EBS)) ஆரம்பம், கட்டமைப்பு மற்றும் முடிவு பற்றி ஆராய்வோம்.


ஒரு 'நேர்மையான' பாதை


சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க நாடு இன்னும் ஒரு தெளிவான வழியைக் கண்டுபிடிக்கவில்லை. சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களை நடத்துவதற்கு இந்தத் தெளிவு முக்கியமானது. கடந்த காலங்களில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க மக்களையும் நிறுவனங்களையும் ஊக்குவிக்க சில சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் ஒரு சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. இருப்பினும், அரசியல் கட்சிகள் இன்னும் ரகசிய பண நன்கொடைகள் மூலம் அதிக பணத்தை பெறுகின்றன. இந்தியாவில் அரசியல் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், நன்கொடையாளர்கள் காசோலைகள் அல்லது பிற தெளிவான முறைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. தங்கள் அடையாளம் வெளிப்படுத்தப்படுவது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.


அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை தெளிவுபடுத்தவும், கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தேர்தல் பத்திர திட்டத்தை (Electoral Bond Scheme (EBS)) நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார். அரசியலில் ஈடுபடும் பணத்தை சுத்தம் செய்ய இந்த திட்டம் உதவும் என்று அவர் நம்பினார். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் நன்கொடையாளர்களின் அடையாளங்களை வெளியிடத் தேவையில்லாமல் ₹20,000க்கும் குறைவான பங்களிப்பை நம்பியிருப்பது தெளிவாகிறது. இந்த கட்சிகள் அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரி செலுத்தாததால், கணக்கில் வராத பணத்தை சுதந்திரமாக பயன்படுத்த இது அனுமதித்தது. தேர்தல் பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் தேர்தல்களில் பெருமளவில் பணம் செலவழித்தாலும், அரசியலில் கறுப்புப் பணப் சார்ந்த  பிரச்சினைகள்  தீர்க்கப்படாமலேயே உள்ளது. தேர்தல் நிதியை தூய்மைப்படுத்தும் இலக்கை தேர்தல் பத்திர திட்டம் முழுமையாக அடையவில்லை. தேர்தல் பத்திரத் திட்டத்தால் அரசியல் கட்சிகள் பலனடைந்தன. தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பணம் இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது.

 

தேர்தல் பத்திரத் திட்டம்  நன்கொடையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்வதற்கான வழியை வழங்கியது. இருப்பினும், இந்த பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்படும் பணம் உண்மையில் சுத்தமானதா  என்பது தெளிவாக தெரியவில்லை. தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trusts) எனப்படும் இதேபோன்ற அமைப்பு ஏற்கனவே உள்ளது.  மேலும்,  இந்த அமைப்பு மிகவும் வெளிப்படையானது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.  


பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) அளித்த தகவலின் படி, தேர்தல் பாத்திரங்களை வாங்கியவர்களில் பலர்  தங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் பத்திரங்களை வாங்கியதாகக் கூறுகின்றன. இந்த  பத்திரங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட நிதி முறையானதா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் கட்சிகளின் கணக்குகளுக்குச் சென்ற பணம் உண்மையிலேயே சுத்தமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  பத்திரங்களை வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதில் சந்தேகம் இருந்தால், அதை எளிதாக விசாரிக்க முடியும் என்று தேர்தல் பத்திரத் திட்ட ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த விசாரணையை யார் செய்வார்கள்? மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட அதே  முகமைகளாக  இருக்குமா?


2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டத்தின் பிரிவு 7(4)இல் குறிப்பிட்டுள்ளபடி, வாங்குபவரின் தகவல் அங்கீகரிக்கப்பட்ட வங்கியிடம் ரகசியமாக வைத்திருக்கவேண்டும் இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு அல்லது கிரிமினல் வழக்கு போன்ற சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே இதைப் பகிர முடியும். வாங்குபவருக்கு வழங்கப்பட்ட பத்திரத்தின் ரகசிய எண்ணை வங்கியால் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியவில்லை என்று தேர்தல் பத்திரத் திட்டத்தை  உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். உறுதியளித்தபடி, இந்த விதி வாங்குபவரின் பெயரைப் பாதுகாக்கும். இது உண்மையாக இருந்தால், வாங்குபவரை பெறுநருடன் இணைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.


ஒரு வங்கி வாடிக்கையாளருக்கு பணம் கொடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பத்திரத்தை யார் வாங்கினார்கள் என்ற பதிவுகளை பாரத ஸ்டேட் வங்கி வைத்திருப்பதில்லை என்பதை இது குறிக்கிறது. பத்திரத்தில் உள்ள எண்ணெழுத்து குறியீடு (alphanumeric number) அதன் உண்மைத்தன்மை மற்றும் தணிக்கை தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய மட்டுமே. பத்திரம் ரொக்கம் போன்றது, அதனால்தான் இந்திய ரிசர்வ் வங்கி  ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.




Original article:

Share: