அரசாங்கத் துறைகள், மூன்றாம் தரப்பினர் மற்றும் குடிமக்களுக்கு இடையே தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பற்ற பரிமாற்றம் தனியுரிமை மீறல்கள் காரணமாக தனிநபர் அல்லாத தரவுகள் (Non-Personal Data (NPD)) போன்ற முக்கியமான பகுதிகளைப் பாதிக்கக்கூடும்
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாஸ்காமின் (NASSCOM) அறிக்கையின்படி, தரவு (data) மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 450-500 பில்லியன் டாலர் அளவிற்கு பங்களிக்கக்கூடும். இருப்பினும், அரசாங்க நடவடிக்கைகளில் விரைவான டிஜிட்டல் மயமாக்கல், குடிமக்களின் தரவுகளின் அளவு அதிகரிப்புடன் சேர்ந்துள்ளது. இந்தத் தரவு பொதுவாக, தனிப்பட்ட தரவு - தனிநபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களை உள்ளடக்கியது மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் தவிர்த்து தனிப்பட்ட தனிநபர் அல்லாத தரவு (Non-Personal Data (NPD))இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும்.
தனிநபர் அல்லாத தரவு என்பது குடிமக்களிடமிருந்து அரசாங்கம் சேகரிக்கும் முக்கிய தரவு வகையாகும். இந்தத் தரவுகள் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. பொதுச் சேவைகளை மேம்படுத்த தனிநபர் அல்லாத தரவைப் பயன்படுத்துவதற்கான ஆதரவு உள்ளது. முக்கியமான பொருளாதாரத் துறைகளில் மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவை தனிநபர் அல்லாத தரவுக்கு பயன்படுத்துவதன் மூலம், சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்ல விளைவுகளை நாம் கணிக்க முடியும். இந்தத் தரவு நிர்வாகத்தையும் பொதுச் சேவைகளையும் மேம்படுத்தும். இது பல்வேறு பகுதிகளில் உதவுகிறது. இந்த பகுதிகளில் வானிலை மற்றும் பேரழிவுகளை முன்னறிவிப்பது ஆகியவை அடங்கும். உள்கட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது. கூடுதலாக, இது போக்குவரத்து மற்றும் வீடுகளைக் கண்காணிக்கிறது. இது வேலைவாய்ப்பு முறைகளையும் கண்காணிக்கிறது.
தனிப்பட்ட தரவு போலல்லாமல், தனிநபர் அல்லாத தரவுக்கான வலுவான விதிமுறைகள் எதுவும் தற்போது இல்லை. இருப்பினும், அதன் நிர்வாகத்திற்கான கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் முயற்சிசெய்து வருகிறது. கிரிஸ் கோபாலகிருஷ்ணன் (Kris Gopalakrishnan) தலைமையிலான ஒரு நிபுணர் குழு பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்துள்ளது. அடையாளமில்லாத தரவை மீண்டும் அடையாளம் காணும் அபாயம், தனிநபர் அல்லாத தரவு நிர்வாகத்திற்கான மத்திய அதிகாரத்தை அமைத்தல் மற்றும் தரவு உரிமை மற்றும் பகிர்வுக்கான விதிகளை நிறுவுதல் போன்ற சிக்கல்களை முழுமையாக விவாதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeiTY)) தேசிய தரவு ஆளுமை கட்டமைப்புக் கொள்கையை (National Data Governance Framework Policy (NPD Framework)) அறிமுகப்படுத்தியது. தரவு சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல் படியாக இந்தக் கொள்கை கருதப்படுகிறது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவில் இன்னும் தனிநபர் அல்லாத தரவுக்கு அமல்படுத்தக்கூடிய சட்டம் இல்லை. இதன் பொருள், அதிக அளவு தனிநபர் அல்லாத தரவு, கட்டுப்படுத்தப்படாமல் உள்ளது, அதன் பயன்பாடு மற்றும் பகிர்வுக்கான அடிப்படை வழிகாட்டுதல்கள் மட்டுமே உள்ளன. இந்த ஒழுங்குமுறை இல்லாமை குறைவான பயனுள்ள சட்ட, மற்றும் கொள்கை முடிவுகள் மற்றும் தேசிய அளவில் பலவீனமான உத்திகளுக்கு வழிவகுக்கிறது.
தரவு பரிமாற்றங்கள் என்பது பல்வேறு நபர்களை உள்ளடக்கிய பெரிய அமைப்புகள். சிறந்த முடிவுகளை எடுக்கவும் பணத்தைச் சேமிக்கவும் மேம்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதற்கு அவை சிறந்தவை. ஆனால் தனிநபர் அல்லாத தரவு பாதுகாப்பு இல்லாமல் நகர்ந்தால், அது முக்கியமான தகவல்களை அம்பலப்படுத்தலாம் மற்றும் பிக் டெக் (Big Tech) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நியாயமற்ற நன்மைகளை வழங்கலாம். முக்கியமான பொது போக்குகளின் மோசமான பகுப்பாய்வு மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, சரியான விதிகள் இல்லாமல், தரவு பரிமாற்றங்கள் வெவ்வேறு துறைகளில் இருந்து வெவ்வேறு சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளாது.
தனிநபர் அல்லாத தரவு கட்டமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஆனால், அதில் சில குறைகள் உள்ளன. இது தனிநபர் அல்லாத தரவை நிர்வகிப்பதற்கான பொதுவான கொள்கைகளை நிறுவுகிறது, ஆனால் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான தெளிவான நிலைகளை வழங்கவில்லை. தரவுகள் யார் பொறுப்பில் உள்ளது? வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் அதை எவ்வாறு கையாள வேண்டும்? போன்ற விஷயங்களில் எந்த வழிகாட்டுதலும் இல்லை. மேலும், தரவை எவ்வாறு விலை நிர்னையம் செய்வது, அல்லது அதைப் பகிர்வதற்கான சட்ட விதிகளை அமைப்பது பற்றி இது குறிப்பிடவில்லை. தனிநபர் அல்லாத தரவை (Non-Personal Data (NPD)) நிர்வகிக்க நிலையான வழிகள் இல்லாததால், இந்த சிக்கல்கள் உள்ளன.
தனிநபர் அல்லாத தரவு கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து இந்த இடைவெளிகளை சரிசெய்வது உதவியாக இருக்கும். இது தனிநபர் அல்லாத தரவை ஒழுங்குபடுத்துவதற்கான மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பணியை ஆதரிக்கும் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் தனிநபர் அல்லாத தரவை பகிர்வதற்கு தரவு பரிமாற்றங்களை சிறப்பாகச் செய்யும். தரவு பரிமாற்றங்களுக்கு இந்தியா விதிகளை அமைத்தால், அது பல பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி அவற்றை மிகவும் சீராக செயல்பட வைக்கும். இது காகித பயன்பாட்டைக் குறைக்கும், வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட உதவும், தனிநபர் அல்லாத தரவை பயன்படுத்துவதற்கும் பகிர்வதற்கும் விதிகளை அமைக்கும் மற்றும் குடிமை செயல்பாடுகளை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் போன்ற பகுதிகளில் தரவு பரிமாற்றங்களுக்கான கட்டமைப்புகள் மற்றும் விதிகள் ஏற்கனவே உள்ளன. இங்கிலாந்தும் எஸ்டோனியாவும் வேலையின்மையை சமாளிக்க இதேபோன்ற விஷயங்களைச் செய்துள்ளன.
ஒரு திட்டத்தை உருவாக்குதல்
இந்தியாவில், தெலுங்கானா மாநிலம் வேளாண் தரவு பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது (agriculture data exchange), மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing & Urban Affairs), இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (Indian Institute of Science) இணைந்து, இந்தியா நகர்ப்புற தரவு பரிமாற்றத்தை அமைத்துள்ளது. மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தேசிய புவிசார் கொள்கையின் (National Geospatial Policy) சில பகுதிகளை செயல்படுத்த தரவு பரிமாற்றங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்த தரவு பரிமாற்ற அமைப்புகளில் ஆர்வம் வளரும்போது, இந்தியாவில் அவற்றை நிர்வகிப்பதற்கான திட்டத்தை உருவாக்குவது முக்கியம். இது தரவு பரிமாற்றங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது பற்றிய உலகளாவிய பேச்சுகளைத் தொடரும் மற்றும் தனிநபர் அல்லாத தரவு ஆளுகை குறித்த மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிபுணர் குழுக்கள் மற்றும் பிற குழுக்களால் செய்யப்படும் பணிகளை ஆதரிக்கும். தனிநபர் அல்லாத தரவின் பரந்த யோசனைகளை இந்தியாவில் தரவு பரிமாற்றங்களுக்கான நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றவும், இந்த பரிமாற்றங்கள் மூலம் தனிநபர் அல்லாத தரவை நிர்வகிப்பதற்கான திறன்மிகு கட்டமைப்பை அமைக்கவும் இது உதவும்.
ஜோத்சனா சிங், சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் (Legal Policy under its Applied law and technology and Fintech verticals) ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.