2030க்குள் இந்தியாவின் சூரியக் கழிவுகள் 600 கிலோ டன்னை எட்டும் - ஆய்வில் தகவல் -அலிந்த் சௌஹான்

 2030 ஆம் ஆண்டில், இந்தியாவின் தற்போதைய சூரிய ஆற்றல் திறன் சுமார் 340 கிலோ டன் கழிவுகளை உற்பத்தி செய்யும். இது இப்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகம். இந்த கழிவுகளில் 67% ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 


 மார்ச் 20ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2022-2023 நிதியாண்டில் இந்தியா சுமார் 100 கிலோடன் (kt) சூரிய கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த அளவு 2030 ஆம் ஆண்டில் 600 கிலோடன் (kt) ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 'இந்தியாவின் சூரிய ஆற்றல் தொழில்துறையில் ஒரு வட்ட பொருளாதாரத்தை செயல்படுத்துதல் - சூரிய கழிவு அளவை மதிப்பிடுதல்' (Enabling a Circular Economy in India’s Solar Industry – Assessing the Solar Waste Quantum’) என்ற பகுப்பாய்வின்படி. காலநிலை சிந்தனைக் குழுவான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலைச் (Council on Energy, Environment and Water (CEEW)) சேர்ந்த டாக்டர் ஆகான்ஷா தியாகி, அஜிங்க்யா காலே மற்றும் நீரஜ் குல்தீப் ஆகியோருடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) இந்த ஆய்வை நடத்தியது.  


இந்தியாவின் தற்போதைய சூரிய திறன் மார்ச் 2023 நிலவரப்படி 66.7GW ஆக உள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் 23 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. 2030 ஆம் ஆண்டில், இது 292 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக காரணங்களுக்காக சூரிய கழிவுகளை நிர்வகிப்பது அவசியம். இந்த ஆய்வு கழிவுகளின் இரண்டு முக்கிய ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறது: உற்பத்தி கழிவுகள், இதில் ஸ்கிராப் மற்றும் பயன்பாடற்ற ஒளிமின்னழுத்த (photovoltaic) தொகுதிகள் அடங்கும், மற்றும் புல கழிவுகள், இதில் போக்குவரத்தின் போது சேதமாகும் கழிவுகள், நுன்பொருட்களில் சேதம் மற்றும் பயன்பாடற்ற நிலை ஆகியவை அடங்கும்.


இந்த ஆய்வு பொருட்களின் செயல்பாட்டுக் காலத்தில் சோலார் திட்டங்களிலிருந்து வரும் கழிவுகளை மையமாகக் கொண்டது மற்றும் உற்பத்தியிலிருந்து வரும் கழிவுகளை உள்ளடக்கவில்லை. 2030 ஆம் ஆண்டளவில், இந்தியாவின் சூரிய ஆற்றல் திறனில் இருந்து வரும் கழிவுகள் சுமார் 340 கிலோ டன்களாக (kt) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இப்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்த கழிவுகளில் 67% ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த மாநிலங்கள் தற்போது அதிக சூரிய சக்தியைக் கொண்டுள்ளன, அதனால்தான் அவை அதிக சூரியக் கழிவுகளை உற்பத்தி செய்யும்.


இந்த மாநிலங்களும் வரும் ஆண்டுகளில் சூரிய ஆற்றலை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் நீரஜ் குல்தீப் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசினார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கான 500 ஜிகாவாட் (GW) நோக்கிய வளர்ச்சியின் பெரும்பகுதி இந்த ஐந்து மாநிலங்களில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே, இந்த மாநிலங்கள் அதிக சூரியக் கழிவு உற்பத்தியை வெளியேற்றும்.


சூரிய சக்தி கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கை அளித்துள்ளது. எதிர்கால சூரியக் கழிவுகளை சிறப்பாகக் கணிக்க, நிறுவப்பட்ட சூரிய திறன் பற்றிய விரிவான பதிவை கொள்கை வகுப்பாளர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. மறுசுழற்சி முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், சூரியக் கழிவுகளை திறம்பட நிர்வகிக்க பங்குதாரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.


சோலார் பேனல் மறுசுழற்சிக்கான சந்தையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை குல்தீப் வலியுறுத்தினார். சூரியக் கழிவுகள் எதிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல, தற்போதைய பிரச்சினையும் கூட என்று அவர் சுட்டிக்காட்டினார். ஏனென்றால், பேனல்கள் 25 வருட ஆயுட்காலம் முடிவடையும் போது மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளிலும் சூரியக் கழிவுகள் உருவாகின்றன.


சோலார் பேனல்களை மறுசுழற்சி செய்வதற்கான இரண்டு முக்கிய முறைகளை அறிக்கை விவரிக்கிறது. முதல் முறை வழக்கமான மறுசுழற்சி ஆகும், இது உடைத்தல் மற்றும் பிரித்தல் போன்ற இயந்திர செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த முறை முக்கியமாக கண்ணாடி, அலுமினியம் மற்றும் தாமிரத்தை மீட்டெடுக்கிறது, ஆனால் இது வெள்ளி மற்றும் சிலிக்கான் போன்ற அதிக மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க அனுமதிக்காது. இரண்டாவது முறை, உயர் மதிப்பு மறுசுழற்சி, இயந்திர, இரசாயன மற்றும் வெப்ப செயல்முறைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த மேம்பட்ட முறை இரசாயன செயல்முறைகள் மூலம் வெள்ளி மற்றும் சிலிக்கான் போன்ற மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க உதவுகிறது.




Original article:

Share: