பல்துறை ஒத்துழைப்பு (Multisectoral collaboration), புதுமைகளை ஊக்குவித்தல் (encouraging innovation) மற்றும் நோய்களை அகற்றுதலை (disease elimination) எளிதாக்கும் உள்ளூரில் உள்ள பயனுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்வது, பிராந்திய அளவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கார்ட்டர் மையம் (Carter Center) உலகெங்கிலும் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் சமீபத்தில் கினியா புழு நோயிலிருந்து (guinea worm disease) விடுபடுவதில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். 1986 ஆம் ஆண்டில், 21 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவு கூறுகிறது. இது, 2023 ஆம் ஆண்டில், ஐந்து நாடுகளில் இது 13 ஆக குறைந்துள்ளதை, இது, 99.99% குறைப்பு ஆகும். இந்த நோய் பெரியம்மைக்குப் பிறகு, முற்றிலுமாக அழிக்கப்படும் இரண்டாவது நோயாகும். மேலும், இதற்கு எதிராக மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இல்லாத முதல் நோய் இதுவாகும். இதனால் நோய்களை முற்றிலுமாக எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமானோர் கவனம் செலுத்தி வருகின்றனர். 2030 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளில் ஒன்று மலேரியா, காசநோய் மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் பரவுவதைத் தடுப்பது முக்கிய இலக்காக நிர்ணயித்துள்ளது.
நோய் ஒழிப்பில், அதன் கவனம்
ஒரு நிர்ணயிக்கப்பட்ட பிராந்தியத்தில் பூஜ்ஜிய நோய்த்தொற்றை (zero transmission) அடைவதை இலக்காகக் கொண்ட நோய்த்தொற்றை நீக்குதல் (Elimination of transmission) என்பது நோயை முற்றிலுமாக ஒழிப்பதிலிருந்து (eradication) வேறுபட்டது. இது, மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஆபத்து இல்லாத ஒரு நோய்க்கிருமியால் தொற்றுநோயை நிரந்தரமாக நிறுத்துவதாகும். குறிப்பாக எளிதில் நோய்வாய்ப்படும் ஏழைகளுக்கு, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு, பொது சுகாதாரத் திட்டமாக நோய்களிலிருந்து விடுபடுவதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன. இது முழு நாட்டிற்கும் ஒரு இலக்காக மாறும் போது, அது பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துகிறது.
நோய் ஒழிப்புக்கான சர்வதேச அமைப்புகளால் சான்றிதழ் பெறுவது கடினமானது. ஆனால், அதற்குத் தயாராகுதல், ஆரம்ப சுகாதார பராமரிப்பு (primary health care), பரிசோதனை (diagnostics) மற்றும் கண்காணிப்பு (surveillance) ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. இது, அதிகமான களப்பணியாளர்கள் மற்றும் சமூக சுகாதார ஊழியர்களை ஈடுபடுத்துகிறது. ஏனெனில், அவர்கள் தெளிவான இலக்கை நோக்கி உத்வேகமாக உள்ளனர். மேலும், சர்வதேச நாடுகளின் ஆதரவை ஈர்க்கிறார்கள். மிக முக்கியமாக, இது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெறுகிறது. இந்த முயற்சிகள் ஒட்டுமொத்தமாக சுகாதார அமைப்பை மேம்படுத்த உதவும்.
நோய் பரவுவதை நீக்குவது கடினம் மற்றும் நிறைய வளங்கள் தேவை. இது சுகாதார அமைப்பில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது மற்றும் பலவீனமான சுகாதார அமைப்புகள் உள்ள இடங்களில், பிற முக்கியமான சுகாதாரப் பணிகளும் புறக்கணிக்கப்படலாம். எனவே, ஒரு நோயை அகற்ற முடிவு செய்வதற்கு முன், செலவுகள் மற்றும் அவற்றின் நன்மைகளை கவனமாகப் பார்ப்பது மற்றும் நிலைமையைப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவது மிக முக்கியம்.
இந்தியா, இலக்குகளை நிர்ணயித்து, அனைத்து நோய்களையும் அகற்றுவது விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்றாலும், இதன் தொடர்ச்சியாக நிறைய பேரைப் பாதிக்கும். ஆனால், பலருக்கு ஒரே நோயாக இருந்தால், முதலில், அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே முதன்மையான குறிக்கோளாக, அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து விடுபடலாம். இது நோயை அகற்றுதல் (elimination) எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். மேலும், நோயை அகற்றுவதற்கான பணியைக் கையாள சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
கண்காணிப்பு அமைப்புகளின் தேவை
நோயினால் தாக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் கண்காணிக்கக்கூடிய அமைப்புகளில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சோதனைக்கான ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும். போதுமான மருந்துகள் மற்றும் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரு நோய் ஒழிப்பு திட்டத்தின் (disease elimination strategy) கடுமையான விதிகளைப் பின்பற்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு நோய் அகற்றப்பட்ட பிறகும், நோய் மீண்டும் வரக்கூடும் என்பதால், எந்தவொரு புதிய நோயாளிகளையும் கண்காணிப்பு மூலம் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நாட்டில் இலக்கு நிர்ணயித்து வைக்கப்பட்ட அனைத்து நோய்களையும் அகற்றுவது கடினமாக இருக்கலாம். இருப்பினும், சில பகுதிகளில் சில நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். உதாரணமாக, காலா அசார் (kala azar) இப்போது இந்தியாவில் ஐந்து மாநிலங்களை மட்டுமே பாதிக்கிறது. இது, முக்கியமாக இரண்டு மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படுகிறது. உலகில் யானைக்கால் நோயால் (lymphatic filariasis) பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் இந்தியாவில் உள்ளனர். உலக சுகாதார சபை (World Health Assembly) 1997 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. கண்காணிப்பு (surveillance), நோய்பரப்பிகளைக் கட்டுப்படுத்துதல் (Vector control), மருந்துகளை வழங்குதல் (drug administration) மற்றும் நோயின் விளைவுகளை நிர்வகிப்பது (morbidity management) ஆகியவற்றின் மூலம் நாம் அதை எதிர்த்துப் போராடலாம்.
சில நோய்கள் நீண்ட அடைகாக்கும் காலங்களைக் (long incubation periods) கொண்டுள்ளன மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக உள்ளன. அவர்கள் மருந்து எதிர்ப்புத் திறனும் (drug resistance) பெற்றுள்ளனர். இந்த நோய்களை அகற்றுவதற்கானத் திட்டம் குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் பல கட்டங்களாக சோதனைகள் செய்யப்பட வேண்டும். மாநிலங்கள் அல்லது மாவட்டங்கள் போன்ற சில பிராந்தியங்களில் எளிதில் அகற்றக்கூடிய நோய்கள் முதலில் அகற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த பகுதிகள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவை என்று சான்றளிக்கப்பட்டவுடன், அவை பாதுகாக்கப்படலாம். மேலும், அவை அகற்றப்படத் தயாராகும் வரை அருகிலுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.
உள்ளூர் பகுதியிலிருந்து
பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, புதிய யோசனைகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டில் செயல்படும் தீர்வுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை நோய்களை அகற்றுவதற்கு முக்கியமாகும். இது பிராந்திய மட்டத்தில் சிறப்பாக செய்யப்படுகிறது. அங்கு, சிறிய குழுக்கள் மற்ற முக்கியமான பணிகளை பாதிக்காமல் வளங்களை நிர்வகிக்க முடியும். நோயை அகற்றுதல் பிராந்திய வாரியாக நிகழலாம் என்றாலும், தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஈடுபடுவது முக்கியம். பிராந்திய ஒழிப்பின் நேரம் முழு நாட்டையும் மனதில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும். இதற்காக், பிராந்திய முயற்சிகள் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த ஆதரவு மற்றும் கண்காணிப்பு தேவை. மாநிலங்களுக்கு இடையேயும், நுழைவுத் துறைமுகங்களில் பரவும் நோய்கள் மீண்டும் வராமல் தடுக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. இந்தியாவில், தேசிய அளவில் நோயை அகற்றுவதற்கான சிறந்த வழி, சிறியதாகத் தொடங்கி, நாடு முழுவதையும் உள்ளடக்கும் வரை முயற்சியை பிராந்திய வாரியாக விரிவுபடுத்துவதாகும்.
ராஜீவ் சதானந்தன், Health Systems Transformation Platform அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கேரளாவின் முன்னாள் சுகாதார செயலாளர் ஆவார்.