நெகிழ்வான எரிபொருள் ஏற்பு வாகனங்களின் நோக்கம் என்ன? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:

 ஒரு நாட்டில் E20 போன்ற எரிபொருள் கலவை அமைக்கப்பட்டவுடன், பெட்ரோலில் எத்தனாலை படிப்படியாக 25–30%-ஆக அதிகரிப்பதைவிட, நெகிழ்வான எரிபொருள் வாகனங்களில் கவனம் செலுத்துவது நல்லது என்பதை உலகளாவிய உதாரணங்கள் காட்டுகின்றன என்று குலாட்டி கூறினார். 2023ஆம் ஆண்டு முதல் அனைத்து புதிய பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கும் E20 எரிபொருள் இணக்கத்தன்மையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது.

படிப்படியாக அதிகரித்து வரும் எரிபொருள் கலவைகளால் ஏற்படும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், இதன் காரணமாக பழைய வாகனங்கள் பாதிப்புகளை சந்திக்கலாம். ஒவ்வொரு முறை எரிபொருள் கலவை மாறும்போதும் மறு-அங்கீகாரச் சான்றிதழ் பெறுதல் (re-homologation) மற்றும் மறுசோதனை தேவைப்படும் என்று குலாட்டி கூறினார்.

தற்போது இந்தியாவில் எந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனமும் நெகிழ்வான எரிபொருள் (flex fuel) வாகனங்களை விற்பனை செய்வதில்லை. ஏனெனில், அவற்றின் பாரம்பரிய பெட்ரோல் வாகனங்களைவிட அதிகத் தொகையுடன் உள்ளன. இருப்பினும், டொயோட்டா போன்ற நிறுவனங்கள் நெகிழ்வான எரிபொருளில் இயங்கக்கூடிய மாதிரிகளை உருவாக்கியுள்ளன.

அதிக எத்தனால் கலவைகளுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய குலாட்டி, பிரேசிலின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். அந்த நாட்டில் நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. பிரேசிலில், 30% எத்தனால் (E30) கொண்ட பெட்ரோலை விட தூய எத்தனால் (E100) 33% குறைவானதாக மாற்றுகிறது. இது இயற்கையாகவே பட்ஜெட் எண்ணம் கொண்ட நுகர்வோரை E100-ஐத் தேர்ந்தெடுக்க வைக்கிறது.

இந்தியாவில், 2023-ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலவையை (E20) நோக்கிய ஒருதலைப்பட்ச நடவடிக்கை பல கார் உரிமையாளர்களிடையே கவலைகளை அதிகரிக்க செய்தது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டிற்கு முன்பு விற்கப்பட்ட வாகனங்களில் எரிபொருள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டறிந்தனர். இது அத்தகைய எரிபொருள் கலவைக்காக வடிவமைக்கப்படாமல் இருக்கலாம்.

 ஆகஸ்ட் மாதத்தில், பழைய வாகனங்களில் எரிபொருள் செயல்திறனில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் E20 பெட்ரோல் (E20 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனாலை கொண்டுள்ளது) இதனை பற்றிய கூற்றுகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் துறை சங்கம் போன்ற குழுக்களின் ஆய்வுகள் செயல்திறனில் ஒரு சிறிய வீழ்ச்சியை மட்டுமே காட்டுகின்றன என்று அவர்கள் கூறினர். கூடுதலாக, கலப்பு எரிபொருள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— சோளம், கரும்பு போன்ற பயிர்களின் மீதமுள்ள பகுதிகளை நொதித்தல்  (fermentation) மூலம் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. நொதித்த பிறகு, எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது, இது மாசுபாட்டைக் குறைக்கிறது. மிகவும் பொதுவான கலவை எத்தனால்-10 அல்லது E10 ஆகும். இதில் 10% எத்தனால் உள்ளது.

— இந்திய அரசாங்கம் 2018-ல் "உயிரி எரிபொருள் மீதான தேசிய கொள்கையை" அங்கீகரித்தது. எரிபொருள் கலப்பை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோ எத்தனால், பயோடீசல் மற்றும் அழுத்தப்பட்ட உயிர்வாயு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் முக்கியப் பகுதிகளில் எத்தனால் கலப்புத் திட்டம் (Ethanol Blending Programme (EPB)), இரண்டாம் தலைமுறை எத்தனால் உற்பத்தி (காடு மற்றும் விவசாய பயன்பாட்டின் மூலம் பெறப்பட்டது). "இந்தியாவில் தயாரிப்போம் (Make in India)" திட்டத்தின்கீழ் எரிபொருள் சேர்க்கைகளை உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரித்தல், எத்தனால் உற்பத்திக்கான தொடக்கப் பொருளான தீவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் இந்த இலக்குகளை அடைவதற்கான நிதி ஊக்கத்தொகைகள் ஆகியவை அடங்கும்.

original link:

What is the purpose of flex fuel vehicles


Share: