இந்திய அணுசக்தி கழகம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரவு கசிவு (Data breach) ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, அணுசக்தி அமைப்புகள் அல்லது அணுசக்திப் பாதுகாப்பு அமைப்புகள் எதனுடனும் இந்தத் தரவுக் கசிவு தொடர்புடையது அல்ல என்று இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) புதன்கிழமை தெரிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• அணுசக்தி கழகம் (NPCIL) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தரவுக் கசிவு அணுமின் நிலையத்தின் வழக்கமான பொதுச் சேவை வசதிகள் (Balance of Plant (BoP)) தொடர்பான தரவுகளை மட்டுமே பாதித்துள்ளது என்றும், இதற்கான ஒப்பந்தம் 2018-ஆம் ஆண்டில் ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.


• தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவப்பட்ட ‘VVER’ (Vodo-Vodo Energetichesky Reactor) வடிவமைப்பைக் கொண்ட ஆறு அழுத்தப்பட்ட நீர் உலைகளை உள்ளடக்கியது. இதில் முதல் இரண்டு அலகுகள் (கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 1 மற்றும் 2) ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் 3 மற்றும் 4 ஆகிய அலகுகள் இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன, அவை 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. மீதமுள்ள இரண்டு அலகுகள் பல்வேறு நிலைகளில் முன்னேறி வருகின்றன.


• தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தரவுக் கசிவு அலகுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். பொதுச் சேவை வசதிகளுக்கான (BoP) வடிவமைப்பு, கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம், 2018-ஆம் ஆண்டில் பொது ஏலச் செயல்முறை மூலமாக ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக இந்திய அணுசக்தி கழகம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், பொதுச் சேவை வசதிகளின் வடிவமைப்பு, கொள்முதல்/வழங்கல், கட்டுமானம் மற்றும் அவற்றை இயக்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.


• பொது ஏல செயல்முறையின் ஒரு பகுதியாக, ஏலம் கேட்பவர்களுக்குத் தேவையான மாதிரி வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளைத் தான் வழங்கியதாக இந்திய அனுசக்திக் கழகம் (NPCIL) தெரிவித்துள்ளது. "இந்த விவரங்கள் மற்றும் திட்டத்தின் தேவைகளின் அடிப்படையில், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரான ‘M/s Reliance Infrastructure Ltd’ நிறுவனம், சம்பந்தப்பட்ட அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து விரிவான பொறியியல் வரைபடங்களைத் தயாரித்தது. ‘Reliance Infrastructure Ltd’ நிறுவனம் முன்மொழிந்த வடிவமைப்புகள், தொழில்நுட்பக் குறிப்புகளுக்கு ஏற்ப இருந்ததால், அவற்றை ஆய்வுசெய்த பிறகு இந்திய அணுசக்தி கழகம் ஏற்றுக்கொண்டது" என்று கூறியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• ‘World Leaks’ என்ற முடக்கச் செயலி (Ransomware) கும்பல், கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பான 19,000-க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கொண்ட 14.3 ஜிபி (GB) அளவிலான ஒரு பிரம்மாண்ட தரவுத் தொகுப்பை இணையத்தின் டார்க் வெப் (Dark Web) பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ‘Yotta’ என்ற மூன்றாம் தரப்பு தரவு மைய நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சர்வரில் (Server) இந்தத் தரவு திருட்டு நடந்துள்ளது. இந்த சர்வர் ‘Reliance Infrastructure’ நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான இந்த நிறுவனத்திற்குத்தான், கூடங்குளத்தில் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் 3 மற்றும் 4 ஆகிய அணுஉலை பிரிவுகளுக்கான வழக்கமான கட்டுமான வசதிகளை அமைப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.







டார்க் வெப் என்பது இணையத்தின் (Internet) ஒரு மறைக்கப்பட்ட பகுதியாகும். இது பொதுவான தேடுபொறிகளான Google, Bing போன்றவற்றில் தேடினால் வராது. இங்கு பயனர்களின் அடையாளம் முழுமையாக மறைக்கப்படுவதால், இது பெரும்பாலும் சட்டவிரோத நடவடிக்கைகள், தரவு விற்பனை, முடக்கச் செயலி (ரேன்சம்வேர்) குழுக்கள் தங்கள் திருடிய தகவல்களை வெளியிடுவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.



• இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இந்திய அணுசக்தி கழக (NPCIL) அதிகாரிகள் சாதாரண நிகழ்வாகக் கூறி மறுத்துள்ளனர். கசிந்த தரவுகள் அனைத்தும் அணுமின் நிலையத்தின் வழக்கமான இயக்கம் தொடர்பான பொதுச் சேவை வசதிகளுக்கான (BoP) தொகுப்பைச் சேர்ந்தவை மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான உள்நாட்டு வலையமைப்புகள் இணையத் தொடர்பின்றி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாகவும், இதனால் அவை பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவின் இணையப் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.


Original Link: What is Nuclear Power Corporation of India Limited (NPCIL)?

Share:

ஒரு புதிய அரசு மானியத் திட்டம், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது? -சௌம்யரேந்திர பாரிக்

இந்தியாவிற்கென ஒரு சொந்த திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்களை ஒன்றுசேர்க்கும் பணிகளை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி, ஒன்றிய அரசின் லட்சியம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.


இந்தியாவில் விற்கப்படும் ஏறக்குறைய அனைத்து திறன்பேசிகளுமே இங்கேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அந்தத் திறன்பேசிகளில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பார்க்கும்போது, இந்திய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் எங்குமே காணப்படுவதில்லை. மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்த புதிய 62,500 கோடி ரூபாய் மதிப்பிலான திறன்பேசிகள் தயாரிப்புத் திட்டம், இந்த நிலையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திறன்பேசி பாகங்களை ஒருங்கிணைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (Production Linked Incentive (PLI)) திட்டத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இந்தியாவில் திறன்பேசி உற்பத்தியை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே உருவாக்க இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் (PLI) திட்டம் உதவியது. இந்த புதிய திட்டத்தின்கீழ், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதற்காகத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே வாங்குவதிலும், இந்திய வணிக முத்திரை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் அரசு கவனம் செலுத்துகிறது. அத்துடன் திறன்பேசி ஏற்றுமதியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளும் இதில் வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரைகளை உருவாக்குவதற்காக, இந்தத் திட்டத்தின்கீழ் தயாரிப்பின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் தகுதியுடைய விற்பனைக்கு கூடுதலாக 3 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படும்.


இந்திய திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்குவதற்கான இந்த முயற்சி, மின்னணுத் துறையில் வெறும் தொழிற்சாலைகளை ஈர்ப்பது மற்றும் பாகங்கள் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது ஆகியவற்றைத் தாண்டி அரசாங்கத்தின் லட்சியம் நகர்வதைக் காட்டுகிறது. இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தித் தளமாக ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ள ஒன்றிய அரசு, இப்போது இந்திய நிறுவனங்கள் இந்த உற்பத்திச் சங்கிலியின் இன்னும் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது, தயாரிப்பு வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உதிரிபாகங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வணிக முத்திரை உரிமையாளராக மாறுவது ஆகியவற்றை நோக்கி நகர வேண்டும் என அரசு விரும்புகிறது.


இது ஒரு நீண்டகாலத் திட்டமாக இருந்தாலும், ஒரு இந்திய திறன்பேசி வணிக முத்திரையை (Smartphone brand) முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் முக்கியமாக எதற்கு மானியம் வழங்க விரும்புகிறது என்றால், ஏற்கனவே சந்தையில் தடம் பதித்துள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமையை குறைப்பதற்காகத்தான்.


"தரம் மற்றும் விலையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய வகையில், ஒரு திறன்பேசி வணிக நிறுவனத்தை உருவாக்க நான்கு அல்லது ஐந்து இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு வரை கூடுதல் உற்பத்திச் செலவுச் சுமை இருக்கக்கூடும். எனவே, கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டத்தின் மூலம் அதில் குறைந்தபட்சம் 5 முதல் 6 விழுக்காடு வரையிலான சுமையைக் குறைக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது" என்று ஒரு உயர்அதிகாரி தெரிவித்தார்.


ஏன் ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்?

ஒரு இந்திய திறன்பேசி வணிக நிறுவனம் உருவாக்குவதற்கான இந்த முயற்சி, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது. திறன்பேசிகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தயாரிப்பு வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை, வணிக முத்திரை மற்றும் தொழில்நுட்பம் என இந்தத் துறையின் மூலம் உருவாக்கப்படும் பெரும்பாலான மதிப்பு, வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சொந்தமாக உள்ளது. ‘Tata Electronics’ மற்றும் ‘Dixon’ போன்ற இந்திய நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தித் துறையில் தங்களை நிலைநிறுத்தி வந்தாலும், இந்த நிலை நீடிக்கிறது.

இந்திய வணிக நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த இடைவெளியை நேரடியாகக் களைவதே அரசாங்கத்தின் புதிய திறன்பேசி தயாரிப்புத் திட்டத்தின் நோக்கமாகும். தொழில்நுட்ப இறையாண்மையை அடைவது, இத்துறையின் மூலம் உருவாக்கப்படும் பொருளாதார மதிப்பில் பெரும் பங்கைக் கைப்பற்றுவது மற்றும் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியக் காப்புரிமைகளை உருவாக்குவது ஆகியவற்றை முக்கியக் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.

இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்; ஏனெனில், வெறும் உற்பத்தியை மட்டும் செய்வதால் ஒரு துறையின் முழுமையான கட்டுப்பாடு நமக்குக் கிடைத்துவிடாது. இந்தியாவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்படும் ஒரு திறன்பேசி, வேறொரு நாட்டில் வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம், வெளிநாட்டுக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதாக இருக்கலாம் மற்றும் வெளிநாட்டு வணிக முத்திரையின்கீழ் விற்கப்படுவதாகவும் இருக்கலாம். இப்போது, இந்திய நிறுவனங்கள் இந்த மதிப்புச் சங்கிலியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஐந்து ஆண்டுகளில் ₹62,500 கோடி மதிப்பீட்டைக் கொண்டுள்ள இத்திட்டம், உள்நாட்டு மதிப்புச் சேர்க்கையை ஆழப்படுத்தவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் தகுதியான விற்பனைக்கு ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.

இந்தக் கொள்கையானது, இந்தியாவின் திறன்பேசி உற்பத்தி ஊக்கத்தின் மறைமுகக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் (PLI) ‘Apple’ போன்ற உலகளாவிய உற்பத்தியாளர்களை ஈர்க்கவும், திறன்பேசிகளைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் திறனை விரிவுபடுத்தவும் உதவின. இதன் விளைவாக நாடு ஒரு முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக உருவெடுத்தது. ஆனால், இந்தியா இன்னும் அவற்றுக்கு இணையான அளவிலும் உலகளாவியரீதியிலும் பெரிய அளவிலான ஒரு திறன்பேசி வணிக முத்திரையை உருவாக்கவில்லை. புதிய திட்டம் அந்த இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முயற்சியாகும்; அதாவது, வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்பது இந்தியாவில் அதிக திறன்பேசிகள் தயாரிக்கப்படுவதை மட்டும் பற்றியதாக இல்லாமல், அந்த திறன்பேசிகளுக்குப் பின்னால் உள்ள வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிக முத்திரை ஆகியவற்றை இந்திய நிறுவனங்கள் சொந்தமாகக் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

"உள்நாட்டு மதிப்பு கூட்டல், திறன்பேசி பாகங்களை உள்நாட்டிலேயே பெறுதல், வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி மற்றும் இந்திய வணிக முத்திரை ஆகியவற்றின்மீது இந்தத் திட்டம் செலுத்தும் தீவிர கவனம், மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆழப்படுத்தும்; விநியோகச் சங்கிலியின் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் ஏற்றுமதிப் போட்டியை அதிகரிக்கும். இது புதிய முதலீடுகளை ஈர்க்கவும், உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்க்கவும், மேம்பட்ட திறன்பேசி தயாரிப்பில் உலக அளவில் இந்தியா ஒரு விருப்பமான இடமாக மாறுவதற்கும் தேவையான நீண்டகாலக் கொள்கை உறுதியை வழங்குகிறது," என்று ‘Optiemus Electronics Limited’ நிறுவனத்தின் தலைவர் அசோக் குப்தா கூறினார்.

சீன நிறுவனங்கள் இந்திய திறன்பேசி நிறுவனங்களை எவ்வாறு வீழ்த்தின?

இந்த அதிரடி முன்னேற்றம், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் திறன்பேசி சந்தையைப் பயன்படுத்திக் கொள்வதில் முந்தைய தலைமுறை இந்திய அடைந்த தோல்வியையும் காட்டுகிறது. ‘Micromax’, ‘Karbonn’ மற்றும் ‘Lava’ போன்ற நிறுவனங்கள் சாதாரண கைப்பேசிகள் மற்றும் குறைந்த விலை கைப்பேசி சந்தையில் தங்களை வலுவாக நிலைநிறுத்தியிருந்தன. ஆனால், கைப்பேசி சந்தையானது தொழில்நுட்பரீதியாக அதிகத் தேவைகளைக் கொண்டதாக மாறியபோது, அதற்கு ஏற்றவாறு திறன்பேசி தயாரிப்புக்கு மாறுவதில் இந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

Indian smartphones market share

இதற்கிடையில், சீன நிறுவனங்கள் குறைந்த விலை நிர்ணயம், அடிக்கடி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், அதிரடி விளம்பரங்கள் மற்றும் மிக வேகமாக விரிவடைந்த விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டணியோடு இந்தியாவிற்குள் நுழைந்தன. ‘Xiaomi’, ‘Vivo’, ‘Oppo’ மற்றும் ‘Realme’ போன்ற நிறுவனங்களால், சில்லறை விற்பனைக் கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் வணிக முத்திரை மதிப்பு ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்ய முடிந்தது. அதேநேரத்தில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் குறைந்த விலையில் சிறந்த தொழில்நுட்பக் சிறப்பம்சங்களையும் அவர்களால் வழங்க முடிந்தது. இது ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்த குறைந்த விலை என்பதைத் தாண்டி, சந்தையின் பல்வேறு பிரிவுகளிலும் தங்களது வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்த உதவியது.

இதன் முடிவு இன்றும் தெளிவாகத் தெரிகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ‘Samsung’ நிறுவனத்தைத் தவிர்த்து, இந்தியாவின் திறன்பேசி சந்தையை சீன நிறுவனங்களே பெருமளவில் ஆக்கிரமித்திருந்தன. சந்தை நிலவரங்களை ஆய்வு செய்யும் 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' (Counterpoint Research) நிறுவனத்தின் தரவுகளின்படி, ‘Vivo’ நிறுவனம் 21 விழுக்காடு சந்தைப் பங்களிப்புடன் இந்திய திறன்பேசி சந்தையில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ‘Samsung’ மற்றும் ‘Oppo’ ஆகிய இரு நிறுவனங்களும் தலா 17 விழுக்காடு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. முதல் ஐந்து இடங்களின் கடைசிப் பகுதிகளில் ‘Xiaomi’ மற்றும் ‘Realme’ நிறுவனங்கள் முறையே 12 விழுக்காடு மற்றும் 9 விழுக்காடு சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளன.


Original Link: How a new govt subsidy plan hopes to create a competitive Indian smartphone brand.

Share:

கல்வியில் தனியார் முதலீடு விஷயத்தில், இந்தியாவுக்கு மாயைகள் இல்லாத இலட்சியவாதம் தேவை. -மனிஷ் சபர்வால்

இந்த நிலைப்பாடே இயல்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்கள்: விநியோகம், பல்லுயிர்ப் பெருக்கம், தகுதி அடிப்படையிலான முறை, சிறந்து விளங்குதல் மற்றும் நேர்மை.


இந்தியா தனது பிரம்மாண்டமான மக்களாட்சியை உருவாக்கியது போல, ஒட்டுமொத்த மக்களுக்கான பொருளாதாரச் செழிப்பை உருவாக்கவில்லை. இதற்குப் பொதுவான தொழில்முனைவோர் மீதான நமது ஒருவித சங்கடமான அணுகுமுறையே காரணமாகும். இந்த அணுகுமுறையானது கல்வி, மருத்துவம் போன்ற பொதுச் சேவைகளைத் தனியார் வழங்குவதில் இன்னும் உணர்வுபூர்வமான ஒன்றாக மாறிவிடுகிறது. இத்துறைகளில் உள்ள இலட்சியவாதம் பெரும்பாலும் ஒழுக்கமான, எளிமையான மற்றும் வெளிப்படையான தீர்வுகளையே தேர்ந்தெடுக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தத் தீர்வுகள் தவறானவையாக முடிந்துவிடுகின்றன. எனவே, கல்வியில் நமது இயல்பான நிலைப்பாடு என்பது யதார்த்தத்தை உணர்ந்த இலட்சியவாதமாக இருக்க வேண்டும். இதற்கு ஐந்து முக்கியக் காரணங்கள் உள்ளன: அவை, விநியோகம், பல்லுயிர்ப் பெருக்கம், தகுதி அடிப்படையிலான முறை, சிறந்து விளங்குதல் மற்றும் நேர்மை.


விநியோகம்: வாழ்க்கை என்பது எப்போதுமே நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த இரண்டாவது தீர்வுதான் என்ற பிரின்ஸ்டன் பேராசிரியர் அவினாஷ் தீக்சித்தின் கருத்து ஒரு நடைமுறை உண்மையை உணர்த்துகிறது: அதாவது, ஒரு பள்ளிக்கூடமே இல்லாமல் இருப்பதைவிட, மிகவும் விலையுயர்ந்த பள்ளிக்கூடமாவது இருப்பது எவ்வளவோ மேலானது. இந்தியாவில் எப்போதுமே தேவையான அளவிற்குப் போதுமான நல்ல பள்ளிகள் இருக்கப்போவதில்லை என்பதால், பள்ளிகள் பொதுத்துறையா அல்லது தனியாரா, உள்நாட்டைச் சேர்ந்ததா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்ததா, அவற்றிற்கான நிதி கடன்கள், சேமிப்புகள் அல்லது தனியார் பங்கு முதலீடுகள் மூலம் கிடைக்கிறதா, அல்லது அவை கூட்டாண்மை நிறுவனங்களாக, தனி நிறுவனங்களாக அல்லது அறக்கட்டளைகளாக நடத்தப்படுகின்றனவா என்ற விவாதங்கள் யாவும் அத்தனை முக்கியமற்றவை. கட்டணம், தரம் மற்றும் எளிதில் அணுகும் வசதி ஆகியவற்றைச் சமமாகத் தரும் பள்ளிகளைக் கண்டறிவதற்கான ஒரே வழி, பள்ளிகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் அதிகரிப்பதும் அவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதும் மட்டும்தான். இன்று, இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். ஒரு நாட்டில் ஏதேனும் ஒரு சேவை இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றால், அது 'மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை' (K-12) கல்வியாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும், தங்களுக்குக் கிடைக்கும் இலவச அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காமல், தங்களின் பிள்ளைகளின் கல்விக்காகப் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் லட்சக்கணக்கான ஏழைப் பெற்றோர்களின் ஆதரவோடு, இன்று 12 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.


பல்லுயிர்ப் பெருக்கம்: குட்ஹார்ட்டின் விதி (Goodhart’s Law) கூறுவது என்னவென்றால், ஒரு அளவீடு அல்லது இலக்கு மட்டுமே முதன்மை நோக்கமாக மாறிவிடும்போது, அது அதன் பயனை இழந்துவிடுகிறது. வலுவான கல்வி முறைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, பள்ளிக் கட்டிடங்களைக் கட்டுவதில் மட்டுமே அரசாங்கம் கவனம் செலுத்தியதால், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதில் அது தோல்வியடைந்துள்ளது. நிர்வாக மேலாண்மை, நிறுவனப் பண்பாடு மற்றும் ஆளுகை போன்ற முக்கியமான பகுதிகளைக் கைவிட்டு, வெறும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் சில முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் போயுள்ளது. இதன் விளைவாக, பயிற்சி மையங்களின் ஆதிக்கம், மென்திறன் (Soft skills) குறைபாடு, பன்மொழி கற்பித்தல் சவால்கள், தேர்வுத்தாள் கசிவுகள், மழலையர் பள்ளி சேர்க்கை சிக்கல்கள், மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அவர்களை நிராகரிப்பதையே நோக்கமாகக் கொண்ட நுழைவுத் தேர்வுகள், இடப்பற்றாக்குறை, சீரற்ற கற்பித்தல் தரம் மற்றும் வேலைவாய்ப்புத் திறனின்மை போன்ற பிரச்சனைகள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன.


இந்தச் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஹேயக்கின் கண்டறியும் கோட்பாட்டை (Hayek’s discovery principle) பின்பற்ற வேண்டியது அவசியமாகும். சாலை அல்லது கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புகளைப் போலல்லாமல், கல்வியின் தரத்தை வெறும் அரசாங்க உத்தரவுகளால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. கல்வித் தரம் என்பது போட்டி, புதிய முயற்சிகளைச் சோதித்துப் பார்த்தல் மற்றும் வெற்றிகரமான யோசனைகளைப் பரப்புதல் ஆகியவற்றின் மூலமாகவே வெளிப்பட வேண்டும். வெவ்வேறு இலக்குகள், உத்திகள் மற்றும் வளங்களைக் கொண்டு பல்வேறு வழிகளில் முயற்சி செய்யும் பல தொழில்முனைவோர், இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்விப் பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்த்துவிட முடியாவிட்டாலும், இந்த ஒட்டுமொத்தக் கல்வி முறையை மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகளையும் மாற்றங்களையும் அவர்களால் நிச்சயமாக ஊக்கப்படுத்த முடியும்.


தகுதி அடிப்படையிலான முறை: இந்தியாவின் கல்வி விதிமுறைகள், கல்வி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிலத் தேவைகள், கட்டிடக் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை வகுத்துள்ளன. கட்டுமானச் செலவுகள் மற்றும் நிலத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்த விதிமுறைகள் ஒரு பள்ளியையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ தொடங்குவதை மிகவும் செலவுமிக்க ஒன்றாக மாற்றுகின்றன. உதாரணமாக, பெங்களூரு அல்லது மும்பை போன்ற நகரங்களில் மக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய தூரத்தில் ஒரு புதிய பள்ளியைத் தொடங்க வேண்டுமென்றால், அதற்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு பள்ளியைவிட ஒரு ஏக்கருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக, பெரும்பாலான பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களால் தொடங்கப்படுவதில்லை; ஏனெனில், தற்போதைய விதிமுறைகள் காரணமாக நிதிமுதலீட்டாளர்களிடமிருந்து வெளிப்படையான முறையில் முதலீட்டு மூலதனத்தை திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது.




இது கல்வித்துறையில் ஈடுபடும் தொழில்முனைவோரிடையே ஒருவிதமான தவறான தேர்வு முறைக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான கல்வி நிறுவன நிறுவனர்கள் அரசியல்வாதிகளாகவோ அல்லது வணிக நில விற்பனை  அதிபர்களாகவோ இருக்கிறார்கள். ஏனெனில், இந்தத் துறையில் வெற்றி பெற ஆரம்பக்கட்டத்திலேயே பெருமளவிலான மூலதன முதலீடும், அரசு விதிமுறைகளை நீண்டகாலத்திற்குச் சமாளிக்கும் திறனும் அவசியமாகிறது. குடும்பத்தில் இருந்து முதன்முறையாக வரும் முதல் தலைமுறைத் தொழில்முனைவோர், நிதி முதலீட்டாளர்களைத்தான் முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, காவலராகப் பணிபுரிந்த எனது தந்தையின் சொற்ப சேமிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, முதலீட்டு நிதியின் ஆதரவு இல்லாமல், கல்லூரிப் படிப்பை முடித்த உடனேயே என்னால் ஒரு தொழில்முனைவோராக மாறியிருக்க முடியாது.


சிறந்து விளங்குதல்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது (AI) கற்றலில் பின்தங்கியிருக்கும் மாணவர்களைச் சராசரி நிலைக்கு உயர்த்த உதவுவதோடு, ஏற்கனவே சிறப்பாகப் படிக்கும் மாணவர்களை இன்னும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால், இவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி வேகமாக அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் அறிவியல் போன்ற துறைகளில், '20 விழுக்காடு மக்கள் 80 விழுக்காடு முடிவுகளை உருவாக்குகிறார்கள்' என்ற பழைய விதி மாறி, இப்போது '10 விழுக்காடு மக்கள் 90 விழுக்காடு முடிவுகளை உருவாக்குகிறார்கள்' என்ற புதிய நிலையை நோக்கி நகர்கிறது. எனவே, உலக அளவில் தலைசிறந்த நாடுகளாக மாற விரும்பும் நாடுகள், மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிவைக்கும் பொதுக் கல்வித் திட்டங்களை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், தனித்திறன் வாய்ந்த மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் சிறப்புத் திட்டங்களையும் ஆதரிக்க வேண்டும். இத்தகைய சிறப்புத் திட்டங்களை நடத்துவது மிகவும் கடினமானது மற்றும் செலவு மிகுந்தது ஆகும். மேலும், குறைவான மாணவர்களுக்காக அதிகப் பணத்தைச் செலவிடுவதையும், அதன் நிச்சயமற்ற முடிவுகளையும் வரி செலுத்தும் பொதுமக்கள் கேள்வி கேட்பதால், பொதுத்துறையில் இவற்றுக்குப் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற உயர்தரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தனியார் நிறுவனங்களே மிகவும் பொருத்தமானவை ஆகும்.  ஏனெனில், அவர்களால் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், பரந்த இலக்குகளைக் கொண்டிருக்கவும், நீண்டகாலத் திட்டங்களை வகுக்கவும் முடியும்.

நேர்மை: என்னுடைய முறைசாரா மதிப்பீட்டின்படி, கடந்த முப்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பள்ளிப் படிப்பு (K-12), பொறியியல், வணிக மேலாண்மை மற்றும் இளங்கலை நிலைக் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பில் சுமார் 75 விழுக்காடு, சட்டப்பூர்வமாக 'லாப நோக்கற்றவை' (Non-profit) என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அவ்வாறு செயல்படுவதில்லை. இந்தத் தவறான வகைப்பாடு பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அரசு ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டு வருவதைக் கடினமாக்குகிறது, மேலும் கல்வி நிறுவனங்களின் உபரி வருமானத்தில் இருந்து அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வரிகளை வசூலிப்பதைத் தடுக்கிறது. கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம், அதற்கான உண்மையான செலவுகளைப் பிரதிபலிக்கிறதா என்பதில் நம்பிக்கை இல்லாததால், அரசாங்கத்தின் கட்டணக் கட்டுப்பாட்டு முறைகளும் பலனற்றுப் போகின்றன. இதன் விளைவாக, தனியார் பள்ளிகள் தங்களின் செலவுகளை ஈடுகட்டுவதற்காகப் பலதரப்பட்ட கட்டணப் பிரிவுகளை உருவாக்குகின்றன. இந்த நேர்மையற்ற சட்டக் கட்டமைப்பு, கல்வித் துறையில் நிதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் தடுக்கிறது. ஆனால், உண்மையில் இந்த முதலீட்டாளர்களால் கல்வி நிர்வாகம், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் திறனை மேம்படுத்த முடியும். அதோடு, தொழிலாளர் நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், தொழில்முறை நிர்வாகத்தில் முதலீடு செய்வதன் மூலம் கல்விக்கான ஒட்டுமொத்தச் செலவைக் குறைக்கவும் உதவ முடியும்.


கல்வியாளர் ஜான் கார்ட்னர், சமத்துவமும் சிறந்த தரமும் ஒருங்கே அமைந்த கல்வி முறைகளை உருவாக்குமாறு கொள்கை வகுப்பாளர்களையும் தொழில்முனைவோரையும் வலியுறுத்தினார். இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை அடைவது மிகவும் கடினமான ஒன்றாகும். செயலில் இறங்காத சிந்தனையாளர்கள் சவால்களை வெறும் 'இலட்சியவாதம்' இல்லாத குறையாகவே பார்க்கிறார்கள்; அதேசமயம் ஆழமாகச் சிந்திக்காத செயல்வீரர்கள் அதை 'நடைமுறைச் சாத்தியம்' இல்லாத குறையாகப் பார்க்கிறார்கள். சிந்தனையாளர்களுக்கும் செயல்வீரர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கும் ஒரு ராணுவத்தில், முட்டாள்கள் போரிடவும் கோழைகள் சிந்திக்கவும் நேரிடும் என்று வரலாற்றாசிரியர் துகிடிடிஸ் (Thucydides) எச்சரித்தார். இந்தியக் கல்வி முறையும் சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே உள்ள இதேபோன்ற இடைவெளியால்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எளிய தீர்வு, எந்தவொரு மாயையும் இல்லாத தெளிவான இலட்சியவாதம் மட்டுமே.


இந்த எழுத்தாளர், ‘Teamlease Services’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் 'Made in India' புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆவார்.


Original Link: On private investment in education, India needs idealism without illusions.

Share:

NATO அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், இந்தியாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. -சக்தி பிரசாத் ஸ்ரீசந்தன்

இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பான நட்புநாடுகளில் ஒன்றாகவும், முக்கியமான எரிசக்தி வழங்குநராகவும் தொடர்ந்து இருக்கும் ரஷ்யாவே இந்தியாவுக்கு ஒரு சவாலாக உள்ளது. அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான தனது  ராஜதந்திர உறவுகளை இந்தியா வலுப்படுத்தியுள்ளது.


சில நாட்களுக்கு முன்பு அங்காராவில் நடைபெற்ற 2026 நேட்டோ உச்சி மாநாடு (NATO Summit), இந்த அமைப்பு வீழ்ச்சியை நோக்கிச் செல்லவில்லை. மாறாக, இது ஒரு புதிய ராஜதந்திர மாற்றத்தின் காலகட்டத்திற்குள் நுழைகிறது என்பதை உறுதிப்படுத்தியது. உக்ரைன் பிரச்சினை இன்னும் நேட்டோவின் முக்கிய கவனமாக இருந்தாலும், அதன் நோக்கங்கள் தற்போது அதைவிட விரிவடைந்துள்ளன. நீண்டகால போட்டி, தொழில்நுட்பப் போட்டி மற்றும் நிலையற்ற விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் உருவாகும் உலகை எதிர்கொள்ள நேட்டோ தயாராகி வருகிறது. இந்த மாற்றம் இந்தியாவுக்கு முக்கியமானது.


அங்காராவிலிருந்து வரும் முதல் செய்தி தெளிவாக உள்ளது: வரும்  ஆண்டுகளுக்கும் ரஷ்யா, நேட்டோவின் முக்கிய பாதுகாப்புச் சவாலாகத் தொடரும் என்பதாகும். உக்ரைன் போர் முடிவடைந்தாலும், தடுப்பு நடவடிக்கை (Deterrence) என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நேட்டோ முடிவு செய்துள்ளது. இரண்டாவது செய்தியும் அதே அளவு முக்கியமானது. ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்காக இன்னும் அதிகமான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்கா தொடர்ந்து தவிர்க்க முடியாத நட்புநாடக இருந்தாலும், அனைத்து பாதுகாப்புச் சுமைகளையும் தனியாகச் சுமக்க அமெரிக்கா   விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவுகள், அட்லாண்டிக் கூட்டணிக்குள் (Transatlantic Alliance) பொறுப்புகள் மறுபகிர்வு செய்யப்படுவதைக் குறிக்கிறது. மூன்றாவது செய்தி மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். நவீனப்  போர்க்களத்தில் மட்டுமல்ல, தொழிற்சாலைகள் மற்றும் ஆய்வகங்களிலும் வெல்லப்படுகின்றன. உக்ரைன் போர், வெடிமருந்து உற்பத்தி, ஏவுகணைத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளில் உள்ள கடுமையான பலவீனங்களை இது வெளிக்காட்டுகிறது. தொழில்நுட்பம் இந்த மாற்றத்தை முழுமையாக செயலப்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, குவாண்டம் கணினி, தன்னாட்சி அமைப்புகள் மற்றும் விண்வெளித் திறன்கள் ஆகியவை இனி எதிர்காலக் கவலைகள் அல்ல. அவை இன்றைய ராஜதந்திர முன்னுரிமைகள் ஆகும்.


இந்தியா நேட்டோ உறுப்பினர் அல்ல. அது உறுப்பினராக ஆவதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால், இந்தியாவின் பாதுகாப்புச் சூழல், அதன் அண்டை நாடுகளை தாண்டி எடுக்கப்படும் முடிவுகளால் அதிகளவில் வடிவமைக்கப்படுகிறது. ஐரோப்பா பாதுகாப்புத்துறையில் அதிக முதலீடு செய்வது, இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. குறிபிட்ட சில நாடுகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, பல்வேறு நாடுகளுடன் உருவாக்கப்படும் புதிய விநியோகச் சங்கிலிகளில் இந்திய நிறுவனங்கள் நட்பு நாடுகளாக மாற முடியும். ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியம், நம்பகமான நட்பு நாடுகளுக்கான ஐரோப்பாவின் தேடலுடன் நன்கு பொருந்துகிறது. இந்தியா விரைவாக செயல்பட்டால், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது ராணுவத் துறையைத் தாண்டி, விரிவான தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை கூட்டாண்மையாக மாறக்கூடும். மேலும், நேட்டோவின் ராஜதந்திர பார்வை இனி அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியுடன் மட்டும் இருக்காது. அது அதிகளவில் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிகள், கடல்சார்ந்த பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுடன் ஐரோப்பிய பாதுகாப்பை இணைத்து வருகிறது. இது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: இன்றைய உலகில் பாதுகாப்பு என்பது ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளது. ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பாதிப்பு, விரைவாக மற்றொரு பிராந்தியத்தையும் பாதிக்கக்கூடும். இந்தியாவுக்கு இது வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்குகிறது. வாய்ப்பு என்பது, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்புத் திறன் (Cyber Resilience), முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு புதுமைகள் ஆகிய துறைகளில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகும். ஆனால், இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகக் கூட்டாளிகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கும் ரஷ்யா ஒரு சவாலான காரணியாக உள்ளது. அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான தனது ராஜதந்திர உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது. நேட்டோவுக்கும் ரஷ்யவுக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரமடைந்து வருவதால், இரண்டு தரப்பு உறவுகளையும் சமநிலையில் வைதிருப்பது கடினமானதாக மாறக்கூடும்.


இதனால்தான், இந்தியாவின் ராஜதந்திர தன்னாட்சிக் கொள்கை இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ராணுவக் கூட்டணிகளில் (Military Blocs) ஒரு பகுதியாக மாறாமல், தங்களது நலன்கள் ஒத்துப்போகும் இடங்களில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படுவது என்ற அணுகுமுறை முக்கியமானதாக உள்ளது. இந்தியா, நேட்டோவை உக்ரைன் போர் என்ற ஒரே கண்ணோட்டத்தின் மூலம் மட்டும் பார்க்கும் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும். உண்மையான நிலைமை இதைவிட மிகவும் விரிவானது. நேட்டோ தற்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் பொருளாதார உறுதித்தன்மை (Economic Resilience) ஆகியவை ஒன்றோடொன்று அதிகமாக இணைக்கப்பட்ட ஒரு அமைப்பாக மாறி வருகிறது. இந்த மாற்றம், உலகளாவிய தரநிலைகள், பாதுகாப்புத்துறை புதுமைகள் மற்றும் ராஜதந்திர கூட்டாண்மைகளை வடிவமைக்கும். எனவே, “நேட்டோ இந்தியாவுக்கு தொடர்புடையதா?” என்று கேட்பதற்குப் பதிலாக, கொள்கை வகுப்பாளர்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: இந்தியாவின் ராஜதந்திர சுயாட்சியைப் பாதுகாத்துக்கொண்டு, ஐரோப்பாவின் பாதுகாப்பு மாற்றத்திலிருந்து இந்தியா எவ்வாறு பயன் பெற முடியும்?” சரியாக செயல்பட்டால், இந்தியா அட்லாண்டிக் கூட்டணியின் பாதுகாப்பு மறுசீரமைப்பு அலை (Transatlantic Rearmament Wave) மூலம் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நன்மைகளைப் பெறமுடியும். இதைத் தவறாகக் கையாளப்பட்டால், இதே அலை, புது இந்தியாவை விலை உயர்ந்த சார்பு நிலைகளுக்கும்,  மிகுந்த சிரமத்துடன் பாதுக்காத்து வரும் ராஜதந்திர சுயாட்சியை பலவீனப்படுத்தும் தேர்வுகளை நோக்கி தள்ளக்கூடும்.


எழுத்தாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு பள்ளியில் உள்ள ஐரோப்பிய ஆய்வு மையத்தின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: NATO’s transformation opens possibilities for India.

Share:

இந்திய சாம்பல் இருவாட்சி பறவை மீண்டும் கிர் பகுதிக்கு திரும்புகிறது: அது ஏன் தன் துணையை ஒரு மரத்தினுள் அடைத்து வைக்கிறது? -ரோஷ்னி யாதவ்

பத்தாண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவை, குஜராத்தின் கிர்  வனப்பகுதிக்கு மீண்டும் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் அது மீண்டும் வருவதற்க்கு என்ன காரணம்? இது ஏன் இவ்வளவு வசீகரமானதாகத் தெரிகிறது? இது ஏன் “அன்பும் அக்கறையும் கொண்ட கணவர்” (Doting Husband) என்று அழைக்கப்படுகிறது? இது எவ்வாறு வனப்பகுதிகளின் மறுஉருவாக்கத்திற்கு (Forest Regeneration) உதவுகிறது? 


தற்போதைய செய்தி :


குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் ஒரு முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு வெற்றிக் கதை அமைதியாக உருவாகி வருகிறது. 1950 மற்றும் 60-களில் அப்பகுதியிலிருந்து மறைந்துபோன 'இந்தியச் சாம்பல் நிற இருவாட்சிப் பறவை' (Indian Grey Hornbill), அரசின் முயற்சியின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது வெற்றிகரமாகத் தங்கள் வாழிடங்களை அமைத்துக்கொண்டு குஞ்சுகளையும் ஈன்றுள்ளது. இந்தச்சூழலில், இந்தியச் சாம்பல் நிற இருவாட்சிப் பறவை, அதை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மற்றும் 'பெரிய இருவாட்சிப் பறவை' (Great Hornbill) ஆகியவை குறித்து தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியச் சாம்பல் நிற இருவாட்சி பறவையின் அறிவியல் பெயர் Ocyceros birostris ஆகும். இதன் பெயர், இந்தப் பறவையின் தனித்துவமான கொம்பு போன்ற அலகு (Horn-like Beak) அமைப்பைக் குறிக்கிறது. மேலும், ஆண் பறவையின் மேல் அலகில் குறிப்பிடத்தக்க அளவில் கூர்மையான கருமை நிறக் தலைக்கவசம் (Casque) காணப்படும். பெண் பறவையில் இது குறைவாகவே காணப்படும். இதன் அலகு  (beak) பழுப்பு கலந்த கருப்பு மற்றும் தந்த வெள்ளை நிறத்தில் (Ivory-white) இருக்கும்.


2. இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகள் பழங்கள் மற்றும் பெர்ரி வகை கனிகளை உணவாக உண்ணுகின்றன. இதன் காரணமாக, இவை விதைகளைப் பரப்புவதில் (Seed Dispersal) முக்கியப் பங்கு வகித்து, வனப்பகுதிகள் விரிவடைவதற்க்கு உதவி செய்கின்றன. குறிப்பாக, அத்தி மரத்தின் (Fig Tree) விதைகளைப் பரப்புவதில் இருவாட்சிப் பறவைகள் முக்கியமானவை. மேலும், இவை பூச்சிகள், பல்லிகள், நத்தைகள், எலிகள் மற்றும் பிற பறவைகளின் குஞ்சுகள் ஆகியவற்றையும் உணவாக உட்கொள்கின்றன.


3. பெயருக்கு ஏற்றவாறு, இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் சாம்பல் நிறம் கொண்ட உடல் அமைப்புடன், கருப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு, கருப்பு மற்றும் வெள்ளை முனைப்பகுதி கொண்ட வால், அலகின் மேல் தலைக்கவசம் (Casque) அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50 செ.மீ நீளம் கொண்டது. இதன் எடை  370 முதல் 400 கிராம் வரை இருக்கும். இது 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஒரு முறை இனப்பெருக்கத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும்.


4. இவை மரங்களின் மிக உயர்ந்த கிளைகளில் அமர்வதால், மரத்தின் அடியில் நின்றுகொண்டு இவற்றைக் காண்பது கடினம். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் இவை 'குறைந்தபட்சக் கவலைக்குரியவை' (Least Concern) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தியச் சாம்பல் இருவாட்சிப் பறவை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாநிலப் பறவை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


5. உலகளவில் உள்ள 54 இருவாட்சி இனங்களில், 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் 9 இருவாட்சி இனங்கள் உள்ளன. மேலும், நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த இனங்களின் அதிகபட்ச பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.


குஜராத்தில், ஏன் ஆண் இந்திய சாம்பல் இருவாச்சி பறவையை “அன்பான கணவர்” (Doting Husband) என்று அழைக்கிறார்கள்?


6. இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் ஜோடியாகவோ அல்லது ஒரு சிறிய குழுவாகவோ இருக்கும். இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் காணப்படும் உறுதியான பாசத்திற்காக அனைவராலும் அறியப்படுகின்றன. இவற்றின் நம்பிக்கையும் பிணைப்பும் மிகவும் ஆச்சரியமானதாகும். குஜராத்தியில், ஆண் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவை அன்புடன் 'vahughelo' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், பாசமுள்ள கணவன் என்பதாகும். ஏனெனில், ஒரு ஜோடி மரத்தின் பொந்தில் (Tree Hollow) கூடு அமைக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பிறகு, பெண் பறவை தனது பறக்கும் இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டைகளை அடைகாப்பதற்காகக் கூட்டுக்குள்ளேயே தங்கிவிடுகிறது.


7. பிறகு, ஆண் பறவை சேற்று உருண்டைகளைப் (Mud Pellets) பெண் பறவையிடம் கொண்டு வருகிறது. பின்னர், பெண் பறவை தனது கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அந்தச் சேற்றைப் பயன்படுத்தி, கூட்டின் நுழைவாயிலை முழுமையாக மூடிவிடுகிறது. உணவு பெறுவதற்காக தனது அலகை வெளியே நீட்டுவதற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் ஒரு சிறிய செங்குத்தான இடைவெளியை (Vertical Slit) மட்டும் திறந்து வைக்கிறது. இவ்வாறு, இரண்டு மாதங்களுக்கு, தனது உணவுத் தேவைகளுக்காக முழுமையாக தனது துணையை நம்பி வாழ்கிறது. மேலும், உதிர்ந்த இறகுகளைப் பயன்படுத்தி கூட்டின் உள்ளே மென்மையான அடுக்கை உருவாக்குகிறது.


8. தினமும் ஆண் இந்திய சாம்பல் இருவாச்சி பறவை நீண்ட தூரம் பயணம் செய்து, உணவைச் சேகரித்து, அதை மீண்டும் கொண்டு வந்து பெண் பறவைக்கு வாய்வழியாகக் (Regurgitated Food) ஊட்டுகிறது. இவை ஒரே நேரத்தில் ஒரு துணையுடன் மட்டுமே இணைந்து வாழும் (Monogamous) தன்மை கொண்டவை. குஞ்சுகள் வளர்ந்து பெரியதாகும் நேரத்தில், தாய் பறவையின் பறக்கும் இறகுகள் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன. பின்னர், அது தனது அலகால் கூட்டின் நுழைவுப் பகுதியை உடைத்து வெளியே வருகிறது. அதன் பிறகு, ஆண் மற்றும் பெண் இருவாச்சிகள் இருவரும் இணைந்து குஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன.


கிர் வனப்பகுதியில் இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல்


1. மாநில அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, ‘இந்தியாவின் கிர் பகுதியில் இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல்: அவற்றின் நடமாட்டம், வாழ்விடத் தேர்வு, கூடு அமைக்கும் முறை மற்றும் நடத்தை குறித்த ஆய்வுகள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, ‘Birds’ என்ற சர்வதேச ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் வனத்துறையால் செயல்படுத்தப்பட்ட இந்திய சாம்பல் இருவாட்சிப் பறவைகளை மீண்டும் அறிமுகத் திட்டம் குறித்த முதல் விரிவான மதிப்பீட்டை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.


2. இந்தத்திட்டத்தில், 40 இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவைகள் இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்டன. 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் 28 பறவைகளும், 2023-ஆம் ஆண்டில் 12 பறவைகளும் விடப்பட்டன. இதில் 11 ஆண் பறவைகளுக்கு செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் (Satellite Transmitters) பொருத்தப்பட்டன. இதன் மூலம், விஞ்ஞானிகள் அவற்றின் இயக்கம், வாழ்விடப் பயன்பாடு மற்றும் இனப்பெருக்க நடத்தை ஆகியவற்றை பல ஆண்டுகளாகக் கண்காணிக்க முடிந்தது என்று இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரும், ஜுனாகத் வட்டார வனப் பாதுகாவலருமான  மோகன் ராம் தெரிவித்தார்.


3. விரிவான வாழ்விட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, கிர் காடுகள் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகளுக்கு ஏற்ற சூழலியல் நிலைமைகளை  கொண்டுள்ளனவா என்பது உறுதிசெய்த பின்னர், இந்தப் பறவைகள் குஜராத்தின் ஆரவல்லி காடுகளில் காணப்பட்ட ஆரோக்கியமான இருவாச்சி பறவைகள் இனக்குழுக்களில் இருந்து மாற்றி கொண்டு வரப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவையானது, நீண்டதூரத்திற்கு விதைகளைப் பரப்பும் சூழலியல் முக்கியத்துவம் கொண்டதாக இருந்து வருகிறது. இது, பழம் தரும் மரங்களின் விதைகளை பரந்த நிலப்பரப்புகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் வனப்பகுதிகளை மீண்டும் உருவாக்க உதவுகிறது என்று வன மற்றும் சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளர் வினோத் ராவ் கூறினார்


5. இந்தப் பகுதியில் இருந்து இருவாச்சி பறவைகள் மறைந்ததற்கான வரலாற்றுப் பின்னணியை விளக்கிய வனவிலங்கு முதன்மை தலைமைப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஜெய்பால் சிங், வரலாற்று பதிவுகளின்படி, வாழ்விடச் சீரழிவை (Habitat Degradation) விட வேட்டையாடுதலே இவை மறைந்ததற்கான முக்கிய காரணமாக இருந்தது என்று தெரிவித்தார்.


6. மேலும், இருவாச்சி பறவைகள் கூடு அமைப்பதற்கு, பெரிய தண்டு சுற்றளவு (Large Trunk Girth) கொண்ட முதிர்ந்த மரங்களை (Mature Trees) தேர்ந்தெடுப்பது கவனிக்கப்பட்டது. குறிப்பாக, இலையுதிர் மர வகை (Sterculia urens) மற்றும் தான்றிக்காய் மரம் (Terminalia bellirica) போன்ற மரங்களில் இவை கூடு அமைத்தன. இது, இயற்கை நிலப்பரப்பில் உள்ள பழமையான மற்றும் முதிர்ந்த மரங்களை   பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


பெரிய இருவாச்சி பறவை (Great Hornbill)


1. பெரிய இருவாச்சி பறவை, பொதுவாக முதன்மை பசுமைமாறா காடுகள்  மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில்  காணப்படுகிறது. குறிப்பாக, இது உயரமான மரங்களின் மேல் பகுதிகளில் (Canopy) வாழ்கிறது.


2. இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின், சிவப்பு பட்டியலில் “பாதிக்கப்படக்கூடிய இனம்” (Vulnerable) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act, 1972) அட்டவணை I-ன்  கீழ் பாதுகாக்கப்படுகிறது.


இருவாச்சி திருவிழா (Hornbill Festival) என்றால் என்ன?


பொதுவாக “திருவிழாக்களின் திருவிழா (Festival of Festivals)” என்று அழைக்கப்படும் இருவாச்சி திருவிழா (Hornbill Festival), நாகாலாந்தின் மிகவும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. மக்களால் மதிக்கப்படும் இருவாச்சி பறவையின் பெயரில் இந்தத் திருவிழா அழைக்கப்படுகிறது.  நாகா பழங்குடியின மக்கள் ஒன்றுகூடி, தங்களது பாரம்பரியங்களை வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் கொண்டாடுகின்றனர்.


கிர் பகுதிக்கு இந்திய சாம்பல் இருவாட்சி மீண்டும் வருகிறது: தனது துணையை இரண்டு மாதங்களுக்கு மரத்திற்குள் அடைத்து வைக்கும் இந்தப் பறவையைச் சந்தியுங்கள். நாகாலாந்தில் நடைபெறும் வருடாந்திர இருவாட்சித் திருவிழாவில் நாகா பழங்குடியினர் தங்கள் ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர். நாள் முழுவதும் இந்தத் திருவிழா துடிப்பாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கிறது. முழுமையான விழாக்கோலம் பூண்ட வீரர்கள் பாரம்பரிய நடனங்களையும் போர்க்குரல்களையும் எழுப்புகின்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெற்றிகள், அறுவடைகள், காதல் மற்றும் பழங்குடிப் புராணங்கள் என ஒரு கதையைச் சொல்கிறது. இருவாட்சி இறகுகள், பன்றிக் கோரப்பற்கள் மற்றும் வண்ணமயமான பின்னப்பட்ட சால்வைகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான தலைக்கவசங்களை அணிந்திருக்கும் வீரர்கள், ஒரு மறக்க முடியாத காட்சியை உருவாக்குகின்றனர்.


3. இந்தியாவில் பெரிய இருவாச்சிகள் முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இது அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளாவின் மாநிலப்பறவை ஆகும்.


Original Link: Indian Grey Hornbill returns to Gir: Why it seals its mate inside a tree.

Share:

2025-26-ஆம் ஆண்டிற்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு: உள்கட்டமைப்பு மற்றும் இடைநிற்றல் விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால், மாணவர் சேர்க்கை குறைந்து இடைவெளிகள் அதிகரிக்கின்றன. -சாஹப் தீன், நவ்னீத் ஷர்மா

பள்ளிக் கல்வித் திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பிற்காக, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (Unified District Information System for Education (UDISE+)) இந்தியாவின் மிக முக்கியமான தரவுத்தளமாகச் செயல்படுகிறது. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பெரும்பாலும் பள்ளிகளின் அமைப்பு பெரும்பாலும் பள்ளிகள் தாங்களே வழங்கும் (Self-reporting) தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், தரவுகளின் தரம் குறித்த கவலைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் இருப்பு மற்றும் இடைநிற்றல் விகிதங்கள் ஆகியவற்றை அறிக்கையிடுவதில் ஏற்படும் பிழைகள், தேசிய புள்ளிவிவரங்களின் துல்லியத்தைத்தன்மையைப் பாதிக்கக்கூடும்.


எனவே, வலுவான சரிபார்ப்பு அமைப்புகள், தொடர்ச்சியான தணிக்கைகள், டிஜிட்டல் அங்கீகாரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை தரவுகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். இதன் மூலம் கல்வித் திட்டமிடல் சிறப்பாக நடைபெறுவதோடு, அரசுப் பொதுவளங்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும். சரிபார்ப்புக்கான உறுதியான நடவடிக்கைகளில், பள்ளிகள் அளிக்கும் தரவுகள் மீதான அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மூன்றாம் தரப்பு தணிக்கைகள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் சீரற்ற மாதிரிச் சோதனைகள் (random sampling checks), மாணவர் மற்றும் ஆசிரியர் தரவுத்தளங்களுடனான தானியங்கி டிஜிட்டல் ஒப்பீட்டுச் சரிபார்ப்புகள் மற்றும் முரண்பாடுகளைக் கண்டறிய தனியாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுடன் தரவுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளும் அடங்கும்.


2025-26-ஆம் ஆண்டிற்க்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பின் அறிக்கை, இந்தியாவில் பள்ளிக் கல்வியின் ஒரு கலவையான முடிவை வெளிக்காட்டுகிறது. குறைந்த இடைநிற்றல் விகிதங்கள், அதிக ஆசிரியர் எண்ணிக்கை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசியக் கொள்கையுடன் இணைப்பது உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களை அது காட்டுகிறது. அதே சமயம், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாகக் காணப்படும் கவலைக்குரிய சரிவு, அரசுப் பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளை நோக்கிய முக்கிய மாற்றம் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையிலான தெளிவான பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றையும் இது சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த அறிக்கை ஒரு முக்கிய முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது: முன்னேற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும், அது சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரைப் பொறுத்தவரை தீவிரமான சமூக, பொருளாதார மற்றும் கொள்கைரீதியாக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.


பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது


2023-24-ஆம் ஆண்டில் 24.80 கோடியாக இருந்த ஒட்டுமொத்த பள்ளி மாணவர் சேர்க்கை, 2025-26-ஆம் ஆண்டில் 24.72 கோடியாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி, ஆழமான கட்டமைப்புச் சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை: (அ) குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததால் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது, (ஆ) வேலைவாய்ப்பின்மையின் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்வதால் (Migration) குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது, மற்றும் (இ) பொருளாதார நெருக்கடி, குழந்தை திருமணம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, தரமான பள்ளிகளை அணுக முடியாத நிலை போன்ற காரணங்களால் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பே மாணவர்கள் பள்ளியை விட்டு விலகுவது ஆகியவை அடங்கும். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாற்று கல்வி அமைப்புகள் (Substitute Education Systems) ஆகியவற்றுக்கு இடையே மாணவர் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அனைத்து குழந்தைகளையும் முழுமையாகப் பதிவுசெய்யாமல் இருக்கக்கூடும். பள்ளி மாணவர் சேர்க்கையில் ஏற்படும் தொடர்ச்சியான சரிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  போதுமான மாணவர்கள் இல்லாத பள்ளிகள் நிதி ரீதியாகச் செயல்பட முடியாத சூழலை ஏற்படுத்தும். இது பள்ளிகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும். இது போன்ற மூடல்கள், தொலைதூரக் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதைக் கடினமாக்குகின்றன. பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது, ஆசிரியர்களைப் பணியமர்த்துவதைப் பாதிக்கலாம் மற்றும் கல்வி சார்ந்த வளங்களைக் குறைக்கலாம்.


அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் மாறிச் செல்வது, அரசுப் பள்ளிகளில்  86 லட்சம் மாணவர்கள் குறைந்திருப்பதையும், அதே காலகட்டத்தில் தனியார் உதவி பெறாத பள்ளிகளில் 88 லட்சம் மாணவர்கள் அதிகரித்திருப்பதையும் காட்டுகிறது. இது போன்ற இடமாற்றம், தனியார் பள்ளிகள் உயர்தரமான ஆங்கில வழிக் கல்வி, சிறந்த கற்றல் விளைவுகள் மற்றும் அதிக பொறுப்புணர்வு ஆகியவற்றை வழங்குகின்றன என்று பெற்றோர்கள் கருதுவதை வெளிக் காட்டுகிறது.


மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு மாறிச் செல்வது ஏற்படுத்தும் விளைவுகள், சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு (Socially and Economically Disadvantaged Students) முக்கிய கவலையாக உள்ளது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரரீதியாக  நலிவடைந்த குடும்பங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியை முக்கிய ஆதாரமாகத் இருந்து வருகின்றன. ஏனெனில், சமூக மற்றும் பொருளாதாரரீதியாகவும் ஏழ்மையான குடும்பங்களுக்குக் கல்வியை குறைவான விலையில் கிடைக்கச் செய்வதற்காக, பள்ளிகள் இலவசக் கல்வியுடன் இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் மதிய உணவையும் வழங்குகின்றன. மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறிச் செல்வது, கல்வியிலும் சமூகத்தின் பிற அம்சங்களிலும் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வை (Social Inequality) அதிகரிக்க செய்கிறது.



அதிக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் விலையுயர்ந்த தனியார் கல்வியைப் பெறும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. அதே சமயம், சமூகப் பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் கல்வி வளங்கள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளிகளைச் சார்ந்துள்ளன. இறுதியில், இது இரு அடுக்குக் கல்வி முறையை உருவாக்குகிறது.   கல்விக்கான வாய்ப்புகள் படிப்படியாக ஒரு குடும்பத்தின் வருமான அளவைச் சார்ந்ததாக அமைகின்றன.


மேலும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைக் கட்டணத்தைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முயற்சிக்கும்போது நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம். இது அவர்களைக் கடனில் தள்ளக்கூடும் அல்லது இறுதியில் பிள்ளைகள் தங்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தவும் வழிவகுக்கலாம். எனவே, பாரபட்சமற்ற கல்விக்கான அணுகலை உறுதி செய்வதற்காக, அரசுப் பள்ளிகளின் தரத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துவது  முக்கியமான நடவடிக்கையாகும்.


முன்னேற்றம் இருந்தபோதிலும் உள்கட்டமைப்பு இடைவெளிகள் தொடர்கின்றன


பள்ளி உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 95% பள்ளிகளில் மின்சார வசதி, 70% பள்ளிகளில் கணினி வசதி, மற்றும் 67% பள்ளிகளில் இணைய வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள்  மற்றும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் முக்கியமான உள்கட்டமைப்பு குறைபாடுகள்  தொடர்ந்து வருகின்றன. அது போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இணைய அணுகல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (nformation and Communication Technology (ICT)) உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், டிஜிட்டல் கற்றல், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் இணையவழி கல்வி வளங்கள் தடைபடுகின்றன.




மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சாய்வுதளம் (Ramps), கழிப்பறைகள், உதவி சாதனங்கள் மற்றும் சிறப்பு கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட போதுமான மற்றும்  உள்கட்டமைப்பு வசதிகள் பல பள்ளிகளில் இன்னும் தேவைப்படுகின்றன. போதிய உள்கட்டமைப்பு இல்லாத நிலை, கற்றல் முடிவுகள், மாணவர் வருகைப் பதிவு, பள்ளியில் தொடர்தல் மற்றும் ஒட்டுமொத்த கல்வித் தரம் ஆகியவற்றை பாதிக்கிறது. இது தவிர, போதுமான டிஜிட்டல் வசதிகள் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை அணுகும் வாய்ப்பை இழக்கின்றனர். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே சமமற்ற கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.


2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்வதே நிலையான வளர்ச்சி (ensure inclusive, equitable, and quality education for all) இலக்குகள் 4-இன் நோக்கமாகும். குறைந்துவரும் மாணவர் சேர்க்கையும், பலவீனமான தகவமைப்பும் இந்த இலக்கை அடைவதை நேரடியாகப் பாதிக்கின்றன. இடைநிற்றல் மற்றும் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio (GER)) முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி மட்டங்களில் தகவமைப்பு பலவீனமாகவே உள்ளது. இது, பல மாணவர்கள் தங்கள் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியைவிட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது. மாணவர் சேர்க்கைக் குறைவு, பள்ளியில் தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என்ற இலக்கை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


பல்வேறு சமூகப் பொருளாதாரக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான கல்வி ஏற்றத்தாழ்வுகளும் விரிவடைந்துள்ளன. இறுதியில், குறைந்த கல்வித் தகுதியானது எதிர்கால வேலைவாய்ப்புகள், வருமான நிலை மற்றும் சமூக முன்னேற்ற வாய்ப்புகளை பாதிக்கிறது. இது நீண்டகால மனித மூலதன மேம்பாட்டிற்குத் தடையாக அமைகிறது. எனவே, நிலையான வளர்ச்சி இலக்கு 4-ஐ அடைவதற்கு, குறிப்பாகப் பெண்கள், பின்தங்கிய பிரிவினர் மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதி மாணவர்களின் கல்வியின் தொடர்ச்சியை வலுப்படுத்துவது மிக முக்கியமான நடவடிக்கையாகும்.



மாணவர் சேர்க்கைத் தரவுகள், ஆசிரியர் நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை நேரடியாகப் பாதிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அரசாங்கங்கள் ஆசிரியர் நியமனத்தைக் குறைக்கும். மாணவர் சேர்க்கை குறைந்துவரும் சிறிய கிராமப்பள்ளிகள், புவியியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்தாலும், ஆசிரியர்களை இழக்க நேரிடும். இது ஆசிரியர்கள் மீதான சுமையை அதிகரிப்பதோடு, கல்வியின் தரத்தையும் குறைக்கிறது. இதேபோல், குறைந்த மாணவர் சேர்க்கையானது, பள்ளிக் கல்விக்கான எதிர்கால நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகாரிகக்க செய்யும். இறுதியாக இந்த நிலை சில சமூகங்கள் மற்றும் பகுதிகள் கல்வி வாய்ப்புகளில் இருந்து விலகும் நிலையை உருவாக்கக்கூடும்.


தற்போதைய 2025-26-ஆம் ஆண்டிற்க்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு அறிக்கை, இந்தியாவின் பள்ளிக் கல்வி அமைப்பில் உள்ள முன்னேற்றங்களையும் நீடித்த சவால்களையும்  கோடிட்டுக்காட்டுகிறது. இடைநிற்றல் விகிதங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து செயலபடும் நிலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஊக்கமளிக்கின்றன. இதற்கு மாறாக, மொத்தப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைதல், மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி வேகமாக நகர்தல், உள்கட்டமைப்பு இடைவெளிகள், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பின் தரவுகளின் தரம் குறித்த கவலைகள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் தொடர்வதில் உள்ள சவால்கள் ஆகியவை உடனடி கொள்கை கவனம் தேவைப்படும் பிரச்சினைகளாக உள்ளன.


சமூகப் பொருளாதாரரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் பின்தங்கிய குழுக்களான, குறிப்பாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றன. பள்ளிக் கல்வியின் தரத்தை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதுமான ஆசிரியர்கள் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் நம்பகமான கல்வித் தரவுகளை பராமரித்தல் போன்றவை, புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 4  ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு முக்கியமானதாகும்.


சஹாப் தீன், லக்னோவில் உள்ள தொலை உணர்வுப் பயன்பாட்டு மையத்தில் ஒரு திட்ட விஞ்ஞானியாக உள்ளார். நவ்நீத் சர்மா, தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தில் (Central University of Himachal Pradesh) கல்வியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

\
Share:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் எப்படி இயங்குகிறது? - மைத்ரி போரேச்சா

இயந்திர சக்தியை உருவாக்க எரிபொருளை எரிக்கும் வழக்கமான டீசல் இன்ஜின்களைப் போல் இல்லாமல், ஒரு ஹைட்ரஜன் ரயில், புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane (PEM) எரிபொருள் மின்கலம் வடிவில் ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையத்தைத் கொண்டுள்ளது.


தற்போதைய செய்தி: ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே 89 கி.மீ தூரத்திற்கு இயக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். இந்திய ரயில்வே நிலக்கரி மற்றும் நீராவியிலிருந்து தூய்மையான, நிலையான எரிசக்தி ஆற்றல்களை நோக்கி மாறிவரும் நிலையில், இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் (Hydrogen-powered train) என்றால் என்ன?


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் இரயில், 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனுடைய,  பத்து பெட்டிகளைக் கொண்ட ஒரு ரயில் தொகுப்பாகும்.  மிகவும் தூய்மையான எரிபொருளான ஹைட்ரஜனைப் பயன்படுத்தி, இந்த இரயில் தனக்குத் தேவையான மின்சாரத்தை இரயிலுக்குள்ளேயே உற்பத்தி செய்கிறது.


மேல்நிலை மின்கம்பிகளில் இருந்து மின்சாரத்தைப் பெறும் வழக்கமான மின்சார ரயில்களைப் போல் இல்லாமல், இந்த ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத் தொடர்வண்டியானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையேயான ஒரு வேதிவினை (Chemical Reaction) மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் ஒரே துணை விளைபொருள் நீராவி மட்டுமே இருக்கும். இந்த ரயில், ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ. இயக்க வேகத்திலும், மணிக்கு 110 கி.மீ. வடிவமைப்பு வேகத்திலும் இயக்கப்படும்.


இந்தத் ரயில் இரண்டு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பெட்டிகளையும் (Driving Power Cars (DPCs)) 8 இழுவைப் பெட்டிகளையும் (Trailer Coaches (TCs)) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹைட்ரஜன் உந்துசக்திப் பெட்டியிலும் எரிபொருள் கலன்கள், லித்தியம் இரும்பு பாஸ்பேட் (lithium iron phosphate (LFP)) மின்கலங்கள் மற்றும் ஹைட்ரஜன் சேமிப்பு உருளைகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இழுவைச் சக்தியை வழங்குவதோடு, மாறுபட்ட இயக்கச் சூழல்களிலும் ரயில் நம்பகத்தன்மையுடன்  இயங்குவதை உறுதி செய்கின்றன.


ரயிலின் இரு முனைகளிலும் தலா ஒரு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பெட்டி (Driving Power Car (DPC)) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயங்கும் பெட்டியும் 1,200 கிலோவாட் (kW) அல்லது 1,600 குதிரைத்திறன் (Horsepower (hp)) சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு பெட்டிகளும் இணைந்து செயல்பட்டு, முழு ரயிலையும் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் வரை இயக்குவதற்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன.




இந்த ரயிலுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் எங்கிருந்து கிடைக்கிறது?


ஜிந்த் நகரில் நிறுவப்பட்டுள்ள பிரத்யேக ஹைட்ரஜன் சேமிப்பு, அழுத்தம் கூட்டுதல் (compression) மற்றும் விநியோக வசதி போன்றவை எரிபொருள் நிரப்பும் பணிகளுக்கு உதவும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) நிலையத்தைப் போலவே, இந்த ரயிலுக்கும் எரிபொருள் நிரப்புவதற்கான ஒரு நிலையம் தேவைப்படுகிறது.


முதலில், பசுமை ஹைட்ரஜன் ஆலையில் மின்பகுப்பு (Electrolysis) முறையின் மூலம் நீர், மின்சாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகப் பிரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ரஜன், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சேமிப்புத் தொட்டிகளில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.


இரண்டாவது கட்டத்தில், உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ரஜன் 500 பார்  அழுத்தத்திற்கு சுருக்கப்படுகிறது. இதன் மூலம், குறைந்த இடத்தில் அதிக அளவு ஹைட்ரஜனை சேமிக்க முடியும். இறுதியாக, 350 பார் என்ற சீரான அழுத்தத்தில் இரண்டு தனித்தனி ஹைட்ரஜன் விநியோகக் கருவிகள் மூலம் இது விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் இரண்டு ஹைட்ரஜன் ரயில்களிலும் ஒரே நேரத்தில் எரிபொருளை நிரப்ப முடிவதுடன், செயல்பாட்டுக்கான கால அவகாசமும் குறைக்கப்படுகிறது. இந்த வசதி ஒரே நேரத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. இது ரயிலின் வழக்கமான செயல்பாடுகளுக்குப் போதுமானதாகும். மேலும், இதன் சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation (PESO)) ஒப்புதல் அளித்துள்ளது.


ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (Research Designs and Standards Organisation (RDSO)) தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகளை உருவாக்கி, வடிவமைப்பு ஒப்புதல் செயல்முறைக்குத் தலைமை வகித்து வருகிறது. இந்த ஹைட்ரஜன் ரயில் தொகுப்பை, M/s Medha Servo Drives நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. அதேவேளையில், ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory (ICF)), ரயிலின் கருப்பொருள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவால் இயங்கும் ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானதா?


ஹைட்ரஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற மற்றும் நச்சுத்தன்மையற்ற ஒரு வாயுவாகும். ஆனால், இது மிகவும் எரியக்கூடியது (Highly Inflammable) என்பதால், மிகவும் கவனமாகக் பராமரிக்கப்பட வேண்டும். ஹைட்ரஜனை கண்களால் காணவோ அல்லது அதன் வாசனையை உணரவோ முடியாது என்பதால், இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் முழுப்  பாதுகாப்பு அமைப்பும் மிகச் சிறிய அளவிலான கசிவைக் கூட உடனடியாகக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ரயிலும், ஹைட்ரஜன் உற்பத்தி நிலையமும் ஹைட்ரஜன் கசிவு, அசாதாரண வெப்பநிலை, தீப்பிழம்பு (Flame), புகை போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளால் பொருத்தப்பட்டுள்ளன. இடைவிடாத காற்றோட்ட வசதி ரயிலுக்குள் எப்போதும் காற்றைச் சுழலச் செய்வதால், மிகச் சிறிய அளவில் ஹைட்ரஜன் கசிந்தாலும், அது ஒரே இடத்தில் தேங்காமல், வெளிக்காற்றில் கலந்து பாதுகாப்பாகச் சிதறிவிடும்.


தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும் பாதுகாப்பு அமைப்பும் (automatic shut-off system) இதில் உள்ளது. ஏதேனும், அசாதாரண நிகழ்வு கண்டறியப்பட்டால், மனிதர்களின் தலையீட்டிற்காகக் காத்திருக்காமலேயே, இந்த அமைப்பு தானாகவே ஹைட்ரஜன் விநியோகத்தை நிறுத்திவிடும். ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரது அறை (Loco Pilot’s cabin) சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் ரயிலைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் சிறப்பு வசதி மற்றும் ரயிலின் முழுமையான அமைப்பின் தற்போதைய நிலையைத் தொடர்ந்து காட்டும் கண்காணிப்பு திரை ஆகியவையும் இதில் உள்ளன.







ஜிண்ட் ஹைட்ரஜன் நிலையத்திலும் கசிவைக் கண்டறியும் கருவிகள், தீப்பிழம்பைக் கண்டறியும் கருவிகள், தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும்  பாதுகாப்பு அமைப்புகள், தீயைக் கட்டுப்படுத்த நீர் தெளிப்பான்கள் மற்றும் தீ எச்சரிக்கை கருவிகள் போன்ற  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஹைட்ரஜன் ரயில் சேவையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், முழு அமைப்பும் ஜெர்மனியைச் சேர்ந்த TÜV SÜD என்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் சான்றளிப்பு நிறுவனங்களில் ஒன்றால், தானாக இயங்கும் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டது என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


உலகளவில் ஹைட்ரஜன் ரயில்களின் தற்போதைய நிலை என்ன?


உலகளவில் ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. வணிக ரீதியாக ஹைட்ரஜன் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்திய முதல் நாடக ஜெர்மனி  இருந்து வருகிறது. அதேசமயம், பிரான்ஸ், இத்தாலி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் முன்மாதிரி  திட்டங்கள் அல்லது குறைந்த அளவிலான செயல்பாடுகளையோ மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்த ரயில்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு பெட்டிகளைக் கொண்டிருப்பதோடு, அவை பிராந்திய பயணிகள் சேவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்களின் எதிர்காலம் என்ன?


இந்திய இரயில்வே, ஜிண்ட்-சோனிபத் (Jind–Sonipat) ஹைட்ரஜன் ரயில் திட்டம் மூலம் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, கல்கா-ஷிம்லா (Kalka–Shimla) உள்ளிட்ட பாரம்பரிய இரயில்வே பாதைகளில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகிறது. மேலும், இந்த முன்னோடி திட்டத்தை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் வண்டிகளுக்கான (Hydrogen-powered Rolling Stock) ஒழுங்கமைக்கப்பட்ட தேசியத் திட்டமாக மாற்ற இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் (National Green Hydrogen Mission) மற்றும் இந்தியாவின் நீண்டகால கார்பன் உமிழ்வில்லா நிலை இலக்கை அடைவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர்  கூறினார்.


Original Link: How India’s first hydrogen-powered train works.

Share: