சூரிய ஆற்றலை அறுவடை செய்தல்: கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை சூரிய ஆற்றல் எவ்வாறு வழிநடத்துகிறது? - ஸ்ரேயாஸ் கௌடா

இது ஒரு வலுவான வாக்குறுதியை அளிக்கிறது: சூரிய ஒளியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், வாய்ப்புகள், சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை உருவாக்குவதே அந்த வாக்குறுதியாகும்.


வேளாண்மையோடு நெருங்கிய தொடர்புடைய இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம், தாராளமாகக் கிடைக்கும் சூரிய ஒளி என்ற ஆதாரத்தைக் கொண்டு அமைதியாகவும் அதேசமயம் வலிமையாகவும் மாறி வருகிறது. காலநிலை மாற்றங்கள், உயர்ந்துவரும் செலவுகள் மற்றும் நம்பகமற்ற மின்சாரம் போன்ற சவால்களை உழவர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், சூரிய ஆற்றல் என்பது ஒரு மாற்று வழி என்பதோடு நின்றுவிடாமல், நிலையான வேளாண் வளர்ச்சியின் முக்கியத் தூணாகவும் மாறி வருகிறது.


வேளாண் தொழிலின் அடிப்படைத் தேவை அதிகப்படியான ஆற்றல் ஆகும். நீர் பாசனம் மற்றும் நீர் மேலாண்மை முதல், விளைபொருட்களைச் சேமித்து வைப்பது மற்றும் பதப்படுத்துவது வரை, வேளாண்மையின் உற்பத்தித் திறனில் மின்னாற்றல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்திய வேளாண் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இரண்டு முக்கிய சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். ஒன்று, மானியம் வழங்கப்பட்டாலும் நம்பகத்தன்மை இல்லாத மின்சாரக் கட்டமைப்பு வசதியைச் சார்ந்திருப்பது; மற்றொன்று, டீசல் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்காகத் தொடர்ந்து செலவிடப்படும் அதிகப்படியான தொகை. சூரிய ஆற்றல் இந்தத் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. இது வேளாண் நிலங்களிலேயே சுத்தமான, நம்பகமான மற்றும் சிக்கனமான மின்சாரத்தை நேரடியாக வழங்குகிறது.


சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பாசனம்: வேளாண் பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்.


சூரிய ஆற்றலால் இயங்கும் நீர் பாசனம், வேளாண் தொழிலில் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்றாகும். இது டீசல் பம்புகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற மின்சார விநியோகத்திற்கு மாற்றாக அமைகிறது. இதன் மூலம் வேளாண் தொழிலாளர்களுக்கு பகல் நேரத்தில் நிலையான மின்சாரம் கிடைப்பதுடன், பயிர்களுக்கு சரியான நேரத்தில் நீர் பாய்ச்சவும் உதவுகிறது.


இந்த மாற்றம் தெளிவான பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தும் விவசாயிகள், தங்கள் வருமானத்தில் சுமார் 30-35% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், சிறந்த விளைச்சல் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அதிக லாபம் தரும் பயிர்களை சாகுபடி முடிவதே ஆகும். நம்பகமான நீர்ப்பாசன வசதி பயிர்களின் வாட்டத்தைக் குறைப்பதோடு, குறிப்பாக, சீரற்ற மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.


அதேபோல, செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். வேளாண் சாகுபடி செலவுகளில் பெரும்பகுதியாக இருக்கும் டீசல் செலவுகள், இதன் மூலம் முற்றிலும் இல்லாமல் போகின்றன. இந்தச் சூரிய ஆற்றல் அமைப்புகள் நீண்டகால சேமிப்பையும், கணிக்கக்கூடிய எரிசக்தி செலவுகளையும் வழங்குகின்றன. இது இந்தியாவின் வேளாண் சமூகத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் சிறு மற்றும் குறு வேளாண் தொழிலாளர்களுக்கு பெரும் பயனை அளிக்கிறது.


சூரிய மின்சக்தி விரிவாக்கம்: கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் தேசிய அளவிலான தாக்கம்.


இந்தியாவின் கொள்கைகள் வேளாண்துறையில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன. பிரதம மந்திரி - விவசாயிகளுக்கான சூரிய சக்தி மின்சார திட்டம் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan (PM-KUSUM)) திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டிற்குள் சுமார் 34,800 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தியை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன முறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.


இந்த முயற்சி தூய்மையான எரிசக்தியைப் பெறுவது மட்டுமல்லாமல், உள்ளூரிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றல் திட்டமானது, வேளாண் தொழிலாளர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டும் இருக்காமல், மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் மாற உதவுகிறது. அவர்கள் தங்களிடம் மீதமுள்ள கூடுதல் மின்சாரத்தை அரசு மின்தொகுப்பிற்கு விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும் என்கின்றனர்.



ஆற்றல் வளங்களைக் கடந்து : கிராமப்புற மீள்திறனைக் கட்டமைத்தல்


சூரிய ஆற்றலின் தாக்கம் பணத்தைச் சேமிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இது கிராமப்புற வாழ்க்கையை மூன்று முக்கிய வழிகளில் மாற்றியமைத்து வருகிறது:


1. ஆற்றல் சுதந்திரம்: வேளாண் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மின்சார விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், சீரற்ற மின்சாரக் கட்டமைப்பு மற்றும் அடிக்கடி மாறும் எரிபொருள் விலைகளைச் சார்ந்திருக்கும் நிலை குறைகிறது.


2. கிராமப்புற தொழில்முனைவோர்: கூட்டு நீர் பாசனம் மற்றும் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சிறு தொழில்கள் போன்ற பரவலாக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. பல மாநிலங்களில், சமூக சூரிய மின்சக்தி திட்டங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பெண்கள் தலைமையேற்று நிர்வகிக்கும் தொழில்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றன.


3. காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன்: அதிகரித்துவரும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கணிக்க முடியாத வானிலை சூழலில், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் நீர்ப்பாசனம் ஒரு நம்பகமான தீர்வை வழங்குகிறது. இதை சொட்டு நீர் பாசனம் போன்ற சிக்கனமான முறைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, நீரின் பயன்பாடு பெருமளவு மேம்படுகிறது. இது நிலையான பயிர்சாகுபடிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.


அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் புதிய கண்டுபிடிப்புகள்


வேளாண் நிலங்களில் பயிர்களோடு சேர்த்து சூரிய மின்சக்தி தகடுகளையும் அமைக்கும் 'Agrivoltaics' போன்ற புதிய கண்டுபிடிப்புகள் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இத்தகைய முறைகள் நிலத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதுடன், மண்ணின் ஈரப்பதம் குறைவதைத் தடுக்கின்றன. மேலும், சில நேரங்களில் இவை பயிர் விளைச்சலை அதிகரிப்பதோடு, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியையும் உற்பத்தி செய்கின்றன.


மேலும், சூரிய ஆற்றலால் இயங்கும் குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், உணவுப் பதப்படுத்தும் அமைப்புகள் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் முயற்சிகள் ஆகியவை மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துகின்றன. இதன்மூலம் சூரிய ஆற்றலின் நன்மைகள் வேளாண்துறையைத் தாண்டி பல்வேறு துறைகளுக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

சவால்களும் எதிர்காலப் பாதையும்


சூரிய ஆற்றல் மிகுந்த நம்பிக்கையை அளித்தாலும், இந்தியாவின் கிராமப்புறங்களில் அதனைச் செயல்படுத்துவதில் இன்னும் சில தடைகள் நீடிக்கவே செய்கின்றன. ஆரம்பக்கட்டக் கட்டுமானப் பணிகளுக்கான அதிகப்படியான செலவு, கடன் வசதிகள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை சில பகுதிகளில் இதன் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகின்றன. இந்தச் சவால்களைச் சரிசெய்ய, புதிய நிதி உதவித் திட்டங்கள், சிறு கிராமங்கள் வரை சென்றடையும் சிறப்பான விநியோக முறை மற்றும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு ஆகியவை அவசியமாகிறது.


இருப்பினும், நீண்டகால அடிப்படையில் சூரிய ஆற்றலின் வளர்ச்சி மற்றும் அதன் முன்னேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.


முடிவுரை: சூரிய ஒளியிலிருந்து நிலையான வளர்ச்சி வரை


சூரிய ஆற்றல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த தீர்வு மட்டுமல்ல. அது கிராமப்புறங்களில் ஒரு பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. வேளாண் தொழிலாளர்களுக்கான முதலீட்டுச் செலவுகளைக் குறைப்பது, அவர்களின் வருமானத்தை உயர்த்துவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்துவது எனப் பல முக்கிய சவால்களைத் தீர்க்கிறது.


வேளாண் துறையின் எதிர்காலம் கிராமங்களின் நலனைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், சூரிய ஆற்றல் ஒரு வலுவான நம்பிக்கையை அளிக்கிறது: இது சூரிய ஒளியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் மற்றும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சியை ஏற்படுத்தவும் உதவுகிறது.


ஸ்ரேயாஸ் கௌடா, ‘Oorjan’ நிறுவனத்தின் விற்பனை மற்றும் செயல்பாட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.


Original link:

Harvesting the sun: How solar energy is powering the future of rural farming economies   

 

Share:

புதைக்கப்பட்ட உடல்கள் முதல் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட பானைகள் வரை : விர்லி கந்தார் அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்துவது என்ன?

-ரோஷ்னி யாதவ்


விர்லி கந்தாரில் உள்ள ஒரு பெருங்கற்காலத் தளத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியானது, அப்பகுதியின் பெருங்கற்காலப் பண்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடும். அந்தத் தளத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகள் என்ன? அதனைத் தனித்துவமாக்குவது எது? குத்துக்கற்கள் (மென்ஹிர்கள்) என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் கீழே குறிப்பிட்டுள்ளன.

தற்போதைய நிகழ்வு என்ன?


விர்லி கந்தாரில் உள்ள ஒரு பெருங்கற்காலத் தளத்தில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியானது, தனித்துவமான புதைக்குழிக் கட்டிடக்கலை, அரியவகை கலைப்பொருட்கள் மற்றும் அசாதாரணமான மட்பாண்ட அமைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. இது விதர்பா பிராந்தியத்தின் பண்டைய ஈமச்சடங்கு நடைமுறைகள் குறித்த புதிய பார்வைகளை வழங்குகிறது. விர்லி கந்தாரில் கிடைத்துள்ள இந்தக் கண்டுபிடிப்புகள், அப்பகுதியின் பெருங்கற்காலப் பண்பாடுகளையும் அவற்றின் பரந்த கலாச்சார நடைமுறைகளையும் புரிந்துகொள்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், அகழ்வாராய்ச்சியின் முக்கியக் கண்டுபிடிப்புகளை அறிந்து, மென்ஹிர்களைப் பற்றிப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள பாவ்னி தாலுக்காவில் அமைந்துள்ள இந்தத் தளம், தொல்பொருள் ஆய்வாளரும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் (RTMNU) பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறைத் தலைவருமான டாக்டர் பிரபாஷ் சாஹுவின் தலைமையில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.


2. பேராசிரியர் சாஹுவின் கூற்றுப்படி, இந்தத் தளம் மூன்று காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; அவற்றில் ஒன்று, இங்குள்ள தனித்துவமான ஈம அடக்க முறை ஆகும். "இங்கு கல் வட்டங்களும், அவற்றிற்குள் குத்துக்கற்களும் (menhirs) அமைந்துள்ளன; இது ஒரு 'கூட்டுப் பெருங்கற்காலக் கட்டமைப்பாக' அதாவது, இரண்டு வகையான ஈம அடக்க முறைகளின் கலவையாக அமைகிறது," என்று அவர் கூறினார்.


3. இதற்கு மாறாக, பிம்பல்கான் நிப்பானி மற்றும் திரோட்டா கேரி போன்ற அருகிலுள்ள தளங்களில் முக்கியமாக டால்மென் புதைப்புகள் (dolmen burials) உள்ளன. இதன்காரணமாக, விர்லி கந்தார் இந்தத் தளங்களிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறது.


4. இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் வரைபடமாக்கல் மற்றும் கள ஆய்வுகள் மூலம் 69 பெருங்கற்காலப் புதைகுழிகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றுள் இரண்டு இடங்கள், வெளிப்புறத்தில் நெடுங்கற்கள் மற்றும் பாறாங்கற்களைக் கொண்ட கல் வட்டங்களாகவும், மற்ற இரண்டு இடங்கள் பாறாங்கற்களால் மட்டுமே அமைக்கப்பட்ட வட்டங்களும் என நான்கு இடங்கள் அகழாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


5. புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றிலிருந்து கிடைத்த பொருட்களானவை, கழுத்தணி போன்ற செப்புப் பொருட்கள், கோடரிகள், உளிகள், அகப்பைகள் மற்றும் அம்புகள் போன்ற இரும்புக் கருவிகள், அரியவகை கல் மணிகள், குறிப்பாக செதுக்கப்பட்ட கார்னிலியன் மணிகள் மற்றும் ஒரு தங்கக் காதணி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகளுடன், சிதைந்த எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.


6. மிகவும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று, விதர்பா பிராந்தியத்தில் இதற்கு முன்னர் பதிவாகாத ஒரு தனித்துவமான மட்பாண்டத் தொகுப்பாகும். ஒரு புதைகுழியில், ஏறக்குறைய 50 பானைகள் ஒரு முறையான வழியில் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரிய கிண்ணங்கள், தலைகீழாக வைக்கப்பட்ட கிண்ணங்களால் மூடப்பட்டிருந்தன.


7. ஒரே தொகுப்பில், குறைந்தது 23 ஜோடிகளான 46 பானைகள், கூடுதல் சிவப்பு மற்றும் கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரும்புப் பொருட்களுடன் ஆவணப்படுத்தப்பட்டன.


8. சாஹு மற்றொரு வழக்கத்திற்கு மாறான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். இதில் பெரிய பானைகள் உட்பட, ஏறக்குறைய அனைத்துப் பானைகளும் தலைகீழாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நேர்வில், ஒரு பானையின் மேல் மற்றொரு பானை கொண்டு மூடப்பட்டிருந்தது.


9. “எந்தவொரு பானையும் நேராக (செங்குத்தாக) நின்ற நிலையில் காணப்படவில்லை. அவை ஈமச்சடங்கு நடைமுறையின் ஒரு பகுதியாகவே, அவை வேண்டுமென்றே தலைகீழாக வைக்கப்பட்டிருந்ததாகத் தோன்றுகிறது,” என்று அவர் கூறினார். இந்த ஏற்பாட்டிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் இது குறித்து ஆய்வு செய்யப்படும்.


10. இயற்கையான செம்மண் (முரம்) அடித்தளத்தின் மீது பரப்பப்பட்ட கருப்புப் பருத்தி மண் அடுக்கின் மேல் பானைகள் கவனமாக வைக்கப்பட்டன. இந்த மண்ணின் பிசுபிசுப்பான தன்மை, மேலிருக்கும் மண்ணின் எடையால் உடைப்புகள் ஏற்பட்டபோதிலும், பானைகளை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்க உதவியது.


11. மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக, அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட கரி எச்சங்கள், முடுக்கி நிறை நிறமாலைமானி (Accelerator Mass Spectrometry (AMS)) காலக்கணிப்பு மூலம் அதன் வயதை நிர்ணயிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட ஆய்வுகளின்படி, இந்தத் தளம் குறைந்தது 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


மென்ஹிர்கள் (menhirs-நடுகற்கள்) என்றால் என்ன?


1. மென்ஹிர் என்பது செங்குத்தாக நிற்கும் ஒரு கல்லாகும். இது பொதுவாக மேற்பகுதியில் கூர்மையாக இருக்கும். இது மனிதர்களால் செதுக்கப்பட்டு வைக்கப்படுவதால், மனிதனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும், இது பொதுவாக மிகவும் பெரியதாக இருக்கும்.


2. பிரான்சின் பிரிட்டனியில் உள்ள, தற்போது எஞ்சியிருக்கும் மிகப்பெரிய மென்ஹிரான கிராண்ட் மென்ஹிர் பிரிசே அல்லது பெரிய உடைந்த மென்ஹிர், ஒருகாலத்தில் 20.6 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது.


3. ‘மென்ஹிர்’ என்ற சொல், ‘கல்’ என்று பொருள்படும் பிரிட்டானிய வார்த்தையான “மேன்” மற்றும் ‘நீண்ட’ என்று பொருள்படும் “ஹிர்” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு, 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொல்பொருள் ஆய்வுச் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதை முதன்முதலில் பிரெஞ்சு இராணுவ அதிகாரியும் செல்டிக் தொல்பொருள் ஆய்வாளருமான தியோஃபில் கொரெட் டி லா டூர் டி ஆவர்ன் (Théophile Corret de la Tour d’Auvergne) பயன்படுத்தினார்.


4. மென்ஹிர்கள் தனியாகவோ அல்லது பெரிய கற்கட்டுமானங்களான வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலக் கட்டமைப்புகளின் ஒரு பெரிய வளாகத்தின் பகுதியாகவோ காணப்படலாம். பல பெருங்கற்காலத் தளங்களின் சரியான நோக்கம் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அவை பெரும்பாலும் சடங்கு சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்பட்டிருக்கலாம். சில கல்லறைகளின் அடையாளங்களாக இருந்தன. மற்றவை சில வானியல் நோக்கங்களுக்காகப் பயன்பட்டிருக்கலாம்.


முதுமால் பெருங்கற்கால நடுகற்கள் (Mudumal Megalithic Menhirs)


1. தெலங்கானாவின் நாராயண்பேட் மாவட்டத்தில் அமைந்துள்ள, சுமார் 3,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையான முதுமால் பெருங்கற்கால நடுகற்கள், இந்தியாவிலிருந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


2. ஹைதராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. பி. ராவ் அவர்களின் கூற்றுப்படி, சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான முதுமால் நடுகற்கள், தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஈமச்சின்னத் தளமாக இவை அமைந்திருக்கலாம்.


3. யுனெஸ்கோ ஆவணத்தில், முதுமால் தளம் ஒரு “பெருங்கற்கால வானியல் ஆய்வகம்” என விவரிக்கப்பட்டுள்ளது. “சில நடுகற்கள், கோடை மற்றும் குளிர்காலச் சூரியத் திருப்பங்களின்போது சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் திசைகளுக்கு நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது, அவை ஒரு பண்டைய வானியல் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த ஆவணம் கூறுகிறது. இன்று, முதுமால் நடுகற்கள் உள்ளூர் புராணக்கதைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையவையாக உள்ளது. குறிப்பாக, “அங்குள்ள ஒரு குறிப்பிட்ட நடுகற்கள், எல்லம்மா தேவியாக (Goddess Yellamma) வணங்கப்படுகிறது”.

Original link:

From burials to upside down pots: What Virli Khandar excavation reveals.


Share:

உண்மையான பெண்கள் மேம்பாட்டிற்கு, பெண் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் வேலை வழங்குக. -அசோக் குலாட்டி, ஆயுஷி குப்தா, பிதிஷா சந்தா

பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைத் துறை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM MITRA)) திட்டம்  முக்கியமான உந்துகோலாக இருக்கலாம். ஆனால், தென் மாநிலங்களுக்கு தொழிலாளர்களை வழங்கும் பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அத்தகைய பூங்காக்களை அரசு நிறுவ வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யுமா?


'2026-ஆம் ஆண்டு ‘மகளிர் இடஒதுக்கீடு' மசோதாவானது’ (Nari Shakti Vandan Adhiniyam) நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனதற்கு முக்கியக் காரணம், அது தொகுதி மறுவரையறைகளுடன் இணைக்கப்பட்டிருந்ததே ஆகும். மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023' முன்னரே நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் பெரும்பாலான மாநிலச் சட்டமன்றங்களிலும், தற்போது பேசப்பட்டு வரும் 33 சதவீத இடஒதுக்கீட்டு அளவில்கூட பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதே தற்போதைய உண்மை நிலையாகும். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இட ஒதுக்கீடு மட்டுமே ஒரே வழியா? அது விரும்பத்தக்கதாக இருக்கலாம். ஆனால், அது உண்மையான அதிகாரத்தை  வழங்கும் என்று நாம் நினைக்கவில்லை.


பெண்களுக்கு உண்மையான அதிகாரம் அளிக்க, அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி, தேவையான வேலைகளுக்கான திறன்களை வளர்த்து, முறைசார் துறையில் பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த  வேண்டும். அப்போது தான் பணியாளர் தொகுப்பில் அவர்களின் பங்களிப்பு  அதிகரிக்கும்.


துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2025-ஆம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கீழ் வரும் காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பின்படி  (Periodic Labour Force Survey (PLFS)) 40 சதவீதமாக இருந்தது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2025-ஆம் ஆண்டு சதவீதம் கணக்கின்படி இந்த எண்ணிக்கை 32.4 சதவீதமாக உள்ளது. இதே நேரத்தில் வியட்நாம் 68.6 சதவீதம் தொழிலாளர் பெண்கள் சீனாவில் 59.1 சதவீதம் ஆகும். பங்கேற்பு விகிதம் 24.7 சதவீதம் ஆகும். உத்தரப்பிரதேசம் 32.4 சதவீதம் ஜார்கண்ட் 43.7 சதவீதம் ஒடிசா 47.3 சதவீதம் அதிகமாகும். மேலும், பீகார் மாநிலத்தில் சதவீதம் மகப்பேறு விகிதம் 2.8 ஆக அதிகமாக பதிவாகியுள்ளது. இந்திய அளவில் இது 1.9 ஆக உள்ளது. இது மாதிரி பதிவு கவலை அமைப்பு 2023-ஆம் ஆண்டு சராசரியாக 1.0 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சராசரியாக 1.0 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சராசரியாக மேலும் 1.0 சதவீத மக்கள் வளர்ச்சி விகிதம். பீகார் மாநிலத்தில் உள்ள மாணவிகளே பள்ளியை விட்டு விலகும் விகிதத்தில் அதிகமாக உள்ளனர் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. தொடக்க நிலை 8.7 சதவீதம் மேல்நிலை 25.9 சதவீதம் உயர்நிலை 25.1 சதவீதம் என கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் மற்றும் கல்வி அமைச்சகம் (Unified District Information System for Education Plus மற்றும் Ministry of Education) 2023-24-ஆம் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.


இத்தகைய சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகளில், பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம்  வழங்க முடியும்?


திறன் மேம்பாடும் பயிற்சியும் நிதிச் சுதந்திரத்தின் ஒரு முக்கியத் தூணாக அமைகின்றன. 2014-ஆம் ஆண்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தை நிறுவியதற்காக அரசாங்கம் பாராட்டப்பட வேண்டும். தற்போது 38 துறைகளை உள்ளடக்கியுள்ள இந்த அமைச்சகத்திற்கு, 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூ.9,886 கோடியும், அதில் ரூ.3,400 கோடி பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவுக்காகவும் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) ஒதுக்கப்பட்டுள்ளது. PMKVY, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குச் சான்றிதழுடன்கூடிய இலவசத் திறன் பயிற்சியை வழங்குகிறது. திறன் பயிற்சி இருந்தபோதிலும், பயிற்சி பெற்ற இந்த இளைஞர்களுக்கு எந்தத் துறை சிறப்பான வேலை வாய்ப்பை வழங்க  முடியும்?


கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பாருங்கள். ஜப்பான், தென் கொரியா, தைவான், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், பெண்களை முறைசார்ந்த ஊதியப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவர ஆடைத் துறையைப் (garment sector) பயன்படுத்தின. இந்தியாவின் ஆடைத் துறை, முதலீடு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய் 1 கோடி மூலதனத்திற்கும் 153 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. 2023-24-ஆம் ஆண்டு தொழில்துறைகளின் வருடாந்திர ஆய்வு,  வாகன உற்பத்தித் துறையில் 27 ஆகவும், எஃகுத் துறையில் 14-ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், கவனத்திற்குரிய புள்ளிவிவரம் இதுதான்: ஆடைத் துறை ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 55 பெண் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதே,சமயம் வாகனங்கள் மற்றும் எஃகுத் துறைகள் 1 சதவீதத்திற்கும் குறைவான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகின்றன. நாரி சக்தியை ஒரு முழக்கமாக மட்டும் குறைத்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஆடைத் துறைதான் மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.


திருப்பூர் போன்ற ஆடை உற்பத்தி அதிகமாக நடந்து வரும் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இவர்களில் பெரும்பாலோர் பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்குத் தங்கும் விடுதி வசதிகள் தேவைப்படுகின்றன. மேலும், இவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து வெகு தொலைவில் தங்கிப் பணியாற்றுகின்றனர். இது பணியாளர்கள் வேலையைவிட்டு விலகிச் செல்லும் விகிதம் அதிகரிக்கவும், திறமையான பணியாளர்களை இழக்கவும் வழிவகுக்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உபரித் தொழிலாளர்களை வழங்கும் மாநிலங்களிலேயே ஆடை உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டால் என்னவாகும்?



பீகாரின் முசாஃபர்பூரில், பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் இந்த முயற்சியை மேற்கொண்டு, இந்த மாற்றம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை வழங்கும் ஒரு உற்பத்திப் பிரிவை அமைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் தொழிற்சாலையில் 500 இயந்திரங்களில் 650 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். மார்ச்-ஏப்ரல் 2027-க்குள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 3,000-ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணியாளர்களில்   90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இவர்கள் முசாஃபர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாகத் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். இதற்கு முன் எந்தத் தொழில் அனுபவமும் இல்லாத இந்த பெண்கள், நிறுவனத்தால் ஆரம்பத்திலிருந்தே பயிற்சி அளிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஒரு தனியார் நிறுவனம், வணிகரீதியாகப் பகுத்தறிவுமிக்க ஒரு கணிப்பை முன்வைக்கிறது: அதன்படி, தொழிலாளர்கள் அதிகமாக உள்ள ஒரு மாநிலத்தில், ஒரு பெண் தொழிலாளிக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டால், அந்த பெண் அதிக பணி செய்பவராகவும், நம்பகமானவராகவும், இருப்பார். இத்தகைய மாற்றத்திற்கு உட்படும்போதும், அந்தபெண் தனது சமூகத் தொடர்புகளையும், குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்பத்துவர். ஆடைத் துறையில் உள்ள இத்தகைய நிறுவனங்களுக்கு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊக்கத்தொகைகளை வழங்கலாம்.


பகிரப்பட்ட உள்கட்டமைப்புடன், பெரிய அளவிலான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய ஜவுளிப் பூங்காக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட PM MITRA திட்டம், தேவைப்படும் முக்கிய கருவியாக விளங்குகிறது. இருப்பினும், பீகாரிலோ, ஜார்க்கண்ட் அல்லது ஒடிசாவிலோ ஒரு PM MITRA பூங்காகூட இல்லை. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்,  ஒரே ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.


அந்தத் தொழிற்சாலைகளை உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் பெண் தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதில் தான் சவால் உள்ளது. பீகாரின் தொழில்துறைக் கொள்கை இதை அங்கீகரிக்கிறது. ஒரு தொழிலாளிக்கு ரூ.20,000 வரையிலான பயிற்சி ஊக்கத்தொகைகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகைகள், ஜவுளி ஆலைகள் ஒரு பணியாளருக்கு மாதம் ரூ.5,000 வரை மானியம் கோரவோ அல்லது ஊழியர் மாநில காப்பீடு (Employees' State Insurance (ESI)) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (Employees' Provident Fund (EPF)) முதலாளி செலுத்திய பங்களிப்பில் 300 சதவீதம் வரையிலான தொகையை மீண்டும் வழங்குகின்றன.


பலவீனமான பயிற்சி உள்கட்டமைப்பும், தொழில்துறையுடனான சீரற்ற ஒருங்கிணைப்பே இந்த பிரச்சினைக்கு முக்கிய கரணியாகும். சீனாவும், வியட்நாமும், நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களையும், அரசால் பராமரிக்கப்படும் தர உத்தரவாதத்தையும் கொண்டு, தொழில்துறையுடன் இணைந்து வளர்ந்த குழுமங்களை மையமாகக் கொண்ட பயிற்சி நிறுவனங்களை உருவாக்கின. பீகாரும் இதேபோன்ற ஒரு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.


மூன்று மாற்றங்கள் முக்கியமானவை. முதலாவதாக, தொழில், அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு நிர்வாகத்தின்கீழ், பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் தரத்தில் முதலீடு செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் தர உறுதிப்பாட்டிற்கு பொதுப் பணம் நிதியளிக்க வேண்டும்; பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் பணியிட மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் தலைமை தாங்க வேண்டும். இரண்டாவதாக, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை மறுசீரமைத்து, அதிக மானிய விகிதங்களுடன் பெண்களின் வேலைவாய்ப்புடன் வெளிப்படையாக இணைக்க வேண்டும். குறிப்பாக, வேலையிழப்பும் பயிற்சிச் செலவுகளும் அதிகமாக இருக்கும் பணியின் முதல் இரண்டு ஆண்டுகளில் இது முக்கியமானதாகும். மூன்றாவதாக, பெண்கள் இருக்கும் இடத்திற்கே உள்கட்டமைப்பைக் கொண்டு வரவேண்டும். பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைத் துறை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM MITRA)) திட்டம் சரியான கருவியாக இருக்கலாம். ஆனால் தென்மாநிலங்களில் தொகுப்புகளுக்குத் தொழிலாளர்களை வழங்கும் வகையில், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்தின்கீழ் பூங்காக்களை அமைக்க வேண்டும். அதுவே மகிளர்களுக்கான உண்மையான வேலை வாய்ப்பை உருவாக்கும். அரசு இதில் கவனம் செலுத்துமா? காலம்தான் அதற்கு பதில் சொல்லும்.


குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியராகவும், குப்தா ஆராய்ச்சி இணை ஆய்வாளராகவும், சந்தா ஐசிஆர்ஐஇஆரில் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளனர்.

Original link:

For true nari shakti, take jobs where women workers are.


Share:

உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழை (probate) எப்போது ரத்து செய்யலாம்? உச்ச நீதிமன்றம் விதிகளை தெளிவுபடுத்துகிறது. -அமால் ஷேக்

 நீதிமன்றம் மூன்று வழக்குகள் குறித்துத் தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. முதலாவதாக, உயில் உறுதிப்படுத்தும் சான்று நடவடிக்கைகளில் யார் ஒரு ஆர்வமுள்ள தரப்பினராகக் கருதப்படுகிறார்?, இரண்டாவது உயில் உறுதிப்படுத்தும் சான்று நடவடிக்கை என்பது உண்மையில் எத்தகையது? மற்றும் மூன்றாவது, அந்த நடத்தை பிரிவு-263 இன் கீழ் உண்மைகளை மறைத்த குற்றமாக அமைகிறதா? என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டியிருந்தது.


நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வானது, முக்கியமான உண்மைகளை மறைத்தும், சொத்தில் நேரடி உரிமைகொண்ட தரப்பினரைக் குறிப்பிடாமலும் உயில் மெய்ப்பிப்பு ஆணை (probate grant) பெறப்பட்டதாகக் கூறி, அந்த ஆணையை பெறப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.


இந்த வழக்கு, முதலில் கோயம்புத்தூரில் ஈஸ்வரமூர்த்தி கவுண்டருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பானது. 1976 ஜனவரியில், அவர் தனது மகள் சரோஜினிக்கு ஆதரவாகப் பதிவு செய்யப்படாத உயில் மூலம் அந்தச் சொத்துக்களைத் தனது மகள் சரோஜினிக்கு வழங்கியதாக கூறப்பட்டிருந்தது. சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு, அவரும் அவரது மகன்களும் அதே சொத்துக்களைப் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் மூலம் விற்றனர். பின்னர் அவர் 1983-ல் இறந்தார். 1997-ல், மேல்முறையீட்டாளர்கள் 1976-ல் வாங்கியவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை வாங்கினர். 2009 ஏப்ரலில், சரோஜினி 1976-ம் ஆண்டு உயில் உறுதிப்படுத்தும் சான்றளிப்புக்காக (probate) மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது இரண்டு சகோதரிகளை மட்டுமே வழக்கில் சேர்த்திருந்தார். சட்டப்பூர்வ வாரிசுகளான அவரது இரண்டு சகோதரர்களும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும், சொத்துக்களுக்குப் பதிவு செய்யப்பட்ட உரிமைப் பத்திரம் வைத்திருந்த மேல்முறையீட்டாளர்களும் சேர்க்கப்படவில்லை.


மாவட்ட நீதிமன்றம் 2009-ல் உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (probate) வழங்கியது. 2015-ல், மேல்முறையீட்டாளர்கள் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் (Indian Succession Act) 263-வது பிரிவின் கீழ், அந்தச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தனர். 2020-ல் மாவட்ட நீதிமன்றம் அந்த ரத்து நடவடிக்கையை அனுமதித்தது. இறுதியில், சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.


உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழுக்கு (probate) விண்ணப்பித்த எட்டு நாட்களுக்குப் பிறகு, சரோஜினி ஒரு உரிமை வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், சொத்துக்கள் ஏற்கனவே மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தனது சகோதரர்கள் தன் தந்தையின் உயிலுக்கு எதிராக அவரது கையொப்பத்தைப் பெற்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


சட்டம் என்ன சொல்கிறது?


இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 263-வது பிரிவு, ஒரு "நியாயமான காரணத்திற்காக" உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (probate) ஆணையை ரத்து செய்ய அனுமதிக்கிறது. இது "பொய்யான குற்றச்சாட்டின்" மூலம் ஆணை பெறப்பட்டிருந்தாலோ, "வழக்கிற்கு முக்கியமான ஒன்றை நீதிமன்றத்திடம் இருந்து மறைத்திருந்தாலோ", அல்லது ஆணை "பயனற்றதாகவும் செயலிழந்ததாகவும்" ஆகிவிட்டாலோ, அத்தகைய சூழ்நிலைகளில் நியாயமான காரணம் என்பதன் அர்த்தத்தை இந்தச் சட்டம் விளக்குகிறது. உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (probate) ஆணை ரத்து செய்யப்படக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை இந்தப் பிரிவில் உள்ள விளக்கங்கள் குறிப்பிடுகின்றன. நீதிமன்றத்தின் அதிகார வரம்பு இல்லாத வழக்குகள், போலி ஆவணம், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்றுநர்களை (executors) மாற்றும் ஒரு துணை உயில், மனநலம் குன்றிய நிலை மற்றும் ஆணையில் "குறிப்பிடப்பட வேண்டிய தரப்பினர்" தெரிவிக்கப்படாமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும்.


உயில் உறுதிப்படுத்தும் சான்றிதழுக்கான உறுதி வழங்கப்படுவதற்கு முன்னர், சொத்தில் ஏதேனும் உரிமை கோரும் அனைத்து நபர்களுக்கும் அழைப்பாணைகளை அனுப்ப மாவட்ட நீதிபதிக்கு பிரிவு 283 அதிகாரம் அளிக்கிறது.


நீதிமன்றம் இந்த விதிகளை ஒன்றாக தெளிவுப்படுத்தியது. வாங்குபவர்களாக இருந்த மேல்முறையீட்டாளர்கள், வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய தரப்பினரா என்பதும், அவர்களைக் குறிப்பிடத் தவறியதும், சொத்துப் பரிமாற்றங்கள் குறித்து சரோஜினிக்குத் தெரிந்திருந்ததும், பிரிவு 263-ன் கீழ் முக்கியத் தகவல்களை மறைத்ததாக அமையுமா என்பதுமே கேள்வியாக இருந்தது.


நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு?


நீதிமன்றம் மூன்று வழக்குகள் குறித்துத் தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. உறுதிபடுத்தும் சான்று நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள தரப்பினராக யார் கருதப்படுகிறார்?, உயில் உறுதிப்படுத்தும் சான்று நடவடிக்கை என்பது உண்மையில் எத்தகையது? மற்றும் சரோஜினியின் நடத்தை பிரிவு 263-ன் கீழ் உண்மைகளை மறைத்த குற்றமாக அமைகிறதா? என்பனவாகும்.


முதலாவதாக, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை முந்தைய வழக்குகளில் ஒரு சரியான சட்டமாகக் கருதி, பன்வாரிலால் vs குசும் பாய் வழக்கில் (Banwarilal vs Kusum Bai) 1972-ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் குறிப்பிட்டது. "எவ்வளவு சிறிதளவேயான உரிமையாக இருந்தாலும் அல்லது ஒரு உரிமை இருப்பதற்கான வெறும் சாத்தியக்கூறு இருந்தாலும்கூட, ஒரு தரப்பினர் உயில் விருப்புறுதி ஆவணத்தை (probate grant) எதிர்ப்பதற்குப் போதுமானது" என்பதால், உயில் உறுதிப்படுத்தும் சான்று ஆணையை எதிர்ப்பதற்கான வரம்பு குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த வரம்பு, வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.



உயில் உறுதிப்படுத்தும் சான்று நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு, உயில் எழுதுபவரின் சொத்தில் வாரிசுகளிடமிருந்து ஒரு பங்கைப் பெறும் வாங்குபவர், அந்த நடவடிக்கைகளுக்கு அந்நியர் அல்ல. பிரிவு 263-ன் கீழ் உள்ள எடுத்துக்காட்டு (ii)-இன் படி அவர்கள் குறிப்பிடப்பட வேண்டும். அதில், யாருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமோ அவர்களுக்குத் தெரிவிக்காமல் வாரிசுரிமைச் சான்று வழங்கப்பட்டிருந்தால், அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்று இந்த விதி கூறுகிறது. மேலும், மேல்முறையீட்டாளர்கள் 1997-ல் விற்பனைப் பத்திரங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருந்ததாலும், விருப்புறுதிச் சான்று மனு 2009-ல் தாக்கல் செய்யப்பட்டதாலும், அவர்கள் அறிவிப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.


உயில் உறுதிப்படுத்தும் சான்று ஆணை (probate grant) என்றால் என்ன? என்ற கேள்விக்கு, நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது. ஒருமுறை உயில் உறுதிப்படுத்தும் சான்று ஆணை (probate grant) வழங்கப்பட்டால், அது அந்த நடவடிக்கைகளில் ஒருபோதும் பங்கேற்காதவர்கள் மற்றும் அதை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பே கிடைக்காதவர்கள் உட்பட அனைவருக்கும் எதிராக, உயிலின் செல்லுபடித்தன்மைக்கான முடிவான சான்றாகச் செயல்படுகிறது. அதனால்தான், சம்பந்தப்பட்ட தரப்பினரை முறையாகக் குறிப்பிடுவது ஒரு நடைமுறை செயலாக்கம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. அது, அந்த ஆணை செல்லுபடியாகும்படி பெறப்பட்டதா என்பதை அது நேரடியாகப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதியாக வெளியேற்றப்பட்ட ஒரு அறையிலிருந்து, உலகைக் கட்டுப்படுத்தும் ஒரு தீர்ப்பைப் பெற முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் விருப்புறுதிச் சான்று ஆணையை (probate grant) ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம்.


"உயில் உறுதிப்படுத்தும் சான்று உறுதி வழங்குதல் என்பது ஒரு சொத்துரிமை சார்ந்த மற்றும் முடிவான தீர்ப்பாகும். அது வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. எனவே, அதனால் பாதிக்கப்பட்டவரும், வழக்கு நடவடிக்கைகள் குறித்து அறியாதவரும், உரிய அழைப்பாணைகள் விடுக்கப்படாதவருமான ஒருவர், தனக்குக் கிடைக்கக்கூடிய காரணங்களின் அடிப்படையில் விருப்புறுதிச் சான்று உறுதியை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய உரிமை உடையவர் ஆவார்," என்று நீதிமன்றம் கூறியது.


தகவல் மறைப்பு குறித்த வினாவில், உயில் விருப்புறுதி நீதிமன்றத்தில் (probate court) மனு தாக்கல் செய்த எட்டு நாட்களுக்குப் பிறகு, சரோஜினி ஒரு உரிமை வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், தனது தந்தையின் சொத்துக்கள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், சொத்துக்களைப் பிரிக்கும் தனது முயற்சிகளைத் தனது சகோதரர்கள் எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவற்றில் எதுவும் உயில் விருப்புறுதி நீதிமன்றத்தின் (probate court) முன் வைக்கப்படவில்லை. "உயில் உறுதிப்படுத்தும் சான்று ஆணை (probate grant) கோரி மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் சரியான நிபந்தனைகளை வெளியிடவில்லை என்பதும், இது தொடர்புடைய உண்மைகளை மறைத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உயில் உறுதிப்படுத்தும் சான்று ஆணை (probate grant) நீதிமன்றங்கள் ஒரு உயில் உண்மையானதா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளும் என்றும், உரிமை தொடர்பான கேள்விகளுக்குள் செல்ல முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்தக் கொள்கையை மறுக்கவில்லை. ஆனால், அது இங்கு பொருத்தமற்றது என்று கூறியது. 263 மற்றும் 283 பிரிவுகளின்கீழ் உயில் உறுதிப்படுத்தும் சான்று முறையாகப் பெறப்பட்டதா என்பதே இங்குள்ள பிரச்சினையாக உள்ளது. உயில் உறுதிப்படுத்தும் சான்று வழங்கப்படும் செயல்முறை சரியானதா என்பதையும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும், முக்கியமான உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும் நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என அந்தப் பிரிவுகள் கோருகின்றன. உயர்நீதிமன்றம் இந்த இரண்டு பிரிவுகளையும் கருத்தில் கொள்ளவில்லை. அந்தத் தவறு ஒரு "பெரும் பிழை" என்று உச்சநீதிமன்றம் கூறியது.


Original link;

When can probate be revoked? Supreme Court clarifies rules.


Share:

தீவிர வானிலை நிகழ்வுகள்: போக்குகள், தூண்டுதல்கள் மற்றும் பின்விளைவுகள். -ரோஷ்னி யாதவ்

2085-ஆம் ஆண்டிற்குள், தீவிர நிகழ்வுகள் நிலப் பகுதியில் வாழும்  விலங்குகளின் வாழ்விடங்களில் 36 சதவீதத்தைப் பாதிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் என்றால் என்ன? காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது? 


தற்போதைய செய்தி :


'Nature Ecology & Evolution' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வந்தால், 2085-ஆம் ஆண்டிற்குள் நிலப்பரப்பில் வாழ்ந்துவரும் வனவிலங்கு வாழ்விடங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலனவை, வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காலநிலை சார்ந்த பல்வேறு வகையான தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படக்கூடும். இந்தச் சூழலில், இந்த ஆய்வின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும், பல்வேறு வகையான தீவிர வானிலை நிகழ்வுகள் எவை என்பதையும் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஜெர்மனியில் உள்ள பாட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆய்வு நிறுவனம் (Potsdam Institute for Climate Impact Research (PIK)) ஆய்வாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நடுத்தர-உயர் அளவிலான உமிழ்வு (emission) சூழ்நிலையில் காலநிலை மாற்றம் 34,000 முதுகெலும்புள்ள உயிரினங்களின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தது.


2. கடுமையான வெப்ப அலைகளால் தான் மிகவும்  இந்த  பாதிப்பிற்கு முக்கிய காரணி என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்தால், 2050-ஆம் ஆண்டிற்குள், நிலப்பரப்பில் உள்ள விலங்குகளின் வாழ்விடங்களில் 74% வெப்ப அலைகளாலும், 16% காட்டுத்தீயாலும், 8% வறட்சியாலும், 3% வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு கூறியது.


3. அமேசான், வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பல்லுயிர் மையங்களில் இந்தத் தீவிர நிகழ்வுகளின் தாக்கம்  அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.


4. தீவிர காலநிலை நிகழ்வுகள், நிலப்பரப்பில் உள்ள பல்லுயிர்ப்பெருக்கத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு  கோடிட்டுக் காட்டியது. ஒரு வெப்ப அலை அல்லது காட்டுத்தீ நிகழ்வு விலங்கினங்களை பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும் என்றாலும், அடிக்கடி நிகழும் பல நிகழ்வுகள் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.


5. மேலும், நுணுக்கமான பகுப்பாய்வில், வெளிநாட்டு உயிரினங்களைக் காட்டிலும் சொந்தநாட்டு உயிரினங்கள் தீவிர நிகழ்வுகளால் அதிக பாதிப்புக்குள்ளாவதோடு, தாவரங்களின்மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தி, பல உயிரினங்களுக்கான வாழ்விடத் தரத்தை (habitat quality) மாற்றுவதாக தெரிய வந்துள்ளது.

தீவிர வானிலை நிகழ்வுகள் என்றால் என்ன?


1. உலக வானிலை மையத்தின் கூற்றுப்படி, “ஒரு தீவிர வானிலை நிகழ்வு (extreme weather event) என்பது, ஆண்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரே நேரத்தில் அரிதாக நிகழ்வதுடன், அதன் அளவு, இடம், நேரம் அல்லது பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அசாதாரணமான பண்புகளைக் கொண்டிருப்பதாகும்.


2. தீவிர வானிலை நிகழ்வுகள் என்பவை, சமூகங்கள், வேளாண்மை மற்றும் இயற்கைச் சூழல் அமைப்புகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வானிலை அல்லது காலநிலை நிலைமைகள் ஆகும்.

3. 2022-ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு, வெப்ப மற்றும் குளிர் அலைகள், வெள்ளம், அதீத மழைப்பொழிவு, வறட்சி, சூறாவளிகள் மற்றும் வெப்பமண்டலப் புயல்கள் ஆகியவை தீவிர வானிலை மற்றும் காலநிலை நிகழ்வுகளால்  ஏற்படுவதாக தெரிவிதுள்ளது. ஆனால், இவை மட்டுமே காரணி அல்ல.


காலநிலை மாற்றம் தீவிர வானிலை நிகழ்வுகளை எவ்வாறு பாதிக்கிறது?


1. 1850-ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை குறைந்தபட்சம் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், மனிதச் செயல்பாடுகள் மூலம் வளிமண்டலத்திற்கு இதுவரை இல்லாத அளவில் வெளியிடப்பட்ட பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) ஆகும்.


2. வெப்பநிலை அதிகரிப்பின் விளைவாக, உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி மற்றும் அதிக தீவிரத்துடன் நிகழ்கின்றன. இந்த நிகழ்வுகளில் வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் காட்டுத்தீ ஆகியவை அடங்கும்.




காலநிலை மாற்றம் (climate change) என்பது என்ன?


காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) கூற்றுப்படி, காலநிலை மாற்றம் என்பது, காலநிலையின் பண்புகளின் சராசரி அல்லது மாறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் (எ.கா., புள்ளிவிவர சோதனைகளைப் பயன்படுத்தி) கண்டறியக்கூடிய மற்றும் பொதுவாகப் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும் ஒரு காலநிலை நிலை மாற்றத்தைக் குறிக்கிறது.


3. குறிப்பாக, எந்தவொரு குறிப்பிட்ட தீவிர வானிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது மிகவும் கடினம். ஏனெனில், எல் நினோ மற்றும் லா நினோ போன்ற இயற்கையான காலநிலை மாறுபாடுகளின் வடிவங்கள் உட்பட, போன்ற நிகழ்வுகளுக்கு பல காரணிகள் உள்ளன என்று, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் ராயல் சொசைட்டி இணைந்து வெளியிட்ட 'காலநிலை மாற்றம்: சான்றுகள் மற்றும் காரணங்கள்' என்ற வெளியீடு கூறுகிறது. இருப்பினும், புவி வெப்பமயமாதல் ஒரு நிகழ்வை மிகவும் கடுமையானதாகவோ அல்லது அது நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியதாகவோ ஆய்வுகள் காட்டமுடியும் என்று குழு மேலும் தெரிவித்துள்ளது.


4. உதாரணமாக, 2019-ஆம் ஆண்டு வெப்ப அலை காரணமாக மேற்கு ஐரோப்பாவில் 2,500 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இத்தகைய கடும் வெப்ப அலை, காலநிலை மாற்றம் இல்லாத உலகத்துடன் ஒப்பிடும்போது, ​​ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.


5. மேலும், வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, 2040-களில் வெப்ப அலைகள் 12 மடங்கு அதிகமாக ஏற்படக்கூடும் என்று காலநிலை மாதிரிகள் காட்டுகின்றன.


6. அதேபோல், அதிகரித்துவரும் வெப்பநிலை வறட்சியை மோசமாக்கியுள்ளது. அதீத வெப்பம், நிலத்திலிருந்து அதிகமாக ஈரப்பதத்தை ஆவியாக்குவதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால காட்டுத்தீப் பருவத்தையும் உருவாக்குகிறது.


7. அதிக வெப்பநிலையானது நிலத்திலிருந்து மட்டுமல்லாமல், கடல்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாவதற்குக் காரணமாகிறது. வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.


8. சராசரி வெப்பநிலையில் ஏற்படும் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும், வளிமண்டலத்தால் 7% கூடுதல் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழல் புயல்களை மேலும் ஆபத்தானவையாக மாற்றுகிறன. இதன் விளைவாக மழைப்பொழிவின் தீவிரம், கால அளவு அல்லது அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. இது இறுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும்.


9. அதிகரித்துவரும் வெப்பநிலையானது சூறாவளிகளை மேலும் வலுவானதாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் ஆக்குகின்றன என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2023-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, உலக வெப்பநிலை குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கிழக்கு பசிபிக் பகுதியில் பெரிய சூறாவளிகள் நிலப்பரப்பை அடையும் நிகழ்வுகள் 30% வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறது. இதற்கான முக்கிய காரணம் கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பாகும். இதுவே சூறாவளிகள் உருவாகவும் வலுப்பெறவும் முக்கிய காரணியாக அமைகின்றன.


2026-ஆம் ஆண்டு  காலநிலை ஆபத்துக் குறியீடு அறிக்கை


1. கடந்த ஆண்டு நடைபெற்ற 30-வது காலநிலை மாநாட்டில், பான் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான ஜெர்மன்வாட்ச், காலநிலை ஆபத்துக் குறியீட்டு (Climate Risk Index (CRI)) அறிக்கையை வெளியிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது, 2023-ல் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையைவிட ஒரு இடம் முன்னேறி உள்ளதை காட்டுகிறது.


2. 2006-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் காலநிலை ஆபத்துக் குறியீடு, மிக நீண்ட காலமாக வெளி வரும் வருடாந்திர காலநிலைத் தாக்கம் தொடர்பான குறியீடுகளில் ஒன்றாகும். இந்தக் குறியீடு, காலநிலை தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகளால் நாடுகளில் ஏற்படும் விளைவுகளை அளவிடுகிறது. இது நாடுகளை பொருளாதார மற்றும் மனித பாதிப்புகள் (உயிரிழப்புகள் மற்றும் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை) அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது; இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு  முதலிடத்தில் உள்ளது.


3. அறிக்கையின்படி, அனைத்து நாடுகளும் காலநிலை தொடர்பான ஆபத்துகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால், உலகில் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் அதிகமாக  பாதிக்கப்படுகின்றன.

4. வெள்ளம், வெப்ப அலைகள், புயல்கள் மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளை நாடு இந்தியா எதிர்கொண்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து, உழவர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புயல்கள் கடலோரப் பகுதிகளைப்  அதிக பாதிப்புள்ளாக்கி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட  காலநிலை அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


5. மனிதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி  ஏற்படவும் மேலும் தீவிரமடையவும் முக்கிய கரணியாகும் இருந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எல் நினோ பல தீவிர நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், காலநிலை மாற்றம் அவற்றை இன்னும் மோசமாக்கியதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 2024-ஆம் ஆண்டில், மனிதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், 41 நாட்கள் கூடுதல் ஆபத்தான வெப்பத்தை ஏற்படுத்தியது. இது குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதித்ததோடு, அதிக தீவிரம் கொண்ட சூறாவளிகள் மற்றும் காட்டுத்தீ போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் வழிவகுத்தது.

Original link:

Extreme Weather Events: Trends, triggers and consequences.


Share:

கடினமான முடிவு : இந்தியா மற்றும் பாம்புக்கடிகள் குறித்து . . .

இந்தியா விரைவான விஷம் கண்டறியும் பரிசோதனை முறைகளை (venom detection diagnostics) உருவாக்க வேண்டும்.


பாம்புகள் புறவெப்ப உயிரினங்கள், எனவே அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைகிறது. இதனால், வழக்கத்தைவிட வெப்பமான கோடைக்காலம் கொண்டுள்ளதால், சிகிச்சையில் முடிவெடுப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றில், கேரளாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அனைத்து மரணங்களையும் பாம்பு விஷமுறிவு மருந்து (anti-snake venom (ASV)) கிடைப்பதன் மூலம் தடுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. வெப்பத்தின் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான, ஈரமான இடங்களைத் தேடிச் செல்கின்றன. அதாவது, விறகுகள் மற்றும் தேங்காய் மட்டைகள் உள்ள வீடுகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் போன்றவை ஆகும். மேலும், இந்த மாநிலம் அடர்த்தியான தாவரங்கள் நிறைந்ததாகவும், மனித-வனவிலங்கு வாழிடங்கள் கணிசமான அளவில் இடையிடையே ஒரு பெரிய தொடர்பு உள்ளது. பருவமழைக்கு முந்தைய ஏப்ரல்-மே மாதங்கள் பல விஷப் பாம்புகளுக்குப் இனப்பெருக்கக் காலமாகவும் இருப்பதால், அவை அதிகமாக நடமாடுவதோடு தற்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முனைகின்றன. இருப்பினும், பாம்புக்கடி நிகழ்வுகளில் சுமார் 70% விஷமற்ற இனப் பாம்புகளால் ஏற்படுகின்றன. மீதமுள்ளவற்றில் ஏறக்குறைய பாதி, விஷம் செலுத்தப்படாத உலர் கடிகளாகும். இதனால், கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து (anti-snake venom (ASV)) தேவைப்படுவதில்லை. பாம்பு விஷமுறிவு மருந்தை (ASV) கண்மூடித்தனமாக வழங்குவதற்கு எதிராக மிகுந்த கவனம் தேவை. ஏனெனில், இந்த சேர்மங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிர ஒவ்வாமை எதிர்வினைகளையும் (anaphylactic reactions) தூண்டக்கூடும். அதேநேரத்தில், இந்தியாவில் ஒரு நோயாளியின் இரத்தத்தில் உள்ள விஷத்தைக் கண்டறிய வணிகரீதியாகக் கிடைக்கும் கண்டறியும் கருவி எதுவும் இல்லை. மேலும், நோயறிதல் முற்றிலும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. அறிகுறிகள் தோன்றும் நேரத்திற்குள், விஷம் ஏற்கனவே திசுக்களை மீளமுடியாதபடி சேதப்படுத்தியிருக்கக்கூடும் என்பதால், இந்த நோய்க்குறி அடிப்படையிலான அணுகுமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒரு அமைப்புரீதியான குறைபாடு என்று குறிப்பிட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் பற்றாக்குறை, செயற்கை சுவாசக் கருவிகளின் மாற்று ஏற்பாடுகள் இல்லாமை, தீவிர ஒவ்வாமை எதிர்வினையைக் கையாள்வதில் போதிய பயிற்சி இல்லாமை மற்றும் கண்காணிப்பிற்கான வரையறுக்கப்பட்ட ஆய்வக ஆதரவு ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த அணுகுமுறையானது, விஷ எதிர்ப்பு மருந்து கிடைப்பதன் நன்மைகளை ஈடுசெய்துள்ளது.

உலகில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் நிகழ்கின்றன. இதில் விவசாயத் தொழிலாளர்களும், குழந்தைகளுமே மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். கேரளாவில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில், கட்டுவிரியன், ரஸ்ஸல்ஸ் வைப்பர், செதில் விரியன் மற்றும் மூக்குக்கண்ணாடி நாகம் ஆகிய 'பெரிய நான்கு' விஷப் பாம்புகளும் அடங்கும். மாநில அரசு பாம்புக்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது. பாம்பு மீட்புப் பணிகளைத் தொழில்முறைப்படுத்த 'சர்பா' (SARPA) திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. சர்பா பதம் மற்றும் வரவிருக்கும் சர்பா சுரக்ஷா திட்டங்களும், ஆபத்தை மதிப்பிடுவதிலும், வார்டு மற்றும் பள்ளி அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள இதேபோன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இந்த அறிவிப்பும் 'சர்பா' திட்டமும் முற்போக்கானவையாக இருந்தாலும், கேரளா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையும், 'சிகிச்சையையும்' வலுப்படுத்த வேண்டும் என்பதையும் இந்த மரணங்கள் உணர்த்துகின்றன. பாம்பு விஷமுறிவு மருந்து (anti-snake venom (ASV)) ஏற்கனவே பரவலாகக் கிடைக்கிறது. முதல் சந்திப்பின்போது முடிவெடுப்பதில் மருத்துவர்கள் பெரும்பாலும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். நோய்க்குறி அணுகுமுறையின் அபாயங்களை நீக்குவதற்காக, விரைவான விஷக் கண்டறிதல் கண்டறியும் முறைகளை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும் எனப் பல வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த முடிவின் விளைவுகளைச் சமாளிப்பதற்காக, மருத்துவமனைகளின் கொள்ளளவையும் திறமையான மருத்துவப் பணியாளர்களின் இருப்பையும் அதிகரிக்க வேண்டும்.


original link:

Share:

ராஜஸ்தானில் சமூகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு உதவியது? -சுசிரதிப்தா பட்டாசார்ஜி மற்றும் ஆலன் நிகோல்

ராஜஸ்தானின் இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டம், அரசின் தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்தியதுடன், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி கடைக்கோடி மக்களுக்கான தீர்வுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றியது. இதன்மூலம் அந்தப் பகுதிகளில் நீடித்த நீர் மேலாண்மை (Water Resilience) மேம்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் கருவியானது மிகவும் எளிமையானதாகவும், களப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைப்பை சார்ந்து செயல்படும் பெரிய திட்டங்களுக்கு ஏற்ப எளிதில் பொருந்தக்கூடியதாகவும் அமைந்திருந்தது.


இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் ஒரு மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது. விவசாயம், மருத்துவம், நிதி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில், சமூகத்தின் கடைக்கோடி மனிதருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளைக் கொண்டு சேர்க்க வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாட்பாட்கள் (Chatbots) விவசாயிகளுக்கு உதவுகின்றன, டிஜிட்டல் கருவிகள் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்த வழிகாட்டல்களை வழங்குகின்றன. மேலும், ஆலோசனை தளங்கள் சரியான பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியான நேரத்தில் உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றன.


இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை ஒரேமாதிரியான கருத்தாக்கத்தைப் பின்பற்றுகின்றன. அதாவது, மக்களுக்குத் தேவையான தகவல்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்றும், அந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நிரப்பிவிடும் என்றும் அவை கருதுகின்றன. ஆனால், சமூகங்களுக்குத் தேவையானது வெறும் தகவல்கள் மட்டும்தானா?



பொதுச் சேவைகளைப் பொறுத்தவரை, மக்களுக்கும் தகவல்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைவிட, அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய உள்ளூர் நிறுவனங்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியே ஒரு பெரிய குறையாக உள்ளது. இந்திய கிராமப்புறங்கள் சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் நில உரிமை போன்ற காரணிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு திட்டம் வெற்றியடைவதற்கோ அல்லது தோல்வியடைவதற்கோ தரவுகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. ஒரு தன்னார்வலர் ஏன் பணியை விட்டு விலகுகிறார், ஒரு பெண் கிராம சபையில் பேசுவதற்கு ஏன் தயங்குகிறார், அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை போன்ற முக்கியமான கள நிலவரங்கள் பெரும்பாலும் அந்தத் திட்டத்தை வடிவமைப்பவர்களுக்கோ அல்லது அதற்கு நிதி வழங்குபவர்களுக்கோ தெரிவதில்லை.


நிறுவனங்கள் இத்தகைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது இதற்குக் காரணம் அல்ல. பல நேரங்களில், இது போன்ற தகவல்களைத் தொடர்ச்சியாகவும் பெரிய அளவிலும் சேகரிப்பதற்குத் தேவையான கால அவகாசம், முறையான கருவிகள் அல்லது போதிய வசதிகள் அந்த நிறுவனங்களிடம் இருப்பதில்லை. 


செயற்கை நுண்ணறிவுக்கான மாறுபட்ட கேள்வி


ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ள மாவட்டங்களான சிரோஹி (Sirohi) மற்றும் பாலி (Pali) ஆகியவற்றில், ஆய்வாளர்கள் (Artificial Intelligence for Water Policy) AI4 Water Policy) என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினர். பொதுவாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (AI) மக்களுக்குத் தகவல்களை அனுப்புவதற்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் அதற்கு மாறாக, மக்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது.


‘Centre for Microfinance’ என்ற களப்பணி பங்குதாரர் மற்றும் ‘Colectiv’ என்ற தொழில்நுட்ப பங்குதாரருடன் இணைந்து, ஓர் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி உருவாக்கப்பட்டது. இது ஆறுமாத காலப்பகுதியில் 50 கிராமங்களில் 352 நேர்காணல்களை நடத்தியது. இந்தத் திட்டத்தின் சூழல் மற்றும் அது கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த விவரங்களைக் கொண்டு, அந்தக்குழு இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியைத் தயார் செய்திருந்தது.


செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், 'Pani Mitras' (சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள்), பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ‘Centre for Microfinance’  ஊழியர்களுடன் ஹிந்தி மற்றும் உள்ளூர் வட்டார மொழிகளில், குரல் பதிவுகள் அல்லது உரையாடல் வழியாக 20 நிமிடங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் கலந்துரையாடியது. ஒவ்வொரு நபரின் பதில்களுக்கும் ஏற்ப, அது அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டு விவரங்களைச் சேகரித்தது. இறுதியாக, அந்த உரையாடல்களின் பெயரிடப்படாத பிரதிகளை, இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியானது மொழிபெயர்த்து, தலைப்புகளின் வாரியாகப் பிரித்தது; பின்னர் அவை களப்பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டன.


அந்த பதில்கள் மூன்று விஷயங்களை வெளிப்படுத்தின:


(i) விளைவுகளால் பெருமிதம்: என் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடியிலிருந்து 100 அடிக்கும் குறைவான ஆழத்திற்கு உயர்ந்துள்ளது. இதைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


(ii) பெண்களின் மீதான இரட்டைச் சுமை: குடும்பத்தைப் பராமரிக்க நான் அதிகாலையிலேயே எழுந்து விடுகிறேன், பிறகு தண்ணீர்ப் பிரச்சனைகள் குறித்துப் பேச மற்ற பெண்களைச் சந்திக்கிறேன், வீட்டிற்குத் திரும்பிய பிறகு, எனது வீட்டு வேலைகளைத் தொடர்கிறேன்.


(iii) நிதி மற்றும் அனுமதியைப் பெறுவதில் தாமதம்: பஞ்சாயத்து துறையிடமிருந்து அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தினால், எங்களால் குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்க முடியவில்லை.


இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, இந்தத் திட்டம் ‘Pani Mitras’ எனப்படும் சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்களை அறிமுகப்படுத்தியது. மேலும், பங்கேற்பாளர்கள் தங்களின் ஆய்வறிக்கைகளை விவாதிப்பதற்காக, முறையாகத் திட்டமிடப்பட்ட 'Pause and Reflect' என்ற பயிலரங்குகளை நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சில கருத்துகளுடன் உடன்பட்டனர், ஆனால் மற்றவற்றை மறுத்தனர். குறிப்பாக, ஊராட்சி நடைமுறைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த போதிய தெளிவு இல்லாததுதான் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதற்குப் பதிலாக, ‘Centre for Microfinance’ குழுவானது தனது பயிற்சித் திட்டத்தை பாதியிலேயே மாற்றியமைத்தது. இதில் பஞ்சாயத்து ராஜ் குறித்த அறிமுகத்தை இணைத்ததுடன், ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர் வளத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த வட்டார அளவிலான அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியது. இந்த மாற்றம் முதலில் திட்டமிடப்படாத ஒன்றுதான், இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிடைத்த தகவல்களை, அதே திட்டக் காலத்திற்குள் விரைவாகச் செயல்படுத்த முடிந்ததால் இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.


மூன்று மாதங்களுக்குப் பிறகு சமூக நீர்மேலாண்மை தன்னார்வலர்களிடம் ‘Pani Mitras’ நடத்தப்பட்ட நேர்காணல்கள், சமூக உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரசு அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்கியுள்ளதை வெளிப்படுத்தியது. இது, அவர்கள் முன்பு தயங்கிய ஒரு செயலாகும். அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதில் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் உணர்ந்தனர், மேலும் தாங்கள் அளித்த கருத்துகள் பஞ்சாயத்துகளும் அரசுத் துறைகளும் விரைந்து செயல்பட உதவியதாகத் தெரிவித்தனர்.


கூர்ந்து கவனித்தல்


இங்கே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது: பதிலளிக்கும் அமைப்புகளும் (Responsive systems) மற்றும் தீவிரமாகக் கவனிக்கும் அமைப்புகளும் (Actively listening systems) ஒன்றல்ல. பதிலளிக்கும் அமைப்புகள் என்பவை சமூகத்திடமிருந்து கருத்துக்களைப் பெற்று அதற்கு ஒரு பதிலை மட்டும் வழங்கும். ஆனால், தீவிரமாகக் கவனிக்கும் அமைப்புகள் என்பவை, அவை கேட்கும் கருத்துக்களின் அடிப்படையில் தங்களையே மாற்றியமைத்துக் கொள்கின்றன. இங்கே அந்தச் சமூகம் என்பது வெறும் பயனாளர்களாக மட்டும் இருக்காமல், அந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் ஒரு இணை வடிவமைப்பாளராகப் பங்கேற்கிறது.


இந்த முன்னோடித் திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூன்று வழிகளில் தீவிரமாகக் கவனிக்கும் திறனை செயல்படுத்தியது. முதலாவதாக, வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாக உருவாக்கப்பட்ட குரல்வழிச் சேவை, சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள் (Pani Mitras) தங்களின் கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்த ஒரு தனிப்பட்ட இடவசதியை வழங்கியது. இதை ஒரு பயனாளி கூறுகையில், யாராவது நேரில் இருந்தால் பேசுவதற்குத் தயக்கமாக இருக்கும், ஆனால் நமது சொந்த கைபேசியில் பேசும்போது அந்தத் தயக்கம் இல்லை என்று கூறினார். இரண்டாவதாக, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சுமார் 352 உரையாடல்களில் உள்ள பொதுவான கருத்துக்களை, வாரக்கணக்கிலான கடின உழைப்பு தேவைப்படாமல் மிக எளிதாகக் கண்டறிந்தது. மூன்றாவதாக, இதற்கான முடிவுகள் சில வாரங்களிலேயே தயாரானதால், பயிற்சியின்போதே தேவையான மாற்றங்களை அந்தக் குழுவினரால் செய்ய முடிந்தது. வழக்கமான கண்காணிப்பு முறைகளில், இதை இவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது.


AI4WaterPolicy முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றதற்கு அதன் தொழில்நுட்ப வழிமுறைகள் மட்டும் காரணமல்ல; பங்கேற்பாளர்களுடன் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர்களுடன் இணைந்தே உருவாக்கவும் திட்டமிட்ட கால அவகாசம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மையே முக்கியக் காரணங்களாகும். ‘Centre for microfinance’ அமைப்பு ஏற்கனவே அந்த கிராமங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்களைத் (Pani Mitras) தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்திருந்தது. நேர்காணல்களின்போது, மக்களிடம் திறன்பேசிகள் இல்லாத நேரங்களில், களப்பணியாளர்கள் அவர்களுக்குத் தேவையான சாதனங்களை வழங்கி உதவியதுடன், இணையத் தொடர்புச் சிக்கல்களைத் தீர்த்து, 'Pause and Reflect'  என்ற கலந்துரையாடல் அமர்வுகளை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றினர். வலுவான மனித உறவுகள் மூலமாகவே மக்களிடையே நேர்மையான உரையாடல்களுக்கான நம்பிக்கை ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்ததால், இந்த செயற்கை நுண்ணறிவால் பரவலான அளவில் மக்களின் கருத்துகளைக் கேட்க முடிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.



நீக்குவது அல்ல, திறனை மேம்படுத்துவது



டிஜிட்டல் இடைவெளி என்பது ஒரு நிதர்சனமான உண்மை; இது பாலினம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையில் வேறுபடுகிறது. எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவது குறித்த எந்தவொரு நேர்மையான விவாதமும் இந்த கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்பமானது 'சமூக நீர் மேலாண்மை தன்னார்வலர்கள்' (Pani Mitras) போன்ற களப்பணியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருக்கவேண்டுமே தவிர, அவர்களை இடமாற்றம் செய்வதாக இருக்கக்கூடாது.


இது ராஜஸ்தானில் மட்டும் ஒருமுறை செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் அல்ல. இந்த அணுகுமுறை, ஏற்கனவே உள்ள அரசுத் திட்டங்களில் மக்களின் கருத்துக்களைக் கேட்டுப் பெறும் முறையை வலுப்படுத்தியும், அரசின் சேவைகள் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை இன்னும் சிறப்பாக மாற்றியும் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. இது, களப்பணியாளர்களின் மனமாற்றம் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைப்பைச் சார்ந்திருக்கும் எந்தவொரு பெரிய திட்டத்திலும் எளிதாகப் பொருத்தக்கூடிய வகையில் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.


குடிநீர் வழங்கல் திட்டம் (Jal Jeevan Mission (JJM)), வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) போன்ற திட்டங்கள் மற்றும் பிற துறைசார் விரிவாக்க அமைப்புகள் அனைத்தும், கடைக்கோடி வரை சேவைகளைச் சென்றடையச் செய்யும் இத்தகைய செயல்பாட்டையே உள்ளடக்கியுள்ளன.


சுசிரதிப்தா பட்டாச்சார்ஜி, சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தில் கொள்கை ஈடுபாடு நிபுணராகப் பணியாற்றி வருகிறார். ஆலன் நிக்கோல், அந்த நிறுவனத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.


Original link:

How AI helped promote community-led development in Rajasthan.


Share: