பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைத் துறை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM MITRA)) திட்டம் முக்கியமான உந்துகோலாக இருக்கலாம். ஆனால், தென் மாநிலங்களுக்கு தொழிலாளர்களை வழங்கும் பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அத்தகைய பூங்காக்களை அரசு நிறுவ வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யுமா?
'2026-ஆம் ஆண்டு ‘மகளிர் இடஒதுக்கீடு' மசோதாவானது’ (Nari Shakti Vandan Adhiniyam) நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனதற்கு முக்கியக் காரணம், அது தொகுதி மறுவரையறைகளுடன் இணைக்கப்பட்டிருந்ததே ஆகும். மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கும் 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம் 2023' முன்னரே நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் பெரும்பாலான மாநிலச் சட்டமன்றங்களிலும், தற்போது பேசப்பட்டு வரும் 33 சதவீத இடஒதுக்கீட்டு அளவில்கூட பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதே தற்போதைய உண்மை நிலையாகும். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இட ஒதுக்கீடு மட்டுமே ஒரே வழியா? அது விரும்பத்தக்கதாக இருக்கலாம். ஆனால், அது உண்மையான அதிகாரத்தை வழங்கும் என்று நாம் நினைக்கவில்லை.
பெண்களுக்கு உண்மையான அதிகாரம் அளிக்க, அவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி, தேவையான வேலைகளுக்கான திறன்களை வளர்த்து, முறைசார் துறையில் பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் பணியாளர் தொகுப்பில் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2025-ஆம் ஆண்டு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கீழ் வரும் காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பின்படி (Periodic Labour Force Survey (PLFS)) 40 சதவீதமாக இருந்தது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2025-ஆம் ஆண்டு சதவீதம் கணக்கின்படி இந்த எண்ணிக்கை 32.4 சதவீதமாக உள்ளது. இதே நேரத்தில் வியட்நாம் 68.6 சதவீதம் தொழிலாளர் பெண்கள் சீனாவில் 59.1 சதவீதம் ஆகும். பங்கேற்பு விகிதம் 24.7 சதவீதம் ஆகும். உத்தரப்பிரதேசம் 32.4 சதவீதம் ஜார்கண்ட் 43.7 சதவீதம் ஒடிசா 47.3 சதவீதம் அதிகமாகும். மேலும், பீகார் மாநிலத்தில் சதவீதம் மகப்பேறு விகிதம் 2.8 ஆக அதிகமாக பதிவாகியுள்ளது. இந்திய அளவில் இது 1.9 ஆக உள்ளது. இது மாதிரி பதிவு கவலை அமைப்பு 2023-ஆம் ஆண்டு சராசரியாக 1.0 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சராசரியாக 1.0 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சராசரியாக மேலும் 1.0 சதவீத மக்கள் வளர்ச்சி விகிதம். பீகார் மாநிலத்தில் உள்ள மாணவிகளே பள்ளியை விட்டு விலகும் விகிதத்தில் அதிகமாக உள்ளனர் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. தொடக்க நிலை 8.7 சதவீதம் மேல்நிலை 25.9 சதவீதம் உயர்நிலை 25.1 சதவீதம் என கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் மற்றும் கல்வி அமைச்சகம் (Unified District Information System for Education Plus மற்றும் Ministry of Education) 2023-24-ஆம் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகளில், பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் வழங்க முடியும்?
திறன் மேம்பாடும் பயிற்சியும் நிதிச் சுதந்திரத்தின் ஒரு முக்கியத் தூணாக அமைகின்றன. 2014-ஆம் ஆண்டில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தை நிறுவியதற்காக அரசாங்கம் பாராட்டப்பட வேண்டும். தற்போது 38 துறைகளை உள்ளடக்கியுள்ள இந்த அமைச்சகத்திற்கு, 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூ.9,886 கோடியும், அதில் ரூ.3,400 கோடி பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவுக்காகவும் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) ஒதுக்கப்பட்டுள்ளது. PMKVY, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குச் சான்றிதழுடன்கூடிய இலவசத் திறன் பயிற்சியை வழங்குகிறது. திறன் பயிற்சி இருந்தபோதிலும், பயிற்சி பெற்ற இந்த இளைஞர்களுக்கு எந்தத் துறை சிறப்பான வேலை வாய்ப்பை வழங்க முடியும்?
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பாருங்கள். ஜப்பான், தென் கொரியா, தைவான், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், பெண்களை முறைசார்ந்த ஊதியப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவர ஆடைத் துறையைப் (garment sector) பயன்படுத்தின. இந்தியாவின் ஆடைத் துறை, முதலீடு செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய் 1 கோடி மூலதனத்திற்கும் 153 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. 2023-24-ஆம் ஆண்டு தொழில்துறைகளின் வருடாந்திர ஆய்வு, வாகன உற்பத்தித் துறையில் 27 ஆகவும், எஃகுத் துறையில் 14-ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், கவனத்திற்குரிய புள்ளிவிவரம் இதுதான்: ஆடைத் துறை ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 55 பெண் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதே,சமயம் வாகனங்கள் மற்றும் எஃகுத் துறைகள் 1 சதவீதத்திற்கும் குறைவான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகின்றன. நாரி சக்தியை ஒரு முழக்கமாக மட்டும் குறைத்து விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஆடைத் துறைதான் மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும்.
திருப்பூர் போன்ற ஆடை உற்பத்தி அதிகமாக நடந்து வரும் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இவர்களில் பெரும்பாலோர் பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்குத் தங்கும் விடுதி வசதிகள் தேவைப்படுகின்றன. மேலும், இவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து வெகு தொலைவில் தங்கிப் பணியாற்றுகின்றனர். இது பணியாளர்கள் வேலையைவிட்டு விலகிச் செல்லும் விகிதம் அதிகரிக்கவும், திறமையான பணியாளர்களை இழக்கவும் வழிவகுக்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உபரித் தொழிலாளர்களை வழங்கும் மாநிலங்களிலேயே ஆடை உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டால் என்னவாகும்?
பீகாரின் முசாஃபர்பூரில், பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் இந்த முயற்சியை மேற்கொண்டு, இந்த மாற்றம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை வழங்கும் ஒரு உற்பத்திப் பிரிவை அமைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் தொழிற்சாலையில் 500 இயந்திரங்களில் 650 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். மார்ச்-ஏப்ரல் 2027-க்குள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 3,000-ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணியாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இவர்கள் முசாஃபர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாகத் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். இதற்கு முன் எந்தத் தொழில் அனுபவமும் இல்லாத இந்த பெண்கள், நிறுவனத்தால் ஆரம்பத்திலிருந்தே பயிற்சி அளிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஒரு தனியார் நிறுவனம், வணிகரீதியாகப் பகுத்தறிவுமிக்க ஒரு கணிப்பை முன்வைக்கிறது: அதன்படி, தொழிலாளர்கள் அதிகமாக உள்ள ஒரு மாநிலத்தில், ஒரு பெண் தொழிலாளிக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டால், அந்த பெண் அதிக பணி செய்பவராகவும், நம்பகமானவராகவும், இருப்பார். இத்தகைய மாற்றத்திற்கு உட்படும்போதும், அந்தபெண் தனது சமூகத் தொடர்புகளையும், குடும்பத்தையும், சமூகத்தையும் மேம்பத்துவர். ஆடைத் துறையில் உள்ள இத்தகைய நிறுவனங்களுக்கு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊக்கத்தொகைகளை வழங்கலாம்.
பகிரப்பட்ட உள்கட்டமைப்புடன், பெரிய அளவிலான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய ஜவுளிப் பூங்காக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட PM MITRA திட்டம், தேவைப்படும் முக்கிய கருவியாக விளங்குகிறது. இருப்பினும், பீகாரிலோ, ஜார்க்கண்ட் அல்லது ஒடிசாவிலோ ஒரு PM MITRA பூங்காகூட இல்லை. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், ஒரே ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.
அந்தத் தொழிற்சாலைகளை உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் பெண் தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதில் தான் சவால் உள்ளது. பீகாரின் தொழில்துறைக் கொள்கை இதை அங்கீகரிக்கிறது. ஒரு தொழிலாளிக்கு ரூ.20,000 வரையிலான பயிற்சி ஊக்கத்தொகைகள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகைகள், ஜவுளி ஆலைகள் ஒரு பணியாளருக்கு மாதம் ரூ.5,000 வரை மானியம் கோரவோ அல்லது ஊழியர் மாநில காப்பீடு (Employees' State Insurance (ESI)) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு (Employees' Provident Fund (EPF)) முதலாளி செலுத்திய பங்களிப்பில் 300 சதவீதம் வரையிலான தொகையை மீண்டும் வழங்குகின்றன.
பலவீனமான பயிற்சி உள்கட்டமைப்பும், தொழில்துறையுடனான சீரற்ற ஒருங்கிணைப்பே இந்த பிரச்சினைக்கு முக்கிய கரணியாகும். சீனாவும், வியட்நாமும், நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களையும், அரசால் பராமரிக்கப்படும் தர உத்தரவாதத்தையும் கொண்டு, தொழில்துறையுடன் இணைந்து வளர்ந்த குழுமங்களை மையமாகக் கொண்ட பயிற்சி நிறுவனங்களை உருவாக்கின. பீகாரும் இதேபோன்ற ஒரு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
மூன்று மாற்றங்கள் முக்கியமானவை. முதலாவதாக, தொழில், அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு நிர்வாகத்தின்கீழ், பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் தரத்தில் முதலீடு செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் தர உறுதிப்பாட்டிற்கு பொதுப் பணம் நிதியளிக்க வேண்டும்; பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் பணியிட மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் தலைமை தாங்க வேண்டும். இரண்டாவதாக, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை மறுசீரமைத்து, அதிக மானிய விகிதங்களுடன் பெண்களின் வேலைவாய்ப்புடன் வெளிப்படையாக இணைக்க வேண்டும். குறிப்பாக, வேலையிழப்பும் பயிற்சிச் செலவுகளும் அதிகமாக இருக்கும் பணியின் முதல் இரண்டு ஆண்டுகளில் இது முக்கியமானதாகும். மூன்றாவதாக, பெண்கள் இருக்கும் இடத்திற்கே உள்கட்டமைப்பைக் கொண்டு வரவேண்டும். பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைத் துறை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM MITRA)) திட்டம் சரியான கருவியாக இருக்கலாம். ஆனால் தென்மாநிலங்களில் தொகுப்புகளுக்குத் தொழிலாளர்களை வழங்கும் வகையில், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்தின்கீழ் பூங்காக்களை அமைக்க வேண்டும். அதுவே மகிளர்களுக்கான உண்மையான வேலை வாய்ப்பை உருவாக்கும். அரசு இதில் கவனம் செலுத்துமா? காலம்தான் அதற்கு பதில் சொல்லும்.
குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியராகவும், குப்தா ஆராய்ச்சி இணை ஆய்வாளராகவும், சந்தா ஐசிஆர்ஐஇஆரில் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளனர்.
Original link:
For true nari shakti, take jobs where women workers are.