மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் டெல்லி சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில், நவம்பர் 26-ம் தேதிக்கு முன் புதிய சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2025 அன்று முடிவடைகிறது.
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party (AAP)) தொண்டர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கையில், கலால் கொள்கை ஊழல் வழக்கில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க ராஜினாமா செய்வதாகவும், "அக்னி பரீக்ஷா" (agnipariksha-நெருப்பு விசாரணை) நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த வழக்கில் கடந்த வாரம் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடப்பட்டது.
மகாராஷ்டிராவுடன் சேர்த்து டெல்லியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார், அங்கு நவம்பர் 26-ம் தேதிக்கு முன் ஒரு புதிய சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 23, 2025 அன்று முடிவடைகிறது.
அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ், தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) வழங்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சட்டசபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடையும் தேதியிலிருந்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பின்னோக்கிச் செயல்படுகிறது. அதற்கு முன் தேர்தல் செயல்முறை (election process) முடிவடைவதை உறுதி செய்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 15(2) கூறுவதாவது, மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க முடியாது. இருப்பினும், சட்டமன்றம் அதன் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டால் இதற்கான விதியில் திருத்தம் கொண்டுவரலாம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 174(2)(பி) பிரிவு ஆளுநர் எந்த நேரத்திலும் சட்டசபையைக் கலைக்க அனுமதி அளிக்கிறது. மேலும், மாநில சட்டசபையை அதன் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்குமாறு ஆளுநருக்கு அமைச்சர்கள் குழு ஆலோசனை வழங்கலாம். சட்டமன்றம் கலைக்கப்பட்டவுடன், இந்திய தேர்தல் ஆணையம் ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும்.
செப்டம்பர் 2018-ல், அப்போதைய முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவையானது, மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2019 ஜூன் மாதத்தில் முடிவடைவதற்கு முன்பே சட்டசபையை கலைக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், 2018-ல் மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைந்தார்.
டெல்லி முழு மாநிலமாக அல்ல. எனவே, இதற்கு சிறப்பு சட்டங்கள் பொருந்தும். டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம்-1991, இங்கு முக்கிய சட்டமாகும். இந்த சட்டத்தின் பிரிவு 6(2)(b) இன் படி, துணைநிலை ஆளுநர் (Lieutenant Governor (LG) சட்டசபையை கலைக்க முடியும். இருப்பினும், சட்டசபையை கலைக்க டெல்லி முதல்வர் பரிந்துரை செய்தாலும், இறுதி முடிவானது துணைநிலை ஆளுநர் மூலம் செயல்படும் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ள கெஜ்ரிவால், முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், சட்டசபையை கலைக்க அவர் பரிந்துரைக்கவில்லை. செவ்வாய்கிழமை காலை கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூடிய பிறகு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்படலாம்.
தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்கு முன் தேர்தல் ஆணையம் என்னென்ன விஷயங்களைப் பரிந்துரைக்க வேண்டும்?
தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவதற்குள் புதிய சட்டசபை அல்லது மக்களவை தயாராக இருக்க வேண்டும். அதாவது வெற்றியாளர்களுக்கு தேர்தல் சான்றிதழ் வழங்குவது மற்றும் அனைத்து நிபந்தனைகளை முடிப்பது உள்ளிட்ட தேர்தல் செயல்முறை அந்த தேதிக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும்.
வானிலை (weather), பாதுகாப்புப் படையினரின் இருப்பு (availability of security forces), திருவிழாக்கள் (festivals), அதிகாரிகளின் பயிற்சி (training of officers) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கொள்முதல் (procurement of EVM) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
தேர்தல் ஆணையம் நிர்வாக மற்றும் காவல்துறை இயந்திரங்களிலிருந்து உள்ளீடுகளுக்காக மாநிலங்களுக்குச் சென்று அதே நேரத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் உள்ள மாநிலங்களில் வாக்குப்பதிவைத் திட்டமிட முயற்சிக்கிறது.
தேர்தல் அட்டவணையை அமைப்பதற்கு முன், இந்திய தேர்தல் ஆணையம் மாநிலத்திற்கு வருகை தருகிறது. இது உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கருத்துக்களை சேகரிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் முடிந்தால், ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் வாக்களிக்க திட்டமிடவும் முயற்சிக்கிறது.
தற்போது, தேர்தல் ஆணையம் டெல்லியில் கவனம் செலுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது. மேலும் இரண்டு கட்டங்கள் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு அடுத்ததாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த இரு அவைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் மற்றும் ஜனவரி 2025-ல் முடிவடையும்.
வழக்கமாக, தேர்தல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தம் கொண்டுவரப்படும். மகாராஷ்டிரா மாநிலத்திற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தப் பட்டியலுக்கான வாக்களிப்பதற்கான தகுதித் தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் 18 வயது நிரம்பிய எந்தவொரு நபரும் இந்த பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பட்டியல்கள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. டெல்லி உட்பட மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், வருடாந்திர தேர்தலுக்கான திருத்தம் ஜனவரி 6, 2025 அன்று வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தியபடி, இந்தத் திருத்தம் ஜனவரி 1, 2025 அன்று வாக்களிப்பதற்கான தகுதித் தேதியைக் கொண்டிருக்கும்.