இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 10,000 ரூபாய் இரண்டு தவணைகளில் மாற்றப்படும். இதற்கு யார் தகுதி பெற்றவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பாஜக அரசு என்ன முறையை முன்னெடுத்து செல்ல உள்ளது?
செப்டம்பர் 17, 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சுபத்ரா யோஜனாவை (Subhadra Yojana) தொடங்குவார். இது ஒடிசா அரசாங்க திட்டமாகும். இது 21 முதல் 60 வயதுக்குட்பட்ட மாநிலத்தில் தகுதியான பெண்களுக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய் இரண்டு தவணைகளில் வங்கி கணக்கில் மாற்றப்படும்.
இந்த திட்டம் புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் தொடங்கப்படும். ஒடிசா முழுவதிலும் இருந்து பெண்கள் பெருமளவில் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அனைத்து அரசாங்கத் துறைகளும் தங்கள் தகவல்தொடர்புகளிலும் சமூக ஊடகங்களிலும் சுபத்ரா லோகோவைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டம் ஒடிசாவில் ஒரு முக்கிய தெய்வமாக இருக்கும் ஜெகந்நாதரின் இளைய சகோதரி சுபத்ரா தேவியின் பெயரிடப்பட்டது. பகவான் ஜகந்நாதர், சுபத்ரா மற்றும் அவர்களின் மூத்த சகோதரர் பாலபத்ரா ஆகியோர் ஒன்றாக மதிக்கப்படுகிறார்கள்.
ஐந்து ஆண்டுகளில், 2024-25 ஆண்டு முதல் 2028-29 ஆண்டு வரை, இந்த திட்டம் ஒடிசாவில் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு உதவும். ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். இது தலா 5,000 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும். ஆண்டுதோறும் ராக்கி பூர்ணிமா (ஆகஸ்ட்) மற்றும் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) ஆகிய நாட்களில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். பணம் பயனாளியின் ஆதார் இனைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரைவு வைக்கப்படும். இதற்கு மின்னணு உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் செயல்முறை (Electronic Know Your Customer eKYC) கட்டாயமாகும். மேலும் சுபத்ரா டெபிட் கார்டு (Debit Card) வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட முதல் 100 பயனாளிகளுக்கு கூடுதலாக 500 ரூபாய் கிடைக்கும்.
வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள பெண்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் போன்றோர் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள். பிற அரசாங்க திட்டங்களிலிருந்து மாதத்திற்கு 1,500 ரூபாய் அல்லது அதற்கு மேல் (அல்லது ஆண்டுக்கு 18,000 ரூபாய்) பெறும் பெண்களும் விலக்கு அளிக்கப்படுவார்கள்.
பெண்கள் தங்கள் ஆதார் விவரங்களை பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொதுசேவை மையங்களில் பதிவு செய்கின்றனர். பதிவு செய்வதற்கான காலக்கெடு இல்லை; தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் பதிவு செய்யப்படும் வரை இது தொடரும்.
திட்டத்திற்கு நிதியளித்தல்:
2024-25 ஆண்டு முதல் 2028-29 ஆண்டு வரை இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 55,825 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 2024-25 நிதியாண்டில், ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எந்த நிதி பற்றாக்குறையும் இருக்காது என்றும், அதை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் மாநில நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.