போதுமான மாணவர்கள் இல்லாததால் தனியார் நிதியுதவி பெறும் பல கல்லூரிகள் விரைவில் மூடப்படும் என்று கேரள உயர்கல்வி கவுன்சிலின் (Kerala Higher Education Council) துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், கேரளாவின் பள்ளிக் கல்வி அமைச்சர், வி. சிவன்குட்டி, 99.69% மாணவர்கள் 10-ம் வகுப்பு இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
மாநிலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front (LDF)) அரசாங்கத்தின் ஒரு மிகப்பெரிய சாதனை என்று அமைச்சர் பெருமையுடன் கொண்டாடினார். இது தனிப்பட்ட பெருமை மற்றும் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
புதுப்பிக்கப்பட்ட பொது ஆணையின் அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பினராயி விஜயனின் தொலைநோக்கு தலைமையையும் அவர் பாராட்டினார்.
இருப்பினும், புதிய சாதனை படைத்த மகிழ்ச்சி சிறிது காலம் நீடித்தது. ஜூன் மாத இறுதியில் சிவன்குட்டியின் அமைச்சரவை உறுப்பினரான சஜி செரியன் மாநிலத்தின் கல்வித் தரம் குறைந்து வருவதை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களால் சரியாக எழுதவோ படிக்கவோ முடியவில்லை.
கலாச்சாரம் மற்றும் மீன்பிடி துறைகளை மேற்பார்வையிடும் செரியன், கடந்த காலங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 210 ஐ அடைவதற்கு கடின உழைப்பு தேவை என்று குறிப்பிட்டார். இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களும் எழுத படிக்கும் திறன் இல்லாமல் கூட, தேர்வில் தேர்ச்சி பெறலாம். மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் கணிசமான சதவீதத்தினர் தங்கள் தாய்மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்று குறிப்பிட்டார்.
அரசாங்கமானது, மதிப்பீடுகளில் மெத்தனமாக இருப்பதாக அவர் கூறினார். ஏனெனில், அரசியல் போட்டியாளர்கள் தேர்வில் தோல்வியுற்ற எவரையும் அரசாங்கத்தின் தோல்வியாகக் கருதுவார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை விமர்சிக்க செரியனின் பேச்சைப் பயன்படுத்திய பிறகு, சிவன்குட்டி கேரளாவின் கல்வி முறையைப் பாதுகாத்தார். முன்-தொடக்க, தொடக்க, மேல்-தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை வழங்குவதில் கேரளா சிறந்து விளங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார். சிவன்குட்டி, செரியனின் கருத்து தவறானது என நிராகரித்தார்.
கல்வித் திறமையில் கேரளா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று கூறிய சிவன்குட்டி, பள்ளிக் கல்வி தொடர்பான ஒன்றியத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் மாநிலம் இன்னும் முதலிடத்தில் இருப்பதை நினைவூட்டினார்.
மாநில பொதுக் கல்வி இயக்குநர் (director of public instruction) எஸ்.ஷானவாஸ் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு வெளியானதைக் கேட்டவர்களுக்கு செரியனின் இந்த வெளிப்பாடு ஆச்சரியமாக இல்லை. மார்ச் மாதம் பள்ளி ஆசிரியர்களுடான தனிப்பட்ட சந்திப்பின் போது, மாநிலத்தில் கல்வியின் தரம் குறைந்து வருவது குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளைத் தெரிவித்தார்.
"கேரளாவில் கல்வியின் தரத்தை ஐரோப்பாவுடன் ஒப்பிடும் காலம் போய்விட்டது. இப்போது அது பீகாருடன் ஒப்பிடப்படுகிறது," என்று ஷானவாஸ் தனது உரையில் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுமார் 69,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால், சில மாணவர்கள் தங்கள் பெயர்களைத் தவறு இல்லாமல் எழுதுவது போன்ற அடிப்படைத் திறன்களுக்கு உதவி தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் வழக்கமான கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கை மாநில அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று சிவன்குட்டி தெளிவுபடுத்தினார். அரசின் கொள்கையானது மாநிலத்தில் கல்வித் தரத்தை பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கேரளாவில் உள்ள கல்வித் தரங்கள் UNICEF நிறுவனத்திடம் இருந்து பாராட்டைப் பெற்றுள்ளன. அவை உயர் தேசிய தரவரிசைகளை எட்டியுள்ளன. இந்த தரநிலைகளை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் விளக்கினார்.
செரியனின் கருத்துக்கள் கேரளாவில் ஷானவாஸின் நிலைப்பாட்டை ஆதரித்தன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 60-70% ஆக இருந்து தற்போது 99% ஆக உயர்ந்துள்ளது. 2023ல், மொத்த தேர்ச்சி சதவீதம் 99.70% ஆகும்.
உலகளாவிய கல்வியின் "கேரள மாதிரியானது" (Kerala model), ஒரு காலத்தில் மிகவும் பாராட்டப்பட்டது. பல காரணங்களால் பல ஆண்டுகளாக தரம் குறைந்துள்ளது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், மாநிலத்தில் தொழில்முறை படிப்புகள் கூட தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழுவின் (All India Save Education Committee) கேரளா பிரிவின் பொதுச் செயலாளர் எம்.ஷாஜர் கான் என்பவர், ஷாநவாஸ் மற்றும் செரியன் ஆகியோரின் சமீபத்திய வெளிப்பாடுகளைக் குறித்து கருத்துத் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (APJ Abdul Kalam Technological University) இந்த ஆண்டு முடிவுகள் அனைத்தும் மேற்பார்வையிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள், 26 இணைந்த கல்லூரிகளில், இறுதி பிடெக் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 25% குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கல்லூரியில் 28 மாணவர்கள் தேர்வெழுதினர். ஆனால், யாரும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான கல்வித் தரம், திறமையான மாணவர்கள் பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது, மாநில கல்வித்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை குறைந்ததால், எம்.ஜி. பல்கலையுடன் (MG University) இணைந்த, 14 கல்லுாரிகள், இந்த கல்வியாண்டில் மூடப்பட்டன.
கேரள உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் ராஜன் குருக்கல் கூறியதாவது: கேரளாவில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் தனியார் நிதியுதவி பெறும் பல கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் நிறுவனங்கள் கூட தங்கள் இடங்களை நிரப்ப முடியாமல் திணறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில், கேரள உயர் நீதிமன்றம், மாநிலத்தின் கல்வித் தரத்தில் சரிவைக் கண்டறிந்தது மற்றும் தேவையான நடவடிக்கைகள் மூலம் தரத்தை பராமரிப்பதன் மூலம் அதிகாரிகள் இதைத் தடுக்க முடியும் என்று பரிந்துரைத்தது.
கல்வியாளரும் எழுத்தாளருமான ஜே.தேவிகா, நமது கல்வி முறை தற்போது குறைந்த தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார். மருத்துவ உதவியைப் பெறுவதற்கு முன், மருத்துவர்கள் அல்லது பல் மருத்துவர்கள் எங்கு படித்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம்.
திருமண விளம்பரங்களில் (matrimonial ads) உள்ளவர்கள் தகுதி அடிப்படையிலான சேர்க்கை மூலம் தங்கள் பட்டங்களைப் பெற்றதாகக் குறிப்பிடுவது கவலையளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கேரளா உலகளாவிய கல்வியின் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள், அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி, பள்ளிகளை எளிதாக அணுகுவது மற்றும் அனைத்து பாலினருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் போன்ற காரணிகளே இதற்குக் காரணம். கேரளா பெரும்பாலும் இந்த அம்சங்களில் மற்ற இந்திய மாநிலங்கள் அல்லது வளரும் நாடுகளுடன் மட்டுமல்லாமல், சில வளர்ந்த நாடுகளுடனும் ஒப்பிடப்படுகிறது.
கேரளாவின் கடந்த கால சாதனைகள் பாராட்டுக்குரியவை என்று தேவிகா குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் இப்போது மாநிலத்தின் கல்வி அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகள் மற்றும் திறமையின்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சிக்கல்கள் கேரளாவின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி உயர் மட்டத்தில் இருந்தாலும், அதன் மெதுவான பொருளாதார வளர்ச்சியை ஓரளவு விளக்கலாம். கேரளாவின் கல்வி அமைப்பில் கணிசமான முதலீடுகள் பலனளிக்கவில்லை என்றால், அது மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று தேவிகா கவலை தெரிவித்தார்.
மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் கல்விக்கான அரசாங்கத்தின் செலவினம் நாட்டிலேயே மிக அதிகமாக இருந்தாலும், கல்வியானது கேரள சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
கேரளாவில், மாநிலத்தின் மொத்த வருவாய் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக கல்வி உள்ளது. மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களைக் கொண்டுள்ளது. மேலும், கல்வித் துறை மாநிலத்தின் மிகப்பெரிய நிறுவனமாக செயல்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 50% க்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இத்தகைய குறிப்பிடத்தக்க முதலீடு விகிதாசார பொருளாதார வளர்ச்சியை விளைவித்ததா என்பது குறித்து இப்போது கவலைகள் உள்ளன. இல்லையெனில், அமைப்பின் உற்பத்தித்திறன் குறைபாட்டிற்கான காரணங்கள் பற்றிய கேள்விகள் உள்ளன.
உயர்கல்வி அமைச்சர் ஆர். பிந்து, அதிக எண்ணிக்கையிலான மலையாளி மாணவர்கள் வெளிநாடு செல்வதை ஆதரித்து, இது உலகளாவிய போக்கு என்று கூறினார். கேரளாவின் மோசமான சமூக-பொருளாதார நிலைமை மற்றும் மாநிலத்தில் உயர்கல்வி தரம் வீழ்ச்சியடைந்து வருவதை ஆதாரமற்றது என்று குற்றம் சாட்டும் கூற்றுக்களை அவர் நிராகரித்தார்.
கல்வி நிபுணர்களின் கூற்றுப்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பரவலான ஆதரவுணர்வு (favoritism) மற்றும் உறவினர்க்களுக்கு தனிச்சலுகை வழங்குதல் (nepotism) ஆகியவை தரம் குறைவதற்கான முக்கிய காரணங்களாகக் காணப்படுகின்றன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI (M)) கட்சி தனது விசுவாசமான ஆதரவாளர்களை குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதாக மீண்டும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை விட ஆளும் கட்சிக்கு அரசியல் விசுவாசத்தையே முதன்மைப்படுத்துகின்றன என்றார். அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்க பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதை அடைகிறார்கள். இதன் விளைவாக, கட்சியால் விரும்பப்படும் ஆசிரியர்களும் மாணவர்களும் தகுதியைப் பொருட்படுத்தாமல் நியாயமற்ற நன்மைகளைப் பெறுகிறார்கள்.
CPI (M) மற்றும் அதன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (Students Federation of India (SFI)), இணைந்த அமைப்புகளுடன் சேர்ந்து, கல்வி வளாகங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே குறிப்பிட்ட பிரிவினருக்கு தனிச்சலுகை வழங்குதலை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்கள் சிறப்பு ஆதரவு மற்றும் தனிச்சலுகைகளின் மூலம் அமைப்பில் நுழைவதைத் தடுப்பதன் மூலம் மாநிலத்தின் கல்வித் துறையை மேம்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.