"தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தி பணிகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும்."
மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பெரும் சவாலாக இருக்கும். வரவிருக்கும் ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிகிறது. அதிகரித்து வரும் இளம் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதாரம் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வதால், குறைவான தொழிலாளர்களே தேவைப்படும் நிலை என சமீபத்திய ஆய்வுகள் இந்த சவாலின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises) அனைத்து நிறுவனங்களிலும் 21% மட்டுமே வணிக நடவடிக்கைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறது. அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, ஒருங்கிணைக்கப்படாத விவசாயம் அல்லாத துறை சுமார் 11 கோடி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.8 கோடியாக இருந்தது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation (ILO)) முன்பு இதே போன்ற அறிக்கைகளை அறிவித்தது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை (ILO’s India Employment Report), உற்பத்தித் துறையில் 12% - 14% என்ற அளவில் வேலை உருவாக்கம் தேக்க நிலையிலேயே உள்ளதாகக் குறிப்பிடுகிறது. கோவிட்-19 காரணமாக விவசாயத்தில் இருந்து விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாறுவதும் குறைந்துள்ளது. சிட்டி குரூப் (Citigroup report) அறிக்கையின்படி, தற்போதைய வேலை உருவாக்க விகிதம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யாமல் போகலாம்.
இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அனைத்து நிறுவனங்களிலும் 21% மட்டுமே வணிக நடவடிக்கைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறது. அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, ஒருங்கிணைக்கப்படாத விவசாயம் அல்லாத துறை சுமார் 11 கோடி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.8 கோடியாக இருந்தது.
மொத்த வேலைவாய்ப்பில் 36.45%-ஐ உருவாக்கிய, 'பிற சேவைகள்' (Other Services) துறை அதிக மக்களை வேலைக்கு அமர்த்துவதாக இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) கண்டறிந்துள்ளது. அடுத்ததாக 'வர்த்தகம்' 35.61% ஆகவும், 'உற்பத்தி' 27.94% ஆகவும் இருந்தது. காலமுறை தொழிலாளர் ஆய்வுகளின்படி, 2022-23ல் 45.76% தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்துள்ளனர்.
அரசாங்கம் உடனடியாக விஷயங்களை மாற்ற முடியாது, ஆனால் தீர்வுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கலாம். சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (Swadeshi Jagran Manch), மத்திய அரசு ரோபோ வரியை (robot tax) விதிக்க வேண்டும் மற்றும் பட்ஜெட்டில் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்த மத்திய அரசை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருவதால், இது தாமதமாகி வருகிறது. தொழிற்சங்கங்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அணுகுமுறை நேர்மறையானது, ஆனால் வேலை இழப்புகளைத் தடுக்கவும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொழிலாளர் குறியீடுகளுக்கு அப்பால் வலுவான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
தொழில்நுட்பம் மக்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். அவர்களின் வேலைகளை அச்சுறுத்தக்கூடாது. விவசாய உற்பத்தியை நவீனமயமாக்க, வேலைகளை உருவாக்கவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முதலீடு செய்ய வேண்டும். தனியார் மற்றும் பொதுத் துறைகள், தொழிற்சங்கங்கள், மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வேலை உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் வளர்ச்சி மாதிரியை வடிவமைப்பதில் முக்கியமானது. வேலைகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமூக மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று உலகளாவிய போக்குகள் காட்டுகின்றன. பயனுள்ள தீர்வுகளைத் தொடங்க இந்தப் பிரச்சனைக்கு நேர்மையான அங்கீகாரம் தேவை.