இந்த மாத தொடக்கத்தில் இருந்து, பல வானிலை அமைப்புகள் தென்னிந்தியா, கிழக்குப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகள் மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பருவமழையின் வீரியத்தை அதிகரித்துள்ளன.
இந்த பருவத்தில் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. கடந்த வாரம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கடலோர மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் உட்பட நாட்டின் 80% க்கும் அதிகமான இடங்கள் அதிக மழைப்பொழிவை பெற்றன.
பரவலான மழைக்கு என்ன காரணிகள் காரணமாகின்றன?
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஆறு நாட்களுக்கு முன்னதாக, ஜூலை 2-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் விரிவடைந்தது. ஜூலை தொடக்கத்தில் இருந்து, சாதகமான வானிலை அமைப்புகள் தென், கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பருவமழையை தீவிரமாக வைத்திருக்கின்றன.
மழைப்பொழிவு அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன: அரபிக்கடலில் இருந்து தொடர்ந்து ஈரமான மேற்குக் காற்று வீசுவது மற்றும் தென் திசையில் நகர்வது பருவமழையின் தொடக்கத்தை குறிக்கும். இந்த மாற்றம் மத்திய, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுத்தது.
இரண்டு முக்கிய காரணிகள் இந்தியாவில் பருவமழையை அதிகரிக்க செய்கின்றன. ஒன்று, பாகிஸ்தானிலிருந்து வங்காள விரிகுடா வரை நீண்டு செல்லும் பருவகால குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியான பருவமழைக் காற்றின் நகர்வு (monsoon trough). இது தெற்கு நோக்கி நகரும் போது மத்திய, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழை பொழிகிறது. மாறாக, அது வடக்கு நோக்கி நகரும் போது, இமயமலை அடிவாரத்தில் அதிக மழை பெய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகள் குறைவாகப் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு காரணிகளையும் தாண்டி, பிற வானிலை அமைப்புகளும் இந்தியாவின் வடமாநிலங்களைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இவற்றில் முக்கியமான காரணிகள்:
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (off-shore trough), தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரை இந்தியாவின் கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையே 20°N அட்சரேகையில் காற்று வெட்டு மண்டலத்தின் (wind shear zone) இடைவிடாத வேகத்தின் காரணமாக வெவ்வேறு திசைகளில் காற்று நகரும். திங்கள்கிழமை ஒடிசா கடற்கரைக்கு அருகில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை சத்தீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா அப்பகுதிகளுக்கு மழை பொழிவை கொடுத்தது. பின்னர் புதன்கிழமை தென்கிழக்கு மத்தியப் பிரதேசம் நோக்கி நகர்ந்தது.
ஜூலை 13-முதல் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்தது. இந்த பிராந்தியங்களுக்கான முன்னறிவிப்பு என்ன?
தென்னிந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் இமயமலை மாநிலங்களில் இந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும். வெள்ளிக்கிழமையன்று, வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும், அடுத்த ஐந்து நாட்களில் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடர்ந்து மழை பெய்யும்.
அடுத்த நான்கைந்து நாட்களுக்கு பருவமழை அதன் வழக்கமான நிலையிலிருந்து தெற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்ச், சௌராஷ்டிரா, கொங்கன், கோவா, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வது மையம் சிவப்பு நிற எச்சரிக்கை (அதாவது நடவடிக்கை எடுப்பது) விடுத்துள்ளது. வியாழக்கிழமை இந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை (24 மணி நேரத்தில் 115 மிமீ முதல் 204 மிமீ வரை) எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 19 அன்று, குஜராத், மேற்கு மத்தியப் பிரதேசம், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன், கோவா, கடலோர மற்றும் உள்நாடு கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை (தயாராக இருப்பதற்கானது) விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், விதர்பா, கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை (எச்சரிக்கையாக இருப்பதற்கானது) இடி, மின்னல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில், தமிழகம் மற்றும் மத்திய இந்தியாவைத் தவிர்த்து, தென்னிந்தியா முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வியாழன் முதல், இமயமலை மாநிலங்கள் மற்றும் வடமேற்கு இந்தியா வரை மழை பெய்யும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும். ஜூலை 19-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வியாழக்கிழமை முதல் மழையை அதிகரிக்கும்.
ஒட்டுமொத்தமாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைத் தவிர, அடுத்த பத்து நாட்களுக்கு இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க மழை பொழிவு இருக்கும். நாட்டின் பல பகுதிகளில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.