இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் நிலை -Aanchal Magazine

 கடந்த 7 ஆண்டுகளில், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இது முறைசாரா விவசாயம் அல்லாத துறையில் (non-farm informal economy) 16.45 லட்சம் வேலைகள் இழப்புக்கு வழிவகுத்தது என்று இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (Annual Survey of Unincorporated Enterprises) தரவு தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த நிலைமைக்கு இது என்ன அர்த்தம்?


இந்தியாவில் முறைசாரா துறையானது (informal sector), சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (small and medium enterprises), வீட்டு உரிமையாளர் நிறுவனங்கள் (household proprietary) மற்றும் கூட்டாண்மை (partnership) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் ஏறக்குறைய பாதி அளவிற்கு பங்களிப்பதோடு, நான்கில் மூன்று பங்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இருப்பினும், இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (Annual Survey of Unincorporated Enterprises (ASUSE)) சமீபத்திய தரவுக்கான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.  கடந்த ஏழு ஆண்டுகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 16.45 லட்சம் வேலை இழப்பு ஏற்பட்டது.


சமீபத்தில், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) 2021-22 மற்றும் 2022-23 ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டது. நவம்பர் 2016-ல் பணமதிப்பு நீக்கம் (demonetisation), ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் மார்ச் 2020-ல் தொடங்கிய கோவிட்-19 தொற்றுநோய் (Covid-19 pandemic) ஆகிய மூன்று பெரிய நிகழ்வுகள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்தன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. 


கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, முறைசாரா உற்பத்தி (Informal manufacturing) நிறுவனங்கள் முன்பை விட மிகவும் பாதிக்கப்பட்டன. இந்தத் துறையில் பெரும்பாலான புதிய வேலைகள், மற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் காட்டிலும் சுயதொழில் செய்யும் நிறுவனங்களை நடத்துவதன் மூலம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டன. இது, வேலைவாய்ப்புக்கான தர எண்ணிக்கையில் சரிவைக் காட்டுகின்றன.


இணைக்கப்படாத நிறுவனங்கள்  (unincorporated enterprises) என்றால் என்ன?


இவை அமைப்புசாரா அல்லது முறைசாரா துறையில் உள்ள நிறுவனங்களாகும். இதில் சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSME)), ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட சொந்த நிறுவனங்கள் (household units) மற்றும் சொந்தக் கணக்கு நிறுவனங்கள் (own-account enterprises) ஆகியவை அடங்கும். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் "பிற சேவைகள்" ஆகிய மூன்று துறைகளில் இணைக்கப்படாத விவசாயம் அல்லாத நிறுவனங்களுக்காக (unincorporated non-agricultural establishments) ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


தொழிற்சாலைகள் சட்டம், 1948 (Factories Act, 1948) இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படாத உற்பத்தித் துறைகள் மற்றும் தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. பருத்தி கத்தரித்தல் (cotton-ginning), சுத்தம் செய்தல் (cleaning), உருளையால் தூர்வாருதல் (bailing), பீடி மற்றும் சுருட்டு உற்பத்தி (manufacturing bidi and cigar) போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முறைசாரா நிறுவனங்களும் இதில் அடங்கும். கூடுதலாக, மத்திய மின்சார ஆணையத்தில் (Central Electricity Authority (CEA)) பதிவு செய்யப்படாத, சுதந்திரமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், கடத்தும் மற்றும் விநியோகிக்கும் மின்சார அலகுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


வர்த்தகம் மற்றும் பிற சேவைகளின் கீழ், கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் தனியுரிமை மற்றும் கூட்டாண்மை வணிகங்கள் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள் தவிர), அத்துடன் சங்கங்கள், அறக்கட்டளைகள், கிளப்புகள், தனிநபர்களின் அமைப்புகள், கூட்டுறவு, சுய உதவி குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.


இந்த ஆய்வு முடிவுகள் ஏன் முக்கியமானவை?


2021-22 மற்றும் 2022-23 சுற்றுகளுக்கு முன்பு, சமீபத்திய தரவு 2015-16-ல் இருந்து கிடைத்தது. 2018-19 போன்ற முந்தைய சுற்றுகளின் சில முடிவுகள் பொதுவில் வெளியிடப்படவில்லை.


வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அரை திறன் (semi-skilled) மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை (unskilled workers) பணியமர்த்துவதற்கும் முறைசாரா துறை முக்கியமானது. குறிப்பாக, முறையான துறை மந்தநிலையின் போது, ​​மக்கள் வேலைவாய்ப்புப் போக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.


2016-ல் திடீரென பணம் திரும்பப் பெறப்பட்டது. 2017-ல் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் வரி இணக்கம் மற்றும் 2020 முதல் 2021 வரையிலான தேசிய அளவில் தடைக்காலம் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான தரவுகளை ஆய்வுகள் வழங்குகின்றன.


துறைகளின் போக்கு என்ன?

2022-23 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், முறைசாரா துறை வேலைவாய்ப்புள் குறைந்துள்ளன. சொந்தக் கணக்கு நிறுவனங்கள் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4% வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் கூலித் தொழிலாளி நிறுவனங்கள் 3.2% குறைந்துள்ளன. 


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை விட, அதிகமான அலகுகள் சொந்தமாக, பொதுவாக வீட்டு அல்லது தனி நபர் அலகுகளாக மாறியதால், வேலையின் தரம் குறைவதை இந்த மாற்றம் அறிவுறுத்துகிறது. இந்த மாற்றம் குறிப்பாக அதிக மூலதன-தீவிர முறைகளை நோக்கி நகரும் உற்பத்தி போன்ற உழைப்பு மிகுந்த துறைகளை பாதிக்கிறது.


காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவானது வேலைவாய்ப்பு முறைகளிலும் மாற்றங்களைக் காட்டுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயத்தில் அதிகளவில் வேலை செய்கின்றனர். அதே சமயம், உற்பத்தியில் குறைந்தளவே வேலை செய்கின்றனர். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு  2022-23 இன் படி, 2017-18ல் 42.5% ஆக இருந்த விவசாயத்தில் வேலை செய்பவர்களின் சதவீதம் 45.8% ஆக அதிகரித்துள்ளது. மேலும், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் 2018-19ல் 55.3% ஆக இருந்து 2022-23ல் 64.3% ஆக உயர்ந்துள்ளது. இது, பெரும்பாலும் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் இந்த எண்ணிக்கை பொருந்தும்.


சாதரணமாக, உபரி உழைப்பு முறைசாரா வேலைகளில் (விவசாயம் மற்றும் கட்டுமானம் உட்பட) இருந்து முறையான துறைக்கு (உற்பத்தி மற்றும் அதிக உற்பத்தித்திறன் சேவைகள் போன்றவை) மாற வேண்டும். ஆனால், இதை உறுதிப்படுத்த முறையான துறையிலிருந்து தரவுகள் எதுவும் இல்லை. 


ஒட்டுமொத்தமாக, 2022-23ல் முறைசாரா துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2015-16ல் 11.13 கோடியிலிருந்து 16.45 லட்சம் (அதாவது, 1.5%) குறைந்து 10.96 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயம், 2015-16ல் 6.33 கோடியாக இருந்த ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் (unincorporated enterprises) எண்ணிக்கை 2022-23ல் 16.56 லட்சம் அதிகரித்து 6.50 கோடியாக அதிகரித்துள்ளது.


துறைகளின் போக்கு என்ன?


2022-23 மற்றும் 2015-16 க்கு இடையில், உற்பத்திக்கான அலகுகள் 9.3% குறைந்து 1.78 கோடியாக உள்ளது. உற்பத்தித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 15% குறைந்து 3.06 கோடியாக உள்ளது. 2022-23 இல், வர்த்தகத் துறை அலகுகள் 2.26 கோடியாகக் குறைந்துள்ளது. 


2015-16 இல் இருந்து 2022-23 ஆம் ஆண்டு வரை, வர்த்தகத் துறையில் 2% சரிவு ஏற்பட்டு நிறுவனங்கள் 2.26 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த நேரத்தில், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 0.8% அதிகரித்து 3.90 கோடியாக இருந்தது.


சேவைத் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 19.1% அதிகரித்து 2.46 கோடியாகவும். பணியாளர்களின் எண்ணிக்கை 9.5% அதிகரித்து கிட்டத்தட்ட 4 கோடியாகவும் உள்ளனர்.


கடந்த 12 ஆண்டுகளில், 2010-11ல் தொடங்கி, அடுத்த ஏழு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​முதல் ஐந்து ஆண்டுகளில் (2010-11 முதல் 2015-16 வரை) நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உதாரணமாக, 2010-11 முதல் 2015-16 வரை உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 14.3% மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.3% அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள் 11% மற்றும் அத்துறையில் உள்ள தொழிலாளர்கள் 13.5% அதிகரித்துள்ளது.


2010-11 மற்றும் 2015-16 க்கு இடையில், சேவைத் துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.4% குறைந்துள்ளது. இருப்பினும், 2015-16 முதல் 2022-23 வரை, இது 9.5% அதிகரித்துள்ளது. இதேபோல், 2015-16 முதல் 2022-23 வரை இந்தத் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 19.1% அதிகரித்துள்ளது. இது முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது 4.9% அதிகரித்துள்ளது.


வெளியீட்டின் தரவு என்ன காட்டுகிறது?


2022-23ல், ஒரு நிறுவனத்திற்கான மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 2015-16ல் ரூ.1.82 லட்சத்தில் இருந்து ரூ.2.38 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டல்  ரூ.1.04 லட்சத்தில் இருந்து ரூ.1.42 லட்சமாக அதிகரித்துள்ளது.


இருப்பினும், உண்மையில், வளர்ச்சி மெதுவாக இருந்தது. ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 2022-23ல் 6.9% வளர்ந்துள்ளது. ஆனால், இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட குறைவாகவே இருந்தது. 2010-11 முதல் 2015-16 வரையிலான 7.4% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திற்கு (compounded annual growth rate(CAGR)) மாறாக, 2015-16 முதல் 2022-23 வரை,  உண்மையான மொத்த மதிப்பு கூட்டலின் (GVA) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compounded annual growth rate(CAGR)) குறைந்துள்ளது என்று இந்திய மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ளன.


மாநிலங்கள் தோறும் முறைசாரா வேலைவாய்ப்பு முறை என்ன?


2022-23ல், 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில்  (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் தவிர்த்து) அமைப்புசாராத் துறைப் பணியாளர்கள் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 73-வது சுற்றுடன் இணைக்கப்படாத நிறுவனங்களின் 2015-16 உடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு, பல மாநிலங்கள் முறைசாரா துறை தொழிலாளர்களின் விகிதத்தில் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் முறையான துறையிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகின்றன.



Original article:

Share: