தற்சார்புக்கு எதிராக உலகளாவிய சார்புநிலை : உணவுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துதல் குறித்து . . . -லேஷ்மா மனோக்னா

 சமீபத்திய தாக்கங்கள், கவனமாகக் கையாளப்பட்டால், ஒன்றையொன்று சார்ந்திருத்தல் ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும் என்பதைக் காட்டின.


1960-களில் பிஎல்-480 திட்டத்தின்கீழ் கோதுமையை இறக்குமதி செய்ததிலிருந்து, 1970-களில் தானிய உபரி நிலையை அடைந்தது வரையிலான இந்தியாவின் பயணம், கொள்கையும், அறிவியலும் எவ்வாறு விளைவுகளை மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகள் ஒரு சிக்கலான தன்மையை முன்வைக்கின்றன. இந்தியா உலக சந்தைக்கு அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. அதேநேரத்தில், இந்தியாவது அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் சில பருப்பு வகைகளை இறக்குமதி செய்கிறோம். 2025-26-ஆம் ஆண்டிலும் சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு நாடும் தனக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் எல்லா நேரங்களிலும் உற்பத்தி செய்யமுடியாது என்பதற்கான ஒரு முக்கிய யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது.


உணவுப் பாதுகாப்பை நாம் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறோம் என்பதற்கு இரண்டு யோசனைகள் வழிகாட்ட வேண்டும். முதலாவதாக, உணவுப் பாதுகாப்புக்கு ஒரு வலுவான உள்நாட்டு அடிப்படை உள்ளது. இது பிரதான உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் சீரான உற்பத்தி, நுகர்வோருக்கு நியாயமான விலைகள், மற்றும் விவசாயிகளை நிலத்தில் நீடிக்கவைக்கும் வருமானங்களைச் சார்ந்துள்ளது. இரண்டாவதாக, இதற்கு ஒரு வெளிநாட்டுப் பரிமாணமும் உண்டு. உள்ளூர் விநியோகம் குறையும்போது இறக்குமதிகள் குடும்பங்களுக்கு உதவுகின்றன. மேலும், அறுவடை சிறப்பாக இருக்கும்போது ஏற்றுமதி சந்தைகள் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கின்றன. இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மக்கள்தொகையில் ஒரு பெரிய பகுதியினருக்கு மானிய விலையில் தானியங்களை வழங்குவதன் மூலம் இந்த அணுகுமுறைக்கு சட்டப்பூர்வ ஆதரவை அளிக்கிறது. இது அதிக மானிய விலையில் தானியங்களை வழங்குவதன் மூலம் மக்கள்தொகையின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ஆனால் இந்த பாதுகாப்பு வலை, முதலில் போதுமான உணவு கிடைப்பதைத்தான் சார்ந்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பதற்கு தெளிவான காரணங்கள் உள்ளன. உள்ளூர் பயிர்கள் மக்களை திடீர் உலகளாவிய விலை உயர்வுகளிலிருந்து பாதுகாக்கின்றன. கொள்முதல் மற்றும் பொதுப் பங்குகள் மூலம் சந்தைகளை நிலைப்படுத்த அரசாங்கங்களுக்குக் கருவிகளை வழங்குகின்றன. அவை கிராமப்புற வேலைகளுக்கும் முதலீடுகளுக்கும் ஆதரவளிக்கின்றன. இன்று, இதே தர்க்கம் ஊட்டச்சத்துக்கும் பொருந்துகிறது. பருப்பு வகைகள் இந்தியாவின் மலிவு விலைப் புரத மூலமாகும். எண்ணெய் வித்துக்கள் விலை மற்றும் உணவுத் தரத்திற்கு முக்கியமானவை. சிறந்த விதைகள், சாத்தியமான இடங்களில் நம்பகமான நீர்ப்பாசனம், வேளாண்மை ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்பு ஆகியவற்றின் மூலம் விளைச்சலை அதிகரிப்பது, உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவுகிறது. இந்தக் குறைபாடுகளைக் களைய கொள்கைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. பருப்பு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம், உற்பத்தியை உயர்த்தி இறக்குமதிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்துதல், ஊடுபயிர் சாகுபடி மற்றும் வலுவான கொள்முதல் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்கிறது.



பல நாடுகளுக்கான ஆய்வு


உணவில் முழு தன்னிறைவு என்பது யதார்த்தமானது அல்ல. நவீன விவசாயம் உரம், எரிபொருள், இயந்திரங்கள் மற்றும் அறிவியலின் உலகளாவிய ஓட்டங்களை நம்பியுள்ளது. பெரிய நாடுகள்கூட ஆண்டு முழுவதும் தங்களுக்குத் தேவையான அனைத்து வகையான உணவையும் உற்பத்தி செய்யமுடியாது. சமீபத்திய பல நாடுகளுக்கான ஆய்வில், பல நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து மட்டுமே தங்கள் உணவு வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்வதில் பின்தங்கியுள்ளன. குறைந்த தன்னிறைவு, ஒரு சில வர்த்தகக் கூட்டமைப்புகளைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றுடன் இணைந்து, அவற்றின் தாக்கங்களுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இது ஒரு நடைமுறை விதியை ஆதரிக்கிறது. வர்த்தகத்தை கைவிடாதீர்கள். விநியோகர்கள் மத்தியில் ஆபத்தை பரப்பி, ஒருவரை மட்டும் நம்புவதைத் தவிர்க்கவும்.


வர்த்தகம் மற்ற வழிகளிலும் உதவுகிறது. இது சிறப்புத் திறன் மூலம் செலவுகளைக் குறைக்கிறது. பிராந்திய வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைக்கிறது மற்றும் உணவுமுறைகளை விரிவுபடுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இறக்குமதிகளை கவனமாகப் பயன்படுத்துவது வேளாண் ஊக்கத்தொகைகளைப் பாதிக்காமல் அழுத்தத்தைக் குறைக்கலாம். விதிகள் கணிக்கக்கூடியதாகவும் உள்நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் ஆதரிக்கப்பட்டதாகவும் இருந்தால் இது செயல்படும். நல்ல அறுவடைகளின் போது கணிக்கக்கூடிய ஏற்றுமதிக் கொள்கைகள் விவசாயிகள் சிறப்பாகத் திட்டமிடவும், பிராந்தியத்தில் நம்பகமான கூட்டமைப்பாக இந்தியாவின் நற்பெயரை உருவாக்கவும் உதவுகின்றன.


முதலில் அபாயங்களைப் பார்ப்பது நாம் என்ன அதிகரிக்க வேண்டும், என்ன வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது. காலநிலை ஏற்ற இறக்கம் வெப்பம், கணிக்க முடியாத மழை மற்றும் வெள்ளம் மூலம் பயிர் விளைச்சலைக் குறைக்கிறது. இதற்கான தீர்வு ஒரு அடையாளம் அல்ல, ஆனால் ஏற்கனவே செயல்படும் நடைமுறைகளின் அளவுகோலான, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கும் வகைகள், நீர் சேமிப்பு முறைகள் மற்றும் சரியான நேரத்தில் வானிலை ஆலோசனை போன்றவை அடங்கும். ஆற்றல் செலவுகள் மற்றொரு காரணியாகும். எரிபொருள் மற்றும் உரங்கள் விலை உயர்ந்தால், உணவு விலை உயர்ந்ததாகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஆய்வுகள், அதிக ஆற்றல் பயன்பாடு பெரும்பாலும் மோசமான ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது என்பதைக் காட்டுகின்றன. நிலத்தை திறமையாகப் பயன்படுத்துவதும், தானிய உற்பத்தியை அதிகரிப்பதும் இந்த அழுத்தத்தைக் குறைக்கும். நீரேற்றிகள், முதன்மைப் பதப்படுத்துதல் (primary processing), குளிர்பதன சேமிப்பு மற்றும் தளவாடங்களில் செயல்திறன் நேரடியாக உணவு கிடைக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. விநியோக செறிவும் முக்கியமானது. பெரும்பாலான பொருட்கள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளிலிருந்து வந்தால், அவற்றின் பிரச்சினைகள் நம்மையும் பாதிக்கின்றன. உணவு மூலங்களை பல்வகைப்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.            


உக்ரைன் மோதலுக்கு உலகின் பதில் ஒரு எச்சரிக்கையான குறிப்பை அளிக்கிறது. 2022-ம் ஆண்டில், பல அரசாங்கங்கள் உணவு ஏற்றுமதியை கட்டுப்படுத்தின. உச்சக்கட்டத்தில், இந்த நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தில் கலோரிகளின் குறிப்பிடத்தக்க பங்கைத் தொட்டன. மேலும், இறக்குமதி செய்யும் நாடுகள் சமாளிக்கப் போராடின. அந்த அனுபவம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலையான, விதிமுறைக்குட்பட்ட கொள்கைகளின் அவசியத்தைக் காட்டுகிறது. வர்த்தக நடவடிக்கைகளுக்கு தெளிவான தூண்டுதல்கள் மற்றும் நேர-கால வரம்புகள் இருக்க வேண்டும். பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களுக்கான விநியோக ஒப்பந்தங்களை அரசாங்கங்கள் பல ஆதாரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவை இருப்பு விதிமுறைகளையும் வெளியிட வேண்டும் மற்றும் காலண்டர்களை வெளியிட வேண்டும். இது பொது இடையகங்கள் ஆச்சரியங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சந்தைகளை உறுதிப்படுத்துவதை உறுதி செய்கிறது.


குறிப்பிடும்படியாக உள்நாட்டு செயல்திட்டமும் முக்கியமானது. இராஜதந்திரரீதியில் முக்கியமாக இருப்பதை வீட்டிலேயே உற்பத்தி செய்யுங்கள். அதில் பொது விநியோக முறைக்கான பிரதான உணவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊட்டச்சத்து-முக்கியமான இடைவெளிகள் அடங்கும். அதை திறமையாகவும் உள்ளூர் சூழலியல்களை மதிக்க வேண்டும். சலுகைகள் இந்த இலக்கை ஆதரிக்க வேண்டும். நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகைகளில் நெல் மற்றும் கோதுமைக்கு மட்டுமே கொள்முதலுக்கு சலுகைகள் அளித்தால், அது அபாயத்தை நிலைநிறுத்திவிடும். வர்த்தக விதிகள் முன்னறிவிப்பின்றி மாறினால், அவை எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளில் முதலீடு செய்வதைத் தடுக்கின்றன. இறுதியாக, உற்பத்தியை ஊட்டச்சத்துக்களுடன் மேலும் இறுக்கமாக இணைக்கவும். சூழலியலுக்குப் பொருத்தமான இடங்களில் சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளை பரவலாக்கப்பட்ட முறையில் கொள்முதல் செய்வதும், மேலும் கொள்முதல், பொது விநியோகத் திட்டம் மற்றும் பள்ளி மதிய உணவுத் திட்டங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதும் உணவுப் பழக்கத்தை சரியான வழியில் மாற்றும் நிலையை ஏற்படுத்தும்.


இதில் எதுவுமே ஒரு சுருக்கமான விவாதத்தில் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க நம்மைக் கேட்கவில்லை. இது நமது செயல்களைத் திட்டமிடச் சொல்கிறது. எங்கு இடைவெளிகள் அதிகமாக இருக்கின்றனவோ, அங்கு நாம் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு கலோரியையும் வயலிலிருந்து தட்டுக்குக் கொண்டுவரத் தேவையான ஆற்றலைக் குறைக்க வேண்டும். பயிர்கள் மற்றும் இறக்குமதி மூலங்கள் இரண்டையும் நாம் பல்வகைப்படுத்த வேண்டும். வர்த்தகம் கணிக்கக்கூடியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் திட்டமிட முடியும். சர்வதேச அளவில், இந்தியா நியாயமான உணவு-வர்த்தக விதிகளை வடிவமைத்து, பதற்றத்தில் உருவாக்கும் கொள்கைகள் (panic policies) நெருக்கடிகளில் சிக்குவதைத் தடுக்கும் பிராந்திய ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டில், காலநிலைக்கேற்ற ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் (climate-smart research and extension) திட்டத்தில் செய்யப்படும் தொடர்ச்சியான முதலீடு, தன்னிறைவு என்ற நிலையை உண்மையானதாக வைத்திருக்கும். பசுமைப் புரட்சி உள்நாட்டுத் திறன் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்திய தாக்கங்கள், கவனமாகக் கையாளப்படும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் ஒரு பாதுகாப்பு அரண் என்பதைக் காட்டின. இந்த இரண்டையும் இணைப்பதே இந்தியர்களின் உணவுத் தட்டை நிலையானதாகவும், சிறந்த ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் வைத்திருக்கச் சிறந்த வழியாகும்.


ஆசிரியர்: உதவிப் பேராசிரியர், பொருளாதாரம் மற்றும் நிதித் துறை, பிட்ஸ் பிலானி

Original Article :  Self-reliance versus global dependence: The food security balancing act  -Leshma Manogna


Share:

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) : ஏன் அமெரிக்காவால் நேட்டோவை (NATO) மிரட்ட முடிகிறது? -உதித் மிஸ்ரா

 டென்மார்க் மற்றும் அமெரிக்கா இரண்டும் நேட்டோ உறுப்பினர்களாக இருப்பதால், கிரீன்லாந்தை அமெரிக்கா வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவது, அடிப்படையில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization (NATO)) பலவீனத்திற்கு வழிவகுக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். கிரீன்லாந்து அமெரிக்கப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர்கள் கூறினர். தற்போது, ​​கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதியாக உள்ளதால், இந்தப் பகுதியை அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுப்பதில் டென்மார்க் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது.


டென்மார்க் மற்றும் அமெரிக்கா இரண்டும் நேட்டோ உறுப்பினர்களாக இருப்பதால், கிரீன்லாந்தை அமெரிக்கா வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவது, அடிப்படையில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) பலவீனத்திற்கு வழிவகுக்கும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


1949-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து நேட்டோ மிகவும் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக உள்ளது. இது 32 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அடங்கும், இருப்பினும் அயர்லாந்து போன்ற அனைத்து நாடுகளும் அல்ல. இதன் உறுப்பினர்களில் ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவையும் அடங்கும். கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நார்வே போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. நேட்டோ உருவாக்கப்பட்டபோது, ​​அதற்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன. அவை,


  1. சோவியத் விரிவாக்கத்தைத் தடுப்பது


  1. கண்டத்தில் வலுவான வட அமெரிக்க இருப்பை உறுதி செய்வதன் மூலம் ஐரோப்பாவில் தேசியவாத இராணுவவாதம் மீண்டும் வருவதைத் தடுப்பதாகும். மற்றும்


  1. ஐரோப்பாவில் அரசியல் ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதாகும்.


மூன்றாம் உலகப் போர் நடக்காததற்கு நேட்டோவின் அபரிமிதமான பொருளாதார மற்றும் இராணுவ வலிமை ஒரு முக்கிய காரணம் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், நேட்டோவின் ஒட்டுமொத்த வலிமையின்கீழ் பொருளாதார மற்றும் இராணுவ வலிமையில்கீழ் ஒரு பரந்த சமநிலையின்மை உள்ளது. இந்த சமநிலையின்மையைதான் அமெரிக்க அதிபர் தற்போது சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.


மேலே உள்ள தரவுகள் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமையின் அளவைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவை மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் ஒரு மாபெரும் சக்தியாக நிலைநிறுத்துகிறது. உண்மையில், அமெரிக்கா மட்டும் மற்ற அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளையும் இணைத்ததைவிட அதிக வலிமை வாய்ந்தது.


தரவுகளின்படி, 2025-ம் ஆண்டில், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆண்டு உற்பத்தி, மற்ற அனைத்து நேட்டோ உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூட்டுத்தொகையைவிட அதிகமாக உள்ளது. ஒரு பத்தாண்டிற்கு முன்பு, நிலைமை தலைகீழாக மாறியது. 2014-ம் ஆண்டில், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி $17.6 டிரில்லியனாக இருந்தது.அதே நேரத்தில், மற்ற நேட்டோ நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.5 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. அப்போதிருந்து, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலில் மற்ற நேட்டோ நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையாக அமைந்து, பின்னர் அதை விஞ்சியுள்ளது. இப்போது அது அவற்றின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 13%-க்கும் அதிகமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பத்தாண்டிற்கும் மேலாக, அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் $13 டிரில்லியனைச் சேர்த்துள்ளது. இதற்கு மாறாக, மற்ற நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் சேர்ந்து தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 டிரில்லியன் டாலர்களை மட்டுமே அதிகரித்துள்ளன.


அமெரிக்கப் பொருளாதாரம், அதன் பெரிய அளவு இருந்தபோதிலும், தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்கள், குறிப்பாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற மிகப்பெரிய பொருளாதாரங்கள் பொருளாதார தேக்கத்தை எதிர்கொண்டுள்ளன. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், அமெரிக்கா மற்ற நேட்டோ சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. சராசரியாக, ஒரு அமெரிக்க குடிமகன் மற்ற நேட்டோ நாடுகளின் குடிமக்களை விட இரண்டு மடங்கு செழிப்பாக உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.


அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதாரம், வரி செலுத்த அதிகத் திறன் கொண்ட குடிமக்கள் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், நாட்டின் பாதுகாப்புச் செலவு மற்ற நேட்டோ உறுப்பினர்களை விடக் குறைவாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிக விகிதத்தை பாதுகாப்புக்காகச் செலவிடுவதால், அமெரிக்கா முழுமையாக பாதுகாப்பிற்காக அதிகம் செலவிடுகிறது. இது தனிநபர் பாதுகாப்புச் செலவினங்களை விட மிக அதிகமாகவும் உள்ளது. மற்ற நேட்டோ நாடுகளின் மொத்த எண்ணிக்கையை விட அமெரிக்கா அதிகமாக இல்லாத ஒரே பகுதி இராணுவ வீரர்களின் எண்ணிக்கைதான். இருப்பினும், 32 நாடுகள் கொண்ட குழுவில் உள்ள அனைத்து பணியாளர்களிலும் கிட்டத்தட்ட 40% அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Original Article : GDP: Why US is capable of bullying NATO?. -Udit Misra 


Share:

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தாலும், சில கவலைக்குரிய அம்சங்களும் உள்ளன.

தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட தரவுகளின்படி, சேவைத் துறையில்தான் மிகத் தீவிரமான வளர்ச்சி காணப்படுகிறது.


தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (National Statistics Office (NSO)) வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, இந்தியப் பொருளாதாரம் 2025-26 நிதியாண்டில் ஆரோக்கியமான 7.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் வளர்ச்சி, இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல ஆய்வாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. ஆண்டின் முதல் பாதியில் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள், இரண்டாம் பாதியில் இந்த வேகம் குறையக்கூடும் என்றும், இதன் வளர்ச்சி சுமார் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கூறுகின்றன. இந்த மந்தநிலை, அரசாங்கச் செலவினங்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான குறைவின் காரணமாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரிவிதிப்புகளின் தாக்கம் காரணமாகவும் இது இருக்கலாம்.


தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட தரவுகளின்படி, மிகத் தீவிரமான வளர்ச்சி சேவைத் துறையில்தான் காணப்படுகிறது. இந்தத் துறை 2024-25 நிதியாண்டில் 7.2 சதவீதத்திலிருந்து, 2025-26 நிதியாண்டில் 9.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. தொழில்துறைப் பிரிவில், உற்பத்தித் துறை சிறப்பாகச் செயல்பட்டாலும், கட்டுமானம் மற்றும் பயன்பாட்டுத் துறைகள் மெதுவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் இரண்டும் ஆரோக்கியமான வேகத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு வளர்ச்சி வேகம் அதிகரித்திருந்தாலும், சில கவலைக்குரிய அம்சங்கள் உள்ளன. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) வெறும் 8 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மத்திய பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட 10.1 சதவீதத்தைவிட கணிசமாகக் குறைவாகும். மேலும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இருக்கும். காலப்போக்கில் மெதுவான பெயரளவு வளர்ச்சி விகிதம், அரசாங்கத்தின் கடன் மற்றும் பற்றாக்குறை இயக்கவியலைப் பாதிக்கக்கூடும்.


இருப்பினும், இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு நவம்பர் மாதம் வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அடுத்த மாத இறுதியில், அரசாங்கம் 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் (base year) கொண்டு புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிடும். இந்தத் திருத்தப்பட்ட தொடர் கணக்கீட்டு முறையில் மாற்றங்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவு மூலங்களையும் உள்ளடக்கும். 2024-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடர் பிப்ரவரியில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (Consumer Price Index (CPI)) புதிய தொடர் வெளியிடப்படும். இந்தத் திருத்தப்பட்ட தொடர்கள், மதிப்பீடுகள் குறித்து எழுப்பப்பட்ட சில விமர்சனங்களுக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Original Article : Economy grows faster than expected, but there are points of concern.

Share:

YouTube பதிப்புரிமை மீறல் புகார்களுக்கு எதிராக ஒரு கேரள 'முன்னாள் முஸ்லிம்' மேற்கொள்ளும் போராட்டம் ஏன் இணையவழி கருத்துச் சுதந்திரத்திற்கு முக்கியமானது? -வினீத் பல்லா

 இந்த வழக்கு டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் ஒரு பிளவை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது: விமர்சனங்களை அமைதிப்படுத்த பதிப்புரிமை உரிமைகோரல்களைப் (copyright claims) பயன்படுத்துவது மற்றும் தனிப்பட்ட படைப்பாளர்களுக்கும் YouTube போன்ற 'குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடைத்தரகர்களுக்கும்' இடையிலான அதிகார போராட்டமாகும்.


ஜனவரி 7 அன்று, கேரள உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய நீதிப்பேராணையை (writ petition) ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு, இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும் பேச்சு சுதந்திரத்தைப் (free speech) பாதுகாப்பதையும் கையாளும் விதத்தில் குறிப்பிட்ட  தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் YouTube செயல்பாட்டாளருமான லியாகத் அலி சி., பதிப்புரிமை மீறல் புகார்களால் தனது சேனல் முடக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்ட நிலையில் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, நீதிபதி ஜியாத் ரஹ்மான் ஏ ஏ மத்திய அரசுக்கும் கூகுள் இந்தியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


இந்த வழக்கு, டிஜிட்டல் யுகத்தில் உருவாகிவரும் ஒரு பிளவை எடுத்துக்காட்டுகிறது: விமர்சனங்களை முடக்குவதற்காக பதிப்புரிமை கோரிக்கைகளைப் பயன்படுத்துவது மற்றும் தனிப்பட்ட படைப்பாளிகளுக்கும் யூடியூப் போன்ற "முக்கிய சமூக ஊடக இடைத்தரகர்களுக்கும்" இடையிலான அதிகாரப் போராட்டங்கள் ஆகியவையே அந்தப் பிளவு ஆகும்.


மனுதாரர் யார்?


லியாக்கத் அலி சி என்பவர், இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறிய தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘கேரளாவின் முன்னாள் முஸ்லிம்கள்’ என்ற அமைப்பின் தலைவர் ஆவார். பழமைவாத மத நடைமுறைகளின் தீவிர விமர்சகரான லியாக்கத்தலி, “லியாக்கத்தலி சிஎம்” என்ற YouTube சேனலை நடத்தி வருகிறார். இந்தச் சேனலுக்கு ஏறக்குறைய 1.6 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும், இது 5.58 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


அவரது மனுவின்படி, லியாகத் அலியின் உள்ளடக்கம் "பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையின் கண்ணோட்டத்தில் பழமைவாத மதக் கோட்பாடுகளைப் பற்றிய அறிவைப் பரப்புதல் மற்றும் நியாயமான விமர்சனம்" செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த கடமையை அவர் அரசியலமைப்பின் 51-A(h) பிரிவுடன் தொடர்புபடுத்துகிறார்.


இந்த சட்டப் போராட்டத்தைத் தூண்டியது எது?


இந்த சர்ச்சை 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கியது. லியாகத் அலி "முர்தாத்" (மதத்தை விட்டு விலகியவர் என்று பொருள்) என்ற தலைப்பில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தபிறகு இது நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து, விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு மற்றும் இஸ்லாமிய மத போதகர் எம். எம். அக்பர் உட்பட பல்வேறு மத அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து அவரது சேனல் மீது பல பதிப்புரிமை புகார்கள் தெரிவித்தன .


YouTube கொள்கையின்படி, ஒரு சேனல் 90 நாட்களுக்குள் மூன்று செயலில் உள்ள பதிப்புரிமை மீறல் புகார்களைப் பெற்றால், அது முடக்கப்படும். லியாகத் அலிக்கு 8 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், அவற்றில் ஒன்று திரும்பப் பெறப்பட்டது. அவரது சேனல் ஜனவரி 9, 2026 அன்று முடக்கப்பட உள்ளதாக அந்தத் தளம் அவருக்குத் தெரிவித்தது. அவர் ஜனவரி 1 முதல் தனது சேனலில் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.


சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தில், மதப் போதகர்களின் உரைகளிலிருந்து எடுக்கப்பட்ட குறுகிய காணொளிக் காட்சிகள் அல்லது ‘முன்னோட்டங்கள்’ இடம்பெற்றிருந்தன. லியாகத் அலி இந்தக் காணொளிகளைத் தனது வீடியோக்களில் விமர்சனப் பகுப்பாய்வு மற்றும் விளக்கவுரைகளுக்கான முன்னுரையாகப் பயன்படுத்தினார். இந்தக் காணொளிக் காட்சிகளைத் தான் பயன்படுத்தியது ‘நியாயமான பயன்பாடு’ என்ற கோட்பாட்டின்கீழ் முழுமையாக வருகிறது என்று லியாகத் அலி வாதிடுகிறார்.


'நியாயமான பயன்பாடு'  என்றால் என்ன?


"நியாயமான பயன்பாடு" (fair use) என்பது, பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை, அதன் உரிமையாளரிடம் அனுமதி பெறாமலேயே வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடாகும். YouTube மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ், நியாயமான பயன்பாட்டிற்கான பொதுவான எடுத்துக்காட்டுகளில் வர்ணனை, விமர்சனம், செய்தி அறிக்கை மற்றும் ஆராய்ச்சி ஆகியவை அடங்கும்.


லியாகத் அலி, தான் காணொளிகளின் சில பகுதிகளை, அவற்றில் உள்ள "பிற்போக்குத்தனமான, அறிவியலுக்குப் புறம்பான, அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களை" எடுத்துக்காட்டவும், அவற்றுக்கு புள்ளிவாரியாக மறுப்பு தெரிவிக்கவுமே பயன்படுத்தியதாக வாதிடுகிறார். விமர்சிக்கப்படும் பகுதிகளை பார்வையாளர்களுக்குக் காட்டாமல் விமர்சனம் செய்வது சாத்தியமற்றது என்றும் அவர் வாதிடுகிறார். எனவே, இந்தத் தடைகள் "தீங்கிழைக்கும் நோக்கத்துடனும், நியாயமற்ற முறையிலும், சேனலை மூடும் நோக்கத்துடனும்" விதிக்கப்பட்டவை என்று கூறுகிறார்.


அரசியலமைப்புச் சவால்


இந்த மனு காப்புரிமை பற்றியது மட்டுமல்ல. தளங்களும் டிஜிட்டல் ஊடகங்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வழிநடத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகள் ((Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 (IT Rules)), அரசியலமைப்பைப் பின்பற்றுகின்றனவா என்பதையும் இது கேள்விக்குள்ளாக்குகிறது. லியாகத் அலி, உள்ளடக்கத்தை நியாயமான முறையில் பயன்படுத்தியதாகக் கூறி, பதிப்புரிமை மீறல் எச்சரிக்கைகளுக்கு முறையான பதில்களான 'எதிர் அறிவிப்புகளை' YouTube-ற்கு அனுப்பினார். YouTube அவற்றில் 6 எந்த விளக்கமும் இல்லாமல் நிராகரித்தது. தனது மனுவில், யூடியூப் அதன் பிரம்மாண்டமான பயனர் தளம் காரணமாக தகவல் தொழில்நுட்ப விதிகள் கீழ் ஒரு "முக்கியமான சமூக ஊடக இடைத்தரகர்" என வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அது தனது அதிகாரங்களை "தன்னிச்சையாகவும்" மற்றும் "ஆலோசிக்காமலும்" பயன்படுத்தியதாகவும் லியாகத் அலி வாதிடுகிறார். எந்த விளக்கமும் அளிக்காமல், எதைச் சொல்லலாம் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம், YouTube அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திர உரிமையை (free speech) கட்டுப்படுத்துகிறது என்று அவர் வாதிடுகிறார்.


இந்த மனுவானது தகவல் தொழில்நுட்ப விதிகள் 3(1)(b)(iv) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் சில பகுதிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள், தனியார் சமூக ஊடக நிறுவனங்களுக்கு உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வரம்பற்ற, தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகின்றன—இது நீதிபதிகளைப் போல செயல்படுவதற்குச் சமமானது என்றும், தனியார் நிறுவனங்கள் தானியங்கி கருவிகள் அல்லது இரகசியக் கொள்கைகளைப் பயன்படுத்தி குடிமக்களை அமைதியாக்கக் கூடாது என்றும், இது தவறுகளை விமர்சிக்கும் மற்றும் பொது விவாதங்களைத் தூண்டும் உள்ளடக்கத்திற்கு முற்றிலும் தவறானது என்ற வாதத்தை முன்வைத்தார்


இது ஏன் முக்கியமானது?


இந்த வழக்கு இந்தியச் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய தெளிவற்ற தன்மையை (grey area) எடுத்துக்காட்டுகிறது. 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை அதிக பொறுப்பேற்க வைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால், சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த விதிகள் தளங்களைத் தேவையற்ற முறையில் உள்ளடக்கங்களை தணிக்கை செய்யத் தூண்டுகின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


அரசியலமைப்பின் 19(1)(a) மற்றும் 21 ஆகிய பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இணையவழி சுதந்திரம் (online freedom) உள்ளது என்று 2019-ல் உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பை இந்த மனு மேற்கோள் காட்டுகிறது.


சமூக ஊடகத் தணிக்கை அரசியலமைப்பின்படி இருப்பதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கூறுமாறு லியாகத் அலி நீதிமன்றத்தை கோரியுள்ளார். பதிப்புரிமை கோருபவர்களின் வாதம் செல்லுபடியாகுமா என்பதை தாங்களாகவே தீர்மானிப்பதற்குப் பதிலாக, பதிப்புரிமை கோருபவர்களுக்கு எதிர் அறிவிப்புகளை தளங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.


இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால், YouTube போன்ற தளங்களுக்கு வழங்கப்படும் "பாதுகாப்பான அரண்", படைப்பாளிகளின் நியாயமான பயன்பாட்டு உரிமைகளை மீற அனுமதிக்கின்றனவா என்பதையும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப விதிகள் டிஜிட்டல் கருத்துச் சுதந்திரத்திற்குப் போதுமான பாதுகாப்புகளை வழங்குகின்றனவா என்பதையும் இந்த வழக்கு இனி ஆராயும்.


Original Article : Why the fight of a Kerala ‘Ex-Muslim’ against YouTube copyright strikes matters for online free speech?. -Vineet Bhalla

Share:

நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


TERES அல்லது தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட தீர்வு (Technology Enabled ReSolution) எனப்படும் ஒரு அமைப்பு, அரசியலமைப்பு அமர்வு விசாரணைகளின்போது வாய்மொழி வாதங்களை நிகழ்நேரத்தில் உரையாக மாற்றுவதற்காக இப்போது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், வேகமாக நடைபெறும் விசாரணைகளைத் துல்லியமாகப் பதிவு செய்வதில் நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு முக்கியத் தடைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.


இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட தீர்வு (TERES), தற்போது துபாய், அபுதாபி மற்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் உட்பட, நாட்டிற்கு வெளியே உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மற்றொரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பான Adalat செயற்கை நுண்ணறிவு (Adalat AI), ஒன்பது மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஐந்து மாநிலங்களில் இதன் முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில், Adalat செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளில் மட்டுமின்றி, நீதிமன்ற அறைகள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.


TERES மென்பொருளானது முக்கியமாக நீதிமன்றத்தில் நேரலையாகக் காட்சிப்படுத்துவதற்கும், வாதங்களின் எழுத்துப்பூர்வப் பிரதிகளை நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தீர்ப்புகளைத் தயாரிப்பதில் அவர்கள் உதவுவதா இல்லையா என்பது ஒவ்வொரு நீதிபதியின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது என்று நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.


உச்சநீதிமன்றம், ஆவணங்களைத் தாக்கல் செய்யும் நிலையிலேயே விடுபட்ட ஆவணங்கள் அல்லது தவறான இணைப்புகளைத் தானாகவே சுட்டிக்காட்டும் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் அமைப்புகளையும் சோதித்து வருகிறது. மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும், வழக்குகளை நிர்வகிப்பதற்கான நீதிமன்ற செயல்முறைத் தொகுதியைக் கொண்ட ஞானா செயற்கை நுண்ணறிவு (Jhana (AI)) போன்ற பிற வரையறுக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.


அடாலத் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நீதிபதிகளால் தங்களின் பணிச்சுமையைக் கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு வெவ்வேறு நிலைகளில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை ஒரே சாளரத்தில் (single window) கொண்டு வருவதாகவும், இதன்மூலம் கோப்புகளைக் கண்டுபிடிப்பதற்கும், வழக்குகளுக்கு இடையேயான சூழலைப் புரிந்துகொள்வதற்கும் செலவிடப்படும் நேரம் குறைவதாகவும் சக்சேனா கூறுகிறார். இந்த அமைப்பு நீதிமன்ற மொழியைப் புரிந்துகொள்ளும் எழுதுமுறை (Transcription) வசதியைக் கொண்டுள்ளது. இது வழக்கமான செயற்கை நுண்ணறிவு கருவிகளை விட இதை மிகவும் மேம்பட்டதாக ஆக்குகிறது.


 கேரளாவில், பல்வேறு நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், உயர்நீதிமன்றம் இதை முதன்மையாக வழக்குப் பதிவு செய்யும் கட்டத்தில், வக்காலத்துகள், மனுக்கள் மற்றும் இணைப்புகளை ஆய்வு செய்யப் பயன்படுத்துகிறது. இந்த செயல்முறை மூலம் 46,000 வழக்குகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் மனிதத் தலையீடு இல்லாமல், தவறுகளைத் திருத்துவதில் ஏற்படும் நேரவிரயம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.


நீதிமன்றம் தனது சொந்த குரலை உரையாக மாற்றும் கருவிகளையும் (voice-to-text tools) உருவாக்கியுள்ளது. இவை, நீதிபதிகள் பெரிய வழக்குக் கோப்புகள் மற்றும் சுருக்கங்களைக் கையாள உதவும் அமைப்புகளுடன் சேர்த்து, மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.


 வழக்கு நிலவரத்தை அறிந்துகொள்ள உதவும் வாட்ஸ்அப் அடிப்படையிலான இடைமுகம் குறித்த மற்றொரு முன்மொழிவும் உருவாக்கப்பட்டு வருகிறது.


 நம்பகத்தன்மையற்ற இணைய இணைப்பு மற்றும் மின்வெட்டு போன்ற உள்கட்டமைப்புத் தடைகளையும் Adalat செயற்கை நுண்ணறிவு (Adalat AI) கருத்தில் கொண்டுள்ளது என்றும், எந்தக் குறியீடும் எழுதப்படுவதற்கு முன்பு முன்மாதிரிகள் நீதிபதிகளுக்குக் காட்டப்பட்டு, அவர்களின் கருத்துகள் பெறப்பட்டன என்றும் பட்டாச்சார்யா கூறுகிறார். அதேநேரத்தில், நீதிமன்ற ஊழியர்களுக்குப் பதிலாக அல்லாமல், அவர்களுக்கு உதவுவதே தங்கள் பங்கு என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாக சக்சேனா கூறுகிறார்.


உச்சநீதிமன்றம் இப்போது உச்சநீதிமன்ற விதிக் அனுவாத் மென்பொருள் (Supreme Court Vidhik Anuvaad Software (SUVAS)) என்ற மொழிபெயர்ப்புத் தளத்தையும் பயன்படுத்துகிறது. இது தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 28 நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தின் 83,783 தீர்ப்புகள் 18 வட்டார மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


இந்திய நீதித்துறை, செயற்கை நுண்ணறிவை தனது மூன்றாவது முக்கிய உதவித் துறையாகப் பயன்படுத்துகிறது. SUPACE மற்றும் LegRAA போன்ற கருவிகள், அதிக அளவிலான தீர்ப்புகளை நகல் செய்து, உண்மைகளை தொகுத்து, சட்டச் சிக்கல்களைக் கண்டறிந்து, தொடர்புடைய முன்னுதாரணங்களை பட்டியலிடுகின்றன.


விசாரணைகளின்போது சட்ட நூல்களுக்கான நீதித்துறை அணுகலை மேம்படுத்துவதற்காக Agami வடிவமைத்த ஒரு கருவி JIVA ஆகும். மேலும், இது மின்-அரசிதழ் வெளியீடுகள் மற்றும் திருத்தங்களைக் கண்காணிப்பதற்கும், நம்பகமான தரவுத் தொகுப்புகளை உருவாக்கும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது.


ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தங்களை கைமுறையாக மதிப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய உரிய பயிற்சிகளில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரிய ஆவணக் குவியல்களை வேகமாக ஸ்கேன் செய்கின்றன. அவை முக்கிய உட்பிரிவுகளை முன்னிலைப்படுத்துகின்றன அல்லது மறைந்து போன பகுதிகளைக் கண்டுபிடிக்கின்றன. அந்தக் கருவிக்குத் தெளிவற்றநிலை ஏற்படும்போது, ​​தெளிவின்மையைத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று குப்தா கூறுகிறார்.


— சட்ட நிறுவனங்கள் தொடர்புடைய முந்தைய வழக்குகளை விரைவாகக் கண்டறியவும், அவற்றில் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மேற்கோள் காட்டப்படக்கூடாது என்பதை அறியவும் CaseMine போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றன. Legora உட்பட மற்ற கருவிகள், MS Word-ல் நேரடியாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஆவணங்களைத் தயாரிக்கவும் திருத்தவும் அனுமதிக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா?


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது கணினி அறிவியல் துறையைக் குறிக்கிறது. இது மனிதர்களைப் போன்ற ஒரு சிக்கலான அமைப்பைத் தீர்க்க கணினி அமைப்புகளை சிந்திக்கவும், பகுத்தறிவு செய்யவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் முக்கிய நோக்கமாக வைத்துள்ளது.


'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல்லை McCarthy உருவாக்கினார். உண்மையான நுண்ணறிவை அடைவதே இலக்கு என்பதால், 'செயற்கை' என்ற பெயர் மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதை பின்னர் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், "அதற்கு நான் ஏதேனும் ஒரு பெயர் வைத்திருக்க வேண்டியிருந்தது. அதனால் அதை 'செயற்கை நுண்ணறிவு' என்று அழைத்தேன்," என்று Melanie Mitchell தனது '‘Artificial Intelligence: A Guide for Thinking Humans’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


— மனிதர்கள் கற்பதைப் போலவும், அறிவுறுத்தல்கள் இல்லாமல் தானாகவே பணிகளைச் செய்யவும் கணினி அமைப்புகளை இயக்குவதற்காக இயந்திர கற்றல் (Machine Learning - ML) பயன்படுத்தப்படுகிறது.இயந்திர கற்றல், கணினிகளைத் தரவுகளின் மூலம் பயிற்றுவிப்பதன் (training - இந்தச் சொல் அடுத்தடுத்த விளக்கங்களில் விளக்கப்படும்) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அவை புதிய தகவல்கள் குறித்து கணிப்புகளை (predictions) செய்ய முடியும்.


Original Article : What is the significance of technology in the judiciary? -Khushboo Kumari

Share:

தேசிய கலாச்சார நிதியம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


 கலாச்சார அமைச்சகம் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களை பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், நாடு முழுவதிலுமிருந்து பாரம்பரிய பாதுகாப்பில் அனுபவமுள்ள 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் அதன் முன்மொழிவு கோரிக்கைக்கு (Request for Proposal (RFP)) விண்ணப்பித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தெரியவந்துள்ளது.


ஜனவரி 12-ஆம் தேதி முன்மொழிவு கோரிக்கை முடிவடைந்ததும், விண்ணப்பங்களைச் சரிபார்த்து, பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களைப் பட்டியலிடுவதற்காக அமைச்சகம் ஒரு உள்நிலைக் குழுவை அமைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த செயல்முறைக்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தனியார் நன்கொடையாளர்கள் இந்த நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.


 பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களில், இந்திய தொழிலியல்த்துறை (ASI), மாநில தொழிலியல் துறைகள், மத்திய பொதுப்பணித் துறை (Central Public Works Department (CPWD)) அல்லது மாநில பொதுப்பணித்துறை ஆகியவற்றின்கீழ் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதில் அல்லது பாதுகாப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் தேசிய கலாச்சார நிதிக்கு (National Culture Fund (NCF)) இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்கும் நன்கொடை நிறுவனத்திற்கு, தங்களுக்கு விருப்பமான பாரம்பரியப் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர்.


— நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், பணிகள் நன்கொடையாளர் நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், திறமையான நிபுணர்களைக் கொண்ட ஒரு தேசியக் குழுவை உருவாக்க உதவும் என்று தெரிவித்தனர்.


அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report (DPR)) செயல்படுத்துவது, பாரம்பரியப் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய தொல்லியல் துறை/சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின்கீழ், திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையால் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், அந்தப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது உறுதி செய்யப்படும்.


முன்னதாக, அரசாங்கத்தின் ‘ஒரு பாரம்பரியச் சின்னங்களைத் தத்தெடுப்போம்’ (Adopt a Heritage) திட்டம், நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் நினைவுச்சின்னங்களில் உள்ள நுழைவுச்சீட்டு சாளரங்கள், கழிப்பறைகள், நுழைவாயில்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த அனுமதித்தது. இருந்தபோதிலும், முதல்முறையாக தனியார் நன்கொடையாளர்கள் இப்போது நினைவுச்சின்னங்களில் நடைபெறும் உண்மையான பாதுகாப்புப் பணிகளுக்கு நிதியளிக்கவும், அதில் பங்கேற்கவும் முடியும்.


உங்களுக்குத் தெரியுமா?


— தேசிய கலாச்சார நிதியம் 1996-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் ரூ.20 கோடி ஆரம்ப நிதியுடன் உருவாக்கப்பட்டது. அடிப்படை நிதியைத் தக்கவைத்துக்கொண்டு, நினைவுச்சின்னங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வட்டித் தொகையைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. அன்று முதல், பெருநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் 140 கோடி ரூபாய் தேசிய கலாச்சார நிதியத்திற்கு வந்துள்ளது. இந்த நிதி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் 100 பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.


 தேசிய கலாச்சார நிதியம் ஒரு மன்றம் மற்றும் ஒரு செயற்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரின் தலைமையில் இயங்கும் இந்த மன்றத்தில், நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் அறக்கட்டளைகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். செயற்குழுவிற்கு (Executive Committee) கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்குகிறார்.


  தேசிய கலாச்சார நிதியத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகள் 100% வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை என்பதால், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) மூலம் பெருநிறுவனங்கள் அதனுடன் கூட்டு சேர ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.


Original Article : What is the National Culture Fund? -Khushboo Kumari

Share:

அமெரிக்கா பல காலநிலை அமைப்புகளிலிருந்து வெளியேறுவது இந்தியாவுக்கு நிவாரணத்தையும், சவால்களையும் ஒருசேர ஏற்படுத்தலாம். -அமிதாப் சின்ஹா

த்திற்கான கட்டமைப்பு மாநாடு (UN Framework Convention on Climate Change (UNFCCC)) மற்றும் 60-க்கும் மேற்பட்ட பிற சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. இவை இனி அமெரிக்க நலன்களுக்குப் பயன்படவில்லை என்று அந்நாடு கூறியது. இந்தப் பட்டியலில், காலநிலை தொடர்பான பல அமைப்புகளான காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)), சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Alliance (ISA)) மற்றும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (nternational Renewable Energy Agency (IRENA)) ஆகியவை அடங்கும்.


கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக் காலத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இந்த முடிவானது, ஒரு வருட அறிவிப்புக் காலம் முடிந்த பிறகு, ஜனவரி மாதம் 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முழுவதும், ட்ரம்ப் நிர்வாகம் காலநிலை ஆராய்ச்சி தொடர்பான தேசிய நிறுவனங்களுக்கான நிதி மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது. 


வியாழக்கிழமை எடுக்கப்பட்ட முடிவு, சர்வதேச காலநிலை கட்டமைப்பிலிருந்து   அமெரிக்கா அதன் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பதைக் குறிக்கிறது. மேலும் தற்போதைய பலதரப்பு அமைப்பு காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எவ்வளவு திறம்பட செயல்படும் என்பது குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.



காலநிலை மாற்றத்தின் மீதான விருப்பு வெறுப்புப் பிணைப்பு


அமெரிக்காவின் சர்வதேச காலநிலை அமைப்பின் மீதான அதிருப்தி புதிதல்ல. காலநிலை மாற்றம் ஒரு பிரச்சனை என்பதை ஏற்றுக்கொண்ட மற்றும் உலகளாவிய நடவடிக்கைக்கான அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை அமைத்த  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு (UNFCCC) இறுதி செய்வதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்தது. இருப்பினும், நாடுகளுக்கு குறிப்பிட்ட உமிழ்வு குறைப்பு இலக்குகளை நிர்ணயித்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின்கீழ் உள்ள ஒப்பந்தமான, 1997-ஆம் ஆண்டு கியோட்டோ (Kyoto) நெறிமுறையில் அமெரிக்கா ஒருபோதும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பின்பு, கியோட்டோ நெறிமுறைக்கு (Kyoto Protocol) மாற்றாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சிகளை முன்னெடுத்தது, அதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) உருவானது. அப்படியிருந்தும், பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் அதன் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இவை கட்டாய கடமைகள் என்ற போதிலும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கோ அல்லது நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கோ அமெரிக்கா மிகவும் குறைந்த அளவிலான முயற்சியை மட்டுமே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகளை அமெரிக்கா ஒருபோதும் மறுக்கவில்லை. அது உலகளாவிய காலநிலை விவாதங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, வலுவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது காலநிலை அறிவியல் மற்றும் தூய்மையான தொழில்நுட்ப மேம்பாட்டில் பெரும் முதலீடு செய்தது, மேலும் நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் பசுமை முதலீடுகளை ஊக்குவித்தது. முன்னேற்றம் மெதுவாக இருந்தபோதிலும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.


இதற்கு மாறாக, டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக காலநிலை மாற்றத்தை மறுப்பவர் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான உலகளாவிய முயற்சிகளை அடிக்கடி கேலி செய்பவர் ஆவார். அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில், முன்னதாகச் செய்யப்பட்ட முன்னேற்றத்தைப் பலவீனப்படுத்தும் தெளிவான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. உதாரணமாக, காலநிலை ஆராய்ச்சிக்கான நிதியைக் குறைத்தது கடுமையான நீண்டகால விளைவுகளை முழு உலகிற்கும் ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் காலநிலைத் தரவுகளைச் சேகரித்து கண்காணிப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


பின்விளைவு


ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டிலிருந்தும் (UNFCCC) மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் அமெரிக்கா விலகிய முடிவு முழுமையாக எதிர்பார்க்கப்படாவிட்டாலும், அது ஆச்சரியமளிக்கவில்லை. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதும், காலநிலை ஆராய்ச்சிக்கான நிதியைக் குறைத்ததும் ஏற்கெனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதன் விளைவாக, 2030-ஆம் ஆண்டுக்கான கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை உலகம் தவறவிட நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்பும்கூட, அமெரிக்கா இந்தக் கார்பன் வெளியேற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


குறுகியகாலத்தில், அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவுகள் உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவாகவே இருக்கலாம். ஆனால், அதன் நீண்டகால விளைவுகள், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை அடுத்து பதவியேற்கும் அதிபரின் நிலைப்பாட்டைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


ஆனால், உலகளாவிய காலநிலை கட்டமைப்பிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்வதன் மூலம், அமெரிக்கா தனது சொந்த நீண்டகால நலன்களைத் தானே பாதித்துக் கொள்ளலாம். இந்தத் துறையில் அதன் முக்கிய போட்டியாளரான சீனாவிடம் தலைமைத்துவத்தைக் கைவிட நேரிடும் என்ற அபாயம் உள்ளது. பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழிகளுக்கு உறுதியளித்துள்ளன. சூரிய மற்றும் காற்றின் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் எரிசக்தி அணுகலை மட்டுமல்ல, எரிசக்தி பாதுகாப்பையும் வழங்குகின்றன. அவை மிகவும் மலிவானதாகவும் மாறிவிட்டன. உலகின் பல பகுதிகளுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இப்போது பொருளாதாரரீதியாகவும் ராஜதந்திரரீதியாகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.


வெனிசுலா அல்லது பிற நடவடிக்கைகள் மூலம் எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த உலகளாவிய போக்குக்கு எதிராகச் செயல்பட டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் எரிசக்தி மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அதை மாற்ற வாய்ப்பில்லை என்கின்றனர். 


இந்த நிலைமை சீனாவிற்கு அதன் பலத்தை அதிகரிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவுபடுத்துவதற்கு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவை, மேலும் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் சீனா முதன்மை வகிக்கிறது. இந்தத் துறையிலிருந்து விலகுவதன் மூலம், அமெரிக்கா அதன் பொருளாதார நலன்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும் அபாயத்தை எதிர்கொள்கிறது.


இந்தியா மீதான தாக்கம்


இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் முடிவுகள் விரைவில் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் (decarbonise) குறைக்கவேண்டிய அழுத்தத்தைக் குறைக்கலாம். இருப்பினும், இது தூய்மையான தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் திட்டங்களையும் பாதிக்கக்கூடும். டிரம்ப் மீண்டும் அதிபராவதற்கு முன்பு, பருவநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விஷயங்களில் அமெரிக்காவுடன் இந்தியா நீண்டகால இராஜதந்திரக் கூட்டாண்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்கா பல எரிசக்தி துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது. இந்தக் ஒத்துழைப்பு இப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா தனது எரிசக்தி மாற்றத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கலாம் என்கின்றனர். 


அமெரிக்கா விலகிக்கொண்ட ஒரு அமைப்பு சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி (International Solar Alliance (ISA)) ஆகும். இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த COP21 காலநிலை மாநாட்டின்போது சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை அமைக்க உதவின. அமெரிக்கா 2021-ஆம் ஆண்டில்தான் அதன் 101-வது உறுப்பினராக சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியில் இணைந்தது. அது சர்வதேச சூரிய சக்திக் கூட்டணிக்கு எந்தவொரு நிதி உதவியையும் வழங்கவில்லை. 2025-ஆம் ஆண்டின் அதன் பொதுச் சபைக் கூட்டத்தில், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஆண்டு உறுப்பினர் கட்டணமாக USD 50,000 என்றும், வளரும் நாடுகளுக்கு USD 25,000 என்றும் அறிமுகப்படுத்த சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி முடிவு செய்தது, ஆனால் இந்த முடிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Original Article : US exit from several climate bodies can mean both relief, challenges for India. -Amitabh Sinha

Share:

ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை 2026 -குஷ்பூ குமாரி

 சமீபத்திய ஐ.நா. அறிக்கையின்படி, நாடுகள் 'அமைதிக்கான முதலீடுகளைவிட, போர்க் கருவிகளுக்கான செலவினங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றன'.


ஏன் செய்திகளில்?


2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் "உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2026" என்ற அறிக்கை, 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.7% வளர்ச்சி அடையும் என்று கூறுகிறது. இது 2025-ஆம் ஆண்டிற்குக் கணிக்கப்பட்ட 2.8% வளர்ச்சியைவிட சற்றுக் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், முன்னர் கணிக்கப்பட்டதைவிட 40 அடிப்படைப் புள்ளிகள் அதிகம் என்கின்றனர். மேலும், அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் புதிய வர்த்தக நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், உலகப் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாகவே நீடிக்கின்றன என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 


ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையினால் (Department of Economic and Social Affairs (DESA)), வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டுடன் (United Nations Conference on Trade and Development (UNCTAD)) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து மண்டல ஆணையங்களுடன்  இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. ஐ.நா. அறிக்கையின்படி, கடந்த 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய ராணுவச் செலவு 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இது குறைந்தது 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக அதிகமான வருடாந்திர உயர்வாகக் கருதப்படுகிறது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் உலகின் மிகப்பெரிய தொகையை ராணுவத்திற்கு  செலவு செய்யும் முதல் 10 நாடுகள்தான் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 10 நாடுகளின் மொத்தச் செலவு, உலகளாவிய மொத்தச் செலவில் ஏறக்குறைய 75 சதவிகிதமாகும் என்கின்றனர்.


2. பாதுகாப்புச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான அதிகரிப்பு, மனித வளம், உள்கட்டமைப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி ஆதரவு ஆகியவற்றில் செய்யப்படும் நீண்டகால முதலீடுகளிலிருந்து நிதியை நாடுகள் அதிகளவில் ராணுவ செலவினங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது.


3. அந்த அறிக்கையின்படி, 2027-ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி சற்று உயர்ந்து 2.9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வளர்ச்சி 2010 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் காணப்பட்ட சராசரியான 3.2 சதவிகித வளர்ச்சியைவிட குறைவாகவே இருக்கும் என்கின்றனர். குறைந்த முதலீடு, அதிக கடன் மற்றும் பல நாடுகளில் உற்பத்தி திறனைக் குறைக்கும் வரையறுக்கப்பட்ட நிதிக்கட்டமைப்பு போன்ற காரணங்களால், உலகப் பொருளாதாரம் கோவிட் பெருந்தொற்றுக்கு  முன்னர் இருந்ததைவிட மெதுவான வளர்ச்சிப் பாதைக்குப் போகக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் திறனை மேம்படுத்தினாலும், அதன் பலன்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு வேகமாகப் பகிரப்படும், எல்லாத் தரப்பு மக்களுக்குமான அணுகல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் இன்னும் நிச்சயமற்றத் தன்மை  உள்ளதாகக் கூறப்படுகிறது.


4. ஐக்கிய நாடுகள் சபையானது 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை 20 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 6.6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி சற்று அதிகரித்து 6.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது. 2025-ஆம் ஆண்டுக்கு, இந்தியாவின் வளர்ச்சியை ஐ.நா. 7.4 சதவிகிதமாக மதிப்பிட்டுள்ளது. இது, மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் முடிவடையும் நிதியாண்டுக்காக இந்திய அரசு வெளியிட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீட்டிற்கு சமமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


5. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான நுகர்வோர் தேவையும் அதிக பொது முதலீடும்  ஆதரவளிக்கின்றன. இந்த காரணிகள், அமெரிக்காவின் வரிகளின் தாக்கத்தை பெருமளவு சமன் செய்யும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய வரிச் சீர்திருத்தங்கள்  மற்றும் எளிமையான பணவியல் கொள்கை (monetary policy) ஆகியவை குறுகியகால ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.


6. இருப்பினும், அமெரிக்காவின் தற்போதைய அதிக வரி விகிதங்கள் தொடர்ந்தால், 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறன் பாதிக்கப்படலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது. ஏனெனில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்கின்றனர்.


7. பல வளரும் நாடுகள் அதிக கடன், வரையறுக்கப்பட்ட அரசு செலவின திறன் மற்றும் மெதுவான வளர்ச்சியை எதிர்கொள்வதாக ஐ.நா. குறிப்பிட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) நோக்கிய முன்னேற்றம் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக எச்சரித்தார். மேலும், உலகளாவிய ஒற்றுமையை புதுப்பிக்கவும், கூட்டு நடவடிக்கையை வலுப்படுத்தவும் 2025-ஆம் ஆண்டில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


8. இந்த நடவடிக்கைகள் செவில்லா உறுதிமொழி (Sevilla Commitment), வேலைவாய்ப்பு, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்திய உலக சமூக உச்சி மாநாடு (World Social Summit), மற்றும் நிதி, தகவமைப்பு, மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கான ஆதரவு உட்பட வலுவான உலகளாவிய காலநிலைக் கூட்டுறவில் கவனம் செலுத்திய 30-வது காலநிலை மாநாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.


செவில்லா உறுதிமொழி


1. வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கான 4-வது சர்வதேச மாநாடு (FfD4) ஜூன் மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 3-ஆம் தேதி  வரை ஸ்பெயினின் செவில் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போது, வளரும் நாடுகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (SDGs) ஆண்டுதோறும் தேவைப்படும் 4 டிரில்லியன் டாலர் நிதியளிப்பு இடைவெளியைக் கையாள்வதற்காக, 'செவில்லா உறுதிமொழி' (Sevilla Commitment) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான அமெரிக்கா, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


2. வளர்ச்சிக்கான நிதியுதவி (Financing for Development (FfD)) என்பது நிதி ஓட்டங்கள் மற்றும் கொள்கைகளை பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளுடன் சீரமைப்பதற்கான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். 1997 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை (Agenda for Development) ஏற்றுக்கொண்டது, அது வளர்ச்சிக்கான நிதியுதவி குறித்து ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த பரிந்துரைத்தது.


3. பல நாடுகள் அதிகரித்துவரும் கடன், குறைந்து வரும் முதலீடு, குறைந்துவரும் சர்வதேச உதவி, மற்றும் ஏற்றப்படும் வர்த்தகத் தடைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றன. இந்த மாநாடு, ஆண்டுதோறும் உள்ள சுமார் 4 ட்ரில்லியன் டாலர் நிதியுதவி இடைவெளியைக் குறைக்க, வளர்ச்சியை ஆதரிக்க, மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்க, மற்றும் தற்போது காலதாமதமாகிவரும் ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதற்கான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.


4. 2015-ஆம் ஆண்டு அடிஸ் அபாபா செயல் திட்டத்தின் (Addis Ababa Action Agenda) அடிப்படையில், செவில்லா உறுதிமொழி (Sevilla Commitment) நிலையான வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2030-ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சித் திட்டம் (2030 Agenda for Sustainable Development) மற்றும் அதன் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள், அத்துடன் தொடர்புடைய அனைத்து கொள்கைகளையும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


5. நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDG) காலக்கெடு நெருங்கிவரும் வேளையில், செவில்லா உறுதிமொழியானது (Sevilla Commitment) நிலையான வளர்ச்சிக்கான பெரிய அளவிலான முதலீட்டை அதிகரித்தல், கடன் மற்றும் மேம்பாட்டு நெருக்கடியைச் சமாளித்தல், மற்றும் சர்வதேச நிதி அமைப்பைச் சீர்திருத்துதல் போன்ற மூன்று முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது.

Original Article : UN’s World Economic Situation and Prospects Report 2026 -Khushboo Kumari

Share: