நடைமுறையில் உள்ள எல்லைக் கோடு (The Line of Actual Control (LAC)) ரோந்து ஒப்பந்தம் இந்திய இராஜதந்திரத்தின் ஒரு சாதனை. ஆனால், இது வரையறுக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அக்டோபர் 21 அன்று, இந்தியாவும் சீனாவும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக ரோந்து ஏற்பாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், இந்தப் பகுதிகளில் 2020-ஆம் ஆண்டு தொடர்ந்து எழுந்த சீன அத்துமீறல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டார். இரு தரப்பினரும் ரோந்து செல்வதை நிறுத்தியுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்திலும் விலகல் நடைபெறுமா ? அல்லது 2020-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துமா ? என்பது முக்கிய கேள்வி.
சில மணிநேரங்களுக்குப் பிறகு பேசிய மிஸ்ரி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருவரும், இந்தப் பகுதிகள் குறித்த நேரடியான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயங்கினர். 2020-ஆம் ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு என்று அவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர். இந்த தயக்கம் பல காரணங்களால் ஏற்படலாம்.
அவர்கள் இந்த கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கத்திற்காக விலக்கி வைத்து இருக்கலாம். ரஷ்யாவின் கசானில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகு அவர் இன்னும் கணிசமான அறிக்கையை வெளியிடலாம். இருப்பினும், அவர் பேசுவதற்கு வெளியுறவு அமைச்சகம் ஏன் இன்னும் சில நாட்கள் காத்திருக்கவில்லை? மற்றொரு சாத்தியம் என்னவென்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், இது எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களாக இருக்கலாம்.
மற்றொரு காரணம் உண்மையான முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். செப்டம்பரில், ஜெய்சங்கர், "தோராயமாக, 75 சதவிகிதம் விலகல் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன" என்று கூறினார். அப்போது சீனர்கள், "இரு நாடுகளும் மேற்கத்திய நான்கு பகுதிகளில் விலகலை உணர்ந்துள்ளன" என்று குறிப்பிட்டனர். இது டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் உள்ள பழைய தகராறுகள், இருநாடுகளுக்கு இடையே உள்ள முட்டுக்கட்டைகள் உள்ளது போலவே தொடர வழிவகுக்கும். இருப்பினும், எஞ்சியிருக்கும் "விலகல் பிரச்சனைகள்" ஊகத்திற்கு வழிவகுத்தது. மிஸ்ரியின் அறிவிப்பில் இருந்து வரும் செய்திகள் அதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ரோந்து ஒப்பந்தம் இந்திய இராஜதந்திரத்திற்கு ஒரு வெற்றி. ஆனால், அது மட்டுப்படுத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா முன்னேறவில்லை. மாறாக, சீனாவின் அத்துமீறல்களைத் தண்டிக்காமல் அல்லது எல்லைப் பிரச்சினையைத் தீர்க்காமல் அவற்றை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகிறது. பிரதமரின் "வெற்றிகரமான" பிரிக்ஸ் பயணத்திற்கான முன்னேற்றத்தின் தோற்றத்தை உருவாக்குவதே இலக்காகத் தெரிகிறது. இது மற்ற சிக்கல்களையும் தாக்கங்களையும் எழுப்புகிறது.
முதலாவதாக, இந்தியாவின் பிரிக்ஸ் அமைப்பில் அதன் நிலைப்பாடு உணர்வுபூர்வமானது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் சீனாவுடனான அதன் "வரம்பு இல்லாத கூட்டாண்மை" (“no-limits partnership”) ஆகியவை குறிப்பிடத்தக்க மேற்கத்திய எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன. இது இந்தியாவையும் பாதிக்கிறது. அரசாங்கத் தலைவரின் ஈடுபாட்டை விளக்குவதற்கு, இந்தியாவிற்கு "இராஜதந்திர சுயாட்சி" (“strategic autonomy”) தேவை.
இரண்டாவதாக, சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை பராமரிப்பது குறித்து இந்திய அரசாங்கத்திற்குள் பிரச்சனைகள் உள்ளன. சீனாவிலிருந்து உற்பத்தி விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை இந்தியா நம்பியுள்ளது. நடைமுறையில் உள்ள எல்லைக் கோடு (The Line of Actual Control (LAC)) ஒப்பந்தம் சீனாவுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை முன்னேற்றுவதற்கான வழியை வழங்குகிறது.
மேலும், ரோந்து ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது ராணுவம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத் தலைவர்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று சிலர் வாதிடலாம். இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு நிலைகளை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தல் (theaterisation) மற்றும் உலகளாவிய இராஜதந்திர ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இராணுவத்திற்கு, மூத்த இராணுவ அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொள்ளாதது அசாதாரணமானது.
2020-ஆம் ஆண்டு சீன அத்துமீறல்களுக்குப் பிறகு, இராணுவம் எந்த வகையிலும் பதிலளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2020-ஆம் ஆண்டில் கைலாஷ் மலைத்தொடரைக் கைப்பற்றியது மற்றும் ஆக்கிரமித்தது மட்டுமே விதிவிலக்கு. அது நடைமுறையில் உள்ள எல்லைக் கோடு (The Line of Actual Control (LAC)) வழியாக கட்டமைக்கப்பட்டிருந்தாலும், ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதில் இராணுவத்தின் முக்கிய பங்கு இராஜதந்திர பணிகளால் வரையறுக்கப்பட்டது.
ஒருவேளை இராணுவம் அல்லது அரசாங்கம் அல்லது இரண்டும் இதே போன்ற பதிலை அதிகரிக்க முடிவு செய்திருக்கலாம். இந்தியா மட்டும் ஏன் விரிவாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. சீனாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பல திட்டங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றை செயல்படுத்த ராணுவம் தயாராக இல்லை. எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற படிப்படியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அரசியல் தலைமை விரும்பியிருக்கலாம். இது தற்போதுள்ள இடைவெளிகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் தூண்டுவதற்கும் தேவைப்படுகின்றன. இருப்பினும், இந்த விவாதங்கள் பகிரங்கமாக நடக்கவில்லை.
2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏதேனும் "முன்னோக்கி நகர்வு" (“forward movement”) நடந்திருந்தால், அது 1962-ஆம் ஆண்டைப் போலவே, கிழக்கு லடாக்கில் நடந்த நிகழ்வுகள், இந்தியாவின் நலன்களுக்கு சீனா முன்வைக்கக்கூடிய நீண்டகால சவாலை ஒன்று அல்லது இரண்டு தலைமுறை இந்தியர்களுக்கு உணர்த்தி இருக்கும்.
2020-ஆம் ஆண்டு நிகழ்வுகளிலிருந்து சிறிது தூரம் விலகியதன் காரணமாக, இந்தியர்கள் இப்போது அதிக கேள்விகளைக் கேட்கலாம். சீனா ஏன் அப்படி நடந்து கொண்டது? அது அடுத்து என்ன செய்யக்கூடும்? இந்தக் கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் இந்திய நிபுணத்துவம் ஏன் இல்லை? நிபுணத்துவம் இருந்தால், அது ஏன் அதிக அங்கீகாரம் மற்றும் தெரிவு நிலையைப் பெறவில்லை? 2020-ஆம் ஆண்டு நிகழ்வுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய கேள்விகளும் சமமாக முக்கியமானவை. சீனாவின் நகர்வு குறித்த உளவுத்துறை குறைபாட்டுக்கு இந்தியத் தரப்பில் என்ன குறைபாடுகள் காரணமாக இருந்தன? ஏன் பொதுப் பொறுப்புக்கூறல் இல்லை? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காவிட்டால், சீனாவுடனான அடுத்த எல்லை நெருக்கடிக்கு இந்தியா தயாராகாமல் இருக்கும்.
கட்டுரையாளர் டெல்லி என்.சி.ஆரில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் ஆட்சியியல் ஆய்வுகள் துறையில் (Department of International Relations and Governance Studies) இணை பேராசிரியராகவும், இமயமலை ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்தின் (Centre of Excellence for Himalayan Studies) இயக்குநராகவும் உள்ளார்.