அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கல்வியின் இடம் என்ன? - சி.ராஜ்குமார்

 நமது பல்கலைக்கழகங்கள் அதன் இலட்சியங்கள் மற்றும் விருப்பங்கள் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது. 


இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தொலைநோக்குப் பார்வையும் கற்பனையும் கொண்டிருந்தனர். ஆனால், அன்றைய இந்தியாவின் உண்மை நிலை வேறுவிதமாக இருந்தது. சுதந்திரத்தின் போது, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 370 மில்லியனாக இருந்தது. பெண்கள் சராசரியாக ஆறு குழந்தைகளைப் பெற்றனர். மக்கள்தொகை வயதின் அடிப்படையில், இந்திய நாடானது மிகவும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. மேலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர்.


1947-ம் ஆண்டில் இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களும் சுமார் 500 இணைப்புக் கல்லூரிகளும் (affiliated colleges) மட்டுமே இருந்தன. அந்த நேரத்தில் மாணவர் சேர்க்கை தோராயமாக 250,000 ஆக இருந்தது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சுமார் 20,000 ஆசிரியர்கள் இருந்தனர். உயர்கல்வி என்பது உயரடுக்கினருக்கு மட்டுமே கிடைத்த ஒரு முழுமையான சலுகையாக இருந்தது. இன்று, இந்தியாவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். 


உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியர்களில் 47 சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு பிறந்தவர்கள் ஆவார். இந்தியாவின் மக்கள்தொகை மாற்றத்தின் இந்த கட்டத்தில், பல்கலைக்கழகங்கள் செல்வாக்கு மிக்க நிறுவனங்களாக உருமாறின. அவை, சமூக மாற்றத்திற்கு பங்களிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (science, technology, engineering, mathematics (STEM)) மற்றும் மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்கள் மற்றும் படிப்புகளில் ஒரே மனதுடன் கவனம் செலுத்துவது நமது சமூகத்தின் மதிப்புகளில் தேவையான மாற்றங்களை உருவாக்காது.


கல்வி என்பது அனைத்து கற்றலையும் வேலை வாய்ப்புகளுடன் மட்டும் இணைப்பதோடு நின்றுவிடக் கூடாது. நமது குடியரசுக்குத் தேவையான குடிமக்களை உருவாக்குவதில் கல்வியின் உள்ளார்ந்த மதிப்பைப் பாராட்டாமல், பண ஆதாயங்களுக்காக அறிவைப் பயன்படுத்த வேண்டும். பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் அனைத்து இந்திய மொழிகளிலும் அரசியலமைப்பு பற்றிய கணிசமான அறிவை வழங்க வேண்டும். இதற்கு முன்னுரிமை அளிப்பது முதன்மையான கொள்கை இலக்காக இருக்க வேண்டும்.


இந்தியா தனது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டை இந்த ஆண்டு நினைவுகூருகிறது. 1,100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும், 50,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளையும் உள்ளடக்கிய நமது உயர்கல்விச் சூழல் அரசியலமைப்புச் சட்டத்தைப் படிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2047-ம் ஆண்டிற்கான வளர்ந்த இந்தியா தொலைநோக்குத் திட்டம் (Viksit Bharat Vision), அரசியலமைப்புச் சட்டத்தில் பதிந்துள்ள மதிப்புகளைப் பாராட்டுவதற்கும், வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான வழிகாட்டியாக இந்த ஆவணம் ஏன் முக்கியமானது என்பதற்கும் இளம் இந்தியாவுக்குக் கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 


அரசியலமைப்பின் வரலாறு, தத்துவம் மற்றும் பரிணாமம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அங்கீகரித்து செயல்படுத்துவதில் அதன் முக்கியத்துவம் குறித்து நமது பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு ஏன் கற்பிக்க வேண்டும் என்பதற்கான ஐந்து அழுத்தமான காரணங்கள் கீழே குறிப்பிட்டுள்ளன. 


முதலில், அரசியலமைப்பு பற்றிய தெளிவுகளை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்த வேண்டும். இந்தியா ஒரு உன்னதமான கூட்டமைப்பு அல்ல. நாட்டில் நிகழும், தொடர் போராட்டங்களும் மற்றும் ஒருங்கிணைப்புகள் நாட்டில் விவாத ஜனநாயகத்தின் வளர்ச்சியை வடிவமைக்கின்றன. சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மை மாநிலங்கள் முழுவதும் பொருளாதார மற்றும் மனித வளர்ச்சியின் பல்வேறு நிலைகளுக்கு வழிவகுக்கிறது. 75-வது ஆண்டு அரசியலமைப்பை நிறைவைக் கொண்டாடும் நாம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய நமது புரிதலை வலுப்படுத்த வேண்டும். இந்த புரிதல் மக்களாகிய நம்மை பிணைக்க வேண்டும்.


இந்த உணர்வு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முற்போக்கான சிந்தனைகளை ஊக்குவிப்பதை நேரடியாக பாதிக்கும். அதே நேரத்தில் மதவெறி சார்ந்த கருத்துகளின் விளைவுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்திய மக்களிடையே கூட்டு உணர்வை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டனர். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பன்முகத்தன்மையான அணுகுமுறையைத் தொடர நெகிழ்வுத்தன்மையையும் சுதந்திரத்தையும் அனுமதிப்பதன் மூலம் அவர்கள் இதை உருவாக்கினர்.


இரண்டு, அரசியலமைப்பு அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பாக செயல்படுகிறது. இந்திய அடையாளத்தை உருவாக்கவும், வளர்க்கவும், விரிவுபடுத்தவும் இது நமக்கு உதவியது. இதில், பல விதிகள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றன. ஒரு தேசத்தை நிறுவுவதற்கான அரசியலமைப்பின் நோக்கத்தை அவை விளக்குகின்றன. இந்திய மக்களின் பன்முகத்தன்மையின் அடையாளம் அரசியலமைப்பில், குறிப்பாக அதன் முகவுரையில் காணப்படும் மதிப்புகளில் பிரதிபலிக்கிறது.


தேசங்களின் எழுச்சி (The Rise of State-Nations) என்ற தலைப்பில் ஒரு செல்வாக்குமிக்க கட்டுரையில், ஆல்பிரட் ஸ்டீபன், ஜுவான் ஜே லின்ஸ் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், "தேசத்தின் கொள்கைகள் மாநிலம் தழுவிய அரசியல் சமூகத்தைப் பொறுத்தவரை சொந்தமான (அல்லது 'நம்-உணர்வு') உணர்வை உருவாக்குவதை உள்ளடக்கியது என குறிப்பிட்டனர். 


அதே நேரத்தில், அரசியல் ரீதியாக முக்கிய சமூக கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்கவும் பாதுகாக்கவும் உருவாக்குகிறது. 'நம்-உணர்வு' என்பது ஒரு பாரம்பரியம், வரலாறு மற்றும் பகிரப்பட்ட கலாச்சாரத்தை உள்ளடக்கிய முறையில் வரையறுக்கும் வடிவத்தை எடுக்கலாம். இது, அனைத்து குடிமக்களும் அரசின் பொதுவான சின்னங்கள் மற்றும் சில வகையான 'அரசியலமைப்பின் தேசப்பற்று' (constitutional patriotism) ஆகியவற்றுடன் இணைந்த  பற்றுதலை உணர ஊக்குவிக்கப்படுகிறார்கள். 


'அரசியலமைப்பின் தேசப்பற்று' (constitutional patriotism) மதிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு இந்திய அடையாளம், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான யோசனைகளை உருவாக்குவதற்கான நமது விருப்பங்களை வரையறுக்க வேண்டும். கல்வி மற்றும் கற்றல் செயல்முறை மூலம் இந்த இந்திய அடையாளத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.


மூன்றாவதாக, பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கு அரசியல் சாசனம் ஒரு முக்கியக் காரணமாகும். அரசியலமைப்பு, குறிப்பாக சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாத விதிகள், பன்முகத்தன்மையின் மதிப்பை அங்கீகரிக்கின்றன. பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்கள் பொருத்தமான சரியான இடங்களாகும். 


இருப்பினும், பல்கலைக்கழகங்களில் ஊக்குவிக்கப்படும் பன்முகத்தன்மை வாழ்க்கை மற்றும் பகிரப்பட்ட அனுபவங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். இந்தியா பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பன்முக தூண்டுதல்களைக் கொண்ட நாடு என்பதைப் புரிந்துகொள்வதும் பாராட்டுவதும் முக்கியமாகும். அரசமைப்புச் சட்டத்தைப் படிப்பதும், பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புகொள்வதும், அறிவுள்ள மற்றும் விழிப்புணர்வுள்ள (enlightened) குடிமக்களை உருவாக்க உதவும்.


நான்காவது, சமூக மற்றும் அரசியல் அதிகாரமளித்தலுக்கான கருவியாக அரசியலமைப்புச் சட்டம் செயல்படுகிறது. இது சட்டப்பிரிவு 17-ன் அடிப்படையில் தீண்டாமையை ஒழித்ததன் மூலம், வரலாற்று ரீதியாக உருவான வர்க்க அடிப்படையிலான பாகுபாட்டின் அடித்தளத்திற்கு அரசியலமைப்பு தீர்வாக அமைந்தது. ஆனால், அது அத்துடன் நிற்கவில்லை. "தீண்டாமை" காரணமாக ஏற்படும் எந்த இயலாமையையும் ஏற்படுத்துவதையும் அது குற்றமாக்கியது. 


தீண்டாமையின் வெறுப்பை தடை செய்வதன் மூலம் அதை அடக்கிவிட முடியாது என்பதை அங்கீகரிக்கும் அளவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வை இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகளே நமது நாட்டிற்கு அடித்தளம் என்ற மதிப்புமிக்க வார்த்தையை அரசியலமைப்புச் சட்டம் அணுகுகிறது. இதற்கான மதிப்புகள் உருவாகி, வடிவமைக்கப்பட்டு, மாற்றப்படும் இடங்களே பல்கலைக்கழகங்கள் ஆகும். இவை, அரசியலமைப்பு தொடர்பான மதிப்புகளைப் படிப்பது அதிகாரத்தின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த இடம் எதுவும் இல்லை. 


ஐந்தாவதாக, சமூக நீதிக்கான அடிப்படையாக அரசியலமைப்பு செயல்படுகிறது. அரசியலமைப்பு சாசனம் முழுவதும் சமூக நீதியின் கருப்பொருள் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்தியா கொண்டாடும் நிலையில், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தேவை முன்னெப்போதையும் விட முக்கியமானதாக உள்ளது. இந்த முயற்சியில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரும் காலங்களில், மாற்றம்பெறும் கல்வி மூலம், அவர்கள் சமூக கட்டமைப்பிற்கு சவால் விடலாம். இது சமூக நீதியை அடைவதில் ஒரு புதிய தலைமுறை தீவிரமாக பங்கேற்க அனுமதிக்கிறது.உயர்கல்வி நிறுவனங்கள் இந்த யோசனைகளை இளைஞர்கள் மத்தியில் செயல்படுத்தும் போதுதான் சமூக நீதியை மேம்படுத்தும் அரசியல் சாசன திட்டம் நிறைவேறும். இந்தியாவின் இளைஞர்கள் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் வேளையில், நமது பல்கலைக்கழகங்கள் அரசியலமைப்பின் இலட்சியங்கள் மற்றும் விருப்பங்களுடன் இணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலியுறுத்த வேண்டும். நமது சுதந்திரம் மற்றும் இந்தியக் குடியரசைக் கட்டியெழுப்புவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வையில் விளைந்த வரலாற்றுப் போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கும், பாராட்டுவதற்கும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிக்க வேண்டும்.


எழுத்தாளர் ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் ஆவார். அவர்கள் ஜிண்டால் குளோபல் லா ஸ்கூலின் தலைவர். ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள அதன் வளாகத்தில் அமைக்கிறது.




Original article:

Share: