செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் பற்றி… -B. பாஸ்கர்

 காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு முக்கியமான ரயில் இணைப்பை வழங்கும் இந்த பாலம், வெள்ளிக்கிழமை பிரதம மந்திரியால் திறந்து வைக்கப்பட்டது.


இந்த பாலத்தில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் [railway arch bridge] என்று அழைக்கப்படுகிறது. இது செனாப் நதிக்கு மேல் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 467 மீட்டர் வளைவு கொண்டுள்ளது. இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈஃபல் டவரை (Eiffel Tower) விட 35 மீட்டர் உயரமானது.


செனாப் பாலம் 272 கிலோமீட்டர் கொண்ட லட்சியமான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பு [Udhampur-Srinagar-Baramulla Rail Link - USBRL] ரயில்வே திட்டத்தில் ஒரு முக்கியமான இணைப்பாகும்.


இந்த திட்டம் ஜம்மு காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும்.


பிரதம மந்திரி நரேந்த்ர மோடி ஜூன் 6 அன்று செனாப் பாலத்தை திறந்து வைத்தார்  மற்றும் கத்ரா மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


செனாப் பாலம் இந்திய ரயில்வேயால் ₹1,400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானத்தை கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் மேற்பார்வையிட்டது. கட்டுமானம் முழுக்க முழுக்க Afcons Infrastructure, South Korea’s Ultra Construction & Engineering Company மற்றும் VSL India ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செய்யப்பட்டது.


உயர்கோபுரப் பாலத்தின் அடித்தளத்தை பின்லாந்தின் WSP குழுமம் வடிவமைத்தது. மேலும், வளைவை ஜெமானியைச் சேர்ந்த Leonhardt Andra and Partners வடிவமைத்தனர்.


அடித்தள பாதுகாப்பை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் வடிவமைத்தது. டெல்லி இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப கழகம் நில அதிர்வு (seismic analysi) பகுப்பாய்வை மேற்கொண்டன. அதே நேரத்தில் டெல்லி இந்திய தொழில்நுட்ப கழகம் சாய்வு பகுப்பாய்வை (slope analysis) மேற்கொண்டன.


பாலத்தை குண்டு வெடிப்புத் தடுப்பு பாலமாக மாற்றுவதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) உதவியது.


பாலத்தின் கட்டுமானத்திற்காக சுமார் 30,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டது. இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (Steel Authority of India Limited (SAIL)) எஃகு வழங்கியது மற்றும் சுவிஸ் நிறுவனமான மகேபா கோள ஸ்டாப்பர் தாங்கு உருளைகளை வழங்கியது.


இந்தப் பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் ஆகும். மேலும், மணிக்கு 100கி.மீ வேகத்தில் ஓடும் ரயில்களை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


செனாப் பாலத்தின் திறப்பு விழா, 1994-95 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட USBRL திட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. ஆரம்ப திட்டச் செலவு ₹37,012 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு ₹43,780 கோடியில் நிறைவடைந்தது.


செனாப் பாலம் 2003ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. எனவே, கடினமான மற்றும் சவாலான நிலப்பரப்பு, நிலப்பரப்பு கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அதை முடிக்க 22 ஆண்டுகள் ஆனது.


மோதல்களின் போது எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதில் இது உதவும் என்பதால், தேசிய பாதுகாப்பிற்கு இந்தப் பாலம் முக்கியமானது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் ஒரு முக்கிய இணைப்பாக இந்தப் பாலம் உள்ளது.


ஜம்மு-காஷ்மீர் வடக்குப் பகுதியில் சீனாவின் எல்லையையும் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நீண்டகால எல்லைப் பிரச்சினை உள்ளது.


காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு இது எவ்வாறு உதவும்?


செனாப் பாலம் ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த பாலம் ரயில் மூலம் பொருட்களை நகர்த்த உதவும். இது உள்ளூர் வணிகங்களுக்கு, குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் உள்ள சந்தைகளுக்கு எளிதான சந்தை அணுகலை வழங்கும். நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த பொருளாதார ஒருங்கிணைப்பு ஜம்மு-காஷ்மீர் வணிகங்களுக்கு அதிக வணிக வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.


இது குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் தோட்டக்கலைத் தொழிலுக்கு, குறிப்பாக முன்னர் தங்கள் விளைபொருட்களை ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியே அனுப்ப சாலை போக்குவரத்தை நம்பியிருந்த ஆப்பிள் விவசாயிகளுக்கு பயனளிக்கும்.


காஷ்மீர் பொருளாதார கூட்டணியின் (Kashmir Economic Alliance (KEA)) செய்தித் தொடர்பாளர் காசி தௌசீஃப், "இந்தத் திட்டம் முடிவடைய  நாங்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். இது நிச்சயமாக எங்கள் வணிகங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்" என்று businessline-னிடம் கூறினார்.


செனாப் பாலம் வழியாக அதிக ரயில் இணைப்பு, இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சுற்றுலாத் துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும். சுற்றுலா உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ரயில் மூலம் சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் தளவாடங்கள் மற்றும் வர்த்தகம் மேம்படும்.


Original article:
Share:

ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முறை என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• தகவல்களின் படி, ஜல் ஜீவன் திட்டத்தின்  தணிக்கைப் பயிற்சி மேம்பட்ட நிலையில் உள்ளது மற்றும் அறிக்கைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) தனது தணிக்கைத் திட்டத்தில் இந்த விவரகங்களைச் சேர்த்த பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த செயல்முறை தொடங்கியது. இது 2019-20 நிதியாண்டு முதல் 2023-24 வரையிலான மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்ட செயல்படுத்தலை உள்ளடக்கியது.


•  இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் தலைமை கணக்காளர் (Principal Accountant General  (PAG)) அல்லது கணக்கு பொது அலுவலர் (Accountant General (AG)) தலைமையில் உள்ள அலுவலகங்கள் வழியாக திட்டத்தின் கிடைமட்ட தணிக்கை (horizontal audit)  ஆய்வை நடத்துகிறது.


• பெரும்பாலான மாநிலங்களில் களப்பணி முடிந்துவிட்டது. அதே நேரத்தில் சில மாநிலங்களில், பயிற்சி அறிக்கை எழுதும் நிலையில் உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. இரண்டு மாநிலங்களின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கைகள் தலைமையகத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.


• அறிக்கைகள் முடிவடைந்தவுடன் அவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


• தணிக்கை மாநில அளவில் நடைபெறும், தேசிய அளவில் அல்ல. ஏனெனில், மாநில அரசுகள் ஜல் ஜீவன் திட்ட நடைமுறையில் முன்னணி வகிக்கின்றன. திட்ட நடைமுறை, திட்டமிடல் மற்றும் நிதி செயல்திறன் போன்ற அனைத்து அம்சங்களும் ஆய்வில் அடங்கும். கூடுதல் செலவினங்கள் ஏன் ஏற்பட்டுள்ளன என்பதையும் மாநில அளவில் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

• தகவல்களின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் பொதுவாக ஒரு திட்டத்தின் 70-80% செலவு முடிந்த பிறகு அதனை தணிக்கை செய்கிறார். ஜல் ஜீவன் திட்டம் 2019-20 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்ப ஆண்டுகளில் செலவு குறைவாக இருந்தது. எனவே, 2023-24ஆம் ஆண்டில் முதல் கட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அதைத் தணிக்கைக்குத் தேர்ந்தெடுத்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

• ஜல் ஜீவன் திட்டத்துடன் சேர்த்து, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதம் திட்டத்திலும் (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme)  ஆய்வை நடத்தி வருகிறது. இந்த அறிக்கைகளும் விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (National Rural Employment Guarantee Scheme (NREGS))ஆய்வை கடைசியாக செய்தது.



உங்களுக்குத் தெரியுமா?:


. பிரதம மந்திரி நரேந்த்ர மோடி அவர்களால் ஆகஸ்ட் 15, 2019 அன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission),டிசம்பர் 2024 இறுதிக்குள் சுமார் 16 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் இலக்கில் 75 சதவீதத்தை மட்டுமே அடைய முடியும். மீதமுள்ள 4 கோடி குழாய் இணைப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு டிசம்பர் 31, 2028 வரை நீட்டிப்பதன் மூலம் நிறுவ இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.


. 2019ஆம் ஆண்டில்  ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுதான் முதல் முக்கிய தணிக்கையாகும். தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் (National Rural Drinking Water Programme (NRDWP)) செயல்திறன் தணிக்கையை நடத்தியிருந்தது. அதன் அறிக்கை 2018ஆம் ஆண்டில்சமர்ப்பிக்கப்பட்டது. இது 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. 2019ஆம் ஆண்டில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துடன் இணைத்து ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கியது. அதன் பிறகு, இது CAG நடத்தும் முதல் தணிக்கைப் பயிற்சியாகும்.


• நாடு முழுவதும் உள்ள ஜல் ஜீவன் திட்டங்களின் "நில ஆய்வுக்காக" ஒன்றிய அரசு 100க்கும் மேற்பட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பு அலுவலர்களை (Central Nodal Officers (CNOs)) நியமித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக மே 8 அன்று அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


• 2019ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ரூ.8.29 லட்சம் கோடி மொத்த மதிப்பீட்டில் சுமார் 6.4 லட்சம் நீர் வழங்கல் திட்டங்கள்  திட்டத்தின் அசல் செலவினமான ரூ.3.6 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம் (ஒன்றிய அரசு ரூ.2.08 லட்சம் கோடி வழங்கியுள்ளது. மாநில அரசுகள் 1.52 லட்சம் கோடி வழங்கியுள்ளன.


• கூடுதல் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜல் சக்தி அமைச்சகம் ரூ.2.08 லட்சம் கோடிக்கு மேல் ரூ.2.79 லட்சம் கோடி கூடுதல் ஒன்றிய நிதியை அங்கீகரிக்க செலவுச் செயலாளர் தலைமையிலான செலவு நிதிக் குழுவை அணுகியது. இருப்பினும், செலவு நிதி குழு (Expenditure Finance Committee (EFC)) ஒன்றிய அரசின் பங்காக ரூ.1.51 லட்சம் கோடியை மட்டுமே பரிந்துரைத்தது. இது ஜல் சக்தி அமைச்சகத்தால் கோரப்பட்ட ரூ.2.79 லட்சம் கோடியை விட 46% குறைவு என்று ஏப்ரல் 21, 2023 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.


• தகவலின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தற்போது தேசிய உயர்தர கல்வி இயக்கம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan), கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் நலன், பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), திறன் நகரங்கள் திட்டம் (Smart City Mission) போன்ற பல ஒன்றிய அரசுத் திட்டங்களை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.  ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission (JJM)) தணிக்கை இதேபோல் செய்யப்படும்.


Original article:
Share:

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கருவிகள் -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:


ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது பிப்ரவரி 2025 முதல் தொடர்ந்து 3-வது குறைப்பாகும். மத்திய வங்கி வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 3 சதவீதமாகக் குறைத்து, ரூ.2.5 லட்சம் கோடி கடன் வளங்களை வங்கி அமைப்புக்கு விடுவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் (repo rate) என்று அழைக்கப்படுகிறது. வணிக வங்கிகள் தங்களின் கூடுதல் பணத்தை பெறும் போது மத்திய வங்கி கொடுக்கும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (reverse repo rate) என்று அழைக்கப்படுகிறது.


2. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதன் தாக்கம்: பொருளாதாரத்தில் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. இது செய்வதால் வணிக வங்கிகள் தங்கள் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்களையும், வைப்புத் தொகைகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைக்க முடிகிறது. இதன் விளைவாக, மக்கள் பணத்தை செலவழிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏனெனில், வங்கியில் தங்கள் சேமிப்பை வைப்பது இப்போது சற்று குறைவான வருமானம் தருகிறது. மேலும், புதிய கடன்கள் இப்போது சற்று குறைவான செலவாகும் என்பதால் வணிகங்கள் புதிய முதலீடுகளுக்காக புதிய கடன்களை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றன.


3. ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் தாக்கம்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்க அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அவை தங்கள் கடன் வாங்குபவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கும். அடிமட்ட அளவில், இது மக்கள் பணம் கடன் வாங்குவதையும் செலவழிப்பதையும் தடுக்கிறது. இது சந்தையில் பணத்தின் அளவைக் குறைக்கிறது. இதனால் பணவீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.


ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாடு என்ன?


பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), தனது கொள்கை நிலைப்பாட்டை 'ஆதரவளிக்கும்' (Accommodative) நிலையிலிருந்து 'நடுநிலை' (Neutral) நிலைக்கு மாற்றுவதன் மூலம் மறுசீரமைக்கப்பட்ட அணுகுமுறையை அடையாளம் காட்டியுள்ளது. நடுநிலை நிலைப்பாடு என்பது பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளைப் பொறுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்பதாகும். பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் காட்டும் அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ ரிசர்வ் வங்கியை இது அனுமதிக்கிறது.


பணவியல் கொள்கையின் கருவிகள்


ரெப்போ விகிதம் (Repo rate) மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதம் (reverse repo rate) தவிர, வளர்ச்சியின் நோக்கத்தை வைத்துக்கொண்டு விலை நிலைத்தன்மையை பராமரிக்க ரிசர்வ் வங்கி பல நேரடி மற்றும் மறைமுக கருவிகளைப் பயன்படுத்துகிறது.


(i) நிலையான வைப்பு வசதி விகிதம் (Standing Deposit Facility (SDF Rate)): இது எந்தவொரு பாதுகாப்பையும் கேட்காமல், ஒரு இரவுக்கு வங்கிகளிடமிருந்து பணத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும் விகிதமாகும். இது வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை நிர்வகிக்க ரிசர்வ் வங்கிக்கு உதவுகிறது மற்றும் நிதி நிலைத்தன்மையையும் ஆதரிக்கிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அமைப்பில் மிகக் குறைந்த விகிதமாக நிலையான தலைகீழ் ரெப்போ விகிதம் (fixed rate reverse repo (FRRR)) என்று அழைக்கப்படும் முந்தைய முறையை மாற்றுவதற்காக நிலையான வைப்பு வசதி விகிதம் 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


(ii) குறைந்தபட்ச நிலையான வசதி விகிதம் (Marginal Standing Facility (MSF Rate)): மற்ற வங்கிகளிடம் கடன் கொடுக்க போதுமான பணம் இல்லாதபோது, ​​அவசர காலங்களில் ஒரு இரவுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்க வங்கி செலுத்தும் வட்டி விகிதம் இது. இந்த விகிதம் பொதுவாக பிரதான ரெப்போ விகிதத்தை விட 0.25% அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.


(iii) பணப்புழக்க சரிசெய்தல் வசதி (Liquidity Adjustment Facility (LAF)): LAF என்பது திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர) மற்றும் முதன்மை வணிகர்களுக்கு RBI வழங்கும் ஒரு சேவையாகும். இது அவர்களுக்குத் தேவைப்படும்போது விரைவாகப் பணத்தைப் பெற உதவுகிறது அல்லது தேவைக்கு அதிகமாக இருந்தால் RBI-யில் கூடுதல் பணத்தை வைத்திருக்க உதவுகிறது. இது அரசாங்கப் பத்திரங்கள் அல்லது மாநில மேம்பாட்டுக் கடன்களை பிணையமாகப் பயன்படுத்தி ஒரே இரவில் செய்யப்படுகிறது.


(iv) முக்கியப் பணப்புழக்கம் மேலாண்மை கருவி (Main Liquidity Management Tool:): குறுகிய கால பணத்  தேவைகளைக் கையாள, ரிசர்வ் வங்கி 14 நாள் ஏலத்தை நடத்துகிறது. அங்கு வங்கிகள் மாறிவரும் வட்டி விகிதங்களில் பணத்தைக் கடன் வாங்கலாம் அல்லது கடன் கொடுக்கலாம். வங்கிகள் தங்கள் தேவையான ரொக்க இருப்புக்களை (cash reserve ratio (CRR)) பராமரிக்க வேண்டிய நேரத்தில் இது நிகழ்கிறது.


(v) வங்கி விகிதம் (Bank Rate): வங்கிகள் இருப்பு தேவைகளை (பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ திரவத்தன்மை விகிதம்) பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டால், மாற்றுச் சீட்டுகள் அல்லது பிற வணிகத் தாள்களை வாங்க அல்லது மீண்டும் தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கி வழங்கும் விகிதம் வங்கி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.


(vi) பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR)): இது ஒரு வங்கியின் நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளின் (Net Demand and Time Liabilities (NDTL)) சதவீதமாகும். ரிசர்வ் வங்கியில் இருப்பாக பணப்புழக்கம் மேலாண்மை கருவி பராமரிக்கப்பட வேண்டும். பண இருப்பு விகிதம் சதவீதம் காலத்திற்கு காலம் ரிசர்வ் வங்கியால்  தீர்மானிக்கப்படுகிறது.


(vii) சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio (SLR)): ஒவ்வொரு வங்கியும் இந்திய சொத்துகளில், இரண்டாவது முந்தைய பதினைந்து நாள்களின் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் அதன் தேவை மற்றும் கால பொறுப்புகளின் மொத்தத்தின் அத்தகைய சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் மதிப்பை திரவப் பணம், தங்கம், அரசு மற்றும் மாநில அரசு பத்திரங்கள் வடிவில் பராமரிக்க வேண்டும்.


(vii) திறந்த சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations (OMOs)): இதன் பொருள், வங்கி அமைப்பிலிருந்து நீண்டகாலப் பணத்தைச் சேர்க்க அல்லது நீக்க ரிசர்வ் வங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்குகிறது அல்லது விற்கிறது.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (Flexible Inflation Target (FIT))


1. மே 2016ஆம் ஆண்டில், நாட்டின் பணநீதி கட்டமைப்பை இயக்க மத்திய வங்கிக்கு சட்டமன்ற அதிகாரம் வழங்க ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. 2013ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் தலைமையில் ரிசர்வ் வங்கி 'பணநீதிக் கட்டமைப்பை திருத்த மற்றும் வலுப்படுத்த நிபுணர் குழுவை’ அமைத்தது. இது ரிசர்வ் வங்கிக்கு நெகிழ்வான பணவீக்க இலக்கை (flexible inflation target (FIT)) பரிந்துரைத்தது. மே 2016ஆம் ஆண்டில், நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. பிரிவு 45ZA கீழ், ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி உடன் ஆலோசித்து, நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படையில் பணவீக்க இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானித்து அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அறிவித்துக் காட்டுகிறது. ஆகஸ்ட் 5, 2016 அன்று, ஒன்றிய அரசு நுகர்வோர் விலை குறியீட்டை (CPI) 4 சதவீதமாக +/-2 சதவீத வரம்புடன் அறிவித்தது. மார்ச் 31, 2021 அன்று, ஒன்றிய அரசு அடுத்த 5ஆண்டு காலத்திற்கு ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை பணவீக்க இலக்கு மற்றும் சகிப்புத்தன்மை வரம்பை தக்கவைத்துக் கொண்டது.


பணவீக்கம் (Inflation) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொது விலை நிலை அதிகரிக்கும் விகிதத்தைக் குறிக்கிறது.  இது பணத்தின் வாங்கும் திறன் அல்லது உண்மையான வருமானத்தில் குறைவை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு பண அலகும் முன்பை விட குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும்.


Original article:
Share:

ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகளை புதிய பணியில் நியமிப்பதற்கான காரணம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: ஓய்வு பெற்ற பிறகு எந்த அரசுப் பணியையும் ஏற்கப் போவதில்லை என்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். ஓய்வு பெற்ற உடனேயே நீதிபதிகள் அரசுப் பணிகளில் சேரும்போது அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காக தங்கள் வேலையை விட்டு விலகும்போது, ​​அது கடுமையான நெறிமுறை கேள்விகளை எழுப்புகிறது மற்றும் மக்கள் அவர்களின் நியாயத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது என்று அவர் விளக்கினார்.


முக்கிய அம்சங்கள்:


• இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தின் தலைவரான அலர்முயர் பிரபு ரீட் தொகுத்து வழங்கினார்.


• அரசியலமைப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் முறை (Collegium system) எப்படி உருவானது என்பதை விளக்கும்போது, தலைமை நீதிபதி கவாய் "கொலீஜியம் அமைப்பின் மீது விமர்சனங்கள் இருக்கலாம்" என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், "எந்த தீர்வும் நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது" என்று கூறினார். "நீதிபதிகள் வெளிப்புற கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையாக இருக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தினார்.


• உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விளக்கினார். சிலர் இந்த அமைப்பை விமர்சிப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், எந்த மாற்றங்களும் நீதிபதிகளின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்றார். நீதிபதிகள் வெளிப்புற செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


• ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகள் பணியில் சேருவது குறித்துப் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி, ஓய்வு பெற்ற உடனேயே அரசுப் பணியை மேற்கொண்டாலோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்காக ராஜினாமா செய்தாலோ, அது கடுமையான நெறிமுறைக் கவலைகளை உருவாக்கி, மக்களை அவர்களின் செயல்களை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறினார்.


• ஒரு நீதிபதி அரசியல் பதவிக்கு போட்டியிட்டால், அந்த நீதிபதி உண்மையிலேயே நியாயமானவராகவும் சுதந்திரமானவராகவும் இருந்தாரா என்று மக்கள் கேள்வி எழுப்பக்கூடும் என்று அவர் கூறினார். அந்த நீதிபதி அரசாங்கத்தை மகிழ்விக்க முயற்சிப்பது போலவோ அல்லது நலன்களில் மோதல் இருப்பது போலவோ தோன்றலாம் என்று அவர் கூறினார்.


• நீதித்துறையில் சில ஊழல் மற்றும் தவறான செயல்கள் நடந்துள்ளதாக தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார். இந்த சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாகவும், முழு அமைப்பின் நியாயத்தன்மையின் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?:


• பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியல் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், நாம் ஒரு கடினமான கேள்வியைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அரசாங்கத்தால் வழங்கப்படும் பணி நியமனங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டுமா? ஏனெனில், அத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்வது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துமா?


• அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் நீதிபதிகள் போல், இந்தியாவில் நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பதில்லை. அவர்கள் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 62 வயது ஓய்வு வயதாகும். நீதிபதிகள் குடியரசுத்தலைவரின் விருப்பப்படி பணியாற்றுவதில்லை. மேலும், அரசாங்கத்தால் அவர்களை எளிதில் நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். மேலும், நிரூபிக்கப்பட்ட தவறு அல்லது தங்கள் வேலையைச் செய்ய இயலாமை ஆகியவற்றால் மட்டுமே அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்த செயல்முறை மிகவும் கடினம். மேலும், சுதந்திர இந்தியாவில் எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. இருப்பினும், சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிப் பாதுகாப்பு நீதிபதிகள் சுதந்திரமாக இருக்கவும், அழுத்தம் இல்லாமல் நியாயமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.


• ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் அல்லது எந்த அதிகார அமைப்பிலும் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ​​ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அரசு பதவிகளை தேர்ந்துஎடுக்க கூடாது என்று கே.டி. ஷா பரிந்துரைத்தார். இது அதிக ஊதியம் அல்லது அந்தஸ்து காரணமாக நீதிபதிகள் சோதிக்கப்படுவதைத் தடுக்கும் என்று அவர் நம்பினார். ஆனால், பி.ஆர். அம்பேத்கர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அரசாங்கத்திற்கு அதிக ஆர்வம் இல்லாத வழக்குகளை நீதிமன்றங்கள் வழக்கமாகக் கையாளும் என்றும், அதனால் நீதிபதிகளுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் கூறினார்.


• அம்பேத்கரின் காலத்தில், நீதித்துறை தனிப்பட்ட பிரச்சனைகளை முடிவு செய்வதில் ஈடுபட்டிருந்தது மற்றும் குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வழக்குகள் அரிதாகவே எழுந்தன. இதன் விளைவாக, "அரசாங்கத்தால் நீதித்துறை உறுப்பினரின் நடத்தையை பாதிக்கும் வாய்ப்புகள் மிகவும் தொலைவில் உள்ளன". இந்த பகுத்தறிவு இன்று பொருந்தாது. ஏனெனில், அரசாங்கமே நீதிமன்றங்களில் மிகப்பெரிய வழக்குத் தொடுப்பவர்களில் ஒன்றாகும் என்று அம்பேத்கர் கூறினார்.


• 1958ஆம் ஆண்டு தனது 14வது அறிக்கையில், சட்ட ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு இரண்டு வகையான வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிட்டது: முதலாவது, "அறை நடைமுறை" (chamber practice) (இந்த சொல் இன்று வாடிக்கையாளர்களுக்கு கருத்துகளை வழங்குவது மற்றும் தனிப்பட்ட தகராறுகளில் நடுவராக பணியாற்றுவது என்று பொருள்படும்) மற்றும் இரண்டாவது "அரசாங்கத்தின் கீழ் முக்கியமான பதவிகளில் ஈடுபடுவது ஆகும்”. சட்ட ஆணையம் அறை நடைமுறையை கண்டித்தது. ஆனால், அதை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை. இருப்பினும், அரசாங்கம் நீதிமன்றங்களில் ஒரு பெரிய வழக்குத் தொடுப்பவராக இருந்ததால், ஓய்வுக்குப் பிந்தைய அரசுப் பணிகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதைத் தடை செய்ய அது கடுமையாகப் பரிந்துரைத்தது. எனினும், ஆணையத்தின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.


Original article:
Share:

இந்தியாவில் நீர் மேலாண்மைக்கு ஒரு புதிய பாதை தேவை. -ஸ்ரீகுமார் சட்டோபாத்யாய்

 விஞ்ஞான சமூகமும், கொள்கை வகுப்பாளர்களும் கடல் வளமூலம் (Source to Sea (S2S)) அணுகுமுறையில் கவனம் செலுத்த வேண்டும்.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று கொண்டாடப்படும் உலக நீர் தினம் 2025, 'பனிப்பாறை பாதுகாப்பு' என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை 2025 ஐ சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு ஆண்டாகவும் அறிவித்தது.

மார்ச் 21, 2025 அன்று, உலக பனிப்பாறைகள் தினம் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டு 'கிரையோஸ்பெரிக் அறிவியலில் நடவடிக்கைக்கான தசாப்தம்' (2025–2034) எனப்படும் 10 ஆண்டு முயற்சியையும் தொடங்குகிறது.


வெவ்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் பல உலகளாவிய நிகழ்வுகள் உள்ளன. இந்த நிகழ்வுகளில் பொதுவான கருப்பொருள்களில் ஒன்று 'நீர் மற்றும் பனிப்பாறைகள் அறிவியலில் இருந்து கொள்கை வரை' (water and glaciers  from science to policy) ஆகும். இந்த நிகழ்வுகள் பிராந்திய மற்றும் உள்ளூர் மட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.


ஐக்கிய நாடுகளின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2025, 'மலைகள் மற்றும் பனிப்பாறைகள்  நீர் கோபுரங்கள்' (Mountains and Glaciers – Water Towers) என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தியது. இந்த அறிக்கை மலை நீர் ஆதாரங்களின் முக்கியத்துவத்திற்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றில் மலைப் பகுதிகள் மற்றும் கீழ்நோக்கி வாழும் சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஆல்பைன் பனிப்பாறைகள் அடங்கும்.


இந்த கவனம் இப்போது மிகவும் முக்கியமானது.  பூமியின் அனைத்து உறைந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பனிப்பாறை (glaciers) வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றம் கீழ்நோக்கி உள்ள பகுதிகளில் உள்ள நீர் வளங்களை பெரிதும் பாதிக்கும். 2025 ஆம் ஆண்டு மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியமானது. இது நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் அறிவியல் காலகட்டத்தின் (2021–2030) பாதியைக் குறிக்கிறது. இந்த காலகட்டம் 'நாம் விரும்பும் கடலுக்கு நமக்குத் தேவையான அறிவியல்' (the science we need for the ocean we want) என்ற கருத்தை ஊக்குவிக்கிறது.


இந்த காலகட்டத்தில் பல கடுமையான பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் கடலோர மற்றும் கடல் மாசுபாடு, கடலோர ஆபத்துகள், அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் பல்லுயிர் இழப்பு ஆகியவை இதில் அடங்கும்.


கவனிக்கப்படாத ஒரு இணைப்பு


மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளுக்கு இடையே தெளிவான இணைப்பு இருப்பதால் நீர்நிலை இந்த இரண்டு புவியியல் பகுதிகளையும் இணைக்கிறது. மேல்நிலை மக்களின் செயல்பாடுகள் கீழ்நிலை சுற்றுச்சூழலை பாதிக்கிறது.


நீர்நிலை சுழற்சி இயற்கையாகவும், தனிப்பட்ட முறையிலும் செயல்படுகிறது. ஆனால், சிறிய மட்டங்களில், மனித நடவடிக்கைகள் அதை மாற்றுகின்றன. இந்த செயல்களில் அணைகள் கட்டுவது மற்றும் விவசாயம் மற்றும் பிற பயன்பாடுகளுக்காக நதி நீரைத் திருப்பிவிடுவது ஆகியவை அடங்கும். மக்கள் ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி மூலங்களிலிருந்தும் தண்ணீரை எடுத்துக்கொள்கிறார்கள். நீர்நிலைகள் மாசுபடுவது மற்றொரு தாக்கமாகும். இந்த மாற்றங்கள் அனைத்தும் கடலோரப் பகுதிகளுக்கும் திறந்த கடலுக்கும் நன்னீர் ஓட்டத்தை மாற்றுகின்றன. இது கடல் சூழலைப் பாதிக்கிறது. தற்போதைய நீர் மேலாண்மை பெரும்பாலும் இந்த மேல்-கீழ் இணைப்பை புறக்கணிக்கிறது.  இது ஒரு பெரிய உலகளாவிய பிரச்சனையாக மாறி வருகிறது.


இதை நிவர்த்தி செய்ய, நிலம், நன்னீர், கடலோர மற்றும் கடல் வளங்களை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த வழி தேவை. இந்த யோசனை கடல் வளமூலம் அணுகுமுறை (S2S) என்று அழைக்கப்படுகிறது. இது ஜனவரி 2012ஆம் ஆண்டில் மணிலா பிரகடனத்தில் (Manila Declaration) முன்மொழியப்பட்டது.




தண்ணீரை சேமிப்பதில் சமூகங்களின் பங்கு


இந்த அறிவிப்பு நிலத்தில் உள்ள செயல்பாடுகளிலிருந்து கடல் சூழலைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுப்பது பற்றியது. இது 65 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அனைத்து மட்டங்களிலும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை இந்த பிரகடனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெருங்கடல்கள், கடற்கரைகள், தீவுகள் மற்றும் அருகிலுள்ள நீர்நிலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. 'ரிட்ஜ் டு ரீஃப்' (ridge to reef) முறை போன்ற ஒருங்கிணைந்த மேலாண்மை அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. இதில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதும், இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய அல்லது மேம்படுத்த புதிய தீர்வுகளை உருவாக்குவதும் அடங்கும். செப்டம்பர் 1, 2014 அன்று, ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனம் (Stockholm International Water Institute (SIWI)), மூலத்திலிருந்து கடல் மேலாண்மை முயற்சிகளுக்கான செயல் தளத்தையும் அறிமுகப்படுத்தியது.


முடிவெடுப்பவர்கள், பங்குதாரர்கள் மற்றும் நன்னீர், கடலோர மற்றும் கடல்சார் நிபுணர்களை இணைக்கவும், ஒத்துழைக்கவும் மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்தவும், மேலும் சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்கவும் மேம்படுத்தவும் உதவுவதே இதன் நோக்கமாகும். ஜனவரி 2025 முதல், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இந்த தளத்தை வழங்குகிறது.


கடல் வளமூலம் (S2S) அணுகுமுறையின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், பூமி ஒரு தனித்துவமான அமைப்பு ஆகும். இது நன்னீர் மற்றும் கடல் நீர் அமைப்புகளை தொடர்ச்சியான முழுமையின் பகுதிகளாகப் பார்க்கிறது. இந்த அணுகுமுறை தற்போதைய நீர் மேலாண்மை மற்றும் நிர்வாக அமைப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த அமைப்புகள் பெரும்பாலும் ஒரே நீர்நிலையின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.


2012ஆம் ஆண்டில், நில அடிப்படையிலான மாசு ஆதாரங்கள் பணிக்குழு (ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்) ஒரு பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த அணுகுமுறையின் கீழ் திட்ட மேலாண்மைக்கு இரண்டு முக்கிய மாற்றங்களை அறிக்கை பரிந்துரைத்தது. நீர் அமைப்புகளின் பாரம்பரிய பிரிவினையை முறியடிப்பதே முதல் பரிந்துரை ஆகும். இதன் பொருள் ஆறுகள், நீர்நிலைகள், ஏரிகள், பெரிய கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் திறந்த பெருங்கடல்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கருதக்கூடாது என்பதாகும்.


இரண்டாவது பரிந்துரை சமூக-சுற்றுச்சூழல் அமைப்பு அளவைப் பயன்படுத்துவதாகும். இது திட்டங்களை வடிவமைத்து பகுப்பாய்வு செய்ய எல்லை தாண்டிய கண்டறிவுக்கான பகுப்பாய்வு மற்றும் காரண சங்கிலி பகுப்பாய்வு போன்ற அறிவியல் கருவிகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இந்த கருவிகள் சிறந்த தீர்வுகளைக் கண்டறிய உதவுகின்றன. இரண்டு பரிந்துரைகளும் முக்கியமானவை மற்றும் அனைத்து நாடுகளாலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


அந்த நேரத்தில், பணிக்குழு உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environmental Facility (GEF))-சர்வதேச நீர்நிலைகள் (International Waters (IW)) அறிவியல் திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்தை மேற்கொண்டு வந்தது. சர்வதேச நீர் திட்டங்களில் அறிவியலின் பயன்பாட்டை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. இது சிறந்த திட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியாவின் நீர் மேலாண்மையில் சிக்கல்கள்


நீர் மேலாண்மை விஷயத்தில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. தண்ணீர் கிடைப்பதில் இடஞ்சார்ந்த பன்முகத்தன்மை, சமமற்ற அணுகல், அதிகரித்து வரும் மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் மோதல்கள் ஆகியவை இதில் அடங்கும். நிதி ஆயோக் ஆய்வில் (2018) தண்ணீர் அழுத்தம் 600 மில்லியன் மக்களை பாதிக்கலாம் என்றும், நீர் அழுத்தத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. கடுமையான நீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும், விவசாய உற்பத்தியை பாதிக்கும் மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக வள நிறுவனத்தின் (World Resources Institute) நீர்வள அபாய  வரைபட அமைப்பு (Aqueduct Water Risk Atlas) தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 279 ஆறுகளில் 311 மாசுபட்ட நதி நீட்டிப்புகளை (மாறுபட்ட தீவிரத்தன்மை) கண்டறிந்தது. இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1.7 லட்சம் டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது அதில் 53% சுத்திகரிக்கப்படுகிறது. கணிசமான அளவு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்நிலைகளுக்குள் செல்கிறது. இந்தியா சராசரியாக 60.5% பிரித்தெடுக்கக்கூடிய நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், நிலத்தடி நீர் பயன்பாடு 100% ஐ தாண்டியுள்ளது. நிலத்தடி நீர் மதிப்பீட்டு அலகுகளில் சுமார் 25% பல்வேறு வகையான அபாயத்தின் கீழ் உள்ளன. 60% பாசன விவசாயமும் 85% குடிநீரும் நிலத்தடி நீர் இருப்பில் இருந்து பெறப்படுகிறது. நிலத்தடி நீரின் தரமும் குறைந்து வருகிறது. நீர் பாதுகாப்பு வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.


தண்ணீர், உலக அமைதியைக் கட்டமைக்கும் ஒரு கருவி


இந்தியாவின் நீர் மேலாண்மை சிக்கல்கள்  பிரிக்கப்பட்டு தனித்தனி பகுதிகளில் கவனம் செலுத்துவதால் ஏற்படுகின்றன. மற்றொரு காரணம், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகள் பெரும்பாலும் மாநில எல்லைகளைக் கடக்கின்றன. இதன் பொருள் பல அரசியல் குழுக்கள் ஒரே நீர்நிலையின் மீது கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன.


ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கை வளங்களை நிர்வகிக்க நான்கு வெவ்வேறு நிர்வாக அமைப்புகள் உள்ளன:


1. தனியார் உரிமையாளர்கள் உள்ளூர் அல்லது கிராம அளவிலான பொது நீர் ஆதாரங்களை நிர்வகிக்கிறார்கள்.


2. உள்ளூர் அரசாங்கங்கள் மாநில அளவிலான பொது நீர் ஆதாரங்களை நிர்வகிக்கின்றன.


3. மாநில அரசுகள் தேசிய அளவிலான பொது நீர் ஆதாரங்களை நிர்வகிக்கின்றன.


4. தேசிய அரசு உலக அளவிலான நீர் ஆதாரங்களை ஆதாரங்களை நிர்வகிக்கிறது.


இந்த வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைப்பதே முக்கிய சவாலாகும். அவை ஒரு பெரிய அமைப்பின் பகுதிகளாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், நாட்டிற்கு தெளிவான மற்றும் பொருத்தமான நீர் கொள்கை தேவை.


எல்லைகள் (இறுதி) குறித்த அணுகுமுறை


முதல் தேசிய நீர் கொள்கை 1987ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, அதை மாற்றவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டில், மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகிய இரண்டு அமைப்புகளை மறுசீரமைக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. தேசிய நீர் ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது. 2019ஆம் ஆண்டில், ஜல் சக்தி அமைச்சகம் சுதந்திரமான நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அவர்களின் பணியானது ஒரு புதிய தேசிய நீர் கொள்கையை வரைவதாகும். இந்தக் குழு நீர் தொடர்பான சவால்களைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியது. கூடுதலாக, மாநிலங்களும் அவற்றின் சொந்த நீர் கொள்கைகளை உருவாக்கியுள்ளன.


இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், கடல் வளமூலம் (S2S) அணுகுமுறை இன்னும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. S2S அணுகுமுறையைப் பயன்படுத்தும் இரண்டு வழக்கு ஆய்வுத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் திட்டம் S2S தளத்தைப் பயன்படுத்தி டெல்லியின் நீர்நிலைகளில் ஊட்டச்சத்துக்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. S2S எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இரண்டாவது திட்டம், இந்தோ-கங்கைப் படுகையில் உள்ள S2S நிலப்பரப்பை மனித குடியிருப்புகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


நமது அணுகுமுறையை மாற்றி, நிலம் (நன்னீர்) மற்றும் கடல் (கடல்) அமைப்புகள் இரண்டையும் இணைக்கும் ஒரு முறையைப் பயன்படுத்துவது முக்கியம். இது நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) 6 (சுத்தமான நீர்) மற்றும் 14 (நீருக்கு அடியில் வாழ்க்கை) ஆகியவற்றை அடைய சிறந்த ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது. இலக்கு 6.5 (நீர் வளங்களை ஒன்றாக நிர்வகித்தல்) மற்றும் 14.1 (நிலத்திலிருந்து மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்) ஆகியவற்றை இணைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்ய, சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அறிவியல், கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும், மேலும் புதிய மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை ஆதரிக்க வேண்டும்.


ஸ்ரீகுமார் சட்டோபாத்யாய் திருவனந்தபுரத்தில் உள்ள பூமி அறிவியல் ஆய்வு மையத்திலிருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார். அவர் இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலின் ஆலோசகராக உள்ளார்.


Original article:
Share:

உணவு பாதுகாப்பு தரநிலையில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேணுதல் -பவன் அகர்வால்

 வெளிப்படைத்தன்மை, பொதுக் கல்வி மற்றும் அறிவியல் அடிப்படையிலான சான்றுகளின் பயன்பாடு ஆகியவை அவசியம். 


இந்த ஆண்டு, ஜூன் 7-ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக உணவுப் பாதுகாப்பு (World Food Safety Day) தினத்தின் கருப்பொருள் “உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் அறிவியல்” (Food Safety: Science in Action) என்பதாகும். உணவுக் கலப்படத்தைத் தடுப்பதில் குறுகிய கவனம் செலுத்தி, உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையைத் தழுவுவதற்கான இந்தியாவின் பயணத்தைப் பற்றி சிந்திக்க இது ஒரு சரியான தருணம் ஆகும். ஆனால், இதற்கான முன்னேற்றம் இருந்தபோதிலும், இடைவெளிகளும் சவால்களும் உள்ளன.


உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் பயணம், 1954ஆம் ஆண்டின் உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்துடன் (Prevention of Food Adulteration (PFA)) தொடங்கியது. இது உணவுப் பாதுகாப்பை ஒரு எளிய, இருமடங்கு பிரச்சினையாகக் கருதுகிறது. அதாவது, உணவானது கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா? என்பதாகும். இந்த அணுகுமுறை அனைத்து மாசுபடுத்திகளையும் ஒரே மாதிரியாக கருதியது.  அவை வேண்டுமென்றே கலப்படங்கள் (adulterants), உணவு சேர்க்கைகள் (food additives), பூச்சிக்கொல்லி கசடுகள் (pesticide residues), கால்நடை மருந்து கசடுகள் (veterinary drug residues) அல்லது இயற்கையாக நிகழும் நச்சுகள் (even naturally occurring toxins) போன்றவை இதில் அடங்கும். உட்கொள்ளப்பட்ட இந்த மாசுபாடுகளின் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (Food Safety and Standards Authority of India (FSSAI)) நிறுவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 (Food Safety and Standards Act) இயற்றியது திருப்புமுனையாக அமைந்தது. FSSAI அதன் பணியை வழிநடத்த சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தியது.  இது குறிப்பாக, கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தைப் (Codex Alimentarius Commission) பின்பற்றியது. உணவுப் பாதுகாப்பிற்கு FSSAI ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இந்த அணுகுமுறையில் பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச கசடு வரம்புகளை (maximum residue limits (MRLs)) நிர்ணயிப்பதும் இதில் அடங்கும். இது உணவு சேர்க்கைகளுக்கான பாதுகாப்பான அளவுகளையும் வரையறுத்தது. கூடுதலாக, இது மாசுபடுத்திகள் மற்றும் கால்நடை மருந்து கசடுகளுக்கான தரநிலைகளை ஏற்றுக்கொண்டது.


சில தொகுக்கப்பட்ட உணவுகள் (packaged foods) ஏன் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன?


2020ஆம் ஆண்டுக்குள், FSSAI இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் தரங்களை உருவாக்கி சீரமைத்தது. இந்தத் தரநிலைகள் முன்னேறிய நாடுகளில் உள்ளதைப் போலவே கிட்டத்தட்ட சிறப்பாக இருந்தன. இருப்பினும், இந்த விரைவான முன்னேற்றம் சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது.


இடர் மதிப்பீட்டில் உள்ள இடைவெளிகளும் சவால்களும்


இந்தியாவில் நாட்டிற்கு குறிப்பிட்ட நச்சுயியல் ஆய்வுகள் (lacks toxicological studies) இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச கசடு வரம்புகள் (MRLகள்) மற்றும் உணவு சேர்க்கைகளுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல் (acceptable daily intake (ADI)) மதிப்புகள் போன்ற பெரும்பாலான பாதுகாப்பு தரநிலைகள் சர்வதேச தரவுகளிலிருந்து வருகின்றன. இந்தத் தரவு இந்திய உணவுப் பழக்கவழக்கங்கள், விவசாய முறைகள் அல்லது சுற்றுச்சூழல் நிலைமைகளுடன் சரியாகப் பொருந்தாமல் போகலாம். இந்தியாவிடம் மொத்த உணவு ஆய்வு (total diet study (TDS)) இல்லாதது ஆபத்தான மதிப்பீட்டை மேலும் சிக்கலாக்குகிறது. மொத்த உணவு ஆய்வு (TDS) முக்கியமானது. ஏனெனில், இது மக்கள் தங்கள் முழு உணவில் இருந்து எவ்வளவு வெவ்வேறு மாசுபாடுகளை உட்கொள்கிறார்கள் என்பதை அளவிட உதவுகிறது. மொத்த உணவு ஆய்வு (TDS) இல்லாமல், இந்தியா நம்பகத்தன்மையற்ற தரவைச் சார்ந்துள்ளது. இது அதன் பாதுகாப்பு தரநிலைகளின் அறிவியல் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது.


மற்றொரு சவால் ஆபத்தை திறம்பட தொடர்புபடுத்துவதாகும். MRLகள் அதிகபட்ச கசடு வரம்புகள் (MRL) மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல்கள் (ADI) போன்ற தொழில்நுட்ப சொற்கள் மிகச் சிறிய அளவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அளவுகள் parts per million (ppm) அல்லது parts per billion (ppb) மூலம் அளவிடப்படுகின்றன. நுகர்வோர் இந்த அளவீடுகளைப் புரிந்துகொள்வது கடினம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பாதுகாப்பு தொடர்பான மாசுபடுத்திகளின் வரம்புகள் மாறும்போது இது ஏற்படும். எடுத்துக்காட்டாக, பூச்சிக்கொல்லிகளுக்கான MRL 0.01 mg/kg என்ற மிகக் கடுமையான வரம்பிலிருந்து 0.1 mg/kg என்ற நடைமுறை வரம்பாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் பொதுமக்களுக்கு தெளிவின்மையை ஏற்படுத்தியது. ஏனெனில், பலர் இது பாதுகாப்பு நிலையிலிருந்து குறைக்கப்பட்டதாகக் கருதினர்.


மரபு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு


மோனோசோடியம் குளுட்டமேட்டை (monosodium glutamate (MSG)) ஒழுங்குபடுத்துவது ஒரு தொடர்ச்சியான மரபுப் பிரச்சினையாகும். இது ஒரு சுவையை மேம்படுத்துகிறது. இதனால், இதை விரிவான ஆய்வுக்கு உட்பட்டு தொடர்ந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல், உணவு சேர்க்கைகள் மீதான கூட்டு நிபுணர் குழு (Joint Expert Committee on Food Additives (JECFA)) MSG நுகர்வுக்கு பாதுகாப்பானது என்று அறிவித்தது. 1987ஆம் ஆண்டில், JECFA ஆனது MSGக்கு "ADI குறிப்பிடப்படவில்லை" என்ற நிலையை வழங்கியது. அனைத்து நாடுகளும் இந்த உலகளாவிய ஒருமித்த கருத்தை இப்போது பின்பற்றுகின்றன.


உணவில் நாங்கள் நம்புகிறோம்: ஆரோக்கியம் மற்றும் சுகாதார விதிமுறைகளை வகுத்தல்


இந்தியாவில், MSG விதிமுறைகள் கணிசமாக உருவாகியுள்ளன. ஆரம்பத்தில், MSG இறைச்சி பொருட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதன் பயன்பாடு படிப்படியாக அனைத்து உணவுகளிலும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இது குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்ற கட்டாய எச்சரிக்கை லேபிளுடன் இது பயன்படுத்த வலியுறுத்துயது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், MSG பாதுகாப்பான உணவு சேர்க்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால், காலாவதியான எச்சரிக்கை அடையாளங்கள் (labels) மற்ற நாடுகளில் அகற்றப்பட்டுள்ளன.


இந்தியாவில் எச்சரிக்கை லேபிள் தவறாக வழிநடத்துகிறது. ஏனென்றால், MSG போன்ற இயற்கையாகவே உருவாகும் சேர்மங்களான குளுட்டமேட்டுகள் பல பொதுவான உணவுகளில் காணப்படுகின்றன. இந்த உணவுகளில் தக்காளி, காளான், பூண்டு மற்றும் தாய்ப்பால் கூட அடங்கும். இதன் காரணமாக, பல நுகர்வோர் MSG எப்போதும் தீங்கு விளைவிக்கும் என்று தவறாக நம்புகிறார்கள். இது தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.


உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்வதற்கு எதிரானது இந்த பழைய அடையாள (labels) முறையாகும். நுகர்வோர் கவலைப்படுவதையும் அறிவியல் உண்மை என்று கூறுவதையும் சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமத்தை இது காட்டுகிறது. இது ஒரு பெரிய பிரச்சினையையும் சுட்டிக்காட்டுகிறது. அறிவியல் இப்போது புரிந்துகொண்டவற்றுடன் பொருந்தாதபோதும், சில பழைய விதிகள் நடைமுறையில் இருக்க இந்தியா பெரும்பாலும் அனுமதிக்கிறது.


அறிவியல் ரீதியாக அதிக தீவிரம் காட்டுவதற்கான நிலை


உணவுப் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இந்த முன்னேற்றத்தைத் தொடர கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. இந்தியாவிற்கு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். இதில் உள்ளூர் நச்சுயியல் ஆய்வுகள் மற்றும் விரிவான மொத்த உணவுமுறை ஆய்வு (TDS) ஆகியவை அடங்கும். இவை, காலப்போக்கில் மக்கள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.


ஆபத்து தொடர்பான தகவல்தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். அறிவியல் செய்திகள் எளிமையாக இருக்க வேண்டும். MSG போன்ற குழப்பமான அடையாளங்களை (labels) தெளிவான, ஆதார அடிப்படையிலான தகவல்களால் மாற்ற வேண்டும். ஆபத்து மதிப்பீட்டாளர்கள் வலுவான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான பயிற்சி அவர்கள் சமீபத்திய அறிவியலுடன் புதுப்பித்த நிலையில் இருக்க உதவும். இது நல்ல முடிவெடுப்பதை ஆதரிக்கிறது.


உணவு பாதுகாப்பு தரநிலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய ஆராய்ச்சி இந்த மாற்றங்களை வழிநடத்த வேண்டும். இந்த செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும். பொது நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியம். இதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் திறந்த மற்றும் நிலையான ஈடுபாடு தேவை. இவற்றில் தொழில், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பாதுகாப்பான மற்றும் அறிவியல் சார்ந்த உணவு அமைப்புகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்க முடியும். இது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் மற்றும் மக்கள் தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய உதவும்.


இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் FSSAI சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால். தொடர்ந்து முன்னேற, அது அறிவியல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். விதிகள் பழைய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில், ஆபத்துகளை தெளிவாக விளக்கிக்கொண்டே இந்தியா தொடர்ந்து அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்.  இதனால் மக்கள் தகவலறிந்தவர்களாகவும், பாதுகாப்பாகவும் உணருவார்கள். மேலும், காரணமின்றி தேவையற்ற பயத்தையும் வளர்க்காமல் இருக்க வேண்டும்.


பவன் அகர்வால் அவர்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இப்போது, ​​அவர் இந்தியாவில் இலாப நோக்கற்ற நிறுவனமான உணவு எதிர்கால அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். உலகளாவிய குழுவான சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் (International Fund for Agricultural Development (IFAD)) மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.


Original article:
Share: