உணவு பாதுகாப்பு தரநிலையில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பேணுதல் -பவன் அகர்வால்

 வெளிப்படைத்தன்மை, பொதுக் கல்வி மற்றும் அறிவியல் அடிப்படையிலான சான்றுகளின் பயன்பாடு ஆகியவை அவசியம். 


இந்த ஆண்டு, ஜூன் 7-ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக உணவுப் பாதுகாப்பு (World Food Safety Day) தினத்தின் கருப்பொருள் “உணவுப் பாதுகாப்பு: செயல்பாட்டில் அறிவியல்” (Food Safety: Science in Action) என்பதாகும். உணவுக் கலப்படத்தைத் தடுப்பதில் குறுகிய கவனம் செலுத்தி, உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையைத் தழுவுவதற்கான இந்தியாவின் பயணத்தைப் பற்றி சிந்திக்க இது ஒரு சரியான தருணம் ஆகும். ஆனால், இதற்கான முன்னேற்றம் இருந்தபோதிலும், இடைவெளிகளும் சவால்களும் உள்ளன.


உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் பயணம், 1954ஆம் ஆண்டின் உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்துடன் (Prevention of Food Adulteration (PFA)) தொடங்கியது. இது உணவுப் பாதுகாப்பை ஒரு எளிய, இருமடங்கு பிரச்சினையாகக் கருதுகிறது. அதாவது, உணவானது கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா? என்பதாகும். இந்த அணுகுமுறை அனைத்து மாசுபடுத்திகளையும் ஒரே மாதிரியாக கருதியது.  அவை வேண்டுமென்றே கலப்படங்கள் (adulterants), உணவு சேர்க்கைகள் (food additives), பூச்சிக்கொல்லி கசடுகள் (pesticide residues), கால்நடை மருந்து கசடுகள் (veterinary drug residues) அல்லது இயற்கையாக நிகழும் நச்சுகள் (even naturally occurring toxins) போன்றவை இதில் அடங்கும். உட்கொள்ளப்பட்ட இந்த மாசுபாடுகளின் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (Food Safety and Standards Authority of India (FSSAI)) நிறுவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 (Food Safety and Standards Act) இயற்றியது திருப்புமுனையாக அமைந்தது. FSSAI அதன் பணியை வழிநடத்த சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தியது.  இது குறிப்பாக, கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையத்தைப் (Codex Alimentarius Commission) பின்பற்றியது. உணவுப் பாதுகாப்பிற்கு FSSAI ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. இந்த அணுகுமுறையில் பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச கசடு வரம்புகளை (maximum residue limits (MRLs)) நிர்ணயிப்பதும் இதில் அடங்கும். இது உணவு சேர்க்கைகளுக்கான பாதுகாப்பான அளவுகளையும் வரையறுத்தது. கூடுதலாக, இது மாசுபடுத்திகள் மற்றும் கால்நடை மருந்து கசடுகளுக்கான தரநிலைகளை ஏற்றுக்கொண்டது.


சில தொகுக்கப்பட்ட உணவுகள் (packaged foods) ஏன் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன?


2020ஆம் ஆண்டுக்குள், FSSAI இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் தரங்களை உருவாக்கி சீரமைத்தது. இந்தத் தரநிலைகள் முன்னேறிய நாடுகளில் உள்ளதைப் போலவே கிட்டத்தட்ட சிறப்பாக இருந்தன. இருப்பினும், இந்த விரைவான முன்னேற்றம் சில பலவீனங்களையும் வெளிப்படுத்தியது.


இடர் மதிப்பீட்டில் உள்ள இடைவெளிகளும் சவால்களும்


இந்தியாவில் நாட்டிற்கு குறிப்பிட்ட நச்சுயியல் ஆய்வுகள் (lacks toxicological studies) இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச கசடு வரம்புகள் (MRLகள்) மற்றும் உணவு சேர்க்கைகளுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல் (acceptable daily intake (ADI)) மதிப்புகள் போன்ற பெரும்பாலான பாதுகாப்பு தரநிலைகள் சர்வதேச தரவுகளிலிருந்து வருகின்றன. இந்தத் தரவு இந்திய உணவுப் பழக்கவழக்கங்கள், விவசாய முறைகள் அல்லது சுற்றுச்சூழல் நிலைமைகளுடன் சரியாகப் பொருந்தாமல் போகலாம். இந்தியாவிடம் மொத்த உணவு ஆய்வு (total diet study (TDS)) இல்லாதது ஆபத்தான மதிப்பீட்டை மேலும் சிக்கலாக்குகிறது. மொத்த உணவு ஆய்வு (TDS) முக்கியமானது. ஏனெனில், இது மக்கள் தங்கள் முழு உணவில் இருந்து எவ்வளவு வெவ்வேறு மாசுபாடுகளை உட்கொள்கிறார்கள் என்பதை அளவிட உதவுகிறது. மொத்த உணவு ஆய்வு (TDS) இல்லாமல், இந்தியா நம்பகத்தன்மையற்ற தரவைச் சார்ந்துள்ளது. இது அதன் பாதுகாப்பு தரநிலைகளின் அறிவியல் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது.


மற்றொரு சவால் ஆபத்தை திறம்பட தொடர்புபடுத்துவதாகும். MRLகள் அதிகபட்ச கசடு வரம்புகள் (MRL) மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல்கள் (ADI) போன்ற தொழில்நுட்ப சொற்கள் மிகச் சிறிய அளவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அளவுகள் parts per million (ppm) அல்லது parts per billion (ppb) மூலம் அளவிடப்படுகின்றன. நுகர்வோர் இந்த அளவீடுகளைப் புரிந்துகொள்வது கடினம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பாதுகாப்பு தொடர்பான மாசுபடுத்திகளின் வரம்புகள் மாறும்போது இது ஏற்படும். எடுத்துக்காட்டாக, பூச்சிக்கொல்லிகளுக்கான MRL 0.01 mg/kg என்ற மிகக் கடுமையான வரம்பிலிருந்து 0.1 mg/kg என்ற நடைமுறை வரம்பாக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் பொதுமக்களுக்கு தெளிவின்மையை ஏற்படுத்தியது. ஏனெனில், பலர் இது பாதுகாப்பு நிலையிலிருந்து குறைக்கப்பட்டதாகக் கருதினர்.


மரபு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு


மோனோசோடியம் குளுட்டமேட்டை (monosodium glutamate (MSG)) ஒழுங்குபடுத்துவது ஒரு தொடர்ச்சியான மரபுப் பிரச்சினையாகும். இது ஒரு சுவையை மேம்படுத்துகிறது. இதனால், இதை விரிவான ஆய்வுக்கு உட்பட்டு தொடர்ந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல், உணவு சேர்க்கைகள் மீதான கூட்டு நிபுணர் குழு (Joint Expert Committee on Food Additives (JECFA)) MSG நுகர்வுக்கு பாதுகாப்பானது என்று அறிவித்தது. 1987ஆம் ஆண்டில், JECFA ஆனது MSGக்கு "ADI குறிப்பிடப்படவில்லை" என்ற நிலையை வழங்கியது. அனைத்து நாடுகளும் இந்த உலகளாவிய ஒருமித்த கருத்தை இப்போது பின்பற்றுகின்றன.


உணவில் நாங்கள் நம்புகிறோம்: ஆரோக்கியம் மற்றும் சுகாதார விதிமுறைகளை வகுத்தல்


இந்தியாவில், MSG விதிமுறைகள் கணிசமாக உருவாகியுள்ளன. ஆரம்பத்தில், MSG இறைச்சி பொருட்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதன் பயன்பாடு படிப்படியாக அனைத்து உணவுகளிலும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இது குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்ற கட்டாய எச்சரிக்கை லேபிளுடன் இது பயன்படுத்த வலியுறுத்துயது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், MSG பாதுகாப்பான உணவு சேர்க்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால், காலாவதியான எச்சரிக்கை அடையாளங்கள் (labels) மற்ற நாடுகளில் அகற்றப்பட்டுள்ளன.


இந்தியாவில் எச்சரிக்கை லேபிள் தவறாக வழிநடத்துகிறது. ஏனென்றால், MSG போன்ற இயற்கையாகவே உருவாகும் சேர்மங்களான குளுட்டமேட்டுகள் பல பொதுவான உணவுகளில் காணப்படுகின்றன. இந்த உணவுகளில் தக்காளி, காளான், பூண்டு மற்றும் தாய்ப்பால் கூட அடங்கும். இதன் காரணமாக, பல நுகர்வோர் MSG எப்போதும் தீங்கு விளைவிக்கும் என்று தவறாக நம்புகிறார்கள். இது தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.


உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்வதற்கு எதிரானது இந்த பழைய அடையாள (labels) முறையாகும். நுகர்வோர் கவலைப்படுவதையும் அறிவியல் உண்மை என்று கூறுவதையும் சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமத்தை இது காட்டுகிறது. இது ஒரு பெரிய பிரச்சினையையும் சுட்டிக்காட்டுகிறது. அறிவியல் இப்போது புரிந்துகொண்டவற்றுடன் பொருந்தாதபோதும், சில பழைய விதிகள் நடைமுறையில் இருக்க இந்தியா பெரும்பாலும் அனுமதிக்கிறது.


அறிவியல் ரீதியாக அதிக தீவிரம் காட்டுவதற்கான நிலை


உணவுப் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இந்த முன்னேற்றத்தைத் தொடர கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. இந்தியாவிற்கு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். இதில் உள்ளூர் நச்சுயியல் ஆய்வுகள் மற்றும் விரிவான மொத்த உணவுமுறை ஆய்வு (TDS) ஆகியவை அடங்கும். இவை, காலப்போக்கில் மக்கள் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.


ஆபத்து தொடர்பான தகவல்தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். அறிவியல் செய்திகள் எளிமையாக இருக்க வேண்டும். MSG போன்ற குழப்பமான அடையாளங்களை (labels) தெளிவான, ஆதார அடிப்படையிலான தகவல்களால் மாற்ற வேண்டும். ஆபத்து மதிப்பீட்டாளர்கள் வலுவான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான பயிற்சி அவர்கள் சமீபத்திய அறிவியலுடன் புதுப்பித்த நிலையில் இருக்க உதவும். இது நல்ல முடிவெடுப்பதை ஆதரிக்கிறது.


உணவு பாதுகாப்பு தரநிலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய ஆராய்ச்சி இந்த மாற்றங்களை வழிநடத்த வேண்டும். இந்த செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும். பொது நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியம். இதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் திறந்த மற்றும் நிலையான ஈடுபாடு தேவை. இவற்றில் தொழில், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பாதுகாப்பான மற்றும் அறிவியல் சார்ந்த உணவு அமைப்புகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்க முடியும். இது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் மற்றும் மக்கள் தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய உதவும்.


இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் FSSAI சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால். தொடர்ந்து முன்னேற, அது அறிவியல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். விதிகள் பழைய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில், ஆபத்துகளை தெளிவாக விளக்கிக்கொண்டே இந்தியா தொடர்ந்து அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்.  இதனால் மக்கள் தகவலறிந்தவர்களாகவும், பாதுகாப்பாகவும் உணருவார்கள். மேலும், காரணமின்றி தேவையற்ற பயத்தையும் வளர்க்காமல் இருக்க வேண்டும்.


பவன் அகர்வால் அவர்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இப்போது, ​​அவர் இந்தியாவில் இலாப நோக்கற்ற நிறுவனமான உணவு எதிர்கால அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். உலகளாவிய குழுவான சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் (International Fund for Agricultural Development (IFAD)) மூத்த ஆலோசகராகவும் உள்ளார்.


Original article:
Share: