முக்கிய அம்சங்கள்:
• தகவல்களின் படி, ஜல் ஜீவன் திட்டத்தின் தணிக்கைப் பயிற்சி மேம்பட்ட நிலையில் உள்ளது மற்றும் அறிக்கைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India (CAG)) தனது தணிக்கைத் திட்டத்தில் இந்த விவரகங்களைச் சேர்த்த பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த செயல்முறை தொடங்கியது. இது 2019-20 நிதியாண்டு முதல் 2023-24 வரையிலான மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்ட செயல்படுத்தலை உள்ளடக்கியது.
• இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் தலைமை கணக்காளர் (Principal Accountant General (PAG)) அல்லது கணக்கு பொது அலுவலர் (Accountant General (AG)) தலைமையில் உள்ள அலுவலகங்கள் வழியாக திட்டத்தின் கிடைமட்ட தணிக்கை (horizontal audit) ஆய்வை நடத்துகிறது.
• பெரும்பாலான மாநிலங்களில் களப்பணி முடிந்துவிட்டது. அதே நேரத்தில் சில மாநிலங்களில், பயிற்சி அறிக்கை எழுதும் நிலையில் உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. இரண்டு மாநிலங்களின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கைகள் தலைமையகத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
• அறிக்கைகள் முடிவடைந்தவுடன் அவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
• தணிக்கை மாநில அளவில் நடைபெறும், தேசிய அளவில் அல்ல. ஏனெனில், மாநில அரசுகள் ஜல் ஜீவன் திட்ட நடைமுறையில் முன்னணி வகிக்கின்றன. திட்ட நடைமுறை, திட்டமிடல் மற்றும் நிதி செயல்திறன் போன்ற அனைத்து அம்சங்களும் ஆய்வில் அடங்கும். கூடுதல் செலவினங்கள் ஏன் ஏற்பட்டுள்ளன என்பதையும் மாநில அளவில் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
• தகவல்களின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் பொதுவாக ஒரு திட்டத்தின் 70-80% செலவு முடிந்த பிறகு அதனை தணிக்கை செய்கிறார். ஜல் ஜீவன் திட்டம் 2019-20 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்ப ஆண்டுகளில் செலவு குறைவாக இருந்தது. எனவே, 2023-24ஆம் ஆண்டில் முதல் கட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அதைத் தணிக்கைக்குத் தேர்ந்தெடுத்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
• ஜல் ஜீவன் திட்டத்துடன் சேர்த்து, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து மாநிலங்களிலும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதம் திட்டத்திலும் (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) ஆய்வை நடத்தி வருகிறது. இந்த அறிக்கைகளும் விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டில் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (National Rural Employment Guarantee Scheme (NREGS))ஆய்வை கடைசியாக செய்தது.
உங்களுக்குத் தெரியுமா?:
. பிரதம மந்திரி நரேந்த்ர மோடி அவர்களால் ஆகஸ்ட் 15, 2019 அன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission),டிசம்பர் 2024 இறுதிக்குள் சுமார் 16 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளில் இலக்கில் 75 சதவீதத்தை மட்டுமே அடைய முடியும். மீதமுள்ள 4 கோடி குழாய் இணைப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு டிசம்பர் 31, 2028 வரை நீட்டிப்பதன் மூலம் நிறுவ இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.
. 2019ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுதான் முதல் முக்கிய தணிக்கையாகும். தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் (National Rural Drinking Water Programme (NRDWP)) செயல்திறன் தணிக்கையை நடத்தியிருந்தது. அதன் அறிக்கை 2018ஆம் ஆண்டில்சமர்ப்பிக்கப்பட்டது. இது 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. 2019ஆம் ஆண்டில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துடன் இணைத்து ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கியது. அதன் பிறகு, இது CAG நடத்தும் முதல் தணிக்கைப் பயிற்சியாகும்.
• நாடு முழுவதும் உள்ள ஜல் ஜீவன் திட்டங்களின் "நில ஆய்வுக்காக" ஒன்றிய அரசு 100க்கும் மேற்பட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பு அலுவலர்களை (Central Nodal Officers (CNOs)) நியமித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக மே 8 அன்று அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
• 2019ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ரூ.8.29 லட்சம் கோடி மொத்த மதிப்பீட்டில் சுமார் 6.4 லட்சம் நீர் வழங்கல் திட்டங்கள் திட்டத்தின் அசல் செலவினமான ரூ.3.6 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம் (ஒன்றிய அரசு ரூ.2.08 லட்சம் கோடி வழங்கியுள்ளது. மாநில அரசுகள் 1.52 லட்சம் கோடி வழங்கியுள்ளன.
• கூடுதல் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜல் சக்தி அமைச்சகம் ரூ.2.08 லட்சம் கோடிக்கு மேல் ரூ.2.79 லட்சம் கோடி கூடுதல் ஒன்றிய நிதியை அங்கீகரிக்க செலவுச் செயலாளர் தலைமையிலான செலவு நிதிக் குழுவை அணுகியது. இருப்பினும், செலவு நிதி குழு (Expenditure Finance Committee (EFC)) ஒன்றிய அரசின் பங்காக ரூ.1.51 லட்சம் கோடியை மட்டுமே பரிந்துரைத்தது. இது ஜல் சக்தி அமைச்சகத்தால் கோரப்பட்ட ரூ.2.79 லட்சம் கோடியை விட 46% குறைவு என்று ஏப்ரல் 21, 2023 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
• தகவலின் படி, தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் தற்போது தேசிய உயர்தர கல்வி இயக்கம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan), கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் நலன், பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), திறன் நகரங்கள் திட்டம் (Smart City Mission) போன்ற பல ஒன்றிய அரசுத் திட்டங்களை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission (JJM)) தணிக்கை இதேபோல் செய்யப்படும்.