மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை வரையறுக்கும் அளவுகோல்கள் மற்றும் குறிகாட்டிகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு தனிப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது.
உண்மையில், கடந்த காலத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான கொள்கைகள் இந்தப் பகுதிகளில் உள்ள இடவியல் உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகளின் நிகழ்நேர கிடைக்கும் தன்மையுடன் ஒழுங்கமைக்கப்படவில்லை. இந்த உண்மையான தரவு அடிப்படையிலான அளவுகோல்களின் கிடைக்கும் தன்மை கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளின் விரைவான சமூக-பொருளாதார மாற்றத்தை துரிதப்படுத்த உதவும் சூழல் அமைப்பை உருவாக்கும்.
முதலாவதாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் என்றால் என்ன என்பது முக்கியமானது. கிராமப்புறங்களை (rurality) வரையறுக்க ஒரு எளிய வழி, அவை நகர்ப்புறம் அல்லாத இடங்கள் என்று கூறுவதாகும். நகர்ப்புறங்கள் பொதுவாக எத்தனை பேர் நெருக்கமாக வாழ்கிறார்கள் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், நகர்ப்புறப் பகுதியின் வரையறை பின்வருமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது:
(அ) நகராட்சி, மாநகராட்சி, இராணுவ முகாம் (cantonment board) அல்லது அறிவிக்கப்பட்ட நகர்ப் பகுதி குழு போன்ற அனைத்து சட்டப்பூர்வ இடங்கள் நகர பகுதிகளாகும்.
(ஆ) பின்வரும் மூன்று நிபந்தனைகளையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யும் இடம்::
(i) குறைந்தபட்சம் 5,000 மக்கள்தொகை பகுதி;
(ii) குறைந்தபட்சம் 75 சதவீத ஆண் தொழிலாளர் மக்கள்தொகை விவசாயம் அல்லாத தொழில்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்; மற்றும்
(iii) ஒரு சதுர கி.மீ.க்கு குறைந்தபட்சம் 400 மக்கள்தொகை அடர்த்தி (ஒரு சதுர மைலுக்கு 1,000) இருக்க வேண்டும்.
மேற்கண்ட வரையறையின்படி 'நகர்ப்புறம்' (Rural) என வகைப்படுத்தப்படாத பகுதி 'கிராமப்புறம்' (Urban) என கருதப்படுகிறது.
தற்போதுள்ள நகர்ப்புற-கிராமப்புற வகைப்பாட்டு முறைகள் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை கொண்டுள்ளன. ஏனெனில், அவை வளர்ச்சி பற்றாக்குறைகளை அடையாளம் காணவும் வரையறுக்கவும் பயன்படுத்தக்கூடிய வளர்ச்சி குறிகாட்டிகளை உருவாக்க உதவவில்லை.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வரையறைகள் முக்கிய மக்கள்தொகை, பொருளாதார, கல்வி அல்லது சுகாதார சேவை வழங்குநர் பண்புகளுடன் இணைக்கப்படும்போது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் சிறப்பாக இலக்காக வைக்கமுடியும்.
இந்தியாவில் "கிராமம்" என்றால் என்ன என்பதை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் தரவு, கிராமப்புற மேம்பாட்டுக் கொள்கைகளை உருவாக்குவதில் நேரடியாக உதவுவதில்லை. கிராமப்புறம் (Rurality) என்பது அனுபவ சோதனைக்கு ஏற்றதாக இல்லாத ஒரு கட்டமைப்பாகும்.
சில நாடுகள் நகர்ப்புறத்தை வரையறுக்க, சேவைகள் கிடைக்கும் தன்மையை கருத்தில் கொள்கின்றன.
உலகளாவிய எடுத்துக்காட்டுகள் (Global examples)
ஹோண்டூராஸில் (Honduras), ஒரு பகுதி 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தால் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் மின்சாரத்திற்கான உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தால் அது நகர்ப்புறமாக கருதப்படுகிறது. இந்த வரையறை வறுமை பகுப்பாய்வின் நிலைப்பாட்டில் இருந்து பொருத்தமானது. ஏனெனில், வறுமை பொதுவாக இந்த சேவைகள் இல்லாததுடன் தொடர்புடையது.
மக்கள்தொகை அடர்த்தி மற்றும் ஒரு பெரிய நகரத்திற்கான தூரம் போன்ற மாதிரிகளைப் பயன்படுத்தி, லத்தீன் அமெரிக்க கிராமப்புற அளவீடு உருவாக்கப்பட்டது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற எல்லைகளின் வரையறுக்கப்பட்ட, விலக்கப்பட்ட கருத்தாக்கங்கள் சமூக-பொருளாதார யதார்த்தங்களை அளவிடத் தவறிவிடுகின்றன.
சமூகப் பொருளாதார போக்குகள் மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சி அணுகுமுறைகள் மற்றும் கருத்துகள் பற்றிய விழிப்புணர்வைச் சுற்றி கொள்கைகளை மறுசீரமைப்பதன் மூலம் மட்டுமே முரண்பாடுகளைக் கடந்து வளர்ச்சி அடைவது அடைவது சாத்தியமாகும்.
வறுமை விகிதங்கள் (Poverty rates) வரிசையாக பெரிய பெருநகரப் பகுதிகளில் இருந்து அதிக கிராமப்புற தூரங்களுடன் நேர்மறையாக தொடர்புடையவை. மிகவும் தொலைதூர கிராமப்புற சமூகங்கள் மிகவும் நெகிழ்வற்ற தொழிலாளர் விநியோகத்தைக் கொண்டுள்ளன. இது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கிறது.
நகர மையங்களுக்கான அணுகல் மோசமடைவதால் நலன் வேகமாக குறைகிறது. எனவே, கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார செயல்முறைகளின் இடம்சார்ந்த பரிமாணத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
பரந்த வரையறை (Broader definition)
கிராமப்புற வளர்ச்சிக்கான கொள்கை உருவாக்கம், மக்கள்தொகை தரவுகள் மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்புகளின் நிலையை உள்ளடக்கி, கிராமப்புறப் பகுதிக்கான பரந்த வரையறையை ஏற்றுக்கொண்டால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புறத்தின் நிலையான கருத்தை சரிசெய்து, காலப்போக்கில் மாறிவரும் மற்றும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் ஒரு புதிய வரையறையை உருவாக்க வேண்டும்.
கொள்கை வகுப்பாளர்கள் ஒரு கிராமப்புறப் பகுதியின் தன்மையை பாதிக்கும் மக்கள்தொகை மற்றும் பொருளாதார மாற்றங்களை அடையாளம் காண வேண்டும். கிராமப்புற மேம்பாடு, இடம்சார்ந்த சமநிலை செயல்முறைகளை நம்பி, மக்கள் சார்ந்த கொள்கைகளில் (people-based policies) கவனம் செலுத்த வேண்டும்.
எழுத்தாளர், ஹைதராபாத்தில் உள்ள தேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்தில் (National Institute of Rural Development & Panchayati Raj (NIRDPR)) பணியாற்றியவர்.