இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு ஏன்? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• 250-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வலையமைப்பால் நாடு முழுவதும் மீட்கப்பட்ட 53,651 குழந்தைகளில், ராஜஸ்தான் 3,847 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா 11,063 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து பீகார் 3,974 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்புபணிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் (Just Rights for Children (JRC)) என்ற வலையமைப்பு, சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 38,889 மீட்பு பணிகளை மேற்கொண்டதாக திங்கள்கிழமை தெரிவித்தது.


• அறிக்கை இன்னும் கவலையளிக்கும் போக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் மீட்கப்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் குழந்தைத் தொழிலாளரின் மோசமான வடிவங்கள் என வகைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரிவது கண்டறியப்பட்டது - ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் மற்றும் இசைக்குழுகள் போன்றவற்றிலும், மேலும் குழந்தைகள் பிற வகையான பாலியல் சுரண்டலுக்கு அளக்கப்படுகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள், JRC கூட்டாளியான இந்தியா குழந்தைகள் பாதுகாப்பின் (India Child Protection) ஆராய்ச்சிப் பிரிவான Centre for Legal Action and Behaviour Change (C-LAB)-ஆல் வெளியிடப்பட்ட "பூஜ்ஜியத்திற்கான வழக்கை உருவாக்குதல்: குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திருப்புமுனையாக வழக்கு எவ்வாறு பாதிக்கிறது" (Building the Case for Zero: How Prosecution Affects as a Tipping Point to End Child Labour) என்ற தலைப்பிலான அறிக்கையின் ஒரு பகுதியாகும்.


• சோதனைகளைத் தொடர்ந்து 38,388 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன மற்றும் 5,809 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவற்றில் 85 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் தொடர்பானவை என்று அறிக்கை கூறுகிறது. தெலங்கானா 11,063 குழந்தைகள் மீட்கப்பட்டதில் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து பீகார் (3,974), ராஜஸ்தான் (3,847), உத்தரப் பிரதேசம் (3,804), மற்றும் டெல்லி (2,588) இருந்தன. மொத்தம் 5,809 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 85 சதவீதம் பேர் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் இருந்தனர். தெலுங்கானா, பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக கைதுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிக மீட்பு எண்ணிக்கை இருந்தபோதிலும் குறைவான கைதுகள் மட்டுமே நடந்துள்ளன. இது செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகிறது என்று அறிக்கை கூறியது.


• நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, குழந்தைத் தொழிலாளரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தேசிய பணியை (National Mission to End Child Labour) தொடங்குவது, அதற்கு போதுமான வளங்களை ஒதுக்குவது மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைத் தொழிலாளர் பணிக்குழுக்களை (Child Labour Task Forces) உருவாக்குவது ஆகியவற்றை பரிந்துரைக்கிறது. குழந்தை பாதுகாப்புக்காக பணிபுரியும் நாட்டின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பின் (non-governmental organization (NGO)) வலையமைப்பால் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் தரவுகளின் அடிப்படையிலான இந்த அறிக்கை, ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரையிலான காலகட்டத்திற்கானது.


உங்களுக்குத் தெரியுமா?


• குழந்தைத் தொழிலாளரை ஒழிப்பதற்கு சட்ட நடவடிக்கை, கல்வி மற்றும் மறுவாழ்வை அறிக்கை வலியுறுத்துகிறது மற்றும் பல பரிந்துரைகளை செய்கிறது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், குழந்தைத் தொழிலாளரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்று அறிக்கை கூறியது. மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாக மாற நேரிடும். எனவே, குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு நிதி (Child Labour Rehabilitation Fund) காலத்தின் தேவையாகும்.


• மேலும், 18 ஆண்டுகள் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வது குழந்தைத் தொழிலாளர்களைத் தடுக்க உதவும். ஏனெனில், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கை கூறியுள்ளது. விரிவான கொள்கை மாற்றங்கள், அரசாங்க கொள்முதலில் குழந்தைத் தொழிலாளர் பயன்பாட்டில் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை (zero-tolerance policy), அபாயகர தொழில்களின் பட்டியலின் விரிவாக்கம், மாநில-சார்ந்த குழந்தைத் தொழிலாளர் கொள்கைகள், நிலையான வளர்ச்சி இலக்கு 8.7 (Sustainable Development Goal (SDG)) கால அவகாசத்தை 2030 வரை நீட்டிப்பது, மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான, காலக்கெடு கொண்ட சட்ட நடவடிக்கை ஆகியவற்றுக்கு அறிக்கை அழைப்பு விடுக்கிறது.



Original article:

Share: