தொழிலாளர் சந்தை நாடு முழுவதும் கட்டமைப்பு மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. திறன் மற்றும் வேலை சார்ந்த பயிற்சி தொழிலாளர்கள் தங்கள் வேலையின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த வேலைகளுக்குச் செல்லவும் உதவும்.
இந்தியாவில் வேலையின்மை வளர்ச்சி பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இது மாறிக்கொண்டே இருக்கலாம். இந்த மாற்றத்தை நாம் அங்கீகரித்து அதை ஆதரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு வகையான ஆதாரங்களை ஆராய்வோம். சமீபத்திய ஆய்வுகள் சிறந்த வேலை உருவாக்கத்தைக் காட்டுகின்றன. 2020-ம் ஆண்டுகளின் பல அதிர்ச்சிகளுக்குப் பிறகு, இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) நிதியாண்டு-2023 வேலைவாய்ப்பு 5.4 மில்லியனாகக் காட்டியது. இது நிதியாண்டு-2016-ஐ விடக் குறைவாக இருந்தது. ஆனால், நிதியாண்டு-2024-ல் எதிர்பார்ப்புகளை மீறியது. MSME உதயம் போர்டல் (MSME Udyam portal) வேலைவாய்ப்புகள் 2023-ம் ஆண்டில் 121 மில்லியனில் இருந்து 2024-ம் ஆண்டில் 201.9 மில்லியனாக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது.
தொழில்துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) FY23, உற்பத்தித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.5% அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது FY21-ல் 17.2 மில்லியனிலிருந்து FY23-ல் 18.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வேலைவாய்ப்பின் சராசரி வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) குறிப்பிடுகிறது. 2017/18-19/20 ஆகிய ஆண்டுக்கு இடையில், ஆண்டுக்கு 1.15%-லிருந்து 2019/20 முதல் 2022/23 வரை ஆண்டுக்கு 5.8% ஆக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலதனம், உழைப்பு, எரிசக்தி, பொருட்கள் மற்றும் சேவைகள் (Capital, Labor, Energy, Materials, and Services(KLEMS)) தரவுத்தளம், FY24-ல் 46.7 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் காட்டுகிறது. இது FY23-ல் உருவாக்கப்பட்ட 19.1 மில்லியன் வேலைவாய்ப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகம்.
கிராமப்புற வேலைகளில் அதிகரித்து வரும் பன்முகத்தன்மை மற்றும் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (labour force participation rate (LFPR)) அதிகரிப்பு, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது மற்றொரு பொருத்தமான சான்று ஆகும். ஆண்கள் கிராமப்புற வேளாண் அல்லாத வேலைக்கு (rural non-farm employment (RNFE)) இடம்பெயர்வதால் அல்லது மாறுவதால், அதிகமான பெண்கள் வேலை செய்கிறார்கள். 2023-24 PLFS ஆண்டு அறிக்கையானது, வழக்கமான கிராமப்புற தொழிலாளர்களில் 59.8% மட்டுமே விவசாயத்தில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மீதமுள்ள தொழிலாளர்கள் பல்வேறு வகையான கிராமப்புற வேளாண் அல்லாத வேலைகளில் (RNFE) உள்ளனர். RNFE-யில் திறமையான தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள். விவசாயத்தில் ஆண் தொழிலாளர்களின் பங்கு 49.4% ஆகக் குறைந்தது. அதே நேரத்தில், பெண் தொழிலாளர்களின் பங்கு 76.9% ஆக உயர்ந்தது.
2006 முதல் 2023 வரை கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், விவசாயத்திலிருந்து வருமான வளர்ச்சி குறைவாக இருந்தது. இது, ஆண்டுக்கு 0.1% மட்டுமே ஆகும். இருப்பினும், பணம் அனுப்புதல் உட்பட வேளாண் அல்லாத நடவடிக்கைகளிலிருந்து வரும் வருமானம் ஆண்டுக்கு 7.3% ஆக வளர்ந்தது. வீட்டு வருமானத்தில் விவசாயத்தின் பங்கு 22%-லிருந்து 8% ஆகக் குறைந்தது.
PLFS தரவு 2017-18-ல் தொடங்கியதிலிருந்து, கிராமப்புற உற்பத்தி வேலைகள் 4% ஆக வளர்ந்தன. இது நகர்ப்புற உற்பத்தி வேலைகளில் 3.8% வளர்ச்சியைவிட அதிகமாகும். கட்டுமானம் மற்றும் வர்த்தகமும் பல வேலைகளை வழங்குகின்றன. அரசாங்கத் திட்டங்கள் இந்த நடவடிக்கைகளில் பலவற்றை ஆதரிக்கின்றன.
2000-ம் ஆண்டுகளில், அதிகமான ஆண்கள் இடம்பெயர்ந்தனர். இது பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதத்தில் (Labor Force Participation Rate (LFPR)) சரிவுக்கு வழிவகுத்தது. குடும்ப வருமானம் அதிகரிக்கும் போது பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) முதலில் குறைகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும், வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் அது மீண்டும் உயர்கிறது. எனவே, வேலை செய்யும் பெண்களின் தற்போதைய அதிகரிப்பு தேவை காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிக வருமானத்துடன் அதிகரித்து வரும் விருப்பங்களின் காரணமாக அமையலாம். நகர்ப்புறங்களிலும் பெண்களின் LFPR அதிகரித்து வருகிறது. அங்கு இடம்பெயர்வு ஒரு காரணியாக இல்லை. அதிக வருமானத்துடன், பெண்கள் அதிக வீட்டு உதவியை வாங்க முடியும் மற்றும் வீட்டு வேலைகளுக்கு குறைவாகவே கட்டுப்படுகிறார்கள்.
சிலர் அதிக இளைஞர் வேலையின்மை என்றால் போதுமான வேலைகள் இல்லை என்று நம்புகிறார்கள். ஆனால், பல இளைஞர்கள் சிறந்த வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள். 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் காத்திருப்பதை நிறுத்திவிட்டு வேலையின்மை குறைகிறது. பலர் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தொடக்க நிலையில் தனியார் வேலைகளைவிட அதிகமாக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த வேலைகள் குறைவான வேலை அழுத்தத்தைக் கொண்டுள்ளன மற்றும் அதிக பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், உயர் மட்டங்களில், அரசு வேலைகள் மிகக் குறைவான ஊதியத்தை வழங்குகின்றன. தொடக்க நிலை அரசு வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டால், இளைஞர் வேலையின்மை கணிசமாகக் குறையும்.
இந்த விருப்பங்கள் வேலை பற்றாக்குறைக்கும் கீழ் மட்ட வேலைகளில் அதிக ஊதிய வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. சுயதொழில் செய்பவர்கள் 2023-24ஆம் ஆண்டில் அதிகபட்ச சராசரி ஊதிய வளர்ச்சியை 9.6% கொண்டிருந்ததாக PLFS தரவு காட்டுகிறது. அதைத் தொடர்ந்து சாதாரண தொழிலாளர்கள் சராசரி ஊதிய வளர்ச்சியை 7.4% பெற்றனர். அவர்களின் தினசரி ஊதியம் ₹433, வழக்கமான ஊதியம் பெறுபவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹21,103 உடன் ஒப்பிடுகையில் நன்றாக உள்ளது, இது 5.5 சதவீதம் மட்டுமே வளர்ந்தது.
ஊதியம் மற்றும் வருமானம்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உண்மையான ஊதியங்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. PLFS தரவுகளின் அடிப்படையில் ICRIER அறிக்கைகளின்படி, 2019 முதல் பெயரளவு அடிப்படையில் நகர்ப்புற ஊதியங்கள் ஆண்டுக்கு 6% வளர்ந்துள்ளன. இருப்பினும், உண்மையான அடிப்படையில் (பணவீக்கத்திற்கு சரிசெய்யப்பட்டது), அவை வருடத்திற்கு 0.5% மட்டுமே அதிகரித்துள்ளன. இது அதிக வேலைகள் மற்றும் அதிக குடும்ப வருமானம் என்ற கருத்துடன் பொருந்துமா?
உழைப்பு உற்பத்தித்திறன் மற்றும் உபரி உண்மையான ஊதியங்களை பாதிக்கிறது. தொழிலாளர் உள்ளீர்த்தல் (labour absorption) அடிப்படையான இந்த கட்டத்தில், வருமான வளர்ச்சி முக்கியமாக மேம்பட்ட திறன்களுடன் சிறந்த வேலைகளுக்குச் செல்வதிலிருந்து வருகிறது. இது சராசரி உண்மையான ஊதியங்களின் அதிகரிப்பைவிட அதிகமாக நிகழ்கிறது. திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் வேலைகளைத் தவிர, அதிகப்படியான உழைப்பு முழுமையாக உறிஞ்சப்படும் வரை உண்மையான ஊதியங்கள் உயர வாய்ப்பில்லை.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் நிலையான உயர் வளர்ச்சி அனைத்து மட்டங்களிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சில சிதைவுகள் இருந்தாலும், இந்திய தொழிலாளர் சந்தை சிறப்பாக செயல்படுவதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
திறன்கள் மற்றும் வேலை சார்ந்த படிப்புகளில் பயிற்சி அளிப்பது தொழிலாளர்கள் தங்கள் பணியின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த வெகுமதிகளைப் பெறவும் உதவும். நிலையான உண்மையான ஊதியங்கள் வளர்ச்சிக் கொள்கைகளின் தோல்வியாகக் காணப்படுகின்றன. இருப்பினும், 2010-ம் ஆண்டுகளில், உண்மையான ஊதிய வளர்ச்சி உற்பத்தி வளர்ச்சியைத் தாண்டிச் சென்றபோது அதிகப் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக மாறியது.
2010 முதல் 2013 வரை, உண்மையான கிராமப்புற வேளாண் மற்றும் வேளாண் அல்லாத ஊதியங்கள் சுமார் 7 சதவீதம் வளர்ந்தன. அவை இரட்டை இலக்கங்களில்கூட உச்சத்தை எட்டின. இருப்பினும், நிதி நிலைமைகள் இறுக்கமடைந்து இரட்டை இலக்க பணவீக்கத்திற்குப் பிறகு, ஊதியங்கள் பூஜ்ஜியத்திற்குத் திரும்பின.
2010 மற்றும் 2013-க்கு இடையில் ஊதிய உயர்வு தனித்துவமான மற்றும் நீடித்து நிலைக்க முடியாத சூழ்நிலைகளால் ஏற்பட்டது. 2007-ம் ஆண்டில் உலகளாவிய உணவு விலைகள் காரணமாக உணவு பணவீக்கம் அதிகரித்தது.
தொடர்ச்சியான அதிக உணவுப் பணவீக்கம் அதிக ஊதியத்திற்கான தேவையை அதிகரித்தது. உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு (Global Financial Crisis (GFC)), அரசாங்கம் விவசாயத்தில் கட்டுமானத்திற்காக அதிக செலவு செய்தது. இது கிராமப்புற தொழிலாளர்களுக்கான தேவையை அதிகரித்தது. ஆனால், வரையறுக்கப்பட்ட உணவு விநியோகத்தின் சிக்கலைத் தீர்க்கவில்லை. வேளாண் தொடர்பான ஊதியங்கள் உற்பத்தித்திறனைவிட அதிகமாக உயர்ந்தன. இது செலவுகள் மற்றும் விலைகளை மேலும் அதிகரித்தது. எனவே, உற்பத்தித்திறனைவிட அதிக ஊதிய வளர்ச்சி நீண்ட காலம் நீடிக்க முடியாது.
ஆனால், மெதுவான வருமான வளர்ச்சி நுகர்வு தேவையைக் குறைக்கிறது. தொற்றுநோய்க்குப் பிறகு உண்மையான தனியார் இறுதி நுகர்வுச் செலவு (private final consumption expenditure (PFCE)) குறைந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.
இது FY24-ல் 4 சதவீதமாக மட்டுமே வளர்ந்தது. இருப்பினும், FY25-ல் தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சியான 7 சதவீதமாக மீண்டுள்ளது. இது ஓரளவு வேலை வளர்ச்சி மற்றும் வருமானத்தில் மீட்சியைக் குறிக்கிறது. இரண்டாம் காலாண்டில் (Q2) 6 சதவீதமாக சிறிய சரிவு சுழற்சி மந்தநிலையின் ஒரு பகுதியாகும். இது நிதி நிலைமைகள் எளிதாக்கப்பட வேண்டும்.
நிலையான வேலை வளர்ச்சி
2021 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் வளர்ச்சி சீராக இருந்து, இதன் வளர்ச்சியானது சராசரியாக 8.3% ஆகும். நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியைக் கவனிக்கும்போது வேலைவாய்ப்புகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. முந்தைய காலகட்டங்களில், வளர்ச்சி நிலையற்றதாக இருந்தது. இது வேலை உருவாக்கத்தை மெதுவாக்கியது. சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் இந்த யோசனையை ஆதரிக்கின்றன. FY25-ன் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர் சந்தையானது பலவீனமடைந்து, இதன் வளர்ச்சி 5.4% ஆகக் குறைந்ததால், வேலையின்மை விகிதம் 6.6% ஆக இருந்தது. அரசாங்க மூலதனச் செலவு அதிகரித்தபோது, வேலையின்மை விகிதம் மூன்றாம் காலாண்டில் 6.4% ஆகக் குறைந்தது.
சீர்திருத்தங்களுக்குப் பிறகு சராசரி தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரித்தது. ஆனால், இன்னும் அதிக பெருநிறுவன இலாபங்கள் மற்றும் சேமிப்புகளுக்கு பெருமளவில் பங்களித்துள்ளது. அதிக நிறுவன முதலீட்டைத் தூண்டுவதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் அழுத்தம் மற்றும் ஊக்கத்தொகைகள் இரண்டும் தேவை. ஆனால், நிச்சயமற்ற தன்மையால் பெருநிறுவனங்களின் விரிவாக்கத்தைத் தடுக்கிறது. உள்நாட்டு நிலைத்தன்மை இருந்தபோதிலும் பல வெளிப்புற அதிர்ச்சிகள் நிலையற்றத் தன்மையை உருவாக்கியது. தொற்றுநோய்க்குப் பிந்தைய எதிர் சுழற்சி பேரியல் பொருளாதாரம் மற்றும் பிற ஆதரவுக் கொள்கைகள் வெளிப்புற அதிர்ச்சிகள் இருந்தபோதிலும் வளர்ச்சியைத் தக்கவைக்க முடிந்தது. இது எதிர்காலத் திட்டங்களில் பணியமர்த்தவும் முதலீடு செய்யவும் வணிகங்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
உலகளாவிய உறுதியற்ற தன்மையின் போது வளர்ந்து வரும் சந்தைகளுக்கான வழக்கமான ஆலோசனை முன்னெச்சரிக்கையாக கொள்கைகளை இறுக்குவதாகும். இருப்பினும், தொற்றுநோய்க்குப் பிறகு சிறப்பாக செயல்பட்ட கொள்கைகள் தொடர வேண்டும். அவை அதிக வளர்ச்சியை அடையவும் அதிக வேலைகளை உருவாக்கவும் உதவுகின்றன. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது வெளிப்புற அதிர்ச்சிகளைக் கையாளும் அளவுக்கு வலுவாகவும் பன்முகத்தன்மையுடனும் உள்ளது. இந்தக் கொள்கைகளைத் தொடர்வது கணிக்க முடியாத சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் வேலை சந்தையில் சமீபத்திய நேர்மறையான மாற்றங்களை ஆதரிப்பதற்கும் சிறந்த வழியாகும்.
எழுத்தாளர் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், IGIDR