இந்திய நகரங்களுக்கு ஒரு சரியான திட்டம் தேவை -அமிதாப் காந்த், ரன்வீர் நாகைச்

 சிங்கப்பூரின் கட்டமைக்கப்பட்ட நகரமயமாக்கலில் இருந்து கற்றுக்கொள்வதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த இடங்களாக மாற்றுவதற்கு அவை ஊக்குவிக்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு குளிர்காலத்திலும், டெல்லியின் காற்றானது மோசமான நிலையில் ஆபத்தானதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிடும். மாசுபாடு தலைநகரில் மட்டும் ஒரு பிரச்சனை அல்ல; தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் நமது நகரங்களும் உள்ளன. இந்தப் பிரச்சினை மாசுபாட்டைப் பற்றியது மட்டுமல்ல. இந்திய நகரங்கள் காலநிலை மாற்றம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பலவீனமான பொது சேவைகளால் பல சவால்களை எதிர்கொள்கின்றன. 2036-ம் ஆண்டுக்குள், 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்திய நகரங்களில் வாழ்வார்கள். ஆனால், இந்த வளர்ச்சிக்கு நமது நகரங்கள் தயாராக இல்லை. சாலைகள் நெரிசல் மிகுந்தவை, மாசுபாடு மோசமடைந்து வருகிறது மற்றும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தோல்வியடைகின்றன. நமது நகரங்கள் பாதுகாப்பற்றதாகவும் வாழத் தகுதியற்றதாகவும் மாறி வருகின்றன.


இந்திய நகரங்களுக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. இருப்பினும், பாங்காக், லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகளாவிய இடங்களுடன் போட்டியிட இவர்கள் போராடி வருகிறார்கள். பாங்காக் அதன் திறமையான மெட்ரோ, விருவிருப்பான தெரு வாழ்க்கை மற்றும் சுற்றுலா-நட்பு கொள்கைகளால் செழித்து வளர்கிறது. லண்டன் தடையற்ற பொதுப் போக்குவரத்து, பசுமையான இடங்கள் மற்றும் கலாச்சார மையங்களை வழங்குகிறது. துபாய் உலகத்தரம் வாய்ந்த நகர்ப்புற திட்டமிடல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகளுடன் வணிகத்தை ஈர்க்கிறது. தூய்மையான நிர்வாகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி முயற்சிகளில் சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதற்கிடையில் போட்டியிட, இந்திய நகரங்களுக்கு பெரியளவில் நகர்ப்புற சீர்திருத்தங்களும் உயர்தர உள்கட்டமைப்பும் தேவை.


கடந்த ஆண்டு, மும்பை மற்றும் பெங்களூரு வெள்ளம் மற்றும் நீர்தேக்கங்களை எதிர்கொண்டது. இதனால் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புது தில்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது. இதனால், பல வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன. நமது நகரங்கள் காலநிலை-எதிர்ப்புத் திட்டமிடலை ஏன் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் குறிப்பிட்டுள்ளன. இதனால், பூங்காக்கள் மற்றும் பசுமைக் கூரைகள் போன்ற பசுமையான உள்கட்டமைப்புகளை அமைப்பது வெப்ப அளவைக் குறைக்க உதவும். அதே நேரத்தில், அதிக மழையின் விளைவுகளைத் தணிக்க நவீன வடிகால் மற்றும் வெள்ள மேலாண்மை அமைப்புகளில் முதலீடு செய்யலாம். முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூகத் தயார்நிலை ஆகியவை உயிர்களைப் பாதுகாக்கும்.


பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்தும் கடுமையான மாசு நெருக்கடியை இந்திய நகரங்கள் எதிர்கொள்கின்றன. காற்று மாசுபாடு மட்டுமின்றி, தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை தவறான முறையில் தினமும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. 603 ஆறுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் மாசுபட்டுள்ளது மற்றும் கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே காற்று மாசுபாட்டின் முதல் 50 நகரங்களில் 42 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. வாகன உமிழ்வுகள், தொழிற்சாலை வெளியேற்றம் மற்றும் கட்டுமானத் தூசி ஆகியவை சுவாச நோய்கள் மற்றும் பிற சுகாதாரப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கின்றன. சுத்தமான காற்று நிதியம் (Clean Air Fund), காற்று மாசுபாட்டால் இந்தியாவிற்கு ஆண்டுக்கு $95 பில்லியன் இழப்பு உற்பத்தித் திறன் மற்றும் சுகாதாரச் செலவுகள் ஏற்படும் என்று மதிப்பிடுகிறது.


நீர் மாசுபாடு ஒரு தீவிரமான பிரச்சினை. யமுனா மற்றும் கங்கை போன்ற முக்கிய ஆறுகள் மிகவும் மாசுபட்டுள்ளன. இதனால், இந்த தண்ணீரை குடிக்க பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. பெங்களூருவில், ஏரிகள் வறண்டுவிட்டன அல்லது நச்சுத்தன்மையுடையதாகிவிட்டன. சென்னையில் வெள்ளம் நிலத்தடி நீரை மோசமாக்கியுள்ளது. பல சமூகங்களுக்கு சுத்தமான தண்ணீரைத் துண்டித்துள்ளது. மோசமான கழிவு மேலாண்மை மாசுபாட்டை அதிகரிக்கிறது. நிரம்பி வழியும் குப்பை கிடங்குகள் ஆபத்தான மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. முறைசாரா கழிவு சேகரிப்பு மற்றும் சரியான குப்பை அகற்றல் இல்லாததால் பூச்சிகள் மற்றும் நோய்கள் பரவுகின்றன. காற்று, நீர் மற்றும் கழிவு மாசுபாட்டை சமாளிக்க நமது நகரங்களுக்கு தெளிவான திட்டங்கள் தேவை.


இந்தியாவில், கணக்கெடுப்பு நகரம் (census town) என்பது அதிகாரப்பூர்வமாக நகர்ப்புற பகுதி என்று அழைக்கப்படாத ஒரு குடியேற்றமாகும். இருப்பினும், இது ஒரு நகர்ப்புறப் பகுதியின் அனைத்து அம்சங்களையும் காட்டுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கணக்கெடுப்பு நகரங்களின் (census town) எண்ணிக்கை 2001-ல் 1,362 ஆக இருந்து 2011-ல் 3,894 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது பத்தாண்டுகாலத்தில் நகர்ப்புற வளர்ச்சியில் இந்த நகரங்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. இந்த அதிகரிப்பு விரைவான நகரமயமாக்கலைக் காட்டுகிறது. இருப்பினும், இது பெரிய சவால்களையும் கொண்டுவருகிறது. கணக்கெடுப்பு நகரங்கள் (census town) இன்னும் கிராமப்புறங்களாக நிர்வகிக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளைக் கையாளும் திறன் மற்றும் வளங்கள் அவற்றில் இல்லை. நிர்வாகத்தில் இந்த பொருத்தமின்மை மோசமான நகர்ப்புறத் திட்டமிடல், வரையறுக்கப்பட்ட பொது சேவைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. மேலும், இந்த நகரங்கள் முறையான நகர்ப்புற அந்தஸ்து இல்லாததால் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து சரியான நிதியைப் பெறுவதில்லை. முறையான நகர்ப்புற நிர்வாகத்தில் அவற்றை அங்கீகரித்துச் சேர்ப்பதில் ஏற்படும் தாமதம் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கிறது. இது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கிறது.


நமது நகரங்களை மாற்றுவதற்கு திட்டமிடலில் முழுமையான மாற்றம் தேவைப்படும். இதற்கு வலுவான நிர்வாகம் மற்றும் நிலையான நிதியுதவியும் தேவைப்படும். இந்த தளங்களில் நாம் செயல்பட்டால், இந்தியா வாழக்கூடிய, மீள்தன்மை கொண்ட மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நகரங்களை உருவாக்க முடியும். இந்த நகரங்கள் உலக அளவில் கவர்ச்சிகரமானதாக மாற முடியும். முதல் படி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களை நகர்ப்புறங்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது. இந்த செயல்பாட்டில் மாநிலங்கள் முன்னிலை வகிக்க வேண்டும்.


1960-ம் ஆண்டுகளில், சிங்கப்பூரில் பல சிக்கல்கள் இருந்தன. இவற்றில் நெரிசல் (overcrowding), குடிசைப்பகுதிகள் (slums), போக்குவரத்து நெரிசல்கள் (traffic jams), மாசுபாடு (pollution), வெள்ளம் (floods) மற்றும் நீர் பற்றாக்குறை (water shortages) ஆகியவை அடங்கும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், நிலத்தை திறமையாகப் பயன்படுத்துதல், வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் இந்தியாவிற்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது.


2025-26ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், இந்திய அரசாங்கம் ரூ. 1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund) நிறுவுவதாக அறிவித்தது. இந்த நிதியானது நகரங்கள் முழுவதும் வளர்ச்சி மையங்கள், நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு மற்றும் நீர் மற்றும் சுகாதாரம் போன்ற பகுதிகளில் முன்முயற்சிகளை செயல்படுத்தும். இந்திய நகரங்கள் உலகத் தரம் வாய்ந்த இடங்களாக மாறுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இதன் மூலம், சிங்கப்பூரின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் இதை அடைய முடியும். நீண்ட காலத் திட்டமிடலைப் பின்பற்றவும், பொது போக்குவரத்தில் முதலீடு செய்யவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த நிதி நகரங்களை ஊக்குவிக்கும். சிங்கப்பூரின் வெற்றியான மலிவு விலை வீடுகள், பசுமையான நகர்ப்புற இடங்கள் மற்றும் திறமையான நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன. இந்த நிதியின் ஒரு அம்சமாக நமது நகரங்களை சுத்தம் செய்வதற்கான நகர அளவிலான பெரும் சவாலாக இருக்கலாம். நகரங்கள் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை எவ்வளவு நன்றாக சமாளிக்கின்றன என்பதை தீர்மானிக்க வேண்டும். இதன் அளவீடுகள் போக்குவரத்தின் மின்மயமாக்கல், உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை நடைமுறைகள் மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கட்டுமான மேலாண்மை நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.


நமது நகரங்கள் அதிக மக்கள் தொகை, மாசுபாடு மற்றும் மோசமான சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இருப்பினும், இந்த சிக்கல்களை தீர்க்க முடியும். இதற்கான, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான நேரம் இப்போது உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகள் நமது நகரங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவை ஸ்மார்ட், பசுமை மற்றும் வாழ வசதியான இடங்களாக மாறலாம். அல்லது அவை அதிக மாசுபாடு, போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படலாம்.


கான்ட் இந்தியாவின் ஜி20 ஷெர்பா மற்றும் நாகைராச் ஜி20 ஷெர்பா அலுவலகத்தின் மூத்த கொள்கை நிபுணர் ஆவார்.


Original article:
Share: