அரசாங்கத்தின் நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு (Time Use Survey), பெண்களே பெரும்பாலும் ஊதியம் பெறாத வேலைகளைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும்.
கடந்த வாரம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பு 2024, ஒரு உண்மையை உறுதிப்படுத்துகிறது. சிறிய மாற்றங்கள் இருந்தபோதிலும், பெண்கள் ஆண்களை விட வீட்டில் ஊதியம் பெறாத வேலையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். 2024-ஆம் ஆண்டில், பெண்கள் தினமும் 289 நிமிடங்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் செலவிட்டனர். இது 2019-ஐ விட 10 நிமிடங்கள் குறைவாகும். ஆனால், ஆண்களைவிட 201 நிமிடங்கள் அதிகமாகும். பெண்கள் ஒரு நாளைக்கு 137 நிமிடங்கள் ஊதியம் பெறாத பராமரிப்பில் செலவிட்டனர். இது 2019-ஐ விட 3 நிமிடங்கள் அதிகம். ஒட்டுமொத்தமாக, பெண்கள் தினமும் சுமார் 140 நிமிடங்கள் பராமரிப்பில் செலவிட்டனர். அதே நேரத்தில் ஆண்கள் 75 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டனர். 15-59 வயதுடையவர்களில், 41% பெண்களும் 21.4% ஆண்களும் பராமரிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
வீட்டில் சமமற்ற வேலைப் பிரிவு பெண்களின் நீண்டகால தொழில் வளர்ச்சியையும் பணியிட சமத்துவத்தையும் பாதிக்கிறது. வீட்டு வேலைகளில் அவர்கள் பல மணிநேரங்களைச் செலவிடுவதால், அவர்களுக்கு ஊதியம் பெறும் வேலைகளுக்கு குறைவான நேரமே உள்ளது. இது அதிக தகுதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. பெண்கள் குறைந்த ஊதியம், பகுதிநேர அல்லது முறைசாரா வேலைகளில் குறைவான சலுகைகள் மற்றும் குறைவான வேலைப் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சமத்துவமின்மை ஊதிய இடைவெளியை அதிகரிக்கிறது. அதே, வேலைக்கு பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவான வருவாய் பெறுகிறார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), அக்டோபர் 2024-ல் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பில் பராமரிப்பு பொறுப்புகளின் தாக்கம் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பராமரிப்பு பொருளாதாரத்தில், குறிப்பாக குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வியில் முதலீட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டியது. இந்திய பெண்களில் 53% பேர் தொழிலாளர் சக்திக்கு வெளியே இருப்பதால் இது மிகவும் முக்கியமானது. தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு 41.7% ஆக அதிகரித்துள்ளது என்று 2023-24-ஆம் ஆண்டு கால தொழிலாளர் படை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் இன்னும் மொத்தப் பணியாளர்களில் மிகக் குறைந்த பங்கைக் கொண்டுள்ளனர். ஆண்களை ஒப்பிடுகையில், பங்கேற்பு விகிதம் சுமார் 78% ஆக உள்ளது.
வளர்ந்த இந்தியா (Viksit Bharat) மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், ஊதியம் பெறாத வேலையில் உள்ள இடைவெளி கடுமையான பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது. கர்மன்னாயா கவுன்சில், சிஐஐ மற்றும் நிகோர் அசோசியேட்ஸ் ஆகியோரால் மார்ச் 2024-ல் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் ஆண்களைவிட 8 மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத வேலையைச் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த வேலை மதிப்பிடப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15%-17%ஆக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய நிலையை அடைய, வீட்டுப் பொறுப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறிய வீட்டு வேலைகளைச் செய்வதற்காக ஆண்கள் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார்கள். அதே நேரத்தில் பெண்கள் "சம்பாதிப்பவர்கள்" (breadwinner) அல்ல என்று விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த மாறா மரபுமுறைப் (stereotype) போக்கை உடைப்பது சமத்துவத்தை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும்.