ஓன்றிய அரசின் செயலற்ற தன்மையானது, 2005 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை (Disaster Management Act of 2005) மீறுவதாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
2023 டிசம்பரில் மிச்சாங் சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், தேசிய பேரிடர் நிவாரண நிதியை (national disaster relief funds) ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறிவருகிறது. இதன் தாக்கத்தால், ஒன்றிய அரசின் மீது, தமிழ்நாடு அரசானது உச்சநீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடர்ந்தது. இதேப்போல், கடந்த மாதம் கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது, பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்ததாக கூறுகிறது. கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ இந்த நிதி தேவைப்படுகிறது.
பொதுவாக, மாநிலங்கள் இரண்டு ஆதாரங்களில் இருந்து பேரழிவு நிவாரண நிதியைப் பெறலாம். இவை மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Relief Fund (SDRF)) மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி (National Disaster Relief Fund (NDRF)) ஆகும். டிசம்பர் 2004 இல் பேரழிவு சுனாமிக்குப் பிறகு பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act), 2005 (DMA) இயற்றப்பட்டபோது இந்த நிதி உருவாக்கப்பட்டது.
தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிடம் இருந்து அதிக நிதியை கோருகின்றன. ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த செயலற்ற தன்மை பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் அதன் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு நிதி எவ்வாறு விடுவிக்கப்படுகிறது?
ஜனவரி 2022 முதல் வழிகாட்டுதல்களின்படி, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (National Disaster Response Fund (NDRF)) ரூ.54,770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2021-22 முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கு உதவுவதே தேசிய பேரிடர் மீட்பு படையின் நோக்கமாகும். இந்த பேரழிவுகளை இந்திய அரசு மிகவும் தீவிரமானதாக பார்க்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி (State Disaster Relief Fund (SDRF)) வழங்கக்கூடியதை விட அவர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
ஒரு பெரிய பேரழிவை சமாளிக்க ஒரு மாநிலம் அதன் மாநில பேரிடர் நிவாரண நிதியில் (State Disaster Relief Fund (SDRF)) போதுமான பணம் இல்லை என்றால், அது தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பணம் கேட்கலாம். கூடுதலாக நிவாரண நிதியாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியானது (NDRF) வழங்கப்படுமா என்பதை யார் முடிவு செய்வார்கள் என்பதை உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) அல்லது வேளாண் அமைச்சகம் (Ministry of Agriculture) முடிவு செய்யலாம்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டுதல்கள் (NDRF Guidelines) இந்த மதிப்பீட்டிற்கான படிப்படியான செயல்முறையை வழங்குகின்றன.
முதலில், உள்துறை அமைச்சகம் விரைவில் அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு (Inter-Ministerial Central Team (IMCT)) என்ற குழுவை உருவாக்கும். இந்த குழு பேரிடர் பாதித்த இடங்களுக்கு சென்று கூடுதல் பணம் தேவையா என்று தரவை மேற்கொள்வார்கள். இந்த குழுவின் வருகைக்குப் பிறகு, அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு, தேசிய செயற்குழுவிலிருந்து ஒரு சிறிய குழுவுக்கு தனது ஆலோசனையை வழங்கும். இந்த குழுவில் முக்கிய அமைச்சகங்களின் கீழ் செயலாளர்கள் உள்ளனர். எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.
இறுதியில், ஒரு உயர்மட்டக் குழுவானது, நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கும். இந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் தலைமை தாங்குவார். இதில் வேளாண் மற்றும் நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ஆகியோரும் அடங்குவர். தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்க அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
தமிழ்நாடும், கர்நாடகமும் ஏன் உச்சநீதிமன்றத்தை அணுகின?
மைச்சாங் புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு ஒன்றிய அரசு ரூ.37,902 கோடி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசானது கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், மாநில அரசும் இப்போதே ரூ.2,000 கோடியைக் முன்கூட்டியே கேட்கிறது. இது நிவாரண உதவியானது உடனடியாக பாதிப்பான இடங்களை சரிசெய்துகொள்வதற்காக என்று கூறுகிறது.
மாநில அரசானது, தனது தரப்பில் இருந்து பேரிடரின் போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறுகிறது. அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு மற்றும் தேசிய செயற்குழுவின் துணைக் குழு (sub-committee of the National Executive Committee) தங்கள் பரிந்துரைகளை உயர் குழுவுக்கு வழங்கியுள்ளன. இருப்பினும், உள்துறை அமைச்சகம் இதுவரை ஒரு கூட்டத்தை கூட்டவோ அல்லது பணத்தை வழங்கவோ இல்லை.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசை, நியாயமாக நடத்தப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசியலமைப்பின் பிரிவு 14 ஆனது சமத்துவம் மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 21 வது கண்ணியத்துடன் வாழ்வதற்கான மக்களின் உரிமைகளை ஒன்றிய அரசு மீறியுள்ளது என்று தமிழ்நாடு அரசு வாதிடுகிறது.
மார்ச் 23 அன்று கர்நாடகா தனது மனுவைத் தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு தனது வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவின் மனுவில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) ரூ.18,171 கோடி நிதியை விடுவிக்கக் கோரியது. 2023 ஆம் ஆண்டில், 236 தாலுகாக்களில் 196 தாலுக்காக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநிலம் கூறுகிறது. கூடுதலாக, 27 தாலுகாக்கள் மிதமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
2023 அக்டோபரில் அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு மாநிலத்தில் வறட்சி நிலையைப் பற்றிய விரிவான மதிப்பீட்டை நடத்தியதாகவும், தேசிய செயற்குழுவின் துணைக் குழு (sub-committee of the National Executive Committee) 2023 நவம்பரில் உள்துறை அமைச்சகத்துக்கு மாநிலத்திற்கான நிதி உதவியை பரிந்துரைத்ததாகவும் கர்நாடகாவும் கூறுகிறது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்க ஒன்றிய அரசு 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வது கண்ணியத்துடன் வாழும் உரிமைக்கு எதிரானது என்று கர்நாடகா கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் வேளாண் அமைச்சகம் வெளியிட்ட 'வறட்சி மேலாண்மைக்கான கையேட்டை' (Manual For Drought Management) அரசு குறிப்பிட்டது. அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு அறிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கு நிதி உதவி செய்வது குறித்து ஒன்றிய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் பிற மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதா?
ஒன்றிய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே சமீபகாலமாக நடந்த வாதமானது, மார்ச் மாதம், கேரள அரசு தனது குறைகளை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. அதில், கேரள அரசு நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த முடிவுக்கான காரணத்தை குடியரசுத் தலைவர் தெரிவிக்கவில்லை. கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாக்களில் சில இரண்டு ஆண்டுகள் வரை ஒப்புதலுக்காக காத்திருந்தன. அவற்றை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அல்லது அவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்பதற்குப் பதிலாக, ஆளுநர் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றன.
தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படுகின்றன. தங்கள் ஆளுநர்கள் நீண்ட காலமாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வரவு செலவு திட்ட விவகாரம் தொடர்பாக கேரள மாநிலம் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதில், மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை ஒன்றிய அரசாங்கம் நிர்ணயத்தை குறைத்துள்ளது. இது நிதி நெருக்கடியின் போது அவர்களை பாதிக்கிறது என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.