அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன? -ரங்கராஜன். ஆர்

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (Viduthalai Chiruthaigal Katchi) தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்க மறுத்தது ஏன்?


2019 தேர்தலில் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi (NTK)) தமிழகத்தில் 3.9% வாக்குகளைப் பெற்றது. பின்னர், 2021 இல், இந்த கட்சியானது 6.5% வக்குகள் பெற்றனர். தற்போது, இவர்கள் 'ஒலிவாங்கி (Mike) என்ற பொதுவான புதிய சின்னத்தை பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi (VCK)) 2019 மற்றும் 2021 தேர்தல்களில் முறையே 1.09% மற்றும் 0.99% வாக்குகளை மட்டுமே பெற்றது. மேலும், இவர்களுக்கு 'பானை' (Pot) என்ற பொதுவான சின்னம்  மறுக்கப்பட்டது. இந்த நிலைமை 'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு' (registered unrecognised parties) எவ்வாறு சின்னங்கள் வழங்கப்படுகின்றன என்ற கேள்விகளைத் தூண்டியுள்ளது.


விதிகள் என்ன குறிப்பிடுகின்றன?


இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கிடு) ஆணை (Election Symbols (Reservation and Allotment) Order), 1968இன் அடிப்படையில் கட்சிகளை 'தேசிய' அல்லது 'மாநில' கட்சிகளாக அங்கீகரிக்கிறது. மாநில அளவில் அங்கீகரிக்கப்பட, ஒரு கட்சி சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்: 


1. ஒவ்வொரு 25 இடங்களுக்கும் ஒரு மக்களவை இடத்தை அல்லது சட்டமன்ற இடங்களில் 3% வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். 

2. ஒரு மக்களவைத் தொகுதி அல்லது இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பதிவான வாக்குகளில் 6% பெற்றிருக்க வேண்டும்.

3. பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 8% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.


 இந்த ஆணையின் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குகிறது. பல மக்கள் படிப்பறிவு இல்லாத இந்திய ஜனநாயகத்தில், வாக்களிப்பதற்கு சின்னங்கள் இன்றியமையாதவை. அதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னம் ஒதுக்கப்படுகிறது. எந்த தொகுதியிலும் வேறு எந்த வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வழங்கப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு, தேர்தல்களின் போது அவர்கள் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் 5% இடங்களில் போட்டியிட்டால் ஒரு பொதுவான சின்னம் வழங்கப்படுகிறது.


தற்போதைய பிரச்சினை என்ன?


'பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி' (registered unrecognised party) இரண்டு பொதுத் தேர்தல்களுக்கு பொதுவான இலவச சின்னத்தைப் பெறலாம் என்று சின்னங்கள் ஆணையின் விதி (Symbols Order) 10பி கூறுகிறது. மேலும், பொதுச் சின்னத்தைப் பயன்படுத்தியபோது கடந்த தேர்தலில் மாநிலத்தில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைப் பெற்றிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு கட்சி பொதுச் சின்னத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், அங்கீகரிக்கப்படாத கட்சி ஒவ்வொரு முறையும் தேவையான வடிவமைப்பைப் பயன்படுத்தி ஒரு சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை மக்களவை அல்லது மாநில சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பித்தவர் யார் என்பதன் அடிப்படையில் சின்னங்கள் கொடுக்கப்படும்.


இந்நிலையில், கடந்த 2 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி 1 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை 'கரும்பு விவசாயி’ சின்னத்தைப் பெற்றது. ஆனால், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (Bharatiya Praja Aikyata Party (BPAP)) பிப்ரவரி 2024 இல் ஒரு சின்னத்திற்கு விண்ணப்பித்தது. ஆனால், அவர்கள் முதலில் விண்ணப்பித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) அதை ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கியது. இருப்பினும், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPAP) இதற்கு முன்பு தமிழகத்தில் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. 2021 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 1% வாக்குகளைப் பெறாததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் சின்னம் மறுக்கப்பட்டது. இருந்த போதிலும், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் 'பானை' சின்னத்தில் போட்டியிடும் விசிகே கட்சிக்கு தமிழகத்தில் ஒரு மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 


முன்னோக்கி செல்லும் வழி என்னவாக இருக்கும்?


தற்போதுள்ள, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் விண்ணப்பங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு விருப்பமான சின்னம் வழங்கப்படாதது மக்களுக்கு குழப்பமாகத் தோன்றலாம். அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பொதுவான சின்னம் கிடைக்காதது புதிராக உள்ளது. இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் 'பானை' (Pot) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஒரு அரசியல் கட்சியை அங்கீகரிப்பதற்கான தற்போதைய விதி அப்படியே இருக்கக்கூடும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (Electronic Voting Machine) முதலில் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கு ஒரு நன்மை அளிப்பதாக இருக்கும். இருப்பினும், தேர்தல் ஆணையம் இதற்கான விதிகளை மாற்றலாம். இதனால், அங்கீகரிக்கப்படாத கட்சிகள், முந்தைய தேர்தலிலிருந்து குறைந்தது 1% வாக்குகளைப் பெற்றவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பொதுவான சின்னத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது அவர்களின் கடந்த கால செயல்திறனை அங்கீகரிப்பதுடன், ஜனநாயகத்தை வலுப்படுத்தும். 


ரங்கராஜன் ஆர்.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி  மற்றும் ‘Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர். 




Original article:

Share: