தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளன. இந்த தீர்வுகளை செயல்படுத்த, பொது சுகாதாரத்தை மேம்படுத்த வலுவான அரசியல் கொள்கைகள் தேவை.
கோவிட்-19க்கு பிந்தைய முதல் பொதுத் தேர்தலை நெருங்கிவிட்டோம். தொற்றுநோய்களின் போது, பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பாதுகாப்பில் கடினமான அனுபவங்களைப் பெற்றனர். இருந்தபோதிலும், இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு மிகவும் சிறப்பாக இல்லை. அதனால்தான் வரவிருக்கும் தேர்தல்களில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது. சமீபத்தில், ஜன் ஸ்வஸ்திய அபியான் (Jan Swasthya Abhiyan) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் 18 அம்ச "மக்கள் சுகாதார அறிக்கையை" (“People’s Health Manifesto”) வெளியிட்டது. இது சுகாதாரப் பராமரிப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்கிறது. சுகாதாரக் கொள்கைகள் மற்றும் அமைப்புகளில் ஏழு முக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முதல் மாற்றம் பொது சுகாதார அமைப்பு தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன் பொருள் பொது சுகாதார வசதிகளை, குறிப்பாக ஆரம்ப மட்டத்தில் விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்பதாகும். வெற்றிகரமான அணுகுமுறைகளின் எடுத்துக்காட்டுகளில் டெல்லி மற்றும் பஞ்சாபில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொஹல்லா கிளினிக்குகள் (Mohalla Clinics) மற்றும் கேரளாவில் மேம்படுத்தப்பட்ட குடும்ப சுகாதார மையங்கள். இந்த மாதிரிகள் அதிக மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயர்களை "ஆரோக்கிய மந்திர்கள்" (Arogya Mandirs) என்று மறுபெயரிடுவதை விட ஆரம்ப சுகாதார சேவையை பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மாதிரி (Tamil Nadu Medical Services Corporation model) ஒரு நல்ல உதாரணம். பொது சுகாதார வசதிகளில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை இந்த மாதிரி உறுதி செய்கிறது. கேரளாவும், ராஜஸ்தானும் தமிழ்நாட்டு மாதிரியை பின்பற்றுகின்றனர்.
இரண்டாவது மாற்றம், பொது சுகாதார மேம்பாடுகளுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு தனது பொது சுகாதார செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3% முதல் குறைந்தபட்சம் 1% வரை உயர்த்துவதன் மூலம் இந்த மாற்றங்களை செயல்படுத்தலாம். சுகாதாரத் துறைக்காக மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் செலவினங்களை ஒரு நபருக்கு ரூ.2,340 முதல் இமாச்சல பிரதேச நிலைக்கு ஒரு நபருக்கு ரூ.4,170 இரட்டிப்பாக்கலாம். பொது சுகாதார நிதியுதவி விரிவுபடுத்தப்பட்டால், அதிகமான மக்கள் இலவச மருத்துவத்தைப் பெற முடியும் என்று மக்கள் சுகாதார அறிக்கை (People’s Health Manifesto projects) கூறுகிறது. இதன் பொருள் மக்கள் நேரடியாகச் செலவழிக்கும் குறைவான பணம் (இது அனைத்து சுகாதார செலவினங்களில் 25% க்கும் குறைவாக இருக்க வேண்டும்) பல குடும்பங்களை கடன் மற்றும் அழிவிலிருந்து காப்பாற்றும்.
மூன்றாவது மாற்றம் என்பது உள்ளூர் மட்டத்தில் பொது சுகாதார சேவைகளை சிறப்பாகச் செய்வதாகும். இதற்கு அதிக பொறுப்புணர்வு, உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் உள்நாட்டில் சேவைகளை நிர்வகித்தல் ஆகும். கேரள பஞ்சாயத்துககளில் இதை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும், மகாராஷ்டிராவில் "சமூக அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் திட்டமிடல்" (“Community-based monitoring and planning” ) போன்ற கடந்தகால திட்டங்கள், சமூகத்தை ஈடுபடுத்துவதன் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டியது.
நான்காவது மாற்றம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுவது பற்றியது. பல வேலைகள் காலியாக உள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலைகள் அல்லது நல்ல ஊதியம் கிடைப்பதில்லை. அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் நிலைமைகளுடன் கூடிய வழக்கமான வேலைகளை வழங்குவதன் மூலம் இதை மாற்ற வேண்டும்.
ஐந்தாவது மாற்றம் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தனியார் சுகாதாரத்தை ஒழுங்குபடுத்துவதாகும். கோவிட்-19 இன் போது தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தன. இது தொழில்துறைக்கு பயனளித்தது, ஆனால் பலருக்கு துன்பத்தை ஏற்படுத்தியது. நோயாளிகளின் செலவில் மருத்துவமனைகள் லாபம் நோக்கத்தோடு செயல்படுவதை நிறுத்த வேண்டும். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நிறுவனங்களின் விதிகளின்படி மருத்துவமனை கட்டணங்களை தரநிலைப்படுத்த வேண்டும். இது தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சாசனத்தை கடைபிடிப்பது அவசியம். போதுமான பணியாளர்களைக் கொண்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் நோயாளிகளின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். மேற்கு வங்க மருத்துவ நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் (West Bengal Clinical Establishments Regulatory Commission) அனுபவங்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
ஆறாவது மாற்றம் அத்தியாவசிய மருந்துகளை மலிவு விலையில் மற்றும் நல்ல தரமானதாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். பல குடும்பங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தங்களின் மருத்துவ பயன்பட்டிற்காக செலவு செயகின்றனர். இந்த மாற்றத்தை அடைய, தற்போதைய 18% மருந்துகளுக்கு மட்டுமின்றி அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். மருந்துகளின் விலையை செலவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் மற்றும் இலாப வரம்புகளை மட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற மருந்துகளையும், நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நியாயம் இல்லாத மருந்துகளின் சேர்க்கைகளையும் நாம் அகற்ற வேண்டும். மற்றொரு முக்கியமான படி, பொதுவான மருந்துகளுக்கான தெளிவான கொள்கையை உருவாக்குவது. இந்த நடவடிக்கைகள் சிறப்பாகச் செய்யப்பட்டால், மருந்துத் துறை நியாயமான லாபத்தைப் பெற அனுமதிக்கும் அதே வேளையில், மருந்துகளின் விலையை கணிசமான அளவு குறைக்கும்.
இறுதி மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகும். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)) போன்ற தற்போதைய அணுகுமுறை, குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே சேவை பெற முடிகிறது. ஆனால் குடும்பச் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கவோ அல்லது அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தவோ இது போதாது. ராஜஸ்தான் சுகாதார உரிமைச் சட்டம் (Rajasthan Right to Health Act) அல்லது தாய்லாந்தின் மாதிரி போன்ற உலகளாவிய சுகாதார அமைப்பை இலக்காகக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் தரமான சுகாதார பராமரிப்பு செலவில்லாமல் கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்தியா $5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் போது இந்த மாற்றம் முக்கியமானது.
2024 ஆம் ஆண்டில், இந்தியா இந்த மாற்றங்களை செய்ய முடியும். ஆனால், பொது சுகாதாரத்திற்கு வலுவான அரசியல் ஆதரவு தேவை. அதனால் தான் ஜன் ஸ்வஸ்திய அபியான் (Jan Swasthya Abhiyan’s) அமைப்பின் சுகாதார அறிக்கை முக்கியமானது. அதன் பரிந்துரைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். ஒரு குடிமக்களாக நாம் வரவிருக்கும் தேர்தலில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும். இது முக்கியமானது, குறிப்பாக கோவிட் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் திட்டங்களில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
கட்டுரையாளர் ஜன் ஸ்வஸ்திய அபியான் (Jan Swashthya Abhiyaan) - மக்கள் சுகாதார இயக்கத்தின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்