அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு மற்றும் அதன் தாக்கம் பற்றி . . . -பிந்து ஷாஜன் பேரப்படன்

 தேர்தல் ஆண்டில், அத்தியாவசிய மருந்துகளின் உச்சவரம்பு விலையை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.


இந்த வார தொடக்கத்தில், ஏப்ரல் 1 அன்று, முக்கியமான மருந்துகளின் விலையானது உயர்ந்துள்ளது. தேசிய மருந்து விலை ஆணையம் (National Pharmaceutical Pricing Authority (NPPA)) இந்த மருந்து விலை அதிகரிப்பை அமல்படுத்தியது. இது, 2024-25 நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை 0.00551 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 923 பட்டியலிடப்பட்ட மருந்து கலவைகளுக்கான புதிய அதிகபட்ச விலைகளின் வருடாந்திர பட்டியலை மருந்துத் துறையானது வெளியிட்டது. அவர்கள் 65 மருந்து கலவைகளுக்கான சில்லறை விலையையும் புதுப்பித்துள்ளனர். இந்த புதிய அதிகபட்ச விலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக உள்ளது.


ஒன்றிய அரசு கூறிய, மொத்த விலை குறியீட்டில் (Wholesale Price Index (WPI)) ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் மருந்து விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தேசிய மருந்து விலை ஆணையம் அறிவிப்பின்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் (Department of Industry and Internal Trade, Ministry of Commerce and Industry) பொருளாதார ஆலோசகர் அலுவலகத்தின் மொத்த விலை குறியீட்டு (WPI) தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் மொத்த விலை குறியீட்டில் (WPI) 0.00551% அதிகரிப்பு உள்ளது.


மொத்த விலைக் குறியீட்டெண் (Wholesale Price Index(WPI) அடிப்படையில் அதிகரிப்பு


சமீபத்திய அறிவிப்பின்படி, உற்பத்தியாளர்கள் மொத்த விலைக் குறியீட்டெண்  அடிப்படையில் பட்டியலிடப்பட்ட சில மருந்துகளின் விலையை உயர்த்தலாம். ஆனால், இதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் தேவையில்லை. கடந்த ஆண்டு, மருந்து விலைகள் 12% ஆகவும், 2022 இல் 10% ஆகவும் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் இந்த விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய விலை உயர்வு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) மற்றும் வலி நிவாரணிகளின் (painkillers) விலையை பெரிதும் பாதிக்காது என்று அரசாங்கம் கூறுகிறது.


இந்தியாவில் சுமார் 400 வகையான மூலக்கூறுகள் மற்றும் 960 வெவ்வேறு சூத்திரங்கள் கொண்ட அத்தியாவசிய மருந்துகளாக தேசியப் பட்டியலின் (National List) கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற மருந்துகளின் விலைகள் ஆண்டுக்கு 10% க்கும் அதிகமாக உயராமல் இருக்க அரசாங்கம் அவற்றைக் கண்காணித்து வருகிறது. தேசிய மருந்து விலை ஆணையமானது (National Pharmaceutical Pricing Authority (NPPA)) மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணைகளைப் (Drug Price Control Orders (DPCO)) 2013 பின்பற்றுகிறது. இது மொத்த விலைக் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் விலையை அதிகரிக்க அனுமதிக்கிறது.


மருந்துத் துறையின் ஒரு பகுதியான, தேசிய மருந்து விலை ஆணையமானது , ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கான அதிகபட்ச விலைகளைப் புதுப்பிக்கிறது. இந்த மருந்துகள் முக்கியமானவை மற்றும் விலைக் கட்டுப்பாட்டு ஆணைகளைப் (Drug Price Control Orders (DPCO)), 2013 இன் அட்டவணை-I இல் பட்டியலிடப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 2023 காலண்டர் ஆண்டில், 2011-12 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டுடன் மொத்த விலைக் குறியீட்டில் (WPI) ஆண்டு மாற்றம் +/- 0.00551% ஆக இருந்தது. இது, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் 20 அன்று நடைபெற்ற கூட்டத்தில், திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கு +/- 0.00551% மொத்த விலைக் குறியீடு (WPI) அதிகரிப்புக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 923 மருந்துகளின் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 782 மருந்துகளுக்கு, மொத்த விலைக் குறியீட்டில் (WPI) சிறிய அதிகரிப்பு இருப்பதால் விலைகள் மாறாது. இந்த விலைகள் மார்ச் 31, 2025 வரை அப்படியே தொடர்ந்து இருக்கும்.


கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லை


2024-25 நிதியாண்டில், 54 மருந்துகளின் உச்சவரம்பு விலையானது ரூ.90 முதல் ரூ.261 என்ற சிறிய அளவில் ரூ.0.01 வரை உயரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விலை உயர்வு மிகவும் குறைவாக இருப்பதால், இந்த உயர்வை நிறுவனங்கள் பெறலாம் அல்லது பெறாமல் போகலாம். எனவே, 2024-25 நிதியாண்டில், மொத்த விலைக் குறியீடு  அடிப்படையில் மருந்துகளின் உச்சவரம்பு விலையில் கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் (Ministry of Chemicals and Fertilizers) கீழ் 1997 இல் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA), மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துகிறது. மருந்துகள் கிடைப்பதையும், அவை மலிவு விலையிலும் கிடைப்பதை இது உறுதி செய்கிறது. அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் (National List of Essential Medicines (NLEM)) பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு 10% க்கும் அதிகமான விலை அதிகரிப்புக்கு தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA) ஒப்புதல் அளிக்க முடியும். அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் (NLEM) மருந்துகளும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விலைகளைக் கொண்டுள்ளன. மத்திய அரசின் கூற்றுப்படி, தேசிய மருந்து விலைக் கொள்கை, 2012 மற்றும் விலைக் கட்டுப்பாட்டு ஆணைகள், 2013 ஆகியவற்றுடன் விதிமுறைகள் பொருளாதார மற்றும் செலவு அடிப்படையிலான அளவுகோல்களிலிருந்து அத்தியாவசியம் மற்றும் சந்தை அடிப்படையிலான அளவுகோல்களுக்கு மாற்றப்பட்டன. ஒரு தரவுத்தளத்தை பராமரித்தல் மற்றும் தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA) மூலம் கண்காணிப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.


மொத்தமாக விற்கப்படும் பொருட்களின் விலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை மொத்த விலைக் குறியீடு அளவிடுகிறது. மருந்துகளின் விலைகள் ஏறுகிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பார்க்க இது உதவுகிறது. குறிப்பாக கடைகள் மற்றும் வணிகங்களுக்கு விற்கப்படும் மருந்து பொருட்களுக்கு மட்டுமே தவிர, வழக்கமாக மருந்து வாங்கும் நபர்களுக்கு அல்ல. இந்த ஆண்டு மருந்து விலையானது சிறிய அளவில் உயர்ந்திருப்பது மருந்து நிறுவனங்களை கவலையடைய செய்துள்ளது. அதிக செலவுகள், கடுமையான விலையின் மீதான விதிகள் மற்றும் குறைந்து வரும் லாபம் ஆகியவற்றைக் கையாள்வதாக கூறுகிறார்கள். இவை, எதிர்பார்த்ததை விட சிறியளவில் விலையின் உயர்வால் மருந்து நிறுவனங்கள் சில மருந்துகளை உற்பத்தி செய்வதை நிறுத்த வழிவகுத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் மருந்துத் துறை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து ஒரு முறை விலக்கு கேட்டது. இந்த நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்து வரும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டுடன்  இணைக்கப்பட்டுள்ளன.


நிறுவனங்களை காப்பாற்ற விலை உயர்வு


உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், தேசிய மருந்து விலை ஆணையம்  21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 50% உயர்த்தியது. ஏனெனில், மருந்து நிறுவனங்கள் அதிக செலவுகள் காரணமாக மருந்து உற்பத்தி செய்வதை நிறுத்த விரும்பின. இதில், மருந்து விலையை உயர்த்துவது என்பது தரத்தை உறுதி செய்வதாக மருந்து நிறுவனங்கள் கூறுகின்றன. 2012 தேசிய மருந்துகள் விலைக் கொள்கை (National Pharmaceuticals Pricing Policy) மருந்துகளின் முக்கியத்துவம், உருவாக்க விலைகள் மற்றும் சந்தை அடிப்படையிலான விலை நிர்ணயம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று மக்களவையில் ஒன்றிய அரசாங்கம் பகிர்ந்து கொண்டது. 


அனைத்து திட்டமிடப்பட்ட மருந்து தயாரிப்பாளர்களும் தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க வேண்டும். விலைக் கட்டுப்பாட்டு ஆணைகள் (DPCO) 2013, பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கான மொத்த விலைக் குறியீடு  அடிப்படையில் வருடாந்திர விலை உயர்வை அனுமதிக்கிறது. விலைக் கட்டுப்பாட்டு ஆணைகள், 2013 இன் கீழ் புதிய மருந்துகளுக்கான விலைகளையும் தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA) நிர்ணயிக்கிறது. பட்டியலிடப்படாத மருந்துகளுக்கு, உற்பத்தியாளர்கள் 12 மாதங்களில் 10% க்கும் அதிகமாக விலையை உயர்த்த முடியாது. விலைக் கட்டுப்பாட்டு ஆணைகள்  2013இன் கீழ் அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்குகளை தேசிய மருந்து விலை ஆணையம்  கையாளுகிறது.

விலைக் கட்டுப்பாட்டு ஆணைகள், 2013 அமலுக்கு வந்த பிறகு, மருந்துக்கான விலை நிர்ணயம் மூலம் பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,447 கோடி மிச்சமானது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சில நுகர்வோர்கள் மருந்துகளின் விலையால் இன்னும் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எவ்வாறாயினும், மருந்துகள் தயாரிக்க மூலப்பொருட்களுக்கு இந்திய நாடானது சீனாவை பெரிதும் நம்பியுள்ளது என்பதை நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, விலையுயர்ந்த இறக்குமதிகள் காரணமாக நாடு பெரிய பிரச்சனைகளை சந்தித்தது.


சீனாவை நம்பியிருத்தல்


'மருந்துகளில் சீனா மீதான இந்தியாவின் இறக்குமதி சார்பு நிலை, சிக்கல்கள் மற்றும் கொள்கை விருப்பங்கள்' (India’s Import Dependence on China in Pharmaceuticals: Status, Issues, and Policy Options) என்ற தலைப்பில் சுதீப் சௌதுரி வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மருந்துத் துறை மேம்பட்டதாக வாதிடுகிறார். மருந்து அளவின் அடிப்படையில் இது உலகளவில் மூன்றாவது பெரிய நாடாகவும் மற்றும் அதன் மதிப்பில் 13வது பெரியநாடாகவும் உள்ளது. எவ்வாறாயினும், மொத்த மருந்துகள் மற்றும் மருந்து இடைநிலைகளுக்கு இந்தியா சீனாவை பெரிதும் நம்பியுள்ளது. மொத்த இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை சீனா மருந்து பொருட்களை வழங்குகிறது.


பிரேசில், வங்காளதேசம், துருக்கி, சீனா, நெதர்லாந்து, நைஜீரியா, வியட்நாம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மொத்த மருந்துகளை இறக்குமதி செய்வது அமெரிக்கா என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. வங்காளதேசம், நைஜீரியா, வியட்நாம், எகிப்து, ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளுக்கு விநியோகம் செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளது. சீனா ஒரு முக்கிய விநியோகராக இருந்தாலும், இந்தியாவும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்து வருகிறது.




Original article:

Share: