கல்லூரிகளின் சுதந்திரம் குறித்து பல்கலைக்கழகங்கள் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் -மாமிடலா ஜெகதீஷ் குமார்

 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாற்றங்கள் நடந்து கொண்டு இருப்பதால் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளின்  தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.


தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) கல்லூரிகள் தன்னாட்சி நிறுவனங்களாக மாற, அவற்றின் கண்டுபிடிப்பு, சுய-ஆளுமை மற்றும் கல்விச் சுதந்திரத்தை மேம்படுத்துவதை  நோக்கமாக கொண்டுள்ளது. இது புதுமைகளைப் புகுத்தவும், தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், கல்வி சுதந்திரத்தைப் பெறவும் அனுமதிக்கிறது. இதை அடைய, பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) ஏப்ரல் 2023 இல் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, அப்போதிருந்து, தன்னாட்சி பெற விரும்பும் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற 590 கல்லூரிகள்  விண்ணப்பித்துள்ளன.

 

புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவது காலத்தின் கட்டாயம். இந்த உரிமையானது கல்லூரிகள் செயல்படும் விதத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளை பற்றி பெருமிதம் கொள்ள உதவுகிறது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் புதிய கற்பித்தல் முறை மற்றும் ஆராய்ச்சி திட்டங்களைத் தொடங்கலாம். இது அறிவின் எல்லைகளைத் தாண்டி சமூகம் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

மேலும், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் தங்கள் கல்வி மற்றும் நிர்வாகத் தேர்வுகளுக்கு பொறுப்புணர்வுடன் செயல்பட ஊக்குவிக்கிறது. இந்த அதிகாரமளித்தல் நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் கல்லூரிகள் தாங்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. இது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின்  திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது. 


தரவரிசை ஒரு புள்ளியை நிரூபிக்கிறது


2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework (NIRF)) அறிக்கையில், இந்தியாவில் உள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற  கல்லூரிகள்  தங்கள்  செயல் திறன்களை மேம்படுத்திகின்றன. 'கல்லூரிகள் பிரிவில்' (‘Colleges Category’) முதல் 100 கல்லூரிகளில் 55 கல்லுரிகள் தன்னாட்சி பெற்றவை. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தரவரிசையில் இருந்து இந்த தகவல் தன்னாட்சி கல்வி தரம் மற்றும் நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு சாதகமாக  மாற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. 


மேலும், 2023 ஆம் ஆண்டின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தரவரிசையில் முதல் 10 கல்லூரிகளில், ஐந்து தன்னாட்சி அந்தஸ்து பெற்ற  கல்லூரிகள் ஆகும். கல்வியில் சிறந்து விளங்குவதற்கு தன்னாட்சி ஒரு வெற்றிகரமான வழி என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில், தன்னாட்சிக் கல்லூரிகளை நிறுவும் போக்கு அதிகரித்து வருகிறது. விரைவில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,000 கல்லூரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏராளமான தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன மொத்த எண்ணிக்கையில் 80% க்கும் மேல் உள்ளன.


சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன. இந்தியா முழுவதும், தன்னாட்சி எப்படி கல்லூரிகளை சிறப்பாகச் செயல்பட வைக்கும் என்பதைப் பார்ப்பதில் ஆர்வம் உள்ளது என்பதை இது காட்டுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் குறைவாக உள்ள இடங்களில் கூட, தன்னாட்சி உயர்கல்வியை எந்த அளவுக்கு மாற்றும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தன்னாட்சிக்குப் பிந்தைய பல சவால்களை எதிர்கொள்ளுங்கள்


கல்லூரிகள் சுதந்திரமாக இருப்பதை பல்கலைக்கழக மானியக் குழு ஆதரிக்கிறது. இருப்பினும், சில பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதற்கு அவர்கள் பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய காரணங்களைக் கொண்டுள்ளனர். கல்லூரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனிப்பது அவசியம்.  பல்கலைக்கழக மானியக் குழு இருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது.

 

சில பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. ஒரு வழக்கமான விதி, பாடத்திட்டத்தை எவ்வளவு மாற்றலாம் என்பதற்கான வரம்புகளை அமைப்பதாகும். வழக்கமாக, கல்லூரிகள் பாடத்திட்டத்தில் 25% முதல் 35% வரை மட்டுமே மாற்ற முடியும். இந்த விதி கல்லூரிகள் முழு சுதந்திரமாக இருப்பதை நிறுத்துகிறது. இது அவர்களின் சொந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் மற்றும் கல்வியில் புதுமைகளை உருவாக்கும் திறனை பாதிக்கிறது.


பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய தன்னாட்சியை பல்கலைக்கழகங்கள் அங்கீகரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதங்களால் கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சுயாட்சிக் கொள்கைக்கும் எதிரானவர்கள் கல்லூரிகள் இன்னும் பல்கலைக்கழகங்களின் அதிகாரத்துவ செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.


கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முழு சுயாட்சி வழங்கினாலும், பல்கலைக்கழகங்கள் அவைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கத் தயங்குகின்றன. பாடத்திட்டத்தை வடிவமைத்தல், புதிய பாடத்திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் மாணவர்களின் செயல்திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை மாற்றுதல் ஆகியவை இந்தப்   பகுதியில் உள்ளது.  


உயர்கல்விக்கான மாநில கவுன்சில்கள் தன்னாட்சி குறித்த பல்கலைக்கழக மானியக் குழு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக தன்னாட்சிக் கல்லூரிகளில் உள்ள சிக்கல்களைக் கையாளுவதன் முக்கியத்துவத்தை பல்கலைக்கழகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒன்றாக சேர்ந்து முடிவுகளை எடுப்பதை எளிதாக்க வேண்டும். இதனால் கல்லூரிகள் தன்னாட்சியில் இருந்து பயனடைய முடியும். பல்கலைக்கழகங்கள் தன்னாட்சிக் கல்லூரிகளுடன் நம்பிக்கை மற்றும் குழுப்பணியை ஊக்குவிக்க வேண்டும். மேலும் கல்வித் தரத்தை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில் அவற்றைப் புதுமையானதாக இருக்க அனுமதிக்க வேண்டும்.


பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி வளர அனுமதிக்கும் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும். கல்லூரிகள் புதுமையாகவும், சிறந்து விளங்கவும், உயர்கல்வியில் அனைவரையும் சேர்க்கவும் இது உதவுகிறது. கல்லூரிகளுக்கு தன்னாட்சியாக  சிறப்பாக செயல்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து  சவால்களையும் கடக்க வேண்டும். இது உயர்கல்வி சுறுசுறுப்பாகவும் வளர்ச்சியடைவதையும் உறுதி செய்யும்.


மாமிடலா ஜெகதீஷ் குமார் (Mamidala Jagadesh Kumar) பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக உள்ளார்.




Original article:

Share: