மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்கள் மாநில தினத்தைக் கொண்டாடும் நிலையில், வடகிழக்கு இந்தியா எவ்வாறு உருவானது என்பது குறித்த ஒரு பார்வை.

வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் (North-Eastern Areas (Reorganisation) Act) மற்றும் வடகிழக்கு கவுன்சில் சட்டம் (North-Eastern Council Act) ஆகிய இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, 1972-ம் ஆண்டு இதே நாளில் மூன்று மாநிலங்களுக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.


ஜனவரி 21, 1972 அன்று, மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட்டன. இந்த முக்கியமான நிகழ்வுக்கு முன்னதாக டிசம்பர் 30, 1971 அன்று நாடாளுமன்றத்தால் இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் (North-Eastern Areas (Reorganisation) Act) மற்றும் வடகிழக்கு கவுன்சில் சட்டம் (North-Eastern Council Act) ஆகியவை ஆகும்.


இந்த முன்னேற்றங்கள் வடகிழக்கு இந்தியாவின் கருத்தை வடிவமைக்க உதவியது.


அமெரிக்காவின் பார்ட் கல்லூரியின் (Bard College) அரசியல் ஆய்வுகள் பேராசிரியரான சஞ்சிப் பருவா, 2023-ம் ஆண்டு விளக்கப்பட்ட கட்டுரையில், வடகிழக்கு என்ற கருத்து 1970-களில் உருவானாலும், இப்போது மையப்பகுதியில் உள்ள பல இந்தியர்களால் பன்முகத்தன்மை கொண்ட பகுதியை ஒரு ஒற்றைப் பகுதியாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.


இன்று, இந்த பிராந்தியம் எட்டு மாநிலங்களைக் கொண்டுள்ளது. அவை அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகும். சுதந்திரத்திற்கு முன்பு, இவற்றில் ஐந்து மாநிலங்கள் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்) காலனித்துவ அசாமின் ஒரு பகுதியாக இருந்தன. மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை சுதேச மாநிலங்களாக இருந்தன. அசாமின் ஆளுநருக்குப் பதிலளிக்கும் வகையில் அங்கு பிரிட்டிஷ் அரசியல் அதிகாரிகள் வசித்து வந்தனர். பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்கீழ் சிக்கிம் நீதித்துறை சுதந்திரம் பெற்றிருந்து 1947-ல் ஒரு சுதந்திர அரசாக மாறியது. பின்னர், 1975-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


தன்னிச்சையான காலனித்துவ எல்லைகள் மாநில அந்தஸ்தை முன்னரே வரையறுத்தன.


19-ம் நூற்றாண்டில், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் அஹோம் மன்னருடன் இணைந்து, 1824 மற்றும் 1826-க்கு இடையில் நடந்த ஆங்கிலோ-பர்மாப் போரில் (Anglo-Burmese War) வெற்றிபெற கிழக்கிந்திய கம்பெனி உதவியபோது, ​​ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியில் படையெடுத்தனர். இதற்குப் பிறகு, அவர்கள் பல பகுதிகள்மீது இன்றைய அசாம், மணிப்பூர், (அசாமில் உள்ள கச்சார்) மற்றும் (மேகாலயாவில் உள்ள) ஜெயின்டியா, அத்துடன் நவீன மியான்மரில் உள்ள அரக்கன் மாகாணம் மற்றும் தெனாசெரிம் ஆகியவற்றின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றது.


1874-ம் ஆண்டு தனி மாகாணமாகப் பிரிக்கப்படும் வரை அசாம் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாகவே ஆளப்பட்டது. 1905 மற்றும் 1921-க்கு இடையில், எதிர்ப்புகளைத் தொடர்ந்து நிர்வாகம் பிரிக்கப்பட்டு, மீண்டும் வங்காளத்தின் ஒரு பகுதியாக ஆளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், 1823-33-ஆம் ஆண்டு ஆங்கிலோ-காசி போருக்குப் (Anglo-Khasi war) பிறகு காசிஸின் மலைப்பகுதிகளையும், 1832-ல் கச்சார் இராச்சியத்தையும் (Cachar kingdom), 1835-ல் வங்காளதேசத்தின் சில்ஹெட் பகுதி (Sylhet region) மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஜெயந்தியா இராச்சியத்தையும் (Jaintia kingdom) ஆங்கிலேயர்கள் அசாமுடன் இணைத்தனர்.


காலனித்துவ நிர்வாகம், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள் எல்லைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை இயற்றி, அசாம் சமவெளியில் வசிப்பவர்களுக்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே ஒரு தெளிவான பிரிவை ஏற்படுத்த முயன்றது. இந்த எல்லை அதன் உருவாக்கத்தில் மிகவும் தன்னிச்சையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் புதிய தேயிலை, நிலக்கரிப் பகுதிகள் அல்லது மதிப்புமிக்க வனப் பகுதிகளைச் சேர்ப்பதற்காக இந்த எல்லையைச் சாதாரணமாக நீட்டித்தனர்.


காலனித்துவவாதிகள் இறுதியில் மலைகளில் வசிப்பவர்களையும், சமவெளிகளில் வசிப்பவர்களையும் பிரிக்கும் இரட்டைப் பிரிவை நிறுவினர். மலைகள் மற்றும் சமவெளிகளின் பார்வையில் உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்த முயன்றனர். இதனால் 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தில் மலைவாழ் பழங்குடியினரை 'விலக்கப்பட்ட பகுதிகள்' (Excluded Areas) மற்றும் 'பகுதியளவு விலக்கப்பட்ட பகுதிகள்' (Partially Excluded Areas) என்று வகைப்படுத்தினர்.


உள்எல்லை ஒழுங்குமுறை (Inner Line regulation), நாகா மற்றும் லுஷாய் மாவட்டங்கள் உட்பட விலக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் அணுக முடியாததை உறுதி செய்தது. அதேநேரத்தில் காரோ, காசி-ஜெயந்தியா மற்றும் மிகிர் மலை மாவட்டங்கள் உட்பட பகுதி விலக்கப்பட்ட பகுதிகளுக்கும் பொருந்தியது. பகுதிவாரியாக விலக்கப்பட்ட பகுதிகள் அசாம் சமவெளிகளுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பேணி வந்தன. இருப்பினும், சமவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிராந்தியங்களில் நிலம் வாங்க அனுமதிக்கப்படவில்லை.


தற்போதைய அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய வடகிழக்கு எல்லைப் பகுதிகள் 1914-ல் உருவாக்கப்பட்டன. அவை அசாமின் குடியேற்ற மாவட்டங்களுக்கும் (தற்போதைய அசாம் மற்றும் சில்ஹெட்டின் பெரும்பகுதி) திபெத் மற்றும் பர்மாவுடனான சர்வதேச எல்லைகளுக்கும் இடையில் அமைந்திருந்தன.

சுதந்திரத்திற்குப் பிந்தைய, நடைமுறை சார்ந்த நிர்வாகக் கவலைகள்


சுதந்திரத்திற்குப் பிறகு, ​​வடகிழக்கு இந்தியாவின் 98% எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாறியது. சீனா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகியவை அண்டை நாடுகளாக இருந்தன. வடகிழக்கு இந்தியா என்ற கருத்து, காலனித்துவத்திற்குப் பிந்தைய இந்திய அரசு இந்த ஏகாதிபத்திய எல்லைப் பகுதியை "சாதாரண இறையாண்மை கொண்ட அரசின்" தேசியப் பகுதியாக மாற்ற முயற்சித்ததில் இருந்து உருவானது.


இந்திய அரசு, தேசிய பாதுகாப்பை மையமாகக் கொண்டு, காலனித்துவ எல்லை மாகாணத்தின் நிர்வாக அமைப்பை மாற்றும் ஒரு புதிய நிர்வாக அமைப்பை அறிமுகப்படுத்த முயன்றது. அரசியலமைப்பு சபையில் பல விவாதங்களுக்கு மத்தியில், அசாம் மாநிலத்தின் அரசியல் அமைப்பு குறித்து பல விவாதங்கள் நடந்தன. சட்டமன்றத்தில் மாநில பிரதிநிதியான ரோகிணி குமார் சவுத்ரி போன்ற இந்தியத் தலைவர்கள், மலைப்பிரதேச மாநிலங்களை அசாம் சமவெளிகளுடன் இணைப்பதற்காக வாதிட்டனர். அசாமிய மொழியை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான நடவடிக்கை வேகம் பெற்றதால், 1950-களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.


இருப்பினும், பழங்குடியினர் காலனித்துவ ஆட்சியின்போது பெற்ற சில பாதுகாப்புகளைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினர். இவ்வாறு, அரசியலமைப்பின் 6-வது அட்டவணை உருவாக்கப்பட்டது. இது பழங்குடிப் பகுதிகளை நிர்வகிக்க தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களை அனுமதித்தது. வடகிழக்கு எல்லைப்புற முகமை (1954-ல் மறுபெயரிடப்பட்டது) மற்றும் இன்றைய நாகாலாந்தின் சில பகுதிகள் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றின. இந்தப் பகுதிகள் புது தில்லியிலிருந்து நேரடியாக நிர்வகிக்கப்பட்டன. மேலும், அசாம் ஆளுநர் இந்திய குடியரசுத் தலைவரின் முகவராகச் செயல்பட்டார்.


இருப்பினும், 1962-ம் ஆண்டு சீனாவுடனான இந்தியாவின் போர் வடகிழக்கில் ஒரு புதிய மாநில உருவாக்கத்தைக் கொண்டு வந்தது. இந்த மோதலின் மையமாக வடகிழக்கு எல்லைப்புற முகமை (North-Eastern Frontier Agency(NEFA)) இருந்தது. இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, பிராந்தியத்தை தனிமைப்படுத்தும் பிரிட்டிஷ் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளும் ஜவஹர்லால் நேருவின் கொள்கை நிராகரிக்கப்பட்டது. அதன் உடனடி விளைவாக, ஒரு வருடம் கழித்து நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது. இது எல்லைப்புற மாகாணத்தில் ஒரு புதிய ஆட்சி அமைப்பை அறிமுகப்படுத்தியது.


காலனித்துவ ஆட்சியின் கீழ் மறைமுகமாக சுதேச மாநிலங்களாக ஆளப்பட்ட மணிப்பூர் மற்றும் திரிபுரா, 1950-கள் மற்றும் 1960-களில் ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 1971-ம் ஆண்டு வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் மூலம், அவை 1971-ல் முறையான நிறுவனங்களுடன் முழுமையான மாநிலங்களாக மாறின. மேகாலயா மற்றும் மிசோரம் ஒன்றியப் பிரதேசம் அசாமில் முன்னர் தன்னாட்சி பெற்ற இரண்டு மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டன. வடகிழக்கு எல்லைப்புற முகமை (NEFA) அருணாச்சலப் பிரதேசத்தின் ஒன்றியப் பிரதேசமாக மாறியது. மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டும் 1987-ல் முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டன.            

 Original Article : As Manipur, Meghalaya, Tripura celebrate statehood day, a look back at the birth of the Northeast.

Share:

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய அபாய அறிக்கை 2026 : உலகமும் இந்தியாவும் எதிர்கொள்ளும் முதன்மை அபாயங்கள். -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு என்ன? :


உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) 56-வது வருடாந்திரக் கூட்டம் டாவோஸில் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார மன்றம் (WEF) உலகளாவிய அபாய அறிக்கை-2026-ன் படி, உலகம் எதிர்கொள்ளும் முக்கிய அபாயங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வருடாந்திர அறிக்கையின் 21-வது பதிப்பு, கடுமையான பத்தாண்டுகாலத்தின் இரண்டாம் பாதியைக் குறிக்கிறது மற்றும் புவிசார் பொருளாதார மோதலை மிகவும் குறிப்பிடத்தக்க உலகளாவிய ஆபத்தாக அடையாளம் காட்டுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் உலகப் பொருளாதார மன்றம் (WEF) வருடாந்திரக் கூட்டத்தின்போது பரவலாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், அறிக்கையையும் அதன் முக்கிய கண்டுபிடிப்புகளையும் கீழே குறிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. இந்த அறிக்கை, முடிவெடுப்பவர்களுக்கு தற்போதைய நெருக்கடிகள் மற்றும் நீண்டகால முன்னுரிமைகளை சமநிலைப்படுத்துவதை ஆதரிப்பதற்காக மூன்று காலக்கெடுக்கள் மூலம் உலகளாவிய அபாயங்களை பகுப்பாய்வு செய்கிறது. இது உடனடி காலகட்டத்தில் உள்ள அபாயங்களை ஆராய்கிறது. இது 2026-ஐக் குறிப்பதுடன், 2028 வரை நீடிக்கும்.  குறுகிய முதல் நடுத்தர காலகட்டம் (2028 வரை) மற்றும் நீண்ட காலகட்டம் (2036 வரை) அபாயங்களையும் மதிப்பிடுகிறது.


2. அறிக்கையின்படி, 2026-ம் ஆண்டில் உலகளாவிய அபாயங்களின் கண்ணோட்டத்தின் வரையறுக்கும் கருப்பொருள் நிச்சயமற்றத் தன்மையாகும். உலகளாவிய அபாயங்கள் அளவில் வளர்ந்து வருகின்றன. அவை மேலும் ஒன்றோடொன்று இணைந்தவையாகவும் வேகமானவையாகவும் மாறி வருகின்றன. இதன் விளைவாக, 2026-ம் ஆண்டு போட்டி நிறைந்த சகாப்தமாக விவரிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் பலதரப்பு கட்டமைப்புகளிலிருந்து பின்வாங்குவதால், ஒத்துழைப்பு வழிமுறைகள் பலவீனமடைவதால், நிலைத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


3. குறிப்பிடத்தக்க வகையில், உலகளாவிய அபாயங்கள் குறித்த கருத்துக்கணிப்பு (Global Risks Perception Survey) 2025-2026-ல் புவிசார் பொருளாதார மோதல் முதலிடத்தில் இருப்பதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது உடனடி காலக் கண்ணோட்டம் மற்றும் இரண்டு ஆண்டு காலக்கெடு ஆகிய இரண்டிற்குமான தரவரிசைகளில் முன்னணியில் உள்ளது. இரண்டு ஆண்டு தரவரிசையில், இது கடந்த ஆண்டைவிட எட்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

புவி பொருளாதார மோதல் என்றால் என்ன?

        இது நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை மறுவடிவமைக்க உலகளாவிய அல்லது பிராந்திய சக்திகளால் பொருளாதார கருவிகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இதன் நோக்கும் தன்னிறைவை உருவாக்குவது, அறிவு, சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துதல், புவிசார் அரசியல் போட்டியாளர்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும்/அல்லது மேம்பட்ட மண்டலங்களை ஒருங்கிணைத்தல் ஆகும். ஆனால், இவை மட்டும் அல்ல, நாணய நடவடிக்கைகள், முதலீட்டு கட்டுப்பாடுகள், தடைகள், அரசு உதவி மற்றும் மானியங்கள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும்.


4. அறிக்கையின்படி, "பலதரப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதால் அதிகரித்து வரும் வெற்றிடத்திற்கு ஒரு காரணமாகவும் அதன் விளைவாகவும் அதிகரித்த புவிசார் பொருளாதார மோதல் உள்ளது. இது ஒரு பலதுருவ உலகம் (unipolar world) பலதரப்பு ஒன்றை நோக்கி நகர்வதால், ஒரு புதிய போட்டி நிறைந்த உலக ஒழுங்கு உருவாகி வருகிறது. அரசுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இப்போது குறைவான பலதரப்பு கட்டுப்பாடுகளுடன், அதிகரித்துவரும் தேசிய தடைகள் மற்றும் மோதல் விளைவுகள் உலகம் முழுவதும் எதிர்மறையான பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்."


5. தொடர்புடைய ஒரு அபாயமான, அரசுகளுக்கு இடையேயான ஆயுத மோதல், கடந்த ஆண்டு உடனடி அபாயப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு உலகளாவிய அபாயங்கள் குறித்த கருத்துக்கணிப்பில் (GRPS) இரண்டாவது இடத்திலும், மற்றும் இரண்டு ஆண்டுக் கண்ணோட்டத்தில் 5-ம் இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அபாயங்களும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒன்றின் தீவிரத்தன்மை அதிகரிப்பது, மற்றொன்றையும் பாதிக்கிறது.


Knowledge Nugget: What are the top risks faced by the world?

6. இந்த அறிக்கை உடனடி அழுத்தங்களுக்கும் நீண்டகால அபாயங்களுக்கும் இடையே ஒரு கடுமையான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது; குறுகியகால தரவரிசைகளில் சுற்றுச்சூழல் அபாயங்கள் புவிசார் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கவலைகளால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

7. 2036-ம் ஆண்டு வரை நீண்டகால அடிப்படையில், தீவிர வானிலை நிகழ்வுகள் மிக முக்கியமான அடையாளம் காணப்பட்ட அபாயங்களாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சரிவு, புவி அமைப்புகளில் ஏற்படும் முக்கியமான மாற்றம், தவறான தகவல் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் பாதகமான விளைவுகள் போன்றவை அடங்கும்.

8. இந்த அறிக்கை தீவிர வானிலை நிகழ்வுகளை மனித உயிர் இழப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம், சொத்து அழிவு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிதி இழப்பு என வரையறுக்கிறது.

இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்துகள்


1. அறிக்கையின்படி, இணையப் பாதுகாப்பின்மை என்பது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாகும். அதைத் தொடர்ந்து சமத்துவமின்மை (செல்வம், வருமானம்), போதுமான பொது சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புகள் (கல்வி, உள்கட்டமைப்பு, ஓய்வூதியங்கள் உட்பட) மற்றும் பொருளாதார வீழ்ச்சி (எ.கா., மந்தநிலை, தேக்கம்), அரசு சார்ந்த ஆயுத மோதல்கள் (பினாமி, உள்நாட்டுப் போர்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள், பயங்கரவாதம் போன்றவை) போன்ற பிற அபாயங்கள் உள்ளன.Knowledge Nugget: What are the top risks faced by the world?


2. இந்த அறிக்கை இணையப் பாதுகாப்பின்மையை மின்னணு அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புக்குள்ளாகும் நிலை என வரையறுக்கிறது. இது தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றே இயற்கையாகவோ செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும், இணையக் குற்றவாளிகள் அல்லது தீங்கிழைக்கும் நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று வரையறுக்கிறது.

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum(WEF)) பற்றி

1. உலகப் பொருளாதார மன்றம் (WEF) என்பது 1971-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுவிஸ் இலாப நோக்கற்ற அறக்கட்டளையாகும். இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இது பொது-தனியார் ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேச நிறுவனமாக சுவிஸ் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் கிளாஸ் ஸ்வாப் ஆவார்.


2. உலகளாவிய, பிராந்திய மற்றும் தொழில்துறை செயல்திட்டங்களை வடிவமைக்க வணிக, அரசியல், கல்வி மற்றும் பிற சமூகத் தலைவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் உலகின் நிலைமையை மேம்படுத்த உலகப் பொருளாதார மன்றம் (WEF) உறுதியாக உள்ளது.


3. உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட சில முக்கிய அறிக்கைகள். அவை எரிசக்தி மாற்றக் குறியீடு, உலகளாவிய போட்டித்தன்மை அறிக்கை, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப (IT) அறிக்கை (உலகப் பொருளாதார மன்றம் (WEF), INSEAD மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த அறிக்கையை வெளியிடுகிறது), உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை, உலகளாவிய இடர்பாடு அறிக்கை, உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலா அறிக்கைகள் அடங்கும்.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) பிற அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025


1. உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025-ம் ஆண்டின் 19-வது பதிப்பு, 148 நாடுகளுக்கான உலகளாவிய பாலின இடைவெளியை 68.8 சதவீதமாகக் காட்டுகிறது. இது கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட மிக வலுவான வருடாந்திர முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


2. இந்த அறிக்கை, 2024-ம் ஆண்டில் அனைத்து பரிமாணங்களிலும் பாலின சமத்துவம் உயர்ந்துள்ளதாகவும், 14 குறிகாட்டிகளில் 11 குறிகாட்டிகள், கடந்த ஆண்டின் முடிவை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது. இதுவரை எந்த நாடும் முழுமையான பாலின சமத்துவத்தை அடையவில்லை.


3. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு (Global Gender Gap Index) ஆண்டுதோறும் உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்படுகிறது. இது முதன்முதலில் 2006-ம் ஆண்டில் நான்கு முக்கிய பரிமாணங்களில் பாலின சமத்துவத்தின் தற்போதைய நிலை மற்றும் பரிணாம வளர்ச்சியை அளவிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அவை,


(i) பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு

(ii) கல்வி சாதனை

(iii) ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வு

(iv) அரசியல் அதிகாரமளித்தல்.


4. இந்தக் குறியீடு 0 மற்றும் 1 க்கு இடையில் உள்ளது. இதில் 1 என்பது முழுமையான சமத்துவத்தைக் குறிக்கிறது. பாலின இடைவெளி என்பது முழுமையான சமத்துவத்திலிருந்து உள்ள தூரமாகும். ஐஸ்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக உலகின் மிகவும் பாலின சமத்துவமான பொருளாதாரமாகத் திகழ்கிறது. இது பாலின இடைவெளியில் 92.6% இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் பொருள், 90% சமத்துவத்தை அடைந்த ஒரே பொருளாதாரம் இதுவாகும். இதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, ஐக்கிய இராச்சியம் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.


5. இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த நிலையிலிருந்து இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. தெற்காசியாவில் வங்காளதேசம் சிறந்த செயல்திறன் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. இது 75 இடங்கள் முன்னேறி உலக அளவில் 24-வது இடத்தைப் பிடித்துள்ளது.

எரிசக்தி மாற்ற குறியீடு-2025 (Energy Transition Index)

1. பாதுகாப்பான, சமத்துவமான மற்றும் நிலையான எரிசக்தி அமைப்புகளை நோக்கிய உலகளாவிய முன்னேற்றம் கணிசமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்த மந்தமான முன்னேற்றத்தை மாற்றியமைத்துள்ளது என்று உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.


2. 2025-ம் ஆண்டில், 65 சதவீத நாடுகள் தங்கள் எரிசக்தி மாற்ற குறியீட்டு (Energy Transition Index (ETI)) மதிப்பெண்களை மேம்படுத்தியுள்ளன. மேலும், 28 சதவீதம் நாடுகள் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய மூன்று முக்கிய பரிமாணங்களிலும் முன்னேறியுள்ளன.


3. ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் எரிசக்தி பல்வகைப்படுத்தல், தூய்மையான எரிசக்தி பயன்பாடு, வலுவான கொள்கைகள் மற்றும் நம்பகமான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கி, பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன. இந்தியா 53.3 என்ற எரிசக்தி மாற்ற குறியீட்டு (ETI) மதிப்பெண்ணுடன் 71-வது இடத்தில் உள்ளது.


Original Article :WEF Global Risks Report 2026: Top risks faced by the world and India. -Roshni Yadav

Share:

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதி விதிகள் 2026 - முக்கிய சிறப்பம்சங்கள் -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள் :


சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதி விதிகள்-2026 (Environmental (Protection) Fund Rules), நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விரிவாக விளக்குகின்றன.


இது காற்றின் தரக் கண்காணிப்புக் கருவிகள் போன்ற சுற்றுச்சூழல் கண்காணிப்பு உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் முதல் ஆய்வக அமைப்புகள் மூலம் திறன் மேம்பாடு மற்றும் ஏற்கனவே உள்ள மாசுபட்ட இடங்கள் உட்பட சுற்றுச்சூழல் சேதங்களை சரிசெய்தல் வரை அடங்கும். இந்த நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தக்கூடிய 11 செயல்பாடுகள் இந்த விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.


இவற்றில், நிதியை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்ட மேலாண்மைப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை வழங்குவது தொடர்பான நிர்வாகச் செலவுகளும் அடங்கும். இந்தச் செலவுகள், ஒரு நிதியாண்டில் மத்திய அல்லது மாநில அரசிடம் உள்ள நிதியில் உள்ள தொகையில் ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இந்த விதிகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரை ஒரு "தகுதிவாய்ந்த அதிகாரி" (competent authority) என்று வரையறுக்கின்றன. அவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மத்திய அரசால் அவசியமாகக் கருதப்படும் "வேறு எந்த நோக்கத்திற்கும்" நிதியைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கலாம்.


பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வுகளை மேற்கொள்வதும் நிதியைப் பயன்படுத்தக்கூடிய நோக்கங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.


அபராதங்கள் மூலம் சேகரிக்கப்படும் நிதி, ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்ட விதிகளின்படி, இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு (Consolidated Fund of India) வரவு வைக்கப்பட்டு, பின்னர் இந்திய பொதுக் கணக்கிற்கு (Public Account of India) மாற்றப்படும்.

UPSC Key: PM meets UAE President, Mohanlal case, and Trump’s invite to join Gaza peace board


ஜன் விஸ்வாஸ் சட்டம்-2023-ன் படி (Jan Vishwas Act) மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியை உருவாக்குவதற்கான சில விதிகளை மேற்கொண்டது. இது காற்றுச் சட்டம்-1981, நீர் சட்டம்-1974 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்-1986 (Environment (Protection) Act(EPA)), ஆகியவற்றின் கீழ் பல மாசுபாடு தொடர்பான குற்றங்களை குற்றமற்றதாக்க வழிவகுத்தது. இந்தச் சட்டங்களின் கீழ் விதிகளை மீறுவதற்கான அபராதங்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும்.


“நிதியில் வசூலிக்கப்படும் அபராதத்தில் 75%-ஐ நிர்வாகி சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்த வேண்டும். மேலும், அபராதத்தில் 25% மத்திய அரசால் தக்கவைக்கப்படும்” என்று விதிகள் கூறுகின்றன.


நிதியின் கணக்குகள் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India) தணிக்கை செய்யப்படும். மேலும், தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் தாக்கல் செய்யப்படும்.

 Original Article :What are the key highlights of the Environmental (Protection) Fund Rules, 2026? -Roshni Yadav , Khushboo Kumari

Share:

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முன் அனுமதி தேவையா? -ரங்கராஜன் ஆர்.

 ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A எதை வலியுறுத்துகிறது? அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரிவு 17A அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்து நீதிமன்றங்கள் ஏன் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினார்? இது குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் என்ன கூறியுள்ளன? அரசு ஊழியர்களிடையே நிலவும் ஊழலைக் கையாள்வதற்குத் தேவையான அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் யாவை?


தற்போதைய செய்தி: 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act (PCA)) பிரிவு 17A-ன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த பிரிவு, அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவல் பணிகளில் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றத்தையும் விசாரிப்பதற்கு முன், அரசாங்கத்திடமிருந்து உரிய முன் அனுமதி பெற வேண்டும்.


1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act (PCA)) என்றால் என்ன?


 ஒன்றிய அரசு 1962-ஆம் ஆண்டு K. சந்தானம் தலைமையில் ஊழலைத் தடுப்பதற்கான ஒரு குழுவை அமைத்தது. சந்தானம் குழு 1964-ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இது லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில், ஊழல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள்வதற்காக, 1988-ல் ஊழல் தடுப்புச் சட்டம் (PCA) என்ற முழுமையான சட்டம் இயற்றப்பட்டது.


ஊழல் தடுப்புச் சட்டம், 1988, அரசு ஊழியர்கள் பொதுப் பணிகளைச் செய்யும்போது செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்குகிறது. 'அரசு ஊழியர்' என்பதில் எந்தவொரு அரசாங்க அல்லது உள்ளாட்சி அதிகார ஊழியர், எந்தவொரு நீதிபதி, எந்தப் பதவியின் காரணமாக பொதுக் கடமையைச் செய்ய வேண்டியுள்ளாரோ அத்தகைய நபர் ஆகியோர் அடங்குவர். 'பொதுக் கடமை' (Public duty) என்பது, அரசாங்கத்திற்கோ, பொதுமக்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்கோ நலன் உள்ள ஒரு கடமையைக் குறிக்கும். ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களின் வகைகளில் லஞ்சம், பிரதிபலன் இல்லாமல் முறையற்ற ஆதாயம் பெறுதல், குற்றவியல் முறைகேடு போன்றவை அடங்கும்.


பிரிவு 17A என்றால் என்ன?


1988-ஆம் ஆண்டு PCA ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19, ஒரு பொது ஊழியர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கு முன்பு, அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதியைப் பெற வேண்டும். இருப்பினும், வேண்டுமென்றே செய்யப்படும் ஊழலுக்கும், தவறாக நடக்கக்கூடிய நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. தவறான வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாக அதிகாரிகள் தைரியமான மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, 2018-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மூலம் செய்ததன் நாடாளுமன்றம் பிரிவு 17A-ஐச் சேர்த்தது.


இந்தப் பிரிவின்படி, ஒரு பொது ஊழியர் தனது அலுவல்பூர்வ செயல்பாடு அல்லது கடமைகளை நிறைவேற்றும்போது எடுத்த பரிந்துரை அல்லது முடிவு தொடர்பான எந்தவொரு குற்றத்தையும் விசாரிக்க அல்லது விசாரணை செய்ய, அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும்.


முந்தைய தீர்ப்புகள் என்னவாக இருந்தன??


வினீத் நரேன் vs இந்திய ஒன்றியம் (1998) வழக்கில், சில வகை பொது ஊழியர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்குமுன் நியமிக்கப்பட்ட அதிகாரியின் முன் அனுமதியை கட்டாயமாக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (Central Bureau of Investigation (CBI)) வழங்கப்பட்ட 'ஒற்றை வழிகாட்டுதல்' என்று குறிப்பிடப்படும் நிர்வாக உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, 2003-ஆம் ஆண்டில், CBI-ன் செயல்பாட்டை நிர்வகிக்கும் டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தை (Delhi Special Police Establishment Act (DSPE Act)) நாடாளுமன்றம் திருத்தியது. இணைச் செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு விசாரணையையும் தொடங்க ஒன்றிய அரசின் முன் அனுமதி தேவை என்று இந்தச் சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாக இருந்ததால் (equality before law) உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


தற்போது வழங்கப்பட்ட முரண்பட்ட தீர்ப்புகள்?


உச்சநீதிமன்றத்தின் ஒரு பிரிவு அமர்வு வழங்கிய தற்போதைய தீர்ப்பு,  ஒன்றிய அரசுக்கு எதிராக பொது நல வழக்கு மையம் (Centre for Public Interest Litigation (CPIL)) தாக்கல் செய்த ஒரு பொது நல வழக்கின் (Public Interest Litigation (PIL)) மீதானது ஆகும். நேர்மையான அதிகாரிகளைத் தொந்தரவு தரும் மற்றும் ஆதாரமற்ற புகார்களிலிருந்து பாதுகாப்பதற்காக, விசாரணை தொடங்குவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம் என்று நீதிபதி K.V. விஸ்வநாதன் தீர்ப்பளித்தார். அத்தகைய பாதுகாப்பு இல்லாத பட்சத்தில், அதிகாரத்துவம் அதிகப்படியாகப் பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடும் என்று நீதிபதி எச்சரித்தார். அரசாங்கம் அல்லாமல், ஒரு சுதந்திரமான அமைப்பு ஒப்புதல் அளித்தால்தான் பிரிவு 17A செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார். தனது உத்தரவில், பிரிவு 17A-ஐ லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் (Lokpal and Lokayuktas Act) சட்டம், 2013 உடன் இணைத்த நீதிபதி, ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு முறையே லோக்பால் அல்லது லோக் ஆயுக்தாக்களிடமிருந்து ஒரு உறுதிப்படுத்தப்பட்ட கருத்தைப் பெற்ற பின்னரே அரசாங்கம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


மறுபுறம், நீதிபதி பி. வி. நாகரத்னா, பிரிவு 17A அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அது நீதிமன்றத்தால் முந்தைய வழக்குகளில் ரத்து செய்யப்பட்ட ‘வித்தியாசமாகவோ தோன்றும் ஒரு சட்டம் அல்லது விதி’ (Old wine in new bottle) போன்றது என்றும் தீர்ப்பளித்தார். சட்டப்பிரிவு 14, சட்டங்கள் வெவ்வேறு வழக்குகளுக்கு இடையே தெளிவாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்றும், சட்டத்தின் நோக்கத்துடன் நியாயமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் கோருகிறது. ஆனால், பிரிவு 17A இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் கூறினார். நேர்மையான அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19-ன் கீழ் அவர்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் நீதிபதி பி. வி. நாகரத்னா கூறினார்.


இந்த விவகாரம் இப்போது முதன்மை அமர்வால் விசாரிக்கப்பட்டு ஒரு தீர்ப்பு வழங்கப்படும். இதற்கிடையில், இரண்டு முறையான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, வழக்குகளை விரைவாக முடித்து, ஊழல் தடுப்பு நடவடிக்கையாக செயல்படும் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை வழங்க வேண்டும். இரண்டாவதாக, தவறான மற்றும் தீங்கிழைக்கும் புகார்களுக்கு (malicious complaints) அபராதம் விதிக்கப்படலாம். இது மக்கள் வழக்கமாகவோ அல்லது தேவையற்ற காரணங்களுக்காகவோ புகார் (habitual and vexatious) அளிப்பதைத் தடுக்கும்.


ஆர். ரங்கராஜன் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற நூலின் ஆசிரியர். இவர் தற்போது இந்திய ஆட்சிப் பணி அகாடமியில் பயிற்சி அளிக்கிறார்.


Original Article : Should corruption charges need prior sanction? -Rangarajan R.

Share:

நீதிபதி நீக்கம் - குறைபாடுடன் கூடிய கடுமையான சட்டம் -பி.டி.டி. ஆச்சாரி

 தகுதியற்ற நீதிபதியை நீக்குவதற்கான ஒரு முக்கியமான அரசியலமைப்பு விதியின் செயல்பாட்டை இன்னும் முறியடிக்க முடியும்.


டிசம்பர் 2025-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி G.R. சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அறிவிப்பாணை அளித்த 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த 107 மக்களவை உறுப்பினர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை அவர்கள் நீதிபதி G.R. சுவாமிநாதன்மீது சுமத்தியுள்ளனர். இந்த அறிவிப்பாணை (notice) டிசம்பர் 9 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


ஒரு நீதிபதியை எவ்வாறு பதவி நீக்கம் செய்வது என்பதை அரசியலமைப்புச் சட்டம் விளக்குகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி பிரிவுகள்  124(4) மற்றும் 124(5) குறிப்பிடுகின்றன. அதே சமயம் உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி பிரிவுகள் 217(1)(b) மற்றும் 218 குறிப்பிடுகின்றன. அரசியலமைப்பில் தகுதி நீக்கம் (‘impeachment’) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக நீதிபதிகள் விவகாரத்தில் நீக்கம் (‘removal’) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. குடியரசுத்தலைவரை பதவியில் இருந்து நீக்கும் சூழலில் மட்டுமே 'தகுதி நீக்கம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று பிரிவு 61 குறிப்பிடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் (removal) செய்வதற்கு பிரிவு 124-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும்.


பிரிவு 124(5), நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கு (law to regulate the procedure for the investigation) நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்ற அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி, நாடாளுமன்றம் 1968-ஆம் ஆண்டில் நீதிபதிகள் விசாரணை (udges (Inquiry) Act) சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம், நீதிபதிகள் விசாரணை விதிகளுடன் சேர்ந்து, நீதிபதிகளைப் பதவிநீக்கம் செய்வதற்கான முழுமையான நடைமுறையை வகுத்துள்ளது.


உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தவறாக நடந்து கொண்டது நிரூபிக்கப்பட்டாலோ அல்லது தனது கடமைகளைச் செய்ய இயலாதவராக இருந்தாலோ, அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம். 'தவறான நடத்தை' (Misbehaviour) என்பதன் பொருள் என்ன என்பதை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இருப்பினும், நீதித்துறையை அவமதிக்கும் செயல்கள், வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகள், ஊழல், நேர்மையின்மை, மோசமான செய்யப்படும் குற்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை ‘தவறான நடத்தை' என்பதில் அடங்கும் என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது.


நீதிபதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. 1991-ஆம் ஆண்டு K. வீரசாமி vs இந்திய யூனியன் மற்றும் மற்றவர்கள்  (K. Veeraswami vs Union Of India And Others) வழக்கில், நீதிபதிகள் முழுமையான நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் நீதிமன்றத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மை மற்றும் நியாயத்தின் மிக உயர்ந்த தரங்களைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நீதிபதி இதைச் செய்யத் தவறினால், அவர்கள் தங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை மீறுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். எந்தவொரு விளக்கங்களோ   அல்லது சட்ட நுணுக்கமோ (legal relativity) இத்தகைய துரோகத்தை நியாயப்படுத்த முடியாது.


1992-ஆம் ஆண்டு M.கிருஷ்ணசாமி vs இந்திய யூனியன் (M. Krishna Swami vs Union of India) வழக்கில், ஒரு நீதிபதியால் செய்யப்படும் ஒவ்வொரு தவறும் அல்லது பிழையும் தவறான நடத்தை ஆகாது என்று நீதிமன்றம் விளக்கியது. தவறான நடத்தை என்பது நீதித்துறை அதிகாரத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துதல், உள்நோக்கத்துடன் தவறாகச் செயல்படுதல், ஊழல் செய்தல், நேர்மையற்றவராக இருத்தல் அல்லது மோசமான ஒழுக்கத்தைக் காட்டும் ஒரு குற்றத்தைச் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கும். தவறான நடத்தை (misconducts) என்பது, அதைச் செய்பவரால் ஒரு குறிப்பிட்ட அளவிலான குற்ற எண்ணத்துடன் செயல்படுவதைக் குறிக்கிறது.


தீர்மானத்தின் நடைமுறைகள் (Procedures of the motion)


சட்டப்பிரிவுகள் 124(4) மற்றும் (5), 1968-ஆம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டம் மற்றும் அதன் விதிகளைப் பார்க்கும்போது, ​​சட்டமியற்றுபவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க விரும்பினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டம் மிகவும் கடுமையாக்கப்பட்டது. சட்டப்பிரிவுகள் 124(4) மற்றும் 124(5)-ன் முக்கிய விதிகள் பின்வருமாறு: ‘நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும்பான்மையோராலும் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானம், நீதிபதியை நீக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்பேரில் குடியரசுத் தலைவர் அந்த நீதிபதியை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு உத்தரவைப் பிறப்பிப்பார்’ என்று குறிப்பிடுகிறது. நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது தொடர்பான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும், அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்குத் தீர்மானம் அனுப்புவதற்கும் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கும் (enactment of a law) இது வழிவகை செய்கிறது.


இந்தச் சட்டம், ஒரு நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம் மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் சட்டம் அந்த அவையின் உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ அதில் கையொப்பமிட வேண்டும்  என்று கூறுகிறது. அந்தத் தீர்மானம் நீதிபதியை பதவியில் இருந்து நீக்குமாறு குடியரசுத் தலைவரைக்கு பரிந்துரை செய்கிறது.


இந்தச் சட்டம், அறிவிப்பு வழங்கப்பட்ட ஒரு தீர்மானம் சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு செயல்முறையை உருவாக்குகிறது. மேலும், அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் இது சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவருக்கு வழங்குகிறது.


நிச்சயமாக, சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் தனக்குக் கிடைக்கும் ஆவணங்களைக் கருத்தில் கொள்வார். மேலும், தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு முன்பு, சட்ட நிபுணர்களாக கருதும் நபர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். இந்த நடைமுறையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சபாநாயகரோ அல்லது தலைவரோ அந்தத் தீர்மானத்தை நிராகரித்தால், வேறு எதுவும் செய்ய முடியாது. அந்தத் தீர்மானம் காலாவதியாகிவிடும்.


இந்த நடைமுறையை உன்னிப்பாக ஆராய வேண்டும். மசோதாவை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் இந்த சட்டம் குறிப்பிடவில்லை. ஏனெனில், நாடாளுமன்ற அவைகளின் நடைமுறை விதிகளின்கீழ் உள்ள அனைத்து தீர்மானங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இந்தச் சட்டத்தின்கீழ் மசோதாவை ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ சபாநாயகர்/தலைவர் அவையின் தலைமை அதிகாரியாக கடமையைச் செய்யவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ளலாம். மாறாக, அவர் ஒரு சட்டப்பூர்வ அதிகாரியாகச் (statutory authority) செயல்பட்டு, ஒரு சட்டக் கடமையை நிறைவேற்றுகிறார். இருப்பினும், ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான அல்லது நிராகரிப்பதற்கான விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அந்தத் தீர்மானத்தை நிராகரிப்பது நியாயமற்றதாகக் கருதப்படலாம். தீர்மானத்தை நிராகரிப்பது என்பது ஒரு சட்டமியற்றும் முடிவு மட்டுமல்லாமல், ஒரு சட்டப்பூர்வச் செயல் என்பதால், அதை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும்.


குறை எங்கே இருக்கிறது


உண்மையில், ஒரு நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சபாநாயகர்/தலைவர் நியமித்த, உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு அனுபவம் வாய்ந்த நீதிபதியைக் கொண்ட குழுவால் முழுமையாக விசாரிக்கப்படுகின்றன. தீர்மானத்தை சபாநாயகர்/தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மிகவும் அனுபவம் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளால் செய்யப்படும் விரிவான விசாரணையாக இருக்கும். அப்படியானால், முதல் கட்டத்தில் சபாநாயகர்/தலைவர் மேற்கொள்ளும் அந்த செயல்முறைகள் சரியாக என்னவாக இருக்கும்? சட்டத்தின்கீழ், சபாநாயகர்/தலைவரால் செய்யப்படும் ஆரம்பகட்டப் நடவடிக்கையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம். ஏனெனில், 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட தீர்மான அறிவிப்பு, எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டால், ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக அரசியலமைப்பு விதியின்கீழ் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்படும் முழு நடவடிக்கையும் பயனற்றதாகிவிடும். ஏனெனில், அந்தத் தீர்மானம் காலாவதியாகிவிடும். இது சட்டத்தில் உள்ள ஒரு கடுமையான குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. சட்டப்பிரிவு124(5), சபாநாயகர் அல்லது தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ வேண்டிய எந்தவொரு குறிப்பிட்ட தீர்மானத்தைப் பற்றியும் (does not refer to any specific motion) குறிப்பிடவில்லை. இதற்கு மாறாக, சட்டப்பிரிவு 61 ஒரு தீர்மானம் முன்மொழியப்பட வேண்டும் என்று கோருகிறது. மேலும் சபாநாயகரோ அல்லது தலைவரோ எந்தக் காரணத்திற்காகவும் தீர்மானத்தை ஏற்க மறுக்க முடியாது.


உண்மையில், "ஒரு தீர்மானத்தை முன்வைப்பதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும்" மற்றும் "ஒரு நீதிபதியின் தவறான நடத்தை அல்லது இயலாமையை விசாரித்து நிரூபிப்பதற்கும்" சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 124(5), தீர்மானத்தை அனுமதி மறுக்க சபாநாயகர்/தலைவருக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. தவறான நடத்தைக்கான ஆதாரம், சபாநாயகர்/தலைவரால் நியமிக்கப்படும் உயர்மட்டக் குழுவால் நடத்தப்படும் விசாரணை மூலம் அவை செய்யப்பட வேண்டும்.


எனவே, 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு தீர்மானத்தை தொடக்கத்திலேயே நிராகரிக்க எந்த அடிப்படையும் காரணமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


ஒரு நீதிபதியை பதவி நீக்கம் (impeaching a judge) செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதைத் தீவிரமாகப் பரிசீலிக்காமல் செய்வார்கள் என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், அந்தத் தீர்மானத்தை அரசாங்கம் விரும்பவில்லை என்றால், அதை ஆரம்பத்திலேயே எளிதாக நிராகரித்துவிட முடியும். இவ்வாறு, தகுதியற்ற ஒரு நீதிபதியை நீக்குவதற்கான ஒரு முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் செயல்பாடு, ஒரு அரசாங்கத்தின் விருப்பங்களால் முறியடிக்கப்படலாம்.


எனவே, சபாநாயகர் அல்லது தலைவருக்குத் தீர்மானத்தை நிராகரிக்க அனுமதிக்கும் விதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.


P.D.T. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.


Original Article : Judicial removal — tough law with a loophole -P.D.T. Achary

Share:

இந்தியாவில் மாற்றுத்திறன் மற்றும் மனநலச் சட்டங்களை மறுபரிசீலனை செய்தல். -யஜூர் கிருஷ்ணமூர்த்தி

மன மற்றும் உடல் குறைபாடுகள் குறித்த சமீபத்திய இரண்டு சட்டங்கள் சுயநிர்ணயம், உள்ளடக்கம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இருப்பினும், அறிவுசார் மற்றும் மனநலக் குறைபாடுகள் என இரண்டையும் கொண்டவர்கள் அல்லது அறிவாற்றல் சிக்கல்களால் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாதவர்களுக்கு ஆதரவளிக்க இந்தச் சட்டங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது அரிதாகவே உள்ளது.


மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் சார்ந்த சட்டங்கள் குறித்த இந்தியாவின் விவாதங்கள், ஒருபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களையும், மறுபுறம் அவை தீவிரமாகப் புறக்கணிக்கப்படுவதையும் காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017 (Mental Healthcare Act, 2017) மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016) ஆகிய இரண்டு முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இவை, அரசு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை வெறும் 'தர்மம்' தேவைப்படுபவர்களாகப் பார்க்காமல், 'உரிமை' உள்ளவர்களாக மாற்றவும், அவர்களைக் காப்பகங்களில் அடைத்து வைக்காமல் சமூகத்தோடு இணைக்கவும் வழிவகை செய்கின்றன. இருப்பினும், நடைமுறையில் இந்தச் சட்டங்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், மக்கள் அனுபவிக்கும் உண்மை நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. அறிவுசார் மற்றும் மனநல பாதிப்புடைய பெரியவர்களுக்கு நீண்டகாலப் பராமரிப்பு அளிக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் அடிப்படையில், இந்தச் சட்டங்களை ஆய்வு செய்தபோது, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், இன்னும் நீடிக்கும் நடைமுறை சார்ந்த சிக்கல்களும் தெளிவாகத் தெரிகின்றன


மாறிவரும் சட்டச் சூழல்


1912-ஆம் ஆண்டின் பழைய காலனித்துவ 'மனநலக் குறைபாடு சட்டத்திற்கு' (Lunacy Act) பதிலாக, 1987-ஆம் ஆண்டு 'மனநலச் சட்டம்' (Mental Health Act of 1987)  கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக ஒரு ஆபத்தானவர்களாகவும், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலுமே பார்க்கப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) இந்தியா கையெழுத்திட்ட பிறகு, இந்தப் பழைய சட்டமானது நீக்கப்பட்டு 'மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017' (Mental Healthcare Act, 2017) கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய சட்டம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உரிமை கொண்ட குடிமக்களாகப் பார்க்கத் தொடங்கியது. அவர்களுக்கு தகுந்த மரியாதை, சிகிச்சைக்கு முறையான ஒப்புதல் மற்றும் அரசின் ஆதரவு பெறுவதற்கான உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும், இது 'மனநல மறுஆய்வு வாரியங்களை' (Mental Health Review Boards) அமைத்ததுடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனநலச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தது மற்றும் கட்டாயச் சிகிச்சைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.


1995-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை விரிவுபடுத்தி உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) Act, 2016, உடல் ரீதியான, புலன் சார்ந்த, அறிவுசார்ந்த மற்றும் மனநலரீதியான குறைபாடுகள் உட்பட 21 வகையான குறைபாடுகளை அங்கீகரித்துள்ளது. இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியதோடு, பொது இடங்களை அவர்கள் எளிதாக அணுகும் வகையில் மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் முடிவுகளைத் தாங்களே எடுக்கும் உரிமையை இச்சட்டம் உறுதி செய்கிறது; அதாவது, மற்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக முடிவெடுக்கும் முறைக்கு மாற்றாக, அவர்களுக்குத் தேவையான ஆதரவுடன் கூடிய முடிவெடுக்கும் முறையை இந்தச் சட்டம் உறுதிபடுத்துகிறது. 


இந்த இரண்டு சட்டங்களுமே ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கையின் ((United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) விழுமியங்களான சுயநிர்ணயம் (autonomy), உள்ளடக்கம் (inclusion) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இருப்பினும், இவை இரண்டும் இணைந்து இந்திய மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சிக்கலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதாவது, ஒருங்கிணைப்பு தேவைப்படும் இடங்களில்,  இரண்டு தனித்தனி சட்டங்கள் அரிதாகவே இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. 


தெளிவற்ற நிலை


இந்தச் சட்டங்களுக்கு இடையே உள்ள சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் அறிவுசார் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், அல்லது தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் முடியாத அளவுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்களே மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


மனநலப் பாதுகாப்புச் சட்டம் (Mental Healthcare Act (MHA), 2017),  ஒரு நபர் உடல்நலக் குறைவின் போது தற்காலிகமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் சூழல்களைக் கையாள்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD), 2016 - அறிவுசார் குறைபாடு அல்லது மனநல கோளாறுகள் போன்ற நிரந்தரமான பாதிப்புகள் உள்ளவர்களின் நிலையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. ஒரு நபரின் சுயாதீனமான முடிவெடுக்கும் திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான பாதுகாவலர் நியமனம், சொத்து மேலாண்மை அல்லது அவர்களுக்கு முடிவெடுக்க உதவும் முறைகள் (Supported Decision-making) எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


இது ஒரு கொள்கை இடைவெளியை உருவாக்கியுள்ளது. மனநலம் மற்றும் அறிவுசார் குறைபாடு ஆகிய இரண்டையும் கொண்ட நபர்களை ஆதரிக்கும் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள், தெளிவான சட்ட வழிகாட்டுதல் இன்றி பல அதிகார அமைப்புகளை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிபுணர்களுடனான நேர்காணல்கள் ஒரு பொதுவான கவலையை வெளிப்படுத்தின: சட்டங்கள் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன, ஆனால் நடைமுறைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை மிகக் குறைவாகவே வழங்குகின்றன. தனிமனித சுதந்திரம் சரியாக மதிக்கப்படுகிறது. ஆனால், நிரந்தரமாக சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்குத் தெளிவான, செயல்படக்கூடிய கட்டமைப்பு எதுவும் இல்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர். 


உள்ளடக்கம் பற்றிய மாயை


2017-ஆம் ஆண்டு மனநலப் பாதுகாப்புச் சட்டம் (MHA) மற்றும் 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD) ஆகிய இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் பொதுச் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கான மறுவாழ்வு முறையை ஆதரிக்கின்றன. இருப்பினும், இதற்கான வசதிகள் இன்னும் மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இதன் விளைவாக, பல குடும்பங்கள் மனநல காப்பகங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது அவர்கள் தங்கள் உறவினர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் அல்ல என்றும் மாறாக அவர்களுக்கு வேறு வழி இல்லாததாலேயே இந்நிலை ஏற்படுவதாகவும் தெளிவுபடுத்துகின்றனர். 


சுவாமி தயானந்தா கிருபா பராமரிப்பு மையம் (Swami Dayananda Krupa Care) என்பது அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 40-க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண்களுக்காகத் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மையமாகும். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதியை வழங்குகிறது. இங்குள்ளவர்களுக்கு அன்றாட சுய பராமரிப்பு முதல் அவர்களின் நடத்தையை கையாளுதல் வரை பல்வேறு நிலைகளில் ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் இயலும்போது வந்து பார்க்கிறார்கள். மேலும், சிலர் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கு, இந்த நிறுவனமே அவர்களது இல்லமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 


நிபுணர்கள், மனநலக் காப்பகங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு (Deinstitutionalization) சமூகப் பராமரிப்பிற்கு மாறுவதை மிகைப்படுத்திப் பார்ப்பதற்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். முறையான அரசு நிதி, பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் சமூக அங்கீகாரம் இல்லாமல், பெரிய அளவிலான சமூகப் பராமரிப்பு முறைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று டாக்டர் கிஷோர் கூறுகிறார். உண்மையான உள்ளடக்கம் என்பது அணுகல் முறை, அனுதாபம் மற்றும் சமூகக் களங்கத்தை நீக்குவதன் மூலம் - மக்களின் மனப்பான்மையை மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது என்று டாக்டர் தீபக் போன்ற சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சமூகநடைமுறை என்னவென்றால், இதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்: சிலருக்கு மனநலக் காப்பகங்கள் இன்னும் அவசியமாக இருக்கும் என்றும் ஆனால் அது மனிதத்தன்மையுடனும், வெளிப்படையானதாகவும், உரிமைகளை மதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். 


ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்


ஐரோப்பிய சட்டங்களை, குறிப்பாக ஸ்வீடன் நாட்டுச் சட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ள புரிதலை வழங்குகிறது. ஸ்வீடனின் சமூக சேவைச் சட்டம் (Sweden’s Social Services Act (SFS 2001:453)), ஒரு நபரின் தனிநபர் சுதந்திரம், குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் கூடிய பராமரிப்பு மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது. சமூக அளவிலான அனைத்துப் பராமரிப்பு முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னரே ஒருவரை மனநல விடுதிகளில் அல்லது காப்பகங்களில் (Institutionalisation) சேர்ப்பது அனுமதிக்கப்படுகிறது. மேலும், எடுக்கப்படும் முடிவுகள் அந்த நபரின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஸ்வீடன் நாடு சமூக நலன், பாதுகாவலர் முறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே உரிமை சார்ந்த அமைப்பாக மாற்றியுள்ளது—இந்த ஒருமைப்பாடு இந்தியாவின் பிளவுபட்ட சட்டங்களில் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்று தனியான, ஒருங்கிணைந்த மனநலச் சட்டம் ஏதுமில்லை. இருப்பினும், அது அடிப்படை உரிமைகளுக்கான சாசனம் (Charter of Fundamental Rights) மற்றும் ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கை (UNCRPD) ஆகியவற்றைப் பின்பற்றுகிறது. இவை தனிமனித கண்ணியம், உரிமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்பைப் பாதுகாக்கின்றன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் சட்டங்கள் பெரும்பாலும் வெறுமனே பெயரளவில் லட்சியங்களாக மட்டுமே உள்ளன. அவை எழுத்துப்பூர்வமாக முற்போக்கானவையாக இருந்தாலும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமலும், மாநிலங்களுக்கு இடையே சீரற்ற முறையிலும் செயல்படுத்தப்படுகின்றன.


பாதுகாவலர் உரிமை, தகுதி மற்றும் சட்டம்


பாதுகாவலர் உரிமை (Guardianship) என்பது ஒருவேளை மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கலாம். 1890-ஆம் ஆண்டின் பாதுகாவலர்கள் மற்றும் பரமரிப்பாளர்கள் சட்டம் (The Guardians and Wards Act) இன்றும் நடைமுறையில் உள்ளது, ஆனால் அது தன்னாட்சி மற்றும் உரிமைகள் பற்றிய நவீன கருத்துக்கள் உருவாவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பாதுகாவலர்களை நியமிக்க முடியும் என்றாலும், அந்த நடைமுறை மிகவும் மெதுவாகவும், இடத்திற்கு இடம் மாறுபட்டு சீரற்ற முறையில் உள்ளது. பல குடும்பங்கள் தங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்று கவலைப்படுகிறார்கள். ஆனால், தற்போதைய சட்டமோ அல்லது நவீன சட்டங்களோ இதற்குத் தெளிவான பதிலைத் தருவதில்லை. பாதுகாவலர்களை நியமிப்பதற்கோ, மறுஆய்வு செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ முறையான மற்றும் எளிமையான வழிமுறைகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள்  தீர்வுகாண முடியாத சூழல்களில் சிக்கித் தவிக்கின்றன.


இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பிரிவின்கீழ் வராமல், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்கீழ் (Directive Principles of State Policy) வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இச்சட்டங்களைச் செயல்படுத்துவது என்பது அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்ததே தவிர, நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பொறுத்தது அல்ல என்கிற ஒரு ஆழமான சிக்கலை பிரபாகரன் சுட்டிக்காட்டுகிறார்.


சட்ட நடைமுறையிலிருந்து நடைமுறை வாழ்க்கை வரை


எனது விடுமுறை காலப் பயிற்சியின்போது, கள ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்கள் மூன்று அவசர சவால்களை வெளிப்படுத்துகின்றன:


சமூகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமை: ஆதரவுடன் கூடிய தங்குமிடங்கள், தொழிற்பயிற்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்கள் ஆகியவை இல்லையென்றால், "சமூகத்தோடு இணைந்து வாழ்வது" என்பது வெறும் பேச்சாகவே நின்றுவிடும் என்கின்றனர்.


முறையான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை: முறையான மேற்பார்வை இல்லையென்றால், நிறுவனங்கள் மக்களைப் புறக்கணிக்கலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 


பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு மற்றும் சட்ட அறிவு இல்லாமை: பல குடும்பங்களும், நிபுணர்களும் தங்களுக்குரிய உரிமைகள், சட்ட நடைமுறைகள் மற்றும் சலுகைகள் குறித்து இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.


இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நமக்கு புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும்  மாறாக, இருக்கின்ற சட்டங்களுக்கிடையே ஒருமைப்பாடு, முறையான அமலாக்கம் மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் மட்டுமே அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். சட்டங்கள் ஒன்றையொன்று புறக்கணிக்காமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


புதிய சட்டம்


2024-ஆம் ஆண்டில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் நிலையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அரசு கொள்கைகளில் புறக்கணிக்கப்பட்ட நிலை மாறி, நீதிமன்றங்கள் மூலம் அந்த உரிமைகள் கட்டாயமாக நிலைநாட்டப்படும் சூழல் உருவானது. ராஜீவ் ரதுரி vs இந்திய ஒன்றியம்' (Rajive Raturi vs Union of India) என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (Accessibility) என்பது வெறும் ஆலோசனைகள் அல்ல, அவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிகள்" என்று தீர்ப்பளித்தது. மேலும், நிறுவனங்கள் தாங்களாகவே விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கும் முறையையும் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேபோல, 'சீமா கிரிஜா லால்' வழக்கில் (Seema Girija Lal case), சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர்களை நியமிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவும் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC)), மனநலக் காப்பகங்களில் உள்ள "மனிதத்தன்மையற்ற" சூழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், 'பூஜா கேட்கர்' (Puja Khedkar fake certificate scandal) போலி சான்றிதழ் விவகாரத்தால் பின்னடைவு ஏற்பட்டது. இந்த முறைகேடு காரணமாக அரசு நிர்வாகம் சான்றிதழ் வழங்கும் முறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் 'மனித உரிமைகளாக' சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அரசு நிர்வாகத்தில் உள்ள தடைகள் உண்மையான முன்னேற்றத்திற்கு இன்னும் பெரும் சிக்கலாகவே உள்ளன.


வெறும் அடையாள அரசியலிலிருந்து வெளியேறுதல்


இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலச் சட்டங்கள், அவர்களைப் 'பாதுகாப்பதில்' இருந்து 'அதிகாரப்படுத்துதல்' என்ற அறநெறி சார்ந்த மாற்றத்தை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இருப்பினும், முறையான கட்டமைப்புகள் இல்லாத அதிகாரப்படுத்துதல் வெறும் அடையாளமாக மட்டுமே இருக்கும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். தங்களைத் தாங்களே தற்காத்துப் பேச முடியாதவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட, நிர்வாக மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே, அவர்களின் கண்ணியத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது ஒரு உண்மையான சவாலாகும். உண்மையான அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்பது வெறும் முன்னேற்றகரமான சட்டங்களை இயற்றுவதில் மட்டுமல்ல என்றும் அந்தச் சட்டங்கள் மிகச் சாதாரண நிலையில் உள்ள மக்களையும், வெவ்வேறு திறன்களைக் கொண்டிருப்பவர்களையும் சமூகத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு நம்பிக்கை இழந்தவர்களையும் ஆகியோரை சென்று சேருவதை உறுதி செய்வதே ஆகும்.


யஜுர் கிருஷ்ணமூர்த்தி, சோனிபட்டில் உள்ள ஜிந்தால் குளோபல் லா ஸ்கூலில் பி.பி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்) மூன்றாம் ஆண்டு மாணவர் ஆவார்.


 Original Article : Rethinking disability and mental health law in India -Yajur Krishnamoorthy

Share: