சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதி விதிகள் 2026 - முக்கிய சிறப்பம்சங்கள் -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள் :


சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதி விதிகள்-2026 (Environmental (Protection) Fund Rules), நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விரிவாக விளக்குகின்றன.


இது காற்றின் தரக் கண்காணிப்புக் கருவிகள் போன்ற சுற்றுச்சூழல் கண்காணிப்பு உபகரணங்களை நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் முதல் ஆய்வக அமைப்புகள் மூலம் திறன் மேம்பாடு மற்றும் ஏற்கனவே உள்ள மாசுபட்ட இடங்கள் உட்பட சுற்றுச்சூழல் சேதங்களை சரிசெய்தல் வரை அடங்கும். இந்த நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தக்கூடிய 11 செயல்பாடுகள் இந்த விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.


இவற்றில், நிதியை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்ட மேலாண்மைப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை வழங்குவது தொடர்பான நிர்வாகச் செலவுகளும் அடங்கும். இந்தச் செலவுகள், ஒரு நிதியாண்டில் மத்திய அல்லது மாநில அரசிடம் உள்ள நிதியில் உள்ள தொகையில் ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இந்த விதிகள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரை ஒரு "தகுதிவாய்ந்த அதிகாரி" (competent authority) என்று வரையறுக்கின்றன. அவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மத்திய அரசால் அவசியமாகக் கருதப்படும் "வேறு எந்த நோக்கத்திற்கும்" நிதியைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கலாம்.


பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வுகளை மேற்கொள்வதும் நிதியைப் பயன்படுத்தக்கூடிய நோக்கங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.


அபராதங்கள் மூலம் சேகரிக்கப்படும் நிதி, ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்ட விதிகளின்படி, இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு (Consolidated Fund of India) வரவு வைக்கப்பட்டு, பின்னர் இந்திய பொதுக் கணக்கிற்கு (Public Account of India) மாற்றப்படும்.

UPSC Key: PM meets UAE President, Mohanlal case, and Trump’s invite to join Gaza peace board


ஜன் விஸ்வாஸ் சட்டம்-2023-ன் படி (Jan Vishwas Act) மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியை உருவாக்குவதற்கான சில விதிகளை மேற்கொண்டது. இது காற்றுச் சட்டம்-1981, நீர் சட்டம்-1974 மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்-1986 (Environment (Protection) Act(EPA)), ஆகியவற்றின் கீழ் பல மாசுபாடு தொடர்பான குற்றங்களை குற்றமற்றதாக்க வழிவகுத்தது. இந்தச் சட்டங்களின் கீழ் விதிகளை மீறுவதற்கான அபராதங்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும்.


“நிதியில் வசூலிக்கப்படும் அபராதத்தில் 75%-ஐ நிர்வாகி சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்த வேண்டும். மேலும், அபராதத்தில் 25% மத்திய அரசால் தக்கவைக்கப்படும்” என்று விதிகள் கூறுகின்றன.


நிதியின் கணக்குகள் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India) தணிக்கை செய்யப்படும். மேலும், தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் தாக்கல் செய்யப்படும்.

 Original Article :What are the key highlights of the Environmental (Protection) Fund Rules, 2026? -Roshni Yadav , Khushboo Kumari

Share: