பொருளற்ற சடங்கு : ஆளுநர்களும், அவர்களின் செயல்பாடுகளும்.

 ஆளுநர்களின் நடத்தை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தையே பலவீனப்படுத்தியுள்ளது.


பாரதிய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளைக் கவனித்து வருபவர்களுக்கு, ஜனவரி 20 அன்று தமிழநாட்டின் ஆளுநர் R.N. ரவி மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் தங்களின் வழக்கமான சட்டமன்ற உரைகளின்போது அவர்கள் செயல்பட்ட விதம் அனைவரையும் எதிர்பார்த்த படியே இருந்தன. சென்னையில், R.N. ரவி உரையைப் படிக்க மறுத்துவிட்டார். ஆளுநர் மாளிகை, அவர் வெளிநடப்பு செய்ததை நியாயப்படுத்த, அந்த உரையில் "ஆதாரமற்ற கூற்றுகளும் தவறான தகவல்களும்" இருந்ததாகக் கூறியது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆளுநர் தயாரிக்கப்பட்ட உரைகளைப் படிக்க மறுத்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆற்றிய கொள்கை உரையில் திருத்தங்களை செய்ததாகக் கூறினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆளுநர் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, சிலவற்றைச் சேர்த்திருந்தார். நீண்டகாலம் ஆளுநர்களாகப் பணியாற்றிய R.N. ரவி மற்றும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோருக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மாநிலத்திற்குத் தெரிவிக்கும் உரை அல்லது சிறப்புரையின் சரியான வாசகத்தை ஆளுநர் வாசிப்பது ஒரு நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் அரசியலமைப்பு மரபு என்பது தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலேய மன்னர் அதிகாரப்பூர்வ உரையை மாற்றி வாசித்த நிகழ்வு இதுவரை நடந்ததில்லை. மேலும், இந்திய அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற ஜனநாயக மாதிரியை (Westminster model) அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், மாநில அரசாங்கங்களின் "குரலாக" (mouthpieces) செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இருந்தபோதிலும், அவர்கள் மரபை மீறத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் R. வெங்கட்ராமன் கூறினார். ஆளுநர் R.N.ரவி அடிக்கடி சர்ச்சை  கருத்துகளை கூறுவார். ஆனால், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த ஆண்டு செய்தது போல் இந்த முறை செயல்படவில்லை. அப்போது அவர் தயாரிக்கப்பட்ட உரையைத் தவறாமல் வாசித்து, சட்டைப்பேரவை மரபை கவனகமாக பின்பற்றினார்.


ஆளுநர் ரவியின் இந்த தொடர்ச்சியான மரபு மீறல்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை நீக்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியலமைப்பின் 87 மற்றும் 176-வது பிரிவுகள், குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் புதிய ஆண்டில் நடைபெறவிருக்கும்  கூட்டத்தொடர் அன்று நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் சிறப்புரையாற்ற வேண்டும் (special addresses) என்று கூறுகின்றன. 35 ஆண்டுகளுக்கு முன்பு, குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், இந்த நடைமுறையை ஒரு காலாவதியான பிரிட்டிஷ் வழக்கம் (British anachronism) மற்றும் பொருளற்ற சடங்கு (meaningless formality) என்று கூறி, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இதை நீக்குமாறு பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சந்திர சேகர் ஆகியோருக்குப் பலமுறை பரிந்துரை செய்துள்ளார். காலாவதியான காலனித்துவச் சட்டங்களை (outdated colonial laws) ரத்துசெய்யும் பணியைத் தானே ஏற்றுக்கொண்டதாகத் தோன்றும் ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு இணையாக இந்த ஆலோசனையைப் பார்க்க வேண்டும். அந்த இரண்டு பிரிவுகளின் வாசகங்கள் பொதுச்சபையின் விதிகளிலிருந்து (House of Commons) பெறப்பட்டவை. அவற்றை நீக்குவதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. ஏனெனில் பிரிவுகள் 86 மற்றும் 175-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் சட்டமன்றத்தில் உரையாற்றும் உரிமை தொடர்ந்து இருக்கும். முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்காத அதிகாரங்களை ஆளுநர்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும், அது வழங்கியுள்ள விதி மற்றும் உணர்வுகள் இரண்டையும் மதித்து முன்மாதிரியாக ஆளுநர்கள் திகழ வேண்டும்.

Original Article : Meaningless formality: On Governors, their actions.


Share: