சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஏன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது? - ரவீனா பனேட்டா

 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment (EIA)) கட்டமைப்பு ஏன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் உள்ள முக்கிய நிலைகள் எவை? வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020 (Draft EIA Notification, 2020) தொடர்ச்சியாகச் சர்ச்சைக்குரியதாகவே நீடிப்பது ஏன்? மேலும், இந்தியாவின் சுற்றுச்சூழல் அனுமதி முறையை உச்சநீதிமன்றம் எவ்வாறு ஒழுங்குபடுத்தியுள்ளது?


கடந்த புதன்கிழமை ஜூலை மாதம் 29-ஆம் தேதி, சுற்றுச்சூழல் அனுமதி  பெறாமல் ஏற்கனவே கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்ட திட்டங்களுக்கு, பின்னாள்களில் அனுமதி பெற வாய்ப்பளித்த ஒன்றிய அரசின் 2021-ஆம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், சுற்றுச்சூழல் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, விதிமீறல் திட்டங்களுக்குத் தன்னிச்சையாகவும் தடையின்றியும் பின் தேதியிட்டு (Retrospective approval) அனுமதி வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், சட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சூழல்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை நீதிமன்றம் வழங்குகிறது. இதன் மூலம், நிர்வாகத்தின் அதிகார எல்லைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்கீழ் விதிமீறல்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரம்புகள் ஆகிய இரண்டையும் தெளிவுபடுத்தி, ஒரு சமநிலையான அணுகுமுறையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ்களைப் பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னர் ஒப்புதல் அளிக்கும் 'பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை' (Ex-post facto Environmental Clearances) ஒரு வெறும் அலுவலகக் குறிப்பாணை மூலம் கொண்டுவர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், விதிவிலக்கான சூழல்களிலிலும் மற்றும் பொது நலன் கருதியும், அரசு தனது சட்டப்பூர்வமான அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் இத்தகைய வழிமுறையை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டது. இந்த அலுவலகக் குறிப்பாணையானது, விதிகளின் மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கியுள்ளதாக நீதிமன்றம் கருதியது. ஆனால், மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டின் அறிக்கையானது ஆறு மாத காலத்திற்கு மட்டுமேயான ஒருமுறைப் பொது மன்னிப்பை வழங்கியதால், அதை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.


2. பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு 'எந்த வடிவத்திலும் அல்லது முறையிலும்' முற்றிலும் தடை விதித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து இந்தத் தீர்ப்பு மாறுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தவிர்க்க முடியாத பொதுநலன் கருதி நியாயப்படுத்தப்பட்டால், மிகக் குறுகிய அளவில் வடிவமைக்கப்பட்ட ஒருமுறைக்கான மன்னிப்புத் திட்டத்தை அனுமதிக்கலாம் என்று இத்தீர்ப்பு கூறியுள்ளது. வனசக்தி எதிர். இந்திய ஒன்றியம் (Vanashakti vs Union of India) வழக்கில்தான், முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி, மார்ச் மாதம் 2017-ஆம் ஆண்டு அறிக்கை மற்றும் ஜூலை மாதம் 2021-ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை ஆகிய இரண்டையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது." 


3. 2017- ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருமுறை பொது மன்னிப்புத் திட்டம் (One-time amnesty scheme) ஏற்கனவே தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது என்றும், அதை எதிர்காலத்தில் நடக்கும் விதிமீறல்களை முறைப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொது நலனைக் கருத்தில் கொண்டு நியாயப்படுத்தப்படும் வரம்பிற்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட சட்டப்பூர்வ மன்னிப்புத் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் விதிமீறல்களை வழக்கமாக முறைப்படுத்த அனுமதிக்கும் தொடர்ச்சியான நிர்வாக முறைக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டைப் பிந்தையத் தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.


அலுவலகக் குறிப்பாணை என்றால் என்ன?


அலுவலகக் குறிப்பாணை என்பது ஒரு அமைச்சகம் அல்லது துறையால் வெளியிடப்படும் நிர்வாகரீதியான அறிவுறுத்தலாகும்; இதற்குச் சட்ட வலிமை கிடையாது. இதற்கு மாறாக, 'சட்டப்பூர்வ அறிவிப்பு' (statutory notification) என்பது ஒரு சட்டத்தின்கீழ், இவ்வழக்கில் 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் சட்டப்பூர்வ அறிவிப்பாகும்.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?


4. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது, ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சாதகமான மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் விளைவுகளை சீரான முறையில் மதிப்பீடு செய்யும் ஒரு நடைமுறையாகும். இதன் முக்கிய நோக்கம், வளர்ச்சித் திட்டங்களால் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மீது ஏற்படும் தாக்கங்களை முன்கூட்டியே கணித்து மதிப்பீடு செய்வதாகும்.


5. இது, ஒரு முன்மொழியப்பட்ட திட்டத்தைப் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்கி, முடிவெடுப்பவர்கள் சரியான தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. சாத்தியமான எதிர்மறையான தாக்கங்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, அவற்றுக்கு ஏற்ற மாற்று வழிகளையும், பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பதன் மூலம் இது நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் மூலம் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் இத்திட்டம் குறித்துத் தங்களின் கவலைகளையும் கருத்துகளையும் தெரிவிக்க முடிகிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை காலப்போக்கில் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது?


6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது முதன்முதலில் 1969-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த நடைமுறை 1978–79-ஆம் ஆண்டில் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுடன் தொடங்கியது. தொடக்கத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையானது அணைகள் மற்றும் மின் திட்டங்கள் போன்ற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், பின்னர் இது தொழிற்சாலைகள், சுரங்கத் திட்டங்கள் மற்றும் நகரப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


7. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன்கீழ், பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இதன் மூலம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும், மாசுபடுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டம் முதலே, வளர்ச்சித் திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறை மூலமாக முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதியைத் கட்டாயம் பெறவேண்டிய நிலை உருவானது.


8. 1994-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்புக்குப் பதிலாக, 2006-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர், 2006-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளடக்கி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் விரைவானதாகவும் மாற்றுவதற்காக 2020-ஆம் ஆண்டில் அரசு மற்றொரு வரைவுத் திட்டத்தை தயாரித்தது.




எந்தெந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகிறது?


9. 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளின் அடிப்படையில், வளர்ச்சித் திட்டங்களை 'பிரிவு A' மற்றும் 'பிரிவு B' என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. 'பிரிவு A' திட்டங்கள், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஒன்றிய அரசிடமிருந்து முந்தைய சுற்றுச்சூழல் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும்.


10. பிரிவு B திட்டங்களுக்கும் இவற்றுக்கும் முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படுகிறது. ஆனால், மாநில/யூனியன் பிரதேச நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (State/UT Expert Appraisal Committee (SEAC)) பரிந்துரையின் அடிப்படையில், மாநில/யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State/Union Territory Environment Impact Assessment Authority (SEIAA)) இதற்கான அனுமதியை வழங்கும். 'பிரிவு B' திட்டங்கள் மேலும் 'B1' மற்றும் 'B2' என இரு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.


11. 'பிரிவு B1' திட்டங்களுக்கு முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகிறது. ஆனால், 'பிரிவு B2' திட்டங்களுக்கு இந்த அறிக்கை தேவையில்லை. எனவே, 'பிரிவு A' மற்றும் 'பிரிவு B1' திட்டங்கள் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுகின்றன, அதேசமயம் 'பிரிவு B2' திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020 என்றால் என்ன?


12. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2020, சுற்றுச்சூழல் அனுமதி பெறும் செயல்முறையை நவீனமாகவும் திறம்பட செயல்படுவதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 2006-ஆம் ஆண்டின் அறிக்கைக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துவதோடு, பொதுமக்களின் பங்களிப்பையும் குறைக்கிறது என்று பலர் கருதுவதால் பெரும் சர்ச்சைக்குள்ளானது.


13. இந்த வரைவறிக்கையில் மிகவும் விவாதிக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்று, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டங்களுக்கான காலஅவகாசத்தை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைப்பதாகும். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் குறைக்கப்பட்ட அதிகாரத்துவ தாமதங்கள் காரணமாக இது சாத்தியமானது என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கூறுகிறது. ஆனால், திட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும், ஆலோசனைகளில் பங்கேற்பதற்கும் இது மக்களுக்குக் குறைந்த நேரத்தையே வழங்குகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.


14. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, நீர்மின் திட்டம், பாசனம் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த பல திட்டங்களை ‘B2’ பிரிவின்கீழ் கொண்டு வருவதன் மூலம், அவற்றைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் இருந்து விலக்க இந்த வரைவு முன்மொழிகிறது. இத்தகைய திட்டங்கள் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இந்த அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


EIA, Environment Impact Assessment, UPSC current affairs, conservation, draft EIA15. மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்து என்னவென்றால், 'பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதி' (Post-facto environmental clearance) ஆகும். அதாவது, முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு, பின்னர் அனுமதி பெற இந்த முறை வழிவகுக்கிறது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் எதிர் ரோஹித் பிரஜாபதி (Alembic Pharmaceuticals vs  Rohit Prajapati 2020) வழக்கில், "பின்தேதியிட்ட தேதியில் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதிகள் சட்டப்படி செல்லாது என்றும் அத்தகைய அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


16. மேலும், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் அல்லது விதிகளைப் பின்பற்றாத நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இந்த வரைவு அனுமதிப்பதில்லை. இதனால், இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முழுப்பொறுப்பும் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இந்த 2020-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிப்பானது சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது, பொதுமக்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களின்கீழ் இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லை என்ற கவலைகள் எழுந்துள்ளன.


17. இருப்பினும், இந்த அறிக்கையில் சில சாதகமான அம்சங்களும் உள்ளன. இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளை எளிமையாக்கி, திட்டங்களுக்கான தேவையில்லாத காலதாமதங்களையும் நிர்வாகப் பணிச்சுமைகளையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals (SDGs)) ஒருங்கிணைக்கவும் முயற்சிக்கிறது. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற குறைந்த அபாயமுள்ள திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கான இதன் விதிகள், 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) என்ற இந்தியாவின் இலக்கிற்கு உதவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


18. டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும்கூட, சுற்றுச்சூழல் விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய 'அனுமதிக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் இணக்க விதிகள்' (Post-clearance monitoring and compliance) உதவுகின்றன. மேலும், இந்த வரைவுத் திட்டம் திட்டங்களின் வகை மற்றும் அமைவிடத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு தேவைகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் திறம்படச் செய்கிறது.


நீதித்துறையின் பார்வையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 


1. இந்திய உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. 1997-ஆம் ஆண்டின் டி.என். கோதாவர்மன் திருமுல்பாத் எதிர் இந்திய அரசு (TN Godavarman Thirumulpad v Union of India) வழக்கில், நீதிமன்றமானது, திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாக, குறிப்பாக வனப்பகுதிகளில் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு' மற்றும் 'சுற்றுச்சூழல் அனுமதி' ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியதன் மூலம், தூய்மையான சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமையை அங்கீகரித்தது.


2. கங்கை நதி மாசு வழக்கு என்று பரவலாக அறியப்படும் 1996-ஆம் ஆண்டின் எம்.சி. மேத்தா எதிர். இந்திய ஒன்றிய அரசு வழக்கில் (MC Mehta vs Union of India), ஒவ்வொரு குடிமகனுக்கும் தூய்மையான சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களால் ஏற்படும் மாசுகளில் இருந்து நதிகளைக் காப்பாற்றவும், நீர்நிலைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்கு முன் கட்டாயமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


3. காமன் காஸ் (Common Cause) எதிர். இந்திய அரசு (2017) வழக்கில் (Common Cause vs Union of India), சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் சுரங்கப் பணிகளை, முன்அனுமதி பெறாமல் தொடங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையானது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும். மீட்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் முன்னரே அதன் விளைவுகளை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


4. அலெம்பிக் பார்மாசூட்டிகல்ஸ் எதிர். ரோஹித் பிரஜாபதி (2020) வழக்கு (Alembic Pharmaceuticals vs Rohit Prajapati) தீர்ப்பில், திட்டங்களைத் தொடங்கிய பிறகு பெறப்படும் பின்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதி என்பது சுற்றுச்சூழல் சட்டங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. முதலில் திட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டு, பிறகு ஒப்புதல் பெறலாம் என்ற இந்த அணுகுமுறை, சுற்றுச்சூழல் பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்துப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை கோட்பாட்டை (Precautionary Principle) பலவீனப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது.


5. இருப்பினும், பஹ்வா பிளாஸ்டிக்ஸ் எதிர். தஸ்தக் (2022) வழக்கின் (Pahwa Plastics vs Dastak) தீர்ப்பில், உச்சநீதிமன்றம் ஒரு நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை மேற்கொண்டது. அதாவது, குறிப்பாக சட்ட நடைமுறைகளில் தெளிவின்மை இருக்கும்போதும், சுற்றுப்புறச் சூழல் விதிகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் நிலவும்போதும், ஒரு தொழிற்சாலையை உடனடியாக மூடுவது மட்டுமே அதற்குரிய சரியான தீர்வாகிவிடாது என்று குறிப்பிட்டது. உடனடியாக மூடுவதைவிட, முறையான ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்பு நடவடிக்கைகளே சில சூழல்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் சிறந்த முறையில் வழிவகுக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Original Link : Why is Environmental Impact Assessment back in the spotlight? -Raveena Baneta

Share:

‘நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்’ கழிவுகளைச் செல்வமாக மாற்றி, சுழற்சிப் பொருளாதாரத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்? - ரேணுகா

 

நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் (Urban Mining) என்பது, பூமியைத் தோண்டி இயற்கை வளங்களை எடுப்பதற்குப் பதிலாக, நாம் பயன்படுத்தி தூக்கி எறிந்த மின்னணு சாதனங்கள், பழைய வாகனங்கள், கட்டடக் கழிவுகள் மற்றும் பயன்பாட்டிலிருக்கும் பொருட்களில் இருந்து தங்கம், வெள்ளி, செம்பு, கோபால்ட் மற்றும் நெகிழி போன்ற மதிப்புமிக்க பொருட்களைச் சேகரித்து, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் முறையாகும்.


நகர்ப்புறப் பகுதிகள் பல்வேறு வகையான கழிவுகளையும் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் உருவாக்குகின்றன. இவற்றை மீண்டும் மதிப்புமிக்க 'இரண்டாம் நிலை மூலப்பொருட்களாகப்' (Secondary raw materials) பயன்படுத்த முடியும். முக்கியமான கனிமங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தியா போன்ற அதிவேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் ஒரு நாட்டிற்கு, 'நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்' (Urban Mining) என்பது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் உத்திமுறைரீதியில் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.


இந்தியா லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), தாமிரம் (Copper), கிராஃபைட் (Graphite) மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் (Rare earth elements) போன்ற முக்கியமான கனிமங்களின் இறக்குமதிக்கு பெருமளவில் பிற நாடுகளையே சார்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தால் அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றின் காரணமாக, இந்த இறக்குமதிச் சார்பு நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நகர்ப்புறக் கழிவுகளிலிருந்து இந்த மதிப்புமிக்க கனிமங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பை ‘நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்’ வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சவால்கள் ஆகிய இரண்டையுமே எதிர்கொள்ள உதவுகிறது.


நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்றால் என்ன? அத்தியாவசியக் கனிமங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இந்தியா போன்ற அதிவேகமாக நகரமயமாக்கப்படும் ஒரு நாட்டிற்கு, இது ஏன் ஒரு பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் உத்திமுறைரீதியிலான அவசியமாக மாறியுள்ளது?


நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்றால் என்ன?


நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்பது நகரங்களில் உருவாகும் கழிவுகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட பொருட்களிலிருந்து மதிப்புமிக்கப் பொருட்களைப் பிரித்தெடுத்து மீட்டெடுக்கும் ஒரு செயல்முறையாகும். இது நகர்ப்புறக் கழிவுகளை, முக்கியமான மூலப்பொருட்களைப் பெறுவதற்கான ஒரு நிலையான ஆதாரமாக மாற்றுகிறது. 'நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல்' என்ற இந்தச் சொல்லை 1980-களில் ஜப்பானில் உள்ள தோஹோகு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிடேஓ நான்ஜியோ அறிமுகப்படுத்தினார். இன்று, நகர்ப்புறச் சுரங்கமானது சுழற்சிப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது.


வேகமான நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாடு ஆகியவை இருபத்தொன்றாம் நூற்றாண்டை வடிவமைத்துள்ளன. நகரங்கள் தொடர்ந்து விரிவடைந்து, உள்கட்டமைப்புகள் பெருகி வரும் சூழலில், தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய மாற்றம் நிலக்கரி, லித்தியம் போன்ற முக்கியக் கனிமங்களின் தேவையை அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், அதேவேளையில் இரண்டு முக்கியச் சவால்களையும் உருவாக்கியுள்ளன.


முதலாவது, தூக்கி எறியப்படும் மின்னணு சாதனங்கள் (E-waste), பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்கள் மற்றும் கட்டிடக் கட்டுமானக் கழிவுகள் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதாகும். இரண்டாவதாக, லித்தியம், கோபால்ட், தாமிரம், நிக்கல் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் (Rare Earth Elements) போன்ற கனிமங்களுக்கான தேவை மிகவேகமாக அதிகரிப்பது. தேவைகளின் இந்தத் திடீர் உயர்வு, இயற்கை வளங்களின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.


இந்தச் சிக்கல்களின் தீவிரத்தை ஒரு உண்மையின் மூலம் நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நமது பூமி தனது இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்கித் தரும் வேகத்தைவிட, 1.7 மடங்கு வேகத்தில் மனிதகுலம் தற்பொழுது அந்த வளங்களைப் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், தினமும் லட்சக்கணக்கான டன் திடக் கழிவுகள் குப்பை மேடுகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இந்த இரண்டு பெரும் சவால்களுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணும் ஒரு ஒருங்கிணைந்த தீர்வாக 'நகர்ப்புறச் சுரங்க முறை' (Urban Mining) உருவெடுத்துள்ளது.


நகர்ப்புற தாதுக்களின் முக்கிய ஆதாரங்கள்


நகர்ப்புறப் பகுதிகள் பல்வேறு வகையான கழிவுகளை உருவாக்குகின்றன. இவற்றை நாம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'இரண்டாம் நிலை மூலப்பொருட்களாக' மாற்ற முடியும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் இத்தகைய வளங்களில் மின்னணு பயன்பாட்டுக் கழிவுகள் மிகவும் முக்கியமானதாகும். இந்த மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, தாமிரம், கோபால்ட், லித்தியம் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன. 'Global E-waste Monitor' அமைப்பின் அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6.2 கோடி டன்கள் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. ஆனால், இதில் 22.3 சதவீதம் மட்டுமே அதிகாரப்பூர்வமாகச் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டன. இதன் காரணமாக, மீட்டெடுக்கக்கூடிய சுமார் 6,200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் வீணாக்கப்பட்டன.


குறிப்பாக, உலகளாவிய மின்னணுக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் 2.6 மில்லியன் டன்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், இது 2030-ஆம் ஆண்டிற்குள் 82 மில்லியன் டன் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023–24-ஆம் ஆண்டில், இந்தியா 17,51,236 மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கியுள்ளது.


கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளால் உருவாகும் கழிவுகளே அளவின் அடிப்படையில் 'நகர்ப்புறத் தாதுக்களின்' (Urban ores) மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் எஃகு (Steel), மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட், மரம், தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்கள் நிறைந்துள்ளன. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 முதல் 3 பில்லியன் டன்கள் வரை இத்தகைய கழிவுகள் உருவாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்தத் திடக்கழிவுகளில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான கழிவுகள், கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளின் மூலம் உருவாகின்றன.


இருப்பினும், இந்த கழிவுகளை 91 சதவீதம் வரை மறுசுழற்சி செய்ய முடியும் என்ற போதிலும், இதில் 22.44 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சி காரணமாக, கட்டுமானம் மற்றும் இடிப்பு சார்ந்த கழிவுகள் ஆண்டுதோறும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரித்து வருகின்றன. ஆர்.கே. சக்திபாலா மற்றும் பலர் எழுதிய "A Critical Review on Recycling and Reuse of Construction and Demolition Waste Materials (2025)" ஆய்வின்படி, சீனாவே ஆண்டிற்குச் சுமார் 100 கோடி டன்கள் கழிவுகளுடன் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா 60 கோடி டன்களுக்கு அதிகமான கழிவுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியம் 40 முதல் 50 கோடி டன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் (End-of-life vehicles (ELV) நகரங்களில் கிடைக்கும் வளங்களின் மற்றொரு முக்கிய ஆதாரமாகும். இவற்றில் எஃகு (Steel), அலுமினியம், தாமிரம் மற்றும் பிளாட்டினக் குழு உலோகங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. இவற்றை மீட்டெடுத்து மீண்டும் உற்பத்தித் துறையில் பயன்படுத்த முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் 2023-ஆம் ஆண்டில் சுமார் 43 லட்சம் எண்ணிக்கையிலான பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் பதிவாகின. இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் சுமார் 1 கோடி அளவிலான பயன்பாட்டுக்காலம் முடிந்த வாகனங்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட "Enhancing Circular Economy of End-of-Life Vehicles in India (2026)" அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 5 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


வளப் பாதுகாப்பையும் சுழற்சிப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த நகர்ப்புறச் சுரங்க முறை


நகர்ப்புறங்களில் சேரும் கழிவுகளிலிருந்து பயனுள்ள உலோகங்களைப் பிரித்தெடுக்கும் இந்த நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் (Urban Mining), இந்தியாவின் முக்கியச் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக உருவெடுத்துள்ளது. இதனுடைய மிகப்பெரிய நன்மையே நாட்டின் வளப் பாதுகாப்பை மேம்படுத்துவதுதான். மேலும், முன்னர் குறிப்பிடப்பட்டபடி, லித்தியம் (Lithium), கோபால்ட் (Cobalt), நிக்கல் (Nickel), தாமிரம் (Copper), கிராஃபைட் (Graphite) மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள் போன்ற மிக முக்கியமான கனிமங்களுக்கு இந்தியா பிற நாடுகளின் இறக்குமதியை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. இதனால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது.


வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சுரங்கத் தொழிலைப் போலன்றி, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் நாட்டிற்குள்ளேயே ஏற்கெனவே கொட்டிக்கிடக்கும் கழிவுகளிலிருந்து மதிப்பெமிக்கப் பொருட்களை மீட்டெடுக்கிறது. இது இத்துறையை மிக வேகமாக விரிவுபடுத்தவும், உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இரண்டாவதாக, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் மூலம் கனிமங்களை மீட்டெடுப்பது, இயற்கையான சுரங்கங்களில் இருந்து கனிமங்களை எடுப்பதைவிட மிகக் குறைந்த அளவே ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, திறந்தவெளிச் சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், கழிவுப் பொருட்கள் தேங்குவது மற்றும் அதிகப்படியான நீர் வீணாவதைத் தடுக்கிறது. மேலும், மின்சார வாகனங்கள் (EVs), சூரியஒளி மின் தகடுகள் மற்றும் பிற தூய்மைத் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான முக்கிய கனிமங்களை வழங்கி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிக்கிறது. அதேவேளையில், வழக்கமான சுரங்கத் தொழிலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்கிறது.


மூன்றாவதாக, நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் என்பது கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்ற உதவுகிறது மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. இது தூக்கி எறியப்பட்ட பொருட்களிலிருந்து பயனுள்ள மூலப்பொருட்களை மீட்டு, அவற்றை மீண்டும் உற்பத்திச் சுழற்சிக்குள் கொண்டு வருகிறது. அதேநேரத்தில், கழிவுகளைச் சரியாகச் சேகரித்தல், தரம் பிரித்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் வளங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நகர்ப்புறக் கழிவு மேலாண்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது நச்சு மாசுபாட்டைக் குறைத்து, மண் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுப்பதுடன், காரீயம் (Lead), பாதரசம் (Mercury) மற்றும் காட்மியம் (Cadmium) போன்ற அபாயகரமான வேதிப்பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.


இந்தியாவின் நகர்ப்புறச் சுரங்க சாத்தியக்கூறுகளும், கொள்கை சார்ந்த முயற்சிகளும்


இந்தியா, உலகில் மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் மூன்றாவது பெரிய நாடாகும். இதன் ஆண்டுப் பொருளாதார மதிப்பு சுமார் 51,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பில் சுமார் 60 சதவீதத்தை தொழில்நுட்பரீதியாக மீட்டெடுக்க முடியும் என்றாலும், தற்போதைய அமைப்புகள் 18 சதவீதத்தை மட்டுமே மீட்டெடுக்கின்றன. நிதி ஆயோக் அமைப்பின் ‘Advancing Circular Economy of Waste Electronic and Electrical Equipment and Lithium-Ion Batteries in India, (2026)’ அறிக்கைப்படி, இந்தியா தனது மின்னணுக் கழிவுகளில் சுமார் 10 சதவீதத்தை  மட்டுமே மறுசுழற்சி செய்கிறது. இது உலகளாவிய சராசரியான ஏறக்குறைய 22 சதவீதத்தைவிட குறைவாகும்.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 150 முதல் 500 மில்லியன் டன் வரையிலான கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை உருவாக்குகிறது. இதில் பெரும்பாலான கழிவுகள் முறையான மறுசுழற்சி செய்யப்படமால் அப்படியே கொட்டப்படுகின்றன. நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் முறையின் மகத்தான சாத்தியக்கூறுகளை உணர்ந்த அரசு, கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்கவும், புதிய தாதுக்களை வெட்டி எடுப்பதன் மீதான சார்புநிலையைக் குறைக்கவும் கொள்கைகளை வலுப்படுத்தியுள்ளது. தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டத்தின்கீழ் (National Critical Mineral Mission), இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து முக்கியத் தாதுக்களை மீட்கும் மற்றும் உற்பத்தி செய்யும் உள்நாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை 1,500 கோடி ரூபாய் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் 2025-26-ஆம் ஆண்டு முதல் 2030-31-ஆம் நிதியாண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மற்றொரு முக்கியமான கொள்கை நடவடிக்கை 'விரிவாக்கப்பட்ட  உற்பத்தியாளர் பொறுப்பு' (Extended Producer Responsibility (EPR)) ஆகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு கொள்கையின்படி, தயாரிப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் தங்களது பொருட்கள் பயன்பாட்டுக் காலத்தின் முடிவை எட்டிய பிறகு, அவற்றைச் சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பாக நிர்வகிப்பது ஆகியவற்றிற்கு நிதிரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டும். இந்த விதிமுறை சமீபத்திய பல கட்டுப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.


உதாரணமாக, மின்கலக் கழிவு மேலாண்மை விதிகள், 2022-ன்படி, 2027–28-ஆம் ஆண்டு முதல் புதிய மின்கலன்களில் 5 சதவீதம் உள்நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் இருக்க வேண்டும். இது, 2030–31-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். அதேபோல, மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், (E-waste (Management) Rules, 2022), சுற்றுச்சூழல் (கட்டுமானம் மற்றும் இடிப்பு) கழிவு மேலாண்மை விதிகள், (Environment (Construction and Demolition) Waste Management Rules 2025) மற்றும் சுற்றுச்சூழல் (பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்கள்) விதிகள், (Environment (End-of-Life Vehicles) Rules 2025) ஆகியவை கழிவுப் பொருட்களை அறிவியல் பூர்வமாகச் சேகரிப்பதையும் மறுசுழற்சி செய்வதையும் உறுதிசெய்யக் கட்டாய விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.

சவால்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் 


மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் மற்றும் பலன்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் நகர்ப்புற அகழ்ந்தெடுத்தல் (Urban Mining) இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் முதல் சவாலே, கழிவுகளைச் சரியாகச் சேகரிக்காததும் அவற்றைத் தரம் பிரிக்காததும்தான். நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுகளில் பெரும்பகுதி முறையாகச் சேகரிக்கப்படுவதில்லை, அல்லது அவை முறைசாராப் பிரிவினரிடம் சென்று சேர்கின்றன. எடுத்துக்காட்டாக, மின்னணு கழிவுகளில் இருந்து முறைசாரா மறுசுழற்சியாளர்கள் வெறும் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான மூலப்பொருட்களை மட்டுமே மீட்டெடுக்க முடிகிறது. ஆனால், நவீன வசதிகள் கொண்ட முறையான மறுசுழற்சி மையங்களோ 95 சதவீதம் முதல் 97 சதவீதம் வரையிலான மூலப்பொருட்களை வெற்றிகரமாக மீட்டெடுக்கின்றன.


இரண்டாவது சவால் என்னவென்றால், 'விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின்' (EPR) வரையறுக்கப்பட்ட எல்லையாகும். மின்னணுக் கழிவுகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பிற மதிப்புமிக்க மற்றும் முக்கியமான கனிமங்களை மீட்டெடுக்க முடியும் என்றபோதிலும், 2022-ஆம் ஆண்டின் மின்னணு கழிவு விதிகள் (E-Waste Rules, 2022) தாமிரம், அலுமினியம், இரும்பு மற்றும் தங்கம் ஆகிய நான்கு உலோகங்களை மட்டுமே விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின்கீழ் கொண்டுவந்துள்ளன.


மூன்றாவது சவால், அமைப்புகளிடையே நிலவும் பிளவுபட்ட பணிப்பகிர்வு முறை ஆகும். கழிவு மேலாண்மை, கனிமப் பாதுகாப்பு மற்றும் தொழிற்துறைக் கொள்கைகளுக்கான பொறுப்புகள் பல அமைச்சகங்களுக்கும், போதிய நிதி மற்றும் அதிகார வளங்கள் இல்லாத நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இதனால், வளங்களைச் சரியாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வெறும் விதிமுறைகளை நடைமுறைளவில் பூர்த்தி செய்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.




இந்தச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், நகர்ப்புறச் சுரங்கத்தின் (Urban Mining) முழுப் பலனையும் அடைவதற்கும், இந்தியா தனது கழிவு சேகரிப்புத் துறையை முறைப்படுத்த வேண்டும் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பை விரிவாக்க வேண்டும்.


உற்பத்தியாளரின் விரிவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் விதிகளின்கீழ் கொண்டுவரப்படும் உலோகங்களின் பட்டியலில் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய வகை பூமி தனிமங்கள்  ஆகியவையும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், பொருட்கள் வடிவமைக்கப்படும் நிலையிலேயே, அவற்றைப் பழுதுபார்க்கும் வசதி மற்றும் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புத் தரநிலைகள் ஆகியவற்றின் மூலம் வளங்களை மீட்டெடுக்கும் முறையை ஒருங்கிணைக்க வேண்டும்.


மேலும், அமைச்சகங்களுக்கு இடையேயான மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும், கழிவு மேலாண்மையை முக்கியமான கனிமப் பாதுகாப்புடன் இணைக்கும் ஒரு முழுமையான சுழற்சிப் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதும் அவசியமாகிறது. 


Original Link : How urban mining can transform waste into wealth and operationalise circular economy. - Renuka

Share:

48 மணி நேரத்தில் 50,000 புலம்பெயர்ந்தவர்கள் : ஐரோப்பாவில் நிலவும் பிளவுகளைச் செயூட்டா (Ceuta) எல்லை நெருக்கடி எவ்வாறு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது? - அரவ் ஷா

 கடந்த வாரத்தில், 50,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் ஸ்பெயினின் தனித்த பகுதியான (exclave) செயூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்தனர். இந்த நகர்வுக்குக் காரணம் என்ன?, மேலும் இது ஐரோப்பாவிற்குள் நிலவும் பதற்றங்கள் குறித்து என்ன உணர்த்துகிறது?



வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினுக்குச் சொந்தமான செயூட்டா நகரில், கடந்த மாத இறுதியில் சில நாட்களிலேயே 50,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரித்து வந்தது. இந்நகரின் மொத்த மக்கள்தொகை சுமார் 84,000 ஆகும்.


ஆகஸ்ட் 3 நிலவரப்படி, அண்டை நாடான மொராக்கோவிலிருந்து வந்த குடியேறிகளில் பெரும்பாலோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஸ்பெயின் அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் 48,000-க்கும் மேற்பட்டோரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இருப்பினும், இந்த நிகழ்வுகள் மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தின. செயூட்டாவிற்குள் நுழைய முயன்றவர்களில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர்.


புலம்பெயர்வு (migration) என்பது மிகவும் பிளவுபடுத்தும் அரசியல் விவகாரமாக மாறியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் பரந்த பதற்றங்களையும் இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட் 1 சனிக்கிழமையன்று அன்று, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைமையிலான 22 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், இந்தச் சூழல் குறித்து அவசரமாக விவாதிக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முடிவு செய்யவும் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறைத் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து, செவ்வாய்க்கிழமையன்று காணொளி வாயிலாக ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்தது.


குறிப்பிடத்தக்க வகையில், அங்கீகரிக்கப்படாத புலம்பெயர்ந்தோருக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஸ்பெயின் அரசின் சமீபத்திய நடவடிக்கையை, புலம்பெயர்ந்தவர்களை ஈர்க்கும் ஒரு காரணியாக (pull factor) அந்தக் கடிதம் சுட்டிக்காட்டுகிறது. இது ஒட்டுமொத்த கண்டத்தையும் பாதிக்கிறது என்றும் தலைவர்கள் வாதிட்டனர். இப்பகுதியில் குடியேற்றம் எளிதாக நடைபெறும் இடங்களில் ஒன்றாக செயூட்டா இல்லை என்பதைத் தரவுகள் மூலம் சுட்டிக்காட்டி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தக் கருத்தை மறுத்துப் பேசியுள்ளார்.



கவனத்தை ஈர்க்கும் சர்ச்சைக்குரிய பகுதி


செயூட்டா (Ceuta) மற்றும் மெலில்லா (Melilla) ஆகியவை வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி நகரங்களாகும். இவை ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள ஒரே நில எல்லைகளாகவும் உள்ளன. இவை இரண்டும் வெளிப்பகுதிப் பிரதேசங்கள் (exclaves) எனப்படும் தனித்த பகுதிகள் ஆகும். அதாவது, இவை ஸ்பெயினின் பிரதான நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நாட்டின் பிரதேசத்தால் பிரிக்கப்பட்ட ஸ்பெயினின் பகுதிகளாகும்.














வரலாற்றுரீதியாக, செயூட்டா (Ceuta) மற்றும் மெலில்லா (Melilla) ஆகிய பகுதிகள் ஆப்பிரிக்காவில் அமைந்திருந்தாலும், அவை ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் பிரதேசங்கள் என்று மொராக்கோ உரிமை கோரி வருகிறது. அதே நேரத்தில், ஸ்பெயின் 1580 முதல் செயூட்டாவையும், 1497 முதல் மெலிலாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 1978-ல், ஸ்பெயின் தனது அரசியலமைப்பில் இவ்விரு பகுதிகளையும் நாட்டின் பிரிக்க முடியாத அங்கங்களாகச் சேர்த்துக் கொண்டது.


இந்த சர்ச்சை ஸ்பெயின்-மொராக்கோ நாடுகளுக்கு இடையே பதற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. 2021-ல், மொராக்கோவிடமிருந்து மேற்கு சஹாராவை (Western Sahara) 'விடுவிக்க' தீவிரமாக முயலும், அல்ஜீரியாவைத் தளமாகக் கொண்ட பொலிசாரியோ முன்னணியின் தலைவர் பிராஹிம் காலிக்கு, ஸ்பெயின் கோவிட்-19-க்கான மருத்துவ சிகிச்சையை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இடையிலான உறவு மோசமடைந்தது. மேலும், ஒரு மாதத்திற்குப் பிறகு, புலம்பெயர்ந்தோர் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் இருந்தபோதிலும், மொராக்கோவில் எல்லைப் பாதுகாப்பு தளர்த்தப்பட்டதன் காரணமாக, 10 முதல் 12,000 வரையிலான புலம்பெயர்ந்தோர் செயூட்டா வழியாக ஸ்பெயினுக்குள் நுழைந்தனர்.


ஃபிளேம் பல்கலைக்கழகத்தின் (FLAME University) சர்வதேச ஆய்வுகள் துறை விரிவுரையாளரான பேராசிரியர் டாக்டர் திவ்யா பாலன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “வரலாற்று ரீதியாக, மொராக்கோ அரசாங்கம் இந்த எல்லைப் பகுதிகளை ஒரு பேராயுதமாகப் (leverage) பயன்படுத்தி வந்துள்ளது. இருப்பினும், இந்த முறை, ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தின் ஜூன் மாதத் தீர்ப்பே தவறாகப் பயன்படுத்தப்பட்ட அந்த ஆயுதமாக அமைந்ததாகத் தெரிகிறது,” என்று கூறினார்.


புலம்பெயர்ந்தவர்களுக்கான ஸ்பெயினின் ‘ஈர்ப்பு காரணி’ சமீபகாலமாக ஸ்பெயினில் எடுக்கப்பட்ட சில முக்கிய கொள்கை மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பானவையாக உள்ளன.


ஜூன் 29 அன்று, ஸ்பெயின் உச்சநீதிமன்றம், செயூட்டா மற்றும் மெலிலா தீவுகளுக்குள் நீந்திச் செல்லும்போது இடைமறிக்கப்பட்டு, ஆழ்கடலில் புலம்பெயர்ந்தோர்களை நிராகரிப்பதற்கு, குறைவான அளவில் திருப்பியனுப்புதல், “ஹாட் ரிட்டர்ன்ஸ்” என்றும் அழைக்கப்படுவது பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. ஸ்பெயினின் வெளிநாட்டினர் சட்டத்தின் (Spain’s Aliens Act) ஒரு முக்கிய அங்கமான சாதாரண புலம்பெயர்ந்தோர் செயல்முறையைப் பின்பற்றாமல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை உடனடியாகத் திருப்பி அனுப்ப அதிகாரிகளை அவை அனுமதிக்கின்றன.


அதேநேரத்தில், சிறுவர்களாக இருந்த குடியேறிகளுக்குக் கடுமையான குழந்தை நலத் தரங்களை அமல்படுத்திய முந்தைய விதிமுறைகளின் பிரிவுகளையும் நீதிமன்றம் செல்லாததாக்கியது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு அரச ஆணையின்கீழ், ஸ்பெயின் அரசாங்கம் ஒரு பரவலான தொழிலாளர் முறைப்படுத்தல் திட்டத்தை நடத்தியது. இது ஆயிரக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு அனைத்துத் துறைகளிலும் பணி அனுமதிகளையும் தற்காலிக வசிப்பிடத்தையும் வழங்கியது. ஸ்பெயினில் வயதான மக்கள்தொகை அதிகரித்து வருவதால், ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு நடைமுறையின் அணுகுமுறையாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னிறுத்தியது.


ஆளும் அரசாங்கத்தின் குடியேற்றத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் சேர்ந்து, இந்தக் கொள்கைகள் கண்டத்தை (continent) ஈர்க்கும் ஒரு காரணியாக, குறிப்பாக ஐரோப்பாவின் தீவிர வலதுசாரிக் கட்சிகளிடமிருந்து, ஆய்வுக்கு உள்ளாகியுள்ளன.


"ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புலம்பெயர்வு என்பது இறையாண்மை மற்றும் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பான ஒரு பிரச்சினையாகும். ஸ்பெயின் போன்ற எல்லைப்புற நாடுகள், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளன. ஒருபுறம் மக்களை ஈர்க்கும் காரணிகள் (pull factors) இருக்கும்போது, ​​மறுபுறம் அவர்களை வெளியேறத் தூண்டும் காரணிகளும் (push factors) செயல்படுகின்றன. அதையும் கருத்தில் கொள்ளவேண்டும்," என்று டாக்டர் பாலன் கூறினார். இந்தச் சூழலைப் பொறுத்தவரை, மொராக்கோவில் நிலவும் அதிக அளவிலான இளைஞர் வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இடம்பெயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.


இருப்பினும், ஒரு உள்ளூர் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து 50,000 பேர் கொண்ட பெரும் எழுச்சிக்கு ஏற்பட்ட இந்த வருகை, உடனடியாகப் பரப்பப்பட்ட தவறான தகவல்களால் தூண்டப்பட்டது. சான்செஸ், குற்றவியல் கடத்தல் வலையமைப்புகள் இந்தத் தீர்ப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியதாகவும், அலைத் தடுப்புகளைச் சுற்றி நீந்துவது உடனடி நிராகரிப்பு அபாயம் இல்லாமல் ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற பொய்யான வதந்திகளைப் பரப்பியதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


தவறான தகவல்களைப் பரப்புவதற்காகக் கடத்தல் கும்பல்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இந்த முறை கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றும், புலம்பெயர்ந்தோரின் இளைய மக்கள்தொகையே அதற்குச் சான்றாக உள்ளது என்றும் டாக்டர் பாலன் கூறினார்.


ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்படும் விளைவுகள்


பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், செயூட்டா சம்பவத்தை கூட்டு ஷெங்கன் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கருதுகின்றன. இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஜூலை 30 அன்று, ஸ்பெயினுடனான தனது தடையற்ற பயண ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் சாராத பயணிகளுக்கு "குறிவைக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட" சோதனைகளை அறிமுகப்படுத்தியது.


இந்த நடவடிக்கை, பிரான்சின் தேசியப் பேரணி (National Rally) மற்றும் ஜெர்மனியின் ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி (Alternative for Germany (AfD)) உள்ளிட்ட தீவிர வலதுசாரிக் கட்சிகளிடமிருந்து பாராட்டைப் பெற்றுள்ளது. 2015 புலம்பெயர்ந்தோர் நெருக்கடியால் தூண்டப்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பாவில் உள்ள மையவாத மற்றும் வலதுசாரிக் கட்சிகளால் வெளிப்படுத்தப்பட்ட குடியேற்றம் தொடர்பான பெரிய அளவிலான கவலைகளை இந்தப் போக்கு பிரதிபலிக்கிறது.


இன்று, மாட்ரிட் (Madrid) மீது சுமத்தப்படவிருக்கும் கட்டமைப்புரீதியான கோரிக்கைகள் மீது கவனம் செலுத்துகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்டுவது கடினமாக உள்ளது. உறுப்பு நாடுகளிடையே இவ்விஷயத்தில் ஒத்திசைவை அடைவது கடினமாக இருந்தாலும், புலம்பெயர்வு என்பது ஐரோப்பா எதிர்கொள்ள வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்து வருகிறது, மேலும் இனியும் தொடரும் என்று டாக்டர் பாலன் கூறினார். "ஐரோப்பாவில் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவது ஒரு யதார்த்தமாகும். இதை புலம்பெயர்வுக்கு எதிரான வலதுசாரி அரசாங்கங்கள் கூட இறுதியில் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.


இந்த ஒருமித்த கருத்தின் பற்றாக்குறை, ஐரோப்பிய நிர்வாகத்தில் உள்ள ஒரு நீடிக்க முடியாத முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறது. ஸ்பெயினின் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய தேவை, இறையாண்மை கொண்ட உள்நாட்டுப் பொருளாதார முன்னுரிமைகளுக்கும், ஷெங்கன் எல்லைப் பாதுகாப்பின் கூட்டு ஆணைக்கும் இடையிலான உரசல், எல்லைப்புற நாடுகளைத் தங்களின் சொந்த மக்கள்தொகைத் தேவைகளுக்கும் பரந்த புவிசார் அரசியல் யதார்த்தங்களுக்கும் இடையில் சமரசம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது.


Original Link : 50,000 migrants, 48 hours: How the border crisis in Ceuta reveals divides within Europe -Arav Shah

Share:

இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான மசோதா ஏன் விமர்சனங்களை எழுப்பியுள்ளது?

 இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute(ISI)) 1931-ம் ஆண்டில் புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணர் பி.சி. மஹலனோபிஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.


இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தைச் சீரமைக்க முற்படும் இந்த மசோதாவின் வரைவு, பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டபோது கடும் விமர்சனங்களை (குறிப்பாக, சீரமைக்கப்படவிருக்கும் அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களிடமிருந்தே) எதிர்கொண்டது. அதன்பிறகு ஏறக்குறைய ஓராண்டு கழித்து, 'இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா-2026' (Indian Statistical Institute Bill) மக்களவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஆண்டு செப்டம்பரில், வெளியிடப்பட்ட மத்திய அரசின் 'இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா-2025' (Indian Statistical Institute Bill) வரைவு, இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை பரிந்துரைத்தது.


அப்போது, ​​கொல்கத்தா வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். விரிவான ஆலோசனைகளை நடத்தாமல் இந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர்களில் பலர் மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.


இந்தியப் புள்ளியியல் நிறுவனம் இதுவரை எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளது?


கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) 1931-ம் ஆண்டில் பி.சி. மஹலனோபிஸ் அவர்களால் நிறுவப்பட்டது. இது முதலில் பிரசிடென்சி கல்லூரியில் (Presidency College) ஒரு புள்ளியியல் ஆய்வகமாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 1860-ம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழும், அதன்பிறகு 1961-ம் ஆண்டின் மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (West Bengal Societies Registration Act) கீழும் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.


1959-ம் ஆண்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இது 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' (Institute of National Importance) என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அந்நிறுவனத்திற்குப் பட்டங்களை வழங்கும் அதிகாரத்தையும், மத்திய அரசின் நிதியுதவி மற்றும் தணிக்கைக்குத் தகுதிபெறும் உரிமையையும் அது பெற்றது. இருப்பினும், இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், இது தொடர்ந்து ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கமாகவே செயல்பட்டு வந்தது.


கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் தேஜ்பூர் ஆகிய இடங்களில் மையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், புள்ளியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளை வழங்குகிறது. மேலும், பல ஆராய்ச்சிப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.


இதன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக 33 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் செயல்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மத்திய அரசின் ஆறு பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியாத விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்குவர். மத்திய அரசின் பிரதிநிதிகளாகப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.


கல்வி மற்றும் நிர்வாகரீதியான தலைவரான இயக்குநர் (Director), இக்குழுவால் நியமிக்கப்படுகிறார்.


இந்த மசோதா என்ன மாற்றங்களை முன்மொழிகிறது?


பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக வரைவு மசோதாவை வெளியிட்டபோது, ​​தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற நிறுவனங்களுக்கு இணையாக இந்நிறுவனத்தின் நிலையை உயர்த்தவும், அதன் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த மசோதா முயல்வதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவித்தது. இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ISI) கவுன்சிலின் "பெரிய அளவாக", "அதிகப்படியான உள்-பிரதிநிதித்துவம்", மற்றும் "அதிக எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்" ஆகியவை முடிவெடுக்கும் செயல்முறையைத் தடுத்ததாக ஒரு அதிகாரப்பூர்வமான 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.


இந்த மசோதா, இதுவரை இருந்து வந்த சங்கமாக இல்லாமல், நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பான 'சட்டப்பூர்வ பெருநிறுவன அமைப்பாக' இந்த நிறுவனத்தை மாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. இது அதன் நிர்வாகக் கட்டமைப்பையும் மாற்றி, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIMs) போன்ற மத்திய நிறுவனங்களின் கட்டமைப்பைப் போல மாற்றுகிறது.


இம்மசோதா, இந்தியக் குடியரசுத் தலைவரை இந்நிறுவனத்தின் 'பார்வையாளர் ' (Visitor) அல்லது மேற்பார்வையாளராக நியமிக்கப் பரிந்துரைக்கிறது. இந்நிறுவனத்திற்கு ஒரு 'நிர்வாகக் குழு' (Board of Governance) அமைக்கப்படும். இதில் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் 'பார்வையாளர்' அவர்களால் நியமிக்கப்படும் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மத்திய அரசால் நியமிக்கப்படும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவர்.


நிர்வாக விவகாரங்கள் குறித்து முடிவெடுத்தல், பட்டங்களை வழங்குதல் மற்றும் கல்விசார் மற்றும் பிற பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும். மேலும், இச்சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும் பொறுப்பும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது பல்வேறு பிரிவுகள் மற்றும் மையங்களின் தலைவர்களைக் கொண்டதும், இயக்குநரைத் தலைவராகக் கொண்டதுமான ஒரு 'கல்விசார் மன்றம்' (Academic Council) அமைப்பதற்கும் இம்மசோதா வழிவகை செய்கிறது. இம்மன்றம் நிர்வாகக் குழுவிற்குப் பரிந்துரைகளை வழங்கும்.


மத்திய அரசால் அமைக்கப்படும் 'தேடல் மற்றும் தேர்வுக்கான குழு' (Search-cum-selection committee) பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து, நிர்வாகக் குழுவின் தலைவரால் இயக்குநர் நியமிக்கப்படுவார். இயக்குநரை நீக்குவதற்கும், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணைகள் மற்றும் மறுஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடுவதற்கும் 'பார்வையாளர்'-க்கு இம்மசோதா அதிகாரம் அளிக்கிறது.


இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டதும், இந்நிறுவனத்திற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' (Institution of National Importance) என்ற தரநிலையை வழங்கிய 1959-ம் ஆண்டுச் சட்டத்திற்குப் பதிலாக இப்புதிய சட்டம் அமலுக்கு வரும்.


இந்த மசோதாவிற்கு உள்ள எதிர்ப்பு என்ன?


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எழுப்பும் முக்கிய கவலை என்னவென்றால், மத்திய அரசின் அதிகரித்த கட்டுப்பாடும், அதனால் நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோகும் வாய்ப்பும் ஆகும். முன்மொழியப்பட்ட நிர்வாகக் குழுவில் (Board of Governance) பெரும்பாலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களே அல்லது அதன் பிரதிநிதிகளே இடம்பெறுவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு மாறாக, தற்போதுள்ள குழுவில் பல்வேறு தரப்பினரின் பரந்த பிரதிநிதித்துவம் உள்ளது. இயக்குநரை நியமிப்பதில் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிக பங்கை அளிக்கிறது என்பதையும் அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.


இந்த மசோதா குறித்துப் பரந்த அளவிலான கலந்தாலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பல ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, "தலைமை மற்றும் நிர்வாகத்தில் நேர்மையைப் பேணுவது என்ற பெயரில், இயக்குநரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான நீண்ட அளவுகோல்களை இம்முன்வரைவு வகுத்துள்ளது. அதேவேளையில், 'தேடல் மற்றும் தேர்வுக்கான குழு'வில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) பிரதிநிதி ஒருவரையும் இது அறிமுகப்படுத்துகிறது."




இம்முன்வரைவின்படி, இயக்குநர் அவ்வப்போது மறுஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவார். இவை அனைத்தும் இயக்குநரை நடைமுறையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவராக மாற்றிவிடும். மேலும், இது நிறுவனத்தின் தன்னாட்சி என்ற கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகவும் அமையும்.


Original Link : Why a Bill to reform a premier Indian institute has triggered criticism?

Share:

'வளர்ந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' (Drug-Free Youth for Viksit Bharat) பிரச்சாரம் என்பது என்ன? -தேவேஷ் கே பாண்டே

 போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான அரசின் உத்தி என்ன? சட்ட   செயல்பாடு எவ்வாறு இருந்துள்ளது?


போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக இளைஞர்களைத் திரட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லா இளைஞர் உறுதிமொழி இயக்கம் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.


இந்த இயக்கத்திற்கு, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி, ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களின் பங்கேற்புடன் 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட்டது. இதற்கு 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.


விளையாட்டு, கலை, கலாச்சாரம், தியானம், ஆன்மீகம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை மையமாகக்கொண்ட செயல்பாடுகளுடன், இந்த முன்னெடுப்பு 100 வாரங்களுக்குத் தொடரும்.


இந்த பிரச்சாரம் ஏன் வளர்ந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது?


இந்த தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு இந்தியாவின் இளைஞர் சமுதாயமே முக்கியம் என அரசு கருதுகிறது. பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தபிறகு பேசிய மோடி, இந்தியாவின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் படைப்பாற்றலைச் சார்ந்தே உள்ளது என்று குறிப்பிட்டார்.


போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உடல்நலம், உற்பத்தித்திறன் மற்றும் சமூக நிலைத்தன்மை போன்றவற்றைப் பாதித்து, நாட்டின் மக்கள்தொகை சார்ந்த சாதகமான நிலையை வலுவிழக்கச் செய்யலாம்.


குடும்பங்களிலும் சமூகத்திலும் இது போன்ற சூழல் ஏற்படும்போது, ​​நாட்டின் நிலைத்தன்மையும் குறைகிறது. நமது இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்குள் தள்ள எதிரி நாடுகள் சதி செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல் மூலம் லாபம் ஈட்டுவதும், அதே வேளையில் நமது நாட்டை வலுவிழக்கச் செய்வதும் அவர்களின் தீய நோக்கத்தின் ஒரு பகுதியாகும். எனவே, ஒவ்வொரு இளைஞரும் இதில் சிக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான அரசின் உத்தி என்ன?


அரசின் அணுகுமுறை மூன்று பரந்த தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: அவை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தேவையைக் குறைத்தல், கடுமையான சட்டங்கள் மூலம் விநியோகத்தைக் குறைத்தல் மற்றும் மறுவாழ்வு மூலம் பாதிப்புகளை குறைப்பாதகும்.


இந்த விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் விரிவான  செயல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நார்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் (Narco-Coordination Centre (NCORD)) 10-வது உயர்மட்டக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்கான தொலைநோக்கு ஆவணத்தை (Vision Document on Drug Control, 2026–2029) வெளியிட்டார்.


இந்த உத்தி, “கண்டறிதல் (Detect), சீர்குலைத்தல் (Disrupt), மற்றும் முற்றிலுமாக அழித்தல் (Destroy)” என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் நோக்கம், சர்வதேச போதைப்பொருள் வழங்குநர்கள், குற்றங்களை செய்யும் குழுக்கள், உள்ளூர் விநியோக வலையமைப்புகள், போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி வழங்கும் நிதி வலையமைப்புகள்,  உருவாகி வரும் டிஜிட்டல் கடத்தல் முறைகள் உள்ளிட்ட முழு போதைப்பொருள் சூழலையும் இலக்காகக் கொண்டு ஒழிப்பதாகும்.


உள்துறை அமைச்சர் எது போன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்?


ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான போதைப்பொருள் தடுப்புப் பணிப் படைகளை (Anti-Narcotics Task Forces (ANTFs)) அமைக்கவும், மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தடயவியல் அறிவியல் ஆய்வகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல், உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தல், அதிக தண்டனைத் தீர்ப்பு விகிதங்கள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலான வழக்கமான மறுஆய்வுகள் ஆகியவற்றையும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட அமலாக்கத்தின் பதிவு எப்படி இருந்துள்ளது?


போதைப்பொருட்கள் மற்றும் மனதை பாதிக்கும் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances (NDPS)) சட்டத்தின்கீழ், வலுவான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றாக, பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


அரசாங்கத் தரவுகளின்படி, 2014 மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கு இடையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முகமைகளால் ₹1.84 லட்சம் கோடி மதிப்புள்ள 1.18 கோடி கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 42.47 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. இந்த முகமைகள் 8.75 லட்சம் வழக்குகளைப் பதிவு செய்து, 10.97 லட்சம் குற்றவாளிகளைக்கைது செய்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில், மே 2026-ல் 'ஆபரேஷன் ரேஜ்பில்' (Operation Ragepill) திட்டத்தின்கீழ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) முதன்முறையாக சுமார் 227.7 கிலோ கேப்டகானைப்  (Captagon) பறிமுதல் செய்த நடவடிக்கைகளும் அடங்கும். அதே மாதம், 'ஆபரேஷன் ஒயிட் ஸ்ட்ரைக்' (Operation White Strike) திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பை பகுதியில் ₹1,745 கோடி மதிப்புள்ள 349 கிலோ கொக்கைனை அந்த அமைப்பு பறிமுதல் செய்தது.


வரவிருக்கும் சவால்கள் என்ன?

தங்கப் பிறை (Golden Crescent) மற்றும் தங்க முக்கோணம் (Golden Triangle) போன்ற முக்கிய போதைப்பொருள் உற்பத்திப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்தியா இது போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.


புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டால், பாரம்பரிய போதைப்பொருள் கடத்தல் முறைகள் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளன. செயற்கை போதைப்பொருட்கள் (Synthetic Drugs), டார்க்நெட் வழி நடைபெறும் கடத்தல், குறியாக்கப்பட்ட (Encrypted) தகவல் தொடர்பு வலையமைப்புகள், கிரிப்டோகரன்சி மூலம் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகள், ட்ரோன் மூலம் கடத்தல், ஆன்லைன் சந்தைகள் மற்றும் எல்லை தாண்டிய விநியோக வழித்தடங்கள் போன்றவை புதிய சவால்களாக அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.


கடுமையான சட்ட நடவடிக்கைகளுடன் போதுமான மறுவாழ்வு (Rehabilitation) நடவடிக்கைகளையும் உறுதிசெய்வது மற்றொரு முக்கிய சவாலாக உள்ளது. குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பது முக்கியமான ஒன்றாகும். அதேவேளையில், போதைக்கு அடிமையானவர்கள் மீண்டு வந்து சமூகத்துடன் மீண்டும் இணையத் தொடர்ச்சியான நிறுவனரீதியான ஆதரவும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.


Original Link : What is the Drug-Free Youth for Viksit Bharat campaign? -Devesh K  Pandey

Share:

நாடாளுமன்றம் ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது? - சந்தீப் ஃபுகன்

2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-லிருந்து 34-ஆக உயர்த்திய பிறகு, நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்வு இதுவாகும்.


தற்போதைய செய்தி


இந்தியத்தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்திய அவசரச்சட்டத்திற்குப் பதிலாக, 2026-ஆம் ஆண்டு 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. தொடர்பில்லாத விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், எந்த விதமான விவாதமும் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது மாநிலங்களவையில் பரிசீலனைக்காகக் காத்திருக்கிறது.


இந்த மசோதா என்ன செய்கிறது?


இந்த மசோதா 1956-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ((Number of Judges) Act, 1956) எண்ணிக்கை சட்டத்தில் திருத்தம் செய்து, சாதாரண (Puisne) நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37-ஆக உயர்த்துகிறது. இதன் மூலம் இந்திய தலைமை நீதிபதி (CJI) உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-லிருந்து 38-ஆக அதிகரிக்கிறது.



அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் என்ன கூறியது?


மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம், அதிகரித்து வரும் வழக்குகளை திறமையாக கையாளுவதன் மூலம் விரைவான மற்றும் தேவையான நீதியை வழங்கும் என்று தெரிவித்தார்.


தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதையும், நீதிமன்றத்தின் வழக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மசோதா முன்வைக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாள்வதற்கு, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே "மிகவும் அவசியமான மற்றும் நடைமுறைக்கு தேவையான தீர்வுகளில்" ஒன்று என்று அரசு கூறியுள்ளது. வழக்கமான வழக்குகளின் விசாரணக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான முக்கியமான கேள்விகளைக் கொண்ட வழக்குகளை விசாரிக்க இந்தியாவின் தலைமை நீதிபதி  அரசியலமைப்பு அமர்வுகளை (Constitution Benches)  அடிக்கடி அமைக்கவும் இந்த மசோதா வழிவகுக்கும்.


கூடுதல் நீதிபதிகள் எவ்வாறு உதவுவார்கள்?


இந்த அதிகரிப்பு, உச்ச நீதிமன்றம் ஒரே நேரத்தில் அதிக வழக்குகளை விசாரிக்க உதவும் என்றும், அதன் மூலம் வழக்குகள் முடித்து வைக்கப்படும் விகிதம் மேம்படும் என்றும் அரசு கூறுகிறது.


கூடுதல் நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆதரவான வாதங்களில் ஒன்று, அது இந்தியத் தலைமை நீதிபதிக்கு அரசியலமைப்பு அமர்வுகளைத் தொடர்ச்சியாக அமைப்பதை எளிதாக்கும் என்பதாகும்.


குறைந்தது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வுகள், அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் அடங்கிய வழக்குகளை விசாரிக்கின்றன. அன்றாடப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அத்தகைய அமர்வுகளை அமைப்பது பெரும்பாலும் கடினமாக இருந்து வருகிறது.


நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கப் போதுமானதாக இருக்குமா?


பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் இதை ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், ஆனால் முழுமையான தீர்வு இல்லை என்று கூறி வருகின்றனர்.


வழக்குகள் தேங்கி இருப்பது (Pendency), நீதிமன்றங்களில் உள்ள பணியிடங்களின் நியமனங்களில் ஏற்படும் தாமதங்கள், அதிகரித்து வரும் வழக்குகள், அடிக்கடி ஒத்திவைக்கப்படுதல், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கிழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை வந்தடையும் அதிக எண்ணிக்கையிலான மேல்முறையீடுகள் ஆகியவற்றுடனும் தொடர்புடையது.


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 5.5 கோடியைத் தாண்டியுள்ளது அவற்றில் பெரும்பாலானவை கிழமை நீதிமன்றங்களில் உள்ளன.


1987-ஆம் ஆண்டில் இந்திய சட்ட ஆணையம் ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் எனப் பரிந்துரைத்ததற்கு மாறாக, தற்போது ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு 15.9 நீதிபதிகளே உள்ளனர் என்று 2025-ஆம் ஆண்டுக்கான இந்திய நீதி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


25 மாநிலங்களில் 22 மாநிலங்களில், கிழமை நீதிமன்றங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், மொத்த நிலுவையில் உள்ள வழக்குகளில் 25% ஆகும் என்று அதே அறிக்கை குறிப்பிட்டது.





மேலும், 25 உயர்நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது.


நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, வழக்கு மேலாண்மை முறையை மேம்படுத்துதல், உயர்நீதிமன்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை வேகமாக  நிரப்புதல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகள் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


அரசாங்கம் ஏன் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது?


2026-ஆம் ஆண்டு மே மாதம், நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது, மத்திய அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.   அதன் பின்னர் அரசியலமைப்பின் 123-வது பிரிவின் கீழ் ஒரு அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது. இது, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர அனுமதித்தது.


அவசரச் சட்டம் (Ordinance) அமலுக்கு வந்த பிறகு, உயர்த்தப்பட்ட அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்பின்படி, அவசரச்சட்டம் அடுத்த நாடாளுமன்றக்கூட்டத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்றச் சட்டமாக மாற்றப்பட வேண்டும். நிறைவேற்றப்படவிட்டால் சட்டம் தானாகவே செயலிழந்துவிடும். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அவசரச்சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ளது.


பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் பலம் எவ்வாறு மாறியுள்ளது?


இந்தியத் தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகளுடன் உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. அதிகரித்து வரும் வழக்குகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் அதன் நீதிபதிகளின் எண்ணிக்கையை அவ்வப்போது அதிகரித்துள்ளது.


உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1956-ஆம் ஆண்டு 11-ஆகவும், 1960-ஆம் ஆண்டு 14-ஆகவும், 1978-ஆம் ஆண்டு 18-ஆகவும், 1986-ஆம் ஆண்டு 26-ஆகவும், 2009-ஆம் ஆண்டு 31-ஆகவும், 2019-ஆம் ஆண்டு 34-ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது, 2026-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 38-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?


இந்த மசோதா தற்போது மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து சட்டமாக அமலுக்கு வந்ததும், தற்போதைய அவசரச் சட்டம் (Ordinance) மாற்றப்பட்டு, இந்திய தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக 38-ஆக நிர்ணயிக்கும்.


Original Link : Why has Parliament increased the number of Supreme Court judges? -Sandeep Phukan
Share: