Showing posts with label IMF. Show all posts
Showing posts with label IMF. Show all posts

வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கிக் கணக்கு வைப்புத்தொகைகள் மற்றும் மாற்றத் திட்டம் (swap scheme) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ஏன் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்றுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது? வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B))) வைப்புத்தொகைகள், டாலர்-ரூபாய் மாற்றுகள், பிடித்த வரி மற்றும் இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதன வரவை ஈர்ப்பதில் அவற்றின் பங்கு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


ரிசர்வ் வங்கி ஜூன் 23 அன்று, இந்திய வங்கிகள், அவற்றின் வெளிநாட்டுக் கிளைகள் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் கணக்குதாரர்களுக்குக் கடன் வழங்கவும் அல்லது புதிய மாற்று வசதியின்கீழ் திரட்டப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி வைப்புத்தொகைகளுக்கு ஈடாக வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஆதரவாக காத்திருப்பு கடன் கடிதங்களை (Standby Letters of Credit (SBLC)) வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறியது.


முக்கிய அம்சங்கள்:


1. ஜூன் 8, 2026 தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம், செப்டம்பர் 2026 வரை திரட்டப்படும் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான புதிய வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகளுக்கு, அமெரிக்க டாலர்-ரூபாய் அந்நியச் செலாவணி பரிமாற்ற (forex swap) வசதியை ரிசர்வ் வங்கி  அறிமுகப்படுத்தியது. இது, இந்த வைப்புகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் ஒரு சலுகைக் கட்டணத்தில் மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டு, அதன் மூலம் முழுமையான ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு ஈடுசெய்யப்படுகிறது


ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு என்பது, நாணய ஏற்ற இறக்கங்கள் போன்ற பாதகமான சந்தை அபாயங்களிலிருந்து ஒரு முதலீட்டைப் பாதுகாப்பதற்கான செலவைக் குறிக்கிறது.


2. ஆபத்து மேலாண்மை உத்தி சுமையை ஏற்றுக்கொள்வதன் மூலம், ரிசர்வ் வங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகளை கடன் வழங்குநர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவிக்கான முக்கிய ஆதாரமாக மாற்றியுள்ளது. ஆபத்து மேலாண்மை உத்திச் சலுகைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் சரியான வட்டி விகிதங்களை வழங்கினால், அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் இந்தியச் சந்தைகளுக்குக் கூடுதலாக $50 பில்லியன் முதல் $70 பில்லியன் வரையிலான வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


3. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற  திட்டம், வெளிநாட்டு நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவரும்  மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியானது, வைப்புத்தொகையின் உண்மையான தொகையை மட்டுமே உள்ளடக்கிய (வட்டிப் பகுதியை அல்ல), ரிசர்வ் வங்கியின்  மூலம்  ஒரு சாதாரண 'வாங்குதல்/விற்றல்' (buy/sell) அந்நியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தமாகும்.


4. இந்த முறை வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு வைப்புத்தொகை, மாற்ற திட்டம் அதிக முக்கியததுவம் வாய்ந்ததாக உள்ளது. 2013-ல், இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 3.5% மானியம் வழங்கியது. இப்போது, ​​செப்டம்பர் 30 வரை திரட்டப்படும் புதிய மூன்று முதல் ஐந்தாண்டு வைப்புத்தொகைகளுக்கான வெளிநாட்டு செலாவணி விகித அபாயத்தை அதுவே முழுமையாக ஏற்கும்.




5. ஜூன் 8 அன்று இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கொண்ட சமீபத்திய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான  வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற வசதியானது, உடனடியாக அமலுக்கு வருகிறது. செப்டம்பர் 30 வரை திரட்டப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு இது அக்டோபர் 16 வரை செயல்முறையில் இருக்கும். வங்கிகள் இந்த வைப்புத்தொகைகளுக்குத் தங்களின் உள் கொள்கையின்படி விலை நிர்ணயம் செய்ய சுதந்திரம் பெற்றிருக்கும்.  ஆனால், அது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களின்படியான ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குள் இருக்க வேண்டும்.



6. ஒரு வங்கி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒரு வாரத்தில், ஒரு வங்கி ரிசர்வ் வங்கியுடன் மாற்றிக்கொள்ள தகுதியுடைய அதிகபட்ச அமெரிக்க டாலர் தொகை, அந்த வங்கி முந்தைய வாரம் அல்லது வாரங்களில் திரட்டிய தகுதியுள்ள FCNR(B) வைப்புத் தொகைகளின் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சமமாக இருக்கும். மேலும், அந்த வைப்புத் தொகைகளுக்கு முன்பு இந்த ஸ்வாப் வசதியை பயன்படுத்தியிருக்கக் கூடாது.


7. வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு $1 மில்லியன் மடங்குகளில் அமெரிக்க டாலர்களை விற்கலாம் மற்றும் அதே நேரத்தில், பரிமாற்றக் காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களைத் திரும்ப வாங்கவும் ஒப்புக்கொள்ளலாம். இந்தப் பரிவர்த்தனையின் முதல் கட்டத்தில், வங்கியானது FBIL குறிப்பு விகிதத்தில்  ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும்.


ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், Financial Benchmarks India Private Limited, (FBIL)) என்பது ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைக் குறிக்கிறது. இந்நிறுவனம் இந்திய நிதிச் சந்தைக்காக தினசரி பல்வேறு அளவுகோல் வட்டி விகிதங்களையும் வெளிநாட்டு செலாவணி குறிப்பு விகிதங்களையும் வெளியிடுகிறது.


8. இந்தக் கட்டமைப்பின்கீழ், வங்கிகள் ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (statutory liquidity ratio (SLR)) ஆகியவற்றைப் பராமரிப்பதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.


ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) என்பது ஒரு வங்கியின் மொத்த வைப்புத்தொகையில், எளிதில் பணமாக்கக்கூடிய ரொக்கமாகப் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சதவீதமாகும். சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் என்பது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குப் பணம் கடன் கொடுப்பதற்கு முன்பு, அதிக பணப்புழக்கம் உள்ள சொத்துக்களில் (ரொக்கம், தங்கம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் போன்றவை) பராமரிக்க வேண்டிய வைப்புத்தொகையின் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறிக்கிறது.


வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகள் என்றால் என்ன?


1. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகள் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் (Persons of Indian Origin (PIO)) மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்காக (Overseas Citizens of India (OCI)) வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால வைப்புத்தொகையாகும். இந்த வைப்புத்தொகைகள், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை ரூபாயாக மாற்றவேண்டிய சூழல் இல்லாமல், தடையின்றி மாற்றத்தக்க வெளிநாடுச் செலாவணிகளில் வெளிநாட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்கின்றன.


2. இந்த வைப்புத்தொகைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நிதியை இந்திய ரூபாயாக மாற்றுவதற்குப் பதிலாக, அமெரிக்க டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர் மற்றும் கனடிய டாலர் போன்ற குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் தங்கள் சேமிப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.



3. இந்திய வரிச் சட்டங்களின்படி, வைப்புத்தொகையாளர் வெளிநாட்டவராகத் தகுதிபெறும் பட்சத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான  வைப்புத்தொகைகளில் ஈட்டப்படும் வட்டிக்கு இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போதைய கட்டமைப்பின்கீழ், வங்கிகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களை வழங்கலாம்.


4. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 1975-ல் அறிமுகப்படுத்தப்பட்டு,   நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (Foreign Currency Non-Resident (Account)) திட்டத்திற்குப் பதிலாக, FCNR(B) திட்டம் மே 15, 1993 முதல் அமலுக்கு வந்தது. வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (FCNR(A)) திட்டத்தில், அந்நியச் செலாவணி அபாயத்தை இந்திய ரிசர்வ் வங்கியும், பின்னர் இந்திய அரசும் ஏற்று வந்தன. மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட துணை நிதிச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு திட்டம் ஆகஸ்ட் 1994-ல் திரும்பப் பெறப்பட்டது.


வரி பிடித்தம்  


1. வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கும் ரூபாயை நிலைப்படுத்துவதற்கும் உள்ள சிக்கல்களுக்கு இடையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors (FIIs)) அரசுப் பத்திரங்களில் செய்யும் முதலீடுகள் மீதான நீண்ட கால மற்றும் குறுகிய கால வரிப்பிடித்ததையும், இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தின்மீது அவர்கள் செலுத்தவேண்டிய வரிப் பிடித்ததையும்  ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.


2. இந்த வரி விலக்கு முறை (scrapping) வருவதற்கு முன்பு, வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரசாங்கப் பத்திரங்கள் மூலம் பெறும் வட்டிக்கு, 20% பிடித்தம் செய்யும் வரியை செலுத்தி வந்தனர். 2023-ஆம் ஆண்டு வரை 5% என்ற சலுகை வரி விகிதம் நடைமுறையில் இருந்தது. அது முடிந்த பிறகு இந்த 20% வரி விதிக்கப்பட்டது. இது உலகின் அதிகமான வரிகளில் ஒன்றாகும்.


3. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு உள்ளிட்ட அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்களுடன் இந்தியா போராடி வரும் நிலையில், அதிக வரிப் பிடித்தமானது வெளிநாட்டு வரவுக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது.


4. வரிப் பிடித்தம் (Withholding tax (WHT)) என்பது வருமானத்தின் தொடக்க நிலையிலேயே வசூலிக்கப்படும் ஒரு வரியாகும். முதலீட்டாளர் அல்லது வெளிநாட்டு நிறுவனம் நிதியாண்டின் முடிவில் வரி செலுத்த காத்திருக்காமல், வருமானத்தை வழங்குபவர்  அந்த வருமானத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே வரியாகக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை பெறுபவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு கூறுகிறது.



5. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பின்னர் நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தப்படுகிறது. எளிமையாக, வேலைவாய்ப்பு, முதலீடுகள், உரிமத்தொகை அல்லது பிற வழிகள் மூலம் வருமானம் வரும் போதெல்லாம், அரசாங்கம் வரிப் பிடித்தம் செய்வதன் மூலம் முன்கூட்டியே வரி வசூலை உறுதி செய்கிறது.



Original Link: What are FCNR (B) deposits and swap scheme?

Share:

இந்தியாவின் மூலதனக் கணக்கு மீதான அதீத ஈடுபாடு - டி.சி.ஏ. ஸ்ரீனிவாச ராகவன்

 இந்தியா தனது நடப்புக் கணக்கை வலுப்படுத்த முயற்சி செய்யவில்லை.  அதே நேரத்தில், மூலதனப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளன.


1950-களின் நடுப்பகுதியிலிருந்து, இந்திய அரசாங்கங்கள் மூலதனக் கணக்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதே வேளையில் நடப்புக் கணக்கை பெரும்பாலும் புறக்கணித்தே வந்துள்ளன. கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மூலதன வரத்து இருந்ததாக சுட்டிக்காட்டிய முதன்மை பொருளாதார ஆலோசகரின் அறிக்கை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.


அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் நன்மையைத் தருகின்றன. இருப்பினும், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: நம் நாட்டின் தற்போதைய நடப்புக் கணக்கு நிலவரம் குறித்து ஒரு தலைமைப் பொருளாதார ஆலோசகர் கடைசியாக எப்போது தீவிரமாக விவாதித்தார்?


இருப்பினும், நடப்புக் கணக்கு என்பது ஒரு நாட்டின் வர்த்தக சமநிலை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி), வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கியது. அதாவது, ஒரு நாடு, பிற நாடுகளிடமிருந்து ஈட்டும் ஒட்டுமொத்த வருமானத்தைக் குறிக்கிறது. மறுபுறம், மூலதனக் கணக்கு என்பது நாட்டிற்குள் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.


உண்மையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர்கள் நடப்புக் கணக்கு குறித்து அரிதாகவே கவனம் செலுத்தியுள்ளனர். இது ஆச்சரியமான விஷயமாகும்; ஏனெனில், ஒரு நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்யும் போது ஏற்படும் இடைவெளியை ஈடுகட்டும் ஒரு சமநிலைப்படுத்தும் காரணியாகவே மூலதனக் கணக்கு செலுத்துதல், சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


1947-ஆம் ஆண்டிற்கு முன்பு, மூலதனக் கணக்கு என்பது ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. ஏனெனில், அப்போது இந்தியாவின் பொருளாதாரம் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பொருளாதாரத்துடனும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்துடனும் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் மூலதனப் புழக்கம் மிகவும் வலுவாக இருந்தது. தங்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான முதலீடுகளைப் பெறுவதை ஆங்கிலேயர்கள் உறுதி செய்ததால், இந்தியா முழுமையான மூலதன மாற்றத்தக்கத் தன்மையை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், நடப்புக் கணக்கு நிலவரம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்று விகிதத்தை (Exchange rate) மாற்றியமைத்துக் கொண்டே இருந்தனர். 1890-களின் தொடக்கத்திலிருந்து, இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கின. மேலும், இது குறித்துப் பல விவாதங்களும் அப்போது நடைபெற்றன.


1955-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அரசாங்கங்கள் நடப்புக் கணக்கைவிட மூலதனக் கணக்கின் மீது அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கின. மூலதனக் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் நடப்புக் கணக்கின் விளைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், ஒரு நாடு தனது வருவாய் மூலம் எவற்றைப் பெற முடியவில்லையோ, அவற்றைப் பெறுவதற்கு மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே ஆகும்.


ஏன் மூலதனக் கணக்கு முக்கியமானது?


இதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமானது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (Second Five Year Plan) மற்றும் பி. சி. மகாலனோபிஸ் அவர்கள் குறிப்பிட்ட அதிகப்படியான அந்நியச் செலாவணித் தேவைகளுடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டம் அதிக முதலீடு தேவைப்படும் ஒன்றாக இருந்ததால், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2%-க்கும் அதிகமாக இருந்தபோதிலும், தேவையான நிதியானது ஏற்றுமதி வருவாய் மூலம் கிடைப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலமாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இருந்தபோதிலும், அதிக முதலீடு தேவைப்படும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தியதால், அதிக தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஏற்றுமதித் துறைகளில் முதலீடு குறைந்தது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா தனக்கிருந்த சாதகமான சூழலை இழந்தது. எலி ஹெக்ஷர் (Eli Heckscher) மற்றும் பெர்டில் ஓலின் (Bertil Ohlin) போன்ற பொருளாதார வல்லுநர்கள் இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்திருப்பார்கள்.


மற்றொரு காரணம் நிர்வாகரீதியானது: நிதியமைச்சகம் மூலதனக் கணக்கை கவனித்துக்கொண்டது, அதேசமயம் அப்போதைய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நிர்வகித்ததால், அது நடப்புக் கணக்கை நிர்வகித்தது.


அரசாங்கத்தில் இருந்த அதிகாரப் படிநிலையின்படி, நிதி அமைச்சகமும் அதன் மூலதனக் கணக்குமே முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்த நடைமுறை 1950-களின் இடைப்பகுதியிலிருந்து இன்று வரை மாறாமல் அப்படியே தொடர்கிறது. இதனால், வர்த்தக அமைச்சகம் தனது கடன் மற்றும் அந்நியச் செலாவணி விகிதக் கொள்கைகளுக்காக நிதி அமைச்சகத்தின் முடிவுகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


அரசாங்கங்கள் கடனாளிகளாகத் தெரிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு விவசாயி கடனில் மூழ்கியிருப்பது போல, ஒரு நாடே கடனில் மூழ்கியிருப்பதாகக் கருதப்பட்டது.


பாகிஸ்தான் பலமுறை சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund (IMF)) நாடியுள்ள நிலையில், ஒரு நாடு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கிறது என்கிற பிம்பம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை என்பதை அதன் நிலைமை காட்டுகிறது. இருப்பினும், இந்தியா இத்தகைய சூழலைத் தவிர்க்க முயன்றபோது, இந்திய அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அதாவது, ஒரு நாடு போதுமான வருவாயை ஈட்டினால், அது கடன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என்பதே ஆகும். இதன் விளைவாக, அவர்கள் நாட்டின் நடப்புக் கணக்கு நிலவரத்தைக் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், இந்தியாவில் கடன் பற்றிய பயம் காரணமாக முதலீட்டு வரத்து பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.


விளைவுகள்


வெளிப்புறத் துறையை (external sector) நிர்வகிக்கும் இந்த அணுகுமுறை இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, உள்நாட்டுச் சேமிப்பு போதுமானதாக இல்லாதபோதும், வெளிநாட்டுச் சேமிப்பை முறையாகப் பயன்படுத்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சரிசெய்யாததுடன், மூலதனப் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது. மேலும், கடனை ஒரு எதிர்மறையான விஷயமாகப் பார்க்கும் போக்கு, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் குறைத்துள்ளது.


இரண்டாவதாக, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, மூலதனத்தின் திறமையான பயன்பாட்டைக் குறைத்துள்ளது. இறக்குமதி வரிகள் மூலம் பாதுகாக்கப்படும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகள், திறமையாகச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயத்தை இழக்கின்றன. இதன் தாக்கம் தொழிலாளர் சந்தையிலும் எதிரொலிக்கிறது. அதாவது, சாதாரணச் சூழலில் இருக்க வேண்டியதைவிட, இத்தகைய சூழலில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகமாக உயர்கிறது.


இது போன்ற இன்னும் பல தவறுகள் இருந்தாலும், முதன்மையான கருத்து தெளிவாக உள்ளது. மூலதனக் கணக்கில் மட்டும் கவனம் செலுத்தி, நடப்புக் கணக்கை அலட்சியப்படுத்தியதன் மூலம் ஒரு பெரிய தவறு இழைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார அணுகுமுறையை மாற்றினால் மட்டுமே இந்தத் தவறைச் சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.


Original article : India’s capital account obsession. -TCA Srinivasa Raghavan

Share:

கடன் பெற பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது, இந்தியாவுடனான பதட்டங்கள் குறைந்து வருவதால் அபாயங்கள் குறைந்துள்ளதாகக் கூறுகிறது -ஆஞ்சல் மேகஜைன்

பாகிஸ்தானில் ஊழல் குறித்த IMF அறிக்கை : பாகிஸ்தான் தனது கடனைப் பெற சர்வதேச நாணய நிதியம் (IMF) 11 புதிய கட்டமைப்புக்கான அளவுகோல்களை விதித்ததுள்ளது. அவற்றில் வரி சீர்திருத்தங்கள், அரசு அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகள் மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறை பங்கேற்பு தொடர்பான மூன்று நிபந்தனைகள் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்


பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிக்கை செய்தி : பாகிஸ்தானின் வணிகம் மற்றும் நற்பெயர் அபாயங்கள் குறித்த கவலைகள் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.


இந்த முன்னேற்றம் இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிப்பதோடு தொடர்புடையது. மே மாதத்தில் பதட்டங்கள் உச்சத்தை எட்டியிருந்தன. பின்னர், குறைந்துவிட்டன. பாகிஸ்தான் குறித்த அதன் சமீபத்திய மதிப்பாய்வு அறிக்கையில் IMF இந்தக் கருத்தை வியாழக்கிழமை வெளியிட்டது.


எவ்வாறாயினும், பாகிஸ்தான் தனது கடனைப் பெற சர்வதேச நாணய நிதியம் (IMF) 11 புதிய கட்டமைப்பு அளவுகோல்களை விதித்தது. அவற்றில் வரி சீர்திருத்தங்கள், அரசு அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகள் மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறை பங்கேற்பு தொடர்பான மூன்று நிபந்தனைகளை நாடு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.


"நிலையான திட்ட செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, வலுவான உரிமை, வணிக அபாயங்களை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் சில அபாயங்கள் மற்றும் அதிகரித்த உலகளாவிய அபாயங்கள் இருந்தபோதிலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மே மாதத்தில் உச்சத்தை அடைந்த பிறகு, இந்தியாவுடனான பதட்டங்கள் குறைந்துவிட்டன. மேலும், வணிக அபாயங்கள் (எ.கா., நிதி, வெளியுறவு மற்றும் சீர்திருத்த இலக்குகளை சமரசம் செய்யும் நீண்டகால இராணுவ மோதல்) மற்றும் நற்பெயர் அபாயங்கள் (எ.கா., நிதி வழங்கல்களை தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படுவது) பற்றிய தொடர்புடைய கவலைகளையும் குறைக்கின்றன," என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.


சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் $7 பில்லியன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility (EFF)) கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டிற்கான இரண்டாவது $1 பில்லியன் தவணையைச் செயல்படுத்த அக்டோபரில் ஒப்புக்கொண்ட பிறகு, வியாழக்கிழமை (டிசம்பர் 11) பாகிஸ்தானுக்கான நாட்டு அறிக்கையை வெளியிட்டது. மேலும், இஸ்லாமாபாத் $200 மில்லியனைப் பெற அனுமதித்தது.


இந்த தவணைகளுடன், பாகிஸ்தானுக்கு சுமார் $3.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியது. மே மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக $1 பில்லியன் தொகையை வழங்க அனுமதித்தது மற்றும் காலநிலை சார்ந்த மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (Resilience and Sustainability Facility (RSF)) கீழ் சுமார் $1.4 பில்லியனை அணுக அனுமதித்தது.


11 புதிய நிபந்தனைகள்


வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியில், ஜூன் 2025 சட்டத் திருத்தங்களின்படி, உயர் மட்ட கூட்டாட்சி அரசு ஊழியர்களின் சொத்து அறிவிப்புகளை அரசாங்க வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்று IMF பாகிஸ்தானுக்கு ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் 'நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (Governance and Corruption-Diagnostic (GCD)) மதிப்பீட்டில்' ஊழல் என்பது பாகிஸ்தானின் நிர்வாக நிலப்பரப்பின் ஒரு "தொடர்ச்சியான அம்சம்" என்றும், பணமோசடியைத் தண்டிப்பதில் அதன் அமலாக்க நடவடிக்கை "பலவீனமானது" என்றும், "நீதித்துறை நிறுவனங்கள்" "ஊழல் நிறைந்தவை" என்றும், ஊழல் எதிர்ப்பு நிறுவனங்கள் "அரசியல் செல்வாக்கின் வரலாறு இருப்பதாகவும்" அந்த அறிக்கை மேலும் கூறியது.


பாகிஸ்தான் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலும், பொருளாதார செயல்திறனைக் குறைக்கும் நிர்வாக பலவீனங்கள் மற்றும் ஊழல் பாதிப்புகளைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வதற்காகவும், அதன் ஆதரவுடன் இந்த நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (GCD) நடத்தப்பட்டது. உலக வங்கியின் நிபுணர்களுடன் இணைந்த துறைகளுக்கு இடையேயான IMF குழு, ஜனவரி 2025-ல் நிர்வாகம் மற்றும் ஊழல்-கண்டறிதல் (GCD) பணியைத் தொடங்கியது. பாகிஸ்தான் தனது சர்ச்சைக்குரிய 27-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியதால் இது முக்கியத்துவம் பெற்றது. இந்தத் திருத்தம் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனிரின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்திற்கு மேலே மற்றொரு நீதிமன்றத்தை உருவாக்குவதன் மூலம் அது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கிறது.


அது வரி கொள்கை சீர்திருத்தங்களுக்கான ஒரு படிநிலைப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். அது வரி நிர்வாகம் மற்றும் வரிச் சட்டங்களில் உள்ள சீர்திருத்தங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அந்த உத்தி நிர்வாக ஏற்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அது செயலாக்கத்திற்கான ஒரு வளத் திட்டத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். பாகிஸ்தான் இந்த நிபந்தனையை டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.


புதிய கட்டமைப்பு அளவுகோல்கள்

நிதி

1. டிசம்பர் 2025 இறுதிக்குள் ஒரு திட்ட வரைபடத்தை இறுதி செய்யவும். இதில் குறைந்தபட்சம் திட்ட வரைபடத்தில் பின்வருவன அடங்கும்.


(i) முக்கிய சீர்திருத்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தல்; (ii) பணியாளர் தேவைகள் மற்றும் பொறுப்புகள்; (iii) குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் இலக்குகள்; (iv) வருவாய் தாக்க மதிப்பீடுகள்; மற்றும் (v) முன்னேற்றம் மற்றும் விளைவுகளை கண்காணிக்க முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (Key performance indicators (KPI)) (எ.கா. தணிக்கைகளின் எண்ணிக்கை, டிஜிட்டல் விலைப்பட்டியலால் உள்ளடக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை போன்றவை). திட்ட வரைபடத்தின் அடிப்படையில், IMF பணியாளர்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தது மூன்று முன்னுரிமைப் பகுதிகளை முழுமையாக செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கவும். இதில், தேவையான துணைச் சட்டம், பணியாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் ஒதுக்கீடு மற்றும் ஆரம்பகட்ட முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPI) அறிக்கையிடல் ஆகியவை அடங்கும்.

கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் (FBR) செயல்திறனை மேம்படுத்தவும்.

2026 மார்ச் மாத இறுதிக்குள்

2. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கான ஒரு விரிவான வரிச் சீர்திருத்த உத்தியை உருவாக்கிப் பகிரவும். அதில் பின்வருவன அடங்கியிருக்க வேண்டும்: (i) வரிக் கொள்கை, நிர்வாகம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்களுக்கான ஒரு படிநிலைத் திட்டம்; 

(ii) தெளிவான நிர்வாகக் கட்டமைப்புகள்; மற்றும் 

(iii) அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான வளங்களுக்கான ஒரு திட்டம்.

வரியின் முன்னறிவிப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்.

வருவாய்.

டிசம்பர் 2026 இறுதிக்குள்

ஆளுகை

3. ஜூன் 2025 சட்டத் திருத்தங்களின்படி உயர் மட்ட கூட்டாட்சி சிவில் ஊழியரின் சொத்து அறிவிப்புகளை அரசாங்க வலைத்தளத்தில் வெளியிடவும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல்.

டிசம்பர் 2026 இறுதிக்குள்

4. அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஊழல் அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை வெளியிடவும். இந்தத் திட்டம் நிறுவன அளவிலான இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைய வேண்டும்.

கடுமையான ஊழல் பாதிப்புகளைக் கண்டறிந்து தணிக்கவும்.

2026 அக்டோபர் மாத இறுதியில்

பணவியல் மற்றும் நிதி

5. பணம் அனுப்புவதற்கான செலவுகள் மற்றும் எல்லை தாண்டிய பணம் வழங்களில் உள்ள தடைகள் குறித்து முழுமையான மதிப்பீடு செய்யவும். கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்கவும்.

நிலையான முறையில் அந்நிய செலாவணி வரவை அதிகரிக்கவும்.

2026 மே மாத இறுதிக்குள்

6. உள்ளூர் நாணயப் பத்திரச் சந்தையை மேம்படுத்துவதற்கான தடைகளை விரிவாக ஆய்வு செய்யவும். இந்தத் துறைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாயச் செயல் திட்டத்தை வெளியிடவும்.

நிதிச் சந்தைகளை உருவாக்கி, முதலீட்டாளர் தளத்தைப் பன்முகப்படுத்தவும்.

2026 செப்டம்பர் இறுதிக்குள்

எரிசக்தி துறை

7. (ஹைதராபாத் மின்சார விநியோக நிறுவனம் (HESCO) மற்றும் சுக்கூர் மின்சார விநியோக நிறுவனம் (SEPCO) செயல்முறைகளில் தனியார் துறை பங்கேற்பதற்கான முன்நிபந்தனைகளை அமைத்து உறுதிப்படுத்தவும்.

விநியோக நிறுவனங்கள் (DISCO) மேலாண்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.

டிசம்பர் 2026 இறுதிக்குள்

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்

ஏழு பெரிய பொது சேவை கடமைகள் (public service obligations (PSO)) ஒப்பந்தங்களில் அரசாங்கம் கையெழுத்திடும். இது FY27 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன் நடக்கும். ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்ட கையேடுகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும். இவை அரசுக்குச் சொந்தமான நிறுவனச் சட்டம் (SOE) மற்றும் கொள்கைக்கு ஏற்ப உள்ளன.

பொதுக் கடமைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செலவுகளை மேம்படுத்துதல்.

ஜூன் 2026 இறுதிக்குள்

வர்த்தகம், முதலீட்டுக் கொள்கை மற்றும் கட்டுப்பாடு நீக்கம்

9. மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் சர்க்கரை சந்தை தாராளமயமாக்கலுக்கான தேசியக் கொள்கையில் உடன்படும். மத்திய அமைச்சரவை அதை ஏற்றுக்கொள்ளும். இந்தக் கொள்கையில் உரிமம் வழங்குதல், விலைக் கட்டுப்பாடுகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிகள், மண்டலப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துவதற்கான தெளிவான காலக்கெடு பற்றிய பரிந்துரைகள் அடங்கும்.

பொருட்கள் சந்தைகளை தாராளமயமாக்குங்கள்.

ஜூன் 2026 இறுதிக்குள்

10. நிறுவனங்கள் சட்டம், 2017-ல் சட்டமன்றத் திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கான இணக்கத்தை வலுப்படுத்துதல், பெருநிறுவன நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் விதிமுறைகளை சீரமைப்பதை இந்த திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் மூலதனச் சந்தை வளர்ச்சியை ஆதரித்தல்.

ஜூன் 2026 இறுதிக்குள்

11. சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) சட்டத்தில் சட்டமியற்றும் திருத்தங்கள் குறித்து ஒரு கருத்துரு குறிப்பு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இது சீர்திருத்தங்களின் நோக்கம், நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை வரையறுக்கும். இந்த குறிப்பு மாற்றங்களுக்கான காரணத்தை விளக்குகிறது, முக்கிய குறிகாட்டிகளை முன்மொழிகிறது மற்றும் லாப அடிப்படையிலான சலுகைகளிலிருந்து செலவு அடிப்படையிலான சலுகைகளுக்கு மாறுவதை கோடிட்டுக் காட்டுகிறது.

ஜூன் 2026-க்குள் முதலீட்டிற்காக செயல்திறனை மேம்படுத்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல்.

ஜூன் 2026 இறுதிக்குள்


கூடுதலாக, சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானின் பொதுத்துறை பயன்பாட்டு நிறுவனங்களான ஹைதராபாத் மின்சார விநியோக நிறுவனம் (Hyderabad Electric Supply Company (HESCO)) மற்றும் சுக்கூர் மின்சார நிறுவனத்தில் (Sukkur Electric Power Company (SEPCO)) தனியார் துறை பங்கேற்புக்கான முன்நிபந்தனைகளை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க இஸ்லாமாபாத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.


மற்ற நிபந்தனைகளில் மார்ச் மாதத்திற்குள் ஒரு நிதிசார் செயல் திட்டத்தை இறுதி செய்வதும் அடங்கும். இந்தச் செயல் திட்டம் முக்கிய சீர்திருத்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பணியாளர் தேவைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுத்தல், குறிப்பிட்ட காலக்கெடு மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல், வருவாய் தாக்கத்தை மதிப்பிடுதல் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அடையாளம் காண்பது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.


அந்நியச் செலாவணி வரவை அதிகரிக்க, பாகிஸ்தான் பணம் அனுப்பும் செலவுகள் மற்றும் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளுக்கான தடைகள் குறித்த முழுமையான மதிப்பீட்டை முடிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மே மாத இறுதிக்குள் ஒரு செயல் திட்டத்தையும் அது தயாரிக்க வேண்டும்.


ஜூன் மாத இறுதிக்குள், மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். பின்னர், மத்திய அமைச்சரவை சர்க்கரை சந்தையை தாராளமயமாக்குவதற்கான ஒரு தேசியக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கொள்கையில் உரிமம் வழங்குதல், விலைக்கட்டுப்பாடுகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிகள், மண்டலப் பிரிப்பு மற்றும் செயல்படுத்தலுக்கான தெளிவான காலக்கெடு குறித்த முக்கியப் பரிந்துரைகள் அடங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானின் சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன், இந்தியாவின் கவலைகள்


மே மாதத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துர் ஆகியவற்றிற்குப் பிறகு, இந்தியா சர்வதேச நாணய நிதியத்தின் வாரியக் கூட்டத்தில் வாக்களிப்பதைத் தவிர்த்தது. பாகிஸ்தானின் "மோசமான சாதனைப் பதிவு" காரணமாக, அந்நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத் திட்டங்களின் செயல்திறன் குறித்து இந்தியா கவலைப்பட்டது. அரசால் நிதியுதவி செய்யப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கடன் நிதி தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இந்தியா கவலைப்பட்டது. கூட்டத்திற்கு முன்பு, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அந்த நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு முன்பு, நிதியத்தின் வாரியம் உண்மைகளை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.


பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் டாலர் கடன்களை அங்கீகரிப்பதற்காக, மே 9 அன்று வாஷிங்டன் டி.சி.யில் அதன் வாரியம் கூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள், நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய “நற்பெயர் அபாயங்கள்” குறித்து எச்சரித்தனர். இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக “நிறுவன அபாயங்கள்” அதிகரிப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, அது பாகிஸ்தானின் நிதி நிலைமை, வெளிநாட்டுக் கணக்குகள் மற்றும் சீர்திருத்த இலக்குகளுக்கு அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.


இஸ்லாமாபாத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு செப்டம்பர் 2024-ல் அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய 37 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில், இந்த நிதி உதவிக்காலத்தின் போது ஆறு ஆய்வுகள் உள்ளன. நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம், சரிசெய்ய நேரம் தேவைப்படும் கட்டமைப்பு பலவீனங்களால் ஏற்படும் தீவிரமான நடுத்தர கால செலுத்துதல் இருப்புச் சிக்கல்களைக் கொண்ட நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. 


இது கட்டமைப்பு சீர்திருத்தங்களை ஆதரிக்க நீண்ட கால திருப்பிச் செலுத்தும் காலங்களையும் வழங்குகிறது. இதற்கிடையில், மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதி (Resilience and Sustainability Facility (RSF)) திட்டம், காலநிலை தொடர்பான பாதிப்புகளிலிருந்து பாகிஸ்தானின் செலுத்துதல் இருப்பு அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


சர்வதேச நாணய நிதிக் (IMF) குழு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இரண்டாவது மதிப்பாய்வு மற்றும் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை வசதியின் (RSF) கீழ் முதல் மதிப்பாய்வு குறித்து விவாதித்தது. பாகிஸ்தானின் பொருளாதாரத் திட்டம் "பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை நிலைநிறுத்துகிறது மற்றும் சந்தை நம்பிக்கையை மீண்டும் உருவாக்குகிறது" என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) அப்போது குறிப்பிட்டது.

Original link:

IMF puts 11 new conditions on Pakistan to avail loan, says risks have reduced as tensions with India have waned


Share: