செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போர்முறையை மாற்றியமைக்கிறது: இந்தியா எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்? -ராஜ் சுக்லா

 ஈரான் முதல் வெனிசுலா வரையிலான உலகளாவிய உதாரணங்கள் காட்டுவது என்னவென்றால், இந்தியா தனது சொந்த இறையாண்மை அணுகுமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை அடிப்படையிலான போர் உத்திகள் ஆகியவற்றின் கூட்டுமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.


செயற்கை நுண்ணறிவு (AI), ராணுவ சுயாட்சி மற்றும் கணினி வழிமுறை சார்ந்த போர்முறை (Algorithmic warfare) ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையானது, நவீன போர்கள் நடத்தப்படும் முறையையும், நாடுகள் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வழியையும் மாற்றி அமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவானது நேரடிப் போர் நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் அதேவேளையில், சுயாட்சி அமைப்புகள் மனிதர்களின் தலையீடு இன்றித் தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவது எதுவென்றால், ‘Algorithms’ எனப்படும் கணினி வழிமுறைகள் வழங்கும் துல்லியமான இலக்குத் திறன்தான். இந்த மூன்று தொழில்நுட்பங்களும் இணைந்து, வரவிருக்கும் ஆண்டுகளில் போர்க்களத்தின் செயல்திறனையும், அதன் அழிவுத் திறனையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் ராஜதந்திர மற்றும் இராணுவத் தலைமை, தற்போதைய போர்க்களச் சூழலை ஒரு மேன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) போன்றதொரு வரலாற்றுத் தருணமாக அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில், இன்று போரியல் துறையில் முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.




தொழில்நுட்ப மோதல்: உக்ரைன், வெனிசுலா மற்றும் ஈரான்


துப்பாக்கி மருந்து மற்றும் அணுஆயுதங்களுக்குப் பிறகு, ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய புரட்சி, ட்ரோன்கள் (Drones) ஆகும். இவை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அது சார்ந்த பிற தொழில்நுட்பங்களுடன் இணையும்போது, போரிடும் முறையையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுடன், நாடுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.


இவற்றின் தாக்கம் ரஷ்யா-உக்ரைன் போரில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. உக்ரைன் நாடு 'டெல்டா' (Delta) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தரவு பகுப்பாய்வு தளத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தளம் ரேடார் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே அறிவார்ந்த அமைப்பாக மாற்றுகிறது. டெல்டா தளம் பல்வேறு வகையான ட்ரோன்களுடன் இணைந்து செயல்பட்டு ஒரு டிஜிட்டல் 'Kill web' (இலக்குகளை அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்குகிறது. இது ஒரு இலக்கைக் கண்டறிவதற்கும் அதை அழிப்பதற்கும் இடைப்பட்ட நேரத்தை வெறும் சில நிமிடங்களாகக் குறைக்கிறது.


ரஷ்ய-உக்ரைன் எல்லை நெடுகிலும் உள்ள 35 கிலோமீட்டர் தூரப் பகுதி மரணப் பகுதி (Death zone) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில், பீரங்கிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது, போர் பீரங்கிகளால் நகரவே முடியவில்லை. மேலும், தரைப்படை வீரர்கள் கண்காணிப்பு ட்ரோன்களால் உடனடியாகக் கண்டறியப்பட்டு, சில நிமிடங்களிலேயே ட்ரோன்கள் மூலமாகத் தாக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் போர் வீரர்களால் செய்யப்பட்ட பல பணிகளை இப்போது ஆளில்லா அமைப்புகளே செய்கின்றன. தகவல் சேகரிப்பது, இலக்குகளைக் கண்டறிவது, வெடிமருந்துகள் மற்றும் உணவுகளை வழங்குவது மற்றும் காயமடைந்தவர்களை மீட்பது ஆகியவை இதில் அடங்கும்.


கடந்த ஆண்டு உக்ரைன் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக, இந்த ஆண்டு சுமார் 80 லட்சம் ட்ரோன்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள், 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தரைப்படைகளுக்கு வான்வழி ஆதரவு தருவதில் தொடங்கி, 2,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று நீண்டதூரத் தாக்குதல்களை நடத்தும் அபாரத் திறனை ராணுவத் தளபதிகளுக்கு வழங்குகின்றன.


வெனிசுலாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிபரான நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடிப்பதற்காக அமெரிக்கா நடத்திய நடவடிக்கையின்போது, ‘Anthropic’ நிறுவனத்தின் 'Claude AI' என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மதுரோவின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், அவரது அடுத்தகட்ட நகர்வுகளை முன்கூட்டியே கணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ராணுவத் தலைவர்களுக்கு உதவியது. அதன்பிறகு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக மின்னணுப் போர் (Electronic warfare) மற்றும் இணையவழித் தாக்குதல்கள் ஆகியவை 'Delta Force’ ஹெலிகாப்டர் தாக்குதலுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.


ஈரானில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது, மனிதர்கள் சிந்தித்துச் செயல்படும் வேகத்திற்குப் பதிலாக இயந்திர வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திட்டங்களைத் தயாரிக்க உதவியது. இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகத் துல்லியமான தாக்குதல்கள், பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி காலை சில நிமிடங்களிலேயே ஈரானியத் தலைவர்கள் ஏறக்குறைய அனைவரையும் அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


தானியங்கிக் கட்டுப்பாடு 


ராணுவத் தொழில்நுட்பம் மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானப் போர்முறை, மனிதர்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து மாறி, இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சுயமாகச் செயல்படும் தானியங்கி கட்டுப்பாட்டுக்கு மாறி வருகிறது. கடற்படைக் கப்பல்களும் மனித தளபதிகளுக்குப் பதிலாக, சுயமாக முடிவெடுக்கும் தானியங்கி மென்பொருள் அமைப்புகளை நோக்கி நகர்கின்றன. வான்வழிப் போரில், 'Anduril' என்ற பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனம் உருவாக்கியுள்ள YFQ-44A ‘Fury’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் தானியங்கி போர் விமானம், வான்வழிப் பாதுகாப்பின் எதிர்காலம் மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் (AI) இணைந்து செயல்படுவதைச் சார்ந்தே இருக்கும் என்பதைக் காட்டுகிறது. மேலும், பாதுகாப்புத் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், பெரிய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து சுறுசுறுப்பாகச் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை நோக்கி மெதுவாக நகர்வதையும் இது உணர்த்துகிறது.


அதேநேரத்தில், பேராபத்தை விளைவிக்கக்கூடிய தொழில்நுட்பங்களும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. 'Mythos' எனப்படும் ஒரு மெய்நிகர் இணையவழி ஆயுதம் (Virtual cyber weapon), எதிரிகளின் கணினி இயங்குதளத்தையே முடக்கக்கூடிய திறன் கொண்டது. ‘DeepSeek’ மற்றும் தாவின் ஸ்கேலிங் விதி (Tau's Law of Scaling) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களும், ‘Nvidia’ நிறுவனத்தின் 4-நானோமீட்டர் ‘Blackwell’ சிப்களுக்குப் போட்டியாக 2031-ஆம் ஆண்டுக்குள் 1.4-நானோமீட்டர் டிரான்சிஸ்டர் அடர்த்தியை அடைய வேண்டும் என்ற ‘Huawei’ நிறுவனத்தின் இலக்கும், சீனாவின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு ராணுவ மற்றும் ராஜதந்திரரீதியான போட்டியைத் தீவிரப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகின்றன.


போர்க்களத்தில், ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒருமுறை புதிய மென்பொருட்களும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை புதிய வன்பொருட்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, இதுவரை முக்கியமாக ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பாதுகாப்பு அமைச்சகம், இனி மேம்பட்ட மென்பொருட்களையும் உருவாக்கும் ஒரு அமைப்பாக மாற வேண்டும்.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


பாதுகாப்புத் துறையின் எதிர்காலம் என்பது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இப்போதிலிருந்தே, செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் கணினி வழிமுறை போர்முறை (Algorithmic warfare) ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் பின்வரும் வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்:





'டெல்டா' (Delta) தளத்தைப் போன்ற, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு தரவு பகுப்பாய்வுத் தளத்தை  உடனடியாக உருவாக்க வேண்டும்.


ட்ரோன்களை மனித உதவியின்றித் தானாகவே ஒருங்கிணைக்கும் மென்பொருளை உருவாக்க வேண்டும். இது பறவைகள், உள்நாட்டு விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, இலக்குகளை அழிக்குமாறு தாக்குதல் நடத்துவோருக்கு வழிகாட்டும்.


2028-ஆம் ஆண்டிற்குள் 50 லட்சம் ட்ரோன்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு வகையான ட்ரோன்களின் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டும்.


ட்ரோன்களை தாக்கி அழிக்கும் குழுக்களுடன், லேசர் மற்றும் மைக்ரோவேவ் ஆயுதங்கள் போன்ற பல்வேறு வகையான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control (LoC)) மற்றும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் "Kill webs" (எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் வலைப்பின்னல்) அமைப்பை உருவாக்க உதவும்.


பூமியின் தாழ்வட்டப் பாதையில் (Low-Earth orbit (LEO)) அதிகப்படியான செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். இதன் மூலம், வெறும் கண்காணிப்பு என்கிற அளவோடு நின்றுவிடாமல், எதிரிகளின் நகர்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆக்கிரமிப்புடன் தாக்கும் உளவுத் துறை, கண்காணிப்பு மற்றும் உளவுப் பணி (Intelligence, surveillance and reconnaissance) என்ற நிலைக்கு நாம் மாற முடியும்.


2027-ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதிநிலைத் திட்டம் இந்த மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்படும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயில், குறைந்தபட்சம் 40 விழுக்காட்டை இத்தகைய தொழில்நுட்பத் தீர்வுகளுக்காகவே செலவிட வேண்டும்.




இது ஒரு மிகப்பெரிய சவாலாகும். இதற்கு நமது ராணுவக் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பில் பெரிய மாற்றம் தேவைப்படும். இருப்பினும், இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது போர்க்களத்தில் போர் முறையையே மாற்றியமைப்பதாக இருக்கும். இது நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்தியா செயல்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, பாகிஸ்தானைவிட போர்முனையில் அதிகப்படியான மேலாதிக்கத்தைப் பெறவும், சீனாவிற்கு எதிராக சமச்சீரற்ற தற்காப்புத் தடுப்பை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிவகுக்கும்.


ராஜ் சுக்லா, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பணியாற்றி, ராணுவப் பயிற்சிப் பிரிவின் (ARTRAC) ராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.


Original article : AI is reshaping warfare: How India can keep pace. -Raj Shukla

Share:

தண்ணீர் பற்றாக்குறை: கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது ஒரு நிலையான தீர்வா? -அருணாங்ஷு தாஸ்

 நீரில் பல வகையான உயிரியல் மற்றும் வேதியியல் அசுத்தங்கள் நிறைந்துள்ளன. இதனால், பொது சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பை உறுதிசெய்ய பயனுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மிகவும் அவசியமாகிறது. கழிவுநீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது? குளோரினேற்றம் (Chlorination) முறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன? குளோரினேற்றத்தைவிட ஓசோன் (Ozone) முறை மிகவும் பயனுள்ள ஒரு கிருமிநாசினி முறையா?



நச்சு இரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவை குடிநீர் ஆதாரங்களை மாசடையச் செய்து, கடுமையான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 2005 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 20.98 கோடிக்கும் அதிகமான நீர் மூலம் பரவும் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்ற தேசியத் தரவுகளைச் சுட்டிக்காட்டிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), மாசடைந்த குடிநீரை வழங்குவது நீர் மாசுபாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், அது மனிதர்களின் அடிப்படை வாழ்வுரிமையை (Right to life) மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.


இது இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு எவ்வாறு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு காலத்தில் வெறும் கழிவாக மட்டுமே பார்க்கப்பட்ட கழிவுநீரை, முறையான சுத்திகரிப்பு மூலம் ஒரு மதிப்புமிக்க வளமாக மாற்ற முடியுமா?


கழிவுநீர் மறுசுழற்சி ஏன் முக்கியமானது?


நன்னீர் (Freshwater) என்பது பூமியின் மிக மதிப்புமிக்க இயற்கை வளங்களில் ஒன்றாகும். பூமியில் உள்ள தண்ணீரில் சுமார் 96.5% உப்புத் தன்மையுடையது. இது கடல்களிலும் பெருங்கடல்களிலும் காணப்படுகிறது. ஏரிகளில் உள்ள நன்னீர் வெறும் 0.007% மட்டுமே ஆகும். அதேநேரத்தில் ஆறுகள் மற்றும் ஓடைகள் அனைத்தையும் சேர்த்தாலும் வெறும் 0.002% மட்டுமே தண்ணீர் உள்ளது என்று கில்பர்ட் எம். மாஸ்டர்ஸ் மற்றும் வெண்டெல் பி. எலா ஆகியோர் தங்களது 'Introduction to Environmental Engineering and Science' (1991) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


எனவே, கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதுதான் தொழில்துறை, வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் வேளாண்மை ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை வழங்குவதற்கான நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இந்தக் கழிவுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.



நீர் மாசுபடுத்திகள்: உயிரியல் மற்றும் வேதியியல் காரணிகள்


உயிரினக் கழிவு மாசுக்கள் (Biological contaminants) என்பவை வைரஸ்கள் (எ.கா: என்டெரோவைரஸ்), பாக்டீரியாக்கள் (எ.கா: சால்மோனெல்லா, ஷிகெல்லா), புரோட்டோசோவாக்கள் (எ.கா: எண்டமீபா) மற்றும் ஒட்டுண்ணிப் புழுக்கள் (எ.கா: கொக்கிப்புழுக்கள்) போன்ற நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் ஆகும்.


வேதிப்பொருள் மாசுக்களில் ஆக்சிஜனைப் பயன்படுத்தும் கழிவுகள் (சாக்கடை நீர், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீர் போன்றவை) மற்றும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் (நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கூட்டுப்பொருட்கள் போன்றவை) அடங்கும். ஆக்சிஜனைப் பயன்படுத்தும் கழிவுகள் தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் தேவையை (Biological Oxygen Demand (BOD)) அதிகரிக்கின்றன. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் தண்ணீரின் மேல் பாசிகள் பெருகுவதற்குக் காரணமாகின்றன. குடிநீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதும் இந்த ஊட்டச்சத்து மாசுபாட்டின் மற்றொரு விளைவுதான்; இது கைக்குழந்தைகளுக்கு 'மெஹ்மோகுளோபினேமியா' (Methemoglobinemia) எனப்படும் 'Blue baby syndrome' ஏற்படக் காரணமாகிறது.


Blue Baby Syndrome: குடிநீரில் நைட்ரேட் அதிகம் இருந்தால், அது குழந்தைகளின் இரத்தத்தில் ஆக்சிஜன் செல்வதைத் தடுத்து, அவர்களின் உடல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாற வழிவகுக்கும் ஒரு ஆபத்தான நிலை ஆகும்.


மற்ற முக்கிய இரசாயன மாசுகளில் உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile Organic Compounds (VOCs)), நீரில் கரைந்துள்ள திடப்பொருட்கள் மற்றும் புதிதாக உருவாகி வரும் நீர் மாசுகள் ஆகியவை அடங்கும். உலோகங்கள் நமது உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கலாம்; பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழல் நச்சுத்தன்மையையும் மற்றும் உணவுச் சங்கிலி வழியாக உடலில் நச்சுக்கள் அதிகரிப்பதையும் ஏற்படுத்துகின்றன. ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) முக்கியமாக நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. மேலும், நீரில் அதிகப்படியான உப்பின் அளவு அதிகரிப்பது, நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவை (Total Dissolved Solids (TDS)) அதிகரிக்கிறது.


மேலும், புதிதாக உருவாகி வரும் நீர் மாசுகள், குறிப்பாக வாய்வழி கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் 'எத்தினிலஸ்ட்ராடியோல்' (Ethinylestradiol) போன்ற நாளமில்லாச் சுரப்பிகளைப் பாதிக்கும் இரசாயனங்கள் (Endocrine-Disrupting Chemicals (EDCs)), மீன்கள் மற்றும் தவளை போன்ற இருவாழ்விகளைத் (Amphibians) தீவிரமாகப் பாதிக்கலாம்.


நீர் தர மதிப்பீட்டு குறியீடு உயிரினங்கள் 


ஒரு தண்ணீர் மாதிரியில் (Water sample) இருக்கும் ஒவ்வொரு நுண்ணுயிரியையும் தனித்தனியாக எண்ணிக்கையைக் கண்டறிவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. எனவே, தண்ணீரின் தரத்தைப் பரிசோதிக்கவும், நீர்ச் சுத்திகரிப்பு முறைகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை மதிப்பிடவும் 'கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள்' (Coliform bacteria), குறிப்பாக 'எஷெரிச்சியா கோலி' (Escherichia coli (E. Coli)) ஆகியவை பொதுவாகக் 'குறியீட்டு உயிரினங்களாக' (Indicator organisms) பயன்படுத்தப்படுகின்றன. இது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அமைகிறது:


1.  மலக் கழிவு கலப்பது என்பது பொதுச் சுகாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாகும்; ஏனெனில், மலத்தில் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருக்கக்கூடும்.


2. மனிதனின் குடலில் பெருமளவில் 'கோலிஃபார்ம்' பாக்டீரியாக்கள் (Coliform bacteria) வாழ்கின்றன. எனவே, மலக் கழிவு கலந்ததன் காரணமாக அந்தத் தண்ணீரில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தால், அங்கு பொதுவாக இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்களும் நிச்சயம் இருக்கும்.


3. நோயை உண்டாக்கும் கிருமிகள் (Pathogens), மனித உடலுக்கு வெளியே இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்களைவிட மிகக் குறைந்த காலமே உயிர்வாழும்.


4. பொதுவாக, மக்கள்தொகையில் பாதிக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நோயை உண்டாக்கும் கிருமிகளை மற்றவர்களுக்குப் பரப்புகிறார்கள்.


வழக்கமான நீரின் தரத்தைக் கண்காணிப்பதற்குப் குறியீட்டு உயிரினங்கள் பயனுள்ளதாக இருந்தாலும், இந்த முறை முற்றிலும் நம்பகமானது அல்ல. இரசாயனங்களைப் பயன்படுத்தி கோலிஃபார்ம் பாக்டீரியாக்களை (Coliform bacteria) அழிப்பதால் மட்டும், கியார்டியா (Giardia), கிரிப்டோஸ்போரிடியம் (Cryptosporidium) மற்றும் குடல் வைரஸ்கள் (Enteric viruses) போன்ற அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட பிற நோய் கிருமிகள் எப்போதும் முழுமையாக அழிந்துவிடுவதில்லை.


எனவே, நவீன குடிநீர் விதிமுறைகள் '4-log, 3-log, and 2-log’ விதிகள்' எனப்படும் மிகவும் கடுமையான சுத்திகரிப்புத் தரங்களை நிர்ணயித்துள்ளன. இந்த விதிகளின்படி, குடல் வைரஸ்கள் 99.99 விழுக்காடும், கியார்டியா கிருமிகள் 99.9 விழுக்காடும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும். மேலும், கிரிப்டோஸ்போரிடியம் கிருமிகள் 99 விழுக்காடு முழுமையாக அகற்றப்படவோ அல்லது செயலிழக்கச் செய்யப்படவோ வேண்டும்.


மேலும், நீரில் கலந்துள்ள மலம் சார்ந்த மாசுகள் மனிதர்களிடம் இருந்து வந்ததா அல்லது விலங்குகளிடம் இருந்து வந்ததா என்பதை அடையாளம் காண வேண்டியிருக்கும்போது, 'மலம் சார்ந்த கோலிஃபார்ம்கள்' மற்றும் 'மலம் சார்ந்த ஸ்ட்ரெப்டோகாக்கி' ஆகியவற்றின் விகிதம் மற்றொரு குறியீட்டு உயிரினமாகப் பயன்படுத்தப்படுகிறது.


கண்டறிதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு


தண்ணீரில் உள்ள கோலிஃபார்ம் பாக்டீரியாக்களை (Coliform bacteria) பொதுவாக மூன்று படிகள் கொண்ட ஒரு முறையைப் பயன்படுத்தி அடையாளம் காண்கிறார்கள். இந்த முறை அமெரிக்கப் பொதுச் சுகாதார சங்கத்தின் (American Public Health Association (APHA)) 'Standard Methods for the Examination of Water and Wastewater' என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறை மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது:


1. ஊகச் சோதனை (Presumptive test): இது தண்ணீரில் பாக்டீரியாக்கள் இருக்கிறதா என்று ஊகிப்பதற்கான முதல் சோதனை ஆகும். இதில் 'லாக்டோஸ் நொதித்தல்' நிகழும்போது அமிலம் மற்றும் வாயு உருவாகிறதா என்று சரிபார்க்கப்படுகிறது.

2. உறுதிப்படுத்தும் சோதனை (Confirmed test): இது 'brilliant green lactose bile broth' (ஒரு வகையான திரவ ஊடகம்) அல்லது 'eosin methylene blue agar' (ஒரு வகையான திண்ம ஊடகம்) ஆகியவற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் வளர்வதையும், அவை வாயுவை உற்பத்தி செய்வதையும் வைத்து, தண்ணீரில் அந்தப் பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்கிறது.


3. முழுமையடைந்த சோதனை (Completed test): இது, பாக்டீரியாக்கள் வாயுவை உற்பத்தி செய்துள்ளதா என்பதைப் பார்ப்பதன் மூலமும் மற்றும் ‘கிராம் சாயமேற்றல் முறை (Gram staining)’ (பாக்டீரியாவை நுண்ணோக்கியில் பார்க்கப் பயன்படும் ஒரு சாய முறை) சோதனை மூலமும் முந்தைய சோதனையின் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.


நீரில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நீர் தொற்றுநீக்க முறைகள் மூலம் சுத்திகரிக்கப்பட வேண்டும். கழிவுநீரானது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.


முதல்நிலை சுத்திகரிப்பு (Primary treatment) என்பது நீரில் உள்ள பெரிய துகள்களை அகற்றுவதற்காக வடிகட்டுதல் (Screening) முறையுடன் தொடங்குகிறது. அதன் பிறகு, நீர் வேகமாகக் கலக்கப்பட்டு, உறைவிப்பு (Coagulation) மற்றும் மின்னூட்டத் திரட்சி (Flocculation) செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இது நீரில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டி, பெரிய கட்டிகளாக மாற உதவுகிறது.


 மின்னூட்டத் திரட்சி (Flocculation) என்பது ஒரு மென்மையான கலவை செயல்முறையாகும். இது நீரில் மிதக்கும் சிறிய துகள்களை ஒன்றிணைத்து 'Flocs' எனப்படும் பெரிய துகள்களாக மாற்றுகிறது. இந்தத் துகள்கள் அனைத்தும் படிவடிதல் (Sedimentation) முறை மூலம் கீழே சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இவ்வாறு தெளிவாக்கப்பட்ட நீர், இறுதி தொற்றுநீக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு வேக மணல் வடிகட்டிகள் (Rapid sand filters) மூலம் செலுத்தப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.


நகராட்சி கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கு, செயல்படுத்தப்பட்ட சேறு செயல்முறை (Activated sludge process) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், கழிவுநீருக்குள் காற்றைச் செலுத்தும் காற்றோட்ட (Aeration) நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது நீரில் உள்ள நுண்ணுயிரிகள் கரிமக் கழிவுகளை உட்கொண்டு, அவற்றை உயிர்த்திரளாக (Biomass) மாற்ற உதவுகிறது. பின்னர், இந்த உயிர்த்திரள் படிவடித்தல் (Sedimentation) மற்றும் வடிகட்டுதல் (Filtration) ஆகிய முறைகள் மூலம் நீரிலிருந்து பிரித்தெடுத்து அகற்றப்படுகிறது.


தண்ணீர் சுத்திகரிப்பு முறை: வழிமுறைகளும் சவால்களும் 


தண்ணீரைச் சுத்திகரிப்பதில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறை 'குளோரினேற்ற' (Chlorination) ஆகும். இந்த முறையில் குளோரின் வாயு அல்லது சோடியம்/கால்சியம் ஹைப்போகுளோரைட் தண்ணீரில் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருட்கள் தண்ணீரில் வினைபுரிந்து 'ஹைப்போகுளோரஸ் அமிலத்தை' (HOCl) உருவாக்குகின்றன. இதுதான் தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கும் முக்கியப் பொருளாகும். குளோரின் வாயுவும், ஹைப்போகுளோரைட் அயனிகளும்கூட கிருமிகளை அழிக்க உதவுகின்றன, ஆனால் அவற்றின் பங்கு குறைவுதான்.


ஆரம்பக்கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகும், தண்ணீரில் சிறிய அளவில் குளோரின் மீதமிருக்கும். இந்த மீதமுள்ள குளோரின் தண்ணீரில் மீண்டும் கிருமிகள் வளர்வதைத் தொடர்ந்து தடுக்கிறது. சில நேரங்களில், தண்ணீரில் 'குளோராமைன்களை' (Chloramines) உருவாக்குவதற்காக அம்மோனியா சேர்க்கப்படுகிறது. இவை தண்ணீரில் நீண்டநேரம் நீடித்திருக்கும், ஆனால் கிருமிகளை அழிப்பதில் குளோரினைவிட சற்றே வீரியம் குறைந்தவை ஆகும்.


இந்த குளோரினேற்ற முறையின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், இது ட்ரைஹாலோமீதேன்கள் (Trihalomethanes), குளோரோஃபார்ம் (Chloroform) மற்றும் ஹாலோஅசிட்டிக் அமிலங்கள் போன்ற சுத்திகரிப்பு பக்கவிளைவுப் பொருட்களை (Disinfection by-products (DBPs)) உருவாக்குகிறது. இவை மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், தண்ணீரில் குளோரின் அளவு ஒரு லிட்டருக்கு 0.5 மில்லிகிராமுக்கும் குறைவாக இருந்தால், அது என்டெரோவைரஸ் (Enteroviruses) போன்ற சில வகை வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படாது. இதற்கு மாற்றாக 'குளோரின் டைஆக்சைடைப்' (Chlorine dioxide) பயன்படுத்தலாம்.  இது வைரஸ்களை அழிப்பதில் திறம்பட செயல்படும், ஆனால் செலவு அதிகம். அதோடு, இது 'குளோரைட்டுகளை' உருவாக்குகிறது; குடிநீரில் இதன் பாதுகாப்பான அளவு ஒரு லிட்டருக்கு 1 மில்லிகிராம் மட்டுமே இருக்க வேண்டும்.


குளோரினைவிட ஓசோன் வாயுவானது தண்ணீரில் உள்ள நுண்கிருமிகளையும் வைரஸ்களையும் அழிப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும், இது தண்ணீரில் எந்தவொரு விரும்பத்தகாத வாசனையையோ அல்லது சுவையையோ ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், ஓசோனைப் பயன்படுத்தும்போது அது புரோமேட் (Bromate) என்ற வேதிப்பொருளை உருவாக்கக்கூடும்; தண்ணீரில் இதன் பாதுகாப்பான அளவு ஒரு லிட்டருக்கு வெறும் 0.01 மில்லிகிராம் (0.01 mg/L) மட்டுமே இருக்க வேண்டும். மற்றொரு குறைபாடு என்னவென்றால், ஓசோன் தண்ணீரில் இருந்து மிக விரைவாக ஆவியாகிவிடும். எனவே, குளோரினைப் போல சுத்திகரிப்புக்குப் பிறகும் தண்ணீரில் நீடித்து நின்று தொடர்ந்து கிருமிகள் வராமல் பாதுகாக்கும் திறன் ஓசோனுக்கு இல்லை.


நுண்ணுயிரிகள் எதிர்த்துப் போராடும்போது


இந்தத் தகவமைப்புத் திறன்களைப் பற்றி விரிவாக ஆராய்வதற்காக, சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று செல் உள் மற்றும் செல் வெளி (Intracellular and extracellular) ஆகிய இருநிலைகளிலும் மெட்டோஜெனோம்ஸ் (Metagenomes) மற்றும் மெட்டோட்ரான்ஸ்கிரிப்டோம்ஸ் (Metatranscriptomes) ஆகியவற்றை ஆய்வு செய்தது. இந்தத் தொழில்நுட்ப நுட்பங்கள் எதைக் குறிக்கின்றன? இந்த ஆய்வின் மூலம் என்னென்ன புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டன, மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் நீண்டகாலத் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமா போன்ற கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி உங்களுக்கு வழங்கும்.


Original article : Water scarcity: Is wastewater treatment a sustainable solution? -Arunangshu Das

Share:

இந்தியாவில் நேரடிப் பண உதவித் திட்டங்கள்: பாதுகாப்பு வலை மற்றும் சமரசம்

 இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்கள் இத்தகைய திட்டங்களுக்கும் இலவச மின்சாரம் போன்ற மக்கள் ஆதரவை ஈர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அதிக நிதியை ஒதுக்குவதால், பிற துறைகளில் செலவிடும் திறன் பாதிக்கப்படுவதாகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்திட்டங்களால் முதலீடுகளைத் முடக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.


சமீபத்திய ஆண்டுகளில், பல மாநிலங்கள் பெண்களுக்காகப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' (Ladli Behna Yojana), ஜார்க்கண்டில் 'மையா சம்மான் யோஜனா' (Maiya Samman Yojana) மற்றும் தமிழ்நாட்டில் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டங்களின்கீழ், பெண்களுக்கு வழக்கமாக மாதம் ₹1,000 முதல் ₹2,500 வரை வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது. ‘PRS Legislative Research’ அறிக்கையின்படி, 12 மாநிலங்கள் இணைந்து 2025-26-ஆம் நிதியாண்டில் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக ₹1.68 லட்சம் கோடி செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, இதே நிதியாண்டில் ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ₹86,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.


நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள் (Unconditional cash transfers) பெண்களின் நலம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளன. அதேநேரத்தில், அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு தேர்தல் உத்தியாகவும் உருவெடுத்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள "இந்தியாவில் பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப்பரிமாற்றத் திட்டங்கள்" (EAC-PM Working Paper Series) என்ற சமீபத்திய ஆய்வு, இந்தத் திட்டங்களால் கிடைக்கும் நன்மைகளை உறுதிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களை ஆய்வு செய்ததில், இவை பயனாளிகளின் அன்றாடப் பொருட்களின் நுகர்வு மற்றும் சேமிப்பை அதிகரித்துள்ளதோடு, ஒட்டுமொத்த குடும்ப நலனையும் மேம்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இத்திட்டங்களால் குடும்பங்கள் தங்களின் மருத்துவம், கல்வி மற்றும் சிறந்த வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக அதிக அளவில் செலவிடுகின்றனர். இந்தச் சாதகமான முடிவுகள் காரணமாகவே, இத்தகைய திட்டங்கள் தற்போது மாநிலங்களில் மிகவும் பரவலாகி வருகின்றன.


கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசுகள் பணப்பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான பணத்தைச் செலவிடுவதால், மற்ற முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்படும்  நிதியின் அளவு குறைந்து வருகிறதோ என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய திட்டங்கள் நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதால், அவை புதிய முதலீடுகளைக் குறைத்துவிடக்கூடும் என்று ரிசர்வ் வங்கியும் எச்சரித்துள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலை குறித்த கவலைகள் அதிகரித்துவரும் இதே காலகட்டத்தில்தான், பணப்பரிமாற்றத் திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. ஆக்சிஸ் வங்கியின் (Axis Bank) அறிக்கை ஒன்றின்படி, மாநிலங்கள் பிற துறைகளுக்கான செலவினங்களை இதற்காக மாற்றுவதோடு, தங்களின் நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்துக் கொள்கின்றன. மாநிலங்களின் ஒட்டுமொத்தக் கடன் அளவு, 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 31 விழுக்காட்டில் இருந்து 2026-ஆம் ஆண்டில் (நிதிநிலைத் திட்ட மதிப்பீடுகளின்படி) 29.2 விழுக்காடாகக் குறைந்திருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள கடனின் அளவு பெரும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தின் கடன் அதன் ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) 46.4 விழுக்காடாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்கம் 38.9 விழுக்காடாகவும், பீகார் 36.8 விழுக்காடாகவும் உள்ளன. அதிகப்படியான கடன், அரசு உத்தரவாதங்களால் எழும் தற்காலிகப் பொறுப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் பணப்பரிமாற்றத் திட்டங்கள் ஆகியவை மாநிலங்களின் நிதிநிலைக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எச்சரித்துள்ளது. இந்தக் கவலைகளுக்கு மிக நெருக்கமான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.


Original article : Cash transfers in India: The safety net and the trade-off.

Share:

தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் (VDPV) ஏன் கவனம் பெற்றுள்ளது - குஷ்பூ குமாரி

 காசியாபாத்தில் உள்ள கழிவுநீர் மாதிரி ஒன்றில் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் (vaccine-derived polio virus (VDPV)) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ் என்றால் என்ன? இது இந்தியாவின் போலியோ- இல்லாத நிலையைப் பாதிக்குமா?



தற்போதைய செய்தி :


காசியாபாத்தில் கழிவுநீர் மாதிரியில் தடுப்பூசி வழி போலியோ வைரஸ் (VDPV) கண்டறியப்பட்டு ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில், ஜூன் 11-ஆம் தேதி அதிகாரிகள், 12 பகுதிகளில் உள்ள 30,000 வீடுகளை உள்ளடக்கிய விரிவான வீடு வீடாகச் சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஐந்து வயதுக்குட்பட்ட 2,590 குழந்தைகளைக் கொண்ட 5,421 வீடுகளை ஆய்வு செய்தனர்.


முக்கிய அம்சங்கள்:


பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசித் திட்டங்களுக்குப் பிறகு, 2014-ஆம் ஆண்டில் இந்தியா காட்டுப் போலியோ வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் போலியோ வைரஸ் இல்லாத நாடு எனச் சான்றளிக்கப்பட்ட 11 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இருந்த போதிலும், ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பாக, கழிவுநீரில் வைரஸின் தடயங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


2. காசியாபாத்தில் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கழிவுநீர் வலையமைப்பை ஆய்வு செய்து, 150,000 மக்கள் வசிக்கும் 12 பகுதிகளை அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் கண்டு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (National Centre for Disease Control (NCDC)) மற்றும் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) ஆகியவற்றின் மேற்பார்வையின்கீழ் தடுப்பூசிக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தினர்.


3. கண்டறியப்பட்ட இந்தத் தொற்று வகை பெரும்பாலும் வீரியம் அற்றது என்றும், இதுவரை தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வாரணாசி மற்றும் மேகாலயாவில் இதற்கு முன்னர் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரி ஒருவர் கூறினார்.


4. உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) போலியோ அல்லது போலியோமைலிடிஸ் நோயை, "முக்கியமாக சிறு குழந்தைகளைப் பாதிக்கும், மிக எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோய்" என்று குறிபிடுகிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இது முக்கியமாக மலம் கலந்த நீர் அல்லது உணவு மூலமாகவும் (faecal-oral route) அல்லது அரிதாக அசுத்தமான நீர் அல்லது உணவு போன்ற பொதுவான இடங்கள் மூலமாகவும் பரவுகிறது. குடலில் அதிகரிக்கும் இந்த வைரஸ், அங்கிருந்து நரம்பு மண்டலத்தைப் பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

5. போலியோவின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி, கழுத்தில் விறைப்பு மற்றும் கை கால்களில் வலி போன்றவை அடங்கும்.  சில நேர்வுகளில், இந்நோய் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நிரந்தரமானது. போலியோவை குணப்படுத்தும் சிகிச்சை ஏதுமில்லை; தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.


6. இயற்கையான போலியோ வைரஸில் மூன்று வகைகள் உள்ளன. வகை 2 வைரஸ் செப்டம்பர் 2015-ல் ஒழிக்கப்பட்டது. வகை 3 வைரஸ் நவம்பர் 2012-க்குப் பிறகு கண்டறியப்படவில்லை என்பதோடு, அது அக்டோபர் 24, 2019 அன்று ஒழிக்கப்பட்டதாகச் சான்றளிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டின் நிலவரப்படி, வகை 1 இயற்கையான போலியோ வைரஸ் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே தொடர்ந்து  இருந்து வருகிறது.


தடுப்பூசியால் ஏற்படும் போலியோ தொற்று என்றால் என்ன?


தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் (vaccine-derived poliovirus) என்பது வாய்வழி போலியோ தடுப்பூசியில் (OPV) உள்ள வீரியம் குறைக்கப்பட்ட போலியோ வைரஸுடன் தொடர்புடைய ஒரு வகையாகும். 'போலியோ சொட்டு மருந்துகள்' பொதுவாகப் பாதுகாப்பானவை. இவை பெரும்பாலான நாடுகளில் நோய்த்தொற்றை வெற்றிகரமாக ஒழிக்க உதவியுள்ளன. ஆனால், அரிதான சூழல்களில், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் இவை நோயை ஏற்படுத்தக்கூடும்.


2. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, போலியோ பரவலைத் தடுக்க 'உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சி' (Global Polio Eradication Initiative) இரண்டு வகையான தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது: செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ தடுப்பூசி (inactivated polio vaccine (IPV)) மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து (oral polio vaccine (OPV)). 1955-ல் டாக்டர் ஜோனாஸ் சால்க் உருவாக்கிய செயலற்ற போலியோ தடுப்பூசி, வாய்வழி போலியோ தடுப்பூசியைப் போல் இல்லாமல், மூன்று வகையான போலியோ வைரஸ்களின் செயலற்ற வைரஸ் வகைகளைக் கொண்டுள்ளது. இதில் தடுப்பூசியால் உருவாகும் போலியோ வைரஸ் தொடர்பான ஆபத்து ஏதுமில்லை.


3. வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் (Christian Medical College Vellore (CMC)) முன்னாள் நச்சுயிரியல் (virology) துறை பேராசிரியரான டாக்டர் டி. ஜேக்கப் ஜான், வாய்வழி போலியோ தடுப்பு மருந்தால் இரண்டு வழிகளில் தடுப்பூசி தொடர்பான நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று கூறினார்.


(i) சில சூழல்களில், வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் ஒரு குழந்தையிடமிருந்து மற்றொரு குழந்தைக்குப் பரவிக்கொண்டே இருக்கலாம். அப்போது, அது வேகமாகப் பரவும் திறனை மீண்டும் பெற்று, பரவும் ஒவ்வொரு முறையும் கடுமையான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.


(ii) தடுப்பூசியில் உள்ள வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் நாள்பட்ட நோய்த்தொற்றையும் ஏற்படுத்தக்கூடும். இது அவர்களின் குடல்பகுதியில் பல ஆண்டுகளாகப் அதிகரித்து, மெதுவாகக் கடுமையான நோயை உண்டாக்கும் திறனைப் பெறக்கூடும்.


4. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் (vaccine-derived polio virus (VDPV)) மிகவும் அரிதானவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களிடையே காணப்பபடுவதோடு, மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு  சக்தி குறைவாக உள்ள பகுதிகளிலும் தடுப்பூசி மூலம் உருவான போலியோ வைரஸ்கள் உருவாகலாம்.


இந்தியா போலியோவை எவ்வாறு ஒழித்தது?


5. அக்டோபர் 24-ஆம் தேதி உலக போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1950-ஆம் ஆண்டுகளில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் என்பவரின் பிறந்தநாளை நினைவுப்படுத்தும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் இந்த தினம் உருவாக்கப்பட்டது. போலியோவுக்கு முழுமையான சிகிச்சை இல்லை. தடுப்பூசி மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.


6. அனைவருக்குமான போலியோ ஒழிப்பு முயற்சியின்படி, 2009-ஆம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இதுவே உலகில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். ஜனவரி 2011--ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இந்தியாவின் கடைசி போலியோ பாதிப்பு பதிவானது. இந்த மாற்றம் இந்தியாவின் சுகாதார அமைப்பில் ஒரு வெற்றிக் கதையாக அமைந்தது.


7. போலியோவுக்கு எதிரான தடுப்பூசித் திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கி, 1985-ல் நாடு முழுவதும் அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டம் (Universal Immunisation Programme (UIP)) என்று விரிவுபடுத்தப்பட்டது. போலியோவுக்காக, நாடு முழுவதற்கும் ஒரே நோய்த்தடுப்பு நாள் நிர்ணயிக்கப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. போலியோ சொட்டு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய்வழியாகக் கொடுக்க முடிந்தது ஒரு நன்மையாக இருந்தது.   இதனால் சிறப்புப் பயிற்சி இல்லாமலேயே உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களால் அவற்றை வழங்க முடிந்தது.


8. 1995-ஆம் ஆண்டு, இந்தியா பல்ஸ் போலியோ (Pulse Polio) தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது. இதற்கு முன்பு, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதாரச் சபை (World Health Assembly), 2000-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் போலியோவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் துணை-தேசிய தடுப்பூசிச் செலுத்தும் போது (குறிப்பாக அதிக ஆபத்து உள்ள பகுதிகளில்) வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.


9. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அறிக்கையின்படி, தொலைக்காட்சி தொடர்களின் (soap operas) செல்வாக்கைப் பயன்படுத்தி, போலியோ மற்றும் பிற சுகாதார விழிப்புணர்வு செய்திகள் அவற்றின் கதைக்களங்களிலும் அத்தியாயங்களிலும் இயல்பாக இணைக்கப்பட்டன.


10. உலக சுகாதார அமைப்பின் (WHO) இணையதளத்தின்படி, வழக்கமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர, இந்தியா கடுமையான தளர்வாதக் கண்காணிப்பையும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது. இந்தச் சுற்றுச்சூழல் கண்காணிப்பில், மலத்தில் உள்ள போலியோ வைரஸைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து கழிவுநீர் மாதிரிகள் தவறாமல் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுகின்றன.


கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (Wastewater and Environment Surveillance (WES) )


1. கழிவுநீர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு (WES) என்பது, ஒரு தொகைக்குள் நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்காக, ஒழுங்கமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்பு அல்லது ஒழுங்கமைக்கப்படாத வடிகால்கள் மற்றும் ஓடைகள் வழியாகச் சேகரிக்கப்படும் சமூகக் கழிவுநீரைப் பகுப்பாய்வு செய்யும் ஒரு முறையாகும். இந்திய சுகாதார நிதியத்தின்படி, இந்தியாவில் கழிவுநீர் மூலம் நோய் கண்காணிப்பு, 2001-ஆம் ஆண்டில் போலியோவுக்காக மும்பையில் தொடங்கப்பட்டது.

2. கோவிட்-19-ஐக் கண்காணிப்பதில் கழிவுநீர் கண்காணிப்பு (Wastewater surveillance) ஒரு பயனுள்ள கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, நோயாளிகளுக்கு மருத்துவரீதியாக நோய் கண்டறியப்படுவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாகவே, கழிவுநீரில் அந்த நோய்க்கிருமி கண்டறியப்பட்டது.


3. கழிவுநீர் கண்காணிப்பின் முக்கிய நன்மை, அது மருத்துவப் பரிசோதனையைச் சார்ந்திருப்பதில்லை. மருத்துவப் பரிசோதனை பரவலாக மேற்கொள்ளபடாதபோது அல்லது சில நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாலோ அல்லது அறிகுறிகளே இல்லாததாலோ அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. புதிதாக உருவாகும் தொற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிக முக்கியமானது. ஏனெனில், மனிதர்களிடையே நோயின் பரவல் குறைவாக இருக்கும்போதே அதை திறமையாக கட்டுப்படுத்த முடியும்.


Original article : Why is vaccine-derived poliovirus (VDPV) in news? -Khushboo Kumari

Share:

பதவி விலகுவதன் மூலம் நீதிபதிகள் பதவிநீக்க நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா? நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு குறித்த விளக்கம். -வினீத் பல்லா

 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை (Public Accountability) உறுதிசெய்வதில்  முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறிவருகின்றனர்.


அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தாக்கல் செய்ய எடுத்த முடிவு, இந்தியாவின் நீதித்துறை பொறுப்புணர்வு கட்டமைப்பை இதுவரை செல்லாத புதியதொரு காலத்திற்கு கொண்டு செல்லும்.


ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், ஒரு நீதிபதியின் ராஜினாமா தானாகவே ஒரு நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நீண்டகால அனுமானத்திற்கு சவால்விடும் வகையில், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


நீதிபதி வர்மாவுக்கு எதிரான வழக்கு என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க (Impeachment) நடவடிக்கைகள், கடந்த ஆண்டு அவரது புதுடெல்லி இல்லத்தில், தீயில் கருகிய மற்றும் சிறிதளவில் சேதமடைந்த ரொக்கப் பணக் கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள் விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில், நீதிபதி வர்மாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புடையவர் என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, 146-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக, நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-ன் (Judges (Inquiry) Act) கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவர் உருவாக்கினார். குழு தனது விசாரணைகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, நீதிபதி வர்மா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை  வழங்கினார்.


ஒரு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 217-வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். உச்ச நீதிமன்றம் 1978-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதியின் ராஜினாமா என்பது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தீர்ப்பளித்தது. நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நாள் முதலே அது நடைமுறைக்கு வந்துவிடும். அதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கியது.


முந்தைய பதவிநீக்க விசாரணைகள் ஏன் தோல்வியடைந்தன?


இந்தியாவில் இதுவரை எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை.


2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. டி. தினகரன் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. நீதிபதி தினகரனுக்கு எதிரான விசாரணையை விசாரணைக் குழு நடத்திக்கொண்டிருந்தபோது அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவைச் செயலகம் விசாரணையின் நோக்கம் நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதே என்பதால், அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த நடைமுறையைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கருதியது. எனவே, அந்த விசாரணை நடைமுறையும், விசாரணைக் குழுவின் பணியும் பயனற்றதாக (infructuous) மாறிவிட்டது என்று மாநிலங்களவைச் செயலகம் விளக்கியது.


நீதிபதி சென் ராஜினாமா செய்தபோதும் இது போன்ற ஒரு நடைமுறையே பின்பற்றப்பட்டது. அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பே மாநிலங்களவை அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தபோதிலும், மக்களவை அந்தப் பதவி நீக்க வாக்கெடுப்பைக் கைவிட்டது.


இருப்பினும், ஒருவர் பதவி விலகினால் விசாரணை முடிவுக்கு வர வேண்டும் என்று சட்டம் வெளிப்படையாகக் கூறவில்லை என சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பொதுச் சட்டம் மற்றும் ஆளுகைத் துறைத் தலைவர் பேராசிரியரான சுபங்கர் டாம், முறைகேடு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு நீதிபதி பதவி விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை 1978-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.


நீதிபதிகள் தினகரன் மற்றும் சென் ஆகியோர் ஏற்படுத்திய முன்னுதாரணத்திற்குப் பிறகு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகலிருந்து தப்பிக்கவும், ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை  தொடர்ந்து பெறவும், ராஜினாமா செய்வதே மிகவும் எளிதான வழியாக மாறிவிட்டது என்று டாம் கூறினார். மேலும், விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், அது ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவாகவும், பொதுமக்கள் பார்வைக்கான பதிவாகவும் அந்த அறிக்கை அமையும். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான மீதான நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தகவல்களாலும், உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணை அறிக்கை ஊடகங்களில் கசிந்ததாலும், இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.






நீதிபதி தினகரன் மீதான நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதேனும் உள்எதிர்ப்பு இருந்ததா?


 2011ஆம் ஆண்டு, Justice P. D. Dinakaran மீதான பதவிநீக்க  நடவடிக்கையின்போது, அவரை விசாரித்த குழுவின் உறுப்பினராக இருந்த சட்ட அறிஞர் ஜி. மோகன் கோபால், நீதிபதி தினகரன் ராஜினாமா செய்த மூன்று வாரங்களுக்குள், விசாரணையை நிறுத்தாமல் தொடர்ந்து முடிக்க வேண்டும் என்று தன்னுடன் பணியற்றிய  குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


கடிதத்தில், கோபால் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்கீழ் நடைமுறையின் இரண்டு பகுதிகளுக்கு இடையே ஒரு வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார்: முறைகேட்டின் “விசாரணை மற்றும் நிரூபணம்” (investigation and proof) மற்றும் நாடாளுமன்றத்தால் செய்யப்படும் உண்மையான “பதவி நீக்கம்” (removal from office). குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே இறுதி இலக்கு என்று அவர் வாதிட்டார்.


ஜி.மோகன் கோபால் தனது கடிதத்தில், தவறான நடத்தைக்கான இந்தக் குறைந்தபட்ச பொறுப்புணர்வை (accountability) நடைமுறைக்குக் கொண்டுவரும் சூழலிலும், நீதிபதிகள் ராஜினாமா செய்வதன் மூலம் நடைமுறையில்  தடுக்கக்கூடிய (‘veto’) அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கக் கூடும் என்று குறிப்பிட்டார்.


இறுதியில், நீதிபதி தினகரன் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணம், விசாரணைக் குழுவில் ஏற்பட்ட காலி இடத்தால் அது செயலிழந்ததும், மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி, நீதிபதி தினகரன் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், அவரை பதவியிலிருந்து நீக்குவதே விசாரணையின் முக்கிய நோக்கம் என்பதால், அந்த நோக்கம் இனி பயனற்றதாக (moot) மாறிவிட்டது என்று கருதினார்.





தற்போது அறிக்கையைத் தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான அறிக்கையைத் தாக்கல் செய்வது இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும்.


முதலாவதாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டால், அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வரும். வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அலோக் பிரசன்ன குமார், நீதிபதி தினகரன் வழக்கில் உருவான தவறான முன்னுதாரணத்தை மக்களவைத் தலைவர் மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று கூறினார். ஏனெனில், அந்த முன்னுதாரணம் விசாரணை முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தால், ஒரு நீதிபதி தனது செயல்கள் குறித்த ஆய்வில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான செய்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


இது வெறும் பதவி நீக்கும் நடைமுறை மட்டுமல்ல; நீதிபதி தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டரா என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு பொறுப்புக்கூறல் (accountability) நடைமுறையும் ஆகும். இந்த விசாரணை அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. எனவே, அமைக்கக் குழு என்ன கண்டறிந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.


இரண்டாவதாக, இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் முக்கிய சட்ட மற்றும் நிதி விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு நீதிபதி ராஜினாமா செய்யும்போது, ​​தனது பணியிலிருந்து சாதாரணமாக ஓய்வு பெறுபவரைப் போன்ற அதே ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர் ஆவார்.


டாம் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்: இது சட்டரீதியான அல்லது கல்வி தொடர்பான விவாதம் மட்டுமல்ல. ஒரு நீதிபதி ஓய்வுக்குப் பிறகு பெறும் சலுகைகளுக்கு பொதுமக்களின் வரிப்பணமே செலவிடப்படுகிறது. இரண்டு விசாரணை ஆணையங்களால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நீதிபதி, ராஜினாமா செய்தப் பிறகு ஓய்வுக்காலச் சலுகைகளைப் பெறுவது ஏன்?


குழுவின் அறிக்கை குற்றச்சாட்டுகளை உறுதி செய்தால், கோட்பாட்டளவில் நீதிபதியின் பதவி நீக்கத்தை, அந்தப்பதவி நீக்க நடைமுறை தொடங்கிய தேதியிலிருந்தே அமல்படுத்த முடியும் என்று குமார் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் மேற்கொள்ளும் முறையான பதவி நீக்க நடவடிக்கை, அந்த நீதிபதியின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுக்காலச் சலுகைகளை நிறுத்துவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான சூழலையும் உருவாக்கக்கூடும்.


Original article : Can judges avoid impeachment by resigning? The Justice Yashwant Varma case explained. -Vineet Bhalla

Share:

அக்னிபாத் திட்டத்தின் (Agnipath scheme) சிறப்பம்சங்கள் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிலவரம் : முப்படைகளிலும் (இராணுவம், கடற்படை, விமானப்படை) அக்னிவீரர்களைத் தொடர்ந்து பணியில் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதம் தற்போது 25 சதவீதமாக உள்ளது. இருப்பினும், நான்கு ஆண்டு பணிக்காலத்தை முடித்த பிறகு பணியில் தக்கவைக்கப்படும் அக்னிவீரர்களின் (Agniveers) சதவீதத்தை அதிகரிக்க முப்படைகளும் விரும்புகின்றன.


முக்கிய அம்சங்கள் :


அக்னிபாத் திட்டத்தின் (Agnipath scheme) கீழ் பணியமர்த்தப்பட்ட அக்னிவீரர்கள் 2023-ன் தொடக்கத்தில் தங்கள் பயிற்சியைத் தொடங்கினர். அக்னிவீரர்களின் முதல் தொகுதியினர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தங்கள் நான்கு ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்வார்கள்.


அவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். பின்னர், தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்கள் மீண்டும் வழக்கமான வீரர்களாகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.


இத்திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்த கடற்படைகளைத் (Navy) தக்கவைக்கும் விகிதத்தை சுமார் 75 சதவீதமாக உயர்த்த கடற்படை கோரக்கூடும் என்றும், அதேவேளையில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து சுமார் 50 சதவீதமாக உயர்த்தக் கோரக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.


தக்கவைப்பு விகிதம் (retention rate) தற்போது 25 சதவீதமாகவே உள்ளது என்ற நிலைப்பாட்டையே பாதுகாப்புப் படைகள் இதுவரை கொண்டுள்ளன.


கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படுவதால், அவர்களைத் தக்கவைப்பதற்கான அவசியம் உணரப்பட்டுள்ளது. சாத்தியமான வழிமுறைகளை ஆராய்வதற்காக இது குறித்து முப்படைகளுக்கும் இராணுவ விவகாரங்கள் துறைக்கும் (Department of Military Affairs (DMA)) இடையே மேலும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தகவல்களின்படி, அக்னிவீரர்களைத் தக்கவைக்கும் சதவீதத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்படாவிட்டாலும், சில சிறப்புப் பிரிவுகள் அதிக அனுபவம் வாய்ந்த, தக்கவைக்கப்பட்ட அக்னிவீரர்களிலிருந்து அதிக சதவீத வீரர்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடும். அதே வேளையில், வேறு சில பிரிவுகள், தங்கள் நான்கு ஆண்டு பணிக்காலத்தை இன்னும் நிறைவு செய்துகொண்டிருக்கும் அக்னிவீர்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.


உதாரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவத்தின் 'பைரவ்' (Bhairav) படைப்பிரிவுகளில், வழக்கமான காலாட்படைப் பிரிவுகளைக் காட்டிலும், பணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் சதவீதம் அதிகமாக இருக்கலாம். வழக்கமான காலாட்படைப் பிரிவுகளில் நான்கு ஆண்டு பணிக்காலத்தை மேற்கொண்டுவரும் அக்னி வீரர்களின் சதவீதம் அதிகமாக இருக்கக்கூடும். 


உங்களுக்குத் தெரியுமா?


இராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)) ஆகியவற்றில் ஆறு மாதப் பயிற்சி உட்பட நான்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பதற்காக 'அக்னிபாத்' திட்டம் (Agnipath scheme) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, தகுதி மற்றும் நிறுவனத்தின் தேவைகளின் அடிப்படையில், பணியில் சேர்ந்தவர்களில் 25% பேர் வரை நிரந்தரப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.


கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வீரர்களைச் சேர்க்கும் பணியை முப்படைகளும் தொடங்கியபோது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது, ​​மருத்துவப் பிரிவின் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தவிர, மற்ற அனைத்து கடற்படைகள், விமானப்படை வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் ஆகிய அனைவரும் இத்திட்டத்தின் மூலமே பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.


இத்திட்டம் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் 'அக்னிவீரர்களாக' பெண்களைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. முன்னதாக, 2019-ம் ஆண்டில் இராணுவம் தனது 'இராணுவக் காவல் படையில்' (Corps of Military Police) பெண் வீரர்களைச் சேர்க்கும் பணியைத் தொடங்கியிருந்தது.


பணியில் உள்ள வீரர்களின் சராசரி வயதைக் குறைப்பதன் மூலம் ஆயுதப் படைகளுக்கு ஒரு "இளம் வயதுடைய கட்டமைப்பை" (youthful profile) உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அரசு கூறியிருந்தது.


இத்திட்டம் ஆயுதப் படைகளை "தொழில்நுட்ப அறிவுமிக்க மற்றும் நவீன போர் சக்தியாக" மாற்ற உதவும் என்றும், நான்கு ஆண்டு கால சேவைக்குப் பிறகு அவர்கள் பணி ஓய்வு பெறும்போது, ​​சிவில் சமூகத்தில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஒழுக்கமான மற்றும் திறமையான இளைஞர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அது தெரிவித்தது.


இருப்பினும், இந்திய அரசின் அதிகரித்துவரும் பாதுகாப்புத் துறை ஓய்வூதியச் செலவுகள் இத்திட்டத்தைக் கொண்டுவருவதில் ஒரு முக்கியக் காரணியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இத்திட்டம் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை ஓய்வூதியச் செலவைக் குறைக்கும்.


அக்னிவீரர்களின் ஊதியம் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். மேலும், அவர்கள் ஆபத்து மற்றும் கடினமான பணிச் சூழலுக்கான படிகளைப் (risk and hardship allowances) பெறவும் தகுதியுடையவர்கள்.


இத்திட்டத்தில் 'சேவா நிதி' (Seva Nidhi) என்ற பங்களிப்புத் திட்டமும் உள்ளது. இதன்கீழ், அக்னிவீரர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 30 சதவீதத்தை பங்களிப்பார்கள். அரசும் அதற்கு இணையான தொகையைப் பங்களிக்கும். நான்கு ஆண்டுகள் முடிந்ததும், அவர்கள் இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 11.71 லட்சத்தை (வட்டியுடன்) பெறுவார்கள். இத்தொகைக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.


பணியின்போது உயிரிழப்பு நேரிட்டால், 'சேவா நிதி'த் தொகை மற்றும் அவர்களால் பணியாற்ற முடியாத காலத்திற்கான முழு ஊதியம் உட்பட ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை அவர்கள் பெறுவார்கள்.


ஊனமோ அல்லது உடல் குறைபாடோ ஏற்படும் பட்சத்தில், ராணுவ சேவையால் ஏற்பட்ட அல்லது தீவிரமடைந்த பாதிப்பின் அளவைப் பொறுத்து, அவர்கள் ரூ. 44 லட்சம் வரை பெறலாம்.


வழக்கமான சேவையில் உள்ள ஒரு வீரருக்கும், நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னிவீரருக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், வழக்கமான வீரர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுவார், ஆனால் அக்னிவீரர் பெறமாட்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு படைகளில் நிரந்தரமாகச் சேர்த்துக்கொள்ளப்படும் 25 சதவீத அக்னிவீரர்கள், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.


Original article : What are the features of the Agnipath scheme? -Priya Kumari Shukla

Share:

மேற்கு ஆசிய நெருக்கடிக்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் - சி. ரங்கராஜன், டி.கே. ஸ்ரீவஸ்தவா

 மாறிவரும் சூழல் பொருளாதாரத்திற்கு வாய்ப்புகளையும் சவால்களையும் அளிக்கிறது.


மேற்கு ஆசிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும் அமெரிக்காவும் ஈரானும் 14 அம்சங்களைக் கொண்ட ஒரு ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ஏற்றுக்கொண்டன. ஆரம்பத்தில் சில தடங்கல்கள் இருந்தபோதிலும், நீரிணை மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும், எண்ணெய் விலைகள் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, 2026-27-ஆம் ஆண்டிற்கான கண்ணோட்டம் மற்றும் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்தியா தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டும்.


மேற்கு ஆசிய நெருக்கடியானது கச்சா எண்ணெய் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்த ஒரு காலகட்டத்தை உருவாக்கியது. ஏப்ரல் 2026-ல் இந்திய கச்சா எண்ணெய் தொகுப்பின் (Indian crude oil basket) மாத சராசரி விலை பீப்பாய்க்கு 114.5 டாலராக இருந்தது. இது மே 2026-ல் பீப்பாய்க்கு 106.2 டாலராகவும், ஜூன் 24, 2026 நிலவரப்படி பீப்பாய்க்கு 86.3 டாலராகவும் குறைந்தது. போர்நிறுத்தம் தொடரும் பட்சத்தில், 2026-27 ஆம் ஆண்டின் மீதமுள்ள மூன்று காலாண்டுகளிலும் கச்சா எண்ணெய் விலைகள் இந்த அளவிற்குக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2026-27-ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி வாய்ப்புகள்


2025-26 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.7% இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீடுகள், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய இந்தியாவின் வலுவான மீட்சியை உறுதிப்படுத்துகின்றன. புதிய ஜிடிபி கணக்கீட்டு முறையின்படி, இதற்கு முந்தைய ஆண்டுகளான 2023-24 மற்றும் 2024-25-ல் உண்மையான ஜிடிபி (real GDP) வளர்ச்சி விகிதங்கள் முறையே 7.2% மற்றும் 7.1%-ஆக இருந்தன. 2025-26-ல் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) வளர்ச்சி 7.9%-ஆக இருந்து இன்னும் சிறப்பாக அமைந்தது. இதில் உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 10%-க்கும் அதிகமான வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்தன. பெயரளவு ஜிடிபி (nominal GDP) வளர்ச்சி 8.9%-ஆக இருந்த நிலையில், மறைமுக விலை சரிசெய்தல் குறியீட்டின் (implicit price deflator) அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2025-26-ல் 1.1%-ஆக இருந்தது. 


2026-27-ஆம் ஆண்டில், குறிப்பாக முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் விலை உயர்வு வளர்ச்சியைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 'எல் நினோ' (El Niño) தாக்கத்தால் ஏற்படும் மழைப்பற்றாக்குறை ஆகியவை பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும். இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) நீண்டகால சராசரியுடன் ஒப்பிடுகையில் 10% மழைப்பற்றாக்குறை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ஜூன் 24, 2026 வரையிலான நிலவரப்படி, மதிப்பிடப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட 43%-ஆக உள்ளது.


எல் நினோ மற்றும் உரத் தட்டுப்பாடு ஆகிய இரண்டும் இணைந்து 2026-27-ஆம் ஆண்டில் இந்தியாவின் விவசாய உற்பத்திக்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதில் காரிஃப் (kharif) பயிர்கள் முதலில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 'ராபி' (rabi) பயிர் சாகுபடியிலும் இதன் தாக்கம் இருக்கலாம். எனவே, முக்கியமான பயிர்களைப் பொறுத்தவரை உர இருப்பை அதிகரிப்பதும், சாத்தியமான தட்டுப்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அவசியமாகும். இதற்குப் பயிர் சார்ந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026-27-ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) வளர்ச்சியை 6.6%-ஆகக் கணித்துள்ளது.


நிதிநிலை வாய்ப்புகள் மற்றும் பெட்ரோலியப் பொருளாதாரம்


2026-27-ஆம் ஆண்டின் வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம், 2025-26-ஆம் ஆண்டைவிட ஒப்பீட்டளவில் அதிக 'பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி' (nominal GDP) வளர்ச்சி இருக்கக்கூடும் என்பதாகும். மொத்த விற்பனை விலை குறியீடு (Wholesale Price Index (WPI)) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) ஆகியவற்றின் பணவீக்கத்தைச் சார்ந்திருக்கும் 'மறைமுகமான விலை சரிவுக் குறியீடு' (implicit price deflator (IPD)), 2025-26-ஆம் ஆண்டின் அளவான 1.1%-ஐ விட அதிகமாக இருக்கக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும். 2026-27-ஆம் ஆண்டிற்கான மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் குறித்து ஜூன் 2026-ல் தொழில்முறை முன்னறிவிப்பாளர்கள் (Professional Forecasters) வெளியிட்ட இடைநிலை மதிப்பீடுகள் முறையே 8% மற்றும் 4.9% ஆகும். மேற்கு ஆசிய நெருக்கடி தீர்க்கப்படுவதாகக் கொண்டால், முழு ஆண்டிற்கான மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்க விகிதங்கள் முறையே 6% மற்றும் 4.5%-ஆகக் குறைவாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஆகியவற்றிற்கு முறையே 60% மற்றும் 40% என்ற அளவிலான முக்கியத்துவம் (weights) அளிக்கப்பட்டால், 'மறைமுகமான விலை சரிவு குறியீடு' (IPD) அடிப்படையிலான பணவீக்கத்தை தோராயமாக 5.4% என மதிப்பிடலாம். இதனுடன் 6.6% என்ற உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) வளர்ச்சியை இணைத்துப் பார்க்கும்போது, ​​2026-27-ல் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சுமார் 12.4%-ஐ எட்டக்கூடும். இது வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) கணிக்கப்பட்ட 10.1% வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும். இது வரி வருவாயில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். கலால் வரி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்துகொண்டு, வரவு-செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரிவருவாயை இந்திய அரசால் எட்டமுடியும். இருப்பினும், செலவினங்களைப் பொறுத்தவரை, மானியங்களுக்கான செலவு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டைவிட அதிகமாக இருக்கக்கூடும்.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையை (dividend) வழங்கியுள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 'ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஈவுத்தொகை மற்றும் லாபம்' என ₹3.16 லட்சம் கோடி மதிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தொகை அதில் கணிசமான பகுதியை ஈடுசெய்கிறது. இச்சூழலைக் கருத்தில் கொண்டு, 2026-27 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கானது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3%) எட்டப்படும் அல்லது மிகச் சிறிய அளவிலேயே அதைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.


இந்தியாவின் பெட்ரோலியப் பொருளாதாரம் சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் அளவு 1998-99-ல் 54.9%-ஆக இருந்த நிலையில், 2025-26-ல் 90%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவு காலப்போக்கில் குறைந்துள்ளது. 2011-12-ல் உச்சபட்சமாக 35.9 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MMT) இருந்த உற்பத்தி, 2025-26-ல் 26 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் (MMT) குறைந்துள்ளது. மூன்றாவதாக, பெட்ரோலியப் பொருட்கள் அல்லது பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய்களுக்கான (petroleum, oil, and lubricants (PoL)) தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவிலான இறக்குமதி தேவைப்படுகிறது. நான்காவதாக, பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் (PoL) பொருட்களின் உள்நாட்டு நுகர்வு 1998-99-ல் 90.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MMT) இருந்தநிலையில், 2025-26-ல் 243.2 MMT-ஆக அதிகரித்துள்ளது. ஐந்தாவதாக, கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து பல்வேறு பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் (PoL) பொருட்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்பிடத்தக்க திறனை இந்தியா வளர்த்துள்ளது. இத்திறன் காலப்போக்கில் மேம்பட்டுள்ளது. ஆறாவதாக, இந்தியாவின் உற்பத்தியில் எரிசக்தி பயன்பாட்டின் தீவிரமும் (energy intensity), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் (PoL) பொருட்களின் பயன்பாட்டுத் தீவிரமும் காலப்போக்கில் குறைந்துள்ளன. இது நீண்டகாலத்திற்குச் சீரான மற்றும் அதிக அளவிலான எரிசக்தி-திறன் மிக்க வளர்ச்சியைத் தக்கவைக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது.


சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய செலவைவிட, உள்நாட்டிலேயே சுத்திகரிப்பு செய்வதன் மூலம் இந்தியா செலவை மிச்சப்படுத்தியுள்ளது. எனவே, இந்தியா தனது சுத்திகரிப்புத் திறனைத் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் போக்கை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு உள்நாட்டு கச்சா எண்ணெய் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், அதே வேளையில் அணுசக்தி உள்ளிட்ட பசுமை மற்றும் மாற்று ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.


இருப்புக்களைக் கட்டமைத்தல்


உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ள மற்றும் விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், அரசு தனது உர இருப்புக்களையும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பிற முக்கிய அடிப்படைப் பொருட்களுக்கான இருப்புக்களையும் வலுப்படுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான ஆதாரங்களை மேலும் பல்வகைப்படுத்தவும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் மீதான சார்ந்திருத்தலைக் குறைக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. முக்கிய மூலப்பொருட்களுக்கான 'உத்திசார் இருப்புகளை' (strategic reserves) உருவாக்குவதற்கான கொள்கை ஒன்றை வகுப்பதோடு, அதற்கான தேவைப்படும் அளவுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மதிப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.


2025-26 நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.6 சதவீதமாக இருந்தது. இதில் நான்காவது காலாண்டில் 0.7 சதவீத உபரி காணப்பட்டது. 2026-27 நிதியாண்டிற்கான கணிப்புகள், இந்தப் பற்றாக்குறை அளவு மோசமடையக்கூடும் என்பதையே காட்டுகின்றன. தொழில்முறை முன்னறிவிப்பாளர்களிடம் (Professional Forecasters) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூன் 2026-ல் நடத்திய ஆய்வின் இடைநிலை மதிப்பீட்டின்படி, 2026-27-ல் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழித்தடம் திறக்கப்படுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதமாகக் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்கால நிலை குறித்த கணிப்புகள், இனிவரும் காலங்களில் மேற்கு ஆசியாவில் அமைதி நிலவும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலானவை ஆகும். ஒருவேளை இந்த அனுமானம் தவறாகி, போர் தொடரும் பட்சத்தில், இந்தியாவும் மற்ற பல நாடுகளும் மிகக் கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.


சி. ரங்கராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். டி.கே. ஸ்ரீவாஸ்தவா, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (Madras School of Economics)-ன் முன்னாள் இயக்குநர் ஆவார்.


Original article : India’s economic prospects after the West Asian crisis’ -C. Rangarajan, D.K. Srivastava

Share: