Showing posts with label court. Show all posts
Showing posts with label court. Show all posts

பதவி விலகுவதன் மூலம் நீதிபதிகள் பதவிநீக்க நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா? நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு குறித்த விளக்கம். -வினீத் பல்லா

 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை (Public Accountability) உறுதிசெய்வதில்  முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறிவருகின்றனர்.


அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தாக்கல் செய்ய எடுத்த முடிவு, இந்தியாவின் நீதித்துறை பொறுப்புணர்வு கட்டமைப்பை இதுவரை செல்லாத புதியதொரு காலத்திற்கு கொண்டு செல்லும்.


ஏப்ரல் மாதத்தில் நீதிபதி வர்மா ராஜினாமா செய்தபோது, ​​அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவராலும் கருதப்பட்டது. இருப்பினும், ஒரு நீதிபதியின் ராஜினாமா தானாகவே ஒரு நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற நீண்டகால அனுமானத்திற்கு சவால்விடும் வகையில், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது  பொதுமக்களிடம் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


நீதிபதி வர்மாவுக்கு எதிரான வழக்கு என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க (Impeachment) நடவடிக்கைகள், கடந்த ஆண்டு அவரது புதுடெல்லி இல்லத்தில், தீயில் கருகிய மற்றும் சிறிதளவில் சேதமடைந்த ரொக்கப் பணக் கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடங்கின. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள் விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில், நீதிபதி வர்மாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புடையவர் என்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, 146-க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக, நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-ன் (Judges (Inquiry) Act) கீழ் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவர் உருவாக்கினார். குழு தனது விசாரணைகளை நிறைவு செய்வதற்கு முன்பாகவே, நீதிபதி வர்மா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை  வழங்கினார்.


ஒரு நீதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 217-வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். உச்ச நீதிமன்றம் 1978-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதியின் ராஜினாமா என்பது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தீர்ப்பளித்தது. நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நாள் முதலே அது நடைமுறைக்கு வந்துவிடும். அதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஒப்புதலும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கியது.


முந்தைய பதவிநீக்க விசாரணைகள் ஏன் தோல்வியடைந்தன?


இந்தியாவில் இதுவரை எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை.


2011-ஆம் ஆண்டில், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. டி. தினகரன் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. நீதிபதி தினகரனுக்கு எதிரான விசாரணையை விசாரணைக் குழு நடத்திக்கொண்டிருந்தபோது அவர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவைச் செயலகம் விசாரணையின் நோக்கம் நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதே என்பதால், அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த நடைமுறையைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கருதியது. எனவே, அந்த விசாரணை நடைமுறையும், விசாரணைக் குழுவின் பணியும் பயனற்றதாக (infructuous) மாறிவிட்டது என்று மாநிலங்களவைச் செயலகம் விளக்கியது.


நீதிபதி சென் ராஜினாமா செய்தபோதும் இது போன்ற ஒரு நடைமுறையே பின்பற்றப்பட்டது. அவர் ராஜினாமா செய்வதற்கு முன்பே மாநிலங்களவை அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தபோதிலும், மக்களவை அந்தப் பதவி நீக்க வாக்கெடுப்பைக் கைவிட்டது.


இருப்பினும், ஒருவர் பதவி விலகினால் விசாரணை முடிவுக்கு வர வேண்டும் என்று சட்டம் வெளிப்படையாகக் கூறவில்லை என சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பொதுச் சட்டம் மற்றும் ஆளுகைத் துறைத் தலைவர் பேராசிரியரான சுபங்கர் டாம், முறைகேடு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு நீதிபதி பதவி விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை 1978-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.


நீதிபதிகள் தினகரன் மற்றும் சென் ஆகியோர் ஏற்படுத்திய முன்னுதாரணத்திற்குப் பிறகு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகலிருந்து தப்பிக்கவும், ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை  தொடர்ந்து பெறவும், ராஜினாமா செய்வதே மிகவும் எளிதான வழியாக மாறிவிட்டது என்று டாம் கூறினார். மேலும், விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில், அது ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவாகவும், பொதுமக்கள் பார்வைக்கான பதிவாகவும் அந்த அறிக்கை அமையும். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான மீதான நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே சஞ்சீவ் கன்னா வெளியிட்ட தகவல்களாலும், உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணை அறிக்கை ஊடகங்களில் கசிந்ததாலும், இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அந்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.






நீதிபதி தினகரன் மீதான நாடாளுமன்ற விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதேனும் உள்எதிர்ப்பு இருந்ததா?


 2011ஆம் ஆண்டு, Justice P. D. Dinakaran மீதான பதவிநீக்க  நடவடிக்கையின்போது, அவரை விசாரித்த குழுவின் உறுப்பினராக இருந்த சட்ட அறிஞர் ஜி. மோகன் கோபால், நீதிபதி தினகரன் ராஜினாமா செய்த மூன்று வாரங்களுக்குள், விசாரணையை நிறுத்தாமல் தொடர்ந்து முடிக்க வேண்டும் என்று தன்னுடன் பணியற்றிய  குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


கடிதத்தில், கோபால் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்கீழ் நடைமுறையின் இரண்டு பகுதிகளுக்கு இடையே ஒரு வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார்: முறைகேட்டின் “விசாரணை மற்றும் நிரூபணம்” (investigation and proof) மற்றும் நாடாளுமன்றத்தால் செய்யப்படும் உண்மையான “பதவி நீக்கம்” (removal from office). குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதே இறுதி இலக்கு என்று அவர் வாதிட்டார்.


ஜி.மோகன் கோபால் தனது கடிதத்தில், தவறான நடத்தைக்கான இந்தக் குறைந்தபட்ச பொறுப்புணர்வை (accountability) நடைமுறைக்குக் கொண்டுவரும் சூழலிலும், நீதிபதிகள் ராஜினாமா செய்வதன் மூலம் நடைமுறையில்  தடுக்கக்கூடிய (‘veto’) அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கக் கூடும் என்று குறிப்பிட்டார்.


இறுதியில், நீதிபதி தினகரன் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணம், விசாரணைக் குழுவில் ஏற்பட்ட காலி இடத்தால் அது செயலிழந்ததும், மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி, நீதிபதி தினகரன் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், அவரை பதவியிலிருந்து நீக்குவதே விசாரணையின் முக்கிய நோக்கம் என்பதால், அந்த நோக்கம் இனி பயனற்றதாக (moot) மாறிவிட்டது என்று கருதினார்.





தற்போது அறிக்கையைத் தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?


நீதிபதி வர்மாவுக்கு எதிரான அறிக்கையைத் தாக்கல் செய்வது இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றும்.


முதலாவதாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டால், அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வரும். வழக்கறிஞரும் சட்ட அறிஞருமான அலோக் பிரசன்ன குமார், நீதிபதி தினகரன் வழக்கில் உருவான தவறான முன்னுதாரணத்தை மக்களவைத் தலைவர் மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று கூறினார். ஏனெனில், அந்த முன்னுதாரணம் விசாரணை முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்தால், ஒரு நீதிபதி தனது செயல்கள் குறித்த ஆய்வில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான செய்தியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


இது வெறும் பதவி நீக்கும் நடைமுறை மட்டுமல்ல; நீதிபதி தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டரா என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு பொறுப்புக்கூறல் (accountability) நடைமுறையும் ஆகும். இந்த விசாரணை அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், பொதுமக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. எனவே, அமைக்கக் குழு என்ன கண்டறிந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.


இரண்டாவதாக, இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் முக்கிய சட்ட மற்றும் நிதி விளைவுகள் ஏற்படக்கூடும். ஒரு நீதிபதி ராஜினாமா செய்யும்போது, ​​தனது பணியிலிருந்து சாதாரணமாக ஓய்வு பெறுபவரைப் போன்ற அதே ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர் ஆவார்.


டாம் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்: இது சட்டரீதியான அல்லது கல்வி தொடர்பான விவாதம் மட்டுமல்ல. ஒரு நீதிபதி ஓய்வுக்குப் பிறகு பெறும் சலுகைகளுக்கு பொதுமக்களின் வரிப்பணமே செலவிடப்படுகிறது. இரண்டு விசாரணை ஆணையங்களால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நீதிபதி, ராஜினாமா செய்தப் பிறகு ஓய்வுக்காலச் சலுகைகளைப் பெறுவது ஏன்?


குழுவின் அறிக்கை குற்றச்சாட்டுகளை உறுதி செய்தால், கோட்பாட்டளவில் நீதிபதியின் பதவி நீக்கத்தை, அந்தப்பதவி நீக்க நடைமுறை தொடங்கிய தேதியிலிருந்தே அமல்படுத்த முடியும் என்று குமார் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் மேற்கொள்ளும் முறையான பதவி நீக்க நடவடிக்கை, அந்த நீதிபதியின் ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுக்காலச் சலுகைகளை நிறுத்துவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான சூழலையும் உருவாக்கக்கூடும்.


Original article : Can judges avoid impeachment by resigning? The Justice Yashwant Varma case explained. -Vineet Bhalla

Share:

50 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், அவசரநிலைக்கு வழிவகுத்த, இந்திராகாந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நினைவுகூர்தல். -நிகிதா மோத்தா

 ஜூன் 12 அன்று காலை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 15-வது அறையில், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தார். இந்தத் தீர்ப்பு பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக, ஜூன் 25  இரவு அவசரநிலையை  இந்திரா காந்தி அறிவித்தார்.


1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில், பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் காரணம் காட்டி, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதற்கான முக்கியக் காரணியாக அமைந்தது, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திராகாந்தி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டிய ஒரு மனுவை உறுதிசெய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஜூன் 12-ஆம் தேதி தீர்ப்புதான் என்கின்றனர்.


அந்தத் தீர்ப்பையும், இந்திரா காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும், நெருக்கடி நிலையை பற்றியும் நாம்  தெரிந்து கொள்வோம்.

பிரபலமான ‘தேர்தல் வழக்கு’


1971-ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த சோசலிசத் தலைவர் ராஜ் நாராயண், அவரது வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தபோது, ​​அலகாபாத் உயர்நீதிமன்றம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒரு சட்டப் போராட்டத்திற்கான களமாக மாறியது. 'தேர்தல் வழக்கு' என்று அறியப்பட்ட அந்த மனுவில், பிரதமர் ஊழல் முறைகள் மூலமாகவும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்கான சட்ட வரம்பை மீறியதன் மூலமாகவும், தனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க அரசு அதிகாரிகளையும் அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தியதன் மூலமாகவும் தனது வெற்றியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ​​முன்னிலையில் வாதங்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு 1973 மற்றும் 1974 முழுவதும்  நடைபெற்றது.


1975-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தி பெற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, சாட்சிக் கூண்டில் ஐந்து மணிநேரம் செலவிட்டார். தீர்ப்பு ஜூன் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ (2008) என்ற தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஜூன் 12-ஆம் தேதி காலை,  இந்திரா காந்தியின் தந்தையும் தாத்தாவும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய நீதிமன்றத்தின் அறை எண் 15-ல், நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் நாராயண் தாக்கல் செய்திருந்த வழக்கில் தனது தீர்ப்பை வாசித்தார்.


நீதிபதி சின்ஹா, இந்திராகாந்திக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளில் 12-ஐத் தள்ளுபடி செய்தார். இருப்பினும், தனது 238 பக்க தீர்ப்பில், அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார்.


முதலில், இந்திரா காந்தியின் முன்னாள் தனிச் செயலாளரான யஷ்பால் கபூர், அரசுப் பணியிலிருந்து முறைப்படி விலகுவதற்கு முன்பே அவரது தேர்தல் முகவராகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்று நீதிபதி சின்ஹாநீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.


இரண்டாவதாக, உத்தரப் பிரதேச அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கூட்டங்களுக்கான வசதிகளைத் தயார் செய்து, மின்சார ஏற்பாடு செய்தல் மற்றும் அவர் வாக்காளர்களிடம் உரையாற்றுவதற்கான மேடையை அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் அவரது பிரச்சாரத்திற்கு உதவியிருந்ததை நீதிபதி சின்ஹா கண்டறிந்தார்.


இந்தக் காரணங்களின் அடிப்படையில், சின்ஹா ​​காந்தியின் 1971-ஆம் ஆண்டு தேர்தலைச் செல்லாததாக அறிவித்து, ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 20  நாட்கள் அவகாசம் வழங்கினார்.


ஜூன் 12 தீர்ப்புக்கான எதிர்வினைகள்


அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாங்கள் "ஊழல்வாதி" என்று அழைத்த பிரதமரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இருப்பினும், இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க விரைந்து செயல்பட்டனர். ஜூன் 13 அன்றே, ஹரியானா முதலமைச்சர் பன்சிலால், காங்கிரஸ் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, இந்திரா காந்திக்குத் தங்கள் விசுவாசத்தைப்  வெளிப்படுத்தத் தொடங்கினார். பிரதமரின் இல்லத்திற்கு வெளியே இருந்த சாலைகள் அவரது விசுவாசிகளால் நிரம்பி வழிந்தன. அவர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டதோடு, நீதிபதி சின்ஹாவின் உருவ பொம்மைகளையும் எரித்தனர் என்று குஹா குறிப்பிடுகிறார். 


தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக வெளிநாட்டு சக்திகள் தனது உள்நாட்டு எதிரிகளுடன் சதி செய்வதாகக் குற்றம் சாட்டி, இந்திரா காந்தி கூட்டத்தினரிடையே உரையாற்ற வெளியே வந்தார். தனது எதிரிகளிடம் "தாராளமாகப் பணம் இருக்கிறது" என்று இந்திராகாந்தி கூறினார். ஒவ்வொரு நாளும் இந்திராகாந்தியின் இல்லத்திற்கு வெளியே பல ஆதரவாளர்கள் கூடினர். அவரும் அவர்களிடம் பேசுவதற்காக வெளியே வந்தார்.


ஜூன் 20 அன்று, இந்திரா காந்தி டெல்லியின் போட் கிளப் புல்வெளியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றினார். தனது மகன்கள் மற்றும் மருமகள் சோனியா காந்தியுடன் இருந்த அவர், நேரு-காந்தி குடும்பத்தின் பொதுச் சேவைப் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி, "தனது இறுதி மூச்சு உள்ள வரை" தேசத்திற்கு சேவை செய்வதாக உறுதியளித்தார்.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?


ஜூன் 23 அன்று, காந்தியின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. மறுநாள், நீதிபதி வி. ஆர். கிருஷ்ண ஐயர் அலகாபாத் தீர்ப்புக்கு நிபந்தனைத் தடை விதித்தார். பிரதமர் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வும் அவரது மேல்முறையீட்டை முடிவு செய்யும் வரை அவரால் வாக்களிக்கவோ அல்லது சம்பளம் பெறவோ முடியாது என்று கூறியது.


இருப்பினும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விதிமீறல்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள "மிகவும் தீவிரமான தேர்தல் முறைகேடுகள்" அல்ல என்பதால், அந்தத் தீர்ப்பு இறுதியில் வலுவற்றதாக அமையக்கூடும் என்று சின்ஹா ​​குறிப்பிட்டார்.




இந்த நிலையில், இந்திரா காந்தி தற்காலிகமாகப் பதவி விலகி, வழக்கிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜக்ஜீவன் ராம் போன்ற ஒரு மூத்த நபர் இடைக்காலப் பிரதமராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சிலர் அறிவுறுத்தினர்.


ஆனால் இது தற்காலிகமானது என்று அவர் நம்பவில்லை என்று வரலாற்றாசிரியர் கியான் பிரகாஷ் தனது 2019-ஆம் ஆண்டு அவசரநிலைக் காலக் குறிப்புகள் (Emergency Chronicles) என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். "தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவர் உறுதியாக நம்பினார். சிலியின் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பைச் சுட்டிக்காட்டி, அவர் அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIA மற்றும் ரிச்சர்ட் நிக்சன் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினர். 


அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் அவரது மகன் சஞ்சய் காந்தி, மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராய், ஹரியானா முதல்வர் பன்சிலால், பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் அடங்குவர்.


அடுத்தநாள் ஜூன் 25 எதிர்க்கட்சியினர் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29-ஆம் தேதி முதல் ஒருவார காலப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.


அவசரநிலை பிரகடனம்

இதற்கிடையில், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்ற பிறகு, அவசரநிலைப் பிரகடனத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் வேகமாக மேற்கொண்டாதாக பிரகாஷ் எழுதியுள்ளார். 


ஜூன் 25 அன்று, உள்நாட்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அவசரச் சட்டத்தை வரைவதற்கு ரே உதவினார். அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவர் உடனடியாக அதில் கையெழுத்திட்டார். அன்றிரவு, டெல்லி முழுவதும் உள்ள செய்தித்தாள் அலுவலகங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஜூன் 26 அன்று காலைப் பதிப்புகள் வெளிவரவில்லை.


மறுநாள், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள வானொலி நாட்டுக்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, காவல்துறைப் பிரிவுகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக விரைந்து செயல்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மற்றும் பலரைக் கைது செய்தன.


உச்சநீதிமன்றம் அலகாபாத் தீர்ப்பை ரத்து செய்யும் என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் நம்பினர். இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த ஒரு மதிப்புமிக்க சட்ட அறிஞர் கூறியதுபோல், பிரதமர் மேல்முறையீடு என்ற நீதிமன்றத்தின் வழிமுறைகளைத் கண்டுகொள்ளாமல், அதற்கு பதிலாக அவசரநிலை (Emergency) என்ற அசாதாரணமான, ஜனநாயகத்திற்கு முரணான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்தார்’ என்று குஹா  குறிப்பிடுகிறார்.


Original article : Over 5 decades on, recalling Allahabad HC verdict against Indira that paved way for Emergency. -Nikita Mohta

Share:

முக்கியத்துவம் வாய்ந்த சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 22 பேரின் விடுதலையை பம்பாய் உயர்நீதிமன்றம் ஏன் உறுதி செய்தது? -ஓம்கார் கோகலே

 சோராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு: சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பை, ஷேக்கின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்ததன் மூலம் பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.



சோராபுதீன் என்கவுன்டர் வழக்கின் தீர்ப்பு: 2005-06-ஆம் ஆண்டுகளில் சோராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி என்கவுன்டர் மற்றும் ஷேக்கின் மனைவி கௌசர் பீயின் கொலை தொடர்பான வழக்கில், 21 காவல்துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் விடுவிக்கப்பட்டதை பம்பாய் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.


2018-ஆம் ஆண்டு டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 காவல்துறைப் பணியாளர்கள் உட்பட 22 பேரையும் விடுவித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில், சோராபுதீனின் இரண்டு சகோதரர்கள் விடுவிப்புகளை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் மேல்முறையீடு மனுக்களை நிராகரித்தது.


இந்தியாவின் என்கவுன்டர் அரசியலில் நீண்டகாலமாக ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வரும் இந்த வழக்கு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த விதம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.


வழக்குத் தொடுத்த தரப்பின் வாதம்


ஆரம்பத்தில், குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும் (Anti-Terrorism Squad (ATS)) மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையும் (CID-Crime) இந்த வழக்கை விசாரித்து வந்தன. பின்னர், 2010-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation (CBI)) மாற்றியதோடு,  விசாரணையை மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிட்டது.


குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சோராபுதீன் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன என்றும், அவர் ஒரு "மிகவும்  கொடூரமான குற்றவாளி" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாங்லிக்கு சொகுசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​இறந்த மூவரும் கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது. மேலும், சோராபுதீன் மற்றும் கௌசர் பீ ஆகியோர் குஜராத்தில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துளசிராம் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டது.


ஷேக்கைக் கொலை செய்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சோராபுதீனைக் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் அவரது கூட்டாளியான பிரஜாபதியைத் தவறாக வழிநடத்தி அவர்கள் உதவி கோரியதாகவும் அரசுத் தரப்பு கூறியது.


2005-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அகமதாபாத்தில் சோராபுதீன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. இருப்பினும், அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சோராபுதீனுக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஒரு பிரபல அரசியல் தலைவரைக் கொல்வதற்காக அவர் அந்த நகரத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.


கௌசர் பீ அதே மாதம் கொல்லப்பட்டார். மேலும், அவரது உடல் அந்த ஆண்டு நவம்பர் 29 அன்று அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, குஜராத்தில் நடந்த மற்றொரு 'திட்டமிட்ட' மோதலில் பிரஜாபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரில் 16 பேரை நீதிமன்றங்கள் விடுவித்தன. அவர்களில் தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அப்போதைய மூத்த இந்தியா ஆட்சி பணியில் இருந்த அதிகாரிகளான தினேஷ் எம்.என், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி. வன்சாரா, மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோரும் அடங்குவர்.


2018-ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது 


2018-ஆம் ஆண்டில், மத்திய புலனாய்வுப் அமைப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், நீதிபதி எஸ்.ஜே. சர்மா தலைமையில், தனது 358 பக்க தீர்ப்பில், கூறப்படும் சதியை நிலைநாட்டுவதற்கு மத்திய புலனாய்வுப் அமைப்பு எந்தவொரு "ஆவண மற்றும் உறுதியான ஆதாரங்களையும்" (documentary and substantive evidence) சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.


சோராபுதீன் மற்றும் பிரஜாபதி ஆகியோரின் ‘கொலை' மரணங்களில் 'கொலை' குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய புலனாய்வுப் அமைப்பு கூறியது. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code (CrPC)) பிரிவு 197-ன் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியைப் பெற புலனாய்வு அமைப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் 'விடுதலைக்குத் தகுதியானவர்' (entitled to acquittal) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சிறப்பு நீதிபதி, சாட்சிகள் மத்திய புலனாய்வுப் அமைப்பு தனது விசாரணையின்போது பதிவு செய்த வாக்குமூலங்களின்படி சாட்சியம் அளிக்காததால் பிறழ் சாட்சிகளாக மாறியதாகவும், நீதிமன்றத்தின் முன் சாட்சிக் கூண்டில் நின்றபோது, ​​அவர்கள் "அச்சமின்றி" உண்மையைப் பேசியதன் மூலம், மத்திய புலனாய்வுப் அமைப்பில் "தங்களது வாக்குமூலங்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், விசாரணையின் போது நீதிபதி, “மத்திய புலனாய்வு அமைப்பு குற்றங்களின் உண்மையை அறிவதற்குப் பதிலாக வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தது” என்றும், “உண்மையைக் கண்டறிவதைவிட, ஒரு குறிப்பிட்ட, முன்யோசனையுடன் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை நிறுவுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.


மத்திய புலனாய்வு அமைப்பானது, அரசியல் தலைவர்களை எப்படியாவது சிக்க வைப்பதற்காக, ஒரு முன் திட்டமிடப்பட்ட கோட்பாட்டையும் ஒரு செயல்திட்டத்தையும் தன்வசம் கொண்டிருந்தது என்றும், அந்த அமைப்பானது, சட்டப்படி விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, அந்த இலக்கை அடைவதற்குத் தேவையானதை மட்டும் செய்தது என்றும் நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.


அரசியல் கட்சியின் தலைவர்களை எப்படியாவது சிக்க வைக்கும்  முனைப்பில், மத்திய புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை உருவாக்கி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது.


முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட விசாரணையின் நகலைப் பயன்படுத்தி, விசாரணையை அவசரமாக முடித்ததில் மத்திய புலனாய்வு அமைப்பு அலட்சியம் காட்டியதாகவும், எந்தச் சதித்திட்டம் குறித்தும் அறியாத காவல்துறையினரைக் குற்றவாளியாக்கியதாகவும், மாறாக அவர்கள் நிரபராதிகள் போல் தோன்றியதாகவும் நீதிமன்றம்  கூறியது.


உயர் நீதிமன்றத்தின் முன் உள்ள சவால்


சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட சோஹ்ராபுதீனின் சகோதரர்களான ரூபாபுதீன் மற்றும் நயாபுதீன், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களாக மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிபதியின் கண்டுபிடிப்புகள் "சாட்சியங்களுக்கு முரணானவை" (contradictory to the evidence) என்று அவர்கள் வாதிட்டனர்.


அரசுத் தரப்பால் 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், ஒரு நீதிபதிக்கு முன்பாகப் பதிவு செய்யப்பட்ட அல்லது புலனாய்வு அதிகாரிகளால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள், விசாரணை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்படவோ அல்லது சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்று  மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பயிருந்தது. மேலும், பிறழ் சாட்சிகளாக இல்லாத ஏறத்தாழ 118 சாட்சிகளின் சாட்சியங்கள் "நம்பகத்தன்மையற்றவை" எனக் கூறித் தவறாகப் புறக்கணிக்கப்பட்டன என்று அந்த மேல்முறையீட்டு மனுவில்  குறிப்பிடப்பயிருந்தன.


பம்பாய் உயர்நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளித்தது


உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று மேல்முறையீட்டு  மனுக்களை ஏற்றுக்கொண்டு, விடுவிக்கப்பட்ட நபர்களுக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் அறிவிப்பாணையை அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சாட்சியான மகேந்திரசிங் ஜாலா தான் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கூறி, விடுவிப்புகளை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


2019-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், சோராபுதீனின் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் தலைமையிலான அமர்வின் முன் 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இறுதி விசாரணைகள் வரை விசாரிக்கப்படாமல் இருந்தன. அந்த விசாரணைகள் ஜனவரி 16 அன்று நிறைவடைந்தன.


2025-ஆம் ஆண்டு அக்டோபரில், சிறப்பு நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு கூறியது.


உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளபட்ட வாதங்கள்


2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீட்டாளர்கள் — மற்ற ஆதாரங்களுடன் தகுந்த அதிகார அமைப்பின் ஒப்புதல்கள் தேவையில்லை என்றும், பிரஜாபதியின் சக கைதி "தன் உயிருக்கு அஞ்சினார்" என்பதைக் காட்டிய "ஏற்கத்தக்க" சாட்சியங்களை நீதிபதி நம்பத் தவறிவிட்டார் என்றும் வாதிட்டனர்.


தற்போதைய மேல்முறையீடுகளில் பிரதிவாதிகளாக உள்ள, விடுவிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை நிலைநாட்ட நேரடி ஆதாரம் எதுவும் இல்லை என்றும், தங்களை விடுவிப்பதற்கான சிறப்பு நீதிமன்ற உத்தரவு நியாயமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


Original article : Why Bombay HC upheld acquittal of 22 in the landmark Sohrabuddin encounter case. -Omkar Gokhale

Share:

உச்சநீதிமன்றம், அமிலம் உட்கொண்டதிலிருந்து பிழைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களாக ஏன் அங்கீகரித்தது? - அமால் ஷேக்

 அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, ஆனால் வெளியில் தெரியும்படியான காயங்கள் இல்லாத காரணத்தால் அரசின் உதவிகள் கிடைக்காமல் விடுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


திங்கள்கிழமையன்று (மே 4) உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, அமிலத் தாக்குதலுக்கு உள்ளாகி, அமிலத்தை கட்டாயமாக உட்கொள்ள நேரிட்டதால் உட்புறக் காயங்கள் அடைந்தவர்கள் (வெளியே தழும்புகள் தெரியாவிட்டாலும்), 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் (Rights of Persons with Disabilities Act (RPwD Act)) 'அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களாகவே' கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தெளிவுரை சட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து முன்தேதியிட்டு செயல்படும் என்று கூறியதுடன், அமிலத் தாக்குதலுக்கான தற்போதுள்ள தண்டனைகள் குற்றங்களைத் தடுக்கும் வகையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குற்றம்சாட்டப்பட்டவர் மீதே சுமத்தவும், இத்தகைய வழக்குகளில் அமிலம் விற்பனை செய்பவர்களையும் இணை குற்றவாளிகளாகச் சேர்க்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.


ஷாஹீன் மாலிக் என்ற அமிலத் தாக்குதலில் இருந்து மீண்டவர் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டத்தில் உள்ள ஒரு குறைபாட்டினால் ஒரு குறிப்பிட்ட வகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் போவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டத்தில் உள்ள இடைவெளி


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களை குறிப்பிட்ட இயலாமைகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், அது நிர்ணயித்த வரையறை குறுகியதாக இருந்தது.  சட்டத்தின் அட்டவணை 2(zc)-ன் கீழ், "அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்" என்பவர் "அமிலம் அல்லது அது போன்ற அரிக்கும் தன்மையுள்ள பொருளை வீசித் தாக்கும் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அமிலம் வலுக்கட்டாயமாக உட்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் இந்த வரையறைக்குள் வரவில்லை.


நீதிமன்றம் ஒரு முக்கியமான சிக்கலைச் சுட்டிக்காட்டியுள்ளது. "உடல் உருக்குலைவு" என்ற சொல், உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே குறிப்பதாகத் தோன்றுகிறது. இதனால், அமிலத்தை உட்கொள்வதால் ஏற்படும் உள் உறுப்பு காயங்கள் அல்லது தழும்புகள் இந்த வரையறைக்குள் வராமல் போகும் அபாயம் உள்ளது.


அத்தகைய நிகழ்வுகளில் ஏற்படும் காயங்களும் அதே அளவு கடுமையானவை ஆகும். அமிலம் உட்கொள்ளப்படும்போது, அது வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியைப் பாதிக்கிறது. இது நிரந்தரமானது. "இந்த அரிக்கும் தன்மை கொண்ட பொருள், கடுமையான தீக்காயங்களையும், உள் உறுப்புகளுக்கு, குறிப்பாக செரிமான மண்டலத்திற்கு, பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும், தொடர்ச்சியான இரைப்பைக் குடல் மருத்துவப் பராமரிப்பின் தேவை உட்பட, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மருத்துவச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. வாய்வழியாக அமிலத்தை உட்கொண்டவர்கள், சாப்பிடுவதிலும், விழுங்குவதிலும், செரிமானத்திலும் சிரமம் போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளை  எதிர்கொள்ளக்கூடும் என மாலிக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?


மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் வரம்பிற்குள் வராமல் போவதால் ஏற்படும் விளைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் என்பது நிதி உதவி, மறுவாழ்வுத் திட்டங்கள், மருத்துவ ஆதரவு போன்றவற்றுக்கான ஒரு நுழைவுச்சீட்டு ஆகும்.  அது இல்லையென்றால், பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்தத் திட்டங்கள் எதையுமே அணுக முடியாது. இந்த மனுவானது இதை ஒரு “குறைவான வகைப்பாடு” (under-classification) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க முயலும்போது, அதே போன்ற பாதிப்புகளைக் கொண்ட ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாகும்.


தாக்குதலுக்கு உள்ளான இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு, தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மட்டுமே என்று அந்த மனு வாதிட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மையிலோ அல்லது அளவிலோ எந்த மாற்றமும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.


மனு எதை கேள்விக்குள்ளாக்குகிறது


இந்த வழக்கின் மையப்புள்ளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-14 (Article 14) ஆகும். இந்தச் சட்டம், தாக்குதலின் விளைவைக் கவனிக்காமல், தாக்குதல் நடத்தப்பட்ட முறையை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பிரிப்பது "தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற வகைப்பாடு" என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, இத்தகைய வேறுபாடு அந்த நோக்கத்தோடு எந்த ஒரு தர்க்கரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.




சட்டத்தின் கவனம் மாற்றுத்திறனாளின் மீதே உள்ளது. அதன் காரணம் அல்லது அது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதன் மீது அல்ல என்று அந்த மனு கூறுகிறது. மேலும், அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும், கட்டாயப்படுத்தி அமிலம் உட்கொள்ள வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் அமில வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரே பிரிவினரே என்று வாதிடப்படுகிறது.


இந்த சட்ட விடுபடலானது "குறைவான வகைப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று மனு விவரிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஆதரிக்க வேண்டிய சட்டம், அதே நிலையில் இருக்கும் ஒரு துணைப் பிரிவினரை தன்னிச்சையாகப் புறக்கணிப்பதாக உள்ளது.


மேலும், குற்றவியல் சட்டத்திற்கும் (Criminal Law) நலத்திட்டச் சட்டத்திற்கும் (Welfare Law) இடையே உள்ள முரண்பாட்டையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2024 (Bharatiya Nyaya Sanhita BNS))  பிரிவு 124-ன்படி, அமிலம் வீசுவதும், உட்கொள்ள வைப்பதும் ஒரே மாதிரியான குற்றங்களாகவே கருதப்படுகின்றன, அவற்றுக்கு ஒரே மாதிரியான தண்டனைகளே வழங்கப்படுகின்றன. அமிலத் தாக்குதல் எந்த முறையில் நடத்தப்பட்டாலும் அதன் பாதிப்பு, நோக்கம் மற்றும் சமூக ஆபத்து ஆகியவை ஒன்றுதான் என்று வாதிடும் இந்த மனு, குற்றவியல் சட்டம் வேண்டுமென்றே நிராகரித்த ஒரு பாகுபாட்டை, ஒரு நலத்திட்டச் சட்டம் மட்டும் கடைபிடிப்பது சட்டப்பூர்வமாகப் பொருத்தமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று கூறுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தொடர்பான வாதம், பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. அமிலம் குடிக்க வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், சட்டரீதியான வரையறைக்குள் வராததால், அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழைப் பெற முடிவதில்லை. இதன் காரணமாக, அரசின் இழப்பீடு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு மறுக்கப்படுவது, கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒருவரின் உரிமையைப் பறிப்பதாகும் என்று அந்த மனு வாதிடுகிறது.


இதுபோன்ற கடுமையான உள்காயங்களால் அவதிப்படும் ஒருவருக்கு, மருத்துவப் பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பது என்பது தர்மம் செய்யும் விஷயமல்ல. மாறாக அது ஒரு கண்ணியமான வாழ்வின் அடிப்படைக் கூறாகும் என்று மனு  குறிப்பிடுகிறது.


அமிலம் உட்கொள்வதால் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் உள் உறுப்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள், பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் உருக்குலைவு மற்றும் இயக்கக் குறைபாடு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உள் உறுப்புக் காயங்கள் அங்கீகரிக்கப்படாமல் விடப்படுகின்றன என்றும் மனு  வாதிடுகிறது.


இதைத் தீர்ப்பதற்காக, நீதிமன்றம் சட்டத்தை “நோக்க அடிப்படையிலான விளக்கத்தின்” மூலம் அணுக வேண்டும் என்று மனு வலியுறுத்தியது. அதாவது, ஒரு சட்டத்தை அதன் வார்த்தை மாறாத நேரடிப் பொருளில் மட்டும் பார்க்காமல், அந்தச் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் விளக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD Act) என்பது ஒரு சமூக நலச் சட்டமாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்கவும், அநீதியைத் தடுக்கவும் நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தை தாராளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விளக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. குறிப்பாக, சட்டத்தில் உள்ள “அமிலம் வீசுதல் மூலம் நிகழ்த்தப்படும் தாக்குதல்” என்ற சொற்றொடரை “அமிலம் பயன்படுத்துவதன் மூலம் நிகழ்த்தப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள்” என விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் அமிலத் தாக்குதல் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சட்டப் பாதுகாப்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்


சட்டத்தின்கீழ் வரையறைகளின் வரம்பை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, அமில வீச்சு வழக்குகளில் நடக்கும் மந்தமான விசாரணைகளை "அமைப்பிற்கே ஒரு கேலிக்கூத்து" என்று கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் குறிப்பிட்டது. அப்போதிருந்து இந்தத் தாமதப் பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொடூரமான அமிலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறிய தலைமை நீதிபதி, “தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும், 2013-ஆம் ஆண்டிலிருந்து அமில வீச்சு வழக்குகளின் எண்ணிக்கை "அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்திருப்பதை" நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. இது ஒரு தீவிரமான கவனத்திற்குரிய விஷயம் என்பதையும் சுட்டிக்காட்டியது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணக்க உறுதிமொழிப் பத்திரங்கள், மாநிலங்கள் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் அளவை தெளிவாக காட்டின. இதில் சில அதிகார வரம்புகள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 198 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 160 வழக்குகளும், குஜராத்தில் 114 வழக்குகளும் உள்ளன. பீகாரில் 68 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்ற மாநிலங்களில், மகாராஷ்டிராவில் 58 வழக்குகளும், அசாமில் 27 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்டில் 26 வழக்குகளும், ஒடிசாவில் கீழமை நீதிமன்றங்களில் 23 வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் 8 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, டெல்லி கீழமை நீதிமன்றங்களில் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உத்தரகாண்டில் மூன்று வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


Original article : Why Supreme Court recognised acid ingestion survivors as victims under RPwD Act. -Amaal Sheikh

Share:

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது எப்படி? -சி.ஆர். பிஜோய்

 மாவட்ட அளவிலான குழுவின் (District Level Committee (DLC)) முடிவில் நீதிமன்றம் ஏன் தலையிட்டது? கால்நடைகளை வெளியேற்றுவது மற்றும் மேய்ச்சல் உரிமைகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


தற்போதைய நிகழ்வு  :


ஏப்ரல் 20 அன்று, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூரில் உள்ள வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான குழுவிற்கு (DLC), அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பிந்தைய சட்டத்துடன் முரண்பட்டால், முந்தைய நீதிமன்ற உத்தரவு செல்லாததாகிவிடும் என்று கூறியது.


இந்த உத்தரவு ஏன் முக்கியமானது?


மாவட்ட அளவிலான குழுவின் (DLC) மார்ச் 2021 முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த முடிவில், பாலியா கலான் தாலுகாவைச் சேர்ந்த பழங்குடி சமூகமான 'தாரு' (Tharu) அவர்களின் வன உரிமை கோரிக்கைகளை மாவட்ட அளவிலான குழு (DLC) நிராகரித்திருந்தது. மாவட்ட அளவிலான குழு, 2000-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைச் சார்ந்திருந்தது. அந்த உத்தரவு, அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை "காடுகள், சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களின் ஒதுக்கீட்டை நீக்குவதை" நிறுத்தியிருந்தது.


மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கும் மாவட்ட அளவிலான குழுவில், கோட்ட வன அலுவலர், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மூன்று மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அடங்குவர்.


சட்டம் இயற்றுவதில் உள்ள முக்கிய சட்டக் கோட்பாடு என்னவென்றால், முந்தைய சட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளில் உள்ள, பிற்காலச் சட்டத்தின் விதிகளுடன் முரண்படும் அனைத்து விதிகளும் செல்லாதவை ஆகும். 2006-ம் ஆண்டின் வன உரிமைச் சட்டமே (Forest Rights Act(FRA)), "தற்சமயம் நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் உள்ள எதையும் பொருட்படுத்தாமல் மற்றும் இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு" வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வனமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. மாவட்ட அளவிலான குழு (DLC) இந்த விதியை மீறியுள்ளது, இது தண்டனைக்குரிய குற்றமாகும்.


மாவட்ட அளவிலான குழு (DLC) தண்டிக்கப்பட்டதா?


இந்த நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் நிவாரணத்தை அளித்திருந்தாலும், விதிமீறுபவர்களைத் தண்டிப்பதற்காக வன உரிமைச் சட்டம் (FRA) வழங்கும் வழிமுறையை உயர்நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. வன உரிமைச் சட்டத்தின்கீழ் கிராம சபை (Gram Sabha) ஒரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகும். சட்டத்தை மீறும் அதிகார அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமுன், அது மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவுக்கு 60 நாட்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.


இருப்பினும், உயர்நீதிமன்றம் இந்த விதியை புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக மாவட்ட அளவிலான குழுவையே (DLC) தனது குற்றத்தை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க புதிதாக முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டது.


வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) இத்தகைய சலுகைகளை அனுமதிப்பதில்லை.



வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) எவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது?


வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரித்து சரிபார்க்கும் செயல்முறை முழுமையாக நிறைவடையும் வரை, அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள வன நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றவோ அல்லது அகற்றவோ வன உரிமைச் சட்டம் (FRA) அனுமதிக்காது. எடுத்துக்காட்டாக, ஜனவரி 2026-இல், உரிமைக் கோரிக்கைகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் வரை, வனத்துறை எவ்விதமான வற்புறுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில், மனுதாரர்களை வெளியேற்றக்கூடாது என்பதும், அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் அமைதியான உடைமை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்பதும் அடங்கும்.


இருப்பினும், வன உரிமைச் சட்டம் (FRA) தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகிறது. உதாரணமாக, செப்டம்பர் 2014-ல், தேனி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட வெளியேற்ற அறிவிப்புகளை (eviction notices) எதிர்த்தும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் தங்களுக்குள்ள உரிமைக் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் அம்மனுவில் கோரியிருந்தனர். அம்மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகள் பெற அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வன அதிகாரி அளித்த விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைக் கோரும் நடைமுறைகளை மேற்கொள்வது, அதிகாரிகளின் நேரத்தை வீணடிப்பதாகவே அமையும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது. எனவே, நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.


இதே உயர்நீதிமன்றம், 2017-ல் பெரம்பலூர், 2020-ல் தூத்துக்குடி, 2021-ல் சிவகங்கை மற்றும் 2022-ல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த இதேபோன்ற மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வன உரிமைச் சட்டத்தால் அத்தகைய உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் (Tamil Nadu Forest Act (TNFA)) கீழ் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேற்றும் உத்தரவுகளைப் (eviction orders) பிறப்பித்து வருகின்றனர்.


வன உரிமைச் சட்டம் (FRA) கால்நடைகளை மேய்க்க அனுமதிக்கிறதா?


இந்த ஆண்டு மார்ச் 13 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, "வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும், தமிழ்நாடு வனச் சட்டத்தின் 57-வது பிரிவின்கீழ் வனங்களுக்குள் கால்நடைகள் அத்துமீறி நுழைவதைத் தடைசெய்யும் விதிமுறைகளே" அந்தத் தடைக்கான சரியான சட்ட அடிப்படை என்று குறிப்பிட்டு, மார்ச் 2022 உத்தரவுக்கு எதிரான மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.


உயர்நீதிமன்றம் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் அனைத்து வனப் பகுதிகளிலும் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடை விதித்திருந்தது. பின்னர் அதே மாதத்தில், அந்தத் தடை உத்தரவைப் புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியது. இருப்பினும், புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுடன் ஒருங்கிணைந்துள்ள பகுதிகள் உட்பட அனைத்துக் காடுகளிலும் மேய்ச்சல் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை (FRA) அது குறிப்பிடவில்லை. மேலும், வன உரிமைச் சட்டமும் ஒரு மத்திய சட்டமாகும். எனவே மேய்ச்சலுக்கான தடை மற்றும் அனுமதி ஆகிய இரண்டிலும் அது ஒரு மாநிலச் சட்டத்தை மீறிச் செயல்படும்.


இதனால்தான், பிந்தைய சட்டத்தில் உள்ள விதிகள், முந்தைய சட்டங்களில் உள்ள முரண்பாடான விதிகளையும், ஒன்றுக்கொன்று முரண்படும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறிச் செயல்படும் என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.


சி.ஆர். பிஜோய் இயற்கை வள முரண்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை ஆராய்கிறார்.


Original article : How Forest Rights Act was reaffirmed by Allahabad HC order? -C.R. Bijoy

Share:

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை உரிமை, சலுகை அல்ல என்று ஏன் தீர்ப்பளித்தது? -மன்ராஜ் கிரேவால் ஷர்மா

நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance (DA)) மற்றும் அகவிலை நிவாரண (Dearness Relief (DR)) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு தாமதம் செய்ததையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய 90 பக்கத் தீர்ப்பு, பஞ்சாபில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் சலுகைகள் அல்ல, மாறாக அவை செயல்ப்படுத்தக்கூடிய உரிமைகள் என்றும், சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்புகளின் ஒரு பகுதியாகவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டவை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 8 அன்று வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், நீதிபதி ஹர்பிரீத் சிங் பிரார், பஞ்சாப் மாநில மின்சாரக் கழகம் லிமிடெட் மற்றும் லூதியானா மாநகராட்சி ஆகியவற்றின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்த மூன்று நிதிப் பேராணை  மனுக்களைத் தள்ளுபடி செய்தார். நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) தவணைகளை வழங்குவதில் மாநில அரசு காட்டிய தாமதத்தையும், ஓய்வூதியதாரர்களின் வயதின் அடிப்படையில் நிலுவைத் தொகையைப் பிரித்து வழங்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தையும் மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


இந்தத் தீர்ப்பு, அரசு சீராகச் செயல்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்து ஊழியர்களையும் ஓய்வூதியதாரர்களையும் சமமாக நடத்தப்பட  வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிர்வாகம் குறித்த ஒரு பரந்த செய்தியையும் அனுப்புகிறது.


இந்த சர்ச்சை எதைப் பற்றியது?


6-வது பஞ்சாப் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பஞ்சாப் அரசு செயல்படுத்தியதை மையமாகக் கொண்டு இந்த வழக்கு அமைந்தது. 2021-ல் மாநில அரசு இந்தப் பரிந்துரைகளை முறையாக ஏற்றுக்கொண்டு, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) விஷயத்தில் “ஒன்றிய அரசின் முறையைப்" பின்பற்ற ஒப்புக்கொண்ட போதிலும், பல தவணைகள் செலுத்தப்படாமல் இருந்தன அல்லது தாமதமாகின.


2025-ல், நிலுவைத் தொகையைப் படிப்படியாக வழங்குவதற்காக, ஓய்வூதியதாரர்களை வயது அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரித்து, அரசு ஒரு "அலுவல்முறைக் கலைப்பு திட்டத்தை" (liquidation plan) அறிமுகப்படுத்தியது. மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் இளைய ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலம், சில சமயங்களில் பல ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.


அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட தாமதமும், வயது அடிப்படையிலான சமத்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.


கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது?


அகவிலைப்படி (DA), அகவிலை நிவாரணம் (DR) மீதான தீர்ப்புகள் கொள்கைக்குள்  வருவதால், அவை நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்ற அரசின்வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. கொள்கை முடிவுகள் தன்னிச்சையாகவோ அல்லது அரசியலமைப்பின் 14, 16 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை மீறும்போதோ நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


செயலற்ற தன்மையையோ அல்லது சமமற்ற நடத்தையையோ நியாயப்படுத்த, அரசாங்கம் "கொள்கையை" ஒரு காரணமாக பயன்படுத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு  கோடிட்டுக் காட்டியது.


மாநிலம்  ஒன்றிய  அரசின் வழிமுறைக்குக் கட்டுப்பட்டதா?


ஆம். பஞ்சாப், ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, ஒன்றிய அரசின் வழிமுறையை பின்பற்ற தேர்ந்தெடுத்தவுடன், அதை முழுமையாகச் செயல்படுத்த சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதில் அகவிலைப்படியின் விகிதம், கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரம் மற்றும் திருத்தங்களின் நேரம் ஆகியவற்றை ஒப்பிடுவதும் அடங்கும். எந்தவொரு பகுதியளவு அல்லது தாமதமான செயலாக்கமும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிலிருந்து விலகுவதற்குச் சமம் என்று நீதிமன்றம் கூறியது.


ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதன் பலன்கள் உரிமையாகவே கிடைக்கும், அவற்றை பாகுபடுத்திப் பயன்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


நிதி நெருக்கடிகள் தாமதத்தை நியாயப்படுத்த முடியுமா?


இதற்கு நீதிமன்றம் எதிர்மறையாகப் பதிலளித்தது. அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம்த் தொகையை (DR) மறுப்பதற்கோ அல்லது காலதாமதப்படுத்துவதற்கோ நிதி நெருக்கடியை ஒரு பொதுவான காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


அகவிலைப்படியை (DA) பணவீக்கத்தை ஈடுசெய்வதற்கான ஒரு வழிமுறை என்று விவரித்த நீதிமன்றம், அதை நிறுத்தி வைப்பது ஒரு அரசின் கடமைகளைச் சீர்குலைக்கும் என்று கூறியது. மேலும், பஞ்சாபின் நிதி நிர்வாகத்தை விமர்சித்த முந்தைய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியை நீதிமன்றம், இது போன்ற வாதங்களை நிராகரித்தது.


"அலுவல்முறைக் கலைப்பு" (liquidation plan) திட்டத்திற்கு என்ன ஆனது?


பிப்ரவரி 18, 2025 தேதியிட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி நீதிமன்றம் ரத்து செய்தது.


அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஒரே சீரான பிரிவினர் என்றும், தவணை முறையில் பணம் வழங்குவதற்காக அவர்களை வயது வாரியாகப் பிரிப்பது தன்னிச்சையானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பணவீக்கம் அனைத்து ஓய்வூதியதாரர்களையும் சமமாகப் பாதிக்கிறது என்றும், செயற்கையான பிரிவுகளை உருவாக்குவது அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறுகிறது (right to equality) என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஏற்கனவே தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைக்காக இளம் ஓய்வூதியதாரர்களைப் பல ஆண்டுகள் காத்திருக்க வைப்பதாகவும் இந்தத்திட்டம் விமர்சிக்கப்பட்டது.


ஊழியர்களிடையே உள்ள  சமத்துவம் என்றால்  என்ன?


மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund) பெறும் அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.


அகில இந்திய சேவை அதிகாரிகள் போன்ற உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) பலன்களை வழங்கி, மற்றவர்களுக்கு அதை மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ அரசால் முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அதுபோன்ற எந்தவொரு பாகுபாடும் பகுத்தறிவு அடிப்படையற்றது மற்றும் அரசியலமைப்புரீதியாக அனுமதிக்க முடியாதது என்று நீதிமன்றம் கூறியது.




இந்தத் தீர்ப்பு மனுதாரர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பொருந்துமா?


ஆம். ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தத் தீர்ப்பு "தனிநபர் மீதான நடவடிக்கை" (in rem) அடிப்படையில் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது. இது நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கு மட்டுமல்லாமல், அதேநிலையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.


இது மாநிலம் முழுவதும் மிகப் பெரிய குழுவினருக்கு இந்த உயர்வு பயனளிப்பதை உறுதி செய்கிறது.


நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது?


நீதிமன்றம் ஒரு தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைநிவாரணத் (DR) தவணைகளையும் ஜூன் 30, 2026-க்குள் ஒன்றிய அரசின் விகிதாச்சாரப்படி வழங்குமாறு மாநில அரசு மற்றும் அதன் கழகங்களுக்கு உத்தரவிட்டது.


மேலும், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முறையிலேயே அனைத்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகளும் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் மூலம், படிப்படியாக (staggered system) வழங்கப்பட்ட முறை நடைமுறையில் நீக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, ஜூலை 2, 2026-க்குள் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.


Original Link: Why the Punjab and Haryana High Court ruled that DA, DR are a right, not a favour?.


Share:

இந்தியாவின் நீதிமன்ற அமைப்பில், காலனித்துவ காலத்துக் கட்டடக்கலை ஒரு மறைமுகத் தடையாக இருக்கிறதா? -சித்தார்த் ராவ் எர்ரபெல்லி

மகாராஷ்டிரா, அசாம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் புதிய உயர்நீதிமன்ற வளாகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நீதிமன்றங்களை இடநெருக்கடி மிகுந்த 'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலையை (Judicial slumisation) தொடர்வதா அல்லது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அவற்றை வடிவமைப்பதா?.


அசாம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய உயர் நீதிமன்ற வளாகங்களைக் கட்டுவதற்கான திட்டம், வேகமாக மாறிவரும் இந்தியாவிற்கு ஏற்ப நீதிமன்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. மேலும், நீதிமன்றக் கட்டிடங்களைச் சிறந்த முறையில் வடிவமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது. இதன் மூலம் வழக்குத் தாமதங்களைக் குறைக்கவும், நீதித்துறை மீதான மக்களின் பார்வையை மேம்படுத்தவும் முடியும் என்கின்றனர்.

இந்தியாவின் நீதிமன்றக் கட்டிடங்கள், அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு தெளிவான அதிகாரப் படிநிலையைக் காட்டும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டன. இன்றைய காலக்கட்டத்தைவிட மிகக் குறைவான வழக்குகளே இருந்த காலத்தில் இந்த நீதிமன்றங்கள் கட்டப்பட்டன. உதாரணமாக, 1960-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வெறும் 14 நீதிபதிகளும், 2,656 நிலுவையில் உள்ள வழக்குகளும் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, 34 நீதிபதிகளும் சுமார் 86,000 நிலுவை வழக்குகளும் உள்ளன. அதேபோல், உயர்நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 63 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.6 கோடிக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இந்த அதிகப்படியான வழக்குகளைக் கையாளுவதற்காக, நீதிமன்றங்கள் எந்தவொரு முறையான திட்டமிடலும் இன்றி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அறிஞர் பாட்ரிசியா பிராங்கோ இதனை "'நீதித்துறை வளாகங்களின் நெரிசல்நிலை" என்று அழைக்கிறார். இத்தகைய விரிவாக்கத்தால் நீதிமன்றங்கள் நெரிசல் மிகுந்த இடங்களாக மாறுகின்றன. அங்கு வழக்கறிஞர்களும் பார்வையாளர்களும் நீதிமன்ற அறைகளை அடைய நீண்ட, கூட்ட நெரிசலான தாழ்வாரங்கள் வழியாக முண்டியடித்துச் செல்ல வேண்டியுள்ளது. உள்ளே, குறைபாடான ஒலி அமைப்பு காரணமாக நீதிபதிகள் பேசுவதைக் கேட்பது கடினமாக உள்ளது, மேலும் மக்கள் நெரிசலான அறைகளில் சத்தமாகப் பேச வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரு நீதிமன்ற வளாகம் சரியான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டால், அது மக்களுக்கு ஒரு வரவேற்புணர்வையும், தங்கள் தரப்பு நியாயங்கள் கேட்கப்படுகின்றன என்ற நம்பிக்கையையும் தரும் என்றும் இது நீதித்துறை மீதான மக்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.


நீதிமன்றத்தின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டால், அது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் என நீதித்துறையோடு தொடர்புடைய அனைவருக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் என்கின்றனர். இது வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். இந்திய நீதிமன்றங்கள் 'Docket system' என்ற முறையில் இயங்குகின்றன. அதாவது, வழக்குகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பதில், வரிசை எண்களின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன. வழக்கறிஞர்களுக்கு ஒரேநாளில் வெவ்வேறு நீதிமன்றங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கலாம். விசாரணை நேரம் ஒன்றுடன் ஒன்று மாறுபடும்போது, அவர்களால் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு விரைவாகச் செல்ல முடிவதில்லை. இதனால் நீதிபதிகளின் வேலை பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் ஒரு வழக்கு பல நாட்களுக்குத் தள்ளிப்போக நேரிடுகிறது. இதன் காரணமாகவே, இளம்வழக்கறிஞர்கள் முதலில் 'Pass-over' (வழக்கைச் சற்று தள்ளிவைக்கக் கோருதல்) கேட்பதற்கும், தங்கள் மூத்த வழக்கறிஞர்கள் மற்ற நீதிமன்றங்களில் வாதாடும்போது அவர்களுக்குப் பதிலாக 'Proxy' (பதிலாள்) முறையில் ஆஜராவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதன் மூலம் இந்தச் சிரமங்களைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.


நீதிமன்ற வளாகங்களில் உள்ள தடைகள் நெரிசலான வாகன நிறுத்தத்தில் இருந்தே தொடங்குகின்றன, இது உள்ளே நுழைவதற்கே காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் அங்குள்ள வசதிகள் பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. இடப்பற்றாக்குறையினால் சில முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. உதாரணமாக, மகப்பேறு நலச் சட்டம் 1961-ன்கீழ் (Maternity Benefit Act, 1961) உயர்நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. ஆனால், அதே சட்டம் வலியுறுத்தும் குழந்தைகள் காப்பகங்கள் பல நீதிமன்ற வளாகங்களில் இல்லை என்பதையும் சுட்டிக்கட்டுகின்றனர்.


1930-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 'நியூ டீல்' (New Deal) திட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா தனது நீதிமன்றக் கட்டிடங்களை மீண்டும் கட்டியபோதும், 1980-ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் போது ஜப்பான் டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தை மறுசீரமைப்பு செய்தபோதும், நீதிமன்ற அறைகளுக்காக குறிபிட்ட வடிவமைப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கின. இந்தியாவும் வெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டு, காலனித்துவ கால நீதிமன்ற கட்டிட பாணியைத் தாண்டி நீதிமன்ற வளாகங்களை மறுவடிவமைப்பு செய்ய நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றம், ஆஸ்திரேலியாவின் உயர்நீதிமன்றம் மற்றும் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குனுனுர்ரா நீதிமன்றம் (Kununurra courthouse) ஆகியவற்றை இந்தியா முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.


தேசிய வழக்கு மேலாண்மை அமைப்பு (National Case Management System (NCMS)) 2024-ன்படி, நீதிமன்றங்களுக்கு வருபவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற வளர்ச்சித் திட்டமிடலுக்கான துணைக் குழு, மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களுக்கான மாதிரித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உயர்நீதிமன்றங்களை மறுசீரமைப்பதையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களை உருவாக்குவதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


அதிகப்படியான பணிச்சுமையால் பாதிக்கபட்டுள்ள உயர்நீதிமன்றங்களைச் சீரமைக்க பல மாநிலங்கள் முன்வரும் நிலையில், இதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லையென்றால், அந்த நீதிமன்றக் கட்டிடங்கள் தவறான வடிவமைப்பில் கட்டப்பட வாய்ப்புள்ளது. இது ஏற்கனவே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதிய சிக்கல்களையே உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.


சித்தார்த் ராவ் எர்ரபெல்லி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் கௌரவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்றங்களின் கட்டிட அமைப்புக்கும், நீதித்துறையின் செயல்பாட்டுத் திறனுக்கும் இடையிலானத் தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


Original Link: Is colonial architecture the hidden bottleneck in India’s legal system?


Share: