பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் (Creamy Layer) முறைக்கு ஒன்றிய அரசு காட்டும் எதிர்ப்பில் என்னென்ன அடங்கியுள்ளன? -அபினய் லக்ஷ்மன்

 இந்திரா சாவ்னி வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து (OBC) 'கிரீமி லேயர்' (creamy layer - பொருளாதாரரீதியாக முன்னேறிய பிரிவு) பிரிவினரைத் தனியாகப் பிரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டது. இதன் விளைவாக, உட்பிரிவு (sub-categorisation) குறித்த கருத்தாக்கமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வகைப்பாட்டையும் தாண்டி விரிவடைந்தது.


தற்போதைய நிகழ்வு :


பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகிய இடஒதுக்கீடு பிரிவுகளிலிருந்தும் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) உள்ளது போல) 'பொருளாதாரத்தில் முன்னேறிய' பிரிவினரை விலக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்து, ஒன்றிய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அதாவது, இடஒதுக்கீடு பிரிவுகளுக்குள் இத்தகைய விலக்கு முறையை அமல்படுத்தும் கோட்பாடு பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) வகைப்பாடுகளுக்குப் பொருந்தாது என்று அது கூறியது.


இதற்கு என்ன காரணம்?


உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள மனுக்கள், பெரும்பாலும் ஆகஸ்ட் 2024-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்புக்குப் (தவிந்தர் சிங் தீர்ப்பு) பிறகே தாக்கல் செய்யப்பட்டன. அந்தத் தீர்ப்பு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) என வகைப்படுத்தப்பட்ட சமூகங்களின் "பன்முகத்தன்மையையும்" (heterogeneity), மேலும் அரசியலமைப்புப் பட்டியல்களில் உள்ள சமூகங்களிடையே நிலவும் படிநிலை அடிப்படையிலான பின்தங்கிய நிலையையும் அங்கீகரித்தது. அவ்வாறு செய்தபோது, ​​அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தொடர்ந்து பட்டியல்களில் ஒப்பீட்டளவில் குறைவான அளவில் பின்தங்கிய நிலை கொண்ட சமூகங்களால், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்களுக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியது.


இருப்பினும், இந்தத் தீர்ப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய், தாம் எழுதிய கருத்தில், படிநிலை சமத்துவமின்மை மற்றும் பொதுக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து சில பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சமூகங்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் பிரச்சனையானது, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திரா சாஹ்னி தீர்ப்பில் (1992) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (OBC) அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இந்தப் பட்டியல்களுக்குள்ளும் "பொருளாதாரத்தில் முன்னேறிய " பிரிவினரை விலக்கும் ஒரு கருத்தை அறிமுகப்படுத்துவதை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்க வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்று குறிப்பிட்டார்.


இந்தக் குறிப்பிட்ட கருத்துகணிப்பு, நாடு முழுவதும் உள்ள பல பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சங்கங்களிடமிருந்து எதிர்ப்புகளைத் தெரிவித்தன. மேலும், ஒன்றிய அரசும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டிற்கு 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக உடனடியாக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்தன. ஆனால் இது, பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் இட ஒதுக்கீட்டிற்கும் இந்தக் கருத்தாக்கத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று உத்தரவு கோரும் மனுக்களுக்கு உதவியது. இது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பத் தூண்டியது. மேலும், 2024-ம் ஆண்டின் தேவிந்தர் சிங் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் கோரியதுடன், துணைப் பிரிவுகளாகப் பிரிப்பதையும் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரின் விலக்கலையும் மீண்டும் ஒருமுறை ஒன்றோடொன்று பிணைத்தது.


அந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள சூழல் என்ன?


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' விலக்கை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்த நிலை, நாட்டில் உள்ள கணிசமான மாணவர்கள் (பெரும்பாலும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்), ஆளும் பாஜக அமைப்புக்கு ஆதரவாக இருந்து வருபவர்கள், 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கம்' (Reservation Hatao Andolan (RHA)) என்ற இயக்கத்தை ஏற்பாடு செய்துவரும் வேளையில் இந்த நிகழ்வு வந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யால் தூண்டப்பட்ட நாடு தழுவிய மாணவர் இயக்கம், முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த உடனேயே, இந்த இயக்கம் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உருவானது. இந்த 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கம்' (RHA) பக்கம் சமூக ஊடகத் தளத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளதுடன், தற்போது அஜித் பார்தி, அனுராதா த்வாரி மற்றும் நேஹா தாஸ் போன்ற இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய நபர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மூவரும் பொதுப் பிரிவு மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2026 சமூக சமத்துவ விதிகளுக்கு எதிரான போராட்டங்களைத் திரட்டி வலுப்படுத்தவும் உதவியுள்ளனர். அனைத்து சமூக-பொருளாதார சாதி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளையும் ஒழித்து, "வருமான அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை" மட்டும் தக்கவைக்க வேண்டும் என்பதே 'இட ஒதுக்கீடு ஒழிப்பு இயக்கத்தின்' (RHA) முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.


தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை, உள்-வகைப்பாடு (sub-categorisation) மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய  ஆகியவை எதைக் குறிக்கின்றன?


1990-ம் ஆண்டு வரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC)) தேசிய வகைப்பாடு நடைமுறைக்கு வராத போதிலும், அரசியலமைப்பின் 16(4) பிரிவின் அடிப்படையில் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட, அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சாதிகளிடையே நிலவிய படிநிலை சமத்துவமின்மைப் பிரச்சனையை நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பல ஆண்டுகளாக அங்கீகரித்து வந்தன. 1979-ல் மண்டல் ஆணையம் (Mandal Commission) அமைக்கப்படுவதற்கு முன்பே ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் பல மாநிலங்களில் பொது வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு அட்டவணைகள், மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தங்களின் மொத்த ஒதுக்கீட்டுப் பங்கை, குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்குச் சிறிய பங்குகளாகப் பிரித்து, ஓரளவிற்குச் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தன என்பதைக் காட்டுகின்றன. இதுவே உள்-வகைப்பாடு (sub-categorisation) என்ற கருத்தாகும்.


1992-ல், பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசு நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கையை உறுதி செய்தபோது, ​​உச்சநீதிமன்றம் "பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்" என்ற கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்திரா சாஹ்னி வழக்கில், இந்த இட ஒதுக்கீட்டின் பலன் தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பெறுவதை உறுதிசெய்ய இத்தகைய யோசனை அவசியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட அளவிலான சமூக மற்றும் பொருளாதார சலுகைகளைப் பெற்றிருந்த பெற்றோர்களையும் குடும்பங்களையும் கொண்ட சில வகை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அதாவது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே உள்ள பொருளாதாரத்தில் முன்னேறிய, இந்த ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறுவதிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஆகவே, உள்-வகைப்பாடு என்பதன் நோக்கம், ஒரு பிரிவிற்குள் இருக்கும் வெவ்வேறு குழுக்கள், குறிப்பாக அவர்கள் அனைவரும் சமமாகப் பின்தங்கியவர்களாக இல்லாதபோது, இட ஒதுக்கீட்டிற்கான நியாயமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அப்பிரிவிற்கு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவைப் பிரிப்பதாகும். அதே சமயம், "பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்" விலக்கு என்ற கருத்தின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்குள் இருக்கும், தங்கள் சமூகங்கள் பொதுவாக இன்னும் எதிர்கொள்ளக்கூடிய பாகுபாடு அல்லது பின்தங்கிய நிலையின் சில விளைவுகளிலிருந்து தப்பித்திருக்கக்கூடிய தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களை இட ஒதுக்கீட்டைப் பெறுவதிலிருந்து முற்றிலுமாக விலக்குவதாகும்.


இந்திரா சாஹ்னி தீர்ப்புக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து (OBCs) ‘பொருளாதாரத்தில் முன்னேறிய ‘பிரிவினரை (creamy layer) பிரித்தெடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வகுத்தது (அரசியலமைப்பு, இராணுவம் அல்லது அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ள பெற்றோர்களைக் கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறைந்தபட்ச வருமானம்/செல்வ வரம்பைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கான தகுதிகளாக இருந்தனர்). மேலும், உள்-வகைப்பாடுகளாகப் பிரிக்கும் எண்ணம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகைப்பாட்டையும் தாண்டி பட்டியல் சாதியினர் போன்ற பிரிவுகளுக்கும் பரவியது. இது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல பத்தாண்டுகாலப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதன் உச்சகட்டமாக, ஆகஸ்ட் 1, 2024 அன்று தேவிந்தர் சிங் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு, மாநில அரசுகள் பட்டியல்களுக்குள் உள் பிரிவுகளாகப் பிரிக்க அனுமதித்தது. பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் பட்டியல்களில் சேர்ப்பதும் நீக்குவதும் நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார வரம்பில் இருந்தாலும், பட்டியல்களில் சமூகங்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதிலிருந்து இது வேறுபட்டது என்பதால், நிர்வாக அமைப்புகள் (மாநில அரசுகள் உட்பட) இந்தப் பட்டியல்களுக்குள் உள்-பிரிவுகளாகப் பிரிக்கும் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்று நீதிமன்றம் முக்கியமாகத் தீர்ப்பளித்தது.


உள்-வகைப்பாடு (sub-categorisation) மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை விலக்குதல் ஆகிய இரண்டு வழிமுறைகளும், ஒரு குறிப்பிட்ட பிரிவிற்குள் இருக்கும் ஒப்பீட்டளவில் பின்தங்கிய சமூகங்கள் அல்லது தனிநபர்களை, அதே பிரிவில் உள்ள ஒப்பீட்டளவில் முன்னேறிய சமூகங்கள் அல்லது தனிநபர்கள் வெளியேற்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், உள்-வகைப்பாடு ஒரு பிரிவிற்குள் உள்ள குழுக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளை முடிந்தவரை சமமாகப் பகிர்ந்தளிக்கும் அதே வேளையில், கிரிமிலேயரை விலக்குதல் என்ற வழிமுறையானது சில தனிநபர்களை ஒதுக்கீடுகளிலிருந்து முற்றிலுமாக விலக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பொருளாதாரத்தில் முன்னேறிய  கொள்கை எங்கு பொருந்தும் மற்றும் எங்கே உள்-வகைப்பாடு செய்யப்படுகிறது?


'பொருளாதாரத்தில் முன்னேறிய ' விலக்குகள் என்ற கருத்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மட்டுமே பொருந்தும் என்று அரசாங்கம் கூறிவந்தாலும், 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (Economically Weaker Sections (EWS)) இட ஒதுக்கீடும் தொழில்நுட்பரீதியாக இதே போன்ற ஒரு கருத்தை உள்ளடக்கியுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான ஒரு நிபந்தனையாக, ஒரு தனிநபர் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) அல்லது ஓபிசிக்களுக்கான எந்தவொரு சலுகைகளையும் பெற்றிருக்கக் கூடாது என்பது தேவைப்பட்டாலும், ஓபிசிக்களைப் போலவே, ஒரு குறிப்பிட்ட குடும்ப வருமானம் மற்றும் சொத்து வரம்பைக் கொண்ட தனிநபர்கள் வெளிப்படையாக விலக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினர் (EWS) விஷயத்தில் வருமானம்/சொத்தைக் கணக்கிடும் முறை வேறுபட்டது.


இருப்பினும், உள்-வகைப்பாடு (sub-categorisation) எனும் வழிமுறையானது, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசை விட மாநில அரசுகளாலேயே இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் பட்டியல் சாதியினர் பிரிவைச் சிறிய குழுக்களாகப் பிரித்த வரலாற்றைக் கொண்டுள்ளன. மிசோரம் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் ஒதுக்கீடும் உள்-வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இருப்பினும், தேசிய அளவில் ஒன்றிய அரசு உள்-வகைப்பாடுகளாகப் பிரித்தலுக்கு உள்ள ஒரே விவாதத்திற்குரிய உதாரணம், ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளி சேர்க்கைக்கான பழங்குடியினர் (ST) பிரிவு ஒதுக்கீடுகளில்தான் உள்ளது. இதில், பழங்குடியினரிடையே குறிப்பாக நலிவடைந்த பழங்குடியினரின் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, பழங்குடியினர் ஒதுக்கீடு பிரிக்கப்பட்டுள்ளது.


ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளும் அதற்கான காரணங்களும் என்ன?


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகள், பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்காக தேசிய அளவில் உள்-வகைப்பாடு முறையைப் பயன்படுத்துவதற்கான தங்கள் திட்டங்களை இதுவரை பகிரங்கமாக விளக்கவில்லை என்றாலும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதற்கு அவை காட்டும் எதிர்ப்பானது, இது சில சமூகங்களையோ அல்லது தனிநபர்களையோ இட ஒதுக்கீட்டின் பலன்களிலிருந்து முற்றிலுமாக விலக்குவதை அவசியமாக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அரசியலமைப்பின்படி, இந்த அதிகாரம் நாடாளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது என்று சமூக நீதி அமைச்சகம் வாதிட்டுள்ளது. மேலும், இதுவரையிலான நீதித்துறை முன்னுதாரணங்கள் பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்’ விலக்கைக் கோரவோ அல்லது பரிந்துரைக்கவோ இல்லை என்றும் அது வாதிட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளில் ஒன்றிய அரசு இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கையை பரிசீலிப்பதற்கான ஒரு சாத்தியமான வழிமுறையையும் ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.  இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் இத்தகைய மாற்றங்கள், "ஒதுக்கப்பட்ட பிரிவினரின் சமூக-பொருளாதாரத் தரவுகள் உட்பட, ஒரு முழுமையான ஆய்வு மற்றும் வலுவான அனுபவப்பூர்வமான ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அது கூறியிருந்தாலும், அதற்கு உத்தரவிடுவது நீதித்துறையின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.


சுவாரஸ்யமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' விலக்குகள் என்ற வழிமுறை எந்தெந்த வகைப்பாடுகளுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவாக இருந்தபோதிலும், உள்-வகைப்பாடு முறையைச் செயல்படுத்துவதில் அது தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தனது முதல் பதவிக்காலத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) உள்-வகைப்பாட்டை தேசிய அளவில் அமல்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்டியது. 2015-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Backward Classes) இதை பரிந்துரைத்தது. மேலும், இந்தப் பணிக்காக ஒன்றிய அரசு 2017-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி. ரோகிணி ஆணையத்தை அமைத்தது. சமர்ப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், அந்த அறிக்கை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.


இதேபோல், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்திலும், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பட்டியல் சாதியினரை உட்பிரிவுகளாகப் பிரிக்கும் பிரச்சினை முக்கியத்துவம் பெறும் நிலையிலும், ​​மடிகா (Madiga) சமூகத்தினரின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதை ஆராய, ஒன்றிய அரசு அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் ஒரு உள்ளகக் குழுவை அமைத்தது. ஆனால், தேவிந்தர் சிங் தீர்ப்பு கொள்கைரீதியாக இந்த முயற்சிக்கு வழிவகுத்ததால், ஒன்றிய அரசு இது குறித்து மௌனம் காத்து வருகிறது.


Original articles: What does the Centre’s opposition to creamy layer for SC/STs entail? -Abhinay Lakshman

Share: