ஆந்திர மாநிலம் தனது செயற்கை நுண்ணறிவு இலக்குகளுக்கு மின்சாரம் வழங்க எப்படித் திட்டமிடுகிறது? : தரவு மையங்கள் தாங்களே மின்சாரத்தை வாங்கி விநியோகிக்க அனுமதி. -பிரத்யுஷ் தீப்

 பெரிய தரவு மையங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகவே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில், அவற்றுக்கு 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமத்தை' (Deemed power distributors) அரசு வழங்குகிறது. இதன் மூலம் அந்த மையங்களின் மின்சாரச் செலவு குறைவதோடு, உள்ளூர் மின்சார வாரியங்களின் சுமையையும் குறைக்க முடியும்.


செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இயக்குவதற்குத் தேவையான பெரிய உள்கட்டமைப்பு வசதிகளான இந்தத் தரவு மையங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிக அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் துறைகளில் ஒன்றாக உள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், கணினிகளின் செயலாக்கத் திறனுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், இந்த மையங்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்குவது மற்றும் அவற்றை எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்து அரசாங்கங்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றன.


இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரிய இலக்குகளைக் கொண்டுள்ள ஆந்திரப் பிரதேச அரசு, ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கொள்கையின்படி, தரவு மையங்களுக்கு 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமம்' (Deemed Distribution Licence (DDL)) வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவை தங்களுக்குள்ளேயே ஒரு மின் விநியோக நிறுவனமாகச் செயல்பட அனுமதி கிடைக்கிறது.


இந்தியாவின் மின்சாரத் துறையில் 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள்' (DDL) அதாவது, மின்சாரத்தை நேரடியாக விநியோகம் செய்ய அரசு வழங்கும் சிறப்பு அனுமதி என்பது புதிய விஷயம் அல்ல. இவை முக்கியமாக அரசு நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones), துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்திய ரயில்வேகூட சமீபகாலம் வரை சுமார் பத்து ஆண்டுகளாக இந்தச் சிறப்பு விநியோக உரிமத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


இருப்பினும், இதுபோன்ற உரிமங்களைத் தனியார் தரவு மைய மேம்பாட்டாளர்களுக்கு வழங்குவது என்பது வழக்கமான நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு பெரிய மாற்றமாகும்.


ஆனால், உண்மையில் இந்த உரிமங்கள் என்றால் என்ன, இவை தரவு மையங்களுக்கு எவ்வாறு உதவும்? மிக எளிமையாகச் சொன்னால், இந்த உரிமங்கள் தரவு மையங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறவும், அதை அவர்களின் சொந்த வளாகங்களுக்குள்ளேயே விநியோகம் செய்யவும் அனுமதிக்கும் முறை ஆகும்.


ஆனால், இதில் இதைவிட கூடுதல் விஷயங்கள் உள்ளன. இந்த புதிய கொள்கை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.


தரவு மையங்களின் மிகப்பெரிய மின்சாரத் தேவைகள்


செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது நெறிமுறைகள் (Algorithms) மூலம் இயங்குகிறது. ஆனால், இந்த நெறிமுறைகள் செயல்பட, தரவு மையங்களில் இருக்கும் பிரம்மாண்டமான கணினித்திறன் தேவைப்படுகிறது. இந்தத் தரவு மையங்கள் இயங்குவதற்கு மிக அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால்தான், ஒரு தரவு மையம் அங்கு எத்தனை கணினி சேவையாகம் (Servers) இருக்கின்றன என்பதை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை வைத்தே அடையாளப்படுத்தப்படுகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், அதற்கான கணினித்திறன் தேவையும் அதிகரித்து, புதிய தரவு மையங்களின் கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. இதனுடன் சேர்ந்து மின்சாரத்திற்கான தேவையும் மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.


உலகில் உள்ள தரவு மையங்களின் எண்ணிக்கை மற்றும் மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் பாதிக்கும் மேல் அமெரிக்காவில்தான் (US) உள்ளன. அங்கு 'உலகளாவிய மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள்' (Hyperscalers) மிக வேகமாக விரிவடைந்து வருவது, தற்போது ஒரு அரசியல் மற்றும் ஒழுங்குமுறை விவாதப் பொருளாக மாறியுள்ளது. தரவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், அவற்றின் அதிகப்படியான மின்சாரத் தேவையால் பொதுமக்களுக்கான மின்சாரக் கட்டணமும் உயர்கிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.


இதேபோன்ற கவலைகள் இந்தியாவிலும் உருவாகலாம். இந்தியாவின் தற்போதைய தரவு மையத் திறன் சுமார் 1.2 கிகாவாட் (GW) அளவாக உள்ளது. ஆனால், இது 2030-ஆம் ஆண்டிற்குள் நான்கு மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்திய மாநிலங்களில், ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கியத் தரவு மைய மையமாக மாறுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளது.


கூகுள் (Google) நிறுவனம் விசாகப்பட்டினத்தில் 1 கிகாவாட் (GW) திறன் கொண்ட தரவு மைய வளாகத்தை அமைத்து வருகிறது. இது நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். மேலும், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மட்டுமே 5 கிகாவாட் (GW) தரவு மையத் திறனை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.


திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள் எவ்வாறு உதவும்?


அமெரிக்கா (US) போன்ற நாடுகள் போலல்லாமல், இந்தியாவில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம், வீடுகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கான கட்டணத்தைவிட மிக அதிகம். ஏனெனில், தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் செலுத்தும் கூடுதல் கட்டணமே, வீடுகளுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் மலிவு விலை மற்றும் இலவச மின்சாரத்திற்கான மானியத் தொகையாக மாறுகிறது.



தரவு மையங்களுக்கு திட்டமிடப்பட்ட விநியோக உரிமங்கள் (DDL) ஏன் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள, முதலில் மின்சாரக் கட்டணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.


பொதுவாக ஒரு மின்சாரக் கட்டண ரசீதில் (Electricity bill) இரண்டு பகுதிகள் இருக்கும்: நிலைக்கட்டணம் (Fixed charges) மற்றும் நுகர்வுக் கட்டணம் (Energy charges). நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் நிலைக்கட்டணத்தைக் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். ஆனால், நுகர்வுக் கட்டணம் என்பது நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மட்டுமே மாறுபடுகிறது.


மின்உற்பத்தி நிலையங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை, மின்சாரத்தைக் கொண்டு சேர்க்கும் உள்கட்டமைப்பு வசதிகள், மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் மற்றும் மின் விநியோகத் தடையற்ற பராமரிப்புப் பணிகள் போன்ற செலவுகளை இந்த நிலைக்கட்டணமே ஈடுகட்டுகிறது. ஒரு மின் விநியோக நிறுவனம் (Distribution Company (Discom)) ஒரு தொழிற்சாலை அல்லது தரவு மையம் போன்ற பெரிய வாடிக்கையாளரைப் பெறும்போது, அவர்களுக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி நிலையங்களில் இருந்து உறுதி செய்யவேண்டும். தேவைப்பட்டால் மின் பகிர்மானத்திற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் வேண்டும். இந்த கூடுதல் செலவுகள் அனைத்தும் இறுதியில் நுகர்வோரின் மின்கட்டணத்திலேயே சேர்க்கப்படுகின்றன.


தரவு மையங்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் இவற்றின் மின்சாரத் தேவை நூற்றுக்கணக்கான மெகாவாட் (MW) வரை இருக்கக்கூடும். இது ஒரு நடுத்தர அளவிலான நகரத்தின் மின்சாரத் தேவைக்கு இணையானதாகும். ஆந்திரப் பிரதேச மாநில அரசின் கொள்கைப்படி, குறைந்தபட்சம் 300 மெகாவாட் (MW) மின் இணைப்புச் சுமை கொண்ட தரவு மையங்களுக்குத் 'திட்டமிடப்பட்ட விநியோக உரிமம்' (DDL) அந்தஸ்து வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்தத் தகுதியைப் பெறுவதற்காகத் தங்களின் பல கிளை மையங்களின் மின் தேவைகளை ஒன்றாக இணைத்துக் காட்டவும் இக்கொள்கை அனுமதிக்கிறது.



திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் (DDL) பெற்றவுடன், இந்த பெரிய மின் நுகர்வோர்கள் தங்களுக்கான மின்சார விநியோகத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளவும், தங்களது திட்டப் பகுதிக்குள்ளேயே விநியோக உள்கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இதன் விளைவாக, அதிக ஆற்றல் தேவைப்படும் இந்த வசதிகளுக்காக பிரத்யேகமாக கூடுதல் மின் உற்பத்தியிலோ அல்லது மின்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதிலோ உள்ளூர் மின்விநியோக நிறுவனம் (Discom) முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


இது தரவு மைய நிறுவனர்களுக்கு மிகப்பெரிய பலன்களைத் தரும். திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் பெற்றவர்கள் திறந்தவெளி அணுகல் (Open-access) ஏற்பாடுகள் உட்பட எந்தவொரு சட்டபூர்வமான மூலத்திலிருந்தும் மின்சாரத்தை வாங்கிக்கொள்ள முடியும். மேலும், திறந்தவெளி அணுகல் நுகர்வோர் மீது வழக்கமாக விதிக்கப்படும் குறுக்கு-மானிய கூடுதல் கட்டணம் (Cross-subsidy surcharge) மற்றும் கூடுதல் கட்டணங்களில் (Additional surcharge) இருந்தும் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் விவசாயப் பயனாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, வணிகரீதியான நுகர்வோர் பொதுவாகச் செலுத்த வேண்டிய அதிகப்படியான மின் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு இந்த உரிமம் அவர்களுக்கு உதவுகிறது.


விதிவிலக்கு அல்ல


ஆந்திரப் பிரதேச அரசு தனது ஏப்ரல் மாத உத்தரவில், தரவு மையங்களுக்கு  'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) வழங்குவது அவசியம் என்று கூறியுள்ளது. ஏனெனில், இந்த மையங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கும், அதற்கான மின்விநியோகக் கட்டமைப்புகளை உருவாக்கிப் பராமரிப்பதற்கும் தனித்துவமான தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுகிறது.


இருப்பினும், இந்த 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) என்பது, சாதாரண பொது மின்விநியோக நிறுவனங்களுக்கு இருக்கும் அதே அதிகாரங்களை இந்தத் தரவு மையங்களுக்கு வழங்குவதில்லை. இந்த உரிமம் மிகவும் கட்டுப்பாடானது; அதாவது, அவர்கள் அந்தத் தரவு மைய வளாகத்திற்குள் மட்டுமே மின்சாரத்தை விநியோகிக்க முடியும். அந்தப் பகுதிக்கு வெளியே இருக்கும் பொதுமக்களுக்கோ அல்லது பிற நுகர்வோருக்கோ அவர்களால் மின்சாரம் வழங்க முடியாது.


மேலும், இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 'திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம்' (DDL) பெற்ற தரவு மையங்கள், தங்களுக்குத் தேவைப்படும் மொத்த மின்சாரத்தில் குறைந்தபட்சம் 51 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் மூலமாகவே பெற வேண்டும்.


மேலும், மின் கட்டமைப்பு இணைப்பைப் பெறுவதற்கு உரிமம் பெற்றவரே முழுப் பொறுப்பாவார். திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் (DDL) பெற்ற தரவு மையங்கள், மத்திய மின் பகிர்மான நிறுவனம் (Central Transmission Utility (CTU)) மற்றும் மாநில மின் பகிர்மான நிறுவனம் (State Transmission Utility (STU)) ஆகிய இரண்டிலிருந்தும் இணைப்புகளைப் பெற வேண்டும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மானக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் போதெல்லாம், ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Andhra Pradesh Electricity Regulatory Commission (APERC)) மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity Regulatory Commission (CERC)) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மின் பகிர்மானக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.


அதேபோல், உரிமம் பெற்றவர் தங்களுக்குத் தேவையான ஒன்றோடொன்று இணைக்கும் உள்கட்டமைப்பை (Interconnection infrastructure) மேம்படுத்துவதற்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்க வேண்டும். ஆந்திரப் பிரதேச மின் பகிர்மானக் கழகத்திற்கு (Andhra Pradesh Transmission Corporation) செலுத்த வேண்டிய மின் பகிர்மானக் கட்டணங்கள், ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (APERC) அங்கீகரிக்கப்பட்ட கட்டண விகிதங்களின்படி வசூலிக்கப்படும். அதே நேரத்தில், மின் பகிர்மான உரிமம் பெற்ற தரவு மையங்கள், தங்களுடைய உள் விநியோகக் கட்டமைப்புகளுக்கு மின் பகிர்மானக் கட்டணம் (Wheeling charges) செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகின்றன.




இந்தக் கொள்கையானது, தற்போதுள்ள நுகர்வோர் யாரும் புதிய திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமம் பெறுவதைத் தடுப்பதன் மூலம், ஏற்கனவே இயங்கி வரும் மின்விநியோக நிறுவனங்களின் (Discoms) நிதி நலன்களைப் பாதுகாக்கிறது. இந்த விதிமுறையானது முற்றிலும் புதிய தரவு மைய (Greenfield data centre) திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், மின்விநியோக நிறுவனங்கள் தங்களுக்கு அதிக வருவாய் தரும் தற்போதைய வாடிக்கையாளர்களை இழக்காமலும், ஏற்கனவே செய்த முதலீடுகள் வீணாகாமல் இருப்பதும் உறுதி செய்யப்படுகிறது.


மேலும், இந்த நெறிமுறைக் கட்டமைப்பு, தரவு மையங்களுக்கு உள்ளூர் மின்விநியோக நிறுவனங்களிடமிருந்து (Discoms) அவசரகால மாற்று மின்சாரம் தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட மின்விநியோக நிறுவனத்துடன் ஒரு அவசரகால மின்விநியோக ஒப்பந்தத்தில் அந்த திட்டமிடப்பட்ட மின்விநியோக உரிமதாரர் (DDL) கையெழுத்திட வேண்டும். அதில் தங்களுக்குத் தேவைப்படும் அவசரகால மின்சாரத்தின் அளவைக் குறிப்பிட வேண்டும். மின்விநியோக நிறுவனத்திடமிருந்து பெறப்படும் இத்தகைய மாற்று அல்லது அவசரகால மின்சாரப் பயன்பாட்டிற்கு, ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (APERC) தற்போதைய விதிகளின்படியே கட்டணங்களும் நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Original article : How Andhra plans to power AI ambitions: Let data centres buy and distribute their own electricity. -Pratyush Deep

Share:

மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் ஏன் உருவாக்கியது? -அமால் ஷேக்

 ஹைதராபாத்தைச் சேர்ந்த மனிதக் கடத்தலுக்கு எதிரான அமைப்பு ஒன்று 2004-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்கு தொடங்கியது. வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு (Commercial Sexual Exploitation (CSE)) ஆளாக்கப்படும் நபர்கள், "பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது அதிலிருந்து மீண்டவர்களாகவோ" நடத்தப்படுவதற்குப் பதிலாக, "குற்றவாளிகளாக" நடத்தப்படுகிறார்கள் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.


கடந்த மாதம், உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்தது.  வணிகரீதியான மற்றும் பாலியல் சுரண்டல்களுக்காக (CSE) நடைபெறும் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க பொருத்தமான சட்டக் கட்டமைப்பு இல்லாதது கடுமையாகப் பாதிக்கிறது என்று கூறியது. எனவே, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டம் (Victim Protection Plan) ஒன்றை உருவாக்குவதன் மூலம் "விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று நீதிமன்றம் கூறியது. வணிகரீதியான பாலியல் சுரண்டல்களால் (CSE) பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் மறுவாழ்விற்கும் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரே ஒரு திட்டம் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என்று குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த முயற்சி பாதிக்கப்பட்டவர்களை இந்த அமைப்பின் மையப் புள்ளியாக வைப்பதும், அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஆகும். மேலும், அவர்களை வெறும் செயலற்ற நபர்களாகப் பார்க்காமல், அதிகாரமளிக்கப்பட வேண்டிய மனிதர்களாகப் பார்ப்பதே நீதிமன்றத்தின் நோக்கமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உரிய கண்ணியத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதில் நீதிமன்றத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


வழக்கின் பின்னணி


ஹைதராபாத்தைச் சேர்ந்த மனிதக் கடத்தலுக்கு எதிரான ‘பிரஜ்வலா’ (Prajwala) என்ற அமைப்பு 2004-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்கு தொடங்கியது. வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்களாக நடத்தப்படாமல், குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்றும், முறையான 'பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்' (Victim Protection Plan) இல்லாததால் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலனற்றுப் போவதாகவும் அந்த மனுவில் வாதிடப்பட்டது.


டிசம்பர் மாதம் 2015-ஆம் ஆண்டில், மனிதக் கடத்தலுக்கு எதிரான ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டுவர ஒரு அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவையும் (Inter-Ministerial Committee), ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை முகமையையும் (Organised Crime Investigation Agency (OCIA)) உருவாக்க அரசு உறுதியளித்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த மனுவை முடித்து வைத்தது. இந்த 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை முகமை' (OCIA) செப்டம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டுக்குள் நிறுவப்பட்டு, டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று நீதிமன்றம் எதிர்பார்த்தது.


இருப்பினும், இந்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்ட வரைவு மசோதாக்கள் 2016, 2017, 2018 மற்றும் 2021-ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட போதிலும், எதுவுமே சட்டமாக மாறவில்லை. இதில் 2018-ஆம் ஆண்டின் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது (lapsed).


திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமையை (OCIA) உருவாக்கும் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு 2019-ஆம் ஆண்டில் ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் 'தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) அதிகாரங்களை விரிவுபடுத்தி, மனிதக் கடத்தல் குற்றங்களை விசாரிக்கும் அனுமதியை அதற்கு வழங்கியது. இதனால், 2015-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அடிப்படையாக இருந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறி, 'பிரஜ்வலா' (Prajwala) என்ற தொண்டு நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 


கண்ணியம் மற்றும் மறுவாழ்வு குறித்து


மனித கண்ணியம் குறித்து நீதிமன்றம் கூறுகையில், ஒவ்வொரு நபரும் மனிதராகப் பிறந்த காரணத்தினாலேயே இந்த கண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டது. மனிதக் கடத்தல் என்பது மனிதர்களைப் பொருட்களாக நடத்துவதாலும், அவர்களின் மனிதத்தன்மையை மதிக்காமல் விடுவதாலும் இந்த கண்ணியக் கோட்பாட்டை நேரடியாக மீறுகிறது.


நீதிமன்ற அமர்வு மேலும் கூறுகையில், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அது ஒரு நபர் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்தே அமைகிறது. மக்கள் தங்கள் விருப்பங்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்களுக்குப் போதிய வருமானமும், சுயசார்புடைய வாழ்வாதாரமும் தேவை. இவை இல்லை என்றால், அவர்கள் எளிதாக சுரண்டலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். இத்தகைய வறுமையும் பற்றாக்குறையும் ஒரு மனிதனின் கண்ணியத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணியம் முற்றிலும் பறிக்கப்படும் சூழ்நிலைகளையும் உருவாக்கிவிடும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.


வணிகரீதியான பாலியல் சுரண்டலால் (CSE) பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் ஆழமான மற்றும் பரவலான சமூக அவப்பெயரை எதிர்கொள்கிறார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் காரணமாக, அவர்களின் கண்ணியம், அடையாளம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை.




பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தப்பட்டவர்களுக்கு, இந்திய அரசியலமைப்பின் 21 மற்றும் 23 ஆகிய பிரிவுகளின்கீழ் மறுவாழ்வு பெற அரசியலமைப்புரீதியான உரிமை உள்ளது என்று கூறியது. இதில் பிரிவு-23, மனிதக் கடத்தல், பிச்சை எடுத்தல் மற்றும் பிற வகையான கட்டாய உழைப்பைத் தடை செய்கிறது. மேலும், இந்த விதியை மீறுவோரைச் சட்டப்படி தண்டனைக்குரியவராக்குகிறது.


பந்துவா முக்தி மோர்ச்சா மற்றும் நீர்ஜா சவுத்ரி ஆகியோரின் 1984-ஆம் ஆண்டு தீர்ப்புகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்தத் தீர்ப்புகளில், கொத்தடிமைகளைக் கண்டறிந்து அவர்களை விடுவிப்பது மட்டும் போதாது; அவர்களின் மறுவாழ்வும் அதே அளவு முக்கியமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதே கொள்கையைப் பயன்படுத்தி, கொத்தடிமைகளுக்கு மட்டுமே மறுவாழ்வு அளித்துவிட்டு, வணிகரீதியான பாலியல் சுரண்டலுக்கு (CSE) ஆளாக்கப்பட்டு கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை மறுப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அல்லது நியாயமான காரணமும் இல்லை என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. இந்த இரண்டு குழுவினருமே சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்தான், மேலும் இவர்கள் இருவருக்குமே இந்திய அரசியலமைப்பின் 23-வது பிரிவு பாதுகாப்பு அளிக்கிறது. இவர்களுக்குள் இப்படி ஒரு பாகுபாட்டைக் காட்டுவது, முந்தைய தீர்ப்புகளின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியது.


குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வை சமூகரீதியாக மேம்படுத்துவதே முக்கிய நோக்கம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.


பிரிவு 17: சிக்கலும் சம்மதமும்


1956-ஆம் ஆண்டின் ஒழுக்கக்கேடான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின் (Immoral Traffic (Prevention) Act (ITPA)) 17-வது பிரிவை நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்தப் பிரிவு, ஒரு விபச்சார விடுதியில் சோதனை நடத்தப்பட்டு, அங்கிருந்து ஒரு நபர் மீட்கப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கையாள்கிறது.


சட்டமானது மூன்று வெவ்வேறு தரப்பினரையும் ஒரே மாதிரியாகவே நடத்துகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அவர்கள், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள், அவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் அந்தத் தொழிலைத் தொடர முடிவு செய்த பெண்கள், மற்றும் சுயவிருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ஆகியோராவர். அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அது அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.


இதன் விளைவாக, நீதிமன்றம் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முதலாவதாக, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரை அடையாளம் காண முறையான விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், அவர்களை "மீட்பது" (Rescue) என்ற கருத்து இவர்களுக்குப் பொருந்தாது. இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாதுகாப்பு இல்லத்தில் வைப்பதா அல்லது அவரது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைப்பதா என்பதைத் தீர்மானிப்பதில், அந்தப் பெண்ணின் சம்மதமே மிக முக்கியமான காரணியாக இருக்க வேண்டும்.


சுயமாக விருப்பப்பட்டு செய்யும் பாலியல் தொழில் எது, கட்டாயத்தின் பேரில் செய்யப்படும் பாலியல் தொழில் எது என்பதற்கு இடையேயான வேறுபாடு நிஜ வாழ்க்கையில் பல நேரங்களில் தெளிவாக இருப்பதில்லை என்று இந்திய தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் உதவிப் பேராசிரியர் டெபாங்கனா சாட்டர்ஜி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தெரிவித்துள்ளார்.


முதலில் தாங்களாகவே முன்வந்து பாலியல் தொழிலுக்கு வரவில்லை என்றே பல பெண்கள் கூறுவதாக அவர் விளக்கினார். இருப்பினும், ஒரு விபச்சார விடுதியில் 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்த பிறகு, அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.


நீதிமன்றம் இந்தச் சிக்கலை அங்கீகரிப்பது மிக முக்கியம் என்று அவர் கூறினார். ஏனெனில், இந்தத் தீர்ப்பு காவல்துறையினர் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உதவும். மேலும், இத்தகைய அங்கீகாரம் பாலியல் தொழில் பற்றிய சமூக அவப்பெயரையும், கூச்சத்தையும் குறைக்க உதவும் என்றும், இந்த விஷயத்தைப் பற்றிப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசுவதை எளிதாக்கும் என்றும் தெரிவித்தார்.


இருப்பினும், ஒருவரின் சம்மதம் என்பது பெரும்பாலும் கடினமான சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு உட்பட்டே இருக்கிறது என்றும், இதனால் ஒருவர் தன் சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா என்பதைத் தெளிவாகத் தீர்மானிப்பது கடினம் என்றும் கூறினார். சுயவிருப்பம் என்பதன் உண்மையான அர்த்தத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவரை, இந்த வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் கூறினார்.


பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டம்


உச்சநீதிமன்றம் மறுவாழ்வு பெறுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின்படியான உரிமையாக அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது முதல் மீண்டும் சமூகத்தோடு இணைப்பது வரையிலான ஒவ்வொரு கட்டத்தையும் உள்ளடக்கிய விரிவான "பாதிக்கப்பட்டோர் பாதுகாப்புத் திட்டத்தை" (Victim Protection Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக நடத்தக் கூடாது என்றும், அவர்களின் சுதந்திரமான மற்றும் முழுமையான சம்மதம் இல்லாமல் பொதுவாக மறுவாழ்வை அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது என்றும் இந்தத் திட்டம் கூறுகிறது.


மேலும், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகளை (AHTU) துணைக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின்கீழ் வலுப்படுத்த வேண்டும் என்றும், கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து விசாரிப்பதற்காக அவற்றை காவல் நிலையங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரிவுகள் கடத்துபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும், சமூகப் பணியாளர்கள், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



மீட்பு நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்யவோ, வார்த்தைகளாலோ அல்லது உடலளவிலோ துன்புறுத்தவோ கூடாது. அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களோ அல்லது காணொளிகளோ எடுக்கக் கூடாது. குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மீட்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களைக் காவல் நிலையச் சிறைகளில் அடைத்து வைக்கவோ அல்லது இரவு முழுவதும் காவல் நிலையங்களில் அடைத்து வைக்கவோ கூடாது. அவர்களுக்கு சட்ட உதவி, மருத்துவக் கவனிப்பு மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அதோடு எவ்வித தாமதமும் இன்றி தகுதியான அதிகாரி அல்லது நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நீண்டகாலக் காவலில் வைக்கவோ அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவோ உத்தரவிடுவதற்கு முன்பு, நீதிபதிகள் பாதிக்கப்பட்டவரின் தரப்பு விளக்கத்தைக் கட்டாயம் கேட்க வேண்டும். தேவைப்பட்டால், ஒரு வயது வந்த பெண் தனது சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் ஆராய வேண்டும். இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும், பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு குறித்தோ அல்லது அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறித்தோ ஏதேனும் சந்தேகங்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத வரை, அவர்களின் சுய சம்மதம் மட்டுமே முதன்மையான காரணியாகக் கருதப்பட வேண்டும்.


பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருப்பவர்களைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் சிறைச்சாலைகளைப் போலச் செயல்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகப் பணியாளர் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்குத் தேவையான மருத்துவக் கவனிப்பு, மனநல ஆலோசனை, கல்வி, திறன் பயிற்சி, வாழ்வாதார ஆதரவு மற்றும் அரசாங்கத் திட்டங்களைப் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்புத் திட்டம் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டம், நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது, அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களை ஒழுங்காக மறுபரிசீலனை செய்வது, சட்ட உதவி வழங்குவது மற்றும் அந்த இல்லங்களுக்குள்ளேயே நடக்கும் துஷ்பிரயோகங்களைப் புகாரளிப்பதற்கான அமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.


சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்த பெண்கள், தாங்கள் விரும்பினால் மறுவாழ்வு உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் செய்யாமல், அவர்களுக்கு என்ன தேவை என்று நிறுவனங்கள் தங்களாகவே முடிவு செய்வதால்தான், மறுவாழ்வுத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன என்று சாட்டர்ஜி கூறினார். பாதிக்கப்பட்ட பல பெண்களுக்குத் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, அழகுக்கலை நிபுணர் படிப்புகள், தொழிற்பயிற்சிகள் அல்லது ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான உதவி போன்ற நடைமுறைரீதியான உதவிகள்தான் தேவைப்படுகின்றன. இந்த மாதிரியான விஷயங்களில்தான் மறுவாழ்வுத் திட்டங்கள் உண்மையாகவே உதவ வேண்டும். அதை விடுத்து, அவர்களை ஒரு காப்பகத்தில் அடைத்து வைப்பதால், சில நேரங்களில் அந்தக் காப்பகமே அவர்களைச் சுரண்டும் ஒரு இடமாக மாறிவிடுகிறது என்றும் குறிப்பிட்டார்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமை குறித்து


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு முகமை (OCIA) என்ற புதிய அமைப்பை உருவாக்குவதை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. ஆனால், ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ITPA) 7, 8 மற்றும் 20 ஆகிய பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என்று கூறியது. ஏனெனில், தற்போதுள்ள இந்தச் சட்டப்பிரிவுகள் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகக் கருதி அவர்கள் மீது வழக்குத் தொடர வழிவகுக்கின்றன.


மேலும் அந்த அமர்வு, பாதுகாப்பு இல்லங்களில் குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டாயமாகத் தடுத்து வைக்கும் முறையை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தாங்களாகவே முன்வந்து இத்தொழிலில் ஈடுபடும் வயதுவந்த பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியது. பாலியல் தொழிலை ஒரு சட்டப்பூர்வ உரிமையாக மாற்றாமலேயே, பாலியல் தொழிலாளர்களின் (மனித) உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கெனத் தனியாக ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.


Original article : Why Supreme Court framed a Victim Protection Plan for human trafficking survivors. -Amaal Sheikh

Share:

இந்தியா தனது 100-வது ராம்சார் தளத்தைச் சேர்த்துள்ளது — சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியமானவை? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள இந்தியாவின் 100-வது ராம்சார் தளமான ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் (சுர்ஹா தால்) என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்தார். இந்தப் பட்டியலில் ஒரு சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டிருப்பது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.


இந்தச் சாதனை, சதுப்பு நிலப் பாதுகாப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இந்தச் சூழல் அமைப்புகளை இவ்வளவு முக்கியமானதாக ஆக்குவது எது?


முக்கிய அம்சங்கள்:


1. 1991-ல், பல்லியா நகரப் பகுதியிலுள்ள பான்ஸ்திஹ் கிராமத்தைச் சேர்ந்த 45 கிராமங்களின் நிலப்பரப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக 3432.93 ஹெக்டேர் பரப்பளவில் ‘சுர்ஹா தால்’ (Surha Taal) உருவாக்கப்பட்டது. 2002-ல், இதன் பெயர் “ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம்” என்று  மாற்றப்பட்டது.


2. இது பல்லியா நகரப் பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயத்திறக்கு  மேற்கில் பிக்கம்பூர் கிராமம் வரையிலும், வடகிழக்கில் சிங்ஹௌலி வரையிலும், தென்கிழக்கில் துல்வாரா கிராமம் வரையிலும் பரவியுள்ளது. இது பல்லியா மற்றும் பான்ஸ்திஹ் நகரப்பகுதியின் கட்டுப்பாட்டிற்குள்  வருகிறது.


3. சுராஹ்தால் என்பது இயற்கையாக உருவான, ஆண்டு முழுவதும் நீர் கொண்டிருக்கும் வளைவு ஏரி (Oxbow Lake) ஆகும். இது மத்திய ஆசிய பறவை இடம்பெயர்வு பாதையில் (Central Asian Flyway) பயணம் செய்யும் பல்வேறு பறவை இனங்களுக்கு முக்கியமான குளிர்கால தங்குமிடமாக விளங்குகிறது.  உத்தரப் பிரதேச சூழல் சுற்றுலாவின் கூற்றுப்படி, சரணாலயம் வனவிலங்குகளுக்கும் அருகிலுள்ள வேளாண்  நிலங்களுக்கும் ஆதரவளிக்கிறது. பருவமழையின் போது, ​​ஏறக்குறைய 25,000 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்குகிறது. இது, இந்தியாவில் உள்ள மிகச் சில சதுப்பு நிலங்களால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய பரந்த அளவிலான இயற்கையான வாழ்விடத்தை உருவாக்குகிறது.


சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?


1. ராம்சார் ஈரநிலங்கள் ஒப்பந்தம் (Ramsar Convention on Wetlands) ஈரநிலங்களை பின்வருமாறு வரையறுக்கிறது: சதுப்பு நிலங்கள் (marsh), சேற்று நிலங்கள், கரிமண் நிலங்கள் அல்லது நீர்நிலைகள் ஆகியவை இயற்கையானவையாக இருந்தாலும் செயற்கையானவையாக இருந்தாலும், நிரந்தரமானவையாக இருந்தாலும் தற்காலிகமானவையாக இருந்தாலும், தேங்கியோ ஓடியோ இருக்கும் நன்னீர், உவர்நீர் அல்லது உப்புநீரைக் கொண்ட பகுதிகள், மேலும் குறைந்த நேரத்தில் ஆறு மீட்டருக்கு கீழ் ஆழமுள்ள கடல் நீர் பகுதிகளை கொண்டவையே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.


2. இருப்பினும், இந்திய அரசின் சதுப்பு நில வரையறையானது ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் நடைபெறும் பிற பகுதிகளை உள்ளடக்கவில்லை. ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் படி, சதுப்பு நிலங்களின் வரையறையானது, ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள், குடிநீர் தேவைகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள்/குளங்கள் மற்றும் மீன் வளர்ப்பு, உப்பு உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கவில்லை.


ராம்சார் உடன்படிக்கை (Ramsar Convention) எவ்வாறு உருவானது?


3. ராம்சார் உடன்படிக்கை 1971-ஆம் ஆண்டு ஈரானின் ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது சதுப்பு நிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான  முதல் (Intergovernmental) சர்வதேச ஒப்பந்தமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


பூமியின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக சதுப்பு நில தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஈரநிலங்களும் பாரம்பரிய அறிவும்: பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்” (Wetlands and traditional knowledge: Celebrating cultural heritage) என்பதாகும்.


4. இந்த உடன்படிக்கையானது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், ஒரு நாட்டின் எல்லைக்குள் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் வலசைக்கு செல்லும் உயிரினங்கள் குறித்த சர்வதேச ஒத்துழைப்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டுள்ளது.

5. இந்த மாநாட்டில் 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சதுப்பு நிலக் காப்பகங்களை உருவாக்குவதற்கும், சதுப்பு நில வாழ்விடங்களின் விவேகமான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அவை கடமைப்பட்டுள்ளன. இந்தியா 1982-ல் இதில் இணைந்தது. இந்தியாவின் முதல் ராம்சார் தளங்களாக, ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரி மற்றும் ராஜஸ்தானில் உள்ள கியோலாடியோ தேசிய பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டன.


6. இந்தத் தளங்கள் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள்” என்று அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அமைந்துள்ள நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் குறிப்பிடத்தக்க மதிப்பு வாய்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுப்புநிலம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படுவது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசின் உறுதிப்பாட்டைப் காட்டுகிறது.


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்ன?


7. சதுப்பு நிலங்கள் புவியின் மிகவும் வளமான சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை நிலச் சூழல்களுக்கும் நீர்ச் சூழல்களுக்கும் இடையிலான இடைநிலைச் சூழல் அமைப்புகளாகும். இங்கு நிரந்தரமாகவோ அல்லது பருவகாலமாகவோ நீர் இருப்பதுடன், பல்வேறு தாவர மற்றும் விலங்கு வாழ்வு ஆதரிக்கப்படுகிறது. அவை பல்லுயிர் வளம் கொண்டவை மற்றும் சூழலியல் சமநிலையைப் பாதுக்காப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.


பூமியின் நிலப்பரப்பில் சதுப்பு நிலங்கள் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அவை 40 சதவீத தாவர மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடத்தையும் இனப்பெருக்கத்திற்கு தேவையான இடங்களையும் வழங்குகின்றன.


மேலும், சதுப்பு நிலங்கள் புயல் அலைகள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகளின் தாக்கத்தைத் குறைப்பதன் மூலம், கடற்கரையோரங்களில் வாழும் உலக மக்கள்தொகையில் 60 சதவீத்தினருக்கு இயற்கைப் பாதுகாப்பை வழங்குகின்றன.


சதுப்பு நிலங்கள் மனிதர்களுக்கு உணவு மற்றும் கால்நடைக்கு தேவையான   தீவனத்தை, முக்கியமாக அரிசி மற்றும் மீன் போன்றவற்றை வழங்குவதோடு, மீன்வளம், வேளாண்மை மற்றும் சூழல் சுற்றுலா மூலம் வாழ்வாதாரத்தையும் ஆதரவளிக்கின்றன.


அவை இயற்கையான கடற்பஞ்சுகள் போலச் செயல்பட்டு, அதிகப்படியான மழைநீரை உள்வாங்குவாதன்  மூலம் வெள்ள அபாயத்தைக் குறைக்கின்றன.


திறமையான கார்பன் சேமிப்பு இடங்களாக, சதுப்பு நிலங்கள் மண்ணிலும் உயிரிப் பொருளிலும் (biomass) கார்பனைச் சேமிக்கின்றன.


மாசுபடுத்தும் பொருட்களை வடிகட்டி நீக்குதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் நீரின் தரத்தைப் பாதுகாத்தல் போன்ற திறன்கள் காரணமாக, சதுப்பு நிலங்கள்    “நிலப்பரப்பை சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள்” (Kidneys of the Landscape) என்று அழைக்கப்படுகின்றன.


சதுப்பு நிலங்களுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


8. அவற்றின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், சதுப்பு நிலங்கள் பூமியின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும் இருக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் ராம்சார் மாநாட்டின் உலகளாவிய சதுப்பு நிலக் கண்ணோட்டத்தின்ப்படி, 1970-ஆம் ஆண்டு முதல் குறைந்தது 400 மில்லியன் ஹெக்டேர் சதுப்பு நிலங்கள் அழிந்துள்ளன. அவற்றில் கால் பகுதி மோசமான நிலையில் உள்ளது.


9. 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கையின்படி, “சதுப்பு நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கு $39 டிரில்லியன்  வரையிலான நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், நாம் அவற்றை ஆண்டுக்கு 0.52% என்ற விகிதத்தில் தொடர்ந்து இழந்து வருகிறோம்.


சதுப்பு நில இழப்பு என்பது, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையை கணிசமாக மாற்றும் மனிதச் செயல்பாடுகளால், சதுப்பு நில உயிரினங்கள்  மற்றும் துணை உயிரினங்கள் தங்குவதற்கும், உணவருந்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் போதுமான தரத்துடன் நீர் கிடைக்கும் இடத்தின் அளவு குறைவதாகும். இயற்கை சதுப்பு நிலங்களை வேளாண்மை, மீன் வளர்ப்பு, வனவியல், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்ற பிற நிலப் பயன்பாடுகளுக்காக மாற்றுவதால் சதுப்பு நில இழப்பு ஏற்படுகிறது.


2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை


10. வேளாண்மைக்காக நிலங்களை மாற்றுதல், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை சதுப்புநிலப் பகுதிகள் குறைவதற்கான முக்கியக் காரணிகளாகும். மேலும், தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன, மற்றும் நிலையற்ற வேளாண் முறைகள் நீரியல் அமைப்பைச் சீர்குலைக்கின்றன. பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு முறைகளை மாற்றுவதன் மூலமும் தீவிர நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்தச் சவால்கள் மேலும் அதிகரிக்கிறது.


அலையாத்தி சதுப்புநிலங்கள்


1. அலையாத்தி சதுப்புநிலங்கள் என்பவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் கடலோர சதுப்புநிலங்கள் ஆகும். 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை, அலையாத்தி சதுப்புநிலங்களை உள்ளடக்கிய 11 பரந்த சதுப்புநில வகைகளை மதிப்பீடு செய்துள்ளது. உலகளாவிய அலையாத்தி சதுப்புநில கண்காணிப்பின்படி, 15.11 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு அலையாத்தி சதுப்புநிலங்ளின்கீழ் உள்ளது.


2. அலையாத்தி சதுப்புநிலங்கள் உப்புத்தன்மையைத் தாங்கக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களாகும். இவை பொதுவாக ஆற்றுமுகப் பகுதிகள் (Estuaries) மற்றும் அலைக்கற்றைப் பகுதிகளில் (Intertidal Regions) காணப்படுகின்றன. நன்னீரும் உப்புநீரும் சந்திக்கும் பகுதிகளில் இவை வளர்கின்றன. அலையாத்தி சதுப்புநிலங்கள் பொதுவாக காற்றில் மிதக்கும், சுவாசிக்கக்கூடிய வேர்களையும், மெழுகு போன்ற, சதைப்பற்றுள்ள இலைகளையும் கொண்டிருக்கும். மேலும், இவை பூக்கும் தாவரங்களாகும். 26°C முதல் 35°C வரையிலான வெப்பநிலை நிலவும், அதிக மழைப்பொழிவு உள்ள (1,000–3,000 மி.மீ) பகுதிகளில் இவை அதிகமாக வளர்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


ஜூலை 26-ஆம் தேதி 'அலையாத்தி சதுப்புநிலங்கள் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கான சர்வதேச நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது. 2015-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பொது மாநாட்டின் 38-வது கூட்டத்தொடரில் இந்நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களின் தனித்துவமான பண்பு, அவற்றின் விதைகள் முளைக்கும் விதமாகும். விதைகள் மரத்திலேயே முளைத்து, பின்னர் மரத்திலிருந்து தண்ணீரில் விழுகின்றன; சேறு மற்றும் வண்டல் மண்ணில் படியும்போது மட்டுமே அவை வேரூன்றி வளர்கின்றன. இது அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களில் உள்ள ஒரு தனித்துவமான தகவமைப்பு ஆகும்.இது கடுமையான உப்புத்தன்மை கொண்ட சூழல்களிலும் அவை நிலைத்து வளர உதவுகிறது. இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக 'கனியிலேயே விதை முளைத்தல்' (vivipary) என்று அழைக்கப்படுகிறது.



4. 2023-ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ‘கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான அலையாத்தி சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI))’-ஐத் தொடங்கியது. இது, ஒரு உயிர் கவசமாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மிக அதிக உயிரியல் உற்பத்தித்திறன் மற்றும் கார்பன் பிரித்தெடுப்புத் திறனைக் கொண்ட ஒரு தனித்துவமான, இயற்கைச் சூழல் அமைப்பாக சதுப்புநிலங்களை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


5. குஜராத் முதல் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வரை, மீண்டும் வளர்ச்சியடையும் வாய்ப்பை கொண்ட கடற்கரைகள், சூழலியல் மறுசீரமைப்பு, சிறந்த வாழ்வாதார வாய்ப்புகள், பல்லுயிர் பாதுகாப்பு, நீலப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகிய பொதுவான தொலைநோக்குப் பார்வையின்கீழ், MISHTI அமைப்பானது 13 கடலோர மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் ஒன்றிணைக்கிறது.


Original article : India adds its 100th Ramsar site — Why are wetlands important? -Khushboo Kumari

Share:

மௌலானா பர்கத்துல்லா : இந்தியாவின் முதல் பிரதமர் என்று அறியப்பட்டவரின் பெயரை நீக்க விரும்பும் போபால் பல்கலைக்கழகம் (Bhopal University) -யாஷீ

 போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்திற்கு பெயரிடப்பட்ட மௌலானா பர்கத்துல்லா போபாலி (Maulana Barkatullah Bhopali), இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பணியாற்றியபோது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டிலேயே கழித்தார். அவர் யார்?, எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்தார்? என்பது குறித்த விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.


போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, அதன் பெயரை வாக்தேவி போஜ்பால் பல்கலைக்கழகம் (Vagdevi Bhojpal University) என மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்பல்கலைக்கழகம் 1988-ம் ஆண்டில்தான் தற்போதைய பெயரைப் பெற்றது. அதற்கு முன்பு, இது 'போபால் பல்கலைக்கழகம்' என்று அழைக்கப்பட்டது.


மௌலானா பர்கத்துல்லா போபாலி (Maulana Barkatullah Bhopali) ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் 'சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்' என்றும் அறியப்படுகிறார். 1915-ம் ஆண்டில், அவரும் அவரது சகாக்களும், குறிப்பாக ராஜா மகேந்திர பிரதாப்பும் இணைந்து காபூலில் இந்தியாவின் முதல் "நாடு கடந்த அரசை" (government in exile) நிறுவினர்.


"மௌலானா பர்கத்துல்லா வெளிநாட்டிலிருந்து இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சர்வதேச நாடுகளின் கூட்டணியையும் உருவாக்கினார். அவர் 1927-ல் அமெரிக்காவில் காலமானார். ஒருவேளை இதனால்தான் இந்தியாவில் அவரது செயல்பாடுகள் பரவலாக அறியப்படாமல் போயிருக்கலாம். 1988-ம் ஆண்டில் அவரது சொந்த ஊரில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்ட முடிவு, அவரது பங்களிப்புகளுக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக அமைந்தது," என்று புது தில்லியில் உள்ள பகத் சிங் ஆவணக் காப்பகம் மற்றும் வள மையத்தின் கௌரவ ஆலோசகரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) ஓய்வுபெற்ற பேராசிரியருமான சாமன் லால் கூறினார்.


பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்குப் பதிலாக, பர்கத்துல்லாவின் (Barkatullah) பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்துவதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சாமன் லால் கூறினார்.


மௌலானா பர்கத்துல்லாவின் நம்பிக்கைகளும் கொள்கைகளும்

மௌலானா பர்கத்துல்லா 1854-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி போபாலில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு சிறந்த மாணவரான திகழ்ந்த அவர், கல்விக்காக பம்பாய்க்கும், பின்னர் லண்டனுக்கும் சென்றார். பின்னர் அவர் லிவர்பூலில் (Liverpool) கற்பிக்கும் பணியைத் தொடங்கினார். அங்கு அவர் இந்தியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டார். அவரது கட்டுரைகளும், உரைகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்மறையான கவனத்தை ஈர்த்தன. அதன் பிறகு, அவர் 1899-ல் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு, அவர் சுதந்திரப் போராட்ட வீரரான மௌலானா ஹஸ்ரத் மோஹானியுடன் (இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை உருவாக்கியவர்) கடிதப் போக்குவரத்து மேற்கொண்டார். இந்தக் கடிதங்கள் பர்கத்துல்லாவின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த தெளிவான புரிதலை அளிக்கின்றன.


இந்திய வரலாற்று மாநாட்டு நடவடிக்கைக் குறிப்புகள் (Proceedings of the Indian History Congress, தொகுதி 66 (2005-2006)-ல் வெளியான இக்பால் ஹுசைன் எழுதிய கட்டுரை ஒன்று, இந்தக் கடிதங்களில் ஒன்றை மேற்கோள் காட்டுகிறது. இந்தக் கடிதத்தில், "சுமார் 2 கோடி (20 மில்லியன்) மக்கள் பட்டினியாலும் பசியாலும் உயிரிழந்தனர். வறுமையில் வாடிய இம்மக்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு பிரிவினரும் ஆவர். பசியின் காரணமாக ஒரு நாடே அழிவைச் சந்தித்தது." என்று பர்கத்துல்லா எழுதியிருந்தார்.


இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று போராடி, பிரித்தாளும் கொள்கையை எதிர்த்தால் மட்டுமே பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முடியும் என்று பர்கத்துல்லா உறுதியாக நம்பினார்.


"இந்தியாவின் அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டால் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்ற அவரது வலுவான நம்பிக்கையே பர்கத்துல்லாவைச் சிறப்புமிக்கவராக ஆக்குகிறது. அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் அனைத்துப் பிராந்திய மக்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றினார்," என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (Aligarh Muslim University (AMU)) வரலாற்றுப் பேராசிரியருமான அலி நதீம் ரெசாவி கூறினார்.


“இதற்கு சிறந்த உதாரணம், 1915-ல் காபூலில் அமைக்கப்பட்ட இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் (Provisional Government of India) ஆகும். அவர், இந்து இளவரசரான ராஜா மகேந்திர பிரதாப் மற்றும் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரான மௌலானா உபைதுல்லா சிந்தி ஆகியோருடன் இணைந்து, நாடுகடத்தப்பட்ட நிலையில் ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ராஜா மகேந்திர பிரதாப் குடியரசுத் தலைவரானார், பர்கத்துல்லா பிரதமரானார். பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு வெளியே இந்தியர்கள் தங்களின் சொந்த சுதந்திரமான அரசியல் அமைப்பை (independent political body) நிறுவிய முதல் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வரலாறு முக்கியமானது; ஏனெனில் இது பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தது மட்டுமல்லாமல், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு பொதுவான இலக்கிற்காகத் தோளோடு தோள் நின்று போராடிய ஒரு இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையையும் முன்வைத்தது,” என்று அலி நதீம் ரெசாவி மேலும் கூறினார்.

மேலும், ஹத்ராஸின் ராஜாவான மகேந்திர பிரதாப், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) நிறுவுவதற்குப் பெரிதும் பாடுபட்டு, இக்கல்லூரிக்கு நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார்.


காபூலில் அரசு மற்றும் லெனினுடனான சந்திப்பு


முதலாம் உலகப் போரின்போது, ​​பர்கத்துல்லாவும் அவரது சகாக்களும் ஜெர்மனிக்குச் சென்று, ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை, பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட ஒரு படையை உருவாக்குமாறு வற்புறுத்த முயன்றனர். மேலும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை அடைய விரும்பிய, 1913-ல் லாலா ஹர் தயாலால் (Lala Har Dayal) நிறுவப்பட்ட காதர் கட்சிக்காகவும் (Ghadar Party) அவர் முக்கியப் பணியாற்றினார்.


பின்னர், 1915 டிசம்பர் 1 அன்று, காபூலில் ‘இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்’ (Provisional Government of India) அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘அரசாங்கத்தின்’ தலைவர்கள் சோவியத் ரஷ்யாவின் அரசாங்கத் தலைவரான விளாடிமிர் லெனினைச் சந்திக்க மாஸ்கோவிற்குப் பயணம் செய்தனர். ரஷ்யாவில், பர்கத்துல்லா பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். “நான் ஒரு கம்யூனிஸ்டோ அல்லது சோசலிஸ்டோ அல்ல. ஆனால், எனது அரசியல் திட்டம் ஆசியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதை உள்ளடக்கியது. ஐரோப்பா ஆசியாவை மூலதன ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்; இதில் ஆங்கிலேயர்களே முதன்மையான பிரதிநிதிகளாக உள்ளனர். இக்கருத்தில் நான் கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கமாக இருக்கிறேன். மேலும், இந்த விஷயத்தில் நாங்கள் இயற்கையாக அமைந்த கூட்டமைப்புகள்,” என மேலே குறிப்பிடப்பட்ட Indian History Congress இதழில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷாரின் வெற்றிக்குப் பிறகு, இந்தியப் புரட்சியாளர்களின் திட்டங்கள் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தன. இருப்பினும், பர்கத்துல்லா தனது இலட்சியத்திற்காகப் பணியாற்றுவதற்காக, பிரஸ்ஸல்ஸ் (Brussels), சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற இடங்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார்.

"இந்தியாவிற்குள்ளேயே இருந்தபடி செயல்பட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போலல்லாமல், பர்கத்துல்லா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நாடுகடத்தப்பட்ட நிலையில் கழித்தார். அவர் உலகெங்கிலும் உள்ள காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, தன் காலத்தின் மிகவும் அறியப்பட்ட இந்தியப் புரட்சியாளர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். முஸ்லிம் உலகின் எதிர்ப்பு முயற்சிகளால் உத்வேகம் பெற்ற அவர், நீதி என்பது ஒரு உலகளாவிய நோக்கம் என்றும், இந்தியாவின் சுதந்திரம் அந்தப் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் நம்பினார்," என்று அலி நதீம் ரெசாவி கூறினார்.


1927-ல், தனது உடல்நிலை மோசமடைந்திருந்தபோதிலும், அவர் காதர் கட்சி (Ghadar Party) நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்குப் பயணம் செய்தார். அங்குதான், 1927 செப்டம்பரில், அவர் தனது இறுதி மூச்சை விட்டார். இறுதிவரை ராஜா மகேந்திர பிரதாப் உடனிருக்க, அவர் சாக்ரமெண்டோவில் (Sacramento) நல்லடக்கம் செய்யப்பட்டார்.


மத்திய அரசு ராஜா மகேந்திர பிரதாப்பை பிரபலப்படுத்த செயல்பட்டு வருவதாகவும், அவரது நெருங்கிய கூட்டணி சகாவான பர்கத்துல்லாவிற்கும் அதே போன்ற அணுகுமுறை கிடைக்க வேண்டும் என்றும் அலி நதீம் ரெசாவியும், சமன் லாலும் சுட்டிக்காட்டினர்.


Original article : Maulana Barkatullah: The ‘first prime minister of India’, whose name Bhopal university wants to drop. -Yashee

Share:

கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம் (coercive diplomacy) என்பது என்ன? - ஆஷியா பர்வீன்

 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரில், அமெரிக்காவின் இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டும் ஏன் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை?


வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததால், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை (peace deal) மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறுவதாகத் தெரியவில்லை.


அமெரிக்காவுடனான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திற்கும், லெபனானில் போர் நிறுத்தத்தை ஈரான் ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது. அதே நேரத்தில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் போர்நிறுத்தம் மூலம் பெரிய அளவிலான மோதல்கள் நிறுத்தப்பட்டதிலிருந்து நிகழ்ந்த மிகத் தீவிரமான சண்டைகளில் ஒன்றாக, புதன்கிழமை (ஜூன் 3, 2026) வளைகுடாவில் இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரில், இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆகியன இணைந்து செயல்பட்டும் ஏன் எதிர்பார்த்த முடிவை எட்ட முடியவில்லை? 'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy) என்ற கோட்பாடு, இந்தச் சூழலை ஓரளவிற்காவது புரிந்துகொள்ள உதவுகிறது.


'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy)


பனிப்போர் காலத்தில் பிரபலமடைந்த 'கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம்' (coercive diplomacy) என்ற கருத்தாக்கம், ஒரு எதிராளியின் முடிவைப் பாதிக்க அச்சுறுத்தல்களையும் பலத்தையும் திட்டமிட்டுப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. சர்வதேச உறவுகளின் புகழ்பெற்ற அறிஞர்களான தாமஸ் ஷெல்லிங் மற்றும் அலெக்சாண்டர் ஜார்ஜ் ஆகிய இருவரும் இந்தக் கருத்தாக்கத்தை விரிவாக விளக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர்.


ஷெல்லிங் தனது Arms and Influence (1966) என்ற புத்தகத்தில், கட்டாயப்படுத்தும் இராஜதந்திரம் என்ற கருத்தாக்கத்தை இவ்வாறு வாதிடுகிறார். அவை, “காயப்படுத்தும் சக்தி என்பது பேரம் பேசும் சக்தி. அதைச் சுரண்டுவது இராஜதந்திரம் – அது ஒரு கொடிய ராஜதந்திரம். ஆனால் அது ராஜதந்திரம்தான்.” மிருகத்தனமான பலத்திற்கும் வற்புறுத்தலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிட்டு, அவர் குறிப்பிட்டதாவது, “மிருகத்தனமான பலம் உண்மையில் பயன்படுத்தப்படும்போது வெற்றி பெறுகிறது. அதேசமயம் காயப்படுத்தும் உத்தி கைவசம் வைத்திருக்கும்போது மிகவும் வெற்றிகரமாக அமைகிறது.”


கியூப ஏவுகணை நெருக்கடி எடுத்துக்காட்டு 


ஜார்ஜ் தனது Forceful Persuasion: Coercive Diplomacy as an Alternative to War (1991) என்ற புத்தகத்தில், ஒரு தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியை நிறுத்த அல்லது கைவிட ஒரு எதிராளியை இணங்க வைப்பதற்கு, அச்சுறுத்தலை இராஜதந்திர முயற்சிகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை இதேபோல் எடுத்துக்காட்டுகிறார்.


கட்டாயப்படுத்தும் இராஜதந்திரத்திற்கு (coercive diplomacy) மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக அவர் கியூபா ஏவுகணை நெருக்கடியைக் குறிப்பிடுகிறார். அக்டோபர் 1962-ல், சோவியத் யூனியன் கியூபாவில் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை (medium-range ballistic missiles) நிலைநிறுத்தியது. பனிப்போர் காலத்தின் இரு வல்லரசுகளையும் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது.


ஆனால், கியூபா மீதான முற்றுகையுடன், சாத்தியமான வான்வழித் தாக்குதல் அல்லது படையெடுப்பைப் பயன்படுத்துவதற்கான தனது உறுதியை அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி வெளிப்படுத்தியதால், சோவியத்தின் முதல் செயலாளர் நிகிதா குருசேவ் அந்த ஏவுகணைகளை அகற்றினார்.



டிரம்ப் நிர்ப்பந்தித்த இராஜதந்திரம்


இப்போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம். பொதுவாக, தனது கோரிக்கைகளுக்கு இணங்குமாறு ஈரானை வற்புறுத்துவதற்காக, அமெரிக்கா இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுடன் இணைப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், போர்நிறுத்த நிபந்தனைகளின் தொடர்ச்சியான விதிமீறல்கள் அமெரிக்காவின் உத்தியின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாகத் தெரிகிறது.


போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய முடியாதது ஒருபுறம் இருக்க, வளைகுடாப் பகுதியில் ஈரானிடமிருந்து அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களையும் எதிர்கொள்கிறது. இது, அமெரிக்க அச்சுறுத்தல்களின் நம்பகத்தன்மை குறித்த எதிராளியின் கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது. பயனுள்ள கட்டாயப்படுத்தும் இராஜதந்திரத்திற்குச் சாதகமான சில நிபந்தனைகளை ஜார்ஜ் அடையாளம் காட்டுகிறார். அவற்றுள் அடங்குபவை,


  • தெளிவான நோக்கங்கள்

  • வலுவான உந்துதல்

  • இரு தரப்பினருக்கும் இடையே உந்துதலில் ஒரு சமச்சீரற்றத் தன்மை

  • அவசர உணர்வு

  • போதுமான உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆதரவு

  • மோதல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு தீவிரமடைந்துவிடும் என்ற எதிரணியின் அச்சம்

  • நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தெளிவான மற்றும் துல்லியமான நிபந்தனைகள்


இந்த நிபந்தனைகளுக்கு எதிராகப் பார்க்கும்போது, ஈரானைக் கட்டாயப்படுத்த டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் நம்பகத்தன்மையற்றவையாகவே தோன்றுகின்றன. இதற்குக் காரணம், அச்சுறுத்தல்களும் கோரிக்கைகளும் அதற்கேற்ற நடவடிக்கைகளால் சீராக ஆதரிக்கப்படாததே ஆகும்.


Original article : What is coercive diplomacy? -Ashiya Parveen


 

Share:

2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்தியா தனது புத்தொழில் நிறுவனங்கள் துறையை எவ்வாறு வளர்த்தெடுத்தது. -தில்லை ராஜன் ஏ., சினி சைதன்யா, வாமிகா பெருமாள்

 தேவையான கொள்கை சூழல், வலுவான புத்தொழில் வளர்ச்சி மற்றும் சாதகமான முதலீட்டுச் சூழல் ஆகியவற்றின் காரணமாக 'புத்தொழில் இந்தியா'  (Startup India scheme) திட்டம் வெற்றி பெற்றுள்ளது.


2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில், புத்தொழில்  துறையில் இந்தியாவை 'முதல்' நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு நாட்டின் தொழில் முன்னேற்றத்துக்கான சூழலில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களின் பொருளாதாரம் முதிர்ச்சி அடைந்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.


பாரம்பரிய வணிகங்களிலிருந்து புத்தொழில் நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டும் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன: அவை புதுமைக்கு அளிக்கும் முன்னுரிமை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் சந்தை வாய்ப்பு போன்றவை ஆகும். பிற வணிகங்களிலிருந்து புத்தொழில் நிறுவனங்களை வேறுபடுத்தி தெரிந்து வகையில், அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கும் நிறுவனங்களை 'புத்தொழில் நிறுவனங்களாக’ அங்கீகரிக்கும் நடைமுறையை 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறை' (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தொடங்கியது. புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறையின் அங்கீகாரம் கட்டாயமில்லை என்றாலும், அந்த அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அக்காலத்தில் செயல்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களில் வெறும் 3 சதவீதமாக இருந்த 288 நிறுவனங்கள் என்ற நிலையிலிருந்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறையின் வரம்பு 2025-ல் 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் புத்தொழில் வளர்ச்சிக் கதையின் வெற்றியை அளவிடும் முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாக, மக்கள் மற்றும் தொழில்முனைவோர் முறையான புத்தொழில் சூழலமைப்பில் இணைவதற்கான அதிகரித்து வரும் விருப்பம் அமைந்துள்ளது.



வெற்றியின் மற்றொரு குறியீடாக, நாடு முழுவதும் புத்தொழில் கலாச்சாரம் பரவியிருப்பது அமைந்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதில், முதல் நிலை நகரங்களிலிருந்து மூன்றாம் நிலை நகரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2016-ல், புத்தொழில் நிறுவனங்கள் உலகில் முதல் நிலை நகரங்கள் ஆதிக்கம் செலுத்தின. அந்த ஆண்டில் அமைக்கப்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களில் 65% முதல் நிலை நகரங்களைச் சேர்ந்தவை. மூன்றாம் நிலை நகரங்கள் 15% மட்டுமே இருந்தது. 2020-ல், இந்தப்பங்குகள் முறையே 49% மற்றும் 27%-ஆக மாறின. இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் 2025-ல் நிகழ்ந்தது. அப்போது புதிய புத்தொழில் நிறுவனங்களில் முதல் நிலை நகரங்களின் பங்கு 18% ஆக இருந்த நிலையில், மூன்றாம் நிலை நகரங்களின் பங்கு 71%-ஆக உயர்ந்தது. இந்த மாற்றம், முக்கிய நகர்ப்புற மையங்களைத் தாண்டி புத்தாக்கம் பரவியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

புத்தொழில் நிறுவனர்களின் வயது மற்றும் பாலினப் பரவல்கள், இளைஞர்களின் வலுவான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. இரு பாலினத்தைச் சேர்ந்த நிறுவனர்களில் கணிசமான பகுதியினர் (66% ஆண் நிறுவனர்கள் மற்றும் 59% பெண் நிறுவனர்கள்) 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். ஒருவரின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே தொழில்முனைவைத் தேர்வு செய்வது, புத்தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கான சாதகமான மற்றும் ஆதரவான சூழல் நிலவுவதை  காட்டுகிறது.


பெண்கள் தங்களது தொழில்முனைவுப் பயணங்களை ஆண்களைவிட தாமதமாகத் தொடங்குகிறார்கள் என்றும், வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது என்றும் தரவுகள் காட்டுகின்றன. 30 வயதுக்குட்பட்ட நிறுவனர்களில் பெண்கள்  21%-ஆக இருக்கும் நிலையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் அவர்கள் 33%-ஆக உள்ளனர். பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஆதரவான சூழலை உருவாக்குவது ஒரு முக்கியமான கொள்கைத் தேவையாக இருந்து வருகிறது. பெண் நிறுவனர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound Annual Growth Rate (CAGR)) 20%-ஆக இருந்தது. இது ஆண்களின் 14% உடன் ஒப்பிடுகையில், பெண்கள் தொழில் முனைவில் அதிகளவில் ஈடுபடும் வலுவான போக்கை  காட்டுகிறது.



2016-ஆம் ஆண்டு மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் நிறுவனர்களின் வளர்ச்சி


நிதி திரட்டும் சூழல்


2016-ஆம் ஆண்டு மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காலகட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், இந்திய புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய வளர்ச்சியாகும். 2016-ல் இந்தியாவில் 10,000 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 2,000 நிறுவனங்கள் நிதி உதவி (funded ventures) பெற்றவையாகும். 2025-ல் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 2,50,000 புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 75,000 நிறுவனங்கள் நிதி உதவி பெற்ற பெற்றவையாகும். இது முறையே 25 மடங்கு மற்றும் 38 மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதை  குறிக்கிறது.


புத்தொழில் இந்தியா (Startup India) திட்டத்தின் முதல் 10 ஆண்டுகளில், ஆதரவான கொள்கைச் சூழல், வலுவான  வளர்ச்சி மற்றும் சாதகமான முதலீட்டு சூழல் ஆகியவை பல வெற்றிக்கதைகளை உருவாக்கியுள்ளன.


இந்தப் போக்குகள், இந்தியாவை உலகின் முன்னணி புத்தொழில் தொழில் தொடங்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. குறிப்பாக, 2016–2025 காலப்பகுதி இந்தியாவை உலகின் முதல் நான்கு புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கும் நாடுகளின் வரிசையில்  நிலைநிறுத்தியுள்ளது.



குறிப்பு: விளக்கப்பட தரவுகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (Ministry of Corporate Affairs (MCA)) மற்றும் YNOS வென்ச்சர் எஞ்சின் அமைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.


தில்லை ராஜன் ஏ., சின்னி சைதன்யா மற்றும் டாக்டர் வாமிகா பெருமாள், சென்னை  இந்திய தொழில்நுட்பக் கழக புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தை சார்ந்தவர்கள்.


Original article : How India scaled its startup industry from 2016 to 2025. -Thillai Rajan A., Chinni Chaitanya, Vamika Perumal

Share: