தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் விளம்பரங்களை வெளியிட பாஜகவுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து முடிவுகள் வெளியாகும் நாள் வரை அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் கையேடான மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) நிவர்த்தி செய்வதில் "முற்றிலும் தோல்வியடைந்தது" (grossly failed) என்று உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை விமர்சித்தது. இந்த அரிய கருத்தானது,, ஒர் அரசியலமைப்பு நீதிமன்றமானது (constitutional court), ஒர் அரசியலமைப்பு அதிகாரத்தை மீறுவதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதைக் காட்டுகிறது. இதில் இங்கே மூன்று எடுத்துக்காட்டுகள் உள்ளன:
உள்ளடக்கம் & விளம்பரங்களின் நேரம் | இந்த விளம்பரங்கள் "அவதூறானவை" (slanderous) மற்றும் "இழிவானவை" (derogatory) என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்தது. வங்காள மொழியில் ஒரு விளம்பரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை குறிவைக்க மதத்தைப் பயன்படுத்துவதாகத் தோன்றியது. மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது மே 12 அன்று மற்றொரு விளம்பரம் வெளியிடப்பட்டது. இது தேர்தல் நாட்களுக்கு முந்தைய மாதிரி நடத்தை விதிகளின் (Model Code of Conduct (MCC)) 48 மணி நேர அமைதியாக இருந்த காலத்தை மீறியது. இவை வழக்கமான விதிமீறல்கள், தேர்தல் ஆணையம் விரைவாக கையாண்டிருக்க முடியும். தேர்தல் ஆணையம் தனது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடியது. அரசியல் கட்சி நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்குள் ஒரு தோல்வியைக் குறிக்கிறது. அது ஏன் நடந்தது என்பதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனைச் செய்ய வேண்டும்.
தேர்தல் கடமையில் நீதிமன்றங்கள் | உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பத்திர வழக்கைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய நியமனங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM)-வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT),, சட்டமன்றங்களில் காலியிடங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரா வழக்குகள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு முக்கியமான வழக்குகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட விஷயங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடிக்கடி நீதிமன்றங்களை நாடுகின்றன. நீதிமன்றங்கள் சாதாரண வேண்டுகோள்கள் மற்றும் பொருத்தமற்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளன. மேலும், தேர்தல் ஆர்வலர்கள் மற்றும் பிரச்சாரகர்கள், மனுதாரர்களை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும் அனைவருக்கும் நேர்மையை உறுதி செய்வதற்கும் பொறுப்பான தேர்தல் ஆணையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
அரசியலமைப்பு முக்கியமானது | தேர்தல் ஆணையம் ஒரு நியாயமானது என்ற கருத்து இருக்க வேண்டும். கொல்கத்தா உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் 226-வது பிரிவைக் குறிப்பிட்டுள்ளது. இதில், தாங்கள் பெற்ற மனு, தேர்தல் பணியை சீர்குலைக்காது என்று கூறியுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 226, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால், உயர் நீதிமன்றங்களுக்கு சட்டப்பிரிவு-226 மற்றும் சட்டப்பிரிவு 32வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல அனுமதிக்கிறது. மனுதாரர்களின் கோரிக்கையை ஆதரிக்க உயர் நீதிமன்றம் 14, 19 மற்றும் 21 (சமத்துவம், பேச்சு சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றியது) அரசியலமைப்புப் பிரிவுகளைப் பயன்படுத்தியது. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளிக்கிறது. மேலும், மக்களின் நம்பிக்கையானது இந்த அதிகாரத்தை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தற்போது, கடுமையான போட்டி உள்ள தேர்தல்களில், தேர்தல் ஆணையம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். பிரச்சாரங்கள் மிகவும் எளிமையானதாக மாறுவதைத் தடுக்க ஒரே வழி விதிகளைப் பின்பற்றுவதுதான். எனவே, கொல்கத்தா உயர் நீதிமன்றம், மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct (MCC)) மற்றும் அதன் நோக்கங்கள் இரண்டையும் உறுதிப்படுத்தியது.