இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க உதவிய கோபர்நிகஸ் அவசர மேலாண்மை சேவை (Copernicus Emergency Management Service) என்றால் என்ன? -அலிந்த் சவுகான்

 ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பனிப்புயல் போன்ற சூழலில் இரவு முழுவதும் தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் சிதைவுகள் திங்கள்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் தேடல் முயற்சிகளுக்கு உதவ அதன் விரைவான செயற்கைக்கோள் மேப்பிங் சேவையை (mapping service) செயல்படுத்தியது. ஈரான் உதவி கேட்டதால் இந்த நடவடிக்கையை செய்தார்கள். நெருக்கடிகளை கையாள்வதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்காக பணிபுரியும் ஜேன்ஸ் லெனார்சிக் (Janez Lenarcic), ஐரோப்பிய ஒன்றியமானது ஈரானுக்கு உதவுகிறது என்று X வலைதளத்தில் கூறினார். ஹெலிகாப்டர் விபத்துக்குப் பிறகு விரைவாக வரைபடங்களை உருவாக்க அவர்கள் கோபர்நிகஸ் அவசர மேலாண்மை சேவையைப் (Copernicus Emergency Management Service)  பயன்படுத்துகின்றனர். இந்த விபத்தில் ஈரான் அதிபரும் அவர்களது வெளியுறவு அமைச்சரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.


பனிப்புயல் போன்ற சூழலில் இரவு முழுவதும் தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் சிதைவுகள் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.


ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் திட்டத்தின் கீழ் வரும் அவசரகால மேலாண்மை சேவையின் (Emergency Management Service(EMS)) முக்கியமான கூறுகளில், விரைவான மேப்பிங் சேவையும் (rapid mapping service) ஒன்றாகும். கோபர்நிகஸ் அவசர மேலாண்மை சேவை (Copernicus Emergency Management Service) என்றால் என்ன மற்றும் அதன் விரைவான மேப்பிங் சேவை எவ்வாறு செயல்படுகிறது?


ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் திட்டம் (Europe Union’s Copernicus programme) என்றால் என்ன?


கோபர்நிகஸ் திட்டம் (Copernicus programme) ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் கண்காணிக்க சென்டினல்ஸ் (Sentinels) எனப்படும் செயற்கைக்கோள்கள் இதற்கான தரவுகளை சேகரிக்கிறது. இது ஏற்கனவே உள்ள வணிக மற்றும் பொது செயற்கைக்கோள்கள் மற்றும் தரை நிலையங்களில் இருந்து தரவுகளை சேகரிக்கிறது. 


பல்வேறு பயன்பாடுகளுக்கான தகவலை உருவாக்க தரவு செயலாக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. நில மேலாண்மை (land management), கடல் சூழல் (marine environment), வளிமண்டலம் (atmosphere), அவசரகால பதில் (emergency response), பாதுகாப்பு  (security) மற்றும் காலநிலை மாற்றம் (climate change) ஆகியவை இதில் அடங்கும். பயனர்கள் இதற்கான தகவலை "முழு, திறந்த மற்றும் இலவசம்" (full, open, and free-of-charge) அடிப்படையில் பெறுவார்கள் என்று இணையதளம் கூறுகிறது..


1998 இல், கோப்பர்நிக்கஸ் திட்டம் தொடங்கப்பட்டது, அதற்கு முன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உலகளாவிய கண்காணிப்பு (Global Monitoring for Environmental Security (GMES)) என்று பெயரிடப்பட்டது. இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency (ESA)) மற்றும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (European Environment Agency (EEA)) ஆகியவற்றின் ஆதரவுடன் ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission (EC)) செயல்படுத்தப்படுகிறது

.

கோபர்நிகஸ் திட்டத்தின் கீழ் வரும் அவசரகால மேலாண்மை சேவை (Emergency Management Service(EMS)) என்றால் என்ன?


கோபர்நிகஸ் திட்டத்தின் கீழ் வரும் அவசரகால மேலாண்மை சேவையானது (Copernicus EMS) 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இது செயற்கைக்கோள் தொலை உணர்வு (remote sensing) மற்றும் இயற்கைப் பேரழிவுகள் (natural disasters), மனிதனால் உருவாக்கப்பட்ட அவசரநிலைகள் (man-made emergencies) மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கு உதவும் தரவு மூலங்களிலிருந்து பெறப்பட்ட புவி-இடஞ்சார்ந்த தகவல்களை (geo-spatial information) வழங்குகிறது. 


மேலும், இந்த சேவையில் இரண்டு அம்சங்கள் உள்ளன: அவை, மேப்பிங் அம்சம் (mapping component) மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அம்சம் (early warning component) ஆகியவையாகும். முதலாவது செயற்கைக்கோள் படங்களிலிருந்து வரைபடங்கள் மற்றும் பகுப்பாய்வுகளை (maps and analysis from satellite pictures) உருவாக்குகிறது. இரண்டாவது வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத் தீ பற்றி எச்சரிக்கிறது, மேலும் காட்டுத் தீ எவ்வளவு மோசமாக பரவுகிறது என்பதை உடனடியாகக் காட்டுகிறது.


மேப்பிங் அம்சம், விரைவான மேப்பிங் (rapid mapping (RM)) மற்றும் ஆபத்து மற்றும் மீட்பு மேப்பிங் (risk and recovering mapping (RRM)) என இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில், முதலாவது விரைவான மேப்பிங்கானது (rapid mapping (RM)), இப்ராஹிம் ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு செயல்படுத்தப்பட்டது. மேலும், உலகிகெங்கும் நாட்கள் அல்லது மணிநேரங்களுக்குள் இதற்கான வரைபடங்களை வழங்குகிறது. இரண்டாவது, பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான வரைபடங்களை வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் ஆபத்து மற்றும் மீட்பு மேப்பிங் (risk and recovering mapping (RRM)) வழங்குகிறது. இது தடுப்பு, தயார்நிலை, பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மீட்புக்கு பயன்படுத்தப்படுகிறது.


விரைவான மேப்பிங் (rapid mapping (RM)) எவ்வாறு செயல்படுகிறது?


செயற்கைக்கோள் படங்கள், புவிசார் தரவு மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தச் சேவை விரைவாக வரைபடங்களைப் பெறுகிறது. கோப்பர்நிக்கஸின் விரைவான மேப்பிங் (rapid mapping (RM)) சேவை நான்கு வெவ்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது. இதில், ஒவ்வொன்றும் வரைபடங்கள் மற்றும் குறுகிய பகுப்பாய்வுகளுடன் சேவையைக் கேட்கும்போது பயனர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.


பிராந்தியத்தில் ஈரானால் ஆதரிக்கப்படும் எந்த குழுக்கள் கவலையை ஏற்படுத்துகின்றன?


குறிப்பு தயாரிப்பு (Reference Product) : ஒரு பேரழிவு நிகழும் முன் அப்பகுதி மற்றும் அதன் நிலப்பரப்புப் பற்றிய விரைவான தகவலின் குறிப்புகளைத் தயாரித்து வழங்குகிறது.


முதல் மதிப்பீடு தயாரிப்பு (First Estimate Product) : பேரழிவிற்குப் பிறகு எந்தெந்த இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதன் விரைவான மதிப்பீட்டை வழங்குகிறது.


வரையறை தயாரிப்பு (Delineation Product) : ஒரு பேரழிவிற்குப் பிறகு என்ன நடந்தது மற்றும் எவ்வளவு மோசமானது என்பது பற்றிய தகவலை இது வழங்குகிறது.


தரப்படுத்தல் தயாரிப்பு (Grading Product) : இது சேத மதிப்பீடு, இடம்சார்ந்த பாதிப்பு மற்றும் பேரழிவு நடந்த பிறகு அதன் அளவை வழங்குகிறது.


Original article:

Share: