தாய்மார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலின் (pre-eclampsia) மீது கவனம் செலுத்துதல்

 கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த தீவிர உயர் இரத்த அழுத்தக் கோளாறு (hypertensive disorder) குறித்து அதிக விழிப்புணர்வு தேவை.


 "உடல் ரீதியாக இயல்பான, நரம்பியல் ரீதியாக அப்படியே குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு ஆச்சரியமாக இல்லையா?" இந்த வார்த்தைகள் முக்கியமான ஒன்றை எனக்கு உணர்த்தியது: தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு (Perinatal care) மிகவும் முக்கியமானது.


தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரசவத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான வழியில் நாம் ஒப்புக்கொள்வதை விட புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பிறப்பு சார்ந்த குறைபாடுகள் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்ற உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும். பிறவிக் குறைபாடுகளை (congenital anomaly) மாற்ற முடியாது என்றாலும், நரம்பியல் பற்றாக்குறையானது போதிய மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு (Perinatal care) காரணமாக ஏற்படலாம்.


ஒரு கூட்டுப் பொறுப்பு


நம் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் நமது தேசம் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பில் (Perinatal care) உள்ள பங்குதாரர்களிடம் தங்கியுள்ளது. இதில் மகப்பேறு மருத்துவர்கள் (obstetricians), கதிரியக்க வல்லுநர்கள் முதல் கரு மருத்துவ நிபுணர்கள் வரை (radiologists to fetal medicine specialists), நியோனாட்டாலஜிஸ்ட்கள் (neonatologists) மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Social Health Activist) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற முன்னணி பணியாளர்கள் அடங்குவர். முறையான பிறப்புக்கு முந்தைய பராமரிப்பை (antenatal care) உறுதி செய்வதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.


"பிறப்பதற்கு முன்பே வாழ்க்கை தொடங்குகிறது" (Life begins before birth) என்ற பழமொழி, ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நாம் பிறப்பதற்கு முன் நாம் அனுபவித்தவை நமது இறுதி மூச்சு வரை நம்முடன் இருக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது. குறைப்பிரசவம் (Prematurity), குறைந்த பிறப்பு எடை (low birth weight), வளர்ச்சிக் கட்டுப்பாடு (growth restriction) மற்றும் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (Pre-eclampsia) ஆகியவை உலகெங்கிலும் உள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தடுக்கக்கூடிய நிலைமைகளாகும். இந்த நிலைமைகள் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்துடன் (high blood pressure) இணைக்கப்பட்டுள்ளன. உயர் இரத்த அழுத்தத்தின் (high blood pressure) நீண்ட கால சிக்கல்களாக தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கிறது. பிறக்கும்போது இந்த நிலையில் இருந்த பெரியவர்கள், உயர் இரத்த அழுத்தம், வளர்சிதை மாற்றத்தில் உள்ள பிரச்சனைகள், இதய பிரச்சனைகள், கெட்ட கொழுப்பு அளவுகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை எளிதில் பெறலாம். இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre-eclampsia) ஒரு பெண்ணுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை நான்கு மடங்கு அதிகமாகவும், இதய நோய், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சினைகளால் பிற்காலத்தில் இறக்கும் வாய்ப்பை இருமடங்காகவும் மாற்றும் என்று புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.


பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துவது உண்மையில் பெண்களுடைய ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இருப்பினும், இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலுக்குப் (pre-eclampsia) பிறகு தாயின் இதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி நாம் அதிகம் ஆய்வு செய்யாதது வருத்தமளிக்கிறது.


தகவல்


உலகின் பாதகமான கர்ப்பகால விளைவுகளில் கிட்டத்தட்ட 25% பங்கை இந்தியா கொண்டுள்ளது. இந்த உடல்நல சார்ந்த கவலைகளை நிவர்த்தி செய்வது ஒரு தார்மீக கட்டாயம் மற்றும் பொருளாதாரத் தேவையாகும். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey (NFHS-5)) புள்ளிவிவரங்கள் 1,000 கருவுற்றவர்களுக்கு பிறப்பு இறப்பு விகிதங்கள் 32 ஆகவும், பிறந்த குழந்தையின் இறப்பு விகிதம் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 25 ஆகவும் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் தாய் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளன.


மே மாதமானது "இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre-eclampsia(PE)) தடுப்பு மாதம்" (PE Prevention Month) மற்றும் உலக இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (World pre-eclampsia(PE)) தினம் மே 22-ம் தேதி ஆகும். பாதுகாப்பான தாய்மை மற்றும் பிறப்பை உறுதி செய்வதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவோம். இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre-eclampsia(PE)) என்பது கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் தாய்க்கு பல உறுப்புகளில் செயலிழப்புகளுக்கு வழிவகுக்குகிறது. கருவுற்று 20 வாரங்களுக்குப் பிறகு உயர் இரத்த அழுத்தம், முகம், கைகள் மற்றும் கால்களில் வீக்கம், கடுமையான தலைவலி, பார்வையில் மாற்றம், மேல் வயிற்று வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இவற்றின் அறிகுறிகளாகும்.


முதல் மூன்று மாதங்களில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (pre-eclampsia(PE)) மற்றும் கருவின் வளர்ச்சி தடைக்கான மேற்பார்வை முக்கியமானது. மேலும் திட்டமிடப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் அதிக ஆபத்துகள் உள்ள கர்ப்பங்களை நாம் நிர்வகிக்க வேண்டும். தாய்வழி நோய் வரலாறு (maternal history), புள்ளிவிவரங்கள் (demographics), கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்ட் (colour doppler ultrasound), சராசரி தமனி சார்ந்த அழுத்தம் (mean arterial pressure), நஞ்சுக்கொடி உயிரியளவுகள் (placental biomarkers) மற்றும் முதல் மூன்று மாதங்களில் சரியான நேரத்தில் மருந்தியல் தலையீடு ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த மேற்பார்வை அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களைக் கண்டறிந்து நிர்வகிக்க உதவும். இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலுக்கான (pre-eclampsia(PE)) இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் மேற்பார்வை கண்காணிப்பு, முன்கூட்டியே அடையாளம் காண்பது மற்றும் பிரசவ நேரத்தை தீர்மானிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த கவனிப்பின் முக்கிய பகுதியாக கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துவது தாய் மற்றும் குழந்தை இருவரும் சிறந்த முடிவுகளைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவுகிறது.




இந்தியாவில் ஒரு திட்டம்


கர்ப்பத்தின் இந்த தீவிர உயர் இரத்த அழுத்தக் கோளாறு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலை (pre-eclampsia(PE)) எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவையாகும். இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (Indian Radiological and Imaging Association (IRIA)), அதன் முதன்மைத் திட்டமான “சம்ராக்ஷன்” (Samrakshan) மூலம் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பான தாய்மைக்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காலத்தின் முடிவில் இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலை (pre-eclampsia(PE)) 8% -10% இலிருந்து 3% ஆகவும், கரு வளர்ச்சிக் கட்டுப்பாடு 25% -30% இலிருந்து 10% ஆகவும் குறைக்கப்படும் என்ற உறுதிமொழியுடன், இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (IRIA) பாதுகாப்பு (Samrakshan) கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்களைத் தீர்க்கவும் குறைக்கவும் தேவையான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.


சமூக ஈடுபாடும், நிலையான தலைமைத்துவமும் மிக முக்கியமானது. ஒவ்வொரு பெண்ணும் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான வாய்ப்பை உறுதிசெய்து, பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்வோம். 


டாக்டர் கவிதா அனேஜா ரோகினி, டெல்லியில் உள்ள நவேதா ஹெல்த்கேர் நிறுவனத்தில் கரு கதிரியக்க நிபுணர் மற்றும் சம்ரக்ஷனின்  முக்கிய உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share: