பல்லுயிர் இழப்பு(Biodiversity loss), இது உள்ளூர் அல்லது உலக அளவில் தாவர அல்லது விலங்கு இனங்களின் இழப்பைக் குறிக்கிறது. ஒரு ஆய்வின் படி, காலநிலை மாற்றம் மற்றும் பூர்வீகமற்ற உயிரினங்கள் (non-native species) அறிமுகம் ஆகிய மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
மனித செயல்பாடுகள் பூமியை சீரழிப்பதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. மனிதர்களால் ஏற்படும் பல்லுயிர் இழப்பு (loss of biodiversity), பூர்வீகமற்ற உயிரினங்களின் அறிமுகம் (introduction of non-native species), காலநிலை மாற்றம் (climate change) மற்றும் இரசாயன மாசுபாடு (chemical pollution) ஆகிய நான்கு உலகளாவிய மாற்றங்கள் நோய்கள் பரவுவதற்கு பங்களிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இந்த காரணிகள் மனிதர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் விலங்குகளையும் பாதிக்கின்றன.
"உலகளாவிய மாற்ற இயக்கிகள் மற்றும் தொற்று நோய் அபாயம் பற்றிய ஒரு மெட்டா பகுப்பாய்வு" (A meta-analysis on global change drivers and the risk of infectious disease) என்ற தலைப்பில் ஆய்வானது நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது. நோட்ரே டேம் பல்கலைக்கழகம் (University of Notre Dame), யேல் பல்கலைக்கழகம் (Yale University), ஓரிகான் மாநில பல்கலைக்கழகம் (Oregon State University) மற்றும் கனெக்டிகட் பல்கலைக்கழகம் (University of Connecticut) உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன், முந்தைய ஆய்வுகளில் நோய் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், அவற்றின் அதிக அணுகுமுறை இலக்காக இருந்தது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டு ஆய்வில், வெப்பமான வெப்பநிலை ஆப்பிரிக்காவில் மலேரியாவை பரவலாகப் பரப்பக்கூடும் என்று கண்டறியப்பட்டது. இதில், உலகளாவிய மாற்றங்களால், உலகம் மற்றும் உயிரினங்கள் முழுவதும் தொற்று நோய் அபாயத்த்தால் முற்றிலும் பாதிப்படையும் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
நோய்களின் பரவல் காரணமாக, பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம், இரசாயன மாசுபாடு, பூர்வீகமற்ற இனங்கள் மற்றும் வாழ்விட இழப்பு ஆகிய ஐந்து உலகளாவிய மாற்ற செயல்பாடுகள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கான பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரத்தன்மை போன்ற தொற்று நோய் விளைவுகளை இந்த இயக்கிகள் மூலம் எவ்வாறு பாதித்தன என்பதை ஆராய கிட்டத்தட்ட 1,000 முந்தைய ஆய்வுகளின் தரவுகளை அவர்கள் தொகுத்துள்ளனர்.
பல்லுயிர் இழப்பு, உள்நாட்டில் அல்லது உலகளவில் இனங்கள் மறைந்துவிடும் போது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது. பல்லுயிர் நிறைந்த பகுதிகள் நீர்த்த விளைவு (dilution effect) எனப்படும் ஏதாவது ஒன்றின் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் என்று கருதப்படுகிறது. நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்க்கிருமிகள் அரிதான உயிரினங்களை விட பொதுவான உயிரினங்களை பாதிப்பதன் மூலம் அதிகமாக பரவுகின்றன. பல்லுயிர்கள் அழிக்கப்படும் போது, அரிதான இனங்கள் முதலில் மறைந்து, ஏராளமான உயிரினங்கள் மற்றும் அவை கொண்டு செல்லும் நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது தொற்று நோய் பரவுதலின் ஒட்டுமொத்த ஆபத்தை அதிகரிக்கிறது. ஒர் உதாரணம், அமெரிக்காவில் லைம் நோய் (Lyme disease) ஆகும். "வெள்ளை-கால் எலிகள் மிக அதிகமாகவும் திறமையான பரவலாகவும் இருக்கின்றன. அதேசமயம் பெரிய பாலூட்டிகள் அரிதானவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. மனிதனால் தூண்டப்பட்ட பல்லுயிர் இழப்பு காரணமாக, பெரிய பாலூட்டிகளை நாம் இழக்கும்போது, விகிதாச்சாரத்தில் அதிக வெள்ளைக் கால் எலிகள் இருக்கின்றன. அதாவது இவை லைம் நோயின் (Lyme disease) பெரிய ஆபத்து என்று ரோஹ்ர் கூறுகிறார்.
பிற உலகளாவிய மாற்ற காரணிகளும் நோய் பரவலை அதிகரிக்கின்றன. பூர்வீகமற்ற இனங்களை அறிமுகப்படுத்துவது புதிய நோய்க்கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொண்டுவருகிறது, இது புதிய நோய்களின் வெடிப்புக்கு வழிவகுக்கிறது. ஆசிய புலி கொசு (Asian tiger mosquito) டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தபோது இது நிகழ்ந்தது. காலநிலை மாற்றம் இனங்களின் இடம்பெயர்வு வடிவங்களை மாற்றுகிறது, இதனால் அவை புதிய பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு உள்ளூர் இனங்களுடன் தொடர்பு கொள்கின்றன, இது நோய்க்கிருமி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
நிச்சயமாக, கடந்த சில பத்தாண்டுகளாக, மனிதர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையின் காரணமாக தாவர மற்றும் விலங்கு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (World Wildlife Fund(WWF)) Living Planet அறிக்கையானது 2022-ன் படி, கடந்த 50 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை சுமார் 69% குறைந்துள்ளது எனக் கூறுகிறது. மேலும், தி ராயல் சொசைட்டியின் (Royal Society) அறிக்கை 1990 முதல் 2020 வரை, சுமார் 420 மில்லியன் ஹெக்டேர் காடுகள், பெரும்பாலும் வெப்பமண்டல காடுகள் அழிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனங்களை இழந்து வருகிறோம்.
இதில் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், வாழ்விட இழப்பு நோய் பரவலைக் குறைக்கிறது. இது விரைவான நகரமயமாக்கல் காரணமாக இருக்கலாம், இது காட்டு விலங்குகள் மற்றும் அவற்றின் பூச்சிகளுக்கு குறைவான இடத்தை உருவாக்குகிறது, ஆனால் கிராமப்புறங்களை விட சிறந்த சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பையும் கொண்டு வருவதாக ரோர் கூறுகிறார்.
ஆய்வுக்கு சில வரம்புகள் மற்றும் எச்சரிக்கைகள் உள்ளன. ஒன்று, இந்த பகுப்பாய்வில் கடந்தகால ஆய்வுகள் ஒரு உலகளாவிய மாற்றக் காரணியை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன. ஆனால் நிஜ வாழ்க்கையில், உயிரினங்கள் இந்த காரணிகளில் பலவற்றை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளக்கூடும். உதாரணமாக, காலநிலை மாற்றம் மற்றும் இரசாயன மாசுபாடு, வாழ்விட இழப்பு மற்றும் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும், பல்லுயிர் இழப்பு மற்றும் புதிய இனங்கள் அறிமுகத்திற்கு வழிவகுக்கும். இந்தக் காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து, தொற்று நோய் பரவுதலால் அபாயத்தைக் கூட்டுகிறதா, குறைக்கிறதா அல்லது பெருக்குகிறதா என்பதை எதிர்கால ஆய்வுகள் ஆராய வேண்டும்.
இறுதியாக, மனிதனால் தூண்டப்பட்ட உலகளாவிய மாற்றங்கள், குறிப்பாக பல்லுயிர் இழப்பு, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளிடையே தொற்று நோய்களின் பரவலை கணிசமாக பாதிக்கிறது. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வதும் தணிப்பதும் நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு முக்கியமானதாகும்.