கேரளாவில் சிறுமியின் மரணத்திற்கு காரணமான மூளையை உண்ணும் அமீபா Naegleria fowleri என்றால் என்ன? -ஷாஜு பிலிப்

 முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary amebic meningoencephalitis (PAM)) என்பது அமீபா நெக்லேரியா ஃபோலேரியால் (amoeba Naegleria fowleri) ஏற்படும் ஒரு அரிய மூளைத் தொற்று ஆகும். இந்த அரிய மற்றும் கொடிய நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.


"மூளையை உண்ணும் அமீபா" (brain-eating amoeba’) என்றும் அழைக்கப்படும் Naegleria fowleri என்ற அரிதான தொற்று முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்க்கு (Primary amebic meningoencephalitis (PAM)) ஐந்து வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். மே 20-ம் தேதி திங்கள் அன்று கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.


கடந்த காலங்களிலும், அரிதான மற்றும் ஆபத்தான தொற்று பல உயிர்களைக் கொன்றது. எந்த சூழ்நிலையில் ஒருவர் பாதிக்கப்படலாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகள் என்ன? 



முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary amebic meningoencephalitis (PAM)) என்றால் என்ன?


முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) என்பது ஒர் ஒற்றை செல் உயிரணுவான Naegleria fowleri மூலம் ஏற்படும் ஒரு அரிதான ஆனால் ஆபத்தான மூளைத் தொற்று நோய் ஆகும். இந்த அமீபா உலகெங்கிலும் உள்ள சூடான நன்னீர் மற்றும் மண்ணில் வாழும் உயிரணுவாகும். இவை மூக்கு வழியாக உடலில் நுழையும் போது மக்களை பாதிக்கிறது. இந்த அமீபாவானது, 115°F (46°C) வெப்பநிலை வரையிலான சூழலில்   வளரும் தன்மையுடையது.  மேலும், இது வெப்பமான சூழலில் குறுகிய காலத்திற்கு உயிர்வாழ முடியும்.


ஏரிகள், ஆறுகள், நீச்சல் குளங்கள், ஸ்பிளாஸ் பேட்கள், சர்ப் பூங்காக்கள் போன்ற சூடான நன்னீர் இடங்களில் அல்லது தண்ணீரை சுத்தமாக வைத்திருக்காத அல்லது குறைந்த குளோரின் அளவு உள்ள இடங்களில் நீங்கள் அமீபாவைக் காணலாம்.


நெக்லேரியா ஃபோலேரி (Naegleria Fowleri) எவ்வாறு மக்களை பாதிக்கிறது? 


Naegleria fowleri ஆனது, பொதுவாக நீச்சலின் போது மூக்கு வழியாக உடலில் நுழைகிறது. பின்னர் அது மூளைக்குச் சென்று, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடந்த கோழிக்கோடு நோய் தொற்றில், உள்ளூர் ஆற்றில் நீந்தியதால் ஒரு சிறுமிக்கு தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் மே 1 அன்று, மற்ற நான்கு குழந்தைகளுடன் நீந்தினாலும், அவருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், அமீபாவால் அசுத்தமான நீரைக் குடிப்பதால் மக்கள் நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) நோயால் பாதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவாது என்று குறிப்பிடுகிறது. 


முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் (PAM) அறிகுறிகள் என்ன?


முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) தொற்றின் ஆரம்ப நிலையில், தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். பின்னர் இந்த அறிகுறிகள் நோயாளிக்கு கடினமான கழுத்து இருக்கலாம். இதனால், மணக்குழப்பம், வலிப்புத்தாக்கங்கள், மாயத்தோற்றம் மற்றும் கோமா ஆகியவை உருவாகலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (Centers for Disease Control and Prevention (CDC) படி, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) உள்ள பெரும்பாலான மக்களின் அறிகுறிகள் இந்த நோய் தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் இறந்துவிடுவார்கள். பொதுவாக 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும்.


முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM)  நோய்க்கான சிகிச்சை என்ன?


முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸிற்கான (PAM) பயனுள்ள   சிகிச்சைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆம்போடெரிசின் பி (amphotericin-B), அசித்ரோமைசின் (azithromycin), ஃப்ளூகோனசோல் (fluconazole), ரிஃபாம்பின் (rifampin), மில்டெஃபோசின் (miltefosine) மற்றும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) உள்ளிட்ட மருந்துகளின் கலவையை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.


இந்தியாவில் முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோய் தொற்றுகளின் நிலை என்ன?


இந்தியாவில் 20 முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) தொற்றுகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் கோழிக்கோடு, ஏழாவது இடத்தில் உள்ளது. ஜூலை 2023 இல், ஆலப்புழாவில் முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) நோயால் 15 வயது சிறுவன் இறந்துள்ளான். இதுவே, கேரளாவில் முதல் சம்பவம் 2016-ல் ஆலப்புழாவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.




Original article:

Share: