நேபாள அமைச்சரவை கடந்த வாரம் அதன் ரூ.100 தாளில் உத்தரகாண்டில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் சில பகுதிகளை அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை வைக்க முடிவு செய்தது. இந்த முடிவு வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை ‘காத்மாண்டுவின் இத்தகைய நடவடிக்கைகள், களத்தில் உள்ள உண்மையான நிலையை மாற்றாது’ என எதிர்வினையாற்றத் தூண்டியது.
உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாளம்-சீனா மூன்று நாடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி ஆகியவற்றை உள்ளடக்கிய 372 சதுர கிமீ பரப்பளவில் பிராந்திய தகராறு உள்ளது. இந்தப் பகுதிகள் வரலாற்று ரீதியாகவும் வெளிப்படையாகவும் நேபாளம் தனக்கு சொந்தமானது என்று நீண்ட காலமாக கூறி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நேபாள நாடாளுமன்றம் ஒருமித்த கருத்துடன் வரைபடத்தை ஒப்புக்கொண்டது. இந்தியா மற்றும் நேபாள பிரதமர்கள் எல்லைப் பிரச்சினையை ராஜதந்திர வழிகள் மூலம் ஆய்வு செய்து தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், நேபாளத்தின் சமீபத்திய முடிவுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நிறுவப்பட்ட தளங்கள் மூலம் எல்லை விவாதங்கள் நடந்து வருகின்றன என்று வலியுறுத்தினார். இந்த செயல்முறையின் வேகம் குறித்து காத்மாண்டு அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
2020ஆம் ஆண்டில் புதிய வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போலல்லாமல், அதை நாணயத் தாளில் (currency note) வைப்பதற்கான முடிவு நேபாளத்தில் சந்தேகத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டது.
பிரச்சினையின் தோற்றம்
1814-16ஆம் ஆண்டு ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் (Anglo-Nepalese War) பிறகு கையெழுத்திடப்பட்ட சுகௌலி ஒப்பந்தம் (Treaty of Sugauli), நேபாளத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் நிலத்தை இழக்கச் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான பிரிவு 5 ஆனது, நேபாள ஆட்சியாளர்களால் காளி நதிக்கு (Kali River) கிழக்கே உள்ள நிலத்தை இனி கட்டுப்படுத்த முடியாது என்று கூறியது.
1819, 1821, 1827 மற்றும் 1856ஆம் ஆண்டுகளில், பிரிட்டிஷ் இந்திய பொது நில அளவையாளரால் (British Surveyor General of India) வெளியிடப்பட்ட வரைபடங்கள் காளி நதி லிம்பியாதுராவில் (Limpiadhura) தோன்றியதாகக் காட்டுவதாக எல்லைகள் குறித்த நிபுணர் புத்தி நாராயண் ஷ்ரேஸ்தா கூறினார். ஆனால் 1879ஆம் ஆண்டின் வரைபடம் "குடி யாங்டி" (Kuti Yangti) என்ற உள்ளூர் பெயரைப் பயன்படுத்தியது.
1920-21 வரையிலான வரைபடத்தில் குடி யாங்டி (Kuti Yangti) என்ற பெயர் இருந்தது. ஆனால், அது வேறுபட்ட "காளி"யை அடையாளம் காட்டியது. இந்த புதிய காளி கோயில் பகுதியில் இருந்து தொடங்கி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கிய நதியை சந்திக்கும் சிறிய நதியாக சித்தரிக்கப்பட்டது. இருப்பினும், 1947 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் முன் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட கடைசி வரைபடத்தில் காளி நதியின் ஆரம்ப நிலை லிம்பியாதுராவில் தோன்றியதாக ஷ்ரேஸ்தா கூறினார்.
ஸ்ரேஸ்தாவின் கூற்றுப்படி, இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் குஞ்சி (Gunji), நபி (Nabhi), குடி (Kuti) மற்றும் கலாபானி (Kalapani), துளசி நியுராங் (Tulsi Nyurang) மற்றும் நாபிடாங் (Nabhidang) என்றும் அழைக்கப்படுகின்றன. 1962 வரை இந்த பகுதி நேபாள அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் இருந்தது. மேலும், மக்கள் காத்மாண்டுவில் அரசாங்கத்திற்கு நில வருவாயை செலுத்தினர். ஆனால், அந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு நிலைமை மாறியது.
நேபாளத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான 93 வயதான பிஸ்வபந்து தாபா, இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நேபாள மன்னர் மகேந்திராவிடம் கலாபானியை (Kalapani) இராணுவ தளமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் என்று கூறினார்.
டாக்டர். பேக் பகதூர் தாபா 2005-06-ல் நேபாளத்தின் வெளியுறவு அமைச்சராகவும், 1997 முதல் 2003 வரை இந்தியாவுக்கான தூதராகவும் பணியாற்றினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை மன்னர் மகேந்திரா இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறினர். ஆனால், இன்னும் இதற்கான பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
இந்தியா-நேபாள பேச்சுவார்த்தை
இருநாட்டுத்தரப்பு பேச்சுவார்த்தைகளில், நேபாளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல முக்கிய பிரமுகர்கள், பிரதமர் ஐ கே குஜ்ரால், 1997 ஏப்ரல் - 1998 மார்ச் வரை நேபாளம் அதன் உரிமைகோரலுக்கு ஆதாரங்களைத் தர முடிந்தால் இந்தப் பகுதிகளை விட்டுக் கொடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறினர்.
ஜூலை 2000-ல், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நேபாள பிரதமர் ஜி.பி.கொய்ராலாவிடம் நேபாள நிலப்பரப்பை இந்தியா விரும்பவில்லை என்று கூறினார். இருப்பினும், வெளியுறவு செயலாளர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
2014-ல் பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணம் அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரின், நேபாளப் பிரதிநிதியான சுஷில் பிரசாத் கொய்ராலாவும், கந்தக் நதியின் (River Gandak) போக்கை மாற்றிய பிறகு இந்தியப் பக்கத்தில் விழுந்த 145 சதுர கிமீ பரப்பளவான கலாபானி மற்றும் சுஸ்டாவில் எல்லைப் பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பதற்காக எல்லைப் பணிக்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் எல்லைப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று மோடி தன்னிடம் உறுதியளித்ததாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா கூறினார். இருப்பினும், இவரின் வருகைக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதை குறிப்பிடப்படவில்லை.
இருதரப்பு உறவுகளில் மோதல்கள்
2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், நேபாளம் ஒரு இந்து இராஜ்ஜியத்திலிருந்து மதச்சார்பற்ற கூட்டாட்சி குடியரசாக மாறியதில் இந்தியா ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இருப்பினும், 2015 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவின் ஒரு ஆலோசனையை நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் நிராகரித்த பின்னர் இது நடந்தது. நேபாளத்தின் புதிய அரசியலமைப்பை தாமதப்படுத்த இந்தியா தனது அப்போதைய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் மூலம் பரிந்துரைத்தது. தேராய் கட்சிகளின் (Terai parties) கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த தாமதம் ஏற்பட்டது.
2015 செப்டம்பரில் நேபாளம் மீதான முற்றுகை 134 நாட்கள் நீடித்தது. இந்த முற்றுகை இந்தியாவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. அதே ஆண்டு அக்டோபரில், கே.பி.சர்மா ஒலி (K.P.Sharma Oli) நேபாளத்தின் பிரதமரானார். அவர் விரைவாக சீனாவுடன் ஒரு வர்த்தக மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது நேபாளத்திற்கு அத்தியாவசிய பொருட்களின் காப்பு விநியோகத்தை உறுதி செய்வதாக இருந்தது.
பிப்ரவரி 2018-ல், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமையிலான கே.பி.சர்மா ஒலி (K.P.Sharma Oli) மீண்டும் பிரதமரானார். புதிய அரசியலமைப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது தேர்தலில் அவர் பெருமளவு மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றார். 2020ஆம் ஆண்டில், நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியை கே.பி.சர்மா ஒலி வழிநடத்தினார். இந்த புதிய வரைபடம் உத்தரகண்டில் 372 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்த பகுதியை மீட்டெடுப்பதாக கே.பி.சர்மா ஒலி உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கையை "நிலப்படவியல் ஆக்கிரமிப்பு" (cartographic aggression) என்று இந்தியா விமர்சித்ததுடன், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியது. ஆதாரங்களின் அடிப்படையில், தூதரக வழிமுறைகள் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா கூறியது. சுவாரஸ்யமாக, நேபாளத்தில் புதிய 100 ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கான முடிவு கே.பி.சர்மா ஒலியின் (K.P.Sharma Oli) கட்சி அங்குள்ள ஆளும் கூட்டணியில் இணைந்த இரண்டு மாதங்களுக்குள் எடுக்கப்பட்டது.
கே.பி.சர்மா ஒலியின் (K.P.Sharma Oli) கட்சியான நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தனது தேர்தல் அறிக்கையில் நேபாளத்திற்காக இந்த பகுதிகளை மீட்டெடுப்பதாக உறுதியளித்திருந்தது. பல ஆண்டுகளாக, காத்மாண்டுவில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்தியா மற்றும் சீனா இரண்டுடனும் "எல்லை அத்துமீறல்" (border encroachment) பிரச்சினைகளை நிவர்த்தி செய்துள்ளன. இதை சீனாவுக்கான நேபாள முன்னாள் தூதர் ராஜேஷ்வர் ஆச்சார்யா குறிப்பிட்டார்.
2020-ஐ விட 2024 வேறுபட்டது
2020ஆம் ஆண்டில், நேபாளத்தின் நாடாளுமன்றம் ஒரு புதிய வரைபடத்தை ஏற்றுக்கொண்டபோது, ஒருமித்த கருத்து இருந்தது. இருப்பினும், இந்த வரைபடத்தை ரூபாய் தாளில் சேர்ப்பதில் தற்போது ஒருமித்த கருத்து இல்லை. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (UML) மற்றும் பிரச்சண்டாவின் நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (CPN) (மாவோயிச மையம்) ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தாலும், மிகப் பெரிய கட்சியும் பிரதான எதிர்க்கட்சியுமான நேபாளி காங்கிரஸ் இப்பிரச்சினை பற்றி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி ராம் சந்திர பௌடலின் பொருளாதார ஆலோசகரும், ராஷ்டிர வங்கியின் (நேபாளத்தின் மத்திய வங்கி) முன்னாள் ஆளுநருமான சிரஞ்சிவீ நேபாள நாட்டின் நாணயத்தில் வரைபடத்தைச் சேர்ப்பதற்கான அமைச்சரவையின் முடிவை "விவேகமற்றது" (unwise) மற்றும் "ஆத்திரமூட்டக் கூடியது" (provocative) என்று விமர்சித்துள்ளார். மேலும், பலரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நம்புகின்றனர். இந்தியாவிடமிருந்து தீவிர எதிர்வினைகளைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் கவலைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது. சீனாவுடனான மேம்பட்ட சாலை இணைப்பு (better road connectivity ) 2015-ல் இருந்ததைப் போன்ற எதிர்கால முற்றுகைகளின் தாக்கத்தை குறைக்கும் என்று அது நம்புகிறது.
1960-களின் முற்பகுதியில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை எல்லை ஆணையத்தின் கூட்டங்கள் மூலம் நேபாளம் தீர்த்தது. முன்னாள் பிரதமர் கீர்த்திநிதி பிஸ்தா ஒருமுறை சீன பிரதமர் சூ என் லாய் கூறிய ஒரு அறிக்கையை குறிப்பிட்டார். தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள் எதிர்கால சந்ததியினருக்கு சிக்கலான பிரச்சினைகளாக மாறும் என்று சூ என் லாய் கூறியிருந்தார்.
இந்தியாவும் நேபாளமும் பொருத்தமான தளங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்க்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டாலும், இது குறித்து விவாதிக்க அவர்கள் இன்னும் ஒரு சந்திப்பை திட்டமிடவில்லை அல்லது காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை.
Original article: