முகக் கவசங்கள் (masks) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) போன்ற ஆசிய பொருட்களை ஐரோப்பா பெரிதும் நம்பியுள்ளது என்பதை கோவிட் -19 தொற்றுநோய் வெளிப்படுத்தியது. உற்பத்தியை தங்கள் சொந்த பிராந்தியத்திற்கு மீண்டும் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. இந்த முயற்சிகள் அர்த்தமுள்ளதா?
ஐரோப்பாவிற்கு ஒரு மரண அடியைத் தர சீனாவிற்கு அணுகுண்டு தேவையில்லை என்று Ulrike Holzgrabe நம்புகிறார். தெற்கு ஜெர்மனியில் உள்ள வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (Würzburg University) மருந்து மற்றும் மருத்துவ வேதியியல் பேராசிரியர் DW இடம், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விநியோகத்தை நிறுத்துவதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஐரோப்பாவின் மருத்துவர்கள் பரிந்துரைத்த முகக்கவசங்களின் பெரும் பற்றாக்குறை, அடிப்படையான மருத்துவப் பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதிசெய்வதில் கண்டத்தின் பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம் ஐரோப்பாவிற்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, குறிப்பாக சீனாவிலிருந்து மட்டுமே எந்த மருந்துகளைப் பெறமுடியும் என்பதைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கிறது. எந்த நிறுவனம் மருந்து உற்பத்திக்கு முன்னோடியான இரசாயனங்களைத் தயாரிக்கிறது மற்றும் யார் வழங்குகிறது? என்ற தரவுத்தளத்துடன் இந்த முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஹோல்ஸ்கிரேப் கூறினார்.
கடுமையான போட்டி மற்றும் வர்த்தக ரகசியங்கள்
ஜெர்மனியின் கொலோனில் உள்ள ஜெர்மன் பொருளாதார நிறுவனத்தைச் (German Economic Institute (IW)) சேர்ந்த ஜாஸ்மினா கிர்ச்சோஃப், ஒரு குறிப்பிட்ட மருந்து தரவுத்தளத்தை உருவாக்க முயற்சிக்கும்போது சிக்கல் தொடங்குகிறது என்று கூறுகிறார். இரசாயன உற்பத்தியாளர்கள் பற்றிய தகவல்கள் தொழிற்துறையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்குகிறார்.
மருந்து தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக ஜெனரிக்ஸ் துறையில் ரகசியங்களை வைத்திருப்பது முக்கியம். ஜெனரிக்ஸ் என்பது மருத்துவ மருந்துகள் ஆகும், அவை முன்பு காப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்ட மருந்தின் அதே இரசாயனப் பொருளைக் கொண்டிருக்கின்றன.
ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களின் வெற்றி என்பது விலையை குறைவாக வைத்திருப்பதாகும். அதாவது “விநியோகச் சங்கிலிகள் பெரும்பாலும் மிகவும் சிக்கலானவை, மேலும் எந்தெந்த நாடுகளில் எத்தனை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கிர்ச்சோஃப் கூறினார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பற்றி, ஜெர்மன் பொருளாதார நிறுவன (German Economic Institute (IW)) ஆராய்ச்சியாளர், சீனா தனது சொந்த ஆண்டிபயாடிக் உற்பத்தியை வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை 1980 களின் முற்பகுதியில் அங்கீகரித்ததாகக் குறிப்பிட்டார். "குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளில் முதலில் உள்நாட்டு சந்தைக்கு, பெரிய முதலீடு இருந்தது. பின்னர் மருந்துக்கான உபரி உற்பத்தி ஏற்றுமதி செய்யப்பட்டது," என்று கிர்ச்சோஃப் மேலும் கூறினார்.
உலகளவில் மருத்துவத்திற்கான இரசாயன மருந்துகளைத் தயாரிப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவும் மருந்துகளை அதிகம் விற்பனை செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
தேசிய மருந்து வியூகம்: ஜெர்மனியின் மறுசீரமைப்பு முயற்சி
உள்நாட்டு மருந்துத் தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜெர்மன் அரசாங்கம் 2023 டிசம்பரில் மூன்று முக்கியப் பகுதிகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அறிக்கையை ஏற்றுக்கொண்டது. முதல் குறிக்கோளானது, மருத்துவ தயாரிப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதே ஆகும். இரண்டாவது இலக்கு, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உடல்நலத் தரவுகளை எளிதாக அணுக உதவுவது ஆகும். மூன்றாவது இலக்கு ஜெர்மனியில் கூடுதலான உற்பத்தி ஆலைகளை நிறுவுவதை ஊக்குவிப்பதாகும்.
உலகளாவிய மருந்து சந்தையில் ஜெர்மனி ஒரு குறிப்பிடத்தக்க உற்பத்தியாளராக உள்ளது மற்றும் பேயர் (Bayer), போஹ்ரிங்கர் இங்கல்ஹெய்ம் (Boehringer Ingelheim) மற்றும் மெர்க் குழுமம் (Merck Group) போன்ற முக்கிய நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. ஹோல்ஸ்கிராப்பின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் புதுமையான, காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கான சந்தையில் வெற்றிகரமாக உள்ளன. ஆனால், ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதில் பலவீனமாக உள்ளது. ஏனெனில், ஐரோப்பாவில் அவற்றைத் தயாரிப்பது குறைந்த அளவு லாபம் ஈட்டவில்லை.
ஆனால், பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு ஜெனிரிக்ஸ் மருந்துகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், அவை பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட 80% அடிப்படை மருந்துத் தேவைகளை உள்ளடக்குகின்றன.
மானியங்களுடன் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் இராஜதந்திரத்தை புரோ ஜெனரிகாவின் தலைமை நிர்வாக அதிகாரி போர்க் பிரெத்தவுர் விமர்சித்துள்ளார். Pro Generika என்பது ஒரு ஜெர்மன் இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது சுகாதாரக் கொள்கை மற்றும் மருந்துத் துறையில் கவனம் செலுத்துகிறது. ஜெர்மனிக்கு மருந்துகளுக்கு வேறுபட்ட விலை நிர்ணய முறை தேவை என்று பிரெத்தவர் வாதிட்டார். ஐரோப்பா தொடர்ச்சியான உதவித் தொகைகள் தேவைப்படும் ஆலைகளை நம்பக்கூடாது என்றார் அவர். அதற்குப் பதிலாக, ஐரோப்பியர்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
பெரிய மருந்தகத்திற்கு பெரிய ஊக்கத்தொகை தேவை
கடந்த ஆண்டு கோடையில், ஜெர்மன் பாராளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் ஜெர்மன் மருந்துத் தொழில்துறையின் உற்பத்தியை அதிக மருந்து விலைகளை மீண்டும் கொண்டுவர அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதை நிறுத்த ஊக்குவிப்பதைக் கொண்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோய்களின் போதும், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகும் ஏற்பட்ட மருந்து பற்றாக்குறை மற்றும் விநியோகத் தடைகளை இந்தச் சட்டம் ஒரு பதிலாக இருந்தது.
இது ஒரு பெரிய சுகாதாரக் கொள்கை மாற்றமாகும். ஏனெனில் ஜெர்மனி கடந்த ஆண்டுவரை பொது சுகாதாரச் செலவுகளை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க முயன்றது.
முன்னதாக, மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் மருந்துகளை சட்டரீதியான சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிலையான விலையில் விற்க வேண்டியிருந்தது. இந்த வரமுறைக்குட்பட்ட விலைகளில் ஜெனரிக்ஸ் மருந்துகள் உட்பட சுமார் 80% மருந்துகளுக்கு இதில் பொருந்தும். இதன் பொருள் மிகவும் செலவு குறைந்த மருந்து நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பதாகும்.
இந்த புதிய சட்டம், காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட செயலில் உள்ள பொருட்கள் மற்றும் காப்புரிமை இல்லாத மருந்துகளுக்கு தங்கள் விநியோகர்களை எவ்வாறு தேர்வு செய்கின்றன என்பதை நிர்ணயிக்கிறது. இப்போது, அவர்கள் ஒப்பந்தங்களை வழங்கும்போது ஐரோப்பிய நிறுவனங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
Ulrike Holzgrabe இந்த சட்டத்தை ஒரு நேர்மறையான நடவடிக்கையாக பார்க்கிறார். ஐரோப்பா அதிகம் உற்பத்தி செய்யாததால், குறிப்பாக ஜெனரிக் மருந்துகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாததால் அவர் கவலைப்படுகிறார். மறுபுறம், ஜாஸ்மினா கிர்ச்சோஃப், வெளிநாடுகளில் உற்பத்தியை மேலும் இடமாற்றம் செய்வதைத் தடுக்க, சட்டம் உதவியது என்று நம்புகிறார்.
சீனாவின் அசைக்க முடியாத ஆதிக்கம்
ஜெர்மன் கெமிக்கல் இண்டஸ்ட்ரி சங்கத்தை (German Chemical Industry (VCI)) நிர்வகிக்கும் Wolfgang Große Entrup, ஐரோப்பா அதிக பாதுகாப்பை விரும்பினால், மருந்துகளுக்கு அதிக விலையை ஏற்க வேண்டும் என்று நம்புகிறார். ஆனால், ஐரோப்பாவில் உற்பத்திச் செலவுகள் ஆசியாவில் காணப்படும் குறைந்த அளவுகளுக்கு ஒருபோதும் பொருந்தாது என்று ஏப்ரல் மாதம் அவர் குறிப்பிட்டார். அதிகப்படியான அதிகாரத்துவம், திறமையான தொழிலாளர் பற்றாக்குறை, அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு உட்பட ஜெர்மன் மருந்துத் துறையானது பல சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.
சீன மருந்து நிறுவனங்களுக்கு குறைந்த உழைப்பு மற்றும் ஆற்றல் செலவுகள் இருப்பதாக ஹோல்ஸ்கிரேப் ஒப்புக்கொள்கிறார். மேலும், தொழிற்சாலைகள் கட்டும் போது, அரசிடம் இருந்து இலவச நில உதவித்தொகை பெறுகின்றனர். கூடுதலாக, சீன உற்பத்தியாளர்கள் ஐரோப்பாவில் உள்ளதைப் போல கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் காரணிகள் மருந்து உற்பத்தியை மீண்டும் ஐரோப்பாவிற்கு மாற்றுவதை சவாலாக ஆக்குகின்றன என்று ஹோல்ஸ்கிரேப் முடிவு செய்தார். இதன் விளைவாக, சீன மருந்து உற்பத்தியிலிருந்து சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை.