பெண்களின் ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஸ்வஸ்த் நாரி பரப்புரை எவ்வாறு குறிக்கிறது? -ஷாம்னா தச்சம் போயில்


நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் (Sashakt Parivar Abhiyaan (SNSPA)) பிரச்சாரத்தின்கீழ் இந்தியா மூன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி பெரும்பாலும் முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைப்பு, வெகுஜன அணிதிரட்டல் மற்றும் திறமையான டிஜிட்டல் பயன்பாடு போன்ற காரணிகளால் வந்ததுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் இறுதியில் பாலினம், நீதி மற்றும் பொறுப்புணர்வு பற்றிய கேள்விகளை கணினி வடிவமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கும்? 


சமீபத்தில், இந்தியாவின் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் மூன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றுள்ளது. ஆனால் உண்மையான சாதனை விருதுகளைவிட மிகப் பெரியது. இந்தப் பிரச்சாரம் பல்வேறு சுகாதார தளங்கள் மூலம் 11 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தது. 19.7 லட்சம் சுகாதார முகாம்களை நடத்துதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் 3.21 கோடிக்கும் அதிகமான மக்களை ஒரே சுகாதாரத் தளத்தில் பதிவு செய்தது. இந்தியா இப்போது பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.


இந்த பிரச்சாரம் நம்பிக்கையுடன் இருப்பதற்கு தெளிவான காரணங்களை அளிக்கிறது. இது பெரிய எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, சுகாதாரப் பராமரிப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதில் உண்மையான முன்னேற்றங்களையும் உள்ளடக்கியது. இந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பார்ப்போம்.


பெண்களின் ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த அணுகுமுறை


முதலாவதாக, 20 அமைச்சகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைப்பு, "அரசாங்கத்தின் முழு" ஈடுபாட்டைக் குறிக்கிறது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கான வழக்கமான அமைதியான அணுகுமுறையிலிருந்து விலகுவதைக் குறிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை சுகாதார நிபுணர்கள் நீண்டகாலமாக கூறிவருவதை அங்கீகரிக்கிறது. பெண்களின் நல்வாழ்வை ஊட்டச்சத்து, சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல் அல்லது சமூக நல அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாது.


இரண்டாவதாக, இந்தப் பிரச்சாரத்தின் பெருமளவிலான சமூக அணிதிரட்டல் 5 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சாயத்து பிரதிநிதிகள், 1.14 கோடி மாணவர்கள், 94 லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் 5 லட்சம் பிற சமூக உறுப்பினர்களை உள்ளடக்கியது — பரவலாக்கப்பட்ட மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நோக்கிய ஒரு அடிப்படையான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. மேலிருந்து கீழாக இறங்கும் வழங்கல் மாதிரிகளைப் போலல்லாமல் — அவை பெண்களை செயலற்ற பயனாளிகளாக மட்டுமே நிலைநிறுத்துகின்றன — இந்த “முழு சமூக அணுகுமுறை” கட்டமைப்பு ஈடுபாடு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பல்வேறு மையப்புள்ளிகளை உருவாக்குகிறது.


குறிப்பாக, சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்தக் குழுக்கள் எப்போதும் பெண்கள் எவ்வாறு ஒழுங்கமைப்பது, பணத்தை நிர்வகிப்பது மற்றும் ஒன்றாகப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்ள உதவியுள்ளன. இந்தத் திறன்கள் இப்போது அவர்கள் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பெறவும் உதவும்.


மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவது என்னவென்றால், இந்த பிரச்சாரம் டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பயன்படுத்தி அனைவருக்கும் சுகாதாரத் தகவல்களையும் சேவைகளையும் கிடைக்கச் செய்கிறது என்பதுதான். ஒரு வாரத்தில் 10 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்காக இணைய வழியில் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில், நீண்ட தூரம், பயணச் சிரமங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் போன்ற சவால்களை சமாளிக்க நன்கு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் கருவிகள் பெண்களுக்கு உதவும் என்பதை இந்த பிரச்சாரம் காட்டுகிறது.



பெண்கள் சுகாதாரத்தில் டிஜிட்டல் திருப்பம்


பெண்களின் சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் பயணம் 2000-களின் நடுப்பகுதியில் வேகமாக செயல்படத் தொடங்கியது. இது கையேடு, காகிதப் பதிவுகளிலிருந்து சுகாதார சேவைகளை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் தரவைப் பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு மாறியது. பல ஆண்டுகளாக, தாய்வழி சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்த இந்தியா தானியங்கி தொலைபேசி குரல் பதில் அமைப்புகள் (Interactive Voice Response Systems (IVRS)), குறுந்தகவல் சேவை (SMS), தொலைமருத்துவம் மற்றும் நடமாடும் சுகாதார பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. முக்கியமாக, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மக்களின் பொருளாதார – சமூக நிலை மற்றும் கல்வியறிவு அளவுகளை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன.


2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு (Mother and Child Tracking System (MCTS)), கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான டிஜிட்டல் பதிவேடுகளை உருவாக்கும் முதல் முயற்சியாகும். இது நோய்த்தடுப்பு அட்டவணைகள் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு வருகைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார (Reproductive and Child Health (RCH)) தரவுத்தளத்தை உருவாக்க வழிவகுத்தது. இது பல தனித்தனி சுகாதார திட்டங்களை ஒரு டிஜிட்டல் அமைப்பாக இணைத்தது.


டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக 2016-ல் தொடங்கப்பட்ட கில்கரி மொபைல் சுகாதாரத் திட்டம் (Kilkari mobile health programme), மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு ஊட்டச்சத்து, கூடுதல் உணவு, கர்ப்ப பராமரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 18 வார கர்ப்பம் முதல் குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை இந்தியில் வாராந்திர 72 தானியங்கி குரல் செய்திகளை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைச் சென்றடைகிறது.


இதற்கிடையில், பொது அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட eSanjeevani தொலைதூர மருத்துவ தளம், 2020 முதல் 100 மில்லியனுக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, பெண்களே பெரும்பான்மையான பயனாளிகளாக உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெண் நோயாளிகளுடன் தொடர்புடையவை.


2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் (National Digital Health Mission), பின்னர் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (Ayushman Bharat Digital Mission (ABDM)) என்று அழைக்கப்பட்டது, சுகாதார தரவுகளுக்கான முழுமையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவதை இது வேகப்படுத்தியது. கோவிட்-19 தொற்றுநோய் தொலைதூர மருத்துவம், டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள் மற்றும் சுகாதார பயன்பாடுகளை இயல்பாக்க உதவியது. Co-WIN தளம் அரசாங்கம் பெரிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டங்களை எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்திய, ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் (Sashakt Parivar Abhiyaan (SNSPA)) பிரச்சாரம் போன்ற பெண்கள் சுகாதாரத் பிரச்சாரங்களில் இந்த அமைப்புகள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.




இருப்பினும், தாக்க மதிப்பீடு (impact assessment) என்ன சொல்கிறது?


சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்குவது உண்மையான முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, mMitra குரல் செய்தி சேவையின் மீதான ஆராய்ச்சி, டிஜிட்டல் அமைப்புகள் தாய்மார்கள் சரியான நேரத்தில் அதிக தடுப்பூசிகளைப் பெற உதவுகின்றன. தானியங்கி நினைவூட்டல்களை அனுப்புதல், தவறவிட்ட அளவுகளைக் குறைத்தல், இரத்தப்போக்குக்கான மருத்துவர் வருகைகளை ஆதரித்தல் மற்றும் மருத்துவமனை பிரசவத்தை ஊக்குவிக்கிறது.


முன்கள சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தும் கைபேசி சுகாதார செயலிகள் கர்ப்பிணிப் பெண்களின் வீட்டு வருகைகளை 15.7% ஆகவும், பிரசவத்திற்குப் பிந்தைய வருகைகளை 12% ஆகவும் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அவை சுகாதாரக் கல்வி மற்றும் வழக்கமான பரிசோதனைகளுக்கும் உதவுகின்றன. இந்தப் பயன்பாடுகளிலிருந்து வரும் நிகழ்நேரத் தரவு, அதிகாரிகள் சேவைகளில் உள்ள இடைவெளிகளைக் காணவும் வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் உதவுகிறது.


இருப்பினும், தாக்க மதிப்பீடு முக்கிய சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஆதார் அடிப்படையிலான அங்கீகார அமைப்புகள் சூழல் மற்றும் மக்கள்தொகையைப் பொறுத்து அங்கீகார தோல்வி விகிதங்களுடன் கணிசமான விலக்கை உருவாக்கியுள்ளன. தொழில்நுட்ப அணுகல் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி மேலும் புதிய வடிவிலான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இப்போது, ​​மகப்பேறு சலுகைகளைப் பெறுவது தகுதி பெறுவதை மட்டுமல்ல, சிக்கலான டிஜிட்டல் சரிபார்ப்பு படிகளைக் கையாளும் திறனையும் சார்ந்துள்ளது.


குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு, கைரேகை அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகார முறைகள் வீக்கம், கையால் செய்யப்பட்ட வேலைகளால் நேரும் தேய்மானம் அல்லது கிராமப்புற சுகாதார மையங்களில் மோசமான இணைப்பு காரணமாக சவால்களை எதிர்கொள்கின்றன. டிஜிட்டல் மயமாக்கல் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activist (ASHA)) மற்றும் துணை நர்சிங் மருத்துவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவர்கள் ஒரே நேரத்தில் நேரடி பராமரிப்புப் பணி செய்வதோடு, பல்வேறு தளங்களில் அதிக அளவிலான தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


தரவு, வழிமுறைகள் மற்றும் அணுகல் ஆகியவற்றின் சந்திப்பில் பெண்கள்


ABDM சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை, தரவைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. தரவைப் பாதுகாப்பதற்கான தெளிவான விதிகள் இல்லாமல், உடல்நலம் மற்றும் மகப்பேறுத் தகவல்களை தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைப்பது அந்தத் தரவின் தவறானப் பயன்பாட்டிற்கு அல்லது எதிர்பாராத பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும்.


ஹரியானாவின் மாநில அளவிலான முயற்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தனித்துவமான “கர்ப்ப அடையாள எண்” (pregnancy ID) வழங்கி அதை மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார (Reproductive and Child Health (RCH)) தரவுத்தளத்துடன் இணைக்கும் திட்டமாக இது இருந்தது. இது பாலினத் தேர்வு கருக்கலைப்பைக் கண்காணிப்பதற்கும், தாய்மை சுகாதார சலுகைகளை உறுதி செய்வதற்கும் கொண்டுவரப்பட்டாலும், பெண்களின் மகப்பேறு வாழ்க்கையை ஒரே நேரத்தில் பாதுகாக்கவும் ஒழுங்குபடுத்தவும் டிஜிட்டல் உள்கட்டமை எப்படிப் பயன்படுத்தப்பட முடியும் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.


சிறிய முன்னோடித் திட்டங்களிலிருந்து நாடு தழுவிய டிஜிட்டல் முறைக்கு மாறுவது சுகாதாரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்கியுள்ளது. தொடர்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபடுவதற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளது. இது தனித்துவமான சுகாதார அடையாள எண்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் இணைக்கப்பட்ட சுகாதார வசதிகளைப் பயன்படுத்தி தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்பு மூலம் (national digital health ecosystem) செய்யப்படுகிறது.


இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சாதன உரிமை மற்றும் டிஜிட்டல் திறன்களில் உள்ள வேறுபாடுகள், தெளிவற்ற செயற்கை நுண்ணறிவு முடிவுகள், வெவ்வேறு தளங்களை இணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பில் உள்ள தோல்விகள் ஆகியவை பெண்களுக்கு நியாயமான அணுகலை பெறத் தடுக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் கருவிகள் மூலம் பெண்களின் சுகாதார அணுகலை பெரிதும் மேம்படுத்த முடியும். ஆனால், அதே நேரத்தில் அவை ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் தொடர செய்யலாம்.


டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் வெறும் நுட்பத்தில் அல்ல, உள்ளடக்கத்தில் உள்ளது.


இருப்பினும், டிஜிட்டல்மயமாக்கலை இந்தியப் பெண்களின் குறுக்கிடை பாதிப்புகளை (intersectional vulnerabilities) மையப்படுத்திய உள்ளடக்கிய அணுகுமுறையாக மறுவடிவமைத்தால், மிகவும் முற்போக்கான பாதை சாத்தியமாகும்.

இதற்கு பெண் பயனர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட குறைந்த தொழில்நுட்பம் கொண்ட, பன்முக அணுகலுக்கு (SMS, WhatsApp Chatbots & IVR) முன்னுரிமை அளிக்க வேண்டும்; செயல்படுத்தக்கூடிய ஒப்புதல், குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். சமூக சுகாதார பணியாளர்களை மாற்றுவதற்குப் பதிலாக ஆதரிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activist (ASHA)) அறிக்கையிடுவதற்கு மட்டுமல்லாமல், உறுதியான ஆதரவு (advocacy) மற்றும் உரிமைகோரல் உருவாக்கத்திற்கும் தரவைப் பயன்படுத்த முடியும்.


இறுதியில், டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பொறுத்தது அல்ல. மாறாக பாலினம், பொறுப்பு போன்ற பிரச்சினைகள் அமைப்பில் எவ்வளவு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து இருக்கும்.


டிஜிட்டல் மயமாக்கல் அதிகாரத்தை மறுபகிர்வு செய்து, சுயாட்சியைப் பாதுகாத்து, அது ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தீவிரமாகக் குறைக்கும்போது மட்டுமே பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் - இது இப்போது ஸ்வஸ்த் நாரி, சஷாக்த் பரிவார் அபியான் போன்ற முன்முயற்சிகள், பெரிய அளவிலான முயற்சிகளை நீடித்த, நேர்மறையான மாற்றங்களாக மாற்ற இந்தியா தயாராக உள்ளது என்பதைக் காட்டுகின்றன.

Original link


Share:

தேசிய முக்கிய கனிம திட்டம் (NCMM) என்பது என்ன? -குஷ்பூ குமாரி


முக்கிய  அம்சங்கள்:


— இந்த உயர் வலிமை கொண்ட அரிய மண் காந்தம் (Rare-Earth Permanent Magnet (REPM) பரந்த அளவிலான தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமானவை. இவை மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் முதல் மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைப் பயன்பாடுகள் வரை தேவைப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் உற்பத்தி ஒரு சில நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளது. இந்தக் காந்தங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தி மற்றும் செயலாக்கம் இரண்டிலும், சீனா மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்படுத்துகிறது.


— சீனாவின் இந்த ஆதிக்கம், மற்ற நாடுகளைவிட அதற்கு ஒரு சாதகமான நிலையை வழங்குகிறது, மேலும் வர்த்தகப் பதட்டங்களின்போது இது ஒரு செல்வாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா அறிவித்த வரிகளுக்குப் பதிலடியாக, சீனா காந்தங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை ஏப்ரல் மாதத்தில்  விதித்த போது இது தெளிவாகத் தெரிந்தது.


— இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் அரசின் முயற்சியால், அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவை தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அரிய மண் நிரந்தர காந்தங்களின் நுகர்வு இரட்டிப்பாகும் என்று அரசு மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்தியா தற்போது அதன் அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவைகள் அனைத்தையும் ஏறக்குறைய இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் உற்பத்தி (Rare-Earth Permanent Magnet (REPM) திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (Million Tonnes Per Annum (MTPA)) ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) உற்பத்தி திறனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது போட்டி ஏல செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொன்றும் 1,200 (Million Tonnes Per Annum (MTPA)) வரை தகுதியுடையதாக இருக்கும்.


— இந்தத் திட்டம் குறிப்பாக "உருகிய அரிய-மண் நிரந்தர காந்தங்கள்" (sintered rare-earth permanent magnets) மீது கவனம் செலுத்துகிறது. இவை முதன்மையாக நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் (Neodymium Iron Boron (NdFeB)) காந்தங்கள் ஆகும். இவை மிகவும் வலிமையானதாகவும் வணிக ரீதியாக அதிகம் தேவைப்படுபவையாகவும் கருதப்படுகின்றன.


— இந்த காந்தங்கள், நியோடைமியம் (Nd) மற்றும் பிரசியோடைமியம் (Pr) போன்ற இலகுவான அரிய-மண் தனிமங்களை, இரும்பு (Fe) மற்றும் போரான் (B) உடன் இணைத்து, அவற்றின் வலுவான காந்தப் பண்புகளுக்காகப் பயன்படுத்துகின்றன. அதிக வெப்பநிலைகளில் காந்தநீக்கலுக்குள்ளாகும் திறனை மேம்படுத்த, டைஸ்பிரோசியம் (Dy) மற்றும் டெர்பியம் (Tb) போன்ற கனமான அரிய-மண் தனிமங்களையும் இவை பயன்படுத்துகின்றன.


— இந்தக் காந்தங்களின் உற்பத்தி, சுரங்கத் தொழில் (mining), பயன்சேர்ப்பு (beneficiation), செயலாக்கம் (processing), பிரித்தெடுத்தல் (extraction), அரிய மண் ஆக்ஸைடாகச் சுத்திகரித்தல் (refining to rare earth oxide), ஆக்ஸைடுகளை உலோகமாக மாற்றுதல் (conversion of oxides to metal), பிறகு உலோகத்தை உலோகக் கலவையாக மாற்றுதல் (metal to alloy), மற்றும் இறுதியாக காந்த உற்பத்தி (magnet manufacturing) போன்ற பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.


— புதிய திட்டம், ஒருங்கிணைந்த அரிய மண் காந்தம் (REPM) உற்பத்தி வசதிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள், அரிய பூமி ஆக்சைடை உலோகமாக மாற்றுவது, உலோகத்தை கலவையாக மாற்றுவது மற்றும் கலவையை அரிதான பூமி நிரந்தர காந்தமாக மாற்றுவது ஆகிய இறுதி மூன்று நிலைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகிறது.


— இந்தியா தற்போது இந்தக் காந்தங்களுக்கு சீனாவைப் பெரிதும் சார்ந்துள்ளது. 2024-25 காலகட்டத்தில், இந்தியா 53,000 டன்களுக்கும் அதிகமான அரிய மண் நிரந்தர காந்தங்களை இறக்குமதி செய்தது, அதில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சீனாவில் இருந்து வந்தவை.


— சீனாவைத் தவிர, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இந்தக் காந்தங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் உலக சந்தையில் அவற்றின் பங்கு குறைவாகவே உள்ளது. இதற்கிடையில், சில நிறுவனங்கள் தங்களுக்குத் திறன் இருப்பதாகக் கூறினாலும், இந்தியாவில் வணிக ரீதியிலான உற்பத்தி எதுவும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் ஒரு நீண்ட மற்றும் சவாலான பயணத்தில் ஒரு ஆரம்ப நிலையிலயே உள்ளது.


— சீனாவின் அளவோடு ஒப்பிடுகையில், ஒரு வருடத்திற்கு 6,000 மெட்ரிக் டன் என்ற திட்டத்தின் கொள்ளளவு குறைவாகவே தெரிகிறது. உட்டாவைத் (Utah) தளமாகக் கொண்ட அறிய மண் பரிமாற்றங்கள் நிறுவனம், சீனா வருடத்திற்கு தோராயமாக 2,40,000 டன் அரிய மண் நிரந்தர காந்தங்களை (REPM) உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடுகிறது. 


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) தயாரிப்பதற்குத் தேவையான சில அரிய ஆக்ஸைடுகளை இந்தியா உற்பத்தி செய்தாலும், கனமான அரிய ஆக்ஸைடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை. அணுசக்தி துறையின்கீழ் உள்ள இந்தியன் அரிய மண் லிட் (Indian Rare Earths Limited (IREL)) நியோடைமியம்-பிரசியோடைமியம் (NdPr) ஆக்ஸைடுகள் போன்ற சில தேவையான லேசான அரிய ஆக்ஸைடுகளை உற்பத்தி செய்வதாகத் தெரிவிய்கிகின்றனர்.


— சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான பல உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாதம், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பானது (Quadrilateral Security Dialogue (QUAD)), முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் முக்கியமான கனிமங்களுக்கான செயல் திட்டம் (Critical Minerals Action Plan) முன்வைக்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது.


இந்தியாவால் எடுக்கப்பட்ட முயற்சிகள்


— இந்தியா தனது தேசிய முக்கிய கனிம ஒன்றியத் திட்டத்தை (National Critical Mineral Mission - NCMM) ஏழு ஆண்டுகளுக்கு (2024-25 முதல் 2030-31 வரை) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. 16,300 கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட நிதிநிலை திட்டத்துடன், இந்தத் திட்டம், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் முக்கியமான கனிமங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் முக்கிய கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கனிமங்களை ஆராய்வது, சுரங்கத் தொழில், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வது வரையிலான முழுமதிப்புச் சங்கிலியிலும் தொழில்நுட்பம், விதிமுறைகள் மற்றும் நிதியுதவியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


— 2023 ஆம் ஆண்டில், இந்தியா 30 கனிமங்களை "மிக முக்கியமானவை" (critical) என்று அடையாளம் கண்டது. அதே ஆண்டில், லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை தனிமங்கள் போன்ற முக்கியமான மற்றும் உத்தியியல் கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவதற்காக, 1957-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)) சட்டத்தையும் அரசாங்கம் திருத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்து, நாடு முழுவதும் உள்ள 34 முக்கிய கனிமத் தொகுதிகளை அரசாங்கம் ஏலம் விட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா?


— குவாட் (QUAD) அமைப்பின் மிக முக்கியமான கனிமங்களுக்கான முன்முயற்சி, பல்வகைப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "முக்கியமான கனிமங்களைச் செயலாக்குவதற்கும், சுத்திகரிப்பதற்கும், அதன் வழிவந்த பொருட்களின் (derivative goods) உற்பத்திக்கும் ஏதேனும் ஒரு நாட்டையே சார்ந்திருப்பது, நமது தொழில்களைப் பொருளாதார அச்சுறுத்தல், விலை மோசடி மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவற்றிற்கு ஆளாக்குகிறது என்றும் இது நமது பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


— 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கரிதான் முதல் தொழிற்புரட்சிக்கு ஆற்றலை அளித்தது. எண்ணெய் மற்றும் அதன் துணை பொருட்கள் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு (கார்கள் மற்றும் விமானங்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்) மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உலகளாவிய செழிப்புக்கும் எரிபொருளாக அமைந்தது. இப்போது, நீண்ட 21-ஆம் நூற்றாண்டு, முக்கியமான கனிமங்களின் யுகமாக (critical minerals age) இருக்கப் போகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தீரஜ் நாயர் குறிப்பிடுகிறார். 

Original link:

What is the National Critical Mineral Mission (NCMM)?


Share:

இந்தியாவின் முதல் பவளப் பாறை ஆராய்ச்சி மையம் அந்தமான் தீவுகளில் அமைய உள்ளது. -ரோஷ்னி யாதவ்


அரசு விரைவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தேசிய பவளப் பாறை ஆராய்ச்சி நிறுவனத்தை (National Coral Reef Research Institute (NCRRI)) அமைக்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். ₹120 கோடி செலவில் கட்டப்படும், பவளப் பாறை ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக்கான இந்தியாவின் பிரதான மையமாகச் செயல்படும் என்றும் தெரிவித்தார். எனவே, பவளங்கள் மற்றும் பவளப் பாறைகள் என்றால் என்ன, அவை ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.


முக்கிய   அம்சங்கள்:


1. பவளப்பாறைகள் என்பவை அடிப்படையில் நிலையாக ஓரிடத்தில் ஒட்டியிருக்கும் உயிரினங்கள் ஆகும். அவை நீரில் உள்ள உணவைப் பிடிக்கவும், அதை அவற்றின் வாய்க்குள் செலுத்தவும் அவற்றின் சிறிய கூடாரம் போன்ற கரங்களைப் (small tentacle-like hands) பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு பவள உயிரினமும் ‘பாலிப்’ (polyp) என்று அழைக்கப்படுகிறது. மேலும், அது மரபணுரீதியாக ஒரே மாதிரியான நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாலிப்களின் குழுக்களாக ‘காலனி’ (colony) என்று அறியப்படும் கூட்டமாக வாழ்கிறது.


2. பவளப் பாறைகள் முக்கியமாக இரண்டு வகைப்படும் . அவை கடினமான மற்றும் மென்மையான பவளப்பாறைகள். கடினமான பவளங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிய, முப்பரிமாண அமைப்புகளை உருவாக்கி பவளப்பாறைகளை உருவாக்குகின்றன.


3. மென்மையான பவளப்பாறைகளுக்கு கல் போன்ற எலும்புக்கூடுகள் (stony skeletons) இல்லை, ஆனால் கடினமான பவளப்பாறைகளுக்கு உண்டு. அவற்றின் சுண்ணாம்புச் சத்துடைய எலும்புக்கூடுகள் பவள வித்திழைகளால் (coral polyps) உருவாக்கப்படுகின்றன. இந்த வித்திழைகள் இறக்கும்போது, இந்த எலும்புக்கூடுகள் அப்படியே நின்று, புதிய வித்திழைகளுக்கான அடித்தளமாக மாறுகின்றன என்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வானிலை ஆய்வு நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) தெரிவிக்கிறது.


4. பவளப் பாறைகள், “கடலின் மழைக்காடுகள்” என்று அழைக்கப்படுகின்றன — ஏறக்குறைய 450 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ளன. ஆஸ்திரேலியாவின் பெரிய தடுப்புப் பாறை (Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பாறை ஆகக் கருதப்படுகிறது. இது சுமார் 2,028 கிலோமீட்டர் நீளம் உள்ளது.


பவளப்பாறைகளின் முக்கியத்துவம்


1. பவளப் பாறைகள் கடல் சூழலியல் அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு பாறை ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை ஆதரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, பெரிய தடுப்புப் பாறையில் (Great Barrier Reef) 400-க்கும் மேற்பட்ட பவள வகைகள், 1,500 வகையான மீன்கள், 4,000 வகையான மெல்லுடலிகள் மற்றும் உலகின் ஏழு கடல் ஆமை இனங்களில் ஆறு இனங்கள் உள்ளன.


2. இந்த பவளப் பாறைகள் ஆண்டுதோறும் சுமார் $375 பில்லியன் மதிப்பிலான பொருட்களையும் சேவைகளையும் உருவாக்குகின்றன. உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, வருமானம், புயல் மற்றும் வெள்ளப் பாதுகாப்பிற்காக இவற்றை நம்பியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.


3. பவளப் பாறைகள் அலைகள், புயல்கள் மற்றும் வெள்ளங்களில் இருந்து வரும் ஆற்றலில் 97 சதவீதம் வரை உறிஞ்சக்கூடியவை. இதன் மூலம் இறப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.



பவளப்பாறை வெளிறிப் போதல் என்றால் என்ன?


1. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சர்வதேச பவளப்பாறை முன்னெடுப்பு அமைப்பு ((International Coral Reef Initiative (ICRI)) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஒரு வருடமாக அதிக கடல் வெப்பநிலை காரணமாக ஏற்பட்ட பெரும் வெளுப்பு நிகழ்வில் உலக பவளப்பாறைகளில் சுமார் 84 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இது 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் நான்காவது உலகளாவிய பவள வெளுப்பு நிகழ்வு ஆகும். முந்தைய மிக மோசமான 2014-2017 நிகழ்வு பவளப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கை (சுமார் 66 சதவீதம்) மட்டுமே பாதித்திருந்தது என்கின்றனர். ஆனால், தற்போதைய நிகழ்வு அதையும் மிஞ்சிவிட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


2. பெரும்பாலான பவளப் பாறைகளின் திசுக்களில் ‘ஸூக்ஸாந்தெல்லே’ (zooxanthellae) எனப்படும் பாசிகள் உள்ளன. இவை தாவரங்களைப் போன்ற உயிரினங்கள் ஆகும். பவளப்பாறைகளுக்கும் சூக்சான்தெலேவுக்கும் இடையில் ஒரு ஓருயிர் இணக்கம் (symbiotic relationship) உள்ளது. பவளப் பாறைகள் ஸூக்ஸாந்தெல்லேவுக்குப் பாதுகாப்பான வாழிடத்தை வழங்குகையில், ஸூக்ஸாந்தெல்லே ஆக்ஸிஜன் மற்றும் ஒளிச்சேர்க்கையின் கரிமப்பொருட்களை வழங்கி, பவளங்கள் வளரவும் செழிக்கவும் உதவுகிறது. சூக்சான்தெலே பவளப் பாறைகளுக்குப் பிரகாசமான மற்றும் தனித்துவமான வண்ணங்களையும் கொடுக்கிறது என்கின்றனர்.


3. சுற்றுச்சூழலில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்கள்கூட பவளப் பாறைகளை (Corals) அழுத்தத்திற்கு உள்ளாக்கும், ஏனெனில் அவை ஒளி மற்றும் வெப்பநிலைக்கு அதிக\

உணர்திறன் கொண்டவை. அவை அழுத்தத்திற்கு உள்ளாகும்போது, அவற்றுக்குள் வாழும் ஸூக்ஸாந்தெல்லே (zooxanthellae) எனும் பாசிகளை வெளியேற்றி, முற்றிலும் வெள்ளையாகிவிடும். இந்தச் செயல்முறை பவள வெளிறல் (Coral Bleaching) என்று அழைக்கப்படுகிறது.


4. குறிப்பிடத்தக்க வகையில், பவள வெளிறல் உடனடியாக பவளங்களின் மரணத்திற்கு வழிவகுக்காது. மாறாக, அவை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகி, இறப்புக்கு ஆளாகின்றன.


5. பவளப்பாறைகள் வெளுத்துப்போவது அவற்றின் மகப்பேறுத் திறனைக் குறைக்கிறது மற்றும் ஆபத்தான நோய்களுக்கும் ஆளாகின்றன. வெளுத்துப் போவது மிகவும் தீவிரமாக இல்லாவிட்டால், பவளப்பாறைகள் மீண்டு வருவதாக அறியப்படுகிறது.




பவளப் பாறைகளின் உலகளாவிய பெருந்திரள் பவளப்பாறை வெளிறல் என்றால் என்ன?


அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் பவளப்பாறைகள் பெரிய அளவில் வெளிறும்போது (coral bleaching), அதை உலகளாவிய பெருந்திரள் பவள வெளிறல் (Global mass coral bleaching) என்று அழைக்கின்றனர் என்று 'The Conversation' இதழ் தெரிவித்துள்ளது. இது மிகவும் புதிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. முதல் உலகளாவிய வெளிறல், 1998-ஆம் ஆண்டில் நடந்தது (உலக பவளப்பாறைகளில் 20 சதவீத பாதிப்பு), இரண்டாவது முறையாக 2010-ஆம் ஆண்டிலும் (35 சதவீத பாறைகள் பாதிப்பு) மூன்றாவது முறையாக 2014-2017 -ஆம் ஆண்டு தரவுகளின்படி 56 சதவீத பவளப்பாறைகள் பாதிப்படைந்ததாகத் தெரிவிக்கின்றனர். அதாவது, கடந்த 25-30 ஆண்டுகளில் மட்டுமே இப்படிப்பட்ட உலகளாவிய பவள வெளிறல் நிகழ்வுகள் நடந்துள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


1. இந்தியா ஏறக்குறைய 8000 கி.மீ கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள பவளப் பாறைகளின் மொத்தப் பரப்பளவு தோராயமாக 2,375 சதுர கி.மீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பவளப்பாறை உருவாகும் முக்கியமான பகுதிகள் நான்கு உள்ளன. அவை,

(i) கட்ச் வளைகுடா

(ii) மன்னார் வளைகுடா


(iii) லட்சத்தீவுகள்


(iv) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.


2. பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும், அரசாங்கம் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேசிய கடலோர இயக்கம் (National Coastal Mission) மூலம் மத்திய துறை திட்டத்தின்கீழ், பவளப்பாறைகளை மீட்டெடுத்தல், கண்காணித்தல், பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்காக லட்சத்தீவு, கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய நான்கு தளங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


3. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (Environment (Protection) Act, 1986), 1986-ன் கீழ் கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone (CRZ)) அறிவிப்பு (2019); வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் (Wild Life (Protection) Act, 1972), 1972; இந்திய வனச் சட்டம், (Indian Forest Act, 1927) 1927; உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், (Biological Diversity Act, 2002) 2002; மற்றும் அவ்வப்போது திருத்தப்படும் இந்தச் சட்டங்களின்கீழ் உள்ள விதிகள் மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.


Original link:


Share:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை (SIR) ஏன் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்? - ராஜீவ் குமார்

 தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பழைய தரவுகளைப் பயன்படுத்துவதால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இது புதிய வாக்காளர்களை சேர்ப்பதைத் தடுப்பதோடு, வரும் தேர்தல்களின் நம்பகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகின்றனர்.


அறிவியல், பொறியியல், நிர்வாகம் அல்லது தகவல் தொழில்நுட்பம் என எந்தத் துறையாக இருந்தாலும், குறைபாடுள்ள அடித்தளத்தால் ஒருபோதும் வலிமையான கட்டமைப்பை உருவாக்க முடியாது. தவறான அல்லது முழுமையற்ற தரவுகள் எப்போதும் நம்பகமற்ற முடிவுகளையே தரும். வாக்காளர் பட்டியல் திருத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல என்று விமர்சிக்கப்படுகிறது. எத்தனை நடைமுறைகளைச் சேர்த்தாலும், தெளிவற்ற அடிப்படைத் தரவுகளால் ஒருபோதும் நேர்மையான முறையை உருவாக்க முடியாது. நவீனமான, துல்லியமான அடித்தளம் மட்டுமே நம்பகமான தேர்தல் அமைப்பை உருவாக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.


தற்போது நடக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) திட்டத்தின் முக்கியப் பிரச்சனை என்னவென்றால் இத்திட்டம் 2002-2004 ஆகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட பழைய வாக்காளர் பட்டியல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்தப் பட்டியல்கள் முற்றிலும் காகிதத்தில், கையால் எழுதப்பட்டவை மற்றும் பிழைகள் நிறைந்தவையாகவே உள்ளன. இந்தியா, டிஜிட்டல் யுகத்தில் முன்னோடியாகவும், தேர்தல் ஆணையம் உலக அளவில் மிகவும் மேம்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பைப் (Election Commission of India NETwork (ECINet)) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், இன்றும் அந்தக் காலாவதியான, பிழை நிறைந்த பழைய பட்டியல்களையே நம்பியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்


இந்தப் பின்னடைவு, நாட்டின் பத்தாண்டு கால டிஜிட்டல் முன்னேற்றத்தை அழித்துவிட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR-2.0)  பழைய முறைகளிலும், நம்பகத் தன்மையற்ற, சரிபார்க்க முடியாத தரவுகளைக் கொண்டும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தொடங்கபட்ட முயற்சி, அதற்கு நேர்மாறாக பல மாதங்களாக நீடிக்கும் பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. 

மரபுப் பட்டியலின் ஒரு பார்வை

முந்தைய சிறப்பு தீவிர திருத்தங்கள் (SIR) பெரும்பாலும் வழக்கமான திருத்த நடவடிக்கைகள் போலவே நடந்தன. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளுக்காகத் தொடங்கபட்டன. புதிதாக வந்து குடியேறியவர்கள், வாக்களிக்கும் வயது வந்தவர்களை சேர்ப்பது பழைய வாக்காளர்களின் பதிவுகளைச் சரி செய்வதற்கோ புதுப்பிப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இது வெறும் சாதாரண நடைமுறையாகவே மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறது. 


இதன் விளைவாக வந்த வாக்காளர் பட்டியல்களில் முழுமையற்ற, தெளிவற்ற மற்றும் விடுபட்ட தகவல்கள் உள்ளன. மேலும், அதன் தரநிலைகள் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளுக்கு இடையே வேறுபடுகின்றன. குறிப்பாக, கடைசிப் பெயர்கள் இல்லாமல் முதல் மற்றும் நடுப் பெயர்கள் மட்டுமே இருக்கும் பதிவுகள், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card (EPIC)) அல்லது வீட்டு எண் விடுபட்டிருப்பது, மற்றும் அகர்வால்/அக்ரவால், ராகேஷ்/ராகேஷ் (Rakesh/Rakeash), சங்கல்/சஹ்கல் (Sangal/Sahgal), மற்றும் வீர்/விர் (Veer/Vir) போன்ற எழுத்துப் பிழைகள் பரவலாகக் காணப்படுகின்றன. 


வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும்போது அதிர்ச்சியான தவறுகள் தெரிய வருகின்றன. உதாரணமாக, ஒரே ஆணுக்கு பல மனைவிகள் இருப்பதாகவோ அல்லது கிரண், சீமா இருவருக்கும் ஒரே கணவர் (ஷர்துல்) என்று பெயர் இருப்பதாகவோ பதிவு காட்டுகிறது. லட்சக்கணக்கான இந்தி, ஆங்கிலம், வங்காளி பதிவுகளை ஒரு ஆசிரியர் கைமுறையால் சரிபார்த்து பல நாட்கள் செலவழித்தும், அவர் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்திருந்தும் கூட, அவருடைய சொந்தப் பெயரையே அந்தப் பட்டியலில் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் 2002-2004 காலகட்ட வாக்காளர் தரவுத்தொகுப்பில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

வாக்காளர் பட்டியல் இன்னும் காகித வடிவில் (PDF மட்டுமே) இருப்பதால், 60 கோடி பேர் கொண்ட மாபெரும் தரவுத்தளத்தை யாராலும் சரிபார்க்கவோ, ஒப்பிட்டுப் பார்க்கவோ, துல்லியத்தன்மையைச் சோதிக்கவோ முடியவில்லை என்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் இணையதள தேடு கருவி பெரும்பாலும் சரியாக இயங்குவதில்லை. சரிபார்ப்பு பயணிகளின் போது விவரம் தேடினால்  “விவரம் எதுவும் இல்லை” அல்லது “பிழை” என்று பதில் தருவதாகத் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான முறை முயன்றும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இறுதியில், ஆவணக் கோப்புகளை (pdf) இணைய தளங்களில் பதிவிறக்கச் சொல்வதோடு அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (Block Level Officer (BLO)) போகச் சொல்வதோடு நின்றுவிடுகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. மாநில தேர்தல் அதிகாரிகளே இந்த வாக்காளர் பட்டியல்களைத் தருவதாகவும், தேர்தல் ஆணையம் அதை வெறுமனே இணையதளத்தில் “தகவல்களை சேகரித்து வைத்திருப்பதை” (host) மட்டுமே செய்கிறது என்றும் தேர்தல் ஆணையத்தின் தேடல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால், பட்டியலில் ஏற்படும் பிழைகளுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க மறுக்கிறது என்பது தெளிவாகிறது. இந்தப் பட்டியல்கள் டிஜிட்டல் தரவுத்தொகுப்பாக (தேடவும் ஒப்பிடவும் முடியும் வகையில்) இல்லாத வரை, அவை வெறும் ஆவணங்களாக மட்டுமே இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது. 


இந்த முழுமையற்ற, பழைய பதிவுகளே இன்றைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (SIR) அடிப்படையாக உள்ளன. அதனால், நிறைய உண்மையான வாக்காளர்களின் பெயர்களே பட்டியலில் இல்லாமல் போய்விடுகிற அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.


வளங்களின் குறைவான பயன்பாடு


இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பைப் (ECINet) பயன்படுத்தி  வாக்காளர்கள் தற்போதுள்ள ஒரு பில்லியன் பதிவுகள் கொண்ட தரவுத்தளத்தை கைபேசி எண்கள், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்கள், பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரிகள் மற்றும் குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேட அனுமதிக்கிறது. இது போலி அல்லது விடுபட்ட உள்ளீடுகளைக் கண்டறிந்து மேலும் பதிவு செய்தல், நீக்குதல், திருத்தங்கள், ஆதார் இணைப்பு, தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களைத் தொடர்புகொள்வது, வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அட்டைகளைப் பதிவிறக்குதல், புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் நிலையைக் கண்காணித்தல் போன்ற சேவைகளை ஆதரிக்கிறது. இந்தச் செயல்பாடுகள் விரிவானவை மற்றும் பொதுவாகக் குறைபாடற்ற முறையில் செயல்படுகின்றன, மேலும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் கணக்கெடுப்புப் படிவங்களை இணையதளங்களில் மூலம் சமர்ப்பிக்கவும் உதவுகின்றன.


இருப்பினும், பழைய வாக்காளர் பட்டியல் திருத்த தரவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பில் (ECINet) திறம்பட ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சிறிதளவு முயற்சியில், 2002–04 வாக்காளர் பட்டியல்களை டிஜிட்டல் மயமாக்கித் தேடக்கூடிய வகையில் மாற்றலாம், இது தேர்தல் படிவங்களை நிரப்புவதற்குத் தேவையான அதே அம்சங்களை வழங்கும். அவ்வாறு செய்யாதது பழைய பட்டியல்களில் உள்ள பலவீனங்களை மறைப்பதற்காகவா என்கிற கேள்வியை எழுப்புகிறது.


2002-04 ஆண்டில் எங்கு வாக்களித்தோம் என்பதை இப்போது மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பது நியாயமில்லை. வாக்காளர் அடையாள அட்டை ஒழுங்காகப் பாதுகாக்கப்படவில்லை,  மக்கள் சின்னக் காகிதச் சீட்டையே நம்பியிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை வீடு மாறியவர்கள் பழைய வாக்குச்சாவடி, பகுதி அல்லது வரிசை எண்ணை நினைவில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்


வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மிகக் குறைந்த உதவியையே மக்களுக்கு வழங்குகிறார்கள். ஏனெனில், பெரும்பாலானவர்கள் காகிதத்தில் உள்ள வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை  வழங்குவதோடு, அவற்றைச் சேகரிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்களிடம் கடந்தகால வாக்குப்பதிவு தொடர்பான பதிவுகள் இல்லாததால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அவை தேவைப்படாவிட்டாலும், அவர்களில் பலர் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் முகவரிச் சான்றுகளைக் கேட்கிறார்கள். பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் இணையதளங்களில் தரவுகளை உள்ளிடும் திறன் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் விண்ணப்பப் படிவங்கள் இன்னும் பதிவேற்றப்படாமால் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட படிவங்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. படிவங்கள் கையால் எழுதப்பட்டு, பின்னர் பதிவேற்றப்படுவதாலும், வாக்காளர்கள் தற்போதைய புகைப்படங்களுக்காகப் பணம் செலுத்த வேண்டியதாலும், அந்தப் புகைப்படங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் ஸ்கேன் செய்வதாலும், காகிதத்தாலான வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் பணிச்சுமையை அதிகரிக்கின்றன. இந்தக் காகிதம்–எண்ம–காகிதம் சுழற்சி மெதுவாகவும், திறனற்றதாகவும், பிழைகள் ஏற்படக்கூடியதாகவும் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


மாறாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பின் (ECINet) மூலம், டிஜிட்டல்மயமாக்கல், காகிதப் புகைப்படங்கள், கையொப்பங்கள் அல்லது ஆவணங்கள் தேவையின்றி, பிழையின்றி இணைய தளங்கள் வழியாக விரைவான வாக்காளர் விண்ணப்ப சமர்ப்பிப்புகளை அனுமதிக்கிறது. படிவங்கள் 6, 7 மற்றும் 8 பயனர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின்  உதவியின்றி இணையதளத்தில் ஆதார் எண்ணை சேர்க்க, நீக்க, திருத்த அல்லது இணைக்க அனுமதிக்கின்றன. ஆதார் அடையாள அட்டையின் மூலம் சரிபார்ப்பு செயல்முறையைச் சீராகவும் நம்பகத்தன்மையுடனும் செய்ய முடிகிறது என்கின்றனர்.


முக்கியமாக 2002–04 பட்டியலில் உள்ள குறைபாடுகளினால் ஏற்பட்டவை—படிவம் 8 (Form 8) மூலம் சிறிய பிழைகள் சரி செய்யப்படலாம். ஆனால், அதற்கான ஒப்புதல்களை தேர்தல் ஆணையம் மிக அரிதாகவே வழங்குகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், படிவம் 6 (Form 6) மூலம் தாங்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்தவர்கள் என்று தவறாக உரிமை கோரலாம் என்கின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மூலம் செய்யப்படும் வாக்காளர் மின்னணுப் படிவச் சமர்ப்பிப்புகள், வெளிப்படையான இணையதள சமர்ப்பிப்புகளைப் போலன்றி, "பெறப்பட்டது" என்பதை மட்டுமே காட்டுகின்றன. எனவே, அதிகாரத்துவத் தடைகளும், அதிகாரப்பூர்வ தாமதங்களும் ஒரு எளிமையான டிஜிட்டல் பணிகளைத் தடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் இல்லாத குடிமக்களுக்கு, தேர்தல் ஆணையம்  நடமாடும் சாதனங்களுடன் கூடிய சேவை மையங்களைப் பயன்படுத்தி, பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, வாக்காளர் விண்ணப்பங்களை இணையவழியில்

சமர்ப்பிக்க உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைத்து, காகிதப் படிவங்களைத் தவிர்த்திருக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் வாக்குறுதியளித்த காகிதமில்லா, மக்களுக்கு உகந்த, வெளிப்படையான முறையை வழங்குவதற்குப் பதிலாக, அதன் பழங்கால முறைகள் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் குழப்பத்தையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன.


முழுவதும் டிஜிட்டல்மயமாக்குவது எப்படி?


கீழே உள்ள படிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி SIR 2026-ஐ முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கவும், காகிதமில்லாததாகவும், சரிபார்க்க எளிதாகவும் மாற்றும் என்கின்றனர்.


டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தேடும் திறன்: அனைத்து மாநில/யூனியன் பிரதேச வாக்காளர் பட்டியல்களையும், முழுமையாகத் தேடக்கூடிய டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றவும். தேடக்கூடிய தரவு மற்றும் மெட்டா (meta) தரவு மேலாண்மைக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தவும், அதே நேரத்தில் பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்கு (காட்சிப்படுத்துவதற்கு) மட்டும் வைத்திருக்கவும்.


தரவு ஒருங்கிணைப்பு: பழைய ஆவணங்களை ஆதார், பான்/வருமான வரி, ஓட்டுநர் உரிமம் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பதிவுகள் போன்ற நம்பகமான தரவுத்தளங்களுடன் இணைக்கவும். ஒருங்கிணைப்புக்கு வலுவான செயலி நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interface (API)) மூலம் நிலைத்தன்மை சோதனைகளை பயன்படுத்தவும். இதில், ஆதார் முக்கிய அடையாளக் குறிப்பாக செயல்படுகிறது.


வாக்காளர் வகைகளை வேறுபடுத்துங்கள்: வாக்காளர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்தவும்: 


(i) நிலையான முகவரி வாக்காளர்கள்,


(ii) அடிக்கடி இடம்பெயர்பவர்கள்

(iii) குடியேற்றம்/தேசியப் பிரச்சினைகள் உள்ளவர்கள்.


மின்னணு வாக்குச்சீட்டுகளை இணையவழியில் சமர்ப்பித்தல்: மின்னணு வாக்குச் சீட்டுகள் முழுமையாக இணையவழியில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்து, பயிற்சி பெற்ற பணியாளர்களால் இயக்கப்படும் நடமாடும் டிஜிட்டல் சேவை மையங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தொழில்நுட்ப திறனுள்ள பணியாளர்கள் ஏராளமாக உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் கள ஆய்வில் கவனம் செலுத்தும்போது, இந்தியாவுக்கு உதவ ஏராளமான தொழில்நுட்பத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.


அனைத்து செயல்முறைகளையும் டிஜிட்டல் மயமாக்குங்கள் : ஆவணச் சரிபார்ப்பு, பதிவேற்றங்கள் மற்றும் சரிபார்ப்புக்குப் பிந்தைய படிகள் அனைத்தையும் தெளிவான, வெளிப்படையான பணிகளுடன்  முற்றிலும் இணையவழியில் கையாள அறிவுறுத்தப்படுகிறது. 


இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR-2026) காலாவதியான காகிதப் பதிவுகளைச் சார்ந்திருப்பதிலிருந்து நவீன, நம்பகமான, தொழில்நுட்பம் சார்ந்த தேசியப் பயிற்சியாக மாற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


முன்னோக்கி செல்லும் வழி


முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய அமைப்பு, பழைய வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் இருந்த நீண்டகாலப் பிரச்சினைகளை முழுமையாக நீக்கிவிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பு வழியாக எல்லா செயல்முறைகளும் தடையின்றி சீராக இயங்கும். இந்தமாற்றங்கள் மிக எளிமையானவை, நடைமுறையில் செயல்படுத்த எளிதானவை, நீட்டிக்கப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளைக் காலக்கெடுவிற்குள் எளிதாக முடிக்க முடியும். பெரும்பாலான பணிகளுக்கு மிகக் குறைந்த முயற்சியே போதும்; தரவு ஒருங்கிணைப்பு மட்டுமே சற்று அதிக நேரம் எடுக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இது ஒருமுறை செயல்படுத்தப்பட்டவுடன், வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் அனைத்துப் பகுதிகளும் வேகமாகவும், எளிமையாகவும், மிகவும் நம்பகரமாகவும் மாறிவிடும் என்கின்றனர்.  பிழைகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தீர்க்கப்படுவதால், பதற்றம், குழப்பம், மன அழுத்தம் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


ஒரு டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்றியமையாதது, அதே நேரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றும்கூட. 2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட நம்பிக்கை சார்ந்த அமைப்பாக மாற வேண்டும். இது தாமதமான நடவடிக்கை என்றாலும் மிகவும் அவசியமாகிறது. 


ராஜீவ் குமார், IIT கரக்பூர், IIT கான்பூர், BITS Pilani மற்றும் JNU ஆகிய நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றில் முன்னாள் விஞ்ஞானியாகவும் இருந்தவர்.

Original link:

Why the SIR needs to be completely digitised 




Share:

தர மதிப்பீடு இல்லை : சஞ்சார் சாதி செயலிக்கான மதிப்பு குறித்து . . .

     இணையக் குற்றங்களைச் சமாளிக்க சஞ்சார் சாதி செயலியை (Sanchar Saathi app) கட்டாயப்படுத்துவது என்பது மிகையான செயலாகும்.

டிஜிட்டல் கைதுகள்" (digital arrests) முதல், பெரிய அளவிலான எல்லை தாண்டிய அடையாளம் குறிப்பிடப்படாத (anonymous) மோசடிகள் வரை இணையக் குற்றங்களின் வளர்ந்துவரும் நுட்பம் வரை, அவற்றைக் கையாள்வதை அவசரமாகவும் கடினமாகவும் ஆக்கியுள்ளது. உடனடி செய்தியிடல் செயலிகளில் (instant messaging apps) பயனர்களின் கணக்குகள் தொடர்புடைய சிம் கார்டு அகற்றப்பட்ட பின்னரும் சில நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு இடைவெளியைக் கொண்டு இணையக் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அரசாங்க-ஆள்மாறாட்டம் மோசடியை இயக்க அவர்கள் இந்த அடையாளம் குறிப்பிடப்படாத தன்மையைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏமாற்றப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட IMEI எண்களின் பரவலான பயன்பாடு, சட்ட அமலாக்கத்தால் குற்றவாளிகளைக் கண்காணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது. இந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் பாதிப்புகளை நிவர்த்திசெய்ய அரசாங்கம் இப்போது வலுவான கருவிகளை விரும்புகிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இது நவம்பர் 28 மற்றும் டிசம்பர் அன்று வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவுகளை விளக்குகிறது. முதலாவது, "சிம் பிணைப்பு" (SIM binding) ஒருவரின் உண்மையான சிம் அகற்றப்பட்டால் பயனரின் கணக்கு முடக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். இரண்டாவதாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மார்ச் 2026-க்குள் அனைத்து புதிய சாதனங்களிலும் சாதன நம்பகத்தன்மையை சரிபார்க்க சஞ்சார் சாதி செயலியை (Sanchar Saathi app) முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று கோருகிறது.  இந்த செயலி சாதனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும். முதல் உத்தரவு ஒரு பாதுகாப்பு இணைப்பு என்றாலும், புலனம் (WhatsApp) அல்லது பிற இணைய செய்தி செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டாவது உத்தரவு, சில நேரங்களில் நல்ல நோக்கங்கள் இன்னும் தீங்கு விளைவிக்கும் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. போலி தொலைபேசிகள் மற்றும் போலி IMEI எண்களின் சிக்கலை சரிசெய்வதற்கு இந்த திட்டம் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இதற்கான பயிற்சி இறுதியில் சிக்கலைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.


"முதலில் சாதனத்தை பயன்படுத்தும்போது அல்லது அமைத்தலின்போது இந்த செயலியை அணுகுவதும் பயனர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளை முடக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தப்படவில்லை" என்றும் உத்தரவில் உள்ள வெளிப்படையான அறிவுறுத்தல், இந்த செயலிக்கு தொலைபேசியின் இயக்க முறைமைக்குள் (operating system) அதிக அளவிலான பாதுகாப்பு அனுமதியையும் பெறும். இது கேமரா, தொலைபேசி அல்லது SMS அணுகல் போன்ற அம்சங்களுக்கு அதிகளவில் ஊடுருவும் வாய்ப்பை அனுமதிக்கிறது. அரசு கண்காணிப்புக்காக இந்த செயலியை தவறாகப் பயன்படுத்தலாம். அமைப்பு சமரசம் செய்யப்பட்டால், தீங்கிழைக்கும் ஒரு நபராலும் இதைப் பயன்படுத்தலாம். அப்படியானால், மில்லியன் கணக்கான பயனர்கள் குறிவைக்கப்படலாம். இதற்கான ஆபத்தானது உண்மையானது மற்றும் கற்பனை சார்ந்தது அல்ல. அரசியலில் எதிர்க்கட்சி, பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை குறிவைக்க மத்திய அரசு ஏற்கனவே பெகாசஸ் மென்பொருளைப் (Pegasus software) பயன்படுத்தியுள்ளது. பயனர்கள் செயலியை நீக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தெளிவுபடுத்தல் இருந்தபோதிலும், அதை முடக்க முடியாது என்று ஆணை கூறுகிறது. இதன் பொருள் இது ஒரு கண்காணிப்புச் சிறை (Panopticon) போலவும், ஒரு எளிய சரிபார்ப்பு கருவி போலவும் செயல்படும். உச்சநீதிமன்றத்தின் கே.எஸ். புட்டசாமி (2017) தீர்ப்பு தனியுரிமைக்கான

தெளிவான விதிகளை வகுத்துள்ளது. தனியுரிமையில் அரசின் எந்தவொரு ஊடுருவலும் சட்டபூர்வமான தன்மை, தேவை மற்றும் விகிதாசாரத்தின் சோதனைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்று அது கூறியது. சாதனத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க அரசாங்கம் ஏற்கனவே குறைவான ஊடுருவும் வழிகளைக் கொண்டுள்ளது. இதில் சஞ்சார் சாதி வலை தரவுத்தளங்கள், SMS அடிப்படையிலான சோதனைகள் மற்றும் USSD குறிகள் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த குறைவான தலையீடு கொண்ட மாற்று வழிகளை புறக்கணிப்பதன் மூலம், சஞ்சார் சாதி குறித்த இந்த உத்தரவு விகிதாசாரத் தரத்திற்கு (proportionality standard) இணங்கத் தவறுகிறது. தனியுரிமையை மதிக்கும் ஆப்பிள் போன்ற உற்பத்தியாளர்கள் இந்த உத்தரவுக்கு இணங்க மறுப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை.


Share:

இந்திய சுற்றுச்சூழலின் மோசமான நிலை -சோனியா காந்தி


அரசாங்கக் கொள்கை வகுப்பில் சுற்றுச்சூழலுக்கு வலுவான மற்றும் தொடர்ச்சியான புறக்கணிப்பு உள்ளது.

ஆரவல்லி மலைத்தொடர் குஜராத்தில் இருந்து ராஜஸ்தான் வழியாக ஹரியானா வரை செல்கிறது. இது இந்தியாவின் புவியியல் மற்றும் வரலாற்றில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. இது தார் பாலைவனத்திலிருந்து கங்கை சமவெளி வரை பாலைவனமாக்கல் பரவுவதைத் தடுக்கும் ஒரு தடையாக செயல்பட்டு வருகிறது. இது சித்தோர்கர் மற்றும் ரந்தம்போர் போன்ற பிரபலமான கோட்டைகளைப் பாதுகாத்துள்ளது. இது வடமேற்கு இந்தியாவில் உள்ள பல சமூகங்களுக்கு ஆன்மீகத்தின் தொட்டிலாகவும் இருந்து வருகிறது. சட்டவிரோத சுரங்கத்தால் ஏற்கனவே அழிக்கப்பட்ட இந்த மலைகளுக்கு மோடி அரசாங்கம் இப்போது மரண தண்டனையை நிறைவேற்றும் நிலையில் உள்ளது. 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட மலைத்தொடரில் உள்ள எந்த மலைகளும் சுரங்கத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல என்று அறிவித்துள்ளது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் மாஃபியாக்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மலையின் உயர வரம்பிற்குக் கீழே வரும் 90% வரம்பை முடிக்க இது ஒரு திறந்த அழைப்பாக உள்ளது.

ஆரவல்லி மலைத்தொடரின் வடக்கு முனையில், தேசிய தலைநகரம் இந்த மாதம் அதன் வருடாந்திர புகைமூட்டப் பருவத்தைத் தொடங்கியுள்ளது. மில்லியன் கணக்கான குடிமக்கள் நச்சுக் காற்றை சுவாசித்து அன்றாட வாழ்க்கையை நடத்தும்போது, ​​தூசி, புகை மற்றும் துகள்களின் மூடுபனி படிந்து வருகிறது. புகைமூட்டம் நமது வருடாந்திர வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவரும் நிலையில், இது ஒரு முழு அளவிலான, மெதுவான இயக்க பொது சுகாதாரப் பேரழிவு என்பதை ஆராய்ச்சி இப்போது காட்டுகிறது. இந்த மாசுபாட்டால் 10 நகரங்களில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 34,000 இறப்புகளை ஏற்படுத்துவதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன.

இவை வேறுபட்ட நிகழ்வுகள் அல்ல

கடந்த வார செய்தி மற்றொரு வளர்ந்து வரும் நெருக்கடியைப் பிரதிபலித்தன. டெல்லியில் சோதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 13%-15% மனித பயன்பாட்டிற்கான அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட யுரேனிய அளவு அதிகமாக இருப்பதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board(CGWB)) தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் இன்னும் அதிக அளவு யுரேனியம் மாசுபாடு இருப்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற தண்ணீரை தினமும் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் மிகவும் தீவிரமானவை, மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தச் செய்திகளை வேறுபட்ட நிகழ்வாகப் பார்க்க முடியாது. அவை ஒவ்வொன்றும் கடந்த பத்தாண்டுகாலத்தில் இந்தியாவை சூழ்ந்துள்ள ஒரு நெருக்கடியின் காரணங்களும் விளைவுகளுமாகும். அரசாங்கக் கொள்கை வகுப்பில் சுற்றுச்சூழலை வலுவாகவும், தொடர்ந்தும் புறக்கணிப்பதிலிருந்து இது வருகிறது.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி அரசாங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக ஒரு மோசமான இழிவான போக்கைக் காட்டியுள்ளது. இது இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் சுரண்டுவதை ஊக்குவிக்கும் அதன் போக்கையும் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த அரசாங்கம் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம்-2023 (Forest (Conservation) Amendment Act), பெரிய வகை நிலங்கள் மற்றும் திட்டங்களுக்கு வனஅனுமதி விதிகளிலிருந்து விலக்கு அளித்தது. இது நிலத்தை பிற நோக்கங்களுக்காக திருப்பிவிடுவதை எளிதாக்கியது.

வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) அறிவிப்பு 2020, பொது விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்யவும், விலக்குகளை விரிவுபடுத்தவும் மற்றும் இணக்க அறிக்கையிடலைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (Coastal Regulation Zone (CRZ)) அறிவிப்பு 2018 இந்தியாவின் கடற்கரையோரங்களில் கட்டுமான விதிகளை தளர்த்தியது. இது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த கடலோரப் பகுதிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களின் வாழ்விடங்களை மனை வணிகம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்காக அனுமதியளித்தது. விதிகளை செயல்படுத்துவதையோ அல்லது சரிவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் பெரும்பாலும் உரிய செயல்முறையைத் தவிர்ப்பதற்கும், விதிமுறைகளை பலவீனப்படுத்துவதற்கும் பெரும்பாலும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

தேசிய தூய காற்றுத் திட்டம் போன்ற உயர்மட்ட விளம்பரம் பெற்ற திட்டங்கள் பெருமளவு நிதி ஒதுக்கீடு இல்லாமலேயே இருந்து வருகின்றன; ஒதுக்கப்பட்ட நிதிகூட பயன்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் வெளியான தேர்தல் பத்திரத் தரவுகள், ஆளும் கட்சிக்கு பெருநிறுவன குழுக்கள் அளித்த நன்கொடைகளின் ஒளியிலேயே பல சுற்றுச்சூழல் அனுமதிகளும் கொள்கை மாற்றங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை நிரூபித்தன. மிகக் குறைவான சிலரின் இலாப வரிகளுக்காக, வருங்கால தலைமுறைகளின் நலனையும் பூமியின் நலனையும் தியாகம் செய்து, கொள்கை வகுப்பு இவ்வளவு வெளிப்படையாக விற்பனைக்கு வைக்கப்பட முடியுமா?

உள்ளூர் சமூகங்களுக்கு எதிராக செயல்படுதல்

அரசுக்கு அரசியல் ரீதியாக வசதியாக இருக்கும் போது, சுற்றுச்சூழலை அதைப் பாதுகாக்கும் உள்ளூர் சமூகங்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் தீய போக்கு மற்றொரு உருவாகி வரும் போக்காகும். இந்திய வன ஆய்வு அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக ஏற்பட்ட வனப்பரப்பு இழப்புக்கு 2006-ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தியதே காரணம் என்று தில்லுமுல்லாக குற்றம் சாட்டி வருகிறது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, அந்தத் துறை அமைச்சரே இதே குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். 2024 ஜூன் மாதம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களிலிருந்து கிட்டத்தட்ட 65,000 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிட்டது. இது 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கு எதிரான செயல் மட்டுமல்ல (அந்தச் சட்டம் இடம்பெயர்வு முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது), மேலும் தேவையில்லாமல் உள்ளூர் சமூகங்களுக்கு எதிராக சுற்றுச்சூழலை மோதவிடும் விரோத நடவடிக்கையாகும்.


சுற்றுச்சூழலுக்கான ஒரு புதிய ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவை


முதலில், மேலும் எந்தத் தீங்கும் செய்யாமல் இருக்க நாம் உறுதியளிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட அல்லது இப்போது நடக்கும் பெரிய அளவிலான காடழிப்பை நாம் நிறுத்த வேண்டும். இதில் பெரிய நிக்கோபார், வடக்கு சத்தீஸ்கரின் ஹஸ்தியோ ஆரண்யா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் திரௌலி ஆகியவை அடங்கும். ஆரவல்லி மலைத்தொடர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற பிற சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளில் சட்டவிரோத சுரங்கங்களையும் நாம் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். இமயமலைப் பகுதியில் உள்ள மலைகளை பொறுப்பற்ற முறையில் அழிப்பதை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இது சமீபத்திய ஆண்டுகளில் பல மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மதிப்பாய்வு செய்யவும்

கடந்த பத்தாண்டுகளில் சட்டங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை நாம் அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் நம்மை ஒரு பேரழிவுப் பாதையில் இட்டுச் சென்றுள்ளன. மோடி அரசாங்கம் 1980-ம் ஆண்டு வன (பாதுகாப்பு) சட்டத்திலும் (Forest (Conservation) Act), வனப் பாதுகாப்பு விதிகளிலும்-2022 (Forest Conservation Rules) நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டு வந்த திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். இந்தத் திருத்தங்கள் ஆதிவாசி உரிமைகளுக்கு எதிரானவை மற்றும் உள்ளூர் சமூகங்களைக் கலந்தாலோசிக்காமல் காடுகளை அழிக்க அனுமதிக்கின்றன. சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் ஆபத்தான நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறை மோடி அரசாங்கத்தின் சில உள்நாட்டு கொள்கை கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். காலியாக உள்ள பதவிகளால் தேசிய பசுமை தீர்ப்பாயம் பலவீனமடைந்துள்ளது. இது மீட்டெடுக்கப்பட்டு, அரசாங்க அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு அரசியலாக, சுற்றுச்சூழல் விஷயங்களில் அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன் நாம் செயல்பட வேண்டும். தேசிய தலைநகரப் பகுதியில் (NCR) காற்று மாசுபாடு நெருக்கடிக்கு, நிலத்தடி நீர் யுரேனியம் மாசுபாடு பிரச்சினையைப் போலவே, முழு அரசாங்க அணுகுமுறையும் பிராந்திய விமானப் போக்குவரத்து அணுகுமுறையும் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் விஷயங்களில், வேறு எங்கும் இல்லாவிட்டால், மோடி அரசாங்கம் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

இறுதியாக, இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், அவர்களுக்கு எதிராக அல்ல. சுற்றுச்சூழலுக்கும் மனித வளர்ச்சிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இந்த அணுகுமுறையால், 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமாகவும், மேலும் மீள்தன்மை கொண்டதாகவும் மாற முடியும்.

சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக உள்ளார்.

Original link:

The dismal state of India’s environment 


Share: