தேசிய முக்கிய கனிம திட்டம் (NCMM) என்பது என்ன? -குஷ்பூ குமாரி


முக்கிய  அம்சங்கள்:


— இந்த உயர் வலிமை கொண்ட அரிய மண் காந்தம் (Rare-Earth Permanent Magnet (REPM) பரந்த அளவிலான தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமானவை. இவை மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் முதல் மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைப் பயன்பாடுகள் வரை தேவைப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் உற்பத்தி ஒரு சில நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளது. இந்தக் காந்தங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தி மற்றும் செயலாக்கம் இரண்டிலும், சீனா மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்படுத்துகிறது.


— சீனாவின் இந்த ஆதிக்கம், மற்ற நாடுகளைவிட அதற்கு ஒரு சாதகமான நிலையை வழங்குகிறது, மேலும் வர்த்தகப் பதட்டங்களின்போது இது ஒரு செல்வாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா அறிவித்த வரிகளுக்குப் பதிலடியாக, சீனா காந்தங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை ஏப்ரல் மாதத்தில்  விதித்த போது இது தெளிவாகத் தெரிந்தது.


— இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் அரசின் முயற்சியால், அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவை தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அரிய மண் நிரந்தர காந்தங்களின் நுகர்வு இரட்டிப்பாகும் என்று அரசு மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்தியா தற்போது அதன் அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவைகள் அனைத்தையும் ஏறக்குறைய இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் உற்பத்தி (Rare-Earth Permanent Magnet (REPM) திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (Million Tonnes Per Annum (MTPA)) ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) உற்பத்தி திறனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது போட்டி ஏல செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொன்றும் 1,200 (Million Tonnes Per Annum (MTPA)) வரை தகுதியுடையதாக இருக்கும்.


— இந்தத் திட்டம் குறிப்பாக "உருகிய அரிய-மண் நிரந்தர காந்தங்கள்" (sintered rare-earth permanent magnets) மீது கவனம் செலுத்துகிறது. இவை முதன்மையாக நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் (Neodymium Iron Boron (NdFeB)) காந்தங்கள் ஆகும். இவை மிகவும் வலிமையானதாகவும் வணிக ரீதியாக அதிகம் தேவைப்படுபவையாகவும் கருதப்படுகின்றன.


— இந்த காந்தங்கள், நியோடைமியம் (Nd) மற்றும் பிரசியோடைமியம் (Pr) போன்ற இலகுவான அரிய-மண் தனிமங்களை, இரும்பு (Fe) மற்றும் போரான் (B) உடன் இணைத்து, அவற்றின் வலுவான காந்தப் பண்புகளுக்காகப் பயன்படுத்துகின்றன. அதிக வெப்பநிலைகளில் காந்தநீக்கலுக்குள்ளாகும் திறனை மேம்படுத்த, டைஸ்பிரோசியம் (Dy) மற்றும் டெர்பியம் (Tb) போன்ற கனமான அரிய-மண் தனிமங்களையும் இவை பயன்படுத்துகின்றன.


— இந்தக் காந்தங்களின் உற்பத்தி, சுரங்கத் தொழில் (mining), பயன்சேர்ப்பு (beneficiation), செயலாக்கம் (processing), பிரித்தெடுத்தல் (extraction), அரிய மண் ஆக்ஸைடாகச் சுத்திகரித்தல் (refining to rare earth oxide), ஆக்ஸைடுகளை உலோகமாக மாற்றுதல் (conversion of oxides to metal), பிறகு உலோகத்தை உலோகக் கலவையாக மாற்றுதல் (metal to alloy), மற்றும் இறுதியாக காந்த உற்பத்தி (magnet manufacturing) போன்ற பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.


— புதிய திட்டம், ஒருங்கிணைந்த அரிய மண் காந்தம் (REPM) உற்பத்தி வசதிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள், அரிய பூமி ஆக்சைடை உலோகமாக மாற்றுவது, உலோகத்தை கலவையாக மாற்றுவது மற்றும் கலவையை அரிதான பூமி நிரந்தர காந்தமாக மாற்றுவது ஆகிய இறுதி மூன்று நிலைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகிறது.


— இந்தியா தற்போது இந்தக் காந்தங்களுக்கு சீனாவைப் பெரிதும் சார்ந்துள்ளது. 2024-25 காலகட்டத்தில், இந்தியா 53,000 டன்களுக்கும் அதிகமான அரிய மண் நிரந்தர காந்தங்களை இறக்குமதி செய்தது, அதில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சீனாவில் இருந்து வந்தவை.


— சீனாவைத் தவிர, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இந்தக் காந்தங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் உலக சந்தையில் அவற்றின் பங்கு குறைவாகவே உள்ளது. இதற்கிடையில், சில நிறுவனங்கள் தங்களுக்குத் திறன் இருப்பதாகக் கூறினாலும், இந்தியாவில் வணிக ரீதியிலான உற்பத்தி எதுவும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் ஒரு நீண்ட மற்றும் சவாலான பயணத்தில் ஒரு ஆரம்ப நிலையிலயே உள்ளது.


— சீனாவின் அளவோடு ஒப்பிடுகையில், ஒரு வருடத்திற்கு 6,000 மெட்ரிக் டன் என்ற திட்டத்தின் கொள்ளளவு குறைவாகவே தெரிகிறது. உட்டாவைத் (Utah) தளமாகக் கொண்ட அறிய மண் பரிமாற்றங்கள் நிறுவனம், சீனா வருடத்திற்கு தோராயமாக 2,40,000 டன் அரிய மண் நிரந்தர காந்தங்களை (REPM) உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடுகிறது. 


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) தயாரிப்பதற்குத் தேவையான சில அரிய ஆக்ஸைடுகளை இந்தியா உற்பத்தி செய்தாலும், கனமான அரிய ஆக்ஸைடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை. அணுசக்தி துறையின்கீழ் உள்ள இந்தியன் அரிய மண் லிட் (Indian Rare Earths Limited (IREL)) நியோடைமியம்-பிரசியோடைமியம் (NdPr) ஆக்ஸைடுகள் போன்ற சில தேவையான லேசான அரிய ஆக்ஸைடுகளை உற்பத்தி செய்வதாகத் தெரிவிய்கிகின்றனர்.


— சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான பல உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாதம், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பானது (Quadrilateral Security Dialogue (QUAD)), முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் முக்கியமான கனிமங்களுக்கான செயல் திட்டம் (Critical Minerals Action Plan) முன்வைக்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது.


இந்தியாவால் எடுக்கப்பட்ட முயற்சிகள்


— இந்தியா தனது தேசிய முக்கிய கனிம ஒன்றியத் திட்டத்தை (National Critical Mineral Mission - NCMM) ஏழு ஆண்டுகளுக்கு (2024-25 முதல் 2030-31 வரை) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. 16,300 கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட நிதிநிலை திட்டத்துடன், இந்தத் திட்டம், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் முக்கியமான கனிமங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் முக்கிய கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கனிமங்களை ஆராய்வது, சுரங்கத் தொழில், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வது வரையிலான முழுமதிப்புச் சங்கிலியிலும் தொழில்நுட்பம், விதிமுறைகள் மற்றும் நிதியுதவியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


— 2023 ஆம் ஆண்டில், இந்தியா 30 கனிமங்களை "மிக முக்கியமானவை" (critical) என்று அடையாளம் கண்டது. அதே ஆண்டில், லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை தனிமங்கள் போன்ற முக்கியமான மற்றும் உத்தியியல் கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவதற்காக, 1957-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)) சட்டத்தையும் அரசாங்கம் திருத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்து, நாடு முழுவதும் உள்ள 34 முக்கிய கனிமத் தொகுதிகளை அரசாங்கம் ஏலம் விட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா?


— குவாட் (QUAD) அமைப்பின் மிக முக்கியமான கனிமங்களுக்கான முன்முயற்சி, பல்வகைப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "முக்கியமான கனிமங்களைச் செயலாக்குவதற்கும், சுத்திகரிப்பதற்கும், அதன் வழிவந்த பொருட்களின் (derivative goods) உற்பத்திக்கும் ஏதேனும் ஒரு நாட்டையே சார்ந்திருப்பது, நமது தொழில்களைப் பொருளாதார அச்சுறுத்தல், விலை மோசடி மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவற்றிற்கு ஆளாக்குகிறது என்றும் இது நமது பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


— 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கரிதான் முதல் தொழிற்புரட்சிக்கு ஆற்றலை அளித்தது. எண்ணெய் மற்றும் அதன் துணை பொருட்கள் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு (கார்கள் மற்றும் விமானங்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்) மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உலகளாவிய செழிப்புக்கும் எரிபொருளாக அமைந்தது. இப்போது, நீண்ட 21-ஆம் நூற்றாண்டு, முக்கியமான கனிமங்களின் யுகமாக (critical minerals age) இருக்கப் போகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தீரஜ் நாயர் குறிப்பிடுகிறார். 

Original link:

What is the National Critical Mineral Mission (NCMM)?


Share: