ISI : Indian Statistical Institute (ISI) - இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) |
முதன்மையான நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான முக்கிய சீர்திருத்தங்களை முன்மொழியும் ISI மசோதா-2025 வரைவு குறித்து புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறது.
அக்டோபர் 24 வரை நடைபெறும் சட்டமன்றத்திற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MoSPI) இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா-2025 வரைவு குறித்த தங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் நிறுவிய கொள்கை மற்றும் மேம்பாட்டிற்காக (policy and development) புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் ஆரம்பகால முயற்சிகளுக்கு ஒத்ததாக இருக்கும் 94 ஆண்டு பழமையான முதன்மையான நிறுவனமான இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு (ISI) இந்த வரைவு மசோதா முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிகிறது.
இந்த வரைவு மசோதா, பதிவுசெய்யப்பட்ட சமூகத்திலிருந்து (registered society) நிறுவனத்தை ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக மாற்றுவதையும், தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நலன்சார்ந்த இலக்குகளிலிருந்து அதன் நோக்கங்களை உலகளாவிய சிறப்பு, நிறுவன முத்திரை மற்றும் புதுமைகளை மையமாகக் கொண்ட ஒன்றாக மாற்றுவதையும் மற்றும் அதன் உள்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITகள்) போன்ற நிறுவனங்களைப் போலவே அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகக் குழுவுடன் மாற்றுவதன் மூலம் அதன் நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வரைவு மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், 1959-ம் ஆண்டு இந்திய புள்ளிவிவர நிறுவனச் சட்டத்தை (Indian Statistical Institute Act) மாற்றும்.
இந்த சட்டம் நிறுவப்பட்டதிலிருந்து, நான்கு முக்கிய குழுக்கள் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) செயல்பாட்டை மதிப்பாய்வு செய்துள்ளன. அவற்றின் சில பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன, மற்றவை நிறுவனத்தால் கவனிக்கப்படாமல் விடப்பட்டன. 2020-ம் ஆண்டில் ஆர்.ஏ.மஷேல்கர் தலைமையிலான சமீபத்திய மதிப்பாய்வானது, நிறுவனத்தின் படிப்படியான தேக்கநிலை என்று கடுமையாக விமர்சித்தது. அது "அதன் முந்தைய புத்திசாலித்தனத்தை இழந்துவிட்டது" (lost much of its earlier brilliance) என்றும் அதன் ஆற்றலை மீட்டெடுக்க "தீவிர மாற்றங்களை" (radical changes) பரிந்துரைத்தது என்றும் கூறியது. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கூற்றுப்படி, தற்போதைய வரைவு மசோதா-2031-ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு விழாவை நெருங்கும்போது "நிறுவனத்தின் கட்டமைப்பை நவீனமயமாக்குவது" (modernise the Institute’s structure) இந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.
பட்டப்படிப்பு திட்டங்களுக்கு கூடுதல் பாடங்களைச் சேர்க்க, 1995-ம் ஆண்டில் ISI சட்டம் ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டது. தற்போதைய முயற்சி 1959-ம் ஆண்டு உண்மையான சட்டத்திற்குப் பிறகு செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களின் தொகுப்பாகும். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் அல்லது முன்னர் தொடர்புடைய சில பேராசிரியர்கள் இந்த மாற்றங்களை சமகால யதார்த்தங்களுக்கு அவசியமான தழுவலாகக் கருதினாலும், மற்றவர்கள் அவற்றை நிறுவனத்தின் தன்னாட்சியை நீர்த்துப்போகச் செய்வதற்கான தொடக்கமாகவும், நீட்டிப்பின் மூலம், நேருவியன் கால நிறுவனத்தின் (Nehruvian-era institute) தன்மை குறைந்து வருவதாகப் பார்க்கிறார்கள்.
நேருவியன் நிறுவனத்தின் தோற்றம்
பி.சி. மஹாலனோபிஸிடம் படித்து, பின்னர் உலகின் மிகவும் பாராட்டப்பட்ட புள்ளியியல் வல்லுநர்களில் ஒருவராக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சி.ஆர். ராவ் நினைவுக் குறிப்புகளில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் புள்ளியியல் ஒரு துறையாக கிட்டத்தட்ட அறியப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார். இந்தத் துறையில் பல்கலைக்கழக படிப்புகள் இல்லை, ஆராய்ச்சி இல்லை, புள்ளியியல் சமூகம் இல்லை, எந்த பத்திரிகையும் இல்லை. கிடைக்கக்கூடிய சிறிய தரவு பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் துணை விளைபொருளாக மட்டுமே வந்தது.
இந்த சூழ்நிலையில், 1931-ம் ஆண்டு காலகட்டத்தில், பி.சி. மஹலனோபிஸ் மற்றும் இளம் பங்களிப்பாளர்கள் குழு, புள்ளியியல் ஆராய்ச்சிக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு அதன் பயன்பாட்டிற்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையம் என்ற கருத்தை உருவாக்கினர். கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள மஹலனோபிஸின் அறையில் உள்ள ஒரு சிறிய புள்ளியியல் ஆய்வகத்திலிருந்து, டிசம்பர் 1931-ல் ஒரு பொதுக் கூட்டம் மற்றும் 28 ஏப்ரல் 1932 அன்று சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (XXI of 1860) கீழ் ஒரு இலாப நோக்கமற்ற கல்விச் சங்கமாக இந்திய புள்ளியியல் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ததன் மூலம் இந்த யோசனை நிறுவன வடிவம் பெற்றது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சர் சி.டி. தேஷ்முக் மற்றும் டெல்லியில் நேருவின் செயலாளராகவும் பின்னர் பி.சி. மஹாலனோபிஸின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பீதாம்பர் பந்த் ஆகியோரிடமிருந்து இது வலுவான ஆதரவைப் பெற்றது. ஒரே ஆய்வகத்திலிருந்து நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பாக இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி பி.சி. மஹாலனோபிஸின்" கற்பனை திட்டமிடல்" (imaginative planning) காரணமாக இருந்தது என்று ராவ் குறிப்பிடுகிறார்.
வரலாற்றாசிரியர் நிகில் மேனன் தனது ”திட்டமிடல் ஜனநாயகம்: ஒரு பேராசிரியர், ஒரு நிறுவனம் மற்றும் ஒரு யோசனை இந்தியாவை எவ்வாறு வடிவமைத்தன” (Planning Democracy: How a Professor, an Institute, and an Idea Shaped India) என்ற புத்தகத்தில் 1954-ம் ஆண்டு ஹைதராபாத் இல்லத்தில் நடந்த முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும்போது, பிரதமர் நேரு, இந்தியா சிறிது காலமாக "திட்டமிடும் திசையில் தடுமாறிக் கொண்டிருந்தது" (groping in the direction of planning) என்று குறிப்பிட்டார். சமீப காலம் வரை "திட்டமிடுவதற்கு அவசியமான அனைத்து தகவல்களும், தரவுகளும், மற்றும் புள்ளிவிவரங்களும்" இல்லாததால், நாடு கண்மூடித்தனமாக முன்னேறி வந்தது. முன்னதாக, அவர்களிடம் "போதுமான தரவு இல்லை," ஆனால் இப்போது, "நமக்கு இன்னும் நிறைய கிடைத்துள்ளது நாம் ஒரு கட்டத்தில், ஒரு திட்டவட்டமான கட்டத்தில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
1950-களின் பிற்பகுதியில், "தரவு உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் அரசின் செயல்முறைகளில் மிக வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டது" என்று நிகில் மேனன் மேலும் குறிப்பிடுகிறார். பி.சி. மஹலனோபிஸின் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவு அடிப்படையிலான திட்டமிடல் துறையின் முன்னோடிப் பணிகள் தேசிய மாதிரி கணக்கெடுப்பை (National Sample Survey) நிறுவுதல் மற்றும் முந்தைய திட்டக் குழுக்கான 2-வது ஐந்தாண்டுத் திட்டத்தை வகுப்பதில் அவரது பங்கு உள்ளிட்ட தேசியக் கொள்கைகளை தொடர்பான முக்கிய திட்டகளை வடிவமைத்தார்.
1959-ம் ஆண்டில், பிரதமர் நேரு இந்திய புள்ளியியல் நிறுவன மசோதாவை (Indian Statistical Institute Bill) நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக வழிநடத்தி, நிறுவனத்தில் செய்யப்படும் பணிகளை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று விவரித்தார், மேலும் "பெரிய அளவில் புள்ளிவிவரப் பணிகள் இல்லாமல் எந்தத் திட்டமிடலும் இருக்க முடியாது" என்றும் கூறினார்.
இந்தக் கண்ணோட்டம் 1959-ம் ஆண்டு இந்திய புள்ளியியல் நிறுவனச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்தது. இது, ISI-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி நிறுவனமாக அறிவித்து பட்டங்களை வழங்க அதற்கு அதிகாரம் அளித்தது. இருப்பினும் முக்கியமாக, நிறுவனம் ஒரு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அதன் விவகாரங்கள் ஒரு பொதுக்குழுவால் நிர்வகிக்கப்பட்டன. அதன் சங்கப் பதிவுக் குறிப்பு (Memorandum of Association (MoA)), ஒழுங்குமுறைகள் மற்றும் துணைச் சட்டங்கள் ஆகியவை சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிறுவன கட்டமைப்பை உருவாக்கியது.
கட்டமைப்பு மற்றும் தன்னாட்சியை மாற்றுதல்
ISI ஒரு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக செயல்பட்டபோது, அதன் நிர்வாக உறுப்பினர் அமைப்பு மற்றும் உள் தேர்தல்களின் அடிப்படையில் அமைந்தது. இந்த நிறுவனத்தில் மூன்று வகையான உறுப்பினர்கள் இருந்தனர். இதில் வழக்கமான உறுப்பினர்கள் (Regular Members), மாணவர் உறுப்பினர்கள் (Student Members) மற்றும் நிறுவன உறுப்பினர்கள் (Institutional Members) ஆகியோர் துணைச் சட்டங்களில் வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மன்றத்தால் அனுமதிக்கப்பட்டனர். அதன் உறுப்பினர்களில் இருந்து, தேசத்திற்கு அல்லது புள்ளிவிவரங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான சேவையைச் செய்த ஒருவரை நிறுவனத்தின் தலைவராக இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்க முடியும்.
இந்த மன்றம் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவாகச் செயல்படுகிறது. மேலும், இதில் 33 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில், 6 அரசு பிரதிநிதிகள், நிறுவனத்தால் பணியமர்த்தப்படாத 9 விஞ்ஞானிகள், நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பிரதிநிதிகள் மற்றும் இயக்குனர் மற்றும் பிரிவுகளின் பொறுப்புப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் போன்ற 12 முன்னாள் அலுவல் உறுப்பினர்கள் உட்பட இதில் அடங்குவர். இந்த மன்றம் அதன் தலைவரை இரண்டு ஆண்டு காலத்திற்கு வெளியிலிருந்து புகழ்பெற்ற நபர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கிறது.
ஐந்து வருட காலத்திற்கு இயக்குநரை நியமிப்பது, மன்றத்தின் (Council) தலைவர் (தலைவராக) மற்றும் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நிபுணர்களைக் கொண்ட தேர்வுக் குழுவின் (Selection Committee) பரிந்துரையின்பேரில் இந்த மன்றம் செயல்படும். சமூக கட்டமைப்பின்கீழ், மன்றம் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இது கல்வி, நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களையும் இணைத்தது. நிறுவனத்தை நடத்துவதில் மன்றம் குறிப்பிடத்தக்க உள்-தன்னாட்சியைப் பராமரித்தது. அரசாங்கத்திற்கு மன்றத்தில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே இருந்தனர். இருப்பினும், ISI சட்டம், 1959-ன் பிரிவுகள் 7, 11 மற்றும் 12 மத்திய அரசாங்கத்திற்கு இருப்பு அதிகாரங்களை வழங்குகின்றன. இந்த அதிகாரங்களில் ஒப்புதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.
எந்தவொரு பெரிய மாற்றங்களுக்கும் பிரிவு-7-க்கு அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை. இதில் நிறுவனத்தின் நோக்கங்கள், குறிப்பாணைகள் அல்லது விதிமுறைகளைத் திருத்துதல் அல்லது அரசாங்க நிதியுடன் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். பிரிவு-11 பொது நலனுக்காக பிணைப்பு உத்தரவுகளை (binding directions) வெளியிட அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதில் நிறுவனத்தின் விதிகளைத் திருத்துதல் அல்லது அதன் பணிக்கான முன்னுரிமைகளை மாற்றுதல் ஆகியவை அடங்கும். பிரிவு-12 மன்றமானது அத்தகைய உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால் அல்லது அதன் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
தீவிரமான மறுசீரமைப்பு
இந்திய புள்ளியியல் நிறுவன வரைவு மசோதா-2025-ன் கீழ், நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு முழுமையான மாற்றத்தை முன்மொழிகிறது. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், ISI இனி பதிவுசெய்யப்பட்ட மன்றமாக செயல்படாது. இது ஒரு பொதுக்குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தால் நிர்வகிக்கப்படுவதை நிறுத்திவிடும். அதற்கு பதிலாக, அதன் நிர்வாகம் மசோதாவின் அத்தியாயம் III-ன் கீழ் நிறுவப்பட்ட நிர்வாக வாரியமாக (Board of Governance) மாற்றும். இது நிறுவனத்தின் மிக உயர்ந்த நிர்வாக அதிகாரியாக செயல்படும்.
இந்த புதிய கட்டமைப்பின் உச்சபட்சமாக பார்வையாளர் (Visitor) இருக்கிறார். அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பார். இது நிறுவனத்தின் பணிகளை மதிப்பாய்வு செய்யவும், ஆய்வுகள் அல்லது விசாரணைகளுக்கு உத்தரவிடவும், அந்த மதிப்பாய்வுகளின் அடிப்படையில் அவசியமானதாகக் கருதப்படும் உத்தரவுகளை வழங்கவும் பார்வையாளருக்கு அதிகாரம் இருக்கும்.
பார்வையாளருக்குக் கீழே, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு முந்தைய மன்றத்தை மாற்றும் தற்போதைய நிர்வாக வாரியத்திடம் இருக்கும். இந்த வாரியம் இப்போது மூன்று ஆண்டு காலத்திற்கு 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதில் முக்கியமாக மத்திய அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர்கள், தலைவர் (மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்), புள்ளிவிவரம், கல்வி மற்றும் நிதி அமைச்சகங்களிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று புகழ்பெற்ற நபர்கள் உட்பட இதன் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். முக்கியமாக, நிறுவனத்திற்குள் இருந்து மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வாரியத்தில் பணியாற்றுவார்கள். அவர்கள் இயக்குனர் (Director), கல்வித் துறைத் தலைவர் (Dean of Studies) மற்றும் ஒரு மையத் தலைவர் (one Head of Centre) போன்றோர் ஆவர்.
கொள்கைகளை உருவாக்குதல், வரவு-செலவு திட்டத்தை அங்கீகரித்தல், பதவிகளை உருவாக்குதல் மற்றும் நீக்குதல், சொத்து மற்றும் நிதிகளை நிர்வகித்தல் மற்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக விஷயங்களையும் மேற்பார்வையிடுதல் ஆகியவற்றுக்கு வாரியம் பொறுப்பாகும். நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரமும் வாரியத்திற்கு இருக்கும்.
"இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக ஒரு பேராசிரியர் கூறினார். மேலும், தேர்தல்களும் மன்றங்களும் மிகவும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகின்றன. இது இயற்கையாகவே ஒரு சுதந்திர சந்தை மற்றும் சுதந்திரமான தேர்வு உணர்வோடு ஒத்துப்போகிறது. மத்திய கட்டுப்பாடு அந்த உணர்விற்கு எதிரானது என்று பேராசிரியர் மேலும் கூறினார்.
மற்றொரு கல்வியாளர் கூறுகையில், இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மீது கடுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சி, அரசின் தலையீட்டைக் குறைப்பதில் அதன் தனிப்பட்ட முறையில் கூறப்பட்ட நம்பிக்கைக்கு முரணானது. அரசாங்கம் திட்டமிடலில் இருந்து விலகிச் செல்ல விரும்புவதாகக் கூறும்போது, அது அடிப்படையில் கட்டுப்பாட்டைக் குறைக்க விரும்புவதாகக் கூறுகிறது என்று பேராசிரியர் விளக்கினார். "எனவே, இப்போது இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மீது கூடுதல் கட்டுப்பாட்டை விதிக்க முயற்சித்தால், அது முரண்பாடாக இருக்கும்."
இருப்பினும், கடந்த ஐம்பதாண்டுகளாக சமூகத்தின் கட்டமைப்பின் காரணமாக நிறுவனம் பலவீனமடைந்துள்ளது என்றும், தேர்தல்கள் மற்றும் மன்றத்தில் பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அரசியல் குழுக்கள் மற்றும் உள் அதிகார மையங்கள் தோன்ற அனுமதித்துள்ளது என்றும் மற்ற பேராசிரியர்கள் கருதுகின்றனர். “சுதந்திரம் என்பது பொதுப் பணத்தைக் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யலாம், எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளக்கூடாது என்று அர்த்தமல்ல. இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) அதன் பெரும்பாலான நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறுகிறது. அதனால், ஒரே நேரத்தில் முழு நிதி உதவியையும், முழுமையான சுதந்திரத்தையும் எதிர்பார்க்க முடியாது” என்று பேராசியரியர் குறிப்பிடுகிறார்.
தேசிய வளர்ச்சிக்கு சேவை செய்வதாக எந்த உரிமையும் இல்லை.
சங்கத்தின் குறிப்பாணையின்படி (Memorandum of Association), நிறுவனத்தின் நான்கு நோக்கங்களை பட்டியலிடுகிறது. முதலாவதாக, புள்ளியியல் பற்றிய ஆய்வு மற்றும் அறிவைப் பரப்புவதை ஊக்குவித்தல், புள்ளியியல் கோட்பாடு மற்றும் முறைகளை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக "தேசிய வளர்ச்சி மற்றும் சமூக நலன்" தொடர்பான விஷயங்களில் அவற்றைப் பயன்படுத்துதல்.
இரண்டாவதாக, புள்ளிவிவரங்கள் மற்றும் இந்த துறைகளின் பரஸ்பர வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இயற்கை மற்றும் சமூக அறிவியல்களில் ஆராய்ச்சியை மேற்கொள்வது ஆகும். மூன்றாவதாக, திட்டமிடல் மற்றும் மேலாண்மை மற்றும் உற்பத்தியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக தகவல்களைச் சேகரித்து விசாரணைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சிகளை நடத்துவது ஆகும். இறுதியாக, இந்த நோக்கங்களை அடைய தேவையான வேறு எந்த நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொள்கிறது.
வரைவு இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) மசோதா-2025, முந்தைய நோக்கங்களுக்கு முக்கிய மையமாக இருந்த தேசிய மேம்பாடு, சமூக நலன் மற்றும் திட்டமிடல் பற்றிய அனைத்து வெளிப்படையான குறிப்புகளையும் தவிர்த்து, அவற்றின் இடத்தில், உலகளாவிய சிறப்பு, துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, புதுமை மற்றும் நிதி சுய-நிலைத்தன்மை போன்ற புதிய முன்னுரிமைகளை அறிமுகப்படுத்துகிறது.
புள்ளிவிவர அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைப் படிப்பதற்கான உலகளாவிய சிறந்த மையமாக இந்த நிறுவனத்தை மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த துறைகளில் அறிவை மேம்படுத்தவும் பரப்பவும், புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் இடைநிலை ஆராய்ச்சியை வளர்க்கவும் இது முயல்கிறது. புதுமையான கல்வி முறைகளை உருவாக்குதல் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை நிறுவுதல் ஆகியவையும் இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும்.
மேலும், பொது நலனுக்காக அறிவின் நடைமுறைப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், முடிந்தவரை நிதி ரீதியாக தன்னிறைவு பெறும் நோக்கத்துடன், வளங்களை திறம்பட உருவாக்கி நிர்வகிப்பதாகும். இறுதியாக, நிறுவனம் தன்னை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த மையமாக நிலைநிறுத்துவதற்கு உகந்த எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
உலகளாவிய போக்கு
"மஹாலனோபிஸின் மரபு திட்டமிடலில் கவனம் செலுத்தியது," என்று ஒரு மூத்த கல்வியாளர் குறிப்பிடுகிறார். அரசாங்கம் இந்த அணுகுமுறையை நீண்டகாலத்திற்கு முன்பே கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இது திட்டக் குழுவைக் கலைத்து நிதி ஆயோக்கை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறது. "இன்று, அரசாங்கம் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதில்லை; அது சந்தைப் பொருளாதாரத்தை நம்பியுள்ளது."
முந்தைய திட்டமிடல் காலகட்டத்தில், "என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு உற்பத்தி செய்ய வேண்டும்" என்பதை தீர்மானிப்பதில் அரசு ஒரு வழிகாட்டும் பங்கை வகித்தது என்று மற்றொரு பேராசிரியர் விளக்கினார். ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பிலாய் போன்ற பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட வளர்ச்சி மாதிரியை உள்ளடக்கியிருந்தன. "அந்த நாட்கள் முடிந்துவிட்டன. இப்போது தனியார் நிறுவனங்களுடன் சந்தை சார்ந்த அமைப்பு நம்மிடம் உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவில் மட்டுமல்ல; இது உலகளவில் நடக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
Original article: